Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் பெண்களிற்கு ஆளுமையையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தார்கள்:கனடிய செனட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CanadaUTHA170212_150.jpg

தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களிற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார்.

கனடிய மனிதவுரிமை மையம் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் செனட்டர்களிற்குமென நடாத்திய மாநாட்டில் மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட மேற்படி செனட்டரின் உரை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்ததுடன் அனைவருமே அவரது உரையின் சிறப்பை அவரிடம் தெரிவித்து பாராட்டினர்.

http://youtu.be/cZXHpm2PIcg

இலங்கைக்கு சமாதான காலத்திலும் தற்போதும் பல தடவைகள் விஜயம் செய்த மொபினா ஜபார் அவர்கள் கலநிலைமைகளை தெளிவுபட எடுத்துக் கூறியதுடன் பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்விற்கான அவசியம் அங்கேயிருப்பதையும் சூடானிற்காக கனடாவின் பிரதிநிதியாக இருந்த இந்தச் செனட்டர் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகளின் பெண்கள் குழுவினர் தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்கும் அதிகாரமும் ஆளுமையும் கொண்டவர்களாக இருந்தார்கள் என்றும் ஆனால் அரச தரப்பில் கலந்து கொண்ட பெண்களோ தங்களின் முடிவிற்காக மேலிடத்தின் பதிலிற்காகக் காத்திருந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இலங்கையிலுள்ள பெண்களுடன் தொடர்ந்து வேலைத்திட்டங்களில் தான் ஈடுபட்டு வருவதால் கனடிய மனிதவுரிமை மையத்தின் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்த செனட்டர் மொபினா ஜபார் அவர்கள்,

ஒரு போரின் முடிவில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமென்பதே உலக நியதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு எங்களிற்கு விருப்பமில்லாத ஒரு முடிவு போரின் முடிவில் ஏற்பட்டதையும் இனங்களிற்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான தேவை இன்னமும் நிறையவே இருக்கிறது என்பதையும் இன்னமும் தமிழினத்திற்கெதிரான நிகழ்வுகள் தொடர்வதையும் தெரிவித்தார்.

பல போரியல் தேசங்களின் பேச்சுக்களை அவதானித்ததிலிருந்து இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப்புலிகள் - இலங்கை பேச்சுவார்த்தையிலேயே பெண்களிற்கு அதிகவுரிமை வழங்கப்பட்டிருந்ததை தான் உறுதிபடக் கூறமுடியுமெனவும், அந்தப் பேச்சு துரதிஸ்டவசமான ஒரு போரில் முடிவுற்றதையும் சுட்டிக்காட்டினார்.

கனடிய அரசில் மட்டத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உதவிய அமைப்பு என கனடாவின் சகல கட்சிகளினதும் பாராட்டைப் பெற்ற கனடிய மனிதவுரிமை மையத்தின் நிகழ்வுகளின் மூலம் இலங்கை சார்ந்த ஆதரவுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் கூட மாற்றம் பெற்று தமிழர்களின் நலன்களிற்காக வாதாடும் நிலை உருவாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடா - இலங்கை பாராளுமன்ற அமைப்பின் தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் இலங்கை அரசின் குரலாக லிபரல் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில் செயற்பட்ட ஒரு அரசியல்வாதி எனப் பலரும் தாங்கள் கனடிய மனிதவுரிமை மையத்தின் (www.chrv.ca ) கற்கை மாநாடுகளின் மூலமே ஒரு தெளிவான நிலைப்பாட்டிற்கு வந்ததை எடுத்தியம்பினர்.

2009ம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழர்களின் மனிதவுரிமை விவகாரங்களை கனடியர்களினதும், சர்வதேச சக்திகளினதும் கவனத்திற்கு எடுத்து செல்லும் கனடிய மனிதவுரிமை மையமானது கனடாவிலுள்ள ஏனைய தமிழ் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலங்கை அரசினதும் பேச்சு நடவடிக்கைக்கு கனடாவின் காத்திரமான பங்கு மூலம் வலுச்சேர்க்கும் நடவடிக்கையிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.

CanadaUTHA170212_665-001.jpg

CanadaUTHA170212_447_002.jpg

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம உதயன் பேப்பர் யோகேந்திர லிங்கம் படத்தில் உள்ளார். உவருக்கும் உந்த மகாநாட்டுக்கும் என்ன சம்மபந்தம் ?

ஆளும் பழமைவாத கட்சியே விடுதலைப்புலிகளை கனடாவில் தடை செய்தது. அதே கட்சியை சேர்ந்த இந்த செனட்டர் இன்று இவ்வாறு கூறியுள்ளார்.

எல்லாக்கட்சிகளுடனும் பகமைபாராது எமது இல்லக்கை நோக்கி நகர பரப்புரை செய்வது முக்கியம் என்பதை இது காட்டுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களிற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார்

தமிழீழ விடுதலைப்புலிகளை இன்னும் பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும்,

எழுதிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த அம்மையார் அருமையாகப்பதிலளித்துள்ளார்

மிக்க நன்றி அம்மா .........................

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம உதயன் பேப்பர் யோகேந்திர லிங்கம் படத்தில் உள்ளார். உவருக்கும் உந்த மகாநாட்டுக்கும் என்ன சம்மபந்தம் ?

இதென்ன கேள்வி அவர் ஒரு ஊடகவியலாளார்...ஒரு ஊடகவியலாளாராக கலந்து கொண்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரதி. நான் விசாரித்ததில் அப்படித்தான் நடந்ததாம். எனக்கு உந்த ஊடகவியலாளாரில் நம்பிக்கை இல்லை பாருங்கோ.

நாம தான் விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று நிருபிக்க வேண்டும். மற்றவர்களை விடும். தங்கள் இப்ப என்ன செய்கிறீர்கள் ? தூங்காதை . பாடம் படிப்பிப்பி. எனக்கு வயது போயிட்டுது.

உந்த கனடிய மனிதவுரிமை மையத்தின் உறுப்பினர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ் காங்கிரஸ் தான் இந்த அமைப்பை வளர்த்து விட்டதாம். உண்மையா? எது வென்றாலும் நல்லா நடந்தால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.