Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீதான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி இந்தியா வாக்களிக்க வேண்டும்! - இந்தியன் எக்ஸ்பிரஸ்

Featured Replies

சிறிலங்கா மீதான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி இந்தியா வாக்களிக்க வேண்டும்! - இந்தியன் எக்ஸ்பிரஸ்

மனித உரிமைகள் விவகாரத்தில் அனைத்துலக மட்டத்தில் துணிகரமானதும் நம்பிக்கை மிகுந்த வகையில் இந்தியா செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைத்துலக விவகாரங்களில் வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவிடமிருந்து இத்தகையை தலைமைத்துவப்பண்பு கோரப்படுகின்றது.

எனவே தற்போதைய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு பொருந்தத்தக்க வெளியுறவுக் கொள்கையை நோக்கி அது நகர்வதற்கு உகந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை இறுகப்பற்றிக் கொண்டு, சிறிலங்கா மீதான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி இந்தியா வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு இந்தியாவின் பிரபல ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸில் இன்று (09.03.12) வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Maja Daruwala என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரையின் தமிழாக்கத்தினை இங்கே தருகிறோம்.

2009 இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைத் தீவின் மனிதப் பேரவலங்களுக்குரிய பொறுப்புக்கூறலுக்கான அவசர அமர்வினைக் கூட்டியபோது, சிறிலங்கா அரசாங்கத்தை கண்டனங்களிலிருந்தும், அனைத்துலக விசாரணைகளிலிருந்தும் இந்தியா காப்பாற்றியது. ஆனால் 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்கா எதனையும் செய்யாத நிலையில் சிறிலங்கா விவகாரம் மீண்டும் மனித உரிமைகள் பேரவைக்கு விவாதத்திற்கு வந்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் ஒரு தீர்மானம் முன்மொழியப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்துலக நியமங்கள் மீதான மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் முகம்கொடுக்கச் சிறிலங்கா தவறியுள்ளதென்ற அதிருப்தி காணப்படுகிறது. அத்தோடு; இவ்வகை மீறல்களைப் புரிந்தோர் மீது நம்பகமானதும் சுயாதீனமானதுமான எந்தவொரு விசாரணைகள் நடத்தப்படவில்லை, தண்டனைகள் வழங்கப்படவில்லை. எனவே, இதற்கென ஒரு செயற்திட்டத்தினை வகுக்குமாறும் அத்திட்டத்திற்கு அமைய இக்குற்றச்சாட்டுகளைக் கையாள்வதற்குரிய வழிவகைகள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்குமாறும் கோரப்படவுள்ளது.

துரதிஸ்ரவசமாக தீர்மானத்திற்குரிய முன்மொழிவு இதைவிட அதிகமாகக் கோரப்போவதில்லை. உடனடியாக ஓர் அனைத்துலக விசாரணை கோரப்படப்போவதில்லை என்பது ஏமாற்றமே. இந்த வகையில் தீர்மானத்திற்குரிய முன்மொழிவானது, எதிர்காலத்தில் மனித உரிமைகள் பேரவையால் முன்னெடுக்கக்கூடிய நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அனைத்துலக விசாரணை போன்ற முனைப்புகளைத் தடுத்துவிடக்கூடாது. இத்தீர்மானம் சரியானதொரு பாதையின் முதற்படியாக நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர, அனைத்துலக விசாரணையைத் தணிப்பதற்குரிய அல்லது இலங்கைத்தீவில் நீதியை நிலைநாட்டுவதைப் பிற்போடும் நடவடிக்கையாக அமையக்கூடாது.

அமைதி நிலவுகின்ற, நல்லாட்சியுடைய அண்டை நாடாக இலங்கை இருப்பதை பிராந்திய வல்லரசான தனது நலனுக்கு அவசியமானதாக இந்தியா பார்க்கின்றது. அன்னியப்படுத்தப்பட்ட இனக்குழுமங்கள் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நீதியை அனுபவிப்பது அமைதிச்சூழலை நிலைநாட்டுவதற்கு அவசியமானதாகும். தற்பொழுது இலங்கையில் நிலவுவது எதிர்மறையான அமைதிச் சூழலே.

இலங்கை விவகாரத்தில் மேலும் இரண்டு காரணங்களை இந்தியா கொண்டுள்ளது – இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருவதோடு முதலீடுகளையும் பாரிய அளவில் சீனா அதிகரித்து வருகின்ற புறநிலையில், அங்கு தனது செல்வாக்கினைத் தக்கவைப்பது ஒன்று. அதேவேளை தமிழ்நாட்டின் 70 மில்லியன் மக்களுடன் இன மற்றும் பண்பாட்டு இணைப்பினைக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகள் சார்ந்து உணர்வுபூர்வமாக இருக்க வேண்டியது மற்றொன்றாகும்.

சிறிலங்கா மீது பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது இரண்டு நோக்கங்களையும் வெல்லத்தக்கதாகும். தூரநோக்கில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இவ்வகை தார்மீக செயற்பாடு இலங்கை மீதான சீனாவின் பொருளாதாரச் செல்வாக்கிற்கு எதிரான விளைவுகளைத் தோற்றுவிக்கும். குறுகியகால அடிப்படையில் நோக்குமிடத்து, பொறுப்புக்கூறல் தீர்மானமானது இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கச் செய்யும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்நடவடிக்கை திடீரென கொண்டுவரப்படவில்ல. இறுதிப்போரின் போது இருதரப்பாலும் போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான நம்பகமான ஆதாரங்கள் உள்ளதாக 2011இல் ஐ.நா பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை கையளித்தது. 40 000இற்கும் மேலான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நிபுணர்குழு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தது. ஆனால் இதற்குச் சீற்றத்துடன் பதிலளித்த சிறிலங்கா அரசாங்கம், தமது உள்ளகப் பொறிமுறையாக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை பொறுத்திருக்குமாறு அனைத்துலக சமூகத்தைக் கோரியது.

நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 18 மாதங்களின் பின்னர் அது தனது அறிக்கையைக் கையளித்தது. அதில் குறிப்பிடத்தக்க சில நேர்மறையான பரிந்துரைகள் இருப்பினும், பொறுப்புக்கூறலை அது முற்றாக மறுதலித்திருந்தது. இது விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர முறையில் வழிநடத்தியிருக்க முடியும். ஆனால் சிறிலங்கா நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டுமென்ற வேண்டுதலையே இந்தியா விடுத்திருந்தது.

அண்மையில் ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென அந்த நாடுகளைக் கோரியமை பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அனைத்துலக அழுத்தங்களை மழுங்கடிக்கச் செய்வதில் சிறிலங்கா தெளிவாக உள்ளமையைக் காட்டுகிறது. பிராந்தியத்தின் பெரிய மீனான இந்தியாவும் வாக்களிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது. பொறுப்புக்கூறலுக்கு ஆதரவாக இந்தியாவின் சக்தி பயன்படுத்தப்படுமாயின் இந்தியாவின் அந்தஸ்து அனைத்துலக மட்டத்தில் மேலும் உயர்வடையும்.

இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f4056e59-2aa9-40d2-8f98-5dbe59fbaad8

  • தொடங்கியவர்

மேலே உள்ள செய்தியின் ஆங்கில மூலம். முடிந்தால் கிந்திய நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம், முகநூலில் தரவேற்றம் செய்யலாம்.

Demand accountability from Sri Lanka

http://www.indianexpress.com/news/demand-accountability-from-sri-lanka/921627/0

ஒரு நியாயத்தை இந்திய ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் முடிவெடுக்கவேண்டும். அல்லது ஆட்சி கூட மாறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.