Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான குரல்கள் வலுத்து வருகின்றது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news_1304.jpg

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நல்லிணக் ஆணைக்குழுவின் அறிக்கையினை மையப்படுத்தி அமெரிக்காவினால் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி சர்வதேச சுயாதீன் விசாரணைக்கான குரல்கள் வலுத்து வருகின்றன.

ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் அவர்கள் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

சிறிலங்காவின் போர் குற்றங்கள் தொடர்பில், ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு, சர்வதேச சமூகத்துக்கு உள்ளதென ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில், சிறிலங்காவின் போர் குற்றங்கள் தொடர்பிலான சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்பட திரையிடலின் போதே இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்ட, சர்வதேச சட்டவிதிகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு காத்திரமான கவனிப்பை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார் அவர்கள், ஒரு நம்பகமான செயற்திறனை நல்லிணக் ஆணைக்குழு கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்து காலங்கடந்துள்ள நிலையில், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து, சிறிலஙகா அரசாங்கம் பொறுப்புக்கூற தவறியுள்ளதோடு, காத்திரமான செயற்பாடுகளை சிறிலங்கா செய்திராத நிலையில், குற்றச்சாட்டுக்கள் குறித்தான ஒரு சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு உள்ளதென தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையானது, இவ்விகாரத்தில் முன்நின்று கடமைகளை ஆற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

போரின் இறுதியில் இடம்பெற்ற கொடும்சம்வங்களுக்கான நீதி கிடைக்காதவரை, சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்ற இன நல்லிணக்கம், சமாதானம் என்பன, தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரனை மன்றத்தை சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாத நிலையில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இத்தகைய மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணையை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள லூயிஸ் ஆர்பார் அம்மையார் அவர்கள், அதற்கு முன்னர் இந்த உண்மைககள் உலகின் முன் நிறுவப்படவேண்டும் என கூறிக்கொண்டார்.

இதேவேளை தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளை வலுவூட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும், தடுப்புக்குமான விவகார அமைச்சின் சார்பில் ஜெனீவாவுக்கு சென்றுள்ள பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆகிய Joan Ryan மற்றும் ரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரித்தானியாவுக்கான ஜரோப்பிய பாராளுமன்ற முன்னாள் தலைவருமான Robert Evans ஆகியோர் சர்வதேச சுயாதீன விசாரணனையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க இந்திய நாடாளுமன்றத்தில் ஐ.நா மனித உரிமைச் சபைச் விவகாரம் இன்று எதிரொலித்துள்ளது.

"ஜெனீவாப் பிரேரணயை ஆதரி ....ஜெனீவாப் பிரேரணயை ஆதரி" எனும் முழக்கம் இந்திய நாடாளுமன்றத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள இந்திய நாடாளுமனறக் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையினை இந்தியா ஆதரிக்க வேண்டுமென இந்த முழக்கம் எழுப்பபட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்த்தின் இரு அவைகளுக்கான கூட்டமாக தொடங்கிய இன்றைய மைய அமர்வின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் தொடக்வுரைக்கு முன்னர் எழுந்த தி.மு.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவாப் பிரேரணையை ஆதரி என முழக்கமிட்டுள்ளனர்.

சற்றும் எதிர்பாராத இந்த முழக்கத்தினால் அவை பரபரப்குக்கு உள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தி.மு.கட்சியினரின் இந்த முழக்கத்தை ஆதரவாக சபையில் இருந்த தமிழகத்தின் பிற கட்சிகளது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக முழக்கமிட்டுள்ளனர்.

http://youtu.be/36EvGskH3ik

http://youtu.be/J2kfxw2Xn-o

http://youtu.be/sKN48T44cyU

http://youtu.be/2OcyvKXyy5Y

http://kathiravan.ne...?mid=35&id=1304

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.