Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.

Featured Replies

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 மார்ச், 2012 - 18:17 ஜிஎம்டி

120318181107_organiser_rss_304x171_bbc_nocredit.jpg

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அதிகாரபூர்வ நாளேடு ஆர்கனைசர்

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும், இதில் இந்தியா தயக்கம் காட்டினாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ, பின்னாளில் இந்தியா சிக்கலான நிலைக்குத் தள்ளப்படும் என்றும் தலையங்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள், தங்களுக்குத் தொடர்பில்லாத பிரச்சினைகளில், தேவையில்லாமல் தலையிடுவதை, பூகோள மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"அமெரிக்காவுக்கு உரிமை இல்லை"

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவோ, உலக அமைப்பில் அதை சிறுமைப்படுத்தவோ, அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் எந்த உரிமையும் இல்லை என்று ஆர்கனைசர் கருத்து வெளியிட்டிருக்கிறது.

"உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை. இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள். அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய அக்கறையும், பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது. அதை இந்தியா செய்துகொண்டிருக்கிறது. ஆனால், மற்ற நாடுகள் இதில் தலையிட முடியாது" என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிலையில், இறுதிக்கட்டப் போர் நடந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை பிறப்பித்த உத்தரவுகளை மீறியதற்காக, ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகளால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள ஆர்கனைசர், அந்த நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்த நேரத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பான பிரச்சினை எழுப்பத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளரும், ஆர்கனைசர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி, தமிழ் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை என்றும், அதே நேரத்தில் ஒரு நாட்டுக்கு எதிராக மற்ற நாடுகள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk...esolution.shtml

  • தொடங்கியவர்

முள்ளி வாய்க்கால் படுகொலை நடந்தபோது எங்கிருந்தீர்கள்?

சமயத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் நீங்கள் யார்?

உலகமே விழித்தபோது நீங்கள் மட்டும் ஏன் எதிர்கிறீர்கள்?

இத்தனை லட்சம் மக்களின் கொலையில் உங்களின் பங்கு என்ன?

ஆன்மீகம் என்று கூறி பயங்கரவாதத்திற்கு துணை போகும் நீங்கள் பயங்கரவாதிகளா?

  • தொடங்கியவர்

டெல்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் திடீர் எதிர்ப்பு காட்டியுள்ளது.

சுப்பிரமணியசாமி போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபிமானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக்களும் கருத்து கூறி வருகின்றனர்.

இலங்கைக்கும் ஈழத்தமிழருக்கும் சம்பந்தமே இல்லாத 23 நாடுகள், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறப்படும் இந்தியா மட்டும் இன்னும் மவுனம் காத்து வருகிறது.

அந்த மவுனத்தை உடைத்து, இலங்கைக்கு எதிராக இந்தியா முடிவெடுக்க ப சிதம்பரம் போன்றவர்கள் முயன்று வரும் வேளையில், மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தின் மூலம் ஒரு ஜனநாயக அரசை அடி பணியவைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன என அந்த அமைப்பு 'புதுக்கரடி' விட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா, ஆதரிக்காதா என்பதை உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுடன் நேரடியாக தொடர்பில்லாத விவகாரங்களில் தலையிடும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்ஸின் ஆர்கனைஸர் பத்திரிகை தலையங்கம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் நிழலில் செயல்படும் இயக்கத்தினர் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக சிலர் கொண்டிருந்த மாயை நொறுங்கியுள்ளது.

மதவாத, ஆதிக்க சக்திகள் ஒருபோதும் சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்ததில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம் என்று தமிழுணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2012/03/18/india-india-should-not-support-us-on-lank-aid0136.html

  • கருத்துக்கள உறவுகள்

இவனுங்க இப்படி செய்யல என்றால் தான் அதிசயம்.. போக முக்கியமான விசயம் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் ஈழ தோழர்கள் கிந்தியாவினால் விலை கொடுக்காமலே வாங்கப்பட்ட கிடா ஆடுகள்.. அவன் எப்போ வேண்டுமெண்டாலும் பலி கொடுப்பான்.. அது அவனுக்கு வரும் நேர காலத்தை பொறுத்தது.. அதற்கு ஏற்ப இப்போது உள்ள தலைமை (கூத்தமைப்பு) கிட்டாக்களும் அந்த வழி செல்லுகின்றன.

இவனுங்களை விட்ட வெளிய வந்து அரசியல் செய்தால் தான் உருப்பட முடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை யார் இப்போது கணக்கெடுப்பார்கள்,

முடிந்தால் ஏதாவது உருப்படியான வேலைகளை செய்து மக்கள் மத்தியில் நற்பெயரை நிலை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த சிங்கள மக்களே!..

அன்று போருக்கு உதவியாக இருந்த கிந்தியா இன்று எமக்கு எதிராக சேம் சைட் கோல் அடிக்கிறது..அதனால் தீவிர வாதத்தை ஒழிக்க அன்று எமக்கு கிந்தியா எப்படி உறுதுணையாக இருந்தது என்பதினை உலகிற்கு உரைக்க சொல்வோம்.. இது எமக்காக நடத்தபட்ட போர் மட்டுமல்ல ஏனைய பிராந்திய ஏகாதிய பத்தியத்திற்காகவும் நடத்தபட்டது.. எமது நாடு இலங்கை நாடு.. ஓம் சொறிலங்கா மாதாவே நமக..

டிஸ்கி:

இங்க கூத்தடிக்கும் நேரம் விடுத்து இந்நேரம் சிங்களவன் இந்த மாறி திரிய வேற களங்களில் திறந்து விட்டு இருப்பான் .. அங்க போய்ட்டு டிசில்வா ..பெராரோ .. ரணதுங்க. டில்சான். . இவனுங்க பேரை வாயில் வர இயலவில்லை.. இந்த மாறி பெயர்கள் உள்ளடி செய்யுங்கப்பா.. சாணக்கியமா இருக்கணும் மூளை வேலை செய்யலண்ணா ஏதும் செய்ய முடியாது.. அவன் ஆரம்பிக்கல என்றாலும் நீங்களே ஆரம்பித்து அள்ளி போடுங்கப்பா... அவன் சிங்களன் தன்னாலா வந்து ஒட்டி கொள்ளுவான்...அதற்கெல்லாம் உலக பொருளாதார நிபுணர் தான் கரெக்ட்டு...

உள்ளடி வேலை செய்யல என்றால் உலகத்தில் பிழைக்க முடியாதப்பு

ஐயோ பாவம். இவர்களுக்கும் சுப்ரமணியன் சாமி நிலைமை வந்து விட்டது போல இருக்கு .

இந்தியக் காட்டுமிராண்டி அரசின் கூலிப்படையான 'ரோ'ப் பயங்கரவாதிகளுடன் நெருங்கி செயல்படும் அமைப்பாக ஆர். எஸ். எஸ். உள்ளது. இது பிராமண, வட இந்திய ஹிந்தி வெறியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பு.

தாயகத்தில் சில காலமாக எச். எஸ். எஸ். (இந்து சுயம்சேவக் சங்கம்) என்ற பெயரில் பதிவு செய்து இயங்கி வருகின்றனர். வட இந்தியப் பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு சில தமிழகத் தமிழர் சிங்கள பயங்கரவாதிகளின் ஆதரவுடன் தாயகத்தில் பலவருடங்களாக தமிழின விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மலையகத்தில் உள்ள சிலரையும், கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலரையும் மூளைச் சலவை செய்து ஈழத் தமிழரின் கலாச்சாராத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

வன்னிப் பேரழிவின் பின்னர் வன்னி மண்ணில் காலூன்ற இவர்கள் முயன்று வருகின்றனர்.

அண்மையில் வன்னிக்குச் சென்ற பொது, மலையாளபுரம் என்னும் கிராமத்தை இவர்கள் முழுமையாக தமது ஆக்கிரமிப்பில் கொண்டு வந்துள்ளதை அறிய முடிந்தது. நான் அறிந்த சிலரின் சிறுவர்கள் சிலர் எம்மை எமது பெயருடன் "ஜி" சேர்த்து அழைத்தனர். பதுளையில் இருந்து வரும் எச். எஸ். எஸ். உறுப்பினர்கள் இவர்களை பயிற்றுவிப்பதாகவும், பயிற்சிகளின் போது, ஹிந்தியை திணிப்பதையும் அறிய முடிந்தது. ஒன்று, இரண்டுக்குப் பதிலாக ஹிந்தியில் ஏக், தோ, தீன் ... என்று சொல்ல வேண்டும் என்று திணிக்கப்பட்டுள்ளது.

விஷ நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளோம்.

பெரியவர்களிடம் வெளிநாட்டிலுள்ள உறவினர் மூலம் பெருமளவு நிதி திரட்டி தமக்கு தரமுடியுமோ எனவும் இவர்கள் கேட்டுள்ளார்களாம். அவர்களின் "சேவா இண்டர்நஷனல்" (SEWA INTERNATIONAL) மூலம் ஈழத் தமிழரின் பணத்தையும் கொள்ளையடிப்பதில் தற்போது ஆர். எஸ். எஸ். ஈடுபட்டுள்ளது. கீழுள்ள இணையத்தைப் பார்த்தால் இவர்களின் சதித்திட்டங்கள் விளங்கும்.

http://www.stopfundi.../appendixc.html

புலம் பெயர் தமிழர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.