Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியெதிர்ப்பு புத்திசீவிகளின் அரசியல் :- (புலத்திலிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவரதன்)

Featured Replies

போர் முடிந்து மக்களை தடுப்புமுகாங்களுக்குள் அடைத்த பொழுது சில புலம்பெயர்ந்த புத்திசீவிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். வந்த புத்திசீவிகளில் ஒரு பெண் எழுத்தாளப் புத்திசீவி தடுப்புமுகாங்கள் மிகவும் அழகாக உள்ளன என்றும் புலிகளிடமிருந்து மக்களை மீட்டு அரசாங்கம் இனிதே தமிழ் மக்களை கவனிக்கிறது என்றும் இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலைக் கொடுத்தார்.

தடுப்புமுகாம் என்பது எத்தகையதொரு சித்திரவதையின் சிறை என்பதை, அதற்குள் அடைத்து தொடரச்சியாக மக்கள் அனுபவித்து வரும் துயரம் என்பதை அறியாத அந்த புத்திசீவி இப்படிச் சொல்லிப் பறந்து விட்டார். தடுப்புமுகாங்களில் அடைக்கப்பட்ட ஒரு சனமாவது ‘இது சொர்க்கம்’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. முகாமில் வாழ முடியாது தவிக்கிறோம் என்று மக்கள் தினம் தினம் சொன்னார்கள்.

புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் புலிக்காய்ச்சலுடன் இருக்கிற புத்திசீவி ஒருவரை அரசாங்கம் அழைத்து வந்து ‘இதுதான் ஏதேன் தோட்டம்’ என்று சொல்ல வைத்திருக்கிறது. தடுப்புமுகாங்கள் எத்தகைய கொடியவை என்று உலகம் முழுவதும் பேசப்பட்ட பொழுது அதை அந்தப் பெண் புத்திசீவி எழுத்தாளர் ‘சொர்க்கம்’ என்று வருணித்தார் என்பது எத்தகைய கொடுமை. தடுப்புமுகாங்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு இழைத்த பெரும் துரோகமல்லவா அது?

இந்த புத்திசீவிகள் குழுவில் வந்த இன்னொரு டாக்டர் புத்திசீவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.; அங்கு சென்று உங்களுக்கு என்ன வேணும்? என்று கேட்டிருக்கிறார். கார் ஏதாவது வேணுமா? எப்பிடிக் கார் வேணும்? காருக்குள்ள என்ன என்ன வசதிகள் இருக்க வேணும்? கதவு, சீட் எல்லாம் எப்பிடி இருக்க வேணும்? இப்படியெல்லாம் அந்த டாக்டர் கேட்டார்.

சனம் இருக்க வீடு இல்லாமல் நிலம் இல்லாமல் இருக்கும் பொழுது அந்த புத்;திசீவி இப்படிக் கார் பற்றி பேசியிருக்கிறார். புலிகள் இல்லாததால நாங்கள் இப்படியெல்லாம் வந்து உதவுறம் என்றாராம் அவர். கேட்டு விட்டு போன அதே போக்குத்தான். அதற்குப் பிறகு அவரை அரசாங்கம் அழைக்கவில்லையோ? ஆனால் மீண்டும் அவரும் மேலும் அவர் சார்ந்த புத்திசீவிகளும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் கலந்து சிறப்பிக்க இலங்கை வந்தனர்.

சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை தாயகத்தில் உள்ள எழுத்தாளர்கள் புறக்கணிக்க இம்மாதிரியான புத்திசீவிகளும் காரணமாகின்றனர். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அநீதிகளைப் பதிவு செய்த மனச்சாட்சியுடன் வாழ்ந்த பல படைப்பாளிகள் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை மௌனமாக புறக்கணித்திருந்தனர். சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை உலகமெங்கிலுமிருந்து பல எழுத்தாளர்கள் புறக்கணித்த பொழுது புலி எதிர்ப்புப் புத்தசீவிகள் அதை ஆதரித்து நின்றார்கள்.

ஒருமுறை லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபச்க உரையாற்றச் சென்றிருந்த பொழுது போர் குற்ற விசாரணைகளுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜனாதிபதி உரையாற்ற முடியாமல் அவமானத்திற்கு உள்ளானார். அந்தப் பெரும் களோபரத்தினிடையிலும் சில புலம்பெயர்ந்த புத்திசீவித் தமிழர்கள் ஜனாதிபதியை சந்திக்க காத்திருந்தனர்.

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் ஆச்சரியாக இருந்ததாம். வெளியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிக்கொடியுடனும் பிரபாகரனின் படத்துடன் ‘போர்க்குற்றவாளியை கைது செய்!’ என்று போராடிக் கொண்டிருக்க இலங்கை ஜனாதிபதியை ‘நமது ஜனாதிபதி’ என்று சில தமிழர்கள் சந்திக்க காத்திருந்திருக்கிறார்கள்.

அந்த தமிழர்களைச் சந்தித்ததும் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை சொல்லுங்கள்? என்று ஜனாதிபதியின் சார்பாக அமைச்சர் ஒருவர் கேட்டிருக்கிறார். தடுப்புமுகாமை சொர்க்கம் என்று குறிப்பிட்ட பெண் எழுத்தாளரும் புத்திசீவியுமானவர் முன் வந்து யார் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்? என்று கேட்டாராம். ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். தயவு செய்து அமெரிக்காவில் வசித்த புத்திசீவிப் பேராசிரியரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று அந்த பெண் எழுத்தாளப் புத்திசீவி கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

அங்கிருந்த அமைச்சர் ஒருவர் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்தக் கதையைச் சொல்லிக் கிண்டல் அடித்திருக்கிறார். தமிழர்களின் பிரச்சினை இதுதானா? என்று அந்த அமைச்சர் திரும்பத் திரும்ப கேட்டாராம்? அந்த அமைச்சர் கிண்டல் அடிப்பதுபோல ரொம்ப முக்கியமான விசயம்தான்! இவ்வகையான புத்திசீவிகளின் மாற்றுக் கருத்து இதுதானா? புலிகள்மீது குற்றம் சாட்டிக் கொண்டு இவர்கள் செய்யும் அரசியல் இதுதானா? சொந்த மக்களின் கண்ணீரை மறைக்கும் இந்த அரசியல் ஒரு சுயநல அரசியல்தானே!

புத்திசீவிகள் அறிக்கையில் அமெரிக்காவில் வசித்த புத்திசீவிப் பேராசிரியரின் சகோதரர் ஒருவரும் ஒப்பம் இட்டுள்ளார். அந்தப் புத்திசீவியும் கடுமையான புலி எதிர்ப்பாளர். புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டு அமெரிக்காவில் தஞ்சமடைந்த பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வர வேண்டும் என்பதற்காக மீண்டும் நாடு திரும்பினார். மனித உரிமை குறித்து அதிகம் பேசி வரும் இந்த சகோதரர் துணைவேந்தர் பதவிக்காய் ஜனாதிபதியின் வலையில், தமிழ் அமைச்சர் ஒருவரது வலையில்; விழுந்தார். மக்கள் எல்லோரும் போர் குற்றங்களை குறித்து நல்லிணக்க ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்து கொண்டிருந்த பொழுது இந்த புத்திசீவி தமிழ் அமைச்சரே தமிழர்களின் சிறந்த தலைவன் என்று பாராட்டி துணைவேந்தர் பதவிக்கு தன்னை பரிந்துரைக்க வேண்டும் என்று கோரினார்.

துணைவேந்தர் பதவிக்கு பெண்பேராசிரியர் ஒருவரே தமிழ் அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டார். குறித்த தமிழ் அமைச்சரின் முடிவை மீறி ஜனாதிபதியால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் அமெரிக்கா வாழ் புத்திசீவிக்கு பதவி கிடைக்கவில்லை. திடீரென குறித்த புலி எதிர்ப்பு புத்திசீவி தமிழ் அமைச்சரை திட்டத் தொடங்கினார். புலிகள் யாழ்ப்பாணத்தை ஆண்டதுபோவே தமிழ் அமைச்சரும் யாழ்ப்பாணத்தை அடக்கி ஆள்வதாக அவர்மீது குற்றம் சாட்டினார்.

புலிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விமர்சித்து வந்த அந்தப் புத்திசீவி ஒருகட்டத்தில் கூட்டமைப்புடன் நெருக்கமாகி தனது துணைவேந்தர் பதவியைப் பெற முயன்றார். இறுதிவரை அது சாத்தியமாகத நிலையில் தமிழ் அமைச்சரால் தனக்கு பெரும் ஆபத்து உள்ளதாக குறிப்பிட்டு மீண்டும் அமரிக்கா சென்று குடி கொண்டார். புலி எதிர்ப்பு புத்திசீவிகள் பலரும் இந்த மனித உரிமை பாதுகாப்பு புத்திசீவி துணைவேந்தராக வர வேண்டும் என்று பல வேலைத் திட்டங்களில் ஈடுபட்டார்கள்.

எனது ஆசிரியர் ஒருவர் படிக்கும் காலத்தில் ‘புத்திசீவி’ என்பதற்கு ஒரு விளக்கம் தந்திருந்தார். புத்தியை வைத்து சீவிக்கிறவர்களைத்தான் புத்திசீவிகள் என்று சொல்லுறது அவர் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகின்றது. உண்மையில் இந்த விளக்கம் மிகவும் பொருந்துகிறது. புத்தியை வைத்து தனது நலனையும் தனது குழுவின் நலனையும் கவனித்துக் கொள்ளும் இத்தகைய புத்திசீவிகளைப்போல இப்பொழுது வேறு ஒரு புத்திசீவிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர்கள் சமூகத்தைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுவதன் மூலம் எத்தகைய ஆபத்து ஏற்படுகின்றது?

71 புத்திசீவிகள் அறிக்கையில் கையப்பமிட்ட விடயத்தில் உண்மையில்லை என்று கிழக்கிலங்கை எழுத்தாளர் உமாவரதராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 71 புத்திசீவிகளும் ஆட்டம் கொண்டுள்ளனர். இப்பொழுது அவர் முழுச் சம்மதத்துடன் ஒப்பமிட்டார் என்று அந்தப் புத்திசீவிகள் நிருபிக்க பலவகையில் பேசிக் கொண்டிருக்கிறனர். இந்த அறிக்கையில் 71 புத்திசீவிகளுக்குள் அரசாங்கத்திற்கு விசுவாசமான புத்திசீவிகள் சிலர் அடங்குகின்றனர். பலர் எதற்கு என்று தெரியாமல் ஒப்பமிட்டு மாட்டியுள்ளனர். அறிக்கையின் விபரம் அறிந்து மறுப்புத் தெரிவித்தால் அல்லது சம்மதம் இன்றி ஒப்பம் இடப்பட்டது என்றால் அது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வேலை என்று தலமைப் புத்திசீவிகள் புத்திமதி கூறி வெருட்டியுள்ளனர்.

இந்த அறிக்கையில் ஒப்பம் இடம்பெற்ற புத்திசீவி ஒருவர் குறிப்பிடுகையில் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அதில் ஒப்பமிடுவீர்களா என்றும் புத்திசீவி ஒருவர் கேட்டுள்ளார். முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லாத அந்த நபர் அறிக்கையை பார்த்துவிட்டு ஒப்பமிடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு அறிக்கை காட்டப்படாமலே 71 புத்திசீவிகளின் அறிக்கை அந்த நபரை இணைத்து அவரையும் ஒரு புத்திசீவியாக அறிவித்து வெளிவந்திருக்கிறது.

நாட்டில் இருந்து கொண்டு ஒப்பம் இட்ட புத்திசீவிகள் சிலர் தொண்டு நிறுவனங்களை நடத்தி இலாபங்களை பெற முயற்சிப்பவர்கள். அரச உத்தியோகங்களில் ஈடுபட்டுக் கொண்டே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய பதிவுகளை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு புலி எதிர்ப்பு பதிவுகளை யாழில் உள்ள பெரும் விடுதி ஒன்றில் வெளியிட்டுள்ளனர். இவர்கள் தம்மை எப்பொழுதும் யாழ்ப்பாணத்தின் உயர் வர்க்கமாக காட்டிக் கொள்பவர்கள். இப்பொழுது புலி எதிர்ப்பு பேசும் இவர்களில் ஒருவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது புலிகளின் தலைவர் பிரபாரகன் கொல்லப்பட்டார் என அரசாங்கம் செய்தி வெளியிட்ட பொழுது தனது மாணவர்களிடத்தில் அழுதிருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த யாழ்ப்பாணத்தில் இன்று பதினாறு வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் ஏன் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் செய்யவில்லை? அல்லது அதற்கான ஒழுங்குகளைச் செய்யவில்லை? தமக்கான மீள்குடியேற்றப் பணிகளை செய்தாததன் காரணமாகவே தாம் மீள்குடியேற தாமதமாகவதாக யாழ் முஸ்லீம்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசாங்கம் முஸ்லீம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்க்கிறது. இன்று வடக்கு கிழக்கில் பல இடங்களில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்த 71 புத்திசீவிகளின் கோரிக்கை தமிழ் பேசும் மக்களிடத்தில் பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்ட பேரினவாத அரசின் திட்டமாகும். முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு கூட்டமைப்பைபோ தமிழ்ச் சமூகமோ தடையாக இருக்கிறதா? அவ்வாறான மாயையை இந்த அறிக்கை உருவாக்கப் பார்க்கிறது.

இந்தப் புத்திசீவிகள் இந்தக் கோரிக்கையை அரசை நோக்கியே எழுப்ப வேண்டும். தாயகத்தில் பல்வேறு பிர்ச்சினைகள் நிலவும் இன்றைய காலத்தில் கவனத்தை திசை திரும்பும் நோக்கத்தைக் கொண்ட இந்த அறிக்கை மிகவும் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பேசும் மக்களிடத்தில் கசப்பை உருவாக்குவதன்மூலம் சலசலப்பை உருவாக்குவதன் மூலம் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களை அல்லலுற வைக்கும் பேரினவாத அரசு இலங்கையில் தமிழ் பேசும் மக்கள்மீது தொடர்ந்தும் பிரச்சினைகளை கட்டிவிடப் பாக்கிறது.

இங்கு இவ்வகையான அரசின் சார்பாளர்களாக இருந்து கொண்டிருக்கிற புலி எதிர்ப்பு புத்தீவிகள் பற்றி மாத்திரமே பேசப்படுகிறது. அதற்காக உண்மையிலேயே ஜனநாயகத்தின்மீதும் மனித உரிமைமீதும் அக்கறை கொண்ட புத்திசீவிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் இந்த கட்டுரை பேசவில்லை. புத்திசீவிகள் என்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் வேடமணிந்து கொண்டு சீவிப்பவர்களைப் பற்றியே அல்லது அரசியல் செய்பவர்களைப் பற்றியே சுட்டிக் காட்ட விரும்புகிறது.

சிலருக்கு புலி எதிர்ப்பிலேயே ஜனநாயகமும் இல்லாமல் போய்விட்டது. புலி எதிர்ப்பில் வன்மம் ஏற்பட்டுவிட்டது. புலி எதிர்ப்பு அரசாங்கத்தின் மனிதப்படுகொலைகளை மறைக்கும் அளவிற்கு புத்தியை ஏற்படுத்திவிட்டது. கண்மூடித்தனமான புலிஎதிர்ப்பு அரசின் கண்மூடித்தனமான ஆதரவாளர்களாக்கிவிட்டது.

மாபெரும் யுத்தம் நடந்து பேரழிவுக்கு முகம் கொடுக்கும் இந்த மண்ணில் மீண்டும் வாழ்தலுக்கான ஒரு தருணத்தை அவாவிக் கொண்டிருக்கும் பொழுது, மக்கள் செய்த தியாகங்களுக்காக அனுபவித்த கொடுமைகளுக்காக ஒரு தீர்வு வழங்கப்படவுள்ளது எனச் சொல்லப்படும் ஒரு சூழலில் எல்லாவற்றையும் புத்திசீவிகளின் பெயரால் செய்யப்படும் அரசியல் சிதறடிக்கப் பார்க்கின்றது.

குறிப்பு:- இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின்பே இங்கு வெளியிடப்படுகிறது. இதற்கான பதில் கட்டுரைகள் எமக்கு அனுப்பி வைக்கப்படும் இடத்து அதனை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

ஆ.கு

http://www.globaltam...IN/article.aspx

Edited by நிழலி

அப்படியென்ன தணிக்கை?

எதிரிக்கு சகுனப் பிழை வருமெண்டால் தங்கட மூக்கையும் அறுப்பார்கள் இந்தப் புத்தி சீவிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் வரும் சம்பவங்கள் நடந்தன என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பின் புத்தியீவிகள் என்று அழைக்கப்படும் செய்தியில் சம்பந்தப்பட்ட அந்த நபர்களின் பெயர் விபரங்களை குறிப்பிட்டு எழுதுங்கள். அப்படியென்றால் தான் வாசகர்கள் அந்த மனிதர்களை இனங்காண முடியும். அதைவிட்டு குறுக்கெழுத்துப்போட்டிபோல் மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் என்றால் நாங்கள் யாரை என்று நினைப்பது. ஊர் பூராயம் சொல்வதற்கும் வதந்திகளை பரப்பி பிரச்சினைகளை திசை திருப்புவதும் தான் இவர்களின் நோக்கமென்றால் இப்படியான செய்திகளை இங்கே பதிவு செய்யுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.