Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்-4 ஆவணப்படம், தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டியுள்ளது!ஜெனீவாவில் இருந்து நாடுகடந்தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TGTE-delegations-160312_150.jpg

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்தி வரும் தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு, சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணபடம் வலுச்சேர்த்துள்ளது.

இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், ஜெனீவாவில் இருந்து தெரிவித்துள்ளனர்.

http://youtu.be/6mPsH6CpnlI

ஏற்கனவே சனல்-4 தொலைக்காட்சியின் முந்தயை முதலாவது ஆவணப்படம், ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிட்டபோது கடும் அதிர்வலைகளையும், சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருந்தது.

இதன் தொடர்சியாக சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம,; இங்கு திரையிடப்படவுள்ள நிலையில், அது மேலும் கடுமையான நெருக்கடியை சிறிலங்காவுக்கு ஏற்படுத்துவதோடு, சிறிலங்கா தரப்பின் பொய்ப்பரப்புரைகள் கட்டுடைந்து போகும் நிலை ஏற்படுமென தெரிவித்துள்ளனர்.

TGTE-delegations-160312_272_002.jpg

TGTE-delegations-160312_316-001.jpg

கடந்த புதன்கிழமை சிறிலங்கா அரச தரப்பினர் ஏற்பாடு செய்திருந்த உப மாநாடொன்று, ஐ.நா மனித உரிமைச் சபையில் பிசுபிசுத்துப் போகியுள்ளதாக தெரிவித்துள்ள நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள், இந்த உப மாநாட்டை முழுமையாக நடத்தமுடியாத நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டிருந்தமை, அவர்களுடைய பலவீனமான நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதை உணரக்கூடியதாக இருந்ததென தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரேரணை, சிறிலங்காவின் இறையாண்மைக்குள் தலையிடுகின்ற விடயமென குறிப்பிட்ட சிறிலங்கா தரப்பினர், உள்நாட்டு விவகாரத்தை தாங்கள் உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்கின்றோம் என தெரிவித்திருந்த போதும், உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தோருக்கு இக்கருத்து திருப்பதி தரவில்லை.

குறிப்பாக பல்வேறு தரப்பினராலும் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் கூறமுடியாத, நிலைதடுமாறிய கட்டத்தில், சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகளை நோக்கிய நீங்கள் புலிகளின் பணத்தில்தான் இங்கு வந்துள்ளீர்கள் என சிறிலங்கா தரப்பினரின் வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தமை, பலரையும் கோபமடைய செய்துள்ளதென தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா தரப்பின் இந்தகைய போக்கு, பலவீனமடைந்து போகும் அவர்களுடைய நிலையையே வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், தொடர்ந்தும் சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை தாங்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க மகிழ்ச்சி.  அரசியல் போராட்டம் வலுபெற வாழ்த்துக்கள். 

எப்போது தமிழீழ கிரிகெட் குழுவை அறிவிக்க போகிறீர்கள்? 

எப்போது தமிழீழ கிரிகெட் குழுவை அறிவிக்க போகிறீர்கள்?

laughing_chimp.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உற்சாகத்துடன் வேலைசெய்யும் உறவுகளே

தர்மமும் நியாயமும் எம்முடன் இருக்கு

அது எம்மை காப்பாற்றும்

தொடரட்டும் தங்கள் பணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.