Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வேண்டும்: யசூஷி அகாஸி

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வேண்டும்: யசூஷி அகாஸி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் அவசியத்தை இலங்கைக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதிநிதியான யசூஷி அகாஷி வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான், இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின்முக்கியத்துவத்தையும் அகாஷி வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் எனவும் எப்போது உதவி தேவைப்பட்டாலும் வழங்கும் எனவும் அகாஷி வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது அகாஷி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றம் மற்றம் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்திகள் குறித்து அகாஷிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கினார். வெளிநாட்டு, நிதியுதவிகள், கடன்களில் 70 சதவீதம் ஏற்கெனவே இப்பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37350-2012-03-10-12-59-26.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் இல்லாததொன்றை (அர்பணிப்புடன் )செயல் படச்சொன்னால் முடிந்த கதையா ?

புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவியவர்களில் உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது ....

ஆகவே தமிழ் இனத்துக்கு பரிகாரம் தேடிக்கொடுத்து பாவத்தையாவது கலுவிக்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

பொருளாதார ரீதியாக சிங்களத்திற்கு கைகொடுத்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்று ஜப்பான். அத்துடன் அகாசி எமது பிரச்சனைளை நன்கு தெரிந்து வைத்துள்ள ஒருவர். அவரும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த கேட்டமை நிச்சயம் சிங்களத்தின் எதிர்பார்ப்புக்களை கவலைக்கு உரியதாக்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் சிங்கள இராணுவத்தை விலக்குவது பற்றி ஏதாவது உள்ளதா? சம்பூர், பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தைப் பற்றி அலட்டியிருப்பதை வாசித்தேன்..! மற்றும்படி ஏதாவது? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யப்பானிய மொழியில் அறுநூறு வார்த்தைகள் தமிழ். 

ஆனால் கக்கூசி ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கூட்டத்திடம் இலஞ்சம் வாங்கிவிட்டு புலம்புகிறது.

ஸ்ரீ லங்கா கில்லிங் பீல்டை ஜப்பானிய தொலைகாட்சியில் போடவேண்டும்.

இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் சிங்கள இராணுவத்தை விலக்குவது பற்றி ஏதாவது உள்ளதா? சம்பூர், பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தைப் பற்றி அலட்டியிருப்பதை வாசித்தேன்..! மற்றும்படி ஏதாவது? :rolleyes:

கலிகாலம் முத்தி போச்சு... காசு இருந்தால் ஓநாயே தனக்கு தண்டனை வழங்கலாம். 

தெற்காசிய அரசியலை மாற்றும் நேரம் வந்துவிட்டது. 

  • தொடங்கியவர்

இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் சிங்கள இராணுவத்தை விலக்குவது பற்றி ஏதாவது உள்ளதா? சம்பூர், பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தைப் பற்றி அலட்டியிருப்பதை வாசித்தேன்..! மற்றும்படி ஏதாவது? :rolleyes:

வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.