Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி 5ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

Featured Replies

எரிபொருள் விலையேற்றம் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்தும் மேற்படி விலைகளையும் கட்டணங்களையும் உடனடியாக குறைக்குமாறு வலியுறுத்தியும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய ஆர்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணி வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பி.பகல் 4 மணியளவில் ஆரம்பமாகும் மேற்படி எதிர்ப்பு பேரணியில் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்த நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த, நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

அத்துடன் மேற்படி ஆர்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணிக்கும் ஜே.வி.பி. கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்த லால்காந்த உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஏற்றி வைக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையை இறக்கி வைப்பதற்காகவும் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு இதுவென்றும் விளக்கமளித்தார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லால்காந்த இங்கு மேலும் கூறுகையில் ;

எரிபொருளின் விலையை அதிகரித்ததன் பிரதிபலனாக மக்கள் வீதிக்கு இறங்கினர். எனினும் மக்களின் பக்கத்தை நோக்காத அரசாங்கம் பொருட்களினது விலைகளை அதிகரித்து சேவைகளின் கட்டணங்களையும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து சுமைகளும் அப்பாவி மக்களின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க மறுத்த அரசு அடக்குமுறைகளையே கட்டவிழ்த்து விட்டிருந்தது. எனினும் போராட்டங்களை நடத்துவதால் மட்டுமே எமது இலக்குகளை அடைய முடியும்.

தற்போதைய நிலையில் பொருட்களின் விலைகளையும் சேவைகளின் கட்டணங்களையும் குறைக்க வேண்டுமானால் அதற்கு முக்கிய காரணியான எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தும் வகையிலேயே எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் கலந்து கொள்கின்றன. இன்னும் பல தொழிற்சங்கங்களுடன் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது எந்தவொரு அரசியல் கட்சியும் சார்ந்ததாக இருக்காது. ஜே.வி.பி.க்கு இதில் தொடர்பு கிடையாது என்றார்.

ராமலிங்கம்

இங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில் ;

எரிபொருள் விலையேற்றத்தின் பிரதிபலிப்பானது தோட்டத் தொழிலாளர்களையே அதிகமாக பாதித்திருக்கின்றது. மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் மலையகத்தில் 40வீதமான பாவனையாளர்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே அந்த மக்களின் வாழ்வாதார சூழலைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவு ஒன்றை சம்பளத்துடன் இணைக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக உறுதியளித்து இதுவரையில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமுமே தோட்டத் தொழிலாளர்கள் குறித்து சிந்தித்ததாக இல்லை.

எனவே 5ஆம் திகதி நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது முழு ஒத்துழைப்பினை வழங்கும் என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36906

- மீன்பிடிப்பவர்களுக்கான மானியத்தை அதிகரித்துள்ளார் மகிந்தர்

- சரியும் ரூபாயை காப்பாற்ற மீண்டும் மத்திய வங்கியை தலையீடு செய்ய கேட்டுள்ளார் மகிந்தர்

இவையெல்லாம் ஆர்ப்பாட்டத்தை, மக்கள் வெறுப்பை நிற்பாட்டாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.