Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு

Featured Replies

கொஞ்சம் சீரியசாக போகின்றதனால் நகைச்சுவைக்காக இதை செருகுகின்றேன். அதாவது புலிகளை ஆதரிக்க மாட்டோம். ஆனால் தமிழீழம் அமைந்தால் மகிழ்ச்சியடைவோம் என்று சிலர் கூறுகிறார்கள். அது எவ்வாறு இருக்கின்றதென்றால் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை விரும்ப மாட்டோம். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடைவோம் என்பது போல இருக்கிறது என்றார் ஒரு நிகழ்வில் தேனிசை செல்லப்பா

"ஏறுக்கு மாறாய்" என்பதின் அர்த்தம் இப்ப விளங்குது.

ஒருவேளை டங்கிளாஸ் தமிழீழத்தை ஆமியோட நிண்டு பிடிச்சுதரவேணும் எண்டு நினைக்கினமோ இல்லை வரதர் இந்தியாவில இருந்து.? :roll: :roll: :roll: :roll: :roll:

இல்லை எங்கட தமிழ்கூட்டமைப்பு.?? சா.. இருக்காது அவை தீவிர புலிகள் ஆதரவாளர்கள்.! :x :x :x :x :x

  • Replies 186
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சின்னக்குட்டி! ஒண்டும் எசகு பிசகாக பேசவில்லை.(எசகு என்றால் எதிர்ப்பு சக்தி குறைவாம். அதாவது எயிட்சாம்). நாளைக்கு தமிழீழ நாடு ஒண்டு வந்த பிறகு சண்டை பிடிச்ச சிறிலங்காவோடையே பொருளாதார , துறையியல் சார் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்படும் உலக யதார்த்தத்தில் வாழும் நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்தியாவோடு சண்டை பிடிப்பது? நீங்களே சொல்லுங்க..? அதே போல இந்தியாவும் எத்தனை காலம் ஈழத்தமிழர்களை விட்டு விலகியிருப்பது?

கட்டாயம் அதற்கான வளிவகை செய்யவேண்டிய தேவையை இந்தியாவுக்கு ஏற்படுத்தும். காரணம் மக்களோ புலிகளோ இந்தியாவை எப்போதும் அன்னியமாக்கியது கிடையாது. போக்கு வரத்துக்கள் எப்போது போலவும் நடப்பது அதுக்கு சாண்று.!

அதேபோல நாங்கள் பாக்கிஸ்தானுக்கோ, நேபாளத்துக்கோ போனது கிடையாது என்பது அதுக்கு அணிசேர்க்கும். காரணம் எங்களுக்கு அங்கிருக்கும் ஆதரவு, என்பது ஒண்றும் பொய் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு லக்கி! நீங்கள் எழுதிய இந்தக ்கருத்துக்களை தேவை கருதி இங்கு வெளியிடுகிறேன்..

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் : போராளிகளுக்கெல்லாம் இவர் ஒரு உதாரணம்.... இவரது பாதையில் நான் சில வேறுபாடுகளை கண்டாலும் கூட இவர் எனக்கு ஒரு கதாநாயகன் தான்.... ஒழுக்கத்துக்கும், கண்டிப்புக்கும் பெயர் போனவர் இவர்.... இவர் நினைத்திருந்தால் கனடாவிலோ அல்லது லண்டனிலோ சுகவாழ்வு வாழ்ந்து கொண்டு அறிக்கை மூலம் இலங்கை அரசை எதிர்த்து அரசியல் பண்ண முடியும்.... இப்போது நினைத்தாலும் அவர் இலங்கை அரசில் மிகப்பெரிய பதவி வாங்கி செட்டிலாகி விட முடியும்.... ஆனால் தன் கொள்கையில் சற்றும் மாறாமல் இலக்கை நோக்கி நடை போடுகிறார்.... தன் இயக்கத்தை ஒரு கட்டுப்பாடான ராணுவமாக நிர்வகிக்கும் திறமை கொண்டவர்.... எதிர்காலத்தில் போராளிகளுக்கெல்லாம் இவரது வாழ்க்கை கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்கு அவ்வாறு தேசியத்தலைவரினைப்பற்றிக் கருத்து எழுதியிருப்பாரயின் லக்கிலுக்குவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

காவடி சொல்வதுபோல லக்கிலுக்கு எழுதியிருந்தால் நானும் எனது நன்றியினைத்தெரிவிக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு என்று தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருச்சி ஊடகவியலாளர்களிடம் இன்று கருணாநிதி கூறியதாவது:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கவலை தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு. அவர்கள் எங்கள் இதயத்தில் உள்ளனர். எப்போதும் இது போன்ற பிரச்சினைக்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்கும்.

puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா.. கவிஞர் காவடியோ உந்த எரிக் சொல்ஹைய்ம் வேலையில ஈடுபட்டிருக்கிறது. நான் உம்ம சும்மா எண்டு நினைச்சன். நீர் கவிதை எண்ட பேரில சும்மா வார்த்தைகளோடு வரும் போது நினைச்சன் நீரும் வழமையான ஒரு யாழ்கள வாசிதான் எண்டு. பரவாயில்லை.. பிரியோசனமா ஏதோ செய்யிறீர்..

எண்டாலும் நீர் லண்டனில இருக்கிற இந்திய கூலிக்குழுக்களின்ர உறுப்பினராகவோ, தேச விரோத கும்பலைச் சேர்ந்த உறுப்பினராகவோ இருப்பதற்கு வாய்ப்பிருக்கெண்டு இஞ்சை வந்து சிலர் எழுதக் கூடும்.. வாங்கிக் கட்ட றெடியாய் இரும்..

  • தொடங்கியவர்

ஆனால்.. அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தங்கள் விமோசனத்துக்கு புலிகளைத்தானே நம்பியாகவேண்டும்.

இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....

சுபாஷ் சந்திரபோஸும் கூட புலிகளின் வழியை தான் இந்திய சுதந்திர போருக்கு எடுத்துக் கொண்டார்.... ஆனால் சுதந்திர போருக்கு போராடிய மற்ற இயக்கங்களை அவர் அழிக்க முயற்சிக்கவில்லை......

தவறாக எண்ண வேண்டாம்..... மற்றவர்கள் இந்த கருத்துக்காக என்னை வசைபாடவும் முயற்சிக்க வேண்டாம்.... முடிந்தால் சரியான விளக்கம் கொடுத்து என்னை காம்ப்ரமைஸ் செய்யுங்கள்....

  • தொடங்கியவர்

திரு லக்கி! நீங்கள் எழுதிய இந்தக ்கருத்துக்களை தேவை கருதி இங்கு வெளியிடுகிறேன்..

நன்றி திரு. காவடி அவர்களே....

என் மன உணர்வுகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முயற்சி மேற்கொண்டிருக்கிறீர்கள்... அது தேவையில்லாதது என்று நினைக்கிறேன்....

இங்கிருக்கும் சில நடுநிலையான நண்பர்கள் ஏற்கனவே என்னை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.....

இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....

சுபாஷ் சந்திரபோஸும் கூட புலிகளின் வழியை தான் இந்திய சுதந்திர போருக்கு எடுத்துக் கொண்டார்.... ஆனால் சுதந்திர போருக்கு போராடிய மற்ற இயக்கங்களை அவர் அழிக்க முயற்சிக்கவில்லை......

தவறாக எண்ண வேண்டாம்..... மற்றவர்கள் இந்த கருத்துக்காக என்னை வசைபாடவும் முயற்சிக்க வேண்டாம்.... முடிந்தால் சரியான விளக்கம் கொடுத்து என்னை காம்ப்ரமைஸ் செய்யுங்கள்....

ஆம் லக்கி சொன்னது சரியானது !! ஒரு சமயத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திர போஸ் மகாத்மா காந்தி சொன்னதின் பேரில் பதவியை ராஜினாமா செய்தார். காந்தியின் கொள்கையின் பால வேறுபாடு கொண்டு இருந்தாலும் சுபாஷ் அவர் மேல் பெறும் மரியாதை கொண்டு இருந்தார்.அவரே என் தலைவர் என்று ஏற்று கொண்டு இருந்தார்.அவர் என்றுமே நான் தான் ஒரே தலைவர் என்று இறுமாப்பு கொண்டு இருக்க வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்கு,ராஜாதிராஜா, நீங்கள் தான் மீண்டும் பிரச்சனையை இப்பொழுது வேணுமென்று ஆரம்பிக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

கந்தப்பு,

நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி என்னை வசைபாட முயற்சி செய்யவேண்டாம்.... சரியான விளக்கம் கொடுத்தால் நான் காம்ப்ரமைஸ் ஆகி விடுகிறேன்......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....

முடிந்தால் சரியான விளக்கம் கொடுத்து என்னை காம்ப்ரமைஸ் செய்யுங்கள்....

லக்கிலுக்கி எழுதியது.......

ஏனைய இயக்கங்கள் புலிகளை விட அதிக ஆயுதபலமும் உறுப்பினரும் ஒரு பிராந்திய வல்லரசின் பக்கபலமும் இருந்தும்,ஆனால் தலைமைத்துவம் ஒழுங்காக இருக்கவில்லை.அதனால் தான் அவர்கள் தங்களை ஒழுங்காக வளர்த்து கொள்ளமுடியவில்லை.

அப்போது புலிகளிடம் ஆட்பலமும் குறைவு ஆயுதபலமும் குறைவு ஆனால் தலைமை ஓழுங்காக இருந்ததால் தான் இப்பொழுது பிரகாசிக்கிறார்கள்.

இப்புகாரை வாதத்திற்காக ஏற்று கொண்டால் விடுதலை புலிகள் அமைப்பை முறியடித்து பிறிதொரு அமைப்பு ஏன் நிலைக்கவில்லை?

  • தொடங்கியவர்

சரி... இது பற்றி நான் இதற்குமேல் இங்கு பேசி பயனில்லை... யாரும் சரியான விளக்கமும் தரப்போவதில்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....

சரி உங்கள் வாதத்தையே ஏற்றுக்கொள்வோம். ஆனால் தற்போதைய யதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? இப்போது ஈழ தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தருகின்ற ஒரே அமைப்பாக புலிகளள் மட்டும் தானே இருக்கிறார்கள்.. பொதுவாகவே எனக்கு.. ஒரு விவாதத்தின் போது எங்கள் மீது ஒரு குற்றம் சாட்டப்பட்டால்.. நாங்கள் மட்டுமா.. நீங்களும் அப்படித்தானே என கேள்வி கேட்டு விவாதம் தொடர விருப்பம் இல்லை.. எந்த ஒரு பிரச்சனைக்குமான தீர்வு அப்போதைய கணத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒருவேளை இனிமேல் புலிகள் என்ன செய்யக்கூடாது என இந்தியா நினைக்கிறது என ஆராய்வது பலனுள்ளது.

ஆயினும், போராடப் புறப்பட்ட பல இயக்கங்கள் அந்த நோக்கத்தை மறந்து சோரம் போனதனை நீங்கள் அறிவீர்கள் தானே

  • தொடங்கியவர்

பொதுவாகவே எனக்கு.. ஒரு விவாதத்தின் போது எங்கள் மீது ஒரு குற்றம் சாட்டப்பட்டால்.. நாங்கள் மட்டுமா.. நீங்களும் அப்படித்தானே என கேள்வி கேட்டு விவாதம் தொடர விருப்பம் இல்லை.. எந்த ஒரு பிரச்சனைக்குமான தீர்வு அப்போதைய கணத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இதையே தான் நானும் சொல்கிறேன்... 20 ஆண்டுகளுக்கு முந்தைய அமைதிப்படை கதையையே இன்னும் பலர் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்களே... அதற்கு பின் இந்தியாவில் நடந்த மாற்றங்கள் எல்லாம் என்னவென்று யாராவது சிந்தித்துப் பார்த்தார்களா?

ஈழத்தில் யாரையாவது கொசு கடித்தால் கூட 'ரா'வின் சதி என்று புலம்புபவர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது....

'ரா'வுக்கு உள்நாட்டிலேயே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்போது.... ஈழம் ஒரு முக்கியப் பிரச்சினையாக அந்த அமைப்புக்கு இருக்க முடியாது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்..இப்போது நிங்கள் சில நிலைப்பாடகளை சொல்லலாமே! ஓர் இந்தியராக கீழ்வருபவை தொடர்பாக உங்கள் உண்மையான எண்ண வெளிப்பாடுகள் எவையாக இரக்கின்றன என அறிய அயலிலுள்ள ஈழத்தமிழனனான எனக்கு ஆசை.. அதாவது

விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப்போராட்டம்

தமிழீழம்

ஈழத்தின் அப்பாவி மக்கள்

ஈழத்து மக்களின் தற்போதைய நிலைமை!

அவர்களுக்கான எதிர்காலம்..

முடிந்தால் இவை தொடர்பாக உங்கள் எண்ணங்களை எம்மோடும் பகிர்ந்து கொள்ளலாமே

இதில் என்க்கும் லக்கியின் கருத்தும் மாறுபடலாம்

விடுதலைப்புலிகள் - ஒரு மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடும் அமைப்பு . எனக்கு போராடும் வழியில் மற்றும் சில ஏற்க முடியாத கருத்து இருந்தாலும் ஈழ தமிழ்ர்களுக்கு இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லை. இவர்கள் ஈழத்தில் மட்டும் செயல் பட்டால் முழு ஆதரவு

தமிழீழ விடுதலைப்போராட்டம் : இனிமேலும் போர் புரியாமல் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணுவீர் என்று நினைக்கிறேன். 65 000 உயிர்கள் மாண்டதும், 3 லட்சம் உறவுகள் புலம் பெய்ர்ந்தது வரலாற்றில் பெரிய சோகம். அது இனி நடக்க கூடாது.

தமிழீழம் : கண்டிப்பாக வரும்..

ஈழத்தின் அப்பாவி மக்கள் :குரல் இருந்து பேச மறுக்க பட்டவர்கள், காலம் மாறும்.

ஈழத்து மக்களின் தற்போதைய நிலைமை! : வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பர்கள் பொறுளாதாரத்தில் நல்ல முன்னேறம் கண்டு இருப்பதை நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன். ஈழத்தில் கட்டமைப்பு வசதிகள் இன்றி வாழும் மக்கள் இனி முன்னேற்றம் காண்பர் என் எதிர் பார்க்கிறென்.

இதையே தான் நானும் சொல்கிறேன்... 20 ஆண்டுகளுக்கு முந்தைய அமைதிப்படை கதையையே இன்னும் பலர் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்களே... அதற்கு பின் இந்தியாவில் நடந்த மாற்றங்கள் எல்லாம் என்னவென்று யாராவது சிந்தித்துப் பார்த்தார்களா?

ஈழத்தில் யாரையாவது கொசு கடித்தால் கூட 'ரா'வின் சதி என்று புலம்புபவர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது....

'ரா'வுக்கு உள்நாட்டிலேயே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்போது.... ஈழம் ஒரு முக்கியப் பிரச்சினையாக அந்த அமைப்புக்கு இருக்க முடியாது.....

மாப்பிள்ளை லக்கிலுக் உனது நிலைப்படு தான் எனது நிலைப்படும் போனது போகட்டும். ஆனால் எமக்கு மிக அருகில் இருக்கும்( என்ன ஒரு 35 கடல்மையில்) ஈழத்தமிழனின் உனர்வுகளை எமக்கு 1000 KM தள்ளி இருக்கிற நம்ம அரசு புரிந்து கொள்ளா விட்டாலும் நாம் புரிந்து கொண்டு செய்ற்பட்ட இந்த உலகத்தில முதல் முதலாக 10 கோடி தமிழனுக்கு ஒரு நாடு உருவாகி விடும் அல்லாவ?

மாமா சொன்னா கேட்பியா?

அடே அப்பிமார் அண்ணன் மேல சில சொற்கள் பிழையா எழுதி விட்டேன் ஒருக்கா சரி செய்து விடுங்கோவன்.

நான் எப்படி அதை மாற்றுவது? :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் : நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய அமைப்பு.... இவர்களது ஒழுக்கம் உலகின் எந்த இராணுவத்துக்கும் இல்லை.... இந்தியாவில் சில விவகாரமான காரியங்களில் இவர்கள் ஈடுபடாமல் இருந்திருந்தால் இன்னொரு பங்களாதேஷ் இன்னேரம் உருவாகியிருக்கும்.....

தமிழீழ விடுதலைப்போராட்டம் : அடக்குமுறைகளுக்கு ஆளான எந்த இனமும் செய்யக்கூடியது இது தான்....

தமிழீழம் : 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நான் குழந்தைப் பருவத்தை தாண்டிய நிலையில் சென்னை வடபழனி அருகே திமுகவினர் ஒரு சுவர் சித்திரம் தீட்டி இருந்தனர்... அதில் 'தமிழன் கறி விற்கப்படும்' என்று ஒரு கசாப்புக் கடை வாசலில் சிங்களக் காடையன் ஒருவன் போர்டு வைத்திருப்பது போல வரையப்பட்டிருந்தது... அப்போதே ஈழத்தமிழனுக்கு தனி நாடு அமையவேண்டும் என மனதில் நினைத்தேன்....

ஈழத்தின் அப்பாவி மக்கள் : ஈழம் என்றில்லை.... மனிதநேயத்துடன் பார்த்தால் பாதிக்கப்பட்ட எந்த மக்களுக்கும் நல்ல வாழ்வு அமையவேண்டும் என்பது தான் அனைவரி விருப்பமும்.....

ஈழத்து மக்களின் தற்போதைய நிலைமை : எனக்கு தெரிந்து போரை வெறுக்கிறார்கள்.... இந்திய மக்களை போல நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள்.....

அவர்களுக்கான எதிர்காலம் : நன்றாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை... ஈழத்தில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பது என் அவா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி, ராஜா..உங்கள் பதில்களைப் பார்த்தேன். நாங்களும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே கோட்டில்,ஒருமித்த கருத்தில் நிற்க, எதற்காக இத்தனை சண்டைகளும் சச்சரவுகளும்.. ? எனக்கு புரியவில்லை!

விடுதலைப்புலிகளின் தலைவர் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு கேள்விக்கு கீழிக்கண்டவாறு கருத்துப்படதெரிவித்திருந்த

இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....

சுபாஷ் சந்திரபோஸும் கூட புலிகளின் வழியை தான் இந்திய சுதந்திர போருக்கு எடுத்துக் கொண்டார்.... ஆனால் சுதந்திர போருக்கு போராடிய மற்ற இயக்கங்களை அவர் அழிக்க முயற்சிக்கவில்லை......

தவறாக எண்ண வேண்டாம்..... மற்றவர்கள் இந்த கருத்துக்காக என்னை வசைபாடவும் முயற்சிக்க வேண்டாம்.... முடிந்தால் சரியான விளக்கம் கொடுத்து என்னை காம்ப்ரமைஸ் செய்யுங்கள்....

இலங்கையில் ஒரு காலத்தில் பல இயக்கங்கள் தமிழீழ விடுதலை என்ற பெயரின் கீழ் இயங்கின. அதில் பல இளைஞர்களும் சேர்க்கப்பட்டனர். அதைவிட அதிக இளைஞர்கள் பல இயக்கங்களில் வலுக்கட்டாயமாகவும் சேர்க்கப்பட்டனர். அதனால் அவ்வியக்கங்கள் தம் அளவிற்கு மீறிய அளவு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். இதனால் அவ்வியக்கங்களை நிர்வகிப்பதற்கு அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அதனால் அவ்வியக்கங்களில் ஓழுக்கமின்மை பரந்து காணப்பட்டது. அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆனால் புலிகள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தம் உறுப்பினர்களை வைத்திருந்தார்கள். அதாவது தம்மால் முடிந்த அளவு உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்தார்கள். அதனால் அவர்களால் ஒரு கட்டுப்பாட்டினுள் தம் உறுப்பினர்களை வைத்திருக்க முடிந்தது. தம் சக்தியை மீறி அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. அக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தில் சேர்வதற்கென்றே பல இளைஞர்கள் அவர்கள் பின்னால் மாதக்கணக்கில் திரிந்த வரலாறும் உண்டு.

அவ்வாறு அவல நிலையில் இருந்த மற்றைய இயக்க உறுப்பினர்கள் ஒருகட்டத்தில் தம் மக்களையே அச்சுறுத்தும் நிலைக்கு இறங்கினார்கள். தமிழீழம் என்ற கொள்கைக்காகப் புறப்பட்டு அப்பிரதேச மக்களிற்கே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததனாால் அம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை நிலவியது. அன்றைய காலப்பகுதியில் ஓர் கட்டுப்பாடான இயக்கமாக மக்கள் மத்தியில் நற்பெயருடன் இருந்த ஒரே ஒரு இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் அத்தேவையினை நிறைவேற்ற மற்றைய இயக்கங்களைத் தமிழீழப் பிரதேசங்களில் தடைசெய்தார்கள். புலிகள் அவர்களைத் தடைசெய்ய முன்பே அவ்வியக்கங்களில் இருந்த பலர் தம் தலைவர்களில் நம்பிக்கை இன்றி அவ்வமைப்புக்களை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டார்கள்.

அதன் பின் அவ்வியக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறீலங்கா இராணுவத்துடன் இணைந்து தாம் முன்பு கொண்டிருந்த தமிழீழம் என்னும் கொள்கையில் இருந்து விலகி அதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார்கள். அதன் பின்னர் அவர்கள் இரணுவத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு இராணுவத்தின் ஒரு பிரிவாகச் செயற்படுகிறார்கள்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் : அடக்குமுறைகளுக்கு ஆளான எந்த இனமும் செய்யக்கூடியது இது தான்....

இதனைத்தானே நாம் அன்றிலிருந்து சொல்கிறோம். இதனை இத்தனை தெளிவாய் அறிந்திருந்தும் ஏன் இவ்வாறு :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.