Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவ மனைகளின் இயக்கமின்றி வைத்திய சேவைக்கு ஏங்கும் வன்னி

Featured Replies

முழங்காவில் - முழங்காவிலில் உள்ள அரச மருத்துவமனையில் ஒரு சிங்கள இளைஞரே மருத்துவராக கடமையாற்றுகிறார். அங்கே தமிழ் மருத்துவர்கள் இல்லை. இருக்கின்ற மருத்துவருக்கு தமிழ் ஒழுங்காகத் தெரியாது. மக்களுக்கோ சிங்களம் சரியாக விளங்காது. இந்த நிலையில்தான் நோயாளிகளுக்கும் மருத்துவருக்கும் இடையில் உறவும் மருத்துவமும் நிகழ்கின்றன.

அக்கராயன் - அக்கராயனில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவரே இல்லை. இதுதான் மூன்றாம் கட்ட யுத்தகாலத்தில் வன்னியில் இயங்கிய தலைமை மருத்துவமனை.

கிளிநொச்சியில் இயங்கிய மாவட்ட வைத்தியசாலை இந்த மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது இந்த மருத்துவமனை வளாகத்தில் மாடுகள் படுத்து உறங்குகின்றன.

இந்த மருத்துவமனைக்கு ஒரு நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று இந்தப் பிரதேச மக்கள் கோரிக்கைக் கடிதங்களை தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்களும் செய்திக்கு மேல் செய்திகளாக அங்குள்ள மக்களின் நோயாளிகளின் பிரச்சினைகளையும் நிலையையும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்னும் ஒரு நிரந்தர மருத்துவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை. இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி அக்கராயன் மருத்துவமனைக்கு ரத்னாயக்க என்ற சிங்களவர் ஒருவரே மருத்துவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

பூநகரி - பூநகரியில் உள்ள மருத்துவனையை படையினர் பிடித்து வைத்திருக்கிறார்கள். இந்த மருத்துவமனையை விடுவிக்கும்படி பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் சாதகமான பதில் எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் சொல்கின்றனர்.

1945 இல் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை பூநகரிப் பிரதேசத்திற்கான முக்கிய மருத்துவமனையாகும். ஆனால், இப்போது இது படையினரின் பயன்பாட்டில் இருக்கிறது. ஆகவே, இங்கே மருத்துவமனையும் இல்லை. மருத்துவர்களும் இல்லை.

பளையில் இயங்கிய மருத்துவமனை முற்றாகவே சேதமடைந்து அழிந்துவிட்டது. இப்பொழுது அந்த இடத்தில் மருத்துவமனையொன்று இயங்கியதற்கான அடையாளங்களே இல்லை. பதிலாக முன்னர் இருந்த மருத்துவமனைக்கு அண்மித்த பிரதேசத்தில் ஒரு தனியாரின் வீட்டில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு அரைகுறை நிலையிலான மருத்துவமனை இயங்குகிறது.

இந்த மருத்துவமனையை தனியே ஒரேயொரு பெண் மருத்துவரே இயக்குகிறார். பெயர் மைதிலி. இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இரவு, பகல், விடுமுறை, ஓய்வு என்று எதையுமே எடுக்க முடியாத நிலையில் தொடர்ந்து ஊழியம் செய்து கொண்டிருக்கிறார் மைதிலி.

பிரதேச வைத்தியசாலையின் பணிகள், பொதுச் சுகாதாரப் பணிமனையின் பணிகள் என்று தொடர் வேலைச் சுமைகளின் மத்தியிலேயே இந்த மருத்துவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலைதான் ஏனைய பிரதேச மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும்.

மருதங்கேணி - மருதங்கேணி மருத்துவமனையும் சேதமடைந்துவிட்டது. ஒரு சிறு பகுதியில் இயங்கும் மருத்துவமனைக்கு உரிய மருத்துவர் இல்லை. வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு உள்ள ஒரேயொரு மருத்துவமனை இது. ஆனால், இதன் நிலை இப்படித்தான் உள்ளது.

முள்ளியான் - முள்ளியான் கிராமிய மருத்துவமனை இப்பொழுதுதான் புனரமைக்கப்படுகிறது. ஆனால் நிச்சயமாக இந்த மருத்துவமனைக்கு இப்போதைக்கு எந்த மருத்துவரும் வரப்போவதேயில்லை. ஆகவே, இந்த மருத்துவமனையில் வெளவால்களோ, சிலந்தியோ குடியிருக்கப்போகின்றன.

வன்னேரிக்குளம் - இதைப்போல வன்னேரிக்குளத்தில் இயங்கிய மருத்துவமனை புனரமைக்கப்பட்டு மூடப்பட்ட நிலையிலேயே பெரும்பாலும் இருக்கிறது. இடையிடையே இங்கே மருத்துவர் ஒருவர் அத்திபூத்தாற்போலத் தலையைக் காட்டுவார். மற்றும்படி மருத்துவமனையின் வளாகத்தில் மாடுகளே படுத்துறங்குகின்றன.

முன்னர் இந்தக் கிராமிய மருத்துவமனையில் ஒரு டாக்டர் சுமார் 28 வருடங்களாகக் கடமையாற்றினார். அவர் ஒரு எழுத்தாளரும் கூட. ச.முருகானந்தன். அப்படியொரு தியாக மனப்பாங்குடையவர். மாடுகளும் வெளவால்களும் இடையிடையே வருகைதரும் மருத்துவருமாகவே இந்த மருத்துவமனையின் இயக்கம் இருக்கப்போகிறது.

வேரவில் - வேரவிலில் உள்ள மருத்துவமனைக்கு இன்னும் யாரும் வரவேயில்லை.

தருமபுரம் - தருமபுரம் மருத்துவமனையின் கதையைச் சொல்லவே வேண்டியதில்லை.

அங்கே ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர் கடமையாற்றினார். இந்த மருத்துவமனையை விஸ்தரித்துக் கட்டுவதற்கு புதிதாக நிர்மாணிப்பதற்கு அமெரிக்க அரசின் நிதி உதவி கிடைத்துள்ளபோதும் மருத்துவமனைக்குரிய காணியில் ஒரு பகுதியை தனியார் ஒருவர் கையகப்படுத்தி வைத்திருப்பதால் கட்டுமானப்பணிகளும் தடைப்பட்டுள்ளன.

வட்டக்கச்சி - வட்டக்கச்சி மருத்துவமனை ஏறக்குறைய இயங்கா நிலையிலேயே இருக்கிறது. அந்தப் பிரதேச நோயாளிகள் பெரும் சிரமங்களின் மத்தியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கே வருகிறார்கள்.

ஒட்டுசுட்டான் - ஒட்டுசுட்டான் மருத்துவமனையும் ஏறக்குறைய இதே நிலைமையை ஒத்ததாகவே உள்ளது.

நெடுங்கேணி - நெடுங்கேணி மருத்துவமனையிலும் மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. இப்படித்தான் உடையார்கட்டு, கண்டாவளை, பாண்டியன்குளம் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளின் நிலையும்.

இதைவிட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மல்லாவி போன்ற மாவட்ட மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் இல்லை. இங்கே இப்போது சேவைகளை ஆற்றுவதற்காக சிங்கள மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களும் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும் என்கின்றனர் பிரதேச மக்கள்.

ஆக்கம்: அரவிந்தன்

மூலம்: வீரகேசரி - தை 22, 2012

பிரசுரித்த நாள்: Jan 24, 2012 15:27:18 GMT

  • தொடங்கியவர்

பொதுவாக வன்னியில் இன்று மருத்துவர்களுக்கான பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

அநேகமாக கிராமிய மருத்துவ மனைகளும் பிரதேச மருத்துவமனைகளும் புலிகளின் காலத்தில் புலிகளால் பயிற்றுவிக்கப்பட்ட போராளி மருத்துவர்களும் இணைந்து சேவையாற்றியபடியால் ஓரளவு நிலைமையை சமாளிக்கக்கூடியதாக இருந்தது. ஆனாலும், அப்போதும் பற்றாக்குறையே நிலவியது.

இப்போதோ நிலைமை அதையும் விட மிக மோசமானதாகவே உள்ளது. காரணம், வன்னி மற்றும் வாகரை, படுவான்கரை போன்ற பிரதேசங்களில் சேவையாற்றுவதற்கு பெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் வருவதேயில்லை. வர விரும்புவதும் இல்லை.

அதிலும் இந்தப் பிரதேசங்களில் பிறந்து, வளர்ந்து, படித்து மருத்துவத்துறைக்கு பிரதேச ரீதியாகக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்வாகி மருத்துவராகிய மருத்துவர்களே பின்னர் இந்தப்பிரதேசங்களைத் திரும்பியும் பார்க்காத ஒரு நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு சில மருத்துவர்கள் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து, படித்த பிரதேசத்துக்கும் தங்களை ஆளாக்கிய சமூகத்துக்கும் குறைந்த காலமாவது சேவையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கடமையாற்றுகிறார்கள்.

ஏனையோர் யாழ்ப்பாணம் அல்லது கொழும்பு அல்லது லண்டன், கனடா, அவுஸ்ரேலியா என்று தாங்கள் விரும்பிய தங்களுக்கு வசதியான பகுதிகளைத் தெரிவு செய்து கொள்கிறார்கள். இது கிடைக்காவிட்டால், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, கண்டி, திருகோணமலை என்று ஏதாவதொரு நகர்ப்பகுதிக்குள் நின்று விடுகிறார்கள்.

இவர்கள் மறந்தும் வன்னி, வாகரை, படுவான்கரைப் பிரதேசங்களுக்கு வருவதேயில்லை. இது ஏன்? இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு, சொந்த மக்களுக்கு இவர்கள் சேவையாற்ற வேண்டும் என்று ஏன் கருதுவதில்லை?

அதிலும் கடந்த காலங்களில் நடந்த போரினால் இந்தப் பிரதேசங்களின் மக்கள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றனர்.

உடற்பாதிப்புகள், உளவியற்பாதிப்புகள் என்று ஏராளமான பாதிப்புகளை மருத்துவத்துறையினரே பட்டியலிட்டுள்ளனர்.

இத்தகைய பெரும் பாதிப்புகளைச் சந்தித்த மக்கள், இன்னும் நெருக்கடிகளின் மத்தியிலும் பற்றாக்குறைகளின் நடுவிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதைவிட இன்னும் இந்தப்பிரதேசங்கள் ஒரு முழுமைப்படுத்தப்பட்ட இயல்புச் சூழலுக்குள்ளும் வளச் சூழலுக்குள்ளும் வரவேயில்லை.

ஆகவே, இந்த நிலையிற்தான் மருத்துவர்களின் பணியும் பங்களிப்பும் மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன. ஆனால், இடிந்தும் சேதமடைந்தும்போன மருத்துவமனைகள் விரைவாகவே புனரமைக்கப்பட்டு வருகின்றன. சில மருத்துவமனைகள் முற்றாகவே புதிய நிர்மாணத்துக்குட்படுத்தப்பட்டுள்ளன.

கிராமங்களில் நிறைய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றிற்கும் மருத்துவர்கள் இல்லையென்பதே பெரும்பிரச்சினை.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வன்னி, வாகரை, படுவான்கரை போன்ற பிரதேசங்களின் புவியியல் அமைப்பின் படி பிரதேச மருத்துவமனைகளும் கிராமிய மருத்துவமனைகளும் மிகமிக அவசியமான சேவைகளைச் செய்ய வேண்டியவை.

ஏனென்றால், இந்தப் பிரதேசங்களில் உள்ள இடங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்டளவு தொலைவைக் கொண்ட தூரத்தையுடையன. தவிர, போதிய போக்குவரத்து வசதிகளைப் பெற முடியாதவையும் கூட. அதாவது, மிகப் பின்தங்கிய பிரதேசங்களாகவே இவை இருக்கின்றன.

ஆகவே, இங்கே மருத்துவ சேவையை ஆற்றுவதென்பது மிகப் பெரிய பணியும் பங்களிப்புமாகும். அதிலும் பாம்புக்கடி போன்ற சூழலுடன் சம்மந்தப்பட்ட அதிக அபாயங்களைத் தரக்கூடிய நிலைமைகளில் மருத்துவம் செய்ய வேண்டிய பொறுப்பு இந்தப் பிரதேசங்களுக்குரியது. இந்த மருத்துவ வசதிகள் இந்தப் பிரதேசங்களில் இல்லையெனில், நிச்சயமாகச் சாவின் விகிதம் அதிகரித்தே செல்லும்.

முன்னர் ஒரு காலத்தில் வடக்குக் கிழக்கில் இருந்து மலையகப் பகுதிகளுக்கு மருத்துவ சேவையாற்றுவதற்காக தமிழ் இளைஞர்கள் சென்றனர். இதற்கான பதிவுகளாக பேராசியர் நந்தி சிவஞானசுந்தரம், டாக்டர் தி.ஞானரதன் போன்றவர்களின் எழுத்துகளே உள்ளன.

ஆனால், “இப்போது அருகில் இருக்கும் தீவுப் பகுதிக்குச் சென்று மருத்துவ சேவையைச் செய்வதற்கு எவருமே முன்வருகிறார் இல்லை' என வடக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் மிக வருத்தத்துடன் சொல்கிறார்.

“தமிழர்கள் தங்கள் சொந்தப்பிரதேசங்களுக்கும் அயற் பிரதேசங்களுக்கும் சேவைசெய்யப் பின்னிற்கிறார்கள். ஆனால், மிகத் தொலைவிலிருந்து வந்து தமக்கு முற்றிலும் அந்நியமான கஷ்டப்பிரதேசங்களில் கடமையாற்றுவதற்கு சிங்கள இளைஞர்கள் தயாராக முன்வருகிறார்கள். இதுதான் துயரமான உண்மை' என்கிறார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியொருவர்.

இந்த நிலைமையை எப்படி மாற்றுவது என்றே தெரியவில்லை என்கின்றனர் வடக்குக் கிழக்கில் மருத்துவத்துறையில் சேவையாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள்.

கட்டாயப்படுத்தி மருத்துவர்களை சில பிரதேசங்களுக்கு அனுப்புவதற்கான வசதிகள் இலங்கையின் சட்டத்திலும் விதிக்கோவையிலும் இல்லை. அப்படி கட்டாயப்படுத்தி மருத்துவர்களை சேவைப்பிரதேசங்களுக்கு அனுப்பினால், அவர்களுடைய தொழிற்சங்கம் தலையிட்டு அதைத் தடுக்கக்கூடியவாறே நிலைமை இருக்கிறது. இதுதான் எங்களுக்குப் பிரச்சினையாக இருக்கும் விடயம். இந்த இடத்தில், தாமாகவே முன்வந்து சேவை மனப்பாங்குடனும் மனிதாபிமானத்துடனும் மக்களின் மீதான பற்றுடனும் பணியாற்ற வந்தால்தான் பிரச்சினை தீரும். இந்த நிலைமையில் சற்று மாறுதலும் ஏற்படும் என்கின்றனர் இவர்கள் மேலும்.

ஆகவே, மருத்துவர்கள் இளைய தலைமுறையைச் சேர்ந்த மருத்துவர்கள் இதுகுறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

இது ஒரு காலத்தின் அவசியப்பணி. ஒரு பெரும் மனிதாபிமானப்பணி. “சொந்தச் சோதரர் நோதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!' என்று யாராவது, நொந்து பாடுவதற்கு இடமளிக்காமல் நியாயமான முறையில் நடந்து கொள்ள முன்வர வேண்டும்.

மருத்துவர்களை கடவுளாகக் கொண்டாடும் ஒரு சமூகத்தில் அந்த மக்களை நேசித்து, அந்த மக்களுக்காக வேலை செய்து, அந்த மக்களுடன் வாழ்வதில் கிடைக்கின்ற பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும் திருப்தியும் வேறு எங்கும் கிடைத்து விடப்போவதில்லை.

இதேவேளை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணும்முகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு சேவை நீடிப்பை வழங்கி இவர்களுடைய சேவைகளைப் பெறலாம் என்று தெரிவித்திருக்கிறார். இதன்படி சேவை நீடிப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது.

ஆனால், இதில் மிக மூத்தநிலை மருத்துவர்களே அதிகமாக சேவைக்கு வருவர். இது வன்னியைப் பொறுத்த அளவில் அதிக நன்மைகளைத் தருமென்றில்லை. வன்னியின் புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு இந்த மூத்த வைத்தியர்களின் பயணங்களும் சேவையும் அமைவது கடினம். அதாவது, நின்று தாக்குப் பிடிக்கக்கூடியவர்களே வன்னிக்கும் வாகரைக்கும் படுவான்கரைக்கும் தேவை.

அண்மையில் சிவில் சமூகம் என்ற பேரில் தமிழர் அரசியலை முன்னெடுப்போருக்கான குழுவொன்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்தக் குழுவில் ஒப்பமிட்டுள்ளோல் பலர் மருத்துவர்கள்.

இவர்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியற் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய, தமிழீழத்தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்.

வடக்குக் கிழக்கில்தான் (தமிழீழத்தில்தான்) வன்னியும் வாகரையும் படுவான்கரையும் வடமராட்சி கிழக்கும் தீவுப்பகுதிகளும் உள்ளன என்று இவர்களுக்குத் தெரியுமோ தெரியாது.

ஆக்கம்: அரவிந்தன்

மூலம்: வீரகேசரி - தை 22, 2012

பிரசுரித்த நாள்: Jan 24, 2012 15:27:18 GMT

===================================

யாழ். வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கான இயந்திரங்கள் அன்பளிப்பு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=97186

  • கருத்துக்கள உறவுகள்

"..... மருத்துவமனைக்குரிய காணியில் ஒரு பகுதியை தனியார் ஒருவர் கையகப்படுத்தி வைத்திருப்பதால் கட்டுமானப்பணிகளும் தடைப்பட்டுள்ளன"

பொதுச் சொத்தை கையகப் படுத்திய இந்த நபர் யாரென்ற மேலதிக விபரம் சொன்னால் நல்லது.

  • தொடங்கியவர்

"..... மருத்துவமனைக்குரிய காணியில் ஒரு பகுதியை தனியார் ஒருவர் கையகப்படுத்தி வைத்திருப்பதால் கட்டுமானப்பணிகளும் தடைப்பட்டுள்ளன"

பொதுச் சொத்தை கையகப் படுத்திய இந்த நபர் யாரென்ற மேலதிக விபரம் சொன்னால் நல்லது.

அநேகமாக சிங்கள அரசியல் - இராணுவ செல்வாக்குள்ள ஒருவாரின் நிலமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மோசக்காரர்களை அடையாளப்படுத்தவும் கருத்து கட்டுரை எழுதுபவர்கள் இதுபோன்ற மோசடிக் காரர்களின் உண்மையான பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு அவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் சரியானமுறையில் இனம்காட்ட முன்வரவேண்டும். இவர்களை பாதுகாப்பதற்காக அனாமயதேய பேர்வளிகளாக சித்தரிப்பதால் அது அவர்களுக்குத்தான் இலாபமே அன்றி விடயத்தை தெரிந்து கொள்வதிலும்பார்க்க விடயத்தின் காரணகர்த்தாவை அடையாளம் தெரிந்து வைப்பது தான் மக்களுக்கு நன்மைதரும்.

  • தொடங்கியவர்

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மோசக்காரர்களை அடையாளப்படுத்தவும் கருத்து கட்டுரை எழுதுபவர்கள் இதுபோன்ற மோசடிக் காரர்களின் உண்மையான பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு அவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் சரியானமுறையில் இனம்காட்ட முன்வரவேண்டும். இவர்களை பாதுகாப்பதற்காக அனாமயதேய பேர்வளிகளாக சித்தரிப்பதால் அது அவர்களுக்குத்தான் இலாபமே அன்றி விடயத்தை தெரிந்து கொள்வதிலும்பார்க்க விடயத்தின் காரணகர்த்தாவை அடையாளம் தெரிந்து வைப்பது தான் மக்களுக்கு நன்மைதரும்.

இந்த ஆக்கபூர்வமான கட்டுரையை , தாயகத்தில் இருந்து, தனக்கு பிரச்சனை வராமல் எழுதியுள்ளார். இதன் முதல் நோக்கம் தாயக உறவுகளின் பரிதாப நிலையை வெளியே கொண்டுவருதல். குறிப்பாக பல இடங்களில் முதலில் வைத்தியர் உதவியையும் பின்னர் மேலதிக உதவிகளையும் எதிர்பார்த்து நிற்கும் மக்கள் கதை பற்றியது.

ஊடகவியலாளர்களும் மக்களும் பலமின்றி அனாதரவாகவே உள்ளனர். இந்த நிலைமையில் இருந்து மெதுவாகவே ஈடுபடல் வேண்டும். காலம் நேரம் வரும்பொழுது இவ்வாறு தடையாக இருப்பவர்களின் கதை வெளியே வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.