Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும்

Featured Replies

ரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும்

கறுப்பினத்தவரான 17 வயதான டரைவோன் மார்டின் கொலை அமெரிக்காவை உலுக்கியதுடன் வழமையாக இனம் சம்பந்தப்பட்ட விடயங்களில் விலகி இருக்கும் அதிபர் ஒபாமாவையே தனக்கு ஒரு மகனிருந்தால் என ஒப்பிட வைத்து பேசவைத்துள்ளது !

இந்த இளையவர் 'முதலில் கொல் பின்னர் காரணத்தை கூறு' என்ற சட்டத்திற்கு அமைய கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு பலரும் கொல்லப்பட்டு, கொன்றவர்கள் எவருமே தண்டனை அனுபவித்ததில்லை. ஆனால், இம்முறை இந்த சட்டம், அதன் தீமைகள் விவாதிக்கப்படலாம்.

  • தொடங்கியவர்

இந்தகொலையை செய்தவர் தன்னை இறந்த கறுப்பினத்தவர் தாக்கியது எனக்கூறியமை பொய் என கூறப்படுகின்றது.

அமெரிக்கா தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

  • தொடங்கியவர்

நீதி கேட்டு தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தக் கானொலிகளை பார்க்கவில்லை என்ன நடந்தது அவருக்கு?...ஏன் கொல்லப்பட்டார்?

  • தொடங்கியவர்

நான் இந்தக் கானொலிகளை பார்க்கவில்லை என்ன நடந்தது அவருக்கு?...ஏன் கொல்லப்பட்டார்?

கொல்லப்பட்டவர் யார் : கறுப்பின பதினேழு வயது வாலிபர்

கொன்றவர் யார் : ஒரு வெள்ளை இனத்தை சார்ந்தவர்

என்ன நடந்தது: அமெரிக்காவில் உள்ள 'நெய்பர் ஹூட்' என்ற கண்காணிப்பு பிரிவை சேர்ந்தவர் சிம்மர்மான். இவர் புளோரிடாவில் உள்ள மூடப்பட்ட வீடுகளை கொண்ட பகுதியில் (gated community) இந்தக்கண்காணிப்பில் பணியாற்றியபொழுது இவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

என்ன பிரச்சனை: சிம்மர்மானை இன்னும் காவல்துறை கைதுசெய்யவில்லை (கொலை நடந்தது மாசி மாதம் 26 ஆம் திகதி)

ஏன்: சில இடங்களில் உள்ள விதிப்படி இந்த 'நெய்பர் ஹூட்' என்ற கண்காணிப்பு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கொள்ள உரிமை உள்ளது.

கறுப்பினத்தவர் கடையில் ஒரு கோலாவையும் இனிப்பு ஒன்றையும் வாங்கி தலையை மூடும் (கூடி) உடுப்பையும் அணிந்துள்ளார். அவர் கையில் துவக்கு உள்ளதாக வெள்ளையர் சந்தேகித்துள்ளார். கறுப்பினத்தவரும் தனது காதலியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை ஒருவர் பின்தொடர்வதாக கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் ஏன்: வெள்ளை இனத்தவர் அநியாயமாக கொன்றுள்ளார். இவர் கொல்லமுதல் காவல்துறையை தொடர்புகொண்டுள்ளார். அவர்கள் கறுப்பு இன வாலிபரை தொடரவேண்டாம் எனக்கேட்டுள்ளனர்.

தன்னை கறுப்பின வாலிபர் தாக்கியதாக கூறினார். அது பொய் என ஒளிப்பதிவு ஒன்று காண்பிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் இனவெறிதாக்குதலா?

என்னதான் நாகரீகம் வளர்ந்து வந்தாலும் கூடவே அதர்மமும் அநியாயமும் வளர்ந்து வருகின்றது என்பது துரதிஸ்ரம்.

  • தொடங்கியவர்

கறுவல் இனத்தவர் மத்தியிலும் பல சமூக பிரச்சனைகள் உள்ளன. மற்றைய சமூகங்கள் முன்னேறிய அளவிற்கு இவர்கள் முன்னேறவில்லை.

ஆனால், வெள்ளை இனத்தவரும் அடிமைகளாக கொண்டுவந்த கறுப்பினத்தவரை ஒதுக்கவே பார்க்கின்றனர். மார்டின் லூதர் கிங் போன்றவர்களால் முன்னேற்றம் கண்டனர், அப்படியான போராட்டம் தொடர வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஏற்கனவே காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்மர்மான் மீது இரண்டாம் தர கொலைக்குற்றச்சாட்டு நீதிபதியால் இன்று சுமத்தப்பட்டுள்ளது!

George Zimmerman charged with second-degree murder in Trayvon Martin shooting

http://news.nationalpost.com/2012/04/11/george-zimmerman-charged-with-second-degree-murder-in-trayvon-martin-shooting/

அமேரிக்காவின் குடித்தொகையில் 9% கறுப்பர்கள் ஆவார்கள்

ஆமேரிக்கவின் சிறைகைதிகளில் 80% கறுப்பர்கள் ஆவார்கள்

  • தொடங்கியவர்

அமேரிக்காவின் குடித்தொகையில் 9% கறுப்பர்கள் ஆவார்கள்

ஆமேரிக்கவின் சிறைகைதிகளில் 80% கறுப்பர்கள் ஆவார்கள்

இப்படியான ஒரு நிலைக்குள் தாயகத்தில் எமதுறவுகளை வைத்திருக்க சிங்களம் விரும்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா, சுட்டவர் வெள்ளையர் (caucasian) அல்ல. ஸ்பானிய இனத்தவர். பெயரை ஸ்பானிய அடையாளங்கள் இல்லாமல் சிம்மர்மான் என்று வைத்திருக்கிறார்.அப்பாவின் அடி வந்த பெயராக இருக்கும். அமெரிக்காவில் கறுப்பினத்தவரும் ஸ்பானியரும் ஒரே அளவான தொகை கொண்ட சிறு பான்மையினர் தான். ஆனாலும் பல காரணங்களால் கறுப்பினத்தவர் குற்றவாளிகளாகப் பார்க்கப் படும் நிலை தொடர்கிறது. இதனால் கறுப்பினத்தவர் சட்ட அமுலாக்கல் துறையினரை வெறுத்து அதனால் மீண்டும் குற்றங்கள் இழைக்கும் நிலையும் இருக்கிறது. இந்த நச்சுச் சக்கரத்தை இல்லாதொழிக்க இரண்டு பகுதியினருமே உழைக்க வேண்டும். சிம்மர்மானை சட்டப் படி தண்டிப்பது இதில் ஒரு படியாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

நன்றி ஜஸ்டின் திருத்தத்திற்கு.

அத்துடன் அமெரிக்காவில் சில இடங்களில் உள்ளா இந்த சட்டமானது, 'முதலில் சுடுபின்னர் காரணம் கூறு' மிகவும் தவறானது. அது கூட மாற்றப்பட இல்லை அகற்றப்படல் வேண்டும்.

New York mayor Bloomberg accuses NRA of backing 'licence to murder'

Michael Bloomberg launches nationwide campaign on gun reform and says 'shoot first' laws have harmed public safety

http://www.guardian.co.uk/world/2012/apr/11/michael-bloomberg-nra-gun-control?newsfeed=true

  • தொடங்கியவர்

  1. மன்னிப்பு கோரினார் சிம்மர்மான்
  2. 150,000 USD பிணையில் விடப்பட்டார்
  3. கொல்லப்படலாம் எனவும் அஞ்சப்படுகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.