Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

Featured Replies

இலங்கையில் ஆர்ப்பாட்டம்! அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் அரசாங்க சார்பு குழுக்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதை முன்னிட்டு குறிப்பாக அமெரிக்காவை இலக்கு வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதே இதற்கான காரணமாகும். இந்தநிலையில் நாளை நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றவேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டங்கள் நாளை முதல் நாடு முழுவதும் 150 நகரங்களில் நடத்தப்படவுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள், யாழ்ப்பாணம்,வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் மார்ச் 2 ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

http://thaaitamil.com/?p=10456

  • தொடங்கியவர்

உருப்படியான திட்டமெதுவும் இலங்கையிடம் இல்லை

usembasy300.jpg

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பலமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்த நேற்று முன்தினம் வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது குறித்த எந்தவொரு உறுதியான நடவடிக்கைத் திட்டத்தையும் இலங்கை அரசிடம் இன்று வரை காண முடியவில்லை .

இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான அடியெடுத்து முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கை அரசை நாம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.

அதேவேளை நல்லிணக்கத்துக்கான முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வருவதற்கும் நாம் எமது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றார். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36831

  • தொடங்கியவர்

இந்த கோடை விடுமுறைக்கு ஒரு 'விசிட்' அடிக்கலாம் என்றால்...

ஐ.நா. சிங்களத்திற்கு எதிராக தீர்மானம் எதையும் நிறைவேற்றினால் போக முடியாது போலுள்ளதே ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோடை விடுமுறைக்கு ஒரு 'விசிட்' அடிக்கலாம் என்றால்...

ஐ.நா. சிங்களத்திற்கு எதிராக தீர்மானம் எதையும் நிறைவேற்றினால் போக முடியாது போலுள்ளதே ^_^

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருப்படியான திட்டம் ச்ரி லங்கா வானரங்களிடம் இருந்தால் இவ்வளவு பிரச்சினையும் வந்திருக்காது.

  • தொடங்கியவர்

மீண்டும் விசுவரூபம் எடுக்கும் ஆட்கடத்தல்கள், கொலைகள்

New wave of abductions and dead bodies in Sri Lanka

In the past 5 months – October 2011 to February 2012 – there has been a disturbing rise in the number of abductions, especially in and around the capital, Colombo. Out of 29 abductions and 3 missing persons reported in media, most have not returned to their homes and families, rendering them ‘disappeared’ persons.

The manner of these abductions has sent alarm bells ringing within the Sri Lankan human rights community, recalling the twin phenomena of the ‘white van’ and the unidentified gunman’ which plagued the country in the period from 1987/1989, and which prompted two visits to the island by the UN Working Group on Enforced and Involuntary Disappearances in 1991 and 1992.

http://groundviews.org/2012/02/26/new-wave-of-abductions-and-dead-bodies-in-sri-lanka/

அமெரிக்க பிரஜைகளையும், தாயகத்தில் தமிழ் மக்கள் மீது அதிகரிக்கும் சிங்கள ராணுவ பயங்கரவாதிகளின் அடக்குமுறைகளில், வன்முறைகளில் இருந்து தமிழ் மக்களைக் காக்க நேட்டோ படையினரை தரையிறக்கத் தாயாராகும் படி நேட்டோ முக்கிய நாடுகளிடம் கோரிக்கைகளை ஒரு சிலர் முன் வைக்கலாம்..

  • தொடங்கியவர்

கொழும்பு வெள்ளவத்தையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

தொடர்ந்தும் அவரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்கருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய இராமசாமி பிரபாகரன் என்ற வர்த்தகர், வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு அருமுன்பாக வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, தன்னை கைதுசெய்தமை தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக 90 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி, தனது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தொடுத்திருந்தார். எனினும், மறுநாளே வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார்.

தற்போது அவரைக் கடத்திச் சென்றவர்கள், பிரபாகரனின் மனைவியிடம் 100 மில்லியன் ரூபாய் கப்பமாகக் கோரியுள்ளனர்.

இந்தநிலையில் இது வரை அவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையிலட, தொடர்ந்தும் வர்த்தகரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கடத்துபவர்களும் கப்பம் கேட்பவர்களும் அதனை கண்டு பிடிப்பவர்களும் ஒரே ஆட்கள் என்பதால் கப்ப பணம் கொடுக்கப்படாத நிலையில் கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இருக்க சந்தர்பங்கள் இருக்கும் என்பது ஐயமே. ஒரு லட்சம் உயிர்களை கொன்று உலகுக்கு மறைத்த வல்லவர்களிடம் ஒரிரு உயிர் கொலைகள் எம்மாத்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.