Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தேசிய வங்கியின் தற்போதைய கதை

Featured Replies

நானும் கன காலமா யாழ் பக்கம் வந்து ஓசில படிச்சிட்டுபோறன் என்டு ஒரு குற்ற உணர்வு தான் என்னையும் இது பற்றி எழுத தூண்டியது.

உங்கள் சுவிஸ் பற்றிய பொதுஅறிவை வளர்க்க உதவும் :D

சுவிஸ் தேசிய வங்கியின் நிர்வாகியாக இருந்தவர் Philipp Hildebrand. சுவிசில் இந்த ஆண்டு தொடக்கம் தொட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஒரு விடயம் இந்த Philipp Hildebrand பற்றியது தான்.

15. ஆகஸ்ட் 2011 அன்று Hildebrandஇன் மனைவி Kashya Hildebrand 4 லட்சம் சுவிஸ் பிராங்குகளிக்கு அமெரிக்க டொலர் வாங்குகிறார். அதுவும் அவரது கணவரும் தேசிய வங்கியின் நிர்வாகியுமான Philipp Hildebrand இன் வங்கிக்கணக்கிலிருந்து. வாங்கி விற்றதில் இவர்களிற்க்கு 60‘000 சுவிஸ் பிராங்குகள் லாபம்

.

தேசிய வங்கியின் நிர்வாகியான Hildebrandஇன் வங்கிக் கணக்கு Bank Sarasin என்னும் வங்கியால் நிர்வாகிக்கப்படுகின்றது.

நவம்பர் 2011இல் இது பற்றி முதன் முறையாக பத்திரிகையில் ஒரு செய்தி வருகின்றது. அதாவது Hildebrandன் வங்கிக் கணக்கு அடங்கிய விபரம் சுவிஸ் நாட்டின் மந்திரியாக இருந்த Christoph Blocherனால் (வலசு சாரி கடும் போக்கர்) தற்பொழுது நிதித்துறை அமைச்சராக உள்ளவரிற்க்கு (Eveline Widmer Schlump ) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று.

இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இன்னொருவரின் வங்கிக்கணக்கு எப்படி வேறொருவரின் கைக்கு போனது என்பதே நவம்பர் மாதம் சூடு பிடித்த விடயமாக இருந்தது. அதுவும் சுவிசில் இது ஒரு அவமானமாகவே பார்க்கப்பட்ட.து காரணம் வெளிநாடுகளில் சுவிஸ் வங்கிகளின் நற்பெயர்.

இந்த விடயத்தை தோண்டி எடுத்து பத்திரிகைகள் மேலும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன.

Hildebrandஇன் வங்கிக் கணக்கு அடங்கிய விபரம் அவரது வங்கிக்கணக்கு உள்ள வங்கியில் வேலை செய்யும் ஒரு கணணி பிரிவில் வேலை பார்;க்கும் ஊழியரால் எடுக்கப்பட்டது என்று. உடனடியாக அதற்க்கு அந்த வங்கி பதிலளித்தது. அதாவது வங்கியில் எந்த ஒரு சாதாரண ஊழியரும் ஒருவரின் கணக்கு விபரத்தை கொப்பி பண்ணி எடுப்பதோ அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதோ முடியாத படி அவர்களின் கணணிகள் இயங்குகின்றன என்று.

இங்கே தான் இந்த வங்கியில் (இந்த கட்டம் வரை பல வங்கிகளில் இப்படி இருந்திருக்கலாம்) உள்ள ஒரு ஓட்டை வெளிச்சத்திற்க்கு வருகின்றது.

அதாவது அந்த ஊழியர் தனது கை தொலைபேசியால் கணணியின் திரையில் தெரிந்த Hildebrandஇன் வங்கிக் கணக்கை படம் பிடித்துள்ளார் என்று தெரியவந்தது.

அந்த ஊழியரிற்க்கு Hildebrandஇன் மனைவி 4லட்சம் சுவிஸ் பிராங்கிற்க்கு வாங்கிய அமெரிக்க டொலர்கள் மேல் சந்தேகம் எழுந்தது. தேசிய வங்கியின் நிர்வாகியாக இருக்கும் இவரின் கணவரிற்க்கு டொலர் ஏற்கனவே ஏறும் என்ற செய்தி ஏற்கனவே தெரிந்திருந்ததால் தான் அவரின் மனைவி இதை வாங்கியுள்ளார் என்று நினைத்துள்ளார். அவர் தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அவர் வசிக்கும் மாநிலத்தின் வலது சாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவரிற்க்கு இதை அனுப்பியுள்ளார். இதுபற்றி ஒருவருரிற்க்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாராம்.

இங்கேயும் ஒரு விபரீதம் நடக்கின்றது. அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதை சுவிஸ் நாட்டின் மந்திரியாக இருந்த Christoph Blocherற்கு (சட்டத்தரணியும் இவரும் ஒரே கட்சி) அனுப்பி வைத்தார். இது தான் பின்னர் பத்திரிகைகளிற்க்கு தெரிய வந்து செய்தியாhக வந்தன.

சரி இதன் அடுத்த கட்டம் எப்படி நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

தேசிய வங்கியின் நிர்வாகி Hildebrand தனக்கு இதுபற்றி தெரியாது தனது மனைவி தான் அமெரிக்க டொலர்கள் வாங்கியவர் என்று கூறினார்.

இது பற்றி பத்திரிகையாளர்கள் Christoph Blocherயை உங்களிற்க்கு இந்த ஆவணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்புகையில் அவர் இப்படி கூறுகிறார் „சில சமயங்களில் பேச வேண்டும், சில சமயங்களில் அமைதி காக்க வேண்டும். இது அமைதி காக்கும் நேரம்“ என்று முடிக்கிறார்.

இப்பொழுது பிரச்சனை வேறு விதமாக தொடங்குகிறது. அதாவது தேசிய வங்கியின் நிர்வாகி அவரின் பணத்தை அவர் விரும்பிய படி முதலீடு செய்வது அவரின் விருப்பம் என்று ஒரு அணியினர் சொல்கின்றனர்.

மற்றொரு அணியினர் அவரிற்கு உள்ளால் நிறை தகவல்கள் வந்ததால் தான் அவர் முதற்கொண்டே டாலர்கள் அவரின் மனைவியால் வாங்கப்பட்டது என்று ஒரு பகுதி வாதாடியது.

இவை இரண்டிலும் சேராமல் ஒரு பகுதி இருந்தது. வேறொருவரின் வங்கிக்கணக்கு விபரத்தை எப்படி ஆளுக்காள் மாறி அனுப்பலாம் என்று இன்னொரு பிரச்சனை தொடங்கியது. இதில் சட்டத்தரணி, வங்கி ஊழியர் மற்றும் முன்னாள் மந்திரி Christoph Blocher மூவர் மேலும் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில குரல்கள் எழுந்தன.

இதற்கிடையில் இதுபற்றி விசாரணை நடத்த தேசிய வங்கியின் குழு கூடியது. தேசிய வங்கியின் நிர்வாகி Hildebrand குற்றமற்றவர் என அவர்கள் கூறி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

ஆனால் இது முடிந்த பாடாக இல்லை. விபரத்தை வெளியே கொண்டு வந்த வங்கி ஊழியர் தற்கொலை முயற்ச்சியில் இறங்கி மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு தகவல் வந்தது. அடுத்த நாள் அந்த ஊழியர் பத்திரிகைகளிற்க்கு மின்னஞ்சல் அனுப்புகிறார். அதாவது தனது நோக்கம் இதுவாக இருக்கவில்லை. தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவே தான் அந்த சட்டத்தரணிக்கு விபரத்தை அனுப்பி வைத்ததாகவும் அதை அவர் இப்படி தொடர்ந்து அனுப்பி வைப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தன்னை அவர் ஏமாற்றிவிட்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது இப்படி இருக்க தேசிய வங்கியின் நிர்வாகியான Hildebrand நேற்று தனது பதவியை ராஐpனாமா செய்தார். தன் மீதுள்ள குற்றச்சாட்டை தன்னால் மறுத்து நிருபிக்க முடியாமல் உள்ளதால் தான் பதவி விலகுகின்றேன் என்று கூறினார். இந்தக் கட்டம் வரை இவர் குற்றவாளி என்றும் நிருபிக்கப்படவில்லை.

ஆனால் இன்று இவர் இவரின் வங்கிக்கணக்கை பராமரிக்கும் ஊழியரிற்க்கு (வங்கிக்கணக்கு விபரத்தை திருடிய ஊழியர் அல்ல) இவர் மனைவி தனது வங்கிக்கணக்கிலிருந்து டாலர்கள் வாங்குவதை தான் அனுமதிக்கின்றேன் என்று எழுதிய மின்னஞ்சல் பத்திரிகைகளில் வெளியாகின. இதற்க்கு முன் தனது மனைவி வாங்கியது தனக்கு தெரியாது என்று கூறியிருந்தார். இவரின் பதவி விலகலால் சுவிஸ் பங்குச்சந்தையும் சற்று படுத்துகொண்டது.

தேசிய வங்கியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்க்கு இந்த மின்னஞ்சல் விசாரணையின் போது கிடைக்கவில்லை. இந்த மின்னஞ்சல் இருந்திருந்தால் இவர் குற்றம் செய்துள்ளார் என்று தீhப்பு வந்திருக்கலாம் என்று பத்திரிகைகள் எழுதின.

இன்னும் என்ன திருப்புமுனைகள் இதில் வரும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதில் ஒரு சில கருத்துக்களை நானும் எனது சார்பில் உங்கள் சம்மதத்துடன் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

தேசிய வங்கியின் நிர்வாகியான Hildebrand சற்று இடதுசாரி அரசியலை ஆதரிப்பவர். இவரை வெளியேற்ற வலதுசாரி கட்சிகள் விரும்பின. முக்கியாம வலது சாரி கட்சியின் „தூண்“ என்று அழைக்கப்படும் Christoph Blocher இதை விரும்பினார். எனவே தான் Hildebrandற்கு எதிராக வலதுசாரி பத்திரிகைகளின் ஆதரவுடன் இப்படி ஒன்று நடந்தேறியது என்றும் ஒரு கருத்து உள்ளது.

மற்றைய ஒரு விடயம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரியும் சுவிசின் பெரிய கட்சியுமான SVP சந்தித்த சரிவை மறைப்பதற்க்கும் மற்றும் கடந்த மந்திரிசபை தேர்தல் (இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. அதாவது சுவிசில் 7 மந்திரிகளளே ஆட்சி செய்வர். ஓவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு மந்திரி. இது பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் அறியத்தருகின்றேன்) சுவிசின் பெரிய கட்சியாகிய SVP கட்சிக்கு ஒரே ஒரு மந்திரி சீட்டு மட்டுமே கொடுக்கப்பட்டது. சுவிசில் பாராளுமன்றமே மந்திரிகளை தெரிவு செய்யும் (மக்கள் அல்ல). மக்கள் வெறுமனே பாராளுமன்றத்தை மாத்திரமே தெரியுவு செய்ய முடியும். ஏனவே இந்த கேவலத்தை மறைக்கவும் இது போன்ற திசை திருப்பல்கள் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இன்னொரு விடயம் இந்த வலதுசாரி கட்சியின் „தூண்“ Christoph Blocher தான் அவரின் கட்சியின் சரிவிற்க்கு காரணம் என்று அவரின் கட்சியிலயே பல குரல்கள் எழுந்தன. அதாவது அந்த கட்சியில் இருக்கும் „பெரிசுகள்“ இளையவர்களிற்க்கு வழிவிட வேண்டும் என்ற கருத்து உட்கட்சி சண்டையாக உள்ளது. அதனால் இது இந்த „பெரிசுகள்“ மீது அவதூறு எற்படுத்த நடந்த உட்கட்சி சண்டையாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

எது எப்படியோ பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்கள் எனக்கு „குத்தும்“ பச்சையில் தான் உள்ளது இதை தொடர்வதா இல்லையா என்று.

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா தகவலுக்கு. முதல் பச்சை எனது :)

மிகவும் பயனுள்ள தகவல்கள், தொடருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.