Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(தற்போது கிடைத்த செய்தி- இணைப்பு 3 ) சிறைச்சாலை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது தமிழ்க் கைதிகளை சிங்களக்கைதிகள் சுற்றிவளைத்துள்ளனர்: காயமடைந்தோர் எண்ணிக்கை 28ஆக அதிகரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

welikada-240112Fire_150laterst.jpg

சிறைச்சாலையில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் தீயிணை அணைப்பதற்கு தீயனைப்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலீஸ் குழுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார்.

இதனிடையே சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளை தம்முடன் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு சிங்கள கைதிகள் அச்சுறுத்துவதாகவும் இதனால் இவர்களின் பாதுகாப்பு குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசி தமிழ் கைதிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் கைதிகள் கூடியுள்ள இடத்திற்குள் சிங்கள கைதிகள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனால் சில கைதிகள் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

welikada-240112Fire_002.jpg

welikada-240112Fire_003.jpg

welikada-240112Fire_001.jpg

welikada-240112Fire_004.jpg

welikada-240112Fire_290-005.jpg

(இணைப்பு-001)

வெலிக்கடை நியுமகசீன் சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கு எதிராக சிங்கள கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் இதனால் தமிழ் கைதிகளிடையே பதட்டம் நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிந்திய செய்திகளின்படி தமழ்க் கைதிகளுக்கும் சிங்களக்கைதிகளுக்கும் கைகலப்பு இடம்பெற்றதாகவும் மேற்படி கலவரத்தில் தமிழர்கள் உட்பட இதுவரை 28 சிறைச்சாலை கைதிகளும் 2அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக தற்பொது கிடைக்கப்பெற் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை முதல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி எம்.எல். ரஞ்சன என்பவரை இடமாற்றக்கோரி சிங்கள சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களை களைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் முற்பட்டபோது கலவரம் ஏற்பட்டதாகவும் கலவரத்தின் போது சிறைச்சாலை காரியாலயங்களுக்கும் களஞ்சியசாலைகளுக்கும் சிங்கள கைதிகள் தீ வைத்துள்ளதாகவும். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்ததார்.

இதனிடையே மேற்படி சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் குறித்து சம்பந்தன் ஐயாவுடாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் தமிழ் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்த மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.

http://www.seithy.co...&language=tamil

Sri Lanka jail riot 'injures 31' in Colombo

from bbc

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கைதிகள், சிறை அதிகாரிகளுக்கு எதிராக கலம்பகம் செய்தாலும்...

கடைசியாக பாதிக்கப் படுவது தமிழ் கைதிகள் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை.

நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர்.குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள். எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் உறவுகளிடமிருந்து அவசரமான இவ்வுதவியை வேண்டி நிற்கிறோம்.

நாளைய தினம் மேற்படி பொருட்களை வழங்கியாக வேண்டிய அவசரத்தைப் புரிந்து உங்கள் உதவிகளை வழங்குமாறு உறவுகளே உங்களை வேண்டுகிறோம்.

ஒரு கைதிக்கான பொருட்களுக்குத் தேவையான பணம் – 1500,00ரூபா

200கைதிகளுக்கும் தேவையான மொத்தத் தொகை – 1500,00Rsx 200 = 300000,00ரூபா

அண்ணளவாக 2100,00€ தேவைப்படுகிறது. அவசர உதவியான இத்தேவையைத் புரிந்து உறவுகள் உதவ முன்வருமாறு வேண்டுகிறோம்.

play-button.gif?w=28&h=30தமது தேவைகiளை நிறைவேற்றுமாறு கழுத்துறைச் சிறையிலிருந்து கைதியொருவர் தந்த குரல் வழிச்செய்தியைக் கேட்க இவ்விணைப்பில் அழுத்துங்கள்.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

வங்கிமூலம் உதவ :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள –முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

கைதிகளின் கலகத்திற்கு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையே காரணம்

மகஸின் சிறைச்சாலையில் உணவுப்பொதி மூலம் கைதிகளுக்கு போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்கும் நடவடிக்கையே அச்சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலகத்திற்கு பிரதான காரணம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலகத்தில் பங்குபற்றியோர் ,போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறினார்.

விளக்கமறியல் கைதிகளுக்கு வெளியிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான பாரிய நடவடிக்கையை சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகர் தலைமையிலான அதிகாரிகள் ஆரம்பித்ததுடன், கைதிகளுக்கு குடும்ப அங்கத்தவர்களால் கொண்டுவரப்படும் உணவுப் பொதிகளையும் சோதனையிட்டதாக அவர் கூறினார்.

இந்த கலகத்தினால் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/34929-------75---.html

மகசின் சிறைச்சாலைக் கலகம்: ஒரு கோடி ரூபா சொத்துக்கள் சேதம்! -

முக்கிய ஆவணங்கள் முற்றாக எரிப்பு!!

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்திருக்கும் மகசின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலகத்தில் சிறைச்சாலைச் சொத்துக்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையிலுள்ள இரண்டு கட்டங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அதற்குள் இருந்த தளபாடங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க குறிப்பிட்முள்ளார்.

சிறைச்சாலை அறை ஒன்றுக்குள் வைக்கப்பட்டிருந்த 1,800 கைதிகளின் வழங்கு விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் முழுமையாக எரிந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், இவற்றை மீளத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கிய ஆணங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு விட்டதால் மகசின் சிறையிலுள்ள 1,800 கைதிகளினதும் வழக்கு விசாரணைகளை உடனடியாக முன்னெடுப்பதில் சிறைச்சாலை அதிகாரிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, மகசின் சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்டுள்ள 190 தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு எந்த ஒரு சிறைச்சாலையிலும் பாதுகாப்பு இல்லை எனவும், தம்மை புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளார்கள்.

மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினால் இங்கிருந்த 190 தமிழ் அரசியல் கைதிகளும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இவர்களில் 180 பேர் களுத்துறை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அதேவேளையில் 10 பேர் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளே தம்மை புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றம் செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலை உருவாகியிருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=6e8de133-87f6-4ab4-884a-e3ae887b4eb2

தப்பிச்செல்லும் நோக்கில் சிறைச்சாலை காப்பகத்துக்கு கைதிகள் தீ வைத்தனர்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளில் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கத்திலேயே சிறைச்சாலையின் ஆவணக் காப்பகத்துக்கு தீயிட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போதே இது தொடர்பில் தகவல் தெரியவந்ததாகவும் இவ்விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய மகசின் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று இன்று பிற்பகல், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய மகசின் சிறைச்சாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சிறைக் கைதிகள் சிலரால் இந்த கலவரம் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரி குறித்த சிறைச்சாலையின் பொறுப்புக்களைக் கையேற்று மூன்று தினங்களுக்குள்ளேயே இந்த கலவரம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டோரில் சுமார் 120பேர் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றோராவார். மேலும் 180பேர் விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள். ஏனையோர் போதைப்பொருட் பாவனை மற்றும் விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களாவர்.

இந்நிலையில், சிறைச்சாலைக்குள் விநியோகிக்கப்படும் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகர் சிற்சில நடவடிக்கைகளை பின்பற்றியுள்ளார். அத்துடன், போதைப்பொருட் பாவனைக்கு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். இவ்வதிகாரியின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே மேற்படி கைதிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

அத்துடன், மேற்படி அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிறைச்சாலைக்குள் கலவரத்தை ஏற்படுத்தி அதன்போது சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் கைதிகள் செயற்பட்டுள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதற்காகவே, கைதிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள ஆவணக் காப்பகம் அவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்தியவாறு பிரதான வாயில் வழியாக தப்பிச் செல்லவும் முயற்சித்துள்ளனர்.

புலிச் சந்தேகநபர்கள் இடமாற்றம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாது ஒதுங்கி நின்றவர்களை தங்களது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தி ஒரு சில கைதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இவ்வாறான தாக்குதலினாலேயே ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்கள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் அவசர அவசரமாக வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். இவ்வாறாக 180 சிறைக்கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35028-2012-01-27-09-14-42.html

P04(20).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.