Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைக்கு அப்பால் புதிய வலியுறுத்தலை எதிர்நோக்குகிறது இலங்கை

Featured Replies

யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைக்கு அப்பால் புதிய வலியுறுத்தலை எதிர்நோக்குகிறது இலங்கை .

கால் நூற்றாண்டு கால யுத்தம் முடிவடைந்து சுமார் 3 வருடங்களின் பின்னர் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் தொடர்ந்து வரும் காணாமல் போதல்கள் மற்றும் தடுப்புக்காவல்களை நிறுத்துதல் என்று இலங்கை புதிய வலியுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் இலங்கை அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன், வெளிப்புறத்தவர்கள் தலையிடுவதுடன் எதிர்கால பயங்கரவாத வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராளிச் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவர்கள் உண்மையில் சட்டத்தை மீறியுள்ளனர் என்பதை நீதிமன்றத்துக்கு நிரூபிக்காமல் இலங்கை தொடர்ந்தும் அவர்களை ஆதாரங்களின்றி சிறையில் தடுத்து வைத்திருப்பதாக அண்மையில் விடுத்த புதிய அறிக்கையொன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

சித்திரவதைகளும் காணாமல்போதல்களும் தொடர்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறைந்தது ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு படை வீரர்களால் நான் அடித்து விசாரிக்கப்படுவேன்’ என்று 17 வயது இளைஞன் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தான் சிகரட்டினால் சுடப்பட்டதுடன், தனக்கு வாசிக்க முடியாத ஆவணங்களில் கையொப்பமிடுமாறு பலவந்தப்படுத்தப்பட்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

அணியாகக் கூடியிருந்த ஏனையவர்களது நிலைமையும் மேற்படி இளைஞரின் நிலைமைக்கு சமனானதே.

இலங்கை அதனது தடுப்புக்காவல் சட்டங்களை மறுசீரமைக்க வேண்டும், இரகசியமான தடுப்புக் காவல் நிலையங்களை மூடி கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னவென்பது தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

“யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதன் அடையாளமாக இருந்த பாதுகாப்பு நடைமுறைகள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சிறிய மாற்றம் கண்டிருக்கின்றன’ என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரீஃபி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக மக்களுக்குரிய பதலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்று இலங்கையை வலியுறுத்தி அடுத்த வாரம் வாக்கெடுப்புக்கு விடுவதற்கு அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட தீர்மானமொன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. நிலையான சமாதானத்துக்கான விதைகளை விதைப்பதைத் தவிர இலங்கையைக் கண்டிப்பது இதன் நோக்கமல்ல என்று பேரவைக்கான அமெரிக்க தூதுவர் ஈலின் சேம்பர் லெய்ன் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரச்சினையானது உள்நாட்டில் கையாளப்பட வேண்டும் என்று இலங்கை அதிகாரிகள் வாதிட்டுள்ளனர். ஐ.நா. நடவடிக்கையானது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளையும் சீர்குலைப்பதாக மட்டுமே அமையும் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தென்னாபிரிக்காவின் முன்னாள் பேராயரும் சமாதானத்துக்கான நோபல் விருது வெற்றியாளருமான டெஸ்மன்ட் டுட்டுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அந்நாட்டு தயாரிப்புகளான கொக்கோகோலா, பெப்சி, கே.எவ்.சி. மற்றும் மெக் டொனால்ட்ஸ் போன்வற்றை இலங்கையர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“தீர்மானத்துக்கு நாம் அடிபணிந்தால் புலிப் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள்’ என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அவமதிப்புக்கு பதிலாக நாம் எமது எதிர்ப்பை சிறிய அளவிலாவது காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இரு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த யுத்தத்தின் இறுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் அரச படைகள் வெற்றிபெற்றன.

இதேநேரம், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தன. இலங்கை இராணுவம் தெரிந்திருந்தும் வைத்தியசாலைகள் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதும் ஷெல் தாக்குதல்களை நடத்தியிருந்ததாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கடந்த வருடம் தெரிவித்திருந்தது.

அதேபோல், விடுதலைப் புலிகள் தமிழ் பொது மக்களை மோதலில் ஈடுபட பலவந்தப்படுத்தியதுடன் பொதுமக்களை பணயமாக பயன்படுத்தியிருந்ததாகவும் அந்த குழு குறிப்பிட்டிருந்தது.

http://www.thinakkural.com/articles/11257-2012-03-15-07-22-31.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.