Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேம் தியரி - Game Theory

Featured Replies

.

அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு "முக்கியமான" கொள்கை இந்த "கேம் தியரி" ‍( Game Theory ).

இதன் படி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டில் ஒருவர், விளையாட்டில் பங்கு பற்றும் ஏனையோரது நலன்கள்/தீர்மானங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்காது, தான் தனியே, தன்னிச்சையாக தனது நலன்களை மட்டும் கருத்தில் எடுத்து தீர்மானங்களை எடுப்பாராயின் அத்தீர்மானங்களால் அவருக்கு நன்மை விளையப் போவதில்லை என்பதே மையக்கருத்தாகும்.

விளையாட்டில் உச்ச பலனைப் பெற பங்கு பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தீர்மானங்களைக் கருத்தில் எடுத்தே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது விளையாட்டில் பங்கு பற்றுவோரிடையே ஓரளவிற்கு குறைந்த பட்ச ஒத்துழைப்பையாவது கோரிநிற்கிறது.

இங்கே விளையாட்டில் "சமநிலை" ( Equilibrium ) எனப்படும் நிலையாவது, பங்கு பற்றுவோர் தீர்மானங்கள் பங்கு பற்றுவோரிடையே ஏற்படும் பரஸ்பர புரிந்துணர்வு நிலையில் ஏற்படுகின்றது. எப்போது ஒருவர் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்க ஆரம்பிக்கின்றாரோ அப்போது இந்தச் சமநிலை குழம்பி விளையாட்டு ஒரு திசையில் நகர ஆரம்பிக்கின்றது.

உலகத்தின் பல அரசியல் சிக்கல்கள் இந்த "கேம் தியரி" யை நிரூபித்துள்ளன. ஈழப்பிரச்சனையும் இந்த கேம் தியரியின் படியே நகர்ந்தது, நகருகின்றது.

இந்த கேம் தியரியை கண்டுபிடித்த ஜோன் நாஷ் என்பவர் நொபேல் ஞாபகார்த்த பரிசை வென்றார்.

http://en.wikipedia....ash_equilibrium

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக quality management வகுப்பில் செய்முறை விளையாட்டுக்களோடு படிச்ச ஞாபகம். பகிர்விற்கு நன்றி ஈசன். :):icon_idea:

http://www.mazeworks.com/hex7/

இதில் ஒரு விளையாட்டு இருக்கு விளையாடிப் பாருங்க..!

விதிமுறை: The players take turns placing their pieces on any unoccupied hex. The object of the game is for each player to connect their sides of the board with an unbroken chain of their own pieces. For White, the chain of white pieces would run from the lower left to upper right edge. For Black, from the lower right to upper left. The chain may twist and turn freely on its way from one edge to the other.

விளையாட்டின் இலக்கு.. மேற்படி இணைப்பில் தோன்றும் கட்டங்களில் வெள்ளை, கறுப்பு புள்ளிகளை இட்டு பெரிய உருவத்தின் வெள்ளை விளிம்புகளுக்கிடையே வெள்ளை முறிவுறாத சங்கலியையும்.. கறுப்பு விளிம்புகளுக்கிடையே கறுப்பு முறிவுறாத சங்கிலியையும் உருவாக்க வேண்டும். இரு போட்டியாளர்கள் மாறி மாறி புள்ளிகளை இட்டு விளையாடும் இந்த விளையாட்டில் யார் முதலில் இலக்கை முறிவுறாத சங்கிலி முலம் எட்டுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். இன்றைய எமது அரசியல் காய் நகர்த்தலும் இதே நிலையில் தான் உள்ளது. நாம் நேர் கோட்டில் சங்கிலி அமைக்க நினைத்தால் எதிரி இன்னொரு வழியில் தன் இலக்கை அடைய அது வழிவிடும். நாம் குறுக்கும் நெடுக்கும் போட்டால் கூட எதிரிக்கு அங்கும் வாய்ப்பிருக்கும். எனவே எல்லா வகையில் ஒவ்வொரு நகர்வையும் நிதானித்து செய்யுன் இலக்கை நாம் அடைவது கடினம் அல்ல..!

மேலும் சில விளையாட்டுக்கள்..

http://www.gametheor...mes/online.html

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.