Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை ஒக்ரோபர் வரையில் ஒத்திவைக்குமாறு பீரிஸ் மன்றாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gl-peeris-100x100.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்திட்டத்தை ஒக்ரோபர் மாதம் வரையில் ஒத்தி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.

எனவே குறித்த காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில்மீளாய்வு நடத்தப்படும் வரையில், தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை ஒத்தி வைக்குமாறுஇலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் வழங்ப்படுகின்றது. ஒக்ரோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டால் உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி, மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தமுடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் காலம் தொடர்பில் இலங்கைஅரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=51808

அன்று தமிழர்கள் ஐ.நா. வின் முன்னர் மன்றாடினார்கள். இன்று சிங்களம் மன்றாடுகின்றது.

காலங்கள் மாறும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. அதேவேளை எமது தலைமைகள் வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.

ராசா தந்திரப் போரேண்டாங்கள்...!!!

இப்ப கேஞ்சிராங்கள்....

இந்தக் கோரிக்கையை வைக்கும் முன்னர் அக்டோபர் வரை சிங்கள ராணுவ, சிங்கள அரச பயங்கரவாதிகளை, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளை வட-கிழக்கு மண்ணிலிருந்து முழுமையாக அகற்றுவார?

சம்பந்தர் பயத்தால் ஜெனீவாவுக்கு போகவில்லை. 1700 களில் பிரிடிஸ் கொடுங்கோலர்கள், பிள்ளைகளை கட்டி வத்துவிட்டு பெற்றார்களை ஆணையிடுவார்களாம் தமக்கு வேண்டிய றப்பர் பாலை கொங்கோவின் இருண்ட காடுகளுக்குள் போய் எடுத்து வரும் படி. இதில் முடிவு, வழமையாக, பிள்ளைகள் முடிவு அல்லது பெற்றொர்களின் முடிவாகவேதான் இருந்ததாம். கனகரத்தினம் ஜெனீவாவுக்கு போகிறார். ஞானம் முற்றியதால் கைலையைத் தான் நின்ற இடத்திலேயே கணடவர் திருநாவுக்கரசர். என்ன முற்றியதாலோ தெரியாது, சிங்கப்பூரை நெடும்தீவில் கண்டவர் டக்கிளஸ். டகிளஸ் போகிறார் ஜெனீவாவுக்கு. தனக்கு வெளியே போகவே வெட்கமாக இருக்கிறது என்ற இந்த ஐ.தே.கட்சிக்காரன் ஏற்கனவே ஜெனீவாபோய் இந்த மாதிரி பிரதிநிதிகளின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

இவ்வளவு தில்லு முல்லுகளையும் இலங்கையில் விதைத்து இலங்கைகுச் சார்பான ஒரு தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்படப் போகிறது.

இந்த சர்வதேச நாடுகளின் கோமாளித்தனம் தேவையா?

இந்த வேதனைகளை வைத்து ஒரு போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்திருந்திருக்க முடியாத?

சிங்களப் பயங்கரவாதிகளின் போர்க் குற்றங்கள் ஒருபக்கம் முழுமையாக விசாரிக்கப்பட்டு நட்டஈடு வழங்குதல் வரை கொண்டு செல்லும் போராட்டம் முனைப்புடன் ஒரு திசையில் நடக்க, அதைவிட முனைப்புடன் தமிழரின் முழுமையான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் உறுதியான சர்வதேச பொறிமுறைகளை நிறுவும் போராட்டம் மறு முனையில் முன்னெடுக்கப்பட வேண்டிய காலம் இது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.