சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனி
கட்டுரை தகவல்
எழுதியவர், க.போத்திராஜ்
பதவி, பிபிசி தமிழுக்காக
9 ஏப்ரல் 2025, 03:01 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியால் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணி சந்திக்கும் தொடர் 4வது தோல்வியாகும்.
வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சாதனை ஏடுகளில் இடம் பிடித்த இளம் வீரரான பிரியான்ஷ் ஆர்யா யார்? சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்?
ஆர்யா தனி ஆவர்த்தனம்
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தநிலையில் பிரியான்ஷ் ஆர்யா மட்டும் தனது பேட்டிங் ஸ்டைலையும், அதிரடியையும் குறைக்கவில்லை.
தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்க வேண்டிய நிலையில் கலீல் அகமது கேட்சை தவறவிட்டார், 35 ரன்களில் இருந்தபோது விஜய் சங்கர் கேட்சை கோட்டைவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திய ஆர்யா சிஎஸ்கே பந்துவீச்சை காலி செய்தார். அஸ்வின் பந்துவீச்சையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பொதுவாக இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்துவீச்சை ஆடுவது கடினம் . ஆனால், நேற்று அஸ்வின் ஓவரில் 10 பந்துகளில் 28 ரன்களை ஆர்யா விளாசினார்.
பவர்ப்ளேயில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 3 விக்கெட்டுகளுக்கு 75 ரன்கள் வரை ஆர்யா உயர்த்தினார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆர்யா அரைசதம் அடித்திருந்தார்.
5-வது விக்கெட்டுக்கு சஷாங் சிங்குடன் சேர்ந்து ஆர்யா அமைத்த 67 ரன் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சிஎஸ்கே பந்துவீச்சை விளாசித் தள்ளிவிட்டார் ஆர்யா.
குறிப்பாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 310 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்யா பேட் செய்தார். சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர்களின் 20 பந்துகளைச் சந்தித்து 62 ரன்களை ஆர்யா குவித்தார். அதிலும் பதிராணாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து சதத்தை ஆர்யா நிறைவு செய்தார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் பிரியான்ஷ் ஆர்யா
19 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஆர்யா, அடுத்த 20 பந்துகளில் சதத்தை எட்டினார், அதாவது 13-வது ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்களைத் தொட்டபோது, ஆர்யா சதம் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட் விழுந்தபின் பஞ்சாப் அணி 136 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட 4வது அதிகபட்ச ஸ்கோராக இருந்தாலும், சிஎஸ்கேவுக்கு எதிராக இதுதான் அதிகபட்சமாகும்.
ஆர்யா ஆட்டமிழந்தபின் சஷாங் சிங் ஆட்டத்தை கையில் எடுத்து, யான்செனுடன் சேர்ந்து சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த சஷாங் சிங் 52 ரன்களுடனும், யான்சென் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்க்க இருவரின் அதிரடி பேட்டிங் முக்கியக் காரணமாக இருந்தது.
பஞ்சாப் அணியில் ஆர்யா(103), சஷாங் சிங்(52), யான்சென்(34) ஆகியோர் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற பேட்டர்கள் ஸ்ரேயாஸ்(9), பிரப்சிம்ரன்(0), ஸ்டாய்னிஷ்(4), நேஹல் வதேரா(9), மேக்ஸ்வெல்(1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சஷாங் சிங்
கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025
குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025
சிஎஸ்கே ஆட்டம் எப்படி?
சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை கடந்த 4 போட்டிகளுடன் ஒப்பிடுகையில் பவர்ப்ளேயில் கான்வே, ரவீந்திரா இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது.
சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்ன, ஓவருக்கு எத்தனை ரன்கள் சேர்க்க வேண்டும், ரன்ரேட் என்ன என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ரவீந்திரா, கான்வே இருவரும் ஆடியது போல் இருந்தது. அதனால்தான் 10-வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஷிவம் துபே களத்துக்கு வந்த பின்புதான் சிஎஸ்கே அணி முதல் சிக்ஸரை அடித்தது.
ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகவே, அடுத்துவந்த கேப்டன் ருதுராஜ், ஒரு ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெர்குஷன் பந்துவீச்சில் 42 ரன்னில் துவே க்ளீன் போல்டாகினார். நடுப்பகுதியில் சிஎஸ்கே அணிக்கு ஓவருக்கு 17 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது.
விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025
ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025
கான்வே களத்தில் 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தாலும், கடைசி நேரத்தில் அவரால் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பெரிய ஷாட்களை ஆடமுடியவில்லை. இதனால் ரிட்டயர் அவுட் முறையில் கான்வேயை 69 ரன்னில் சிஎஸ்கே வெளியேற்றியது.
தோனி 18-வது ஓவரில் வந்து 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பைன் லெக் திசையில் சஹலிடம் கேட்ச் கொடுத்து தோனி 27 ரன்னில் ஆட்டமிழந்தவுடன் சிஎஸ்கே வெற்றிக் கனவு கலைந்தது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,கான்வே
சிஎஸ்கேவும், சிக்ஸரும்
பஞ்சாப் அணியில் மட்டும் நேற்று 16 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, அதாவது 16 பந்துகளில் 96 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி 10-வது ஓவரில்தான் முதல் சிக்ஸரை விளாசியது, ஒட்டுமொத்தமாக 8 சிக்ஸர் மட்டுமே அடித்தது அதாவது 48 ரன்கள் சேர்த்தது.
சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசும் பிக்ஹிட்டர்கள் யாரும் இல்லை. 200 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் சேஸ் செய்திருந்தது, அதற்கு அப்போது சுரேஷ் ரெய்னா, ஹேடன், வாட்ஸன், ஹசி போன்ற பெரிய ஹிட்டர்கள் இருந்ததால், இலக்கை எளிதாக அடைந்தது.
ஆனால், இப்போதிருக்கும் சிஎஸ்கே பேட்டர்களை வைத்து இதுபோன்ற பெரிய ஸ்கோரை இந்த சீசனில் சேஸ் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025
கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,தோனி
சிஎஸ்கேவும் 180 ரன்கள் இலக்கும்
180 ரன்களுக்கு மேல் எதிரணி இலக்கு வைத்துவிட்டாலே சிஎஸ்கே சேஸ் செய்ய இயலாது என்பது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் 11 முறை 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.
போட்டி நாயகன் ஆர்யா
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முழுமையான காரணம் அன்கேப்டு வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின் அச்சமில்லா, அற்புதமான ஆட்டம்தான். பிரியான்ஷ் ஆர்யாவின் பேட்டிங்கை நேற்று பார்த்தபோது, "வின்டேஜ் சேவாக்", இடதுகையில் பேட் செய்வது போல் இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரியன்ஸ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (9 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். 245 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் பேட் செய்தார்.
19 பந்துகளில் அரைசதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யாஸ், 39 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கெயில்(30பந்து), யூசுப் பதான்(37), டேவிட் மில்லர்(38) ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஆர்யா வருகிறார்.
"ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை8 ஏப்ரல் 2025
'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பிரியான்ஷ் ஆர்யா
யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பௌலர்கள் வயிற்றில் புளியை கரைத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டார் பிரியான்ஷ் ஆர்யா. அவருக்கு வயது வெறும் 24 தான்.
இன்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தை டீப் பாக்வேர்டு பாயிண்டில் ஒரு அபாரமான சிக்ஸர் வைத்து ஆட்டத்தை துவங்கினார் பிரியான்ஷ் ஆர்யா.
அவரை கட்டுப்படுத்த அடுத்த பந்தே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோட்டை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் பிரியான்ஷ் ஆர்யா ஆடிய ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு வான்கடே மைதானத்தில் பிளேஆஃபில் சிஎஸ்கேவின் கனவை சேவாக் நொறுக்கிய ஆட்டத்தை நினைவு படுத்தியது.
ஆர்யா பேட்டிங் ஸ்டைலைப் பார்த்தால் சேவாக் இடதுகையில் பேட்டிங் செய்ததுபோல்தான் இருந்தது, அதாவது சேவாக் அதிரடியைப் போன்று ஆர்யாவின் அதிரடி ஆட்டமும் இருந்தது. பதிராணா வீசிய வைடு யார்கர், புல்டாஸ் என எது வீசினாலும் பந்து சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது. சிஎஸ்கே அணியில் நேற்று ஒரு பந்துவீச்சாளரையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பிரியான்ஷ் ஆர்யாவை எவ்வாறு அவுட் ஆக்குவது என தெரியாமல் சென்னை அணியினர் திணறி வந்தனர்.
பிரியான்ஷ் ஆர்யா டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். கௌதம் கம்பீரின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி அவர் பெற்றார். டெல்லி பல்கலைகழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
ஐபிஎல் டி20 வலைதள தகவல்படி, ஆர்யா 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியை வழிநடத்துகையில் தனது சிக்ஸர் அடிக்கும் திறனுக்காக பெரிதும் அறியப்பட்டவர்.
கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக்கில் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக, தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். அதனாலேயே ஆர்யாவை ஸ்பெஷல் ப்ளேயர் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அழைத்துள்ளார். அந்த ஆட்டத்தில் அவரது அணி 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது.
அந்த போட்டியின் மூலம் கவனம் பெற்றவருக்கு சையது முஷ்டாக் அலி கோப்பையில் டெல்லி அணி சார்பாக விளையாட இடம் கிடைத்தது. அதில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு மிரட்டல் ஆட்டம் ஆடினார்.
புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்த அந்த அணிக்கு எதிராக, 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகளை அடித்து 103 ரன்கள் எடுத்தார்.
கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராக தற்போது பிரியான்ஷ் ஆர்யா விளையாடியுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் அநாயசமாக சிக்ஸர்களை விளாசி அதீத ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து ஆர்யா கவனம் ஈர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் பார்வை பட, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரியான்ஷை எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. 3 கோடியே 80 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.
பிரியான்ஷுக்கு ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள் என்ன?
சிஎஸ்கே அணியில் பெரிய இலக்கை துரத்திச் செல்லும்போது, அதிரடியாக பெரிய ஷாட்களை அடிக்கும் பிக் ஹிட்டர்கள் யாருமில்லை. ஷிவம் துபே தவிர மற்ற யாரையும் பிக்ஹிட்டர்கள் வரிசையில் சேர்க்கமுடியாது.
பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் படுமோசமாக இருந்தது. 200 ரன்களை சிஎஸ்கே தொட்டது பெரிதாக இருந்தாலும், கடந்த போட்டிகளைவிட இதில் பரவாயில்லை என ஆறுதல்படலாம். மற்றவகையில் சிஎஸ்கே பந்துவீச்சும், பீல்டிங்கும் சுமார் ரகத்துக்கும் குறைவுதான் என்று பயிற்சியாளர் பிளெம்மிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த ஆட்டத்தில் மட்டும் நேற்று 9 கேட்சுகளை இரு அணி வீரர்களும் நழுவவிட்டனர். கேட்சை நழுவவிட்டாலும் பஞ்சாப் வெற்றியை தவறவிடவில்லை. ஆனால் சிஎஸ்கே அணி 5 கேட்சுகளை தவறவிட்டு ஆட்டத்தையும் கோட்டைவிட்டது. குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யாவுக்கு கலீல் அகமது, ரவீந்திரா, கேட்ச் பிடித்திருந்தாலே ஆட்டம் மாறியிருக்கும்.
சனிப் பெயர்ச்சி நிகழும் நாளை கணிப்பதில் ஜோதிடர்கள் முரண்படுவது ஏன்? அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025
கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,தோனி, ரவீந்திர ஜடேஜா
சிஎஸ்கேஅணியில் ஃபார்மில் இல்லாத வீரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் ஏதேனும் ஒருபோட்டியில் சிறப்பாக ஆடினாலும், பல போட்டிகளில் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுவார்கள்.
மோசமான கேப்டன்சியும், பேட்டிங்கும் தோல்விக்கு முக்கியக் காரணம். ஏனென்றால் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யாமல் போன பல போட்டிகளில் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அந்த போட்டிகளில் ருதுராஜ் பேட்டிங் சராசரி 13 ரன்களுக்கும் குறைவாக இருக்கிறது, இந்த ஆட்டத்திலும் ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் அதிகமான அழுத்தம், நெருக்கடியில் கேப்டன்சி பொறுப்பை ருதுராஜால் சரிவர செய்ய முடியவில்லை.
சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. ஜடேஜா மட்டும் 6 ரன்ரேட்டில் பந்துவீசியுள்ளார். ஆனால் மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவில்லாமல் ரன்களை வாரி வழங்கி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்
தோனியின் போராட்டம் வீண் - சென்னை அணி மீண்டும் தோல்வி
ஹர்திக் தடாலடியால் மும்பைக்கு கிடைத்த சாதகத்தை ஒரே ஓவரில் காலி செய்த சகோதரர் க்ருணால்
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,யான்சென்
ஆட்டத்தை மாற்றிய 3 சிக்ஸர்கள்
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் " இந்த ஆட்டத்தில் பேட்டிங் மட்டுமே சற்று நேர்மறையாக இருந்தது. டாப் ஆர்டர் வலுவாகஇருந்த போதிலும் அதிலும் சின்ன தவறு நடந்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. குறிப்பாக ரன்ரேட்டை சரியாகக் கொண்டு சென்றிருந்தாலே போட்டியை இன்னும் நெருக்கமாக வந்திருக்கலாம்.
களத்தில் நாங்கள் பீல்டிங், பந்துவீச்சில்தான் ஆட்டத்தை இழந்தோம். குறிப்பாக மந்தமான பீல்டிங், பந்துவீச்சில் பலமுறை லென்த்தை தவறவிட்டோம். ஆர்யாவின் அதிரடி ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி தவறான லென்த்தில் பந்துவீச வைத்தது. அப்போதே ஆட்டம் எங்களைவிட்டு சென்றது.
பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் இந்த ஆட்டத்தில் 18 ரன்களில் தோல்வி அடைந்தோம், அதாவது 3 சிக்ஸர்கள். இந்த 3 சிக்ஸர்களை பேட்டர்கள் கூடுதலாக அடித்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும், இந்த சீசன் மிகவும் வெறுப்படைய வைக்கிறது. கேட்ச் பிடிப்பது மோசமாக இருக்கிறது, பஞ்சாப் தரப்பிலும் பல கேட்சுகளை நழுவவிட்டனர். மின் ஒளியில் கேட்சை தவறவிட்டார்கள் என்று நான் நழுவவில்லை, உண்மையில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். அது கவலைக்குரியதுதான்.
ஐபிஎல் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், டாப்3 பேட்டர்கள் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. இன்னும் வலுவான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதே ஆட்டத்தை நடுப்பகுதிவரை கொண்டு வர வேண்டும். நல்ல பந்துவீச்சு இருந்தாலே பேட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும். அனைத்தையும் மறுஆய்வு செய்வோம். ஆனால் இது மோசமான ஆட்டமாக சேஸிங்காக இல்லை. 3 சிக்ஸர்கள்தான் எங்களை தோல்வியில் தள்ளியது" எனத் தெரிவித்தார்
இன்றைய ஆட்டம்
குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம் - ஆகமதாபாத்
நேரம் - இரவு 7.30 மணி
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
நாள் - ஏப்ரல் 11
இடம் - சென்னை சேப்பாக்கம்
மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
நாள் - ஏப்ரல் 13
இடம் - டெல்லி
ஆர்சிபி அணியின் அடுத்த ஆட்டம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் அணி
நாள் - ஏப்ரல் 10
இடம் - பெங்களூரு
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,நிகோலஸ் பூரன்
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 (5 போட்டிகள்)
மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 (5 போட்டிகள்)
சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 199 (5 போட்டிகள்)
நீலத் தொப்பி
நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட் (5 போட்டிகள்)
கலீல் அகமது (சிஎஸ்கே) - 10 விக்கெட் (5 போட்டிகள்)
ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) - 10 விக்கெட் (5 போட்டிகள்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c39jjkydlxdo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.