Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவல்களின் பாதிப்பில்...

Featured Replies

ஜோர்ச் ஓவலின் '84', டாஸ்ற்றாஎவ்ஸ்க்கியின் 'த இடியற்' மற்றும் 'கிறைம் அன்ட் பணிஷ;மன்ற்' ஆகிய மூன்று நாவல்களையும் வாசித்து முடித்த கையோடு, நான்காவதை ஆரம்பிக்கை நினைக்கையில் வேதாளம் தோளில் ஏறி அமர்ந்துகொண்டது. இருபது வருடங்கள் பழக்கமான வேதாளம் தான். 'இங்கிலீசு புத்தகம் தான் படிக்கிறீங்கள் போல...ம் படியுங்கோ படியுங்கோ...அண்ணை தமிழோ...' என்ற தோரணையிலேயே வேதாளம் பேசும். வேதாளத்தோடு விவாதம் சரிப்படாது. விதண்டாவாதத்தில் நேரத்தைச் செலவழிப்பதிலும் ஒரு சில தமிழ் நூல்களைப் படித்து விட்டு நகர்ந்தால் வேதாளம் மறைந்து தொலையும்.

சோபாசக்த்தி புதிதாய் எதையும் எழுதியதாய்த் தெரியவில்லை. ஜெயமோகனின் எழுத்தில் இப்போது அலுப்புத் தட்டத் தொடங்குகிறது—'டார்த்தனியம'; எழுதிய ஜெயமோகன் இறந்து விட்டதாய்த் தோன்றுகிறது. ஐயரின் நூல் கையில் கிடைத்தது, ஆனால் ஐயர் இணையத்தில் இணைத்ததற்கு அப்பால் அதிகம் எதையும் புதிதாய் இணைக்கவில்லை. அதனால் மீண்டும் நூலைப் படித்தபோது முன்னர் படித்தபோது எழுந்த உணர்வுகள் தான் புதிய மொந்தையில் வந்தன. சயந்தனின் நூல் பற்றிப் பலர் பேசுகிறார்கள் என்று அறிந்து இங்குள்ள புத்தகக் கடைக்கு நேற்றுச் சென்றேன். அங்கு ஒரு அம்மா ஒரு நூலின் விலையினைக் குறைத்துத் தரும்படி கேட்க கடைக்காரர் கூறியதை இங்கு ஒரு எழுத்துக் குறையாமல் பதிகிறேன்: 'எங்களிற்கு வெயிற்றிற்குத் தான் காசு'. எனக்குச் சயந்தனின் புத்தகம் அந்தக்கடையில் கிடைக்கவில்லை.

சரி தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று நினைத்தபோது 'மெரினா' கிடைத்தது. அட அற்புதமாய்ப் போகின்றதே என்று அகமகிழ்ந்து, நம்மாள் டாஸ்;ற்றாஎவ்ஸ்க்கியைத் தூக்கிவீசியபடி போய்ககொண்டிருக்கான்யா என்று உட்கார்ந்திருக்க, ஒரு மணிநேரத்திற்குப் பின் படம் சரியத் தொடங்கியது. மொத்தமாய் அரைமணிநேரத்தை அநாவசியமாய் அதிகப்படுத்தி, நல்லாப்போய்க்கொண்டிருந்த குதிரைக்காரனிற்குத் தேவையில்லாமல் வசனம் கொடுத்து, என்.ஜீ.ஓ வைக் கொண்டந்து, முடிக்கத்தெரியாமல் புராணக்கதை கணக்கில முடிச்சு முன்னர் ஏற்பட்ட நல்லபிப்பிராயத்தை கோபப்படுத்திக் கெடுத்துப் படம் முடிஞ்சபோது வெறுப்பாய் இருந்தது. வேதாளம் இன்னமும் தோளில் தான் இருந்தது: தமிழில் எதையேனும் வாசிக்கவேண்டும் அல்லது எழுதவேண்டும்.

ஒரு நாவலின் வெளித்தெரியும் கதைக்கப்பால் வசனங்களிற்கிடையே தொக்கிக் கிடக்கின்ற கதைகளிற்கு மனத்தை எழுச்சிப்படுத்தும் தன்மை அதிகம் என்பது எனது அபிப்பிராயம். ஒரு பாத்திரத்திற்கு வழங்கப்படும் பெயரில் கூட ஹைக்கூக் கவிதை போல ஏகப்பட்ட விடயங்கள் பொதிந்து கிடந்து மகிழ்வேற்றும். அதைப்போல ஒரு கதையின் தளத்தில் அதன் மாந்தர்கள் எதிர்கொள்ளும் பட்டறிவுகள் எமது வாழ்வின் அனுபவங்களோடு ஒத்திருக்கையில் மண்டைக்குள் மின்குமிழ்கள் ஒளிரும்.

அந்தவகையி;ல் ஒரு சிறப்பான நாவலை முடிக்கும் போது அடக்கமுடியாது அதைப்பற்றிப் பேசத்தோன்றும். மேலே குறிப்பிட்ட மூன்று நாவல்கள் பற்றியும் எத்தனையோ பேசத்தோன்றுகின்றது. எனினும் பதிவின் நீளம் காரணமாக, டாஸ்ற்றாஎஸ்க்கியின் 'த இடியற்' நாவலின் பாத்திரப்பெயர்; மற்றும் நாவலை எழுதுவதற்கு ஆசிரியரிற்கு உந்துலாக இருந்த சில சம்பவங்கள் பற்றி மட்டும் பேச முனைகிறது இப்பதிவு.

இயேசு என்ற பெயரைக் கேட்டதும் மிகப்பெரும்பான்மையான மனிதரிற்குத் தோன்றக் கூடிய காட்சி சிலுவையில் அறைந்தபடி தொங்குகின்ற ஒரு மனித உருவம். இயேசு அனுபவித்த சித்திரவதைகளை அனுபவித்து அதன் பின்னர் சிலுவையில் இயேசு அறையப்பட்ட வகையில் ஒரு மனிதன் அறையப்பட்டு சில நாட்கள் அப்படியே தொங்கவிடப்படின் அவன் இறப்பது எதிர்பார்க்கக்கூடியது. இயேசுவும் இறந்ததாக ஒத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், சிலுவiயில் இயேசு அறையப்பட்ட நிலையோடு ஓவியங்கள் பெரும்பாலும் முடிந்து போகின்றன. இறந்ததன் பின்னர் சிலுவiயில் இருந்து இறக்கித் தரையில் கிடத்தப்பட்ட இயேசுவின் சடலம் என்ற ஒரு ஓவியம் உலகின் மிகப்பெருப்பான்மையான மனிதரின் மனங்களில் இல்லை என்பது மட்டுமன்றி அப்படி ஒரு சாத்தியம் பற்றிய சிந்தனையே எவருக்கும் வருவதில்லை. காரணம், இறந்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தார் என்ற செய்தியோடு இயேசு இறைவனாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, மனிதனிற்குச் சாத்தியமற்ற குணங்கள் இறைகுணங்களாக அறிவிக்கப்பட்டுக் கதை முடிந்து போகின்றது.

ஜெர்மனிய ஓவியர் ஹொல்பைன் இங்கு ஒரு குளப்படி செய்கிறார். இறந்த இயேசு என்ற ஒரு ஓவியத்தை வரைந்து தொலைக்கிறார். அதாவது, இயேசு அனுபவித்த சித்திரவதைகளை அனுபவித்து இறக்கும் ஒரு மனிதனின் சடலம் எப்படி இருக்கும் என்று, உப்பிய முகத்தோடும் காயங்களோடும் தத்ரூபமாக ஒரு ஓவியத்தை வரைகிறார். இதை வரைவதற்காக நீரில் மூழ்கி இறந்த ஒரு யூத மனிதனின் சடலத்தை ஹொல்பைன் காட்சிப் பொருளாகப் பயன்படுத்துகிறார். பாசில் அருங்காட்சியகத்தில் இவ்வோவியத்தைக் கண்ட டாஸ்ற்றாஎவ்ஸ்க்கி அரைமணிநேரத்திற்கு மேலால் அவ்வோவியத்தை விட்டு அகலாது அப்படியே நின்ற போது 'த இடியற்' என்ற நாவலிற்கான உந்துதல் அவருள் பிறக்கிறது.

உலகிலேயே அதிஅழகானதாக, அழகிற்கு வரைவிலக்கணமாக இயேசுவின் குணாம்சங்களை வரைவிலக்கணப்படுத்தும் மனிதர் அவ்வாறான அழகிய குணங்களோடு ஒரு மனிதன் தம்முள் ஒருவனாக உலாவின் அவனை எவ்வாறு நடாத்துவார்கள் என்ற சிந்தனையில் உருவானதே கதாநாயகன் மிஷ;கின் பாத்திரம். அதாவது இயேசு மரணத்தை வென்று கடவுள் என்று ஊர்ஜிதமானதால் தான் அவரது குணங்கள் அழகான குணங்கள் என்றாகின்றன, அவர் உயிர்த்தெழாது வெறும் மனிதனாக மட்டும் இருந்திருப்பின் அவரை முட்டாள், வெள்ளந்தி, வாழத்தெரியாதவன், மொக்கன், மோடன் என்ற அடைமொழிகளால் அழைப்பது மட்டுமன்றி மனநலச்சிகிச்சைக்கும் உட்படுத்தியிருப்பார்கள் என்பது சிந்தனை.

பாவிகளாகப்பிறந்து, எமது வசதிப்படி பாவம் செய்தபடி வாழும் எங்களை எமது இறப்பின் பின் மன்னித்து மோட்சம் தருவதற்கு—அத்தகைய மோட்சம் எங்களிற்கு ஆதாயமானது என்பதனால்--கடவுளிற்கு மேற்படி குணங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். அதற்காக நாங்கள் அப்படியான குணங்களோடு வாழ்ந்துவிடுவதற்கோ, கடவுள் எங்களை எவ்வாறு நடாத்தவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்;க்கிறோமோ அதே விதத்தில் எம்; சகமனிதனை நாங்கள் நடாத்திவிடுவதற்கோ, நாங்கள் பிளைக்கத்தெரியாத முட்டாள்களா என்ன. இறைவனின் குணங்கள் மனிதனிற்கும் உடையனவென்றாயின் பின் நாங்களும் அவ்வாறல்லவா வாழ்ந்துவிடவேண்டிவரும். அதனால் தான் இறந்த இயேசு ஓவியம் கிறிஸ்த்தவர்களிற்குள் விசனத்தை உருவாக்கியது. இறப்பை வென்று கடவுளாகி மனிதனின் உளவியலில் கடவுள் ஏற்படுத்திய நன்மையினை இறந்த இயேசு ஓவியம் ஆட்டிப்பார்த்தமையே கோபத்தின் காரணமாகியது. இயேசு ஜீவிக்கிறார் என்பது அடித்துக் கூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது (ஈழத்தமிழர்கள் மே 19 2009ல் கண்ட இறந்த தலைவர் ஓவியம் எம்முள் ஏற்படுத்திய உணர்வலைகள் பற்றியும் இது சார்ந்து ஒரு பதிவே இடலாம். எனினும் நீளம் கருதி தவிர்த்துக்கொள்கிறேன்).

மேற்படி ஓவியத்தின் உந்துதலில் இயேசுவை நாம் வரைவிலக்கணப்படுத்தும் விதத்திற்கமைய ஒரு அழகான மனிதனை உருவாக்கி அவனை மனிதர் மத்தியில் உலாவவிட்டமையே 'த இடியற்' நாவல். நாவல் கூறுகின்ற வெளிப்படைக்கதைக்கு அப்பால் இத்தனை சுவாரசியமான உந்துதல் எழுத்தாளரிற்கு ஏற்பட்டமை வாசகரின் மனங்களைக் கிளர்;ச்சிப்படுத்துகிறது என்றால் இதற்கு மேலும் விடயம் உண்டு. தான் உருவாக்கிய மேற்படி அழகான மனிதனிற்கு டாஸ்ற்றாஎவ்ஸ்க்கி வைத்தபெயர் லெவ் நிக்கோலவிச் மிஷ;க்கின்.

கதாநாயகனின் பெயர், வெளிப்படையிலேயே சுவாரசியமானது. சிங்கம் (லெவ் அல்லது லியோ) எலி (மிஷ;) ஆகிய இரண்டையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே கதாநாயகனின் பெயர். இதற்கு மேலும் இப்பெயரிற்குச் சுவாரசியம் உள்ளது. டாஸ்ற்றாஎவ்;ஸ்க்கி பத்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தையார் தினமும் மாலையில் கராம்சினின் ரஸ்சிய வரலாற்றைக் குழந்தைகளிற்குப் படித்துக் காட்டுவாராம். மேற்படி வரலாற்றில் மிஷ;க்கின் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். 1471ல் மொஸ்கோவின் ஆளுனர் கடவுளின் தாயாரிற்கு ஒரு பிரமிப்பான தேவாலயம் கட்ட விரும்பி பொறுப்புப் கொடுத்த இருவரில் ஒருவர் மிஷ;க்கின். அப்போது றஸ்சியாவில் இருந்த மிகப்பெரும் தேவாலயத்திற்குச்; சென்று அளவுகளை எடுத்த மிஷ;க்கின் அதைவிடப்பிரமாண்டமான தேவாலயத்தைக் கட்ட முனைந்து மிகப்பாரிய ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டது. ஆனால் அத்தகைய பாரிய கட்டிடத்திற்குள் மனிதர் செல்வதற்கான படிகள்--அவையும் பாரியன--இணைக்கப்பட்டபோது கட்டிடம் சரிந்து நொருங்கிப்போனது.

மேற்படி சம்பவமும் ஆழ்ந்து வாசிக்கப்படக்கூடியது. அதாவது, கடவுளைப் பிரமாண்டமாக்கி, அத்தகைய கடவுளின் தாயாரிற்கு றஸ்சியா கண்டிராத பிரமாண்ட தேவாலயத்தைக் கட்டியெழுப்பி, அத்தகைய பிரமாண்டமான கடவுளின் வீட்டிற்குள் மனிதன் செல்லவேண்டின் எத்தகைய பாரிய படிகள் தேவைப்படுமோ அத்தகைய படிகள் இணைக்கப்படுகையில் மனிதனின் பிரமாண்டடம் சரிந்து நொருங்கிக்போகின்றது. கடவுளும் மனிதனும் தொடர்தும் தனித்தனித் தளங்களிலேயே மனிதருள் வாழ்கின்றன.

ஒரு இசைக்கலைஞன் சிம்பொனி அமைப்பதைப் போல, ஒவ்வொரு பாத்திரத்தையும் கவிதைபோலப் பிணைத்து எடுத்து, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பாரிய பங்குகளைக் கொடுத்து, அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பேசுகையில் நாம் எமக்குள் பிரமாண்டத்தை உணரச் செய்து அதே நேரம் அத்தனை பிரமாண்டங்களையும் உள்ளடக்கிய நாவலில் அத்தனை குரல்களும் துல்லியமாகக் கேட்கக் கூடியதாய் நாவலை சிம்பொனி ஆக்கிய படைப்பாளியும் பிரமாண்டமே.

ஒரு நாவலை உருவாக்குவதற்காக நாவலாசிரியன் செய்கின்ற ஆராய்ச்சி, அவனது சிந்தனைகள், பாத்திரக்கட்டமைப்பு என்பனவே இத்தனை சுவாரசியமாய் இருக்கையில் படைப்பைப் பற்றிக் கூறத்தேiயில்லை. படைப்பு உருவாக்கப்பட்ட பின்னணி பற்றித் தெரிந்திருப்பது, படைப்பில் வரிகளிற்கிடையே தொக்குநிற்கும் தளங்களைக் கண்டு ரசிப்பதற்கு உதவும்.

ஈழத்தமிழ் நாவல்களும் அடுத்த கட்டங்களிற்குச் சென்று பிரமிப்புக்ளைத் தமிழில் தரிசிக்கும் வளர்ச்சி வரவேண்டும், தமிழ் புத்தகக்கடைபோடும் வியாபாரிகள் நிறைக்கப்பால் புத்தகங்களைக் காணத் தொடங்கவேண்டும் என்ற ஆவலோடு இப்பதிவை முடித்துக் கொள்கிறேன். வேதாளம் இறங்கியதால் தோள் இப்போது இளைப்பாறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Dostoyevsky இன் The Idiot ஐப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றுகள். எனது விருப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டுள்ளேன்.

சயந்தனின் "ஆறா வடு" கையெட்டும் தூரத்தில் இருந்தாலும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என்பதற்கான தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.