Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா இதுவரை செய்த துரோகம் போதும்! இனியாவது நிம்மதியாக வாழவிடுங்கள்!! ஈழத்தமிழரின் உண்மைநிலைப்பாட்டை வெளிப்படுத்தியது புதியதலைமுறை!!!

Featured Replies

puthiyalalaimurai.jpgஉண்மைதேடி இலங்கையில் புதியதலைமுறை என்ற தலைப்பில் தமது எட்டுநாள் களப்பணியின் தொகுப்பை நேற்றைய தொடர்ச்சியாக இன்று இரவு 8:30 முதல் அரைமணிநேரம் ஒளிபரப்பியிருந்தது புதியதலைமுறை தொலைக்காட்சி.

யாழ்ப்பாணத்தில் பார்த்ததைப்போன்றே கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் இனம்புரியாத ஒரு அச்சசூழ்நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளதை இன்றைய ஒளிபரப்பிலும் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளது.

(தற்போது தாயகத்தில் எதுவும் இல்லை. புலத்தில் உள்ள சிலர் தமது நலன்களை தக்கவைப்பதற்காக கட்டவிழ்த்து விடப்படும் செய்திகள்தான் ஈழத்தில் பிரச்சினை இன்னும் இருப்பதுபோல் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது எனக் கூறும் தமிழர்கள் இப்போது அந்த மக்கள் சொல்லும் கருத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகின்றீர்கள். புலத்தில் இருந்து சொன்னால் அது கட்டுக்கதை என்பீர்கள். இப்போது தாயகத்தில் வாழும் மக்களின் நாடித்துடிப்பை புதியதலைமுறை தொலைக்காட்சி படம்பிடித்துக் காட்டியுள்ளதே அதற்கு என்னபதில். ஒரே பதில்தான் தமிழர்களிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு. அதுவரை இன்னல்கள் தொடர்கதைதான்.)

இன்றைய நிகழ்ச்சியில் காட்டப்பட்ட மக்கள் அனைவருமே இந்த சூழ்நிலையினை பிரதிபலித்துள்ளார்கள். அத்துடன் இந்தியா தேவையான போது உதவிசெய்யவில்லை. சிங்களத்துடன் சேர்ந்து துரோகம் செய்துள்ளது. இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடுமாறு உறுதியோடு தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாக்காலில் பேரழிவின் வாசலில் நாம் நின்றபோது தலையிட்டு சண்டையை நிப்பாட்டி எங்களையும் எங்கட சொந்தங்களையும் இந்தியா காப்பாற்றும் என்று நாங்கள் நம்பிக்கொண்டு இருந்தனாங்கள். ஆனால் ஆறுதலாக நாங்கள் இருந்து இப்ப யோசிச்சுப் பார்க்கேக்குள்ள... தமிழர்களை அழித்த போரை சிங்களத்துடன் இணைந்து நடாத்தியது இந்தியாதான் என்ற உண்மை தெரியவருகின்றது.

எனிமேலாவது எங்களைநிம்மதியாக வாழவிடவேண்டும். இந்தியாவின் எந்த உதவியும் வேண்டாம். உதவிசெய்யிறம் எண்டு சொல்லிக் கொண்டு எந்த அரசியல்வாதிகளும் இங்கு வரவேண்டாம் என்று செருப்பால் அறைந்தாற்போல் உறுதிபடத் தெரிவித்துள்ளனர் தாயகத்து தமிழர்கள்.

இதே கூற்றினை தமிழர் தாயகப்பகுதிகள் உள்ளிட்ட இலங்கைக்கு சென்று செய்தி சேகரித்துவந்த சகோதரியும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். அதைவிட முள்வேலி முகாம்களில் இன்னும் தமிழ்மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையினையும் புதியதலைமுறை தொலைக்காட்சி உலகின் முன்னால் வெளிக்காட்டியுள்ளது.

இந்த சிறப்பு ஒளிபரப்பினை தொடர்ந்து கொலைவெறியன் ராசபக்சேவின் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு ஊழையிட்டுத்திரியும் டக்ளசுடன் நிகழ்த்திய நேர்காணலையும் ஒளிபரப்பியிருந்தார்கள். இந்த எலும்பு பொறுக்கிய நாய் ஏதோ தங்கம் தகரம் எண்டு சொல்லினது.

அதாவது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது சனநாயக ஆட்சியாம். அதில் தமிழர்கள் எவ்வித குறையம் இன்றி வாழ்ந்துவருகின்றார்களாம். தெற்கு மக்கள் தங்கத்தில் சுதந்திரத்தை அனுபவிக்கும் போது தமிழர்கள் தகரத்தில் சுதந்திரத்தை அனுபவிக்க விடமாட்டேன் என்று வேறு உழறிய டக்ளசு நிறைவாக பேட்டிகண்ட சகோதரி இவ்வளவு நேரமும் வெளிப்படையாக திறந்த மனதுடன் கேள்விகளிற்கு பதிலளித்தமைக்கு நன்றி சொன்னபோது பதிலுக்கு நன்றி கூறிவிட்டு தலைகுணிந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. அவர் சொன்னது உண்மையில்லை என்பது அவருக்குத்தானே தெரியும்.

இதன்பின்னர் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் காங்கிரசு கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ராமன் மற்றும் இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலையினை படம்பிடித்து திரும்பிய ஒளிப்பதிவாளரும் மக்களை நேர்கண்ட சகோதரியும் கலந்துகொண்ட நேரடிவிவாதம் காரசாரமாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு ஆணித்தரமான கருத்துக்களை தெரிவத்த விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஓர் உண்மையை அழுத்தமாக தெரிவித்திருந்தார். பயங்கரவாத இயக்கத்தை அழிப்பதற்கான போர் என்று கூறிக்கொண்டு அங்குள்ள மக்கள்மீது யுத்தத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்பதையே இந்த காட்சிகள் புலப்படுத்திநிற்கின்றது என நெற்றிப்பொட்டில் ஆணிஅறைந்தாற்போல் தெரிவித்திருந்தார் விடுலை ராசேந்திரன் அவர்கள்.

இதைவிட செயற்கைக்கோள்களை எல்லாவற்றையும் முள்ளிவாய்க்காலில் குவியவைத்து தமிழ்மக்களின் காவலரணாக விளங்கிய தமிழீழவிடுதலைப்புலிகளை சிங்கள வெறியர்களிற்கு காட்க்கொடுத்தும் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் கொலைவெறி சிங்கள இராணுவம் மேற்கொண்ட மனிதவேட்டையினை டெல்லி இல்லத்தில் இருந்து நேரிடையாக கண்டுகளித்த சோனியாவிற்கு இவை எல்லாம் புதியசெய்தியாக இருக்கப்போவதில்லை.

உண்மை ஒருபோதும் உறங்காது. என்றாவது ஒருநாள் விளிக்கும். அப்போது பதர் பதராக பறக்கப்போகின்றவர்கள் யார்...? படைநடத்தி நாடாளப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திக்குழு.

இன்று அமெரிக்கா சிங்களம் மீது ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் சாத்தியம் உள்ளது. பல ஆபிரிக்க ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் முன்னர் சிங்களத்திற்கு இருந்த ஆதரவை இதன் காரணமாக விலக்கிக்கொள்ளலாம்.

இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு தமிழருக்கு ஒரு நீதியான தீர்வை பெற்றுத்தர வேண்டும். இதன் மூலம் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவும் வாழலாம். இல்லாவிட்டால் சீனத்தை எல்லோரும் கற்கவேண்டியதுதான் :(

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமெரிக்கா சிங்களம் மீது ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் சாத்தியம் உள்ளது. பல ஆபிரிக்க ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் முன்னர் சிங்களத்திற்கு இருந்த ஆதரவை இதன் காரணமாக விலக்கிக்கொள்ளலாம்.

இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு தமிழருக்கு ஒரு நீதியான தீர்வை பெற்றுத்தர வேண்டும். இதன் மூலம் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவும் வாழலாம். இல்லாவிட்டால் சீனத்தை எல்லோரும் கற்கவேண்டியதுதான் :(

சின்ன தாதாவை .. குரு நாதர் ஓரளவுக்குத்தான் போர்குற்ற விசாரணையில் ஆதரிக்க முடியும் .. ரொம்ப் அதிகமாக போனால் குருநாதருக்கு சிக்கல் வராதா..?

http://www.youtube.com/watch?v=cFWCmFly9RY

சின்ன தாதாவை .. குரு நாதர் ஓரளவுக்குத்தான் போர்குற்ற விசாரணையில் ஆதரிக்க முடியும் .. ரொம்ப் அதிகமாக போனால் குருநாதருக்கு சிக்கல் வராதா..?

குருநாதர் தான் குருதட்சணையை பெற்றிருப்பாரே :D

இல்லை இந்தியாவை இதில் மாட்டிவிடும் எண்ணம் யாருக்கும் இல்லை. அதில் இலாபமும் இருக்காது.

சிங்களவர்கள் தமது இழப்பை குறைக்கவே எண்ணுவார்கள், தமிழர்களுக்கு இன்று ஒரு அரசியல் தீர்வு தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.lankaenews.com/English/news.php?id=12672

Robert O Blake ,America’s Deputy State Secretary for central and south Asian affairs , and Mary Otero , the US Deputy State Secretary are scheduled to visit Sri Lanka on the 12th to hold discussions on this matter. An American Ambassador on universal criminal laws was also to visit SL on the 6th , that is, yesterday.

The letter sent by Hilary Clinton is published hereunder…

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் சிந்தனை மிகவும் நன்று. உன் துரோகத்தனத்தால் பட்டது போதும்நிம்மதியாக வாழவிடு. மக்கள் தாங்கள் பட்ட வேதனையை இதைவிட வேறு சுருக்கமாகக் கூறமுடியாது. இனியாவது இந்தியா ஈழத்தமிழனை நிம்மதியாக வாழவிடுமா?

முன்னர் சாடை மாடையாகச் சொன்னவர்கள் பொறுக்கமுடியாது வாய்திறந்துவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.