Jump to content

ஏன்டா நோட்டீஸ்ல என் மனைவி பெயர் கீழே இருந்தது: அதிமுக கூட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு அடி, உதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு அடி, உதை விழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள லந்தகோட்டையில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலளார் மலர்வண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் மூர்த்தி பேசினார்.

அப்போது முன்னாள் செயலாளர் மதுராபாண்டி உள்பட சிலர் திடீர் என்று மேடையில் ஏறி மைக்கை பறித்துக் கொண்டு மலர்வண்ணனிடம் தனது மனைவி காஞ்சனா குஜிலியம்பாறை ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தும் அவரது பெயரை ஏன் நோட்டீஸின் கீழ் பகுதியில் அச்சடித்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து மதுராபாண்டி மலர்வண்ணனின் கன்னத்தில் அறைந்து அவரை எட்டி உதைத்தார். இதை பார்த்து மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகள் அங்கிருந்து ஓடி காரில் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து மதுராபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலர்வண்ணன் கூறுகையில்,

காரணம் இல்லாமல் பேச்சாளரை பேச விடாமல் அடிக்க சென்றதால் நாங்கள் தடுத்தோம். ஆனால் எங்களுக்கும் அடி விழுந்தது. அதனால் புகார் கொடுத்தோம் என்றார்.

மதுராபாண்டி கூறுகையில்.

கடந்த 30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்தியதற்கான காரணத்தை கேட்டோம். ஆனால் அடித்ததாக தவறான புகார் கொடுத்துள்ளார்கள் என்றார்.

Thatstamil

ஹஹஹஹஹா வாழ்கையில பயப்புள்ள இனி நோட்டிஸ் அடிக்கவே மாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குஜிலியம்பாறை ஒன்றியத்தின் முன்னாள் தலைவராகவும், மற்றும் தற்போதைய மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராகவும் இரண்டு முக்கிய பதவிகளை வகித்தவரின் பெயரை... கடைசியில் போட்டது தப்புத் தானே... :D

Posted

காரில் தப்பியோடியவர்கள்தான் நோட்டீஸை மாற்றி அடிச்சிருக்கவேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த செய்திய 2004 பேர் பாத்ததுக்கு காரணம் யாழ் களத்தை தமிழகத்தை சேர்ந்த பல தி மு க உறவுகள் பார்கின்றார்கள் என்பதாலா.... அல்லது அட மனைவிக்காக அடிதடில கூட இறங்கிட்டான்களே என்பதாலா :D

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.