Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதம்

Featured Replies

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதம்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் தா.பாண்டியன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், வ.கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வ.கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன், அதிமுக கட்சித்தலைவர் பொன்னையன் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37119-2012-03-06-12-24-50.html

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷவை போர்க் குற்றவாளி யாக அறிவிக்க அஇஅதிமுக துணை நிற்கும்: சி.பொன்னையன்

4.jpg

இலங்கை அதிபர் ராஜபக்சேவை இன அழிப்பு போர்க் குற்றவாளி என அறிவிப்பு செய்யவும்,

ஐ.நா.வின் வெளிப்படையான விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டக் குழுவின் சார்பில் சென்னை தாம்பரம் சானிடோரியம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார்.

3.jpg

உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் பேசியபோது; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அஇஅதிமுக தோழர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் மிகப் பெரிய போர் நிலவரம் ஏற்பட்ட நிலையில் ஈழத்து மக்கள் இனவெறிக் கும்பலால் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். அப்போது ஈழ மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தா.பாண்டியன் எழுப்பிய முதல் குரல் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட மிகப்பெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.அன்று தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுத்தனர். அதுபோல இன்று அவர் தலைமையில் நடக்கின்ற உண்ணாவிரதப் போராட்டம் மூலம் பெரும் திருப்பு முனை தமிழக அரசியலில் ஏற்படும்.

2.jpg

இன்று உலக நாடுகள் அனைத்தும், உலகத் தமிழர்களுக்காக, ராஜபக்சேவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளன. ஐ.நா. மனித உரிமை விசாரணை ஜெனிவாவில் நடக்கின்ற போது ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என விசாரிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதில் இந்தியா என்ன செய்ய வேண்டும். என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உலகத் தமிழர்களிடம் உள்ளது.

1.jpg

ஐ.நா.வரலாற்றில், ஐ.நா.வின் துணை அமைப்புகள் வரலாற்றில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை அரசு இனவெறியைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல்வேறு நாடுகள் ஆதரவளித்தன. இந்தப் பெரும் போராட்டத்தின் விளைவாக கருப்பின மக்களுக்கும், இந்திய வம்சாவழி மக்களுக்கும் விடுதலை கிடைத்தது. நெல்சன் மண்டேலா குடியரசுத் தலைவரானார். இந்தத் தீர்மானத்தை அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆதரித்தார். ஆனால் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் ராஜபக்சேவை ஆதரித்து இந்தியா செயல்பட்டது மிகவும் அவமானகரமான செயலாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள் அனைத்தும் அடிப்படை நிலை கொண்டதாகவே உள்ளது. ராஜபக்சேவுக்கு எதிரான நிலையை எடுத்து ஐ.நா.விசாரணை நடத்தும் நிலை உருவான போது தமிழகம் முழுவதும் ஆதரவு நிலையை உருவாக்கி, உலகத் தமிழர்களின் ஆதரவையும் பெற்றதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பங்காற்றி உள்ளது. அதற்காக அக்கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களிடம் ஒற்றுமையை உருவாக்குவதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றியடையும் என பழ.நெடுமாறன் தனதுரையில் குறிப்பிட்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், வே.துரைமாணிக்கம், மு.வீரபாண்டியன், சி.கே.மதிவாணன், மாவட்டச் செயலாளர்கள் மு.சம்பத், எஸ்.ஏழுமலை, ஏ.எஸ்.கண்ணன், கு.ராமதாஸ், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசிலா, ஏஐடியூசி துணைப் பொதுச் செயலாளர் கே.ரவி, பொருளாளர் விருதை காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி அதிமுகழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் பேசிய போது; உணர்வு மயமாக நடைபெறுகின்ற இந்த உண்ணாவிரதப் போராட்ட நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் ஆணைப்படி கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மறவர்களும், கொள்கை வீராங்கனைகளும் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். இன்று நேற்றல்ல எல்லா காலகட்டத்திலும் தமிழர்களுக்கு எந்தவித இடையூறுகள் ஏற்பட்டாலும் தயங்காமல் முதன் முதலாக குரல் எழுப்பும் கொள்கை உள்ள இயக்கமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.

NA.jpg

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோர் நாடு கடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டபோது அ.இ.அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர் எம்.ஜி.ஆரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரமும் இணைந்து செயல்பட்டனர். அப்படி எம்.ஜி.ஆரின் உணர்வுகளுக்குள் ஒன்றிணைந்து ஈழப்பிரச்சனைகளிலும், பிற பிரச்சனைகளிலும் ஒன்றாக செயல்பட்ட இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

ஈழத் தமிழர்களுக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தியோடு வாதாடி பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை எம்.கல்யாணசுந்தரத்தைச் சாரும். பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சூழ்நிலைகளில் தங்களின் கொள்கைகளை மாற்றிக் கொண்ட போதும் தமிழர்களுக்காக இன்றுவரை ஒரேமாதிரியான குரலை எழுப்பும் இயக்கமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது.

குஜராத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கும், சீக்கியர்களுக்கு நடைபெறும் பிரச்சனைகளுக்கும் இந்திய அரசு ஆதரவான நிலை எடுக்கும் போது, இதுவரை தமிழர்களின் பிரச்சனைகளிலும், ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளிலும் இந்தியா மவுனம் மட்டும் காத்துவருகிறது. இந்தக் கொடுமைகளை அஇஅதிமுக கண்டிக்கிறது.

1983ல் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோர் கொல்லப்பட்டபோது, மனித உரிமை மீறிய செயல் என்று அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டித்தபோது, சுயநலவாதியாக, சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து அவர்களை காட்டிக் கொடுத்த இயக்கமும் தமிழகத்தில்தான் இருக்கிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

தமிழர்களின் பிரச்சனைகளுக்காக பல ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும் இன்றுவரை தமிழர்கள் அடிமைகளாக உள்ளதற்கு டில்லி அரசுதான் காரணம். டில்லி அரசு தமிழர்களை மட்டும் இப்படி நடத்துவதற்குக் காரணம், தமிழகத்தில் தமிழர்களை காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு இயக்கம் இருப்பதால்தான்.

இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை கச்சத்தீவு ஒப்பந்தம் முதல் ராஜீவ் - ஜெயவர்த்தனே வரை பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்ட போது இந்தியாவின் எண்ணங்கள் தொலைநோக்குப் பார்வையாக இருக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் எம்ஜிஆர் சுட்டிக்காட்டினார். அவரது சிந்தனைக்கு ஏற்றார் போலவே ராஜீவ் காந்தி செயல்பட்டார்.

ஆனால் இன்று இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, இளம் பெண்கள், பள்ளி மாணவிகள் என பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும் கூட பதவிக்காக மவுனம் காத்து, தமிழர்கள் ஒழிந்தாலும் பரவாயில்லை என மத்திய அரசில் அங்கம் வகித்து வருகிறது ஒரு கட்சி. அதன் தலைவர் இன்றுவரை தான்தான் தமிழர்களின் நலன் காப்பவர் என்று கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனும், பழ.நெடுமாறனும் பட்டிதொட்டியெல்லாம் சென்று தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களின் குரலால்தான் இன்றுவரை தமிழர்களின் இன உணர்வு மங்காது விழிப்புணர்வோடு உள்ளது.

ஐ.நா.சபை கொண்டுவர உள்ள, ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிக்கும் தீர்மானத்தையும், இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தையும், ஈழத் தமிழர்களுக்கு சமஉரிமை பெறுவதற்காகவும் போராடும் இயக்கங்களுக்கு அஇஅதிமுக என்றும் துணையாக நிற்கும்.

1972ல் எம்.ஜி.ஆர். ஆட்சி உருவாவதற்கும், ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்கும் எம்.ஜி.ஆருக்கு துணை நின்ற எம்.கல்யாணசுந்தரம் போல இன்று எங்களுக்கு தா.பாண்டியன் துணையாக இருந்து வழிகாட்டி வருகிறார். அவருக்கு அஇஅதிமுக என்றும் துணை நிற்கும் என டிபொன்னையன் பேசினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பா.தன்சிங் (பல்லாவரம்), கே.பி.கந்தன் (சோழிங்கநல்லூர்), தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன், பல்லாவரம் நகராட்சி தலைவர் நிசார் அகமது, பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் ம.தனபால், நகராட்சி துணைத் தலைவர் ஏ.கோபிநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் டி.ஜான் எட்வர்ட், என்.கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன் (பம்மல்) காஞ்சிபுரம் மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலாளர் நாகேஸ்வரன், பள்ளிக்கரனை 188வது வட்டச் செயலாளர் பி.ஜெயப்பிரகாஷ், பல்லாவரம் துணைத் தலைவர் த.ஜெயபிரகாஷ், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் டி.வாசுகி எம்.சி., உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

http://www.4tamilmedia.com/newses/india/3790-2012-03-06-13-21-24?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.