Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி இனி நாம் அரசுடன் பேசவேண்டிய தேவை இல்லை: அவை 13க்குள் அடங்குவதாக எம்.ஏ.சுமந்திரன் கருத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran-mp_150KK..jpg

13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் என்னென்ன விடயங்களைப் பகிர்வது என்பது பற்றித்தான் இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்றுமுன்தினம் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே சுமந்திரன் எம் பி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவிடம் தெரிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம். இது வார்த்தையளவில் இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும். ஜனாதிபதி இப்படிக் கூறிவிட்டதனால் காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி இனி நாம் அரசுடன் பேசவேண்டிய தேவை இல்லை. ஏனெனில், 13ஆவது திருத்தத்தில் இவை உள்ளடங்குகின்றன.

இனி அந்த விடயங்களை அமுலாக்கத்தை அர்த்தப்படுத்துவது பற்றித்தான் பேசவேண்டும். 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று சில விடயங்களை அர்த்தமுள்ளதாக்குவதுதான் இனி எமது செயற்பாடாக இருக்கவேண்டுமென நாம் கருதுகிறோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எமது பெயர்களை அனுப்புவது தொடர்பான நிலைப்பாட்டில் நாம் இன்னமும் உறுதியாகவே உள்ளோம். ஆனாலும், 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியமும் எழாது என்றார் சுமந்திரன்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் நல்லா சுத்திறார்.இந்த ஆள் சொல்லிறதை நம்புறதிலும் பார்க்க சிங்களவன் சொல்லிறதை நம்பலாம்.அவன் தர முடியாது என்றால் தரமுடியாது என்றே சொல்லுவான்.

வட, கிழக்கிற்கான காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்கு காணிகள் விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்வதான சர்ச்சைக்குரிய காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை, சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திருமதி முருது பெர்ணான்டோ இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்த சுற்றுநிருபத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட பொது அறிவித்தல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் தமது காணிகளை நவம்பர் மாதம் 20ஆம் திகதி 2011ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிய வேண்டுமென கூறியது.

இந்நிலையில், குறித்த காணிச் சுற்றுநிருபத்தை ரத்து செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆணைக்கோரும் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மன்றில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல், மேற்படி சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதான அறிவித்தலை விடுக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தனக்கு ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, சுமந்திரன் எம்.பி. சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகேஸ்வரன், 'மேற்படி சுற்றுநிருபம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இந்த சுற்றுநிருபத்துக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்' என்று கூறினார்.

இதனைத்தொடந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையினை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/34579-2012-01-19-07-02-00.html

எதைப்பேசினாலும் சிங்களவரின் நிலை ஒன்றுதான் தமிழர்களுக்கு எதையும் கொடுப்பதில்லை என்பதில் சிங்களவருக்குள் வேறுபாடே கிடையாது ஆனால் தமிழர்கள் அப்படியில்லை அவர்களுக்குள் என்னத்தை பெறுவது என்று சிந்திக்கும் நேரம்தான் அதிகம் இதுகூட சிங்களவருக்கு இவர்கள் செய்யும் உதவியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.