Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேரணை நிறைவேறியிருந்தாலும் ௭மது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் ஐ.நா. தலையிட முடியாது : அமைச்சர் சமரசிங்க திட்டவட்டம்

Featured Replies

பிரேரணை நிறைவேறியிருந்தாலும் ௭மது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் ஐ.நா. தலையிட முடியாது : அமைச்சர் சமரசிங்க திட்டவட்டம்

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் ௭மது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை ௭ன்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனி த உரிமைகள் விவகாரங்கள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடின்றி மனித உரிமை ஆணையாளரினால் தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட எந்த உதவியையும் எமக்கு வழங் முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழுவின் தலைவராக அமைச்சர் சமரசிங்க செயற்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நாடு திரும்பிய அமைச்சரிடம் ஜெனீவ விவகரம் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. ___

ஜெனிவா தீர்மானம் குறித்து தென்னிலங்கையில் எதிர்ப்பு வலுக்கிறது!- ஒலிபெருக்கிஇசுவரொட்டிகள் மூலம் பிரசாரம்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனவும் தெற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தலைமையில் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த மாட்டாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜெனிவா தீர்மானத்தை முற்றாக எதிர்க்கும் வகையிலேயே தெற்கில் உள்ள அரச சார்புக்கட்சிகளின் கருத்துகள் அமைந்துள்ளன.

ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானத்துக்கு எதிரான கருத்தையே வெளியிட்டு வருகின்றனர்.

முக்கியமாக அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும்இ ஜே.வி.பியின் உறுப்பினர்களும்இ பேரினவாத அமைப்புகளின் தலைவர்களும் இந்தக்கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஇ

இது சுயாதீனமான நாடு. இங்கு அநாவசியமான அழுத்தங்களைப் பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. இலங்கையரான எம்மை யாரும் கட்டுப்படுத்த இயலாது'' என்று தெரிவித்திருந்தார்.

மூத்த அமைச்சரான வாசுதேவ நாயணக்காரஇ

இலங்கையின் சுயாதிபத்தியத்தை ஜெனிவாத் தீர்மானம் ஒன்றும் செய்யாது. அதற்கு நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம். சர்வதேசத்தின் தேவையற்ற தலையீடுகள் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும்.'' என்று ஜெனிவா தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும்போது கூறியிருந்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸஇ

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கை மிரண்டுவிடாது. அமெரிக்காவின் இந்தத் திட்டமிட்ட சதியை எதிர்த்துப் போராடுவோம். சர்வதேச தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தேவையற்ற சர்வதேச தலையீடுகள் எமக்குப் புதியவை அல்ல. இவ்வாறு அமெரிக்கா பல தடவை முயன்றிருக்கிறது. இதற்கு மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவு வழங்குகின்றன என்று வீரவன்ஸ குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கஇ அமைச்சர் மேர்வின் சில்வாஇ ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேத்தானந்த தேரர்இ ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கஇ தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் குணதாஸ அமரசேகர ஆகியோரும் ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான கருத்துகளைத் தீவிரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பின் பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உட்படப் பல இடங்களில் நேற்று ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்தும் அமெரிக்காவைக் கண்டித்தும் ஒலிபெருக்கிகளில் பிரசாரங்கள் ஒலிக்க விடப்பட்டிருந்தன.

அத்துடன் இது தொடர்பான சுவரொட்டிகள் கொழும்பின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதுடன் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

தீர்மானம் தொடர்பில் தெற்கு அரசியல் தலைமைகள் கடும் சீற்றத்தில் உள்ளதை அவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் நாள்களில் தீர்மானத்துக்கு எதிரான கருத்துகள் மேலும் வலுவடையும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இதேவேளைஇ ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டப் பேரணிகளையும்இ எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக முடுக்கி விடுவதற்கான செயற்பாடுகளும் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது.

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை அரசுடன் சேர்ந்தியங்கும் கட்சிகள் மிகப் பெரிய அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்தவேளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை அமெரிக்கா வருமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் அழைத்துள்ளமையை அடுத்து அந்த ஆர்ப்பாட்டம் ஒத்திப்போடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாத் தீர்மானம் ஸ்ரீலங்காவின் இறையாண்மையை பாதிக்கும் என்று, சிங்களத் தலைவர்கள் கருதுவதால்....

இலங்கையை... தமிழ் ஈழம். ஸ்ரீலங்கா என்று பிரித்து விடுவதே சிறந்த வழி.

  • தொடங்கியவர்

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை அரசுடன் சேர்ந்தியங்கும் கட்சிகள் மிகப் பெரிய அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்தவேளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை அமெரிக்கா வருமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் அழைத்துள்ளமையை அடுத்து அந்த ஆர்ப்பாட்டம் ஒத்திப்போடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த பிரயாணம் நடந்தால் அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகள் சிங்களம் ஐ.நா. பிரேரணையை எவ்வாறு கையாளுகின்றது எனப்பார்க்கலாம்.

எவ்வாறாயினும் இதை இலகுவில் கையாள முடியாது, அந்தக்காலகட்டத்தை சிங்களம் இழந்துவிட்டது. இப்பொழுது அதனால் இழப்புக்களை எவ்வாறு குறைக்கலாம் என்பதே உண்மையான நோக்கமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட பச்சை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.