Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி ஆடும் தமிழ் அரசியல் தலைமைகளே! கவனம்

Featured Replies

கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி ஆடும் தமிழ் அரசியல் தலைமைகளே! கவனம்

இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு இருப்பதை இப்போது உணரமுடிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடுமையான அழுத்தம் இத்தகையதொரு நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. வன்னியில் கொடும்போர் நடத்தி தமிழ் மக்களை வதைத்ததன் விளைவாக உலக நாடுகள் எடுத்த முடிபுதான் இது. இதுவிடயத்தில் தயவு செய்து எந்தத் தமிழ் அரசியல் தரப்புகளும் உரிமை கோரக்கூடாது என்பது தாழ்மையான கோரிக்கை. வன்னிப் போரில் எங்கள் உறவுகள் குண்டுபட்டுத் துடித்ததை, வெடி பட்டு விழுந்ததை, முட்கம்பி முகாம்களில் அடைபட்டு வதை பட்டதை, கைகட்டி கால்கட்டி உயிர் எடுத்ததை உலக நாடுகள் கண்டு கண்ணீர்விட்டு கொடிதுகொடிது என்று குளறிய செய்திகள் மறப்பதற்கில்லை.

நிலைமை இதுவாக இருக்கும் போது தமிழ் அரசியல் தலைமைகள் அரசை சர்வதேச வலைக்குள் வீழ்த்த சூழ்ச்சி செய்கிறது என யாரும் கூறிவிடக்கூடாது. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் வன்னிப் போரில் நடந்த அவலமான மனிதப் பேரழிவே இலங்கையைக் காட்டிக் கொடுத்தது. எனவே, இலங்கை அரசு தான் செய்த கொடுஞ் செயலால் சர்வதேச சமூகத்திடம் மாட்டிக் கொண்டது. சனல் 4 தயாரித்த கொலைக்களம் என்னும் ஆவணப்படம் வன்னியில் ஈழத்தமிழ் மக்கள் பட்ட அவலத்தை உலகிற்கு எடுத்தியம்பியது. சனல் 4 வெளியிட்ட கொலைக்களம் ஆவணப் படமே எங்கள் துயர அனுபவிப்புகளை, இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த கருவறுப்புக்களை காட்டிக் கொடுத்தன.

எனினும் எங்கள் அரசியல் தலைமைகள் இங்கொன்றும் வெளிநாடுகளில் வேறொன்றுமாக உரையாற்றி மக்களைக் குழப்பியதுண்டு. சிலர் அரசுக்கு மறைமுகமாக உதவும் வகையில் செயற்பட்டதும் தெரிந்ததே. இத்தகைய செயல்களை நிறுத்தி இப்போது இருக்கக்கூடிய எமக்கான சாதக சூழ்நிலையைப் பயன்படுத்தி எங்கள் உரிமையை வென்றெடுக்க நாம் தயாராக வேண்டும். இலங்கை அரசு எங்களை வெருட்டலாம். நாமும் ஏதேனும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படலாம். இத்தகைய தளம்பல் நிலை தேவையற்றவை. தமிழர்களின் பிரச்சினையை முடித்துவைப்பதென அமெரிக்கா முடிபெடுத்துவிட்டது.

பின்னர் யார் வெகுண்டாலும் அதற்கு இடமில்லை. எங்கள் உறவுகளின் உடல் அறுத்த குருதி பொங்கி எடுத்த பெருக்கால் கிருஸ்ணாவும் புறப்பட்டு வருகிறார். செய்த பாவம் பற்றிக் கொள்ளாமல் இருக்க, கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி எடுக்கும் எங்கள் தமிழ் அரசியல் தலைமைகளே அதிகம் பிதற்றாமல் கடுமையாக தூங்காமல் விழிப்பாக இருங்கள்; விறுவிறுப்பாக இருங்கள்; ஆயத்தமாக இருங்கள்.

எல்லாம் நல்லதாய் நடக்கும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=26551

  • கருத்துக்கள உறவுகள்

வலம்புரிக்கு ஒரு பச்சை!

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய காலத் தீர்வுகளை விட்டு

நீண்ட கால நோக்குடன் தமிழினத்தின் விடிவிற்கான

தீர்வை நோக்கி கூட்டமைப்புச் செயல்பட வேண்டும்

  • தொடங்கியவர்

குறுகிய காலத் தீர்வுகளை விட்டு

நீண்ட கால நோக்குடன் தமிழினத்தின் விடிவிற்கான

தீர்வை நோக்கி கூட்டமைப்புச் செயல்பட வேண்டும்

உங்கள் கருத்தில் நீண்டகால நிரந்தர அரசியல் தீர்வை வலியிறுத்தி உள்ளீர்கள்.

நாம் பட்ட படுகின்ற துன்பியல் வராலாற்றில் இருந்து நீங்கள் அப்படி எண்ணுவது புரிகின்றது. ஆனால், வலிமையாகவும் இறுக்கமாகவும் இருக்கும் மகிந்த தலைமயிலான சிங்களம் எமது மக்களை முற்றாக அழிக்க கங்கணம் கட்டி நிற்கிறது.

எனவே, காணி, காவல்துறை போன்ற அதிகாரங்களை முதல் பெற்று மக்களை பலப்படுத்தி பின்னர் நீண்டகால தீர்வை நோக்கி நகரலாம் என எண்ணுபவர்களும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.