Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயில்வோம் பங்குச் சந்தை -

Featured Replies

இதனை சரியான பகுதிக்கு நகர்த்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறேன்

இது பங்கு சந்தை தொடர்பான பதிவு பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது பெரிய பதிவு விருப்பம் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பயன் பெறுங்கள்

part-1

உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன.

பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ பற்றி விளக்கமாக பார்ப்போம்

முதலில் பங்கு சந்தையில் TECHNICAL ANALYZING ஏன் தேவைபடுகிறது என்பதினை பற்றிய விளக்கத்தை பார்ப்போம் …

பொதுவாக பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் அதன் FUNDAMENTAL வளர்ச்சியை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது அதாவது

1- அந்த நிறுவனத்தின் வியாபாரம்

2- நிகர லாபம்

3- நிகர செலவுகள்

4-அவர்களுக்கு இனி வரும் மாதங்களில் கிடைக்கப்போகும் வியாபார வைப்புகள், அதனால் கிடைக்கப்போகும் வருமானம்

5-அந்த நிறுவனம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்

6-அதன் நிர்வாக திறன்

7-நிறுவனம் கொடுக்கும் BONUS, DIVIDEND இது போன்ற சமாச்சாரங்கள் தான் நிறுவனத்தின் வளர்ச்சியை முடிவு செய்து அதன் பொருட்டு நிறுவனத்தின் பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் முடிவு செய்யப்படும்

TECHNICAL ANALYZING ஏன் ?

இங்கு பங்குகளின் விலை ஏற்றங்களை முடிவு செய்யும் காரணிகள் FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றால் பிறகு ஏன் TECHNICAL ANALYZING என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும், முக்கியமான கேள்விகள் தான், அது ஏன் என்று பார்ப்போம்

1- விலைகளில் ஏற்ற இறக்கங்களை முடிவு செய்வது FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றாலும் அந்த விலை ஏற்ற இரக்கங்களின் பாதைகளை முடிவு செய்வதற்கு ஒரு சில தீர்க்கமான வழிகள் தேவைப்பட்டது

2- அந்த வழிகள் கீழ்கண்டவைகளை கண்டிப்பாக தர வேண்டும்

அதாவது

பங்கு சந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பொருளும் ஏறுவதானாலும் சரி இறங்குவதனாலும் சரி அதை அந்த வழிகள் (TECHNICAL ANALYZING) தெரிந்து வர்த்தகம் செய்பவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்,

3- ஒரு பங்கு உயரும்போது எந்த புள்ளியை இலக்காக கொண்டு நகரும் என்று மிகச்சரியாக சொல்ல வேண்டும்,

4- உயரும் போது ஒரு வேளை ஏதாவது சூழ்நிலை அல்லது காரணங்களால் அந்த பங்கு கீழே வந்தால், எந்த புள்ளிகள் வரை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த TREND தாக்குப்பிடிக்கும் அதாவது அந்த பங்கின் S/L என்ன என்பதை எளிதாக சொல்லும் வழியாக இருக்க வேண்டும்,

5- பொதுவாக அந்த பங்கின் அசைவுகளை முழுவதுமாக சொல்ல வேண்டும், அவ்வாறு சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அதன் FUNDAMENTAL விசயங்களின் வெளிப்பாடாகவும், இனி வரும் காலங்களில் இந்த பங்கின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் சிறந்த வழியாக இருக்க வேண்டும்

6- FUNDAMENTAL ஆக ஒரு பங்கில் ஏதும் முக்கியமான விஷயங்கள் நடந்து அதனால் அந்த பங்கின் விலையில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயர்வு ஏற்ப்படும் என்ற சூழ்நிலை இருந்தால் அதை முன் கூட்டியே அந்த வழிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் முறையில் இருக்க வேண்டும்

7- பொதுவாக இன்னும் சொல்ல வேண்டுமானால் வெறும் அந்த வழிகளின் மூலம் மட்டுமே ஒரு பங்கின் ஆதி அந்தங்களை சொல்லும் ஒரு வழி முறையாக இருக்க வேண்டும்

இது போன்ற விசயங்களை நாம் முன்னர் பார்த்த FUNDAMENTAL கூறுகளை வைத்து கணிக்க முடியாது இல்லையா, ஆகவே தான் அதற்கும் மேலாக இன்னும் சரியாக சில விஷயங்கள் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்பட்டது,

மேலும் பங்கு சந்தைகளில் அன்று முதல் இன்று வரை பங்குகள் எல்லாம் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மேலும் கீழும் பங்குகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும் (அப்படி நகர்ந்தால் தானே அது பங்கு சந்தை), இப்படி தினமும் நொடிக்கு நொடி நகர வேண்டுமானால் அதற்க்கு என்று ஒரு வழிமுறை தேவைப்படும் இல்லையா,

அதாவது விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பேரூர்ந்து சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்புகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்படி கிளம்பும் போது நேரடியாக சென்னையிலிருந்து பறந்து அடுத்த நொடியில் திருச்சியில் சேர முடியாது இல்லையா,

முதலில் திருச்சி சென்றடைய தேவையான அளவிற்கு பெட்ரோல் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும் வண்டியை பத்திரமாக ஓட்டும் ஓட்டுனரை நியமிக்க வேண்டும், பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் என்று முடிவு செய்து அதை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுத்த வேண்டும், தேவையான பயணிகளை ஏற்றிக் கொள்ளவேண்டும், இடை இடையே இறங்குபவர்களையும் ஏற்றிக் கொள்ளவேண்டும் அவர்களுக்கான பயண சீட்டுகளை வழங்க வேண்டும், பிறகு மெல்ல தாம்பரம் வந்து அதற்கான சாலையை பிடித்து வருசயாக ஒவ்வொரு ஊராக கடந்து பிறகு திருச்சியை அடையவேண்டும் இப்படி தானே வந்து சேர முடியும் ,

அதுமாதிரி தான் TECHNICAL ANALYZING கும் அதாவது திருச்சிக்கு செல்லவேண்டும் என்பது FUNDAMENTAL விஷயமாகும் அதாவது ஒரு குறிப்பிட்ட ORDER கிடைப்பதின் மூலம் ஒரு நிறுவனத்திற்கு 1000 கோடி லாபம் கிடைக்கும் என்று இருப்பது FUNDAMENTAL விஷயம் அதே நேரம் இந்த லாபத்தினால் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கும் அதன் விலையில் இருந்து 60 ரூபாய் உயர வேண்டும் என்ற நிலை உருவாகும், அப்படி உருவாகும் போது, அடுத்த நொடியே அந்த பங்கின் விலையில் 60 ரூபாயை உயர்த்திக்காட்ட முடியாது இல்லையா,

அப்படி உயர்த்திக்காட்டுவது என்பது BUS ஐ சென்னையிலிருந்து அடுத்த நொடி திருச்சியில் இறக்குவதற்கு சமம் அப்படி செய்ய முடியாது இல்லையா, மேலும் நாம் முன்னர் சொன்ன முறையில் தானே BUS ஐ திருச்சிக்கு ஒட்டி வர முடியும், அவ்வாறு பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் இருந்து எப்படி அடுத்த விலைக்கு கொண்டு வருவது என்பதினை TECHNICAL ANALYZING உதவி கொண்டு தான் செய்ய முடியும் அதாவது முதலில் எவளவு தூரம் அந்த பங்கின் விலையை ஏற்ற வேண்டும் பிறகு எவளவு தூரம் இறக்கவேண்டும் மறுபடியும் எப்பொழுது உயர்த்த வேண்டும் இப்படி எல்லாம் முடிவு செய்வதற்கு TECHNICAL ANALYZING பயன்படுகிறது,

சரி TECHNICAL ANALYZING ஏன் பங்கு சந்தைகளில் தேவைப்படுகிறது என்று உங்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன், அடுத்து TECHNICAL ANALYZING எப்படி செயல் படுகிறது. எப்படி எல்லாம் நாம் இதனை பயன்படுத்துவது என்பதினைப்பற்றி அடுத்த வாரம் பார்போம்

part -2

கடந்த வாரம் பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம் அந்த குறிப்பிட்ட பங்குகளின் FUNDAMENTAL விசயங்களில் ஏற்ப்படும் மாற்றங்களே என்பதை பற்றி பார்த்தோம்.

மேலும் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்கள் ஒரு குறிப்பிட்ட வழிகளை (FORMULAS) பின்பற்றியே நகர்வதாகவும் அந்த வழி முறையானது சில முக்கியமான விசயங்களை கண்டிப்பாக அதை பயன்படுத்துவோருக்கு தர வேண்டும் என்றும் அந்த முக்கியமான விஷயங்கள் எவை எவை என்பதினை பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் அந்த வழிகள் எப்படி தோன்றியது என்று பார்ப்போம்…

TECHNICAL ANALYSING என்பது சந்தையில் வர்த்தகமாகும் பொருளுக்கு சம்பந்தமில்லாத தனியான ஒரு வாய்ப்பாடு போன்றதில்லை, அது முழுக்க முழுக்க சந்தையில் வர்த்தகமாகும் பொருள்களுடன் உடலும் உயிருமாக பின்னிப்பிணைந்த சந்தையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற நகர்வுகளே ஆகும், அந்த விஷயத்தைப்பற்றி பார்க்கும் முன் வேறு சில விசயங்களை நாம் தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது, அதாவது, இந்த TECHNICAL ANALYSING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW என்ற அதி முக்கியமானவரின் சில கருத்துகளை நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது,

அதற்கு முன் CHARLES DOW அவர்களை பற்றி ஒரு சில வரிகளையாவது இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும், கிபி சுமார் 1880 இந்த கால கட்டங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்களை சரியான முறையில் கணிக்க முடியாமல் முதலீடு செய்து தடுமாறிக்கொண்டிருந்த காலம், அந்த கால கட்டத்தில் அதாவது சுமார் 1884 என்ற ஆண்டுவாக்கில் திரு CHARLES DOW அவர்கள் சில குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை தொகுத்து அந்த பங்குகளின் நகர்வுகளை வைத்து அந்த துறைக்கென தனியாக ஒரு குறிஈட்டை உருவாக்கினார் ( Industrial Average),

அவர் (CHARLES DOW) இந்த பங்கு சந்தை உலகத்திற்கு இது போன்ற மிகப்பெரிய பயனுள்ள அநேக செயல்களை கொடுத்து சென்றுள்ளார், மேலும் முக்கியமாக அவர் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்காக கொடுத்த விசயங்களை இன்று நாம் DOW THEORY என்ற பெயரில் பயன்படுத்துகிறோம், இந்த விசயங்களை வைத்து ஒரு பங்கில் எப்பொழுது ENTRY ஆகலாம் எப்பொழுது PROFIT BOOKING செய்யலாம் என்பன போன்ற விசயங்களை எளிதாக முடிவு செய்ய பயனுள்ளதாக இருந்து வருகிறது, மேலும் இந்த TECHNICAL ANALYSING கிற்கென்று முக்கியமான சில விதிமுறைகளை நமக்கு ஆராய்ச்சி செய்து கொடுத்துள்ளார், அந்த முக்கியமான விதிமுறைகளில் ஒரு சிலவற்றை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்….

PRINCIPLES OF TECHNICAL ANALYZING - BY CHARLES DOW

1-HISTORY REPETS IT SELF

2-AVERAGES ARE DISCOUNTS EVERY THING

(MARKETS ARE ALWAYS RIGHT)

3-PRIMARY TREND CAN NOT BE MANIPULATED

திரு CHARLES DOW அவர்கள் கொடுத்த முக்கியமான இந்த மூன்று விசயங்களை வைத்து சந்தையின் போக்குகளை நாம் TECHNICAL ANALYZING துணை கொண்டு எப்படி கணிக்க வேண்டும் என்பதினை நாம் அறிந்து கொள்ளலாம், இந்த விசயங்களை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்…

முதல் விதி:-

HISTORY REPEATS IT SELF

அதாவது பங்கு சந்தையை பொறுத்த வரை சந்தையில் முன்னர் நடந்த விஷயங்கள் தான் (உயர்வுகளும், வீழ்ச்சிகளும்) மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து வரும், அனால் வரும் முறைகளும், வழிகளும் வேண்டுமானால் மாறி இருக்கலாம், இதை இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம், அதாவது மனிதன் இந்த உலகத்தில் தோன்றி ஓரளவு ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கியது முதல் போர் என்பது இருந்து வருவது நாம் அறிந்ததே, ஆனால் நாளாக நாளாக மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கற்களில் இருந்து இன்று அணு ஆயுதம் வரை மாறி வருவது நாம் அறிந்ததே, இன்னும் நாளாக நாளாக ஆயுதங்கள் மாறும் ஆனால் போர் என்ற ஒன்று மாறுவதில்லை,

அதாவது ஆயுதங்கள் மாறினாலும், காரண காரியங்கள் மாறினாலும் இருவருக்கோ அல்லது இரு நாட்டிற்கோ நடக்கும் போர் என்றும் மாறாது, இதே போல் தான் சந்தையில் உயர்வுகளும், தாழ்வுகளும் என்றுமே மாறாது அனால் எதனால் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும், எவளவு தூரம் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும் என்ற காரண காரியங்கள் வேண்டுமானால் மாறி மாறி வரலாம், அனால் உயர்வு தாழ்வுகள் என்றுமே பங்கு சந்தையில் உடலும் உயிருமாக இருந்து கொண்டே இருக்கும், இதைத்தான் "HISTORY REPEATS IT SELF" என்று திரு CHARLES DOW அவர்கள் சொல்லி இருந்தார், சரி அடுத்த விதியை பார்ப்போம்

இரண்டாம் விதி:-

AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)

இந்த விதி மிக முக்கியமானது, சந்தை எப்பொழுதெல்லாம் மிகப்பெரிய சரிவுகளை சந்திக்கின்றதோ அப்பொழுதெல்லாம் இந்த கேள்வி நம் மனதில் எழும், ஏன் பங்கு சந்தை இவளவு தூரம் வீழ்ச்சியடைய வேண்டும்? இதற்கான காரணம் என்ன? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையை 1884 ஆம் ஆண்டு வாக்கிலே திரு CHARLES DOW அவர்கள் தனது ஆராய்ச்சியின் மூலம் இந்த பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்காக விட்டுச்சென்றுள்ளார், அதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,

அதாவது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைகளை நாம் அந்த பங்கின் இன்றைய சொத்து மதிப்புடன் (அசையும் மற்றும் அசையா சொத்துகளின் படி (இவ்விரண்டில் அந்த நிறுவனத்தின் அனைத்து விசயங்களும் அடங்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்)) ஒப்பிட்டுப்பார்த்தால் பங்குகளின் விலைகளில் அநேக ஒற்றுமயின்மையை நீங்கள் காணலாம்,

அதாவது உதாரணமாக ஒரு XYZ என்ற நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 200 கோடி என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகள் 2 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் அந்த XYZ என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் உண்மையான விலை சரியாக 100 ரூபாய் என்று இருக்க வேண்டும், ஆனால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை பங்கு சந்தைகளில் 100 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறதா என்று நீங்கள் பார்த்தல் அந்த விலையில் வர்த்தகம் ஆகாது அதற்க்கு பதில் ரூ 150/- என்ற விலையிலோ, அல்லது ரூ 200/- என்ற விலையிலோ கூட வர்த்தகம் ஆகலாம்,

ஏன் அப்படி சரியான விலையில் வர்த்தக ஆகாமல் குத்து மதிப்பாக இல்லாத விலையில் வர்த்தகம் ஆகிறதே, அப்படியானால் பங்கு சந்தை என்றால் ஏமாற்று வேலையா, இங்கு வியாபாரம் செய்வது சூதாட்டம் என்று சிலர் சொல்கின்றனரே அது உண்மையா, ஏகப்பட்ட பணத்தினை கைகளில் வைத்துள்ளவர்கள் முடிவு செய்து நிர்ணயிப்பது தான் பங்கு சந்தையா, இப்படி எல்லாம் உங்கள் மனதில் கேள்விகள் எழுகிறதா, இதற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றதா, அப்படி எனில் சற்று பொறுமையாக அடுத்த வார பதிவு வரை காத்து இருங்கள்

part-3

கடந்த வார பதிவில் TECHNICAL ANALYZING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW அவர்கள் பற்றி கொஞ்சம் பார்த்தோம், மேலும் அவர் TECHNICAL ANALYZING ஐ பின் தொடருபவர்கள் கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டிய PRINCIPLES OF TECHNICAL ANALYZING இல் உள்ள மூன்று முக்கியமான தகவல்களில் இரண்டைப் பற்றி சற்று விரிவாக பார்த்தோம் மீதியை இப்பொழுது பார்ப்போம்,

கடந்த வாரம் இரண்டாவது விதியான “AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்ற தலைப்பின் கீழ் சந்தை எதனால் விழுகிறது என்று பார்த்தோம் மேலும் இது போன்று நடப்பதினால் சந்தையின் மீதே சந்தேகம் படும்படியான என்னம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயற்க்கை தான், இருந்தாலும் அதற்கும் காரணம் உண்டு, அதாவது இது போன்ற உயர்வுகள் ஏற்படுவதற்கு காரணமாக அநேக விசயங்களை இங்கு பட்டியலிட முடியும், உதாரணமாக ஒரு சில விசயங்களை தருகிறேன்,

இது போன்று உயர்வதற்கு நமது ஆசையும் ஒரு காரணமே, அதாவது ஏதாவது ஒரு பொருளுக்கு DEMAND ஏற்படும் சூழ்நிலை வந்தால் எந்த ஒரு வியாபாரியும் எப்பாடுபட்டாவது அந்த பொருளை இப்பொழுது வாங்கி விட வேண்டும் பிறகு நல்ல லாபம் வரும் என்ற எதிர்கால யோசனையோடு வாங்க முனைவோம் இல்லையா அது போன்றுதான், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம்,

உங்கள் ஊரின் பேரூர்ந்து நிலையம் தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு வசதியான இடத்திற்கு மாற்ற நகராச்சியில் ஒரு யோசனை உள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள், (இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு (அரசாங்கம் உட்பட), நடை முறைக்கும் வரலாம் அதே நேரம் பேச்சளவிலே இருந்து நடக்காமலும் போகலாம் என்பதையும் மனதில் ஒரு பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்),

உங்களுக்கு நகராச்சியில் இந்த விஷயத்தை பற்றி பேசும் நபர்களில் ஒருவரோடு நல்ல தொடர்பு உள்ளது என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அந்த நண்பர் உங்களிடம் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்கிறார் என்றும் வைத்துக்கொள்ளுங்கள், மேலும் நீங்கள் சாதாரண ஒரு பிரஜை என்று இருந்தால் அந்த விசயத்திற்கு உங்களின் வெளிப்பாடு இப்படி இருக்கலாம் அதாவது அந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அப்படியா வந்தால் நல்லது தான் இப்போ இருக்குற BUS STAND ரொம்ப இடைஞ்சலா இருக்கு புதிதாக வந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று சொல்லி விட்டு சென்று விடுவீர்கள்,

நீங்கள் சாதாரண நபராக இல்லாமல் ஒரு புத்திசாலியான வியாபாரியாக இருந்தால் எப்படி யோசிப்பீர்கள், இப்படித்தான் இருக்கும், ஆக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் BUS STAND வரப்போகிறது! இப்போ அந்த இடம் யாரும் சீண்டுவார் இல்லாமல் உள்ளது, BUS STAND வந்து விட்டால் அந்த இடங்களின் மதிப்பு எங்கோ சென்று விடும், ஆக இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டால் பின்னால் நல்ல காசு பார்க்கலாமே என்று எண்ணி உங்க்ளிடம் இருப்பதையும், மீதிக்கு கடனை உடனை வாங்கியாவது அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்க யோசிப்பீர்கள், மேலும் வாங்கியும் விடுவீர்கள், பிறகு இந்த விஷயம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்து ஒவ்வொருவருக்காக தெரிய ஆரம்பிக்கும்,

அப்படி வரும் போது உங்களைப்போல் எத்தினை புத்திசாலி வியாபாரிகள் இருப்பார்கள் ஆக அனைவரும் முண்டியடித்து வாங்க ஆரம்பிப்பார்கள் ஆக விலை ஜரூராக ஏற ஆரம்பிக்கும் முதலிலேயே நீங்கள் வாங்கி விட்டதால் இப்பொழுது உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும், அதே நேரம் அந்த இடத்தின் மதிப்பு உயர உயர தரகர்கள் என்ன செய்வார்கள் நில உரிமையாளர்களிடம் பேசி நல்ல விலைக்கு விற்று தருவதாக மேலும் விலையை ஏற்றி விடுவார்கள், இந்த தரகர்கள் மூலம் வெளியூரில் உள்ளவர்கள் கூட என்ன ஏது என்று தெரியாமல் நிலத்தில் தானே போடுகிறோம் என்று வாங்குவார்கள் இது போன்று அனைவரும் BUS STAND வரும் என்ற கோணத்தில் எங்கேயோ உள்ள நிலத்தின் விலையை எங்கேயோ ஏற்றி விடுவார்கள்,

இதில் உண்மை என்ன வென்றால் BUS STAND வந்த பிறகு இந்த நிலத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, இருந்தாலும் முண்டியடித்து வாங்கி விடுவார்கள் (இப்பொழுது நீங்கள் வாங்கிய நிலத்தின் விலை நீங்கள் வாங்கியதை விட எங்கேயோ இருக்கும், அதே நேரம் நேற்று, அதற்க்கு முந்தய தினம் அந்த நிலங்களை வாங்கியவர்கள் உச்ச விலையில் தான் வாங்கி இருப்பார்கள் இல்லையா , சரி வாங்கி ஆகிவிட்டது, வாங்கியவர்கள் எல்லாம் எதற்காக வாங்கினார்கள் அது முக்கியம் இல்லையா அதாவது BUS STAND இந்த AREA வில் வரப்போகிறது என்ற யூகத்தினால், இப்பொழுது BUS STAND வந்தால் என்ன நடக்கும் வர வில்லை என்றால் என்ன நடக்கும் என்று பார்ப்போம் அது முக்கியம் இல்லையா,

சரி BUS STAND வந்து விட்டதாக வைத்துக்கொள்ளுங்கள், இதுவரை ஊகத்தில் இருந்த விஷயம் நடந்தே விட்டது அப்படியானால் விஷயம் வெளி வந்தவுடன் இதுவரை வாங்கியவர்கள் தங்களது விலைகளை அதிகமாக சொல்வார்கள், அதே நேரம் இன்னும் நிலம் வாங்காமல் விஷயம் வந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்தவர்கள் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு வாங்க முர்ப்படுவார்கள் விளைவு விலை கண்ணா பின்ன என்று உயரும் ஆகவே அனைவருக்கும் முண்டியடிக்கும் ஆசை அதிகமாகும்,

அதே நேரம் இந்த BUS STAND இங்கு வந்ததினால் இந்த இடத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று மெல்ல சில அதி புத்திசாலிகளின் மனதில் ஒரு கேள்வி எழும், அவர்கள் அந்த விஷயம், இந்த விஷயம் என்று எல்லாத்தையும் கணக்கிட்டு இது தான் அதன் உண்மையான விலையாக இருக்கும் என்று ஒரு அனுமானத்திற்கு வருவார்கள் அப்படி வந்த பின் தற்பொழுது விற்றுக்கொண்டு இருக்கும் விலையையும் இவர்கள் கணக்கிட்ட விலையும் ஒப்பிட்டு பார்க்கும் போது விலை மிக அதிகமாக இருந்தால் மெல்ல யாருக்கும் தெரியாமல் விற்க ஆரம்பிப்பார்கள்,

ஆக முன்பை போலவே இந்த விசயமும் மெல்ல அனைவருக்கும் பரவ ஆரம்பிக்கும் ஆக அனைவருக்கும் தெரிந்தால் என்ன ஆகும் வந்த வரைக்கும் லாபம் என்று அனைவரும் விற்க ஆரம்பிப்பார்கள், அப்படியானால் உச்ச விலையில் இருந்த பொழுது வாங்கியவர்களின் நிலை என்ன ஆகும், நீங்களே யோசித்து பாருங்கள் இப்படித்தான் பங்கு சந்தையில் உச்சத்தில் இருக்கும் போது வாங்கியவர்களின் நிலைமை மோசமாகி விடுகிறது, சரி நாம் மேலே பார்ப்போம்,

முன்னால் நிலத்தின் விலையை கணக்கிட்டு இது தான் சரியான விலை என்று முடிவு செய்தவர்கள், அந்த குறிப்பிட்ட விலைக்கு கீழே அந்த நிலத்தின் விலை வந்தவுடன் மறுபடியும் விற்றதை மீண்டும் லாபத்துடன் வாங்க ஆரம்பிப்பார்கள் மறுபடியும் உயரும் நாளாக நாளாக அந்த நிலத்தின் மதிப்பு அந்த இடத்தில் உருவாகும் வியாபார வாய்ப்புகள் தேவைகள் இவற்றை பொறுத்து உயரவோ அல்லது வீழ்ச்சியடயவோ செய்யும், எப்படி பார்த்தாலும் BUS STAND உள்ள இடம் வியாபார வாய்ப்புக்களினாலும், தேவைகளினாலும் உயரத்தான் வாய்ப்புகள் உள்ளதால் முன்பு உச்சத்தில் வாங்கியவர்கள் பொறுத்து இருந்து லாபத்துடன் கொடுக்கலாம் அல்லது பயந்து பதட்டப்பட்டு முன்பே கொடுத்து நட்டம் ஆகியும் இருக்கலாம், அது அவர்களின் மன நிலையை பொறுத்தது,

சரி இப்பொழுது அங்கு BUS STAND வர வில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது என்ன நடக்கும்! வந்த வரைக்கும் போதும் என்று அடித்து பிடித்து விற்க ஆரம்பிப்பார்கள் முதலில் சில பேர் விவரம் தெரியாமல் வாங்கி மட்டிக்கொள்ளவும் செய்வார்கள்,( இங்கு BUS STAND வரவில்லை என்ற விவரம் தெரியாமல் தற்பொழுது இறங்கி வருகிறதே வாங்கி விடலாம் என்று புதிதாக வாங்கி மாட்டிக்கொள்ளவும் செய்வார்கள்(இப்படி தான் அதிகமானோர் குறிப்பிட்ட பங்குகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் "ஆகா நாம் எவளவு முயன்றும் வாங்க முடியாமல் விலை ஏறிய பங்கு இப்பொழுது இறங்கி உள்ளதே என்ன வேகமாக ஏறியது இந்த பங்கு அது மாதிரி மறுபடியும் ஏறினாலும் ஏறிவிடும் நாம் வாழ்க்கையில தவறு செய்யக்கூடாது வாங்கிப்போட்டு விட வேண்டும் என்று எதிர்பார்த்த விஷயம் நடக்காததினால் இறங்கிக்கொண்டு இருக்கும் பங்கை வாங்கி (ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள்) மாட்டிக்கொள்வார்கள்")

பிறகு விஷயம் அனைவருக்கும் தெரிந்த பின் விற்க ஆரம்பிப்பார்கள் அப்பொழுது என்ன நடக்கும் முன்னால் விற்ற விலையை விட கீழே கூட வந்து விடும் அப்பொழுது உச்சத்தில் வாங்கியவர்களின் நிலை என்ன நீங்களே முடிவு செய்யுங்கள், சரி இந்த மிக நீண்ட கதையில் பங்கு சந்தையை பொருத்தி பாருங்கள் தெளிவாக உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரியும், இங்கு நடந்த உயர்வு தாழ்வுகள் எல்லாம் ஒரு விஷயம் நடந்தால் (BUS STAND வரப்போகிறது) என்ன ஆகும் என்ற யூகத்தின் அடிப்படையில் நடந்தது, இதில் விவரம் தெளிவாக தெரிந்து வாங்கியவர்கள் அநேகம் பேர் அதே போல் விவரம் இன்னதென்றே தெரியாமல் வாங்கி மாட்டியவர்கள் அநேகம் பேர்,

இப்படித்தான் சந்தையிலும் நடக்கிறது இப்படி நிலத்தின் விலை தேவையில்லாமல் உயர்ந்ததுக்கும் மறுபடியும் விஷயம் நடக்க வில்லை என்றதால் வீழ்ந்ததுக்கும் யார் காரணம்? நம்முடைய லாபம் பார்க்கும் ஆசை தானே, இதே தான் பங்கு சந்தையில் நடக்கிறது, நான் சொன்னது ஒரு உதாரணம் தான் இது போல அநேக விஷயங்கள் உள்ளது, அனைத்து விசயங்களும் சில விளைவுகளை தரும் அந்த விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம் கெட்டவயாகவும் இருக்கலாம், எது எப்படியோ நாம் பங்கு கொண்டால் அந்த விளைவுகளை நாம் அனுபவித்து தான் ஆகவேண்டும் இல்லையா,

சரி அதை விடுங்கள் இப்பொழுது நிலத்தின் விலை உயர்ந்ததுக்கு நம்முடைய லாபம் பார்க்கும் அதிக ஆசை காரணம், அதே நேரம் இந்த இடத்தின் உண்மையான கணக்கீட்டு விலை, தற்பொழுது விற்கும் விலையை விட குறைவு என்ற அளவு தெரிந்த பின் சந்தை தானாக கீழே வந்ததிற்கு நமது பயம் காரணம், இந்த விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை என்றதும் பழைய விலைக்கும் கீழே வந்ததிற்கும் நமது பயம் காரணம், ஆக சந்தை தன்னை எப்பொழுதும் சரியாகவே வைத்துக்கொள்ளும் அதே நேரம் தவறுதலாக ஏறி விட்டாலும் மறுபடியும் கீழே வந்து விடும் என்பது இந்த உதாரணத்தில் இருந்து உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருக்கும் இதை தான் DOW அவர்கள் “AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்று இரண்டாவது விதியாக சொல்லி இருந்தார் சரியா

மூன்றாவது விதி

PRIMARY TREND CAN NOT BE MANIPULATED

இந்த மூன்றாம் விதி முழுக்க முழுக்க TECHNICAL ANALYZING ஐ சார்ந்தது அதாவது ஒரு பங்கை ஆராய்வதற்கு அந்த பங்கின் விலைகளை வைத்து உருவாக்கப்பட்ட வரைபடத்தை தான் பயன்படுத்துவோம், அப்படி பயன்படுத்தும் போது அங்கு உருவாகும் உருவ அமைப்புகளில் இதுவரைக்கும் ஏற்ப்பட்ட LOW புள்ளிகளில் முக்கியமான இரண்டு புள்ளிகளை இணைத்து வரையப்படும் கோட்டினை இனி வரும் தினங்களில் அந்த பங்கில் ஏற்ப்படும் எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் கடந்து கீழே செல்லாது என்பதினை தான் சொல்லி இருக்கின்றார், (இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் அது இப்பொழுது சொன்னால் சரியாக இருக்காது இனி வரும் காலங்களில் வரை படங்களுடன் தேவையான நேரத்தில் இதை சொன்னால் தான் நன்றாக புரியும் அப்பொழுது சொல்கிறேன், சரி அடுத்த பதிவில் சிந்திப்போம்

part-4

கடந்த மூன்று வாரங்களாக TECHNICAL ANALYZINGகிற்கு தேவையான சில அடிப்படையான விசயங்களை பார்த்து வந்தோம், இப்பொழுது மேலும் சில விஷயங்களை பார்த்துவிடுவோம்,

இதுவரை நாம் பார்த்துவந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானதும் TECHNICAL ANALYZING பயில்வதற்கு அடிப்படையான விசயங்களும் ஆகும், இந்த விசயங்களை எப்பொழுதும் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள், அடுத்து சந்தையில் நடக்கும் சில முக்கியமான விஷயங்களைப்பற்றி பார்ப்போம், இப்பொழுது சொல்லும் இந்த விஷயங்கள் தான் TECHNICAL ANALYZE செய்வதற்கு நாம் பயன்படுத்தப்போகும் வரைபட உருவ அமைப்புகள் தோன்றுவதற்கு ஆதாரமான விஷயங்கள், அதாவது பங்கு சந்தையில வர்த்தகம் தினமும் காலை மணி 9.55 க்கு தொடங்கி மாலை 3.30 க்கு முடிவடையும்,

இப்படி நடக்கும் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்தும் காலையில் தொடங்கி (OPEN), மாலை வரை வர்த்தகமாகி இறுதியில் மாலை 3.30 அளவில் முடிவடையும் (CLOSE), இந்த இடைப்பட்ட நேரத்தில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளும் மேலும் (HIGH), கீழும் (LOW) நகர்ந்து இறுதியில் ஒரு குறிபிட்ட விலையில் முடிவடையும் (CLOSE), இப்படிப்பட்ட இந்த நகர்வுகளில் ஏற்ப்படும் மிக முக்கியமான புள்ளிகளான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே நாம் TECHNICAL வரை படங்களை உருவாக்குகிறோம், உருவாக்குகிறோம் என்றால் நாம் உக்கார்ந்து வரைவதில்லை அதற்கென SOFTWARE உள்ளது,

ஆகவே இந்த முக்கியமான புள்ளிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்குவதும் முக்கியமாகிறது ஆகவே அதனைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம், இப்பொழுது சந்தையில் தினமும் ஒவ்வொரு பங்கிலும் உருவாகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள் அந்த பங்குகளின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்கு எப்படி பயன்படுகிறது என்பதினை பார்க்கலாம் அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம் அப்பொழுதுதான் TECHNICAL ANALYZING ஐ நாம் எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற கோணம் வரும்

அதாவது எட்டு சுரக்காய் கறிக்கு உதாவது என்று ஒரு பழமொழி இருக்கிறது இல்லையா, அது போல தான் TECHNICAL RULES ஐ அப்படியே பயபடுத்தினால் இங்கு உதவாது ஆகவே இதை வேறு ஒரு கோணத்தில் தான் அணுக வேண்டும், ஆகவே இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றிய விளக்கங்கள் மூலம் உங்களது கற்பனை கோணங்கள் மாறும் அதாவது ஒரு பொருளை பார்க்கும் விதம் மாறலாம்,

அதாவது ரோஜா செடியில் உள்ள முட்களை பார்த்து அழகான பூவின்

செடியில் கொடூரமாய் முட்கள் என்று நினைக்காமல், முக்கியமான பொருள்களுக்கு பாதுகாப்பு மிக அவசியம் என்பதை இயற்க்கை நமக்கு எப்படி இந்த ரோஜா செடியில் இருக்கும் முட்கள் மூலம் புரியவைத்துள்ளது என்று பாசிட்டிவாக எண்ணிக்கொண்டு அதிலிருந்து நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை பயன்படுத்துவது போல உங்கள் கோணம் மாறவேண்டும் அதன் பொருட்டே இந்த விளக்கம்,

கவனமாக படியுங்கள், புரியவில்லை என்றாலும் மறுபடியும் மறுபடியும் விடாதீர்கள் நானா நீனா என்று பார்த்து விடுங்கள் ஏனெனில் புரிந்து கொண்டு செல்வது முக்கியம் இல்லையேல் இந்த முயற்ச்சியே தோல்வி அடையும் ஆகவே புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதே நல்லது, சரி இப்பொழுது ஒவ்வொன்றாக பார்ப்போம், அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE மூலம் அந்த பங்குகள் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை பார்க்கும் ஒரு முயற்ச்சியே, முதல் நாள் மாலை 3.30 க்கு முடிவடையும் ஒரு பங்கு அடுத்த நாள் சரியாக காலை 9.30 க்கு தொடங்கும்,

அப்படி தொடங்கும் போது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளையும் வர்த்தகத்திற்காக திறந்து விடுவார்கள், (அந்த திறந்து விடும் நேரம் தான் 9.30 அப்படி வர்த்தகத்திற்காக திறந்துவிடப்படும் அனைத்து பங்குகளிலும் 9.30 மணியிலிருந்தே பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய கணக்குகள் வைத்து இருப்பவர்கள் அனைவரும்

வர்த்தகம் செய்யலாம்),

அப்படி சந்தை வர்த்தகத்திற்காக திறந்தவுடன் முதலில் வர்த்தகமாகும் விலையே OPEN PRICE (துவக்க விலை) ஆகும், இந்த விலையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம்,

எப்பொழுதும் நேற்று முடிவடைந்த விலையிலே மறுநாள் எந்தப்பங்கும் வர்த்தகத்தை துவங்குவதில்லை, இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது, அதாவது முந்தய பதிவில் நாம் பார்த்த BUS STAND உதாரணத்தில் ஒரு பொருளுக்கு இருக்கும் DEMAND ஐ பொறுத்து தான் அதன் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று படித்து இருப்பீர்கள் இல்லையா, அந்த விஷயம் தான் பங்குசந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பங்கினுடைய OPEN விலையையும் முடிவு செய்யும் மேலும் ஒரு பங்கு இன்று இந்த விலையில் தான் தொடங்கும் என்று கண்டுபிடிக்க எந்த விதமான TECHNICAL கூறுகளும் இங்கு (எனக்கு தெரிந்து) இல்லை,

மேலும் யார் முதலில் வர்த்தகத்தை தொடங்கி அந்த வர்த்தகம் நடந்து முடிகிறதோ அந்த விலைதான் அன்றைய தினத்தின் துவக்க விலை, இதை யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம் (அதாவது நீங்கள் நிர்ணயிக்கும் விலை வர்த்தகம் ஆகும் அனைத்து தகுதிகளையும் பெற்று இருந்தால் OPEN விலையை நிர்ணயித்த பாக்கியம் உங்களை சேரும்), ஆகவே இந்த OPEN விலையை எந்த TECHNICAL கூறுகளாலும் நிர்ணயிக்கமுடியாது என்ற சூழ்நிலையில் தானாக வரும் (யாராவது ஒரு TRADER மூலம்) இந்த OPEN விலை அனைத்து பங்குகளின் அன்றைய தினத்தின் INITIAL என்று சொல்லலாம் அதாவது கடவுளின் விலை என்று கூட வைத்துக்கொள்ளலாம்

சில பங்குகளில் அந்த பங்கை OPERATE செய்பவர்கள் அதன் அனைத்து விலைகளையும் முடிவு செய்வார்கள், ஆனால் நாம் அனைத்து பங்குகளையும் பற்றி பொதுவாக பேசிக்கொண்டிருப்பதால் அதை பற்றி தவிர்த்துவிடுவோம், சரி இந்த OPEN என்ற விலையின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் அதாவது மாற்றுக்கோணம் என்னவென்றால்

OPEN PRICE

OPEN PRICE என்பது வெறும் ஒரு பங்கின் தொடக்க விலை மட்டும் இல்லை அன்றைய தினத்தின் அந்த பங்கின் வர்த்தக பாய்ச்சலை நிர்ணயிக்கும் முதல் புள்ளி, அதாவது அந்த பங்கில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள் அன்றைய தினத்தில் அந்த பங்கில் காட்டும் ஆர்வம் என்ன என்பதினையும், அந்த பங்கிற்கு உள்ள DEMAND என்ன என்பதினையும் சுட்டிக்காட்டும் முக்கியமான புள்ளியாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அந்த வகையில் இந்த புள்ளி முக்கியமானது,

சில நேரங்களில் சில பங்குகளில் OPEN மற்றும் HIGH என்ற இரண்டு நிலையும் ஒரே புள்ளியாக இருக்கும் அப்படி இருக்கும் போது தொடர்ந்து முன்னேற முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் தடையை சந்தித்து கீழே வரும் என்று எடுத்துக்கொள்ளலாம், அதே போல் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகளையும் ஒன்றாக பெற்று இருந்தால் தொடர்ந்து கீழே இறங்க முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் SUPPORT களை பெற்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம், ஆக வெறும் OPEN PRICE என்று எடுத்துக்கொள்ளாமல் இந்த புள்ளியை வைத்து அந்த பங்கின் நகர்வுகள் எதை நோக்கி இருக்கும் என்றும் நாம் அனுபவம் வர வர எளிதாக தெரிந்து கொள்ளலாம்

http://www.4tamilmedia.com

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

part- 5

கடந்த வாரம் OPEN விலையின் விளக்கம் பற்றி பார்த்தோம், அதில் OPEN மற்றும் HIGH, மேலும் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகள் பற்றி சொல்லி இருந்தேன், இதில் OPEN மற்றும் HIGH என்ற நிலையை ஒரே புள்ளியாக கொண்டு ஒரு பங்கு தனது வர்த்தகத்தை தொடங்கி தொடர்ந்து கீழே வந்தால்

அந்த குறிப்பிட்ட HIGH புள்ளியை கடக்க முடியாமல் தினறுவதாகவும், அந்த குறிப்பிட்ட புள்ளியில் முக்கியமான தடைகள் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்,மேலும் இந்த OPEN மற்றும் HIGH என்ற முக்கியமான புள்ளியை அந்த பங்கு மறுபடியும் மேலே கடந்தால் நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது தடையாக இருந்த புள்ளியில் தடையை பெற்று தொடர்ந்து மேலே உயரமுடியாமல் இது வரை தடுமாறி வந்த அந்த பங்கு இப்பொழுது அந்த தடையை உடைத்து முன்னேறுகிறது.

market-education.jpg

அப்படி என்றால் என்ன அர்த்தம்? அந்த பங்கின். சக்தி அதிகமாகி விட்டது என்றாகிவிடும், இதை நாம் உணர்ந்து கொண்டு அதற்க்கு தகுந்தார்ப்போல் நாம் நமது வர்த்தகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும், இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இதுவரைக்கும் நம்மை எளிதாக தோற்கடித்த நமது எதிரியை நாம் வென்றுவிட்டோம் என்று அர்த்தம் அதேபோல் இதுவரை இருந்து வந்த சக்தியைவிட அதிக சக்தியை பெற்று அடுத்து மேலே உள்ள புள்ளிகளை நோக்கி அந்த பங்கு செல்லப்போகிறது என்று அர்த்தம்,

இதுபோலவே OPEN மற்றும் LOW என்ற நிலைகளை ஒரே புள்ளியாக பெற்ற பங்குகள் அந்த குறிப்பிட்ட புள்ளியை கீழே கடந்தால் மேலும் சக்தியை இழந்து இன்னும் இன்னும் கீழே செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கொள்ளலாம், இது போன்ற நிகழ்வுகளுக்கு வேறு சில விசயங்களும் துணை நிற்க வேண்டும் அவைகள் என்ன என்ன என்று நாம் TECHNICAL வகுப்பிற்குள் இன்னும் சற்று தூரம் சென்றபின் தேவையான இடத்தில் பார்ப்போம், சரி இப்பொழுது மீதமுள்ள் HIGH, LOW, CLOSE ஆகியவற்றின் விளக்கங்களை பற்றி பார்ப்போம்

HIGH என்ற புள்ளி

HIGH என்ற புள்ளியை பற்றி பொதுவாக அல்லது மேலோட்டமாக சொல்லவேண்டும் என்றால், ஒரு பங்கு அன்றைய தினத்தின் இறுதி வர்த்தக நேரம் வரை (அதாவது மணி 3.30 வரை) உயர்ந்த அல்லது தொட்ட அதிக பட்ச புள்ளியை குறிக்கும் ஒரு குறியீடு ஆகும்,

சரி இந்த குறியீடைப்பற்றி நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம், இதை ஒரு விளக்கத்துடன் பார்த்தால் இந்த HIGH புள்ளியின் முக்கியத்துவம் சற்று எளிதாக புரியும் மேலும் இந்த HIGH புள்ளி தான் நாம் TECHNICAL ANALYSING செய்வதற்கு அதிகமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தப்போகும் புள்ளியும் கூட ஆகவே இந்த புள்ளியின் முக்கியத்துவத்தை நீங்கள் எளிதாகவும் உங்கள் மனதில் ஆழமாகவும் பதிந்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் நமக்கு தேவையோ அப்பொழுதெல்லாம் அனிச்சை செயலாக நமது முன் வந்து நிற்க இந்த விளக்கம் தேவையானது தான்,

அதாவது நமக்கு அநேக எதிரிகள் உண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த எதிரிகளில் அதிக பலம் வாய்ந்த எதிரிகளும் உண்டு பலம் குன்றிய எதிரிகளும் உண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்படி இருக்கும் நேரத்தில் நாம் ஒரு பயணத்தை மேற்க்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள், ஆகவே நமது பயணத்தின் இடையே எந்த எதிரியாலும் நாம் தாக்கப்படலாம், அப்படி தாக்குதலுக்கு உட்பட்டு நாம் வருசயாக வீழ்த்திக்கொண்டு வரும் எதிரிகள் அனைவரும் நம்மை விட பலம் குன்றியவர்கள் என்ற வரிசையில் வந்து விடுவார்கள்,

அதே நேரம் எந்த எதிரியாவது நம்மை வீழ்த்தி பின்னடைய செய்தால், நாம் இங்கு தோற்றவர்கள் ஆகிவிடுவோம், சரி சிறிது நேரம் கழித்து சற்று இளைப்பாறி உணவு உட்க்கொண்டு சக்தியை ஏற்றிக்கொண்டு கொஞ்சம் ஆட்க்களையும் சேர்த்துக்கொண்டு மறுபடியும் அந்த எதிரியை வீழ்த்த செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்படியும் நாம் அந்த எதிரியிடம் தோற்றுப்போனால் அந்த எதிரி நம்மை விட அதிக பலம் வாய்ந்தவன் என்று தானே அர்த்தம், இப்பொழுது என்ன செய்வோம் ஒன்று வீர சொர்க்கம் அல்லது பின்னோக்கிய பயணம், இது தானே நடக்கும்,

இதேபோல் தான் ஒரு பங்கின் அன்றைய தினத்தின் HIGH புள்ளி என்பது அப்படிப்பட்ட பலம் வாய்ந்த எதிரி, அன்றைய தினத்தில் அந்த எதிரியை சமாளிக்க முடியாமல் அதாவது அந்த புள்ளியை கடந்து மேலே செல்ல முடியாமல் தடுமாறி துவண்டு விட்டதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆகவே அந்த புள்ளி அந்த பங்கின் முக்கியமான எதிரி, சரி இதை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இங்கே முக்கியம், அதைப்பற்றியும் பார்ப்போம்.

இங்கே அந்த HIGH புள்ளி நமக்கு எதிரி இல்லை, அந்த பங்குக்கு தான் எதிரி, ஆனால் நமது எதிரி யார் என்று நீங்கள் யோசித்தீர்களா நமது எதிரி நீங்கள் நினைப்பது போல் அந்த பங்கு தான், அதே நேரம் அந்த பங்கு நமக்கு வருமானம் செய்து கொடுக்கும் நண்பனும் கூட, ஆகவே நண்பன் மற்றும் எதிரியின் பலம் பலவீனம் நமக்கு முக்கியம், அந்த வகையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நமது நண்பன் மற்றும் எதிரியின் எதிரியான HIGH புள்ளியை தான்,

இந்த HIGH புள்ளியை அடித்து நொறுக்கி பலவீனமாக்கி அந்த பங்கு மேலே கடந்தால் என்ன அர்த்தம், அந்த பங்கிற்கு அதிகம் பலம் வந்து விட்டதாக தானே அர்த்தம், ஆகவே அந்த பங்கின் ஒவ்வொரு தினத்தின் HIGH புள்ளியும் நாம் நன்றாக பார்க்க வேண்டிய முக்கியமான விஷயமாகும் ஏனெனில் அந்த புள்ளியை அடித்து நொறுக்கி மேலே சென்றால் அடுத்த எதிரியினால் வீழ்த்தப்படும் வரை அந்த பங்கின் பயணம் தொடரும், இப்பொழுது புரிகிறதா HIGH புள்ளி என்றால் எவளவு முக்கியம் என்று,

மேலும் ஒரு முக்கியமான விஷயம் அந்த பங்கு அன்றைய வர்த்தக நேர முடிவில் அந்த HIGH புள்ளியிலோ அல்லது அந்த புள்ளியின் வெகு அருகிலோ முடிவடைந்தால் அந்த HIGH புள்ளி அன்றைய தினத்தின் அந்த பங்கின் பலம் வாய்ந்த எதிரியாக கொள்ளமுடியாது, இதை ஒரு பக்கம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், சரி இங்கு நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலம் கேளுங்கள், சந்தேகங்களுடன் தொடர்ந்தாள் குழப்பம் தான் வரும் ஆகவே உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வது நல்லது,

சரி அடுத்து LOW என்ற புள்ளியை பற்றி பார்ப்போம்

LOW என்ற புள்ளியை பற்றி மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பங்கு அன்றைய வர்த்தக தினத்தின் இறுதிவரை எந்த புள்ளி வரை கீழே சென்றது என்பதினை குறிக்கும் குறியீடு ஆகும், இதை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்,

அதாவது LOW புள்ளி என்பது அந்த பங்கின் மிக முக்கியமான நண்பன் என்று சொல்லலாம், இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் PETROL தீர்ந்து விட்ட வண்டிக்கு எந்த இடத்தில் பெட்ரோல் பங்க் தென்பட்டு பெட்ரோல் கிடைக்கின்றதோ அந்த இடம் தான் அந்த வண்டி மீண்டும் ஓடத்துவங்கும் STARTING POINT, அதுபோல தான் ஒவ்வொரு பங்குக்கும் அன்றைய தினத்தின் LOW புள்ளி STARTING POINT ஆகும், அங்கிருந்து உயர ஆரம்பித்து விடும் அப்படியானால் அந்த LOW புள்ளி எவளவு முக்கியமானது ?

பெட்ரோல் இல்லாமல் தவித்து ஒரு 10 கிலோ மீட்டர் நீங்கள் வண்டியை தள்ளிக்கொண்டு வந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள் அப்படி இருக்கும் உங்களுக்கு ஒரு இடத்தில் பெட்ரோல் கிடைத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும், அது போல தான் ஒவ்வொரு பங்குக்கும் அன்றைய தினத்தின் LOW புள்ளி, அதே நேரம் வர்த்தக நேரத்தின் முடிவில் அந்த பங்கு அந்த LOW புள்ளிகளிலோ அல்லது அந்த புள்ளியின் அருகிலோ முடிவடைந்தால், அது பெட்ரோலே இல்லாத பெட்ரோல் பங்கை கண்டு பிடித்தது போல சக்தி மிக்கதாக இருக்காது இருந்தாலும் பெட்ரோல் பங்க பெட்ரோல் பங்க தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை, அதாவது அன்றைய தினத்தின் LOW புள்ளி LOW புள்ளி தான், புரிகிறதா !

part -6

09sensex.jpg

கடந்த இரண்டு வாரங்களாக OPEN, HIGH, LOW ஆகிய முக்கியமான புள்ளிகளை பற்றி பார்த்து வந்தோம் அந்த வகையில் இன்னும் மீதம் இருப்பது CLOSE என்ற புள்ளி அதனை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

CLOSE பற்றி பொதுவாக சொல்ல வேண்டுமானால் அன்றைய தினம் மாலை மணி 3.30 அளவில் அந்த பங்கு முடிவடைந்த புள்ளியாகும், இதனை வேறு ஒரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால் அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு என்ன விதமான உயர்வுகளையும், என்ன விதமான வீழ்ச்சிகளையும் பெற்றிருந்தாலும் கடைசியில் ஆடி அடங்கும் புள்ளியாகும்.அன்றைய தினம் ஒரு பங்கு வர்த்தக நேரத்தில் எவளவு தூரம் உயர்ந்திருந்தாலும் சரி, எவளவு தூரம் கீழே வீழ்ந்து இருந்தாலும் சரி அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வுகளை தீர்மானிப்பதில் இந்த CLOSE புள்ளியின் பங்கு முக்கியமானதாகும், அதாவது விளக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு பங்கு அன்றைய தினம் கிட்ட தட்ட நேற்றைய முடிவு விலையில் இருந்து 15% OR 20% சதவிகிதம் உயர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படி இருக்கும் போது அன்றைய தினத்தின் அந்த பங்கின் முடிவு விலை, அன்றைய HIGH புள்ளியின் அருகில் முடிந்து இருந்தால், நாம் கீழ் கண்ட வகையில் அந்த பங்கின் அடுத்த நாள் நகர்வை பற்றி ஒரு 50% அளவிற்கு ஒரு முடிவுக்கு வரலாம்

(மேலும் 50% இன்னும் அநேக விசயங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும் அவைகளை பற்றி பின்னால் விளக்கமாக பார்ப்போம்), அதாவது நேற்றைய முடிவில் இருந்து அந்த பங்கு 15% க்கு மேல் உயர்ந்து இருந்தாலும் இன்னும் அதன் உயரும் சக்தியை தக்க வைத்துக்கொண்டுள்ளதாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் அதாவது 15% TO 20% உயர்ந்து இருந்தாலும் அந்த பங்கை முழு வீச்சில் விற்று லாபம் பார்க்க யாரும் விரும்பவில்லை என்றும் இன்னும் அதிக தூரம் உயரும் வாய்ப்புகள் இருப்பதினால் அந்த பங்கில் PROFIT BOOKING வரவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம், ஆகவே இன்னும் சில விஷயங்கள் உறுதுணையாக (GLOBAL MARKET, OUR MARKET, மேலும் சில சாதகமான விஷயங்கள்) இருக்கும் சூழ்நிலை வந்தால் அந்த பங்கு அடுத்த நாள் GAP UP என்ற முறையில் துவங்கும்,

அதே நேரம் அந்த குறிப்பிட்ட பங்கு முன்னர் சொன்னது போல ஒரு 15% to 20% உயர்ந்து, அந்த உயரங்களில் தாக்கு பிடிக்க முடியாமல் அதிக அளவு கீழே வந்தால் அதாவது எந்த புள்ளியில் அன்றைய தினம் அந்த பங்கு வர்த்தகத்தை தொடங்கியதோ அந்த புள்ளிக்கோ அல்லது அதன் வெகு அருகிலோ நல்ல VOLUME உடன் கீழே இறங்குகிறது என்ற சூழ்நிலை வந்தால் நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது அந்த பங்கின் தொடர் உயர்வில் சந்தேகம் ஏற்ப்பட்டு சிலர் லாபம் பார்க்கும் நோக்கத்தில் அந்த பங்கின் உயர்வை சாதகமாக்கி விற்று விட்டனர் என்று எடுத்துக்கொள்ளலாம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அந்த பங்கு அடுத்தநாள் தொடர்ந்து உயரும் என்று அடித்து சொல்ல முடியாது

(இப்பொழுது கீழே வந்தாலும் தொடர்ந்து உயரும், இல்லை இல்லை தொடர்ந்து கீழே தான் வரும் என்று முடிவு செய்வதற்கு TECHNICAL ஆக வேறு சில விஷயங்கள் உள்ளது, இன்னும் உள்ளே போகும் போது அவற்றை பற்றி பார்ப்போம்), இது போன்ற சூழ்நிலைகள் வரும்போது அடுத்த நாள் இந்த பங்கில் உயர்வுகள் இருக்கலாம் என்று எண்ணி அந்த பங்கில் நாம் தொடர்ந்து இருப்பது சிறந்ததாக இருக்காது (இந்த CLOSE என்ற புள்ளியின் மூலம் நாம் என்ன என்ன தெரிந்து கொள்ளலாம் என்பதை கூறிவருகிறேன், அதாவது இங்கு கூறுவது TECHNICAL ஆக ஒரு பங்கை பற்றி 100% முடிவுக்கு வருகிறோம் என்று வைத்துக்கொண்டால் அந்த 100% இல் இந்த CLOSE புள்ளியும் சிலவகை முடிவுகளை எடுக்க உதவி செய்யும் அதாவது இந்த CLOSE புள்ளி ஒரு 10% அல்லது 20% தன் பங்குக்கு உதவி செய்யும் என்று சொல்ல வருகிறேன்),

ஆகவே இந்த CLOSE புள்ளி அன்றைய தின HIGH புள்ளிக்கு அருகில் முடிவடைந்தால் அடுத்த நாள் தொடக்கம் சில உயர்வுகளுடனும், அதே போல் நன்றாக உயர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கு அருகில் முடிந்தால் அடுத்த நாள் தொடர் உயர்வுகள் இருப்பது சத்தியம் இல்லை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம், இன்னும் இந்த புள்ளிகளை வைத்து அடுத்த நாள் எப்படி தொடங்குகிறது என்று நீங்கள் சோதனை செய்து வந்தீர்களேயானால் இன்னும் அநேக விசயங்களை நீங்கள் உணர முடியும், இங்கு அதிக விசயங்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆனால் குழப்பத்தை தான் தரும், மேலும் இங்கு சொல்லி வருவது CLOSE புள்ளியின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்த தான்……

சரி CLOSE என்ற புள்ளியை பற்றியும் பார்த்தாகிவிட்டது, அடுத்து இவைகளை மொத்தமாக பார்த்து விடுவோம்

சரி கடந்த இரண்டு வாரமாக OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளின் முக்கியத்துவத்தை பற்றி பார்த்துவந்தோம், இந்த விசயங்களை மனதில் கொள்ளுங்கள், மேலும் இந்த புள்ளிகளை நீங்கள் பார்த்த உடன் அந்த பங்கின் அன்றய தின நகர்கள் எப்படி இருக்கும் என்பது உங்கள் மனதில் ஓடவேண்டும், ஒரு 50% அளவிற்காவது உங்களுக்கு அந்த பங்கின் அடுத்த நாள் நகர்வுகளை அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும், தொடர்ந்து இதை குறித்துக்கொண்டு அடுத்த நாள் என்ன மாதிரி நடக்கிறது என்று பார்த்து வந்தீர்களானால் உங்களுக்கு பயிற்ச்சி ஏற்ப்பட்டுவிடும் இந்த செயல் உங்களுக்கு பின்னால் உதவியாக இருக்கும்,

இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்து அந்த பங்கின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் எப்படி எல்லாம் ஒரு அனுமானத்திற்கு வரலாம் என்பதை பற்றி ஒரு சில விசயங்களை பார்ப்போம், அதாவது ஒரு பங்கின் முதல் நாள் வர்த்தகத்தில் அந்த பங்கானது முதல் நாள் முடிவடைந்த விலையின் அருகிலேயே தொடங்கி ஒரு 5% சதவிகிதம் உயர்ந்து மறுபடியும் OPEN ஆனா விலையை விட கீழே சில புள்ளிகளை இழந்து மறுபடியும் உயர்ந்து HIGH புள்ளியின் அருகில் CLOSE ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்,

இது போன்ற சூழ்நிலையில் அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வுகள் எப்படி இருக்கலாம் என்று நாம் கீழ்கண்ட மாதிரி ஒரு அனுமானத்திற்கு வரலாம் அதாவது, அந்த பங்கின் OPEN புள்ளி நேற்றைய CLOSE புள்ளியின் அருகிலேயே தொடங்கியுள்ளது மேலும் ஒரு நல்ல உயர்வை நல்ல VOLUME உடன் அடைந்துள்ளது, மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் OPEN ஆனா விலைக்கு கீழே வந்தாலும் மறுபடியும் தொடர்ந்து உயர்ந்து அன்றைய தின HIGH புள்ளியின் அருகிலே முடிந்து இருப்பது அந்த பங்கின் தொடர் உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்,

அதே நேரம் அந்த பங்கு உயரத்தில் இருந்து கீழே வந்தபொழுதும் அந்த பங்கில் அதிகமானோர் விருப்பத்துடன் வாங்கி இருப்பது TRADER களிடமும் SWING TRADER களிடமும் அந்த பங்குக்கு இருக்கும் தேவை, போட்டி ( DEMAND), ஆகியவைகள் அதிகமாக இருப்பதாக கொள்ளலாம் ஏனெனில் உயரத்தில் இருந்து OPEN விலைக்கும் கீழே வந்து இருந்தாலும் மறுபடியும் அந்த பங்கு அந்த HIGH புள்ளியின் அருகில் செல்லும் வரை அந்த பங்கை மல்லுகட்டி வாங்கி இருப்பதினால் அந்த பங்கின் மீது சிலர் ஆர்வமாக இருப்பதாக தானே அர்த்தம்

அப்படி இருக்கும் சூழ்நிலையில் TECHNICAL ஆக சில விஷயங்கள் துணையாக இருந்தால் இந்த பங்கில் தைரியமாக வாங்கலாம் கண்டிப்பாக அந்த பங்கில் உயர்வுகள் இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வரலாம், மேலும் அந்த பங்கு அடுத்த நாள் கீழே வந்தால் அதன் ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கிப்போடலாம் இரண்டு மூன்று தினங்களில் லாபம் நல்லவிதத்தில் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு அனுமானத்திற்கு வரலாம், மேலும் இந்த பங்கில் வர்த்தகம் தொடங்கினால் அதன் S/L ஆக முதல் நாள் LOW புள்ளியை கீழே கடந்து சென்றால் மேலும் கீழே வரும் வாய்ப்புகள் இருப்பதாக கொண்டு அந்த பங்கில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று ஒரு அனுமானத்திற்கு வரலாம்,

மேலும் இன்னும் சில விஷயங்கள் நாம் பார்க்க வேண்டும் அது முழுவதுமாக TECHNICAL வகுப்புகள் முடிந்தவுடன் உங்களுக்கு எந்த எந்த விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம் இப்பொழுது இதனை பார்ப்பது தவறாக வரும், ஆகவே இந்த விசயங்களை நல்ல பயிற்ச்சி செய்யுங்கள் வர வர இன்னும் உதவியாக இருக்கும், அதே போல் ஒரு பங்கு நல்ல உயர்ந்து மேலே தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கும் கீழே வந்து CLOSE ஆனால் என்ன நடக்கும் என்று நீங்கள் யோசித்து பாருங்கள், மேலும் நீங்கள் யோசித்தது போல அடுத்த நாள் நடக்கின்றதா இல்லை மாறுபாடுகள் வருகிறதா என்று பாருங்கள்..

மாறுபாடுகள் வந்தால் அவைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்ன தவறு என்பதை யோசியுங்கள் அல்லது உங்கள் வர்த்தக நண்பர்களுடன் கலந்தாலோசியுங்கள் அல்லது எனக்கு மின்அஞ்சல் செய்யுங்கள், இப்படியே நீங்கள் பயிச்சி செய்வீர்களே ஆனால் இன்றைய சந்தையின் அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு 50% அளவிற்காவது இந்த OPEN, HIGH LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே ஒரு அனுமானத்திற்கு வந்து விடலாம் மீதியை TECHNICAL துணையுடன் சாத்தியமாக்கிக் கொள்ளலாம், ஆகவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தொடர்ந்து பயிற்ச்சி செய்யுங்கள்………..

http://www.4tamilmedia.com/knowledge/essays/4361-payilvom-panku-6

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த தமிழ் வார்த்தைகள் அருகில் அதன் ஆங்கில சொல்லையும் போட்டிருந்தால் பலபேருக்கு உதவியாக இருந்துருக்கும்.

பங்கு சந்தை பொதுவாகவே ஆங்கில சொற்களை பாவிக்கும் இடம் ஆதலால் எல்லாவற்றையும் தமிழில் எளிதாக புரியமுடியாது. உண்மையான சந்தையில் பாவிக்கப்படும் சொற்கள் விளங்குவதற்கு உதவியிருக்கலாம்.

உதாரனதிட்கு.........

"4- உயரும் போது ஒரு வேளை ஏதாவது சூழ்நிலை அல்லது காரணங்களால் அந்த பங்கு கீழே வந்தால், எந்த புள்ளிகள் வரை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த TREND தாக்குப்பிடிக்கும் அதாவது அந்த பங்கின் S/L என்ன என்பதை எளிதாக சொல்லும் வழியாக இருக்க வேண்டும்,"

இதில் வரும் S/L என்ற சொல் எதை குறிக்கும் என்பது இதற்கு முன் விளக்கமாக இல்லை. திடிரென இந்த சொல் இந்த இடத்தில் வந்தால் இதை வாசிப்பவர் என்ன பொருள் கொள்ள முடியும்? கட்டுரை எழுதுவதற்கான அடிப்படை விதியே இங்கு இல்லாமல் இருக்கிறது.

Edited by Maruthankerny

  • தொடங்கியவர்

இது நான் எழுதியது இல்லை எங்கோ ஓரிடத்தில் படித்ததை இங்கு கொண்டு வந்து இணைத்தேன் மூலத்திற்குரிய இணைப்பும் கீழே கொடுத்துள்ளேன்

உங்களுக்கு மேலதிக விளக்கம்கள் தேவை படுமிடத்து இந்த கட்டுரையின் மூல இணைப்பில் சென்று அதில் உங்கள் கேள்விகளை கேட்டு உங்களுக்குரிய விளக்கம்களை பெற்று கொள்ளலாம்

அல்லது yarl களத்தில் பங்கு சந்தை பற்றிய அனுபவம் உள்ளவர்கள் ஆரும் இருப்பின் உங்களின் சந்தேகம்களை போக்குவார்கள் என நினைக்கிறன்

அகூதா கருத்து கந்தசாமி இரண்டு பேருக்கும் பங்கு சந்தை பற்றி தெரியும் என நினைகிறன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தும் இதை எழுதியவர்களை நோக்கியதே.............

ஏன் இப்படி அடிப்படையே இல்லாமல் எழுதிகிறார்கள் என்று அடிக்கடி எண்ண தோன்றும்.

இதனால் தமிழ் தெரிந்தவருக்கும் பயன் இல்லை

ஆங்கிலம் தெரிந்தவருக்கும் பயன் இல்லாத நிலை.

  • தொடங்கியவர்

part-7

கடந்த வாரம் OPEN, HIGH, LOW, CLOSE ஆகிய முக்கியமான நிலைகளை பற்றி சொல்லி இருந்தேன் மேலும் சில விசயங்களை சொல்லி அப்படி வந்தால் என்ன நடக்கும் என்று உங்களை யோசிக்க சொல்லி இருந்தேன் யோசித்தீர்களா,

நான் கடந்த வாரம் சொன்னது என்னவெனில்

"ஒரு பங்கு நன்றாக உயர்ந்து மேலே தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கும் கீழே வந்து CLOSE ஆனால் என்ன நடக்கும் என்று நீங்கள் யோசித்து பாருங்கள், மேலும் நீங்கள் யோசித்தது போல அடுத்த நாள் நடக்கின்றதா இல்லை மாறுபாடுகள் வருகிறதா என்று பாருங்கள்.." என்று சொல்லி இருந்தேன்,

உங்களின் அனுபவம் எப்படி இருந்தது, இந்த அனுபவத்தின் மூலம் உங்களின் யோசனைக்கு தகுந்தார்ப்போல் சரியான முடிவு வரவில்லை என்றாலும் முயற்ச்சி செய்துகொண்டே இருங்கள் போக போக இந்த செயல் உங்களுக்கு சரியான பயிற்சியை தரும், பயிற்ச்சி மட்டுமே நேர்த்தியாக TECHNICAL ANALYSING கற்றுக்கொள்வதற்கு உதவும், சரி இந்த வாரம் மேலும் சில விசயங்களை பற்றி பார்ப்போம் அதாவது TECHNICAL ANALYSING செய்வதற்கு நாம் வரைபடங்களை தான் பயன்படுத்துவோம், அதாவது ஒரு பங்கின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவோ அல்லது தீர்மானிக்கவோ நாம் அந்த பங்கை பற்றி அடி முதல் முடி வரை ஆராய்ந்து பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால் தான் அந்த பங்கை பற்றி நாம் ஒரு அனுமானத்திற்கு வரமுடியும்,

சரி ஒரு பங்கை பற்றி எப்படி அடி முதல் முடி வரை தெரிந்துகொள்வது, இப்படி ஒவ்வொரு பங்கை பற்றியும் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி வர்த்தகம் செய்வது அதோட அந்த பங்கை பற்றி எப்படி என்னவென்று பார்ப்பது, தினமும் இவர் சொல்வது போல அந்த குறிப்பிட்ட பங்கின் OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு எப்படி பார்ப்பது, வெறும் நம்பரை வைத்துக்கொண்டு என்னய்யா செய்வது, இது என்ன ஆகாத வேலையாய் இருக்கே என்று எண்ணுகிறீர்களா,

அப்படி எண்ணாதீர்கள், நாம் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளியின் மூலம் தான் அந்த பங்கை பற்றி ஆராயப்போகிறோம், ஆனால் நீங்கள் நினைப்பது போல வெறும் நம்பர்களை வைத்துக்கொண்டு அல்ல, அந்த நம்பர்களை நமக்கு தகுந்தார்ப்போல் சில உருவங்கள் கொடுத்து மாற்றியமைத்து தான் ஆராயப்போகிறோம் ஆகவே நண்பர்களே கவலை கொள்ளாதீர்கள்….

சரி இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு உருவ அமைப்புகளை நாமே உருவாக்கி கொண்டிருக்க முடியாது, இதற்க்கென்று தனியாக சில SOFTWARE உள்ளது அவைகளை நாம் வாங்கி பயன்படுத்திக்கொண்டால் போதும், மேலும் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் அதாவது இதற்காக அநேக SOFTWARE கள் உள்ளது இதில் நான் பயன்படுத்துவது METASTOCK எனப்படும் SOFTWARE ஐ தான்,

சரி SOFTWARE உங்களிடம் உள்ளது என்று வைத்துக்கொண்டால் அதன் மூலம் நாம் ஆராய வேண்டிய ஒவ்வொரு பங்குகளின் OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள் (DATA FOR SOFTWARE) நமக்கு தேவை இல்லையா, அதனை பற்றியும் சொல்லி விடுகிறேன், பங்கு சந்தை இந்தியாவில் தொடங்கிய அன்று முதல் இன்று வரை பங்குகளின் இந்த மேற்கண்ட புள்ளிகளை நாம் சில வர்த்தகர்களிடம் இருந்து பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்,

அவர்களுக்கு DATA VENDOR என்று பெயர், இவர்களின் வலை தளத்தில் இருந்து நாம் தினமும் மாலை சந்தை முடிந்த பின்பு அனைத்து பங்குகள் மற்றும் மேலும் சில முக்கியமான குறியீடுகளின் அன்றைய தின OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை பெற்று (DOWNLOAD) அதை நாம் வைத்து இருக்கும் SOFTWARE மூலம் OPEN செய்து பார்த்தால் நமக்கு தேவையான உருவங்கள் கிடைக்கும், இந்த உருவ அமைப்புகளை வைத்துக்கொண்டு தான் நாம் அந்த குறிப்பிட்ட பங்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை ஆராயப்போகிறோம், சரி அதற்க்கு முன் வேறு சில முக்கியமான விஷயத்தை பற்றியும் பார்த்து விடுவோம்

அதாவது உருவ அமைப்புகள் உருவ அமைப்புகள் என்று சொல்லி வருகிறேன் இல்லையா, இந்த உருவ அமைப்புகளை பற்றி சற்று விரிவாக பார்த்து விடுவோம், ஏனெனில் இந்த உருவங்கள் எப்படி வருகிறது, இப்படி, இந்த COLOUR இல் இருந்தால் இதற்க்கு என்ன அர்த்தம், அந்த COLOUR இல் (எந்த எந்த COLOUR என்று பின்னால் சொல்லிக்கொண்டே வருகிறேன் பொறுமையாக படியுங்கள்) இருந்தால் அதற்க்கு என்ன அர்த்தம் என்பது முக்கியம், இதில் தெளிவாக இருந்தால் தான் நமக்கு நல்லது,

அதற்க்கு முன் இந்த CHART இன் மூலம் நமக்கு என்ன தேவை என்பதை பற்றி சொல்லி விடுகிறேன், அதாவது நாம் TECHNICAL ANALYSE செய்ய CHART படம் தேவை என்றும் இந்த CHART படம் அன்றாடம் அனைத்து பங்குகளில் நடக்கும் OPEN, HIGH, LOW CLOSE என்ற புள்ளிகளின் மூலம் தான் உருவாக்கப்படுகிறது என்றும், அப்படி உருவாகும் உருவ அமைப்புகளை வைத்து நாம் ஆராய்ச்சி செய்வோம் என்றும் பார்த்தோம் இல்லையா, அப்படி ஆராய்ச்சி செய்யும் போது சில அடிப்படை விசயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா,

அதை பற்றி இப்பொழுது பார்ப்போம் அதாவது காசு இருக்கென்று CAR வாங்கி விட்டால் போதுமா ஓட்ட தெரிய வேண்டும் இல்லையா அப்படி ஓட்ட தெரிந்து கொள்ளும் போது எது GEAR, எது BREAK, எது ACCELERATOR, என்று சொல்லி கொடுப்பார்கள் இல்லையா அப்படிதான் (நான் சொல்வது எப்படி வண்டி ஓட்டுவது என்பதை பற்றி அல்ல வண்டியின் பாகங்கள் எது எது என்று சொல்லி வருகிறேன், இது தான் GEAR ROD என்று தெரிந்தால் தானே GEAR போட முடியும், அது இல்லாமல் வெறும் படத்தை மட்டும் காட்டி முதலில் FIRST GEAR போட வேண்டும் பிறகு SECOND GEAR இப்படியே முன்னேறி ஐந்தாவது GEAR வரை போட்டு ஓட்ட வேண்டியது தான் என்று சொல்லி விட்டால் வண்டிக்குள் சென்று GEAR ROD எது வென்று அவர் எப்படி கண்டு பிடிப்பார்,

ஆகவே தான் இந்த வரை பட உருவங்களை பற்றி ஒரு சிறிய விளக்கம் தர வேண்டியது அவசியமாகிறது சரி விசயத்துக்கு வருவோம், நான் உங்களிடம் சொன்னேன் இல்லையா இந்த OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளின் மூலம் தான் உருவங்கள் உருவாக்கப்படுகிறது என்று, அந்த உருவங்கள் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை பார்ப்போம், அதற்க்கு முன் உருவ அமைப்புகளில் சில வகைகள் உள்ளது அந்த வகைகளை பற்றியும் சொல்லி விடுவது தற்பொழுது ஏற்றதாக இருக்கும்,

அதாவது இந்த OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்துக்கொண்டு சில கோடுகள் (உருவங்கள் ) உருவாகும் அது போன்ற உருவங்களை மூன்று விதமாக நாம் பார்க்கலாம் அந்த மூன்று வடிவங்களை பற்றி ஒரு சிறிய விளக்கத்தை அதற்கு உண்டான படங்களுடன் பார்ப்போம்

அந்த மூன்று வடிவங்கள் :–

BAR CHART,

CANDLESTICKS CHART,

LINE CHART

முதலில் BAR CHART

இந்த BAR CHART என்ற வடிவம் கீழே கொடுத்துள்ள படம் 1 இல் இருப்பது போல் தான் இருக்கும், சரி இந்த படம் நாம் முன்னர் சொன்னது போல OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளில் இருந்து தான் உருவாக்கப்பட்டுள்ளது அப்படி என்றால் இந்த உருவத்துக்குள் தான் அந்த பங்கின் ஒவ்வொரு நாள் OPEN HIGH LOW CLOSE, என்ற புள்ளிகள் புதைந்து இருக்கின்றது என்று தானே அர்த்தம், அப்படி என்றால் இந்த உருவத்தின் மூலம் (படத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு கோட்டின் மூலம் ) நாம் எப்படி அந்த பங்கின் OPEN HIGH LOW CLOSE, என்ற புள்ளிகளை பற்றி தெரிந்து கொள்வது,

சரி போன பதிவில் பார்த்தது போல ஒரு பங்கின் OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்து அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வுகளை ஒரு 50% அளவிற்காவது தெரிந்து கொள்ளவேண்டுமே எப்படி தெரிந்து கொள்வது என்ற எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடுகிறதா அப்படி என்றால் நீங்கள் இப்பொழுதே 25% அளவிற்கு TECHNICAL கற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம், தோன வில்லையா அப்படி என்றால் நீங்கள் 100% TECHNICAL கற்றுக்கொள்ள தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம், சரி இந்த படத்தை பாருங்கள் விளக்கத்தை அடுத்த வாரம் சொகிறேன்- சந்தேகங்களை கேளுங்கள்

BAR CHART PICTURE

barchart.jpg

http://www.4tamilmed...ajilvom-panku-7

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

PART -8

கடந்த வாரம் BAR CHART பற்றி பார்த்துக்கொண்டு இருந்தோம் இல்லையா, கடந்த வாரம் கொடுத்த படத்தை பார்த்தீர்களா BAR CHART என்பது அந்த படத்தில் உள்ளது போல் தான் இருக்கும், சரி அந்த படத்தில் தான் ஒரு பங்கின் OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகள் இருப்பதாக பார்த்து வந்தோம் இல்லையா,

இப்பொழுது அந்த கோட்டில் எது OPEN புள்ளி எது CLOSE புள்ளி என்று எப்படி கண்டு பிடிப்பது என்று பார்ப்போம்.

கீழே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் இதில் மூன்று BAR கோடுகளை கொடுத்துள்ளேன் அந்த கோட்டில் உங்களின் இடது புறம் இருக்கும் சிறிய கோடு தான் (LEFT HAND SIDE) தான் OPEN புள்ளியை குறிக்கும், அதே போல் உங்களுக்கு வலது புறம் (RIGHT HAND SIDE) இருக்கும் சிறிய படுக்கை வச கோடு CLOSE புள்ளியை குறிக்கும், அந்த கோட்டின் நுனிப்பகுதி (TOP) HIGH புள்ளியை குறிக்கும், அந்த கோட்டின் அடிப்பகுதி (BOTTOM) LOW புள்ளியை குறிக்கும் இப்படி தான் நாம் அந்த கோட்டை வைத்து அன்றைய தினம் ஒரு பங்கின் OPEN எது மற்றும் HIGH, LOW CLOSE என்ற புள்ளிகள் எவை எவை என்று அறிந்து கொள்ளலாம்,

இதில் மூன்று BAR கோடுகளை கொடுத்துள்ளேன் அந்த கோட்டில் உங்களின் இடது புறம் இருக்கும் சிறிய கோடு தான் (LEFT HAND SIDE) தான் OPEN புள்ளியை குறிக்கும், அதே போல் உங்களுக்கு வலது புறம் (RIGHT HAND SIDE) இருக்கும் சிறிய படுக்கை வச கோடு CLOSE புள்ளியை குறிக்கும், அந்த கோட்டின் நுனிப்பகுதி (TOP) HIGH புள்ளியை குறிக்கும், அந்த கோட்டின் அடிப்பகுதி (BOTTOM) LOW புள்ளியை குறிக்கும் இப்படி தான் நாம் அந்த கோட்டை வைத்து அன்றைய தினம் ஒரு பங்கின் OPEN எது மற்றும் HIGH, LOW CLOSE என்ற புள்ளிகள் எவை எவை என்று அறிந்து கொள்ளலாம்,

சரி இப்பொழுது கடந்த ஆறாவது பதிவில் ஒரு பங்கின் OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை வைத்து அடுத்த நாள் நகர்வை ஒரு 50% அளவிற்காவது அறிந்து கொள்ளலாம் என்று பார்த்தோம் இல்லையா, இப்பொழுது நான் எப்படி இந்த புள்ளிகளை வைத்து அடுத்த நாள் நகர்வை தீர்மானிக்கலாம் என்று ஆறாவது பதிவில் குறிப்பிட்டதை இந்த கோட்டை பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள், எளிதாக உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும், அதாவது வெறும் நம்பர்களை வைத்துக்கொண்டு அடுத்த நாள் நகர்வை கணிப்பதை விட இது போன்ற ஒரு உருவத்தை வைத்துக்கொண்டு நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்,

மேலும் இந்த படத்தில் மூன்று கோடுகள் கொடுத்துள்ளேன் இந்த மூன்று கோடுகளும் வெவேறு OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை கொண்டது, ஆகவே இந்த OPEN, CLOSE என்ற புள்ளிகளை குறிக்கும் சிறிய படுக்கை வச கோடுகள் மாறி மாறி இருக்கும் பாருங்கள், முதலில் பார்க்க சற்று கஷ்டமாக இருக்கும் போக போக எளிதாகி விடும், இங்கு நான் மூன்று கோடுகளை பெரிதாக்கி கொடுத்துள்ளேன், கடந்த பதிவில் உள்ள படத்தை இப்பொழுது பாருங்கள், பார்த்து அதில் உள்ள வலது புற இடது புற சிறிய படுக்கை வச கோடுகளை வைத்து ஒவ்வொரு நாளும் எப்படி எல்லாம் அந்த பங்கில் வர்த்தகம் நடந்து இருக்கிறது என்று பயிற்ச்சி செய்யுங்கள்

மேலும் OPEN புள்ளி மற்றும் CLOSE புள்ளி எப்படி எல்லாம் அமைந்து இருக்கின்றது என்றும் பயிற்ச்சி செய்யுங்கள், அநேக கோடுகளுடன் இருக்கும் இங்குள்ள படத்தில் (கடந்த வார படத்தை சொல்கிறேன்) ஒவ்வொரு கோடும் ஒரு நாளைய அந்த குறிப்பிட்ட பங்கின் நகர்வுகளை சொல்லும் கோடு, இப்படி ஒவ்வொரு நாளும் உள்ள கோட்டினை வைத்து அந்த பங்கின் மொத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை வேறு சில உத்திகளை பயன்படுத்தி நாம் அறியலாம், அது போல நாம் கண்டு பிடிப்பதை தான் அல்லது ஆராய்வதை தான் TECHNICAL ANALYSING என்று சொல்கிறோம், நீங்கள் ஒவ்வொருவரும் இன்னும் சில தினங்களில் TECHNICAL ANALYSTS ஆகப்போகிறவர்கள் தானே அதற்க்கு இப்பொழுதே எனது வாழ்த்துக்கள்,

சரி அடுத்த வடிவத்தை பற்றி பார்ப்போம் அதாவது CANDLESTICK கீழே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் நீங்கள் முன்னர் பார்த்த BAR CHART படத்திற்கும் இந்த படத்திற்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கும் பாருங்கள் இந்த CANDLESTICK படத்தில் உள்ள ஒவ்வொரு கோடுகளையும் பாருங்கள் முன்னர் பார்த்த BAR CHART படத்தில் OPEN இடது பக்கத்திலும் (LEFT SIDE), CLOSE வலது பக்கத்திலும் (RIGHT SIDE) இருந்தது இல்லையா, இதில் பாருங்கள் சற்று வித்தியாசமாக புரிந்து கொள்வதற்கு எளிதாகவும் இருக்கும்

அதாவது இந்த CANDLESTICK CHART நாம் வர்ணங்களை (CLOLUR, கலர் ) பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால் மிக எளிதாக அந்த பங்கின் அன்றைய தின OPEN HIGH LOW CLOSE என்ற புள்ளிகளை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம், அதாவது இதில் இரண்டு வித வண்ணங்கள் இருக்கும் அதாவது பச்சை மற்றும் சிகப்பு,

பச்சை நிறம் ஒரு குறிப்பிட்ட CANDLE இல் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு உயர்ந்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம், அதே போல் சிகப்பு நிறத்த்தில் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு வீழ்ச்சியை கண்டுள்ளது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம், சரி இந்த உயர்வு மற்றும் வீழ்ச்சி என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்று பார்த்து விடுவோம்,

அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் எந்த புள்ளியில் வர்த்தகத்தை தொடங்கியதோ அந்த புள்ளிக்கும் மேலே அன்றைய தினத்தில் அந்த பங்கு முடிவடைந்தால் அன்றைய தினம் அந்த பங்கு உயர்ந்து முடிந்துள்ளது என்று அர்த்தம் கொள்ள வேண்டும் அப்படி முடிவடைந்தால் அன்றைய தின CANDLESTICK கோடு பச்சை நிறத்தில் இருக்கும்,

அதே போல் அந்த பங்கு வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியை விட கீழே முடிவடைந்தால் அந்த பங்கு அன்றைய தின வர்த்தகத்தை இறக்கத்துடன் (வீழ்ச்சியுடன்) நடத்தி உள்ளது என்று அர்த்தம் கொள்ள வேண்டும், அப்படி இருந்தால் அன்றைய தின CANDLESTICK கோடு சிகப்பு நிறத்தில் இருக்கும், இந்த பச்சை மற்றும் சிகப்பு நிறங்களிலும் இரண்டு வித்தியாசங்கள் இருக்கும், அதையும் பற்றியும் சொல்லி விடுகிறேன்

அதாவது இந்த நிறங்களை பற்றி ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் வசதியாக இருக்கும் அதாவது பச்சை நிறம் இந்த CANDLESTICK CHART படத்தில் இரு விதத்தில் இருக்கும் அதாவது EMPTY GREEN என்று ஒரு நிறத்திலும் SOLID GREEN என்று மற்றுமொறு நிறத்திலும் இருக்கும் இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றும் பார்த்து விடுவோம்,

அதாவது ஒரு CANDLESTICK கோட்டில் பச்சை நிறம் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு உயர்ந்து இருக்கிறது என்றும் சிகப்பு நிறத்தில் இருந்தால் அன்றைய தினம் அந்த பங்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்று பார்த்தோம் இல்லையா அதே நேரம் இந்த பச்சை நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் இரண்டு வேறுபாடுகள் இருக்கும் அதாவது பச்சை நிறத்தை பொறுத்தவரை EMPTY GREEN என்று ஒரு நிறத்திலும், SOLID GREEN என்று ஒரு நிறத்திலும் இருக்கும் அதே போல், சிகப்பு நிறத்தில் EMPTY RED, SOLID RED என்று இரண்டு வேறுபாடுகள் இருக்கும் அவறறை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்

அதற்க்கு முன் கீழே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் முதல் படம் BAR CHART இல் OPEN மற்றும் CLOSE என்ற புள்ளிகள் எப்படி அமைந்து இருக்கும் என்பதை விளக்கும் படம் இரண்டாவது படம் CANDLESTICK CHART எப்படி இருக்கும் என்பதை விளக்கும் படம், இரண்டையும் பாருங்கள் மேலும் இந்த BAR CHART ஐ பார்த்து விட்டு இதற்க்கு முன் உள்ள பதிவில் வெளியிட்ட படத்தையும் ஒரு முறை பார்த்து பயிற்ச்சி செய்யுங்கள்

BAR CHART PICTURE

BARC1.jpg

CANDLE STICK CHART PICTURE

CANDLE1.jpg

http://www.4tamilmedia.com/knowledge/essays/4468-payilvom-panku-8

  • தொடங்கியவர்

part-9

share_market.jpg

கடந்த வாரம் CANDLESTICK CHART உருவங்களை பற்றி பார்த்து வந்தோம் மேலும் CANDLESTICK CHART உருவங்களை எளிதாக புரிந்து கொள்ள அதன் வண்ணங்களை பயன்படுத்தி அறியலாம் என்றும், அந்த வண்ணங்கள் பச்சை மற்றும் சிகப்பு என்ற இரண்டு நிறத்தில் இருக்கும் என்றும், இதில் பச்சை நிறம் சந்தையில் ஏற்ப்பட்ட உயர்வையும், சிகப்பு நிறம் சதையில் ஏற்ப்பட்ட வீழ்ச்சியையும் குறிக்கின்றது என்றும் பார்த்தோம்,

மேலும் இந்த வண்ணங்களின் உதவி கொண்டு நாம் CHART படங்களை பார்க்கும் போது அந்த இரண்டு வண்ணங்களில் இரண்டு வேறுபாடுகளை காணலாம் என்றும், அவைகள் EMPTY GREEN, SOLID GREEN மற்றும் EMPTY RED, SOLID RED என்று இரண்டு வகையாகும் என்றும் கடந்த வாரம் பார்த்தோம், தற்பொழுது இந்த வண்ணங்களான EMPTY GREEN, SOLID GREEN, EMPTY RED, SOLID RED என்பவை எப்படி தனக்குள் உள்ள வேறுபாடுகளை வெளிக்காட்டுகிறது என்று பார்ப்போம், (இங்கு நான் சொல்லி வருவது எல்லாம் அடிப்படை விஷயங்கள் இந்த விஷயங்கள் உங்களுக்கு அனிச்சை செயல் போல் CHART பார்த்த மாத்திரத்தில் புரிந்து விட வேண்டும், ஆகவே புரியும் வரை திரும்ப திரும்ப படித்து பார்த்து புரிந்து கொண்டு பின் மேலே தொடருங்கள் நான் முன்பே சொன்ன மாதிரி முதலில் சற்று கடினமாக இருக்கும் பிறகு எளிதாகி விடும், ஆகவே வரும் வரை விடாதீர்கள்),

முதலில் இங்கு நான் கொடுத்துள்ள EMPTY GREEN, SOLID GREEN, EMPTY RED, SOLID RED என்ற வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று கீழே உள்ள படம் 1 ஐ பாருங்கள்,

படம் 1 (படங்களைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மேல் அழுத்தவும்)

PICTURE1.JPG

பார்த்து விட்டீர்களா, சரி இப்பொழுது இந்த வண்ணங்கள் எப்படி தனது நிறத்தில் வேறு பாடுகளை காட்டுகிறது என்று புரிகிறது அல்லவா, சரி அடுத்து நாம் CHART ஐ பார்க்கும் போது இந்த வண்ணங்களில் வேறுபாடுகள் இருந்தால் அதற்க்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம்,

EMPTY GREEN:-

EMPTY GREEN என்பது அன்றைய வர்த்தகம் தொடங்கிய புள்ளியில் இருந்து உயர்ந்து அந்த புள்ளிக்கும் மேலே முடிவடைவது

SOLID RED:-

SOLID RED என்பது அன்றைய வர்த்தகம் தொடங்கிய புள்ளியில் இருந்து வீழ்ச்சி அடைந்து அந்த புள்ளிக்கும் கீழே முடிவடைவது

SOLID GREEN:-

< பொதுவாக EMPTY GREEN என்றால் OPEN புள்ளியை விட உயர்ந்து முடிவடைவது என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இந்த SOLID GREEN என்பது தொடங்கிய புள்ளியில் இருந்து உயராமல் கீழே வந்து முடிவடைந்து இருப்பது, இதன் படி இந்த மாதிரி முடிவடைந்ததை நாம் SOLID RED என்று தான் சொல்லுவோம் ஆனால் நான் ஏன் SOLID GREEN என்று சொல்கிறேன் என்று பார்ப்போம்

அதாவது இவ்வாறு இறங்கி முடிவடைந்து இருந்தாலும் முதல் நாள் ஏற்ப்பட்ட அந்த பங்கின் CLOSE புள்ளியை விட இன்று நடந்த CLOSE புள்ளியானது உயரத்தில் இருப்பது அதாவது முதல் நாள் CLOSE புள்ளிக்கு மேலே முடிந்து இருந்தால் நாம் SOLID RED என்ற வண்ணத்தில் காணாமல் SOLID GREEN என்ற வண்ணத்தில் காண்கின்றோம், இதற்க்கு அர்த்தமாக நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம்,

அதாவது அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் அந்த பங்கு முதல் நாள், தான் முடிவடைந்த விலையை விட கீழே செல்லாமல் அந்த விலைக்கு மேல் முடிவடைந்து இருக்கின்றது என்று அர்த்தம், இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் சந்தையில் நடக்கும் ஒரு நிகழ்வின் மூலம் சொல்லலாம் எளிதாக புரியும், அதாவது GAP UP OPEN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் கீழே இறங்கி வந்து முடிவு மட்டும் (CLOSE) முதல் நாள் CLOSE புள்ளிக்கு மேல் முடிவது (எல்லா SOLID GREEN என்ற உருவமும் இந்த மாதிரி தான் GAP UP முறையில் இருக்கும் என்று சொல்ல வில்லை உங்களுக்கு எளிதாக புரிய வேண்டுமே என்று சொல்கிறேன்)

இதன் படி அந்த பங்கு அடுத்த நாட்களில் இன்றைய HIGH புள்ளியை மேலே கடக்குமானால் தொடர்ந்து உயரும் என்று எடுத்துக்கொள்ளலாம், LOW புள்ளியை கீழே கடக்குமானால் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம் (இதற்க்கு இன்னும் சில விஷயங்கள் உதவி செய்ய வேண்டும் அதை பிறகு பார்ப்போம்), புரிகிறதா புரியவில்லை என்றால் மறுபடி மறுபடி படியுங்கள்,

சரி அடுத்து EMPTY RED என்ற நிறத்தை பற்றி பார்ப்போம்

பொதுவாக SOLID RED என்றால் OPEN புள்ளியை விட கீழே இறங்கி வீழ்ச்சியடைந்து முடிவடைவது என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இந்த EMPTY RED என்பது தொடங்கிய புள்ளியில் இருந்து வீழ்ச்சியடையாமல் மேலே உயர்ந்து முடிவடைந்து இருப்பது, இதன் படி இந்த மாதிரி முடிவடைந்ததை நாம் EMPTY GREEN என்று தான் சொல்லுவோம், ஆனால் நான் ஏன் EMPTY RED என்று சொல்கிறேன் என்று பார்ப்போம்

அதாவது இவ்வாறு உயர்ந்து முடிவடைந்து இருந்தாலும் முதல் நாள் ஏற்ப்பட்ட அந்த பங்கின் CLOSE புள்ளியை விட இன்று நடந்த CLOSE புள்ளியானது கீழே இறங்கி முடிவடைந்து இருப்பது, அதாவது முதல் நாள் CLOSE புள்ளிக்கு கீழே முடிந்து இருந்தால் நாம் EMPTY GREEN என்ற வண்ணத்தில் காணாமல் EMPTY RED என்ற வண்ணத்தில் காண்கின்றோம்,

இதற்க்கு அர்த்தமாக நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு உயர்வை அடைந்து இருந்தாலும் அந்த பங்கு முதல் நாள், தான் முடிவடைந்த விலையை விட கீழே சென்று, அந்த விலைக்கும் கீழ் முடிவடைந்து இருக்கின்றது என்று அர்த்தம் இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் GAP DOWN OPEN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து முன்னேறி வந்து முடிவு மட்டும் (CLOSE) முதல் நாள் CLOSE புள்ளிக்கு கீழ் முடிவது (எல்லா EMPTY RED என்ற உருவமும் இந்த மாதிரி தான் GAP DOWN முறையில் இருக்கும் என்று சொல்ல வில்லை உங்களுக்கு எளிதாக புரிய வேண்டுமே என்று சொல்கிறேன்)

இதன் படி அந்த பங்கு அடுத்த நாட்களில் இன்றைய HIGH புள்ளியை மேலே கடக்குமானால் தொடர்ந்து உயரும் என்று எடுத்துக்கொள்ளலாம், LOW புள்ளியை கீழே கடக்குமானால் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம், (இதற்க்கு இன்னும் சில விஷயங்கள் உதவி செய்ய வேண்டும் அதை பிறகு பார்ப்போம்), புரிகிறதா புரியவில்லை என்றால் மறுபடி மறுபடி படியுங்கள், , சரி மேலே உள்ள விளக்கங்களை தெளிவாக விளக்கும் விதமாக இந்த படத்தினை பாருங்கள்

படம் 2

PICTURE2.JPG

சரி உருவங்களின் வகைகளை பார்த்தாகி விட்டது அடுத்து LINE CHART என்ற வடிவத்தை பற்றியும் சொல்லி விடுகிறேன், இது ஒரு OVERALL VIEW என்று வைத்துக்கொள்ளலாம் இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஒருவரை 10 மீட்டருக்கு அப்பால் வைத்து பார்ப்பது போன்றது, இதில் ஒன்றும் கவனிக்க வேண்டிய விசயங்களாக எதையும் சொல்வதற்கு இல்லை, நாம் முன்னர் பார்த்த அந்த இரண்டு வடிவங்களில் எது உங்களுக்கு பயிற்ச்சி செய்ய உதவியாக புரிந்து கொள்ள எளிமையாக இருந்க்கின்றதோ அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

இது தான் சிறந்தது, இல்லை! இல்லை! இது தான் சிறந்தது என்று சொல்ல முடியாது உங்களின் கை பழக்கத்திற்கு எது ஏதுவாக, எளிதாக இருக்கின்றதோ அதனை பயன் படுத்திக்கொள்ளுங்கள், கீழே உள்ள LINE CHART படத்தை பாருங்கள்

படம் 3

PICTURE3.JPG

சரி இது வரை TECHNICAL ANALYSING கற்று கொள்வதற்கு தேவையான சில அடிப்படை விசயங்களை பார்த்தாகி விட்டது, இனி மேல் அடுத்து நேரிடையாக TECHNICAL வகுப்பிற்குள் செல்ல போகிறோம் அதற்க்கு முன் இதுவரை நாம் பார்த்து வந்த இந்த 9 பதிவுகளையும் ஒரு முறை, அல்லது இரண்டு முறை படித்து விடுங்கள்,

http://www.4tamilmedia.com/knowledge/essays/4537-payilvom-panku-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.