24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
மக்களின் வேட்கை, கௌரவமாக வாழ்வது, theoretically அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை எடுத்தாளவேண்டிய தலைமைகள் இப்படி வருடாந்த கொண்டாட்டங்கள், வெற்று சுலோகங்களை தமது அரசியல் நலனுக்காக மட்டும் பாவித்துவருவதும், நம்பியிருந்த மக்களை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற மனநிலைக்கு கொண்டுவந்த தலைமைகளது செயற்பாடுகள் மேலும் மக்கள் வாழ்வை எதிர் மறையிலேயே( அவர்கள் வாழ்வை அல்ல) செல்லல வைக்குமேயொழிய எந்த முன்னேற்றத்தையும் காணப்போவதில்லை. இப்போதைய நிலையில் தாயகத்தில் படித்து அங்கு தொழில் செய்யலாம், சுய வியாபாரங்களைச் செய்யலாம் என்ற மன நிலையை அங்குள்ள படித்துக்கொண்டிருக்கும் இளவயதினரிடைநே துளிர் விட தொடங்கியுள்ளதை அங்கு சென்ற போது அவதானித்தேன். அதையும் கெடுத்து அவர்களையும் வெளிநாடு நோக்கி படையெடுக்க வைத்து டயஸ் போரா தமிழ் தேசியத்தை கட்டியெழுப்புவது ஒரு சிலருக்கு வாழ்வை வளமாக்கவும் உதவுமேயொழிய எதுவும் நடக்கப்போவதில்லை.
-
ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம்
ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர்: இடதுபுறம் கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன்புறம் ரெய்ட் வைஸ்மேன் (கமாண்டர்), வலதுபுறம் ஜெரிமி ஹன்சென் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் & ஆலிசன் ஃபிரான்சிஸ் பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் மனிதர்கள் நிலவை நோக்கி பயணிக்கும் திட்டத்தை மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாசா ஏவக்கூடும். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் ஆர்ட்டெமிஸ்-2 திட்டம், அதன் விண்வெளி வீரர்களை இதுவரை எவரும் சென்றிராத தூரத்திற்கு விண்வெளியில் அழைத்துச் செல்லும். 1960கள் மற்றும் 70களின் அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் தரையிறங்குவதற்கான ஒரு தளத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்ட்டெமிஸ்-2 எப்போது ஏவப்படும்? மிகச் சமீபத்தில் சாத்தியப்படக்கூடிய ஏவுதல் தேதி மார்ச் 6. அந்த மாதத்தின் முதல் பாதியில் மேலும் நான்கு வாய்ப்புகளும், ஏப்ரல் முதல் வாரத்தில் ஐந்து கூடுதல் வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன: மார்ச்: 6, 7, 8, 9 & 11 ஏப்ரல்: 1, 3, 4, 5 & 6 பிப்ரவரியில் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறு, 'வெட் டிரஸ் ரிஹர்சல்' எனப்படும் ஏவுதலுக்கு முந்தைய சோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. ஏவுதள கோபுரத்தை ராக்கெட்டுடன் இணைக்கும் உம்பிலிகல் இணைப்பிலிருந்து ராக்கெட் எரிபொருள் கசிந்ததால் இந்தச் சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதைத் தாண்டி, நிலவு அதன் சுற்றுப்பாதையின் பொருத்தமான பகுதியில் இருக்கும் வரை திட்டமிடுபவர்கள் காத்திருக்க வேண்டும். எனவே ஏவுதலுக்கான காலம் அதற்கேற்ப தீர்மானிக்கப்படுகின்றன. நடைமுறையில், இது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ராக்கெட்டை சரியான திசையில் செலுத்தக்கூடிய சுமார் ஒரு வார காலத்தையும், அதைத் தொடர்ந்து ஏவுவதற்கான வாய்ப்புகள் இல்லாத சுமார் மூன்று வார காலத்தையும் உருவாக்குகிறது. ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர் யார்? ஆர்ட்டெமிஸ்-2வின் நான்கு பேர் கொண்ட குழுவில் நாசா கமாண்டர் ரெய்ட் வைஸ்மேன், விமானி விக்டர் க்ளோவர், திட்ட நிபுணர் கிறிஸ்டினா கோச் ஆகியோர் உள்ளனர். இரண்டாவது திட்ட நிபுணராக கனேடிய விண்வெளி முகமையின் ஜெரிமி ஹன்செனும் இதில் இருப்பார். அமெரிக்க கடற்படையில் 27 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த வீரரான வைஸ்வேன், ஒரு விமானி மற்றும் பொறியாளர். அவர் மேரிலாந்தின் பால்டிமோரில் வசிக்கிறார். அவர் 2009இல் நாசாவால் விண்வெள் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2014இல் எக்ஸ்பெடிஷன் 41 திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் விமானப் பொறியாளராகப் பணியாற்றினார். க்ளோவர், 2013இல் நாசா விண்வெளி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இதற்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-1 திட்டத்தின் விமானியாகப் பணியாற்றினார். அவர் மூன்று முதுகலை பட்டங்களைப் பெற்றுள்ளார். கலிஃபோர்னியாவில் பிறந்த அவருக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். மிச்சிகனில் வளர்ந்தவரான கோச், 2013இல் விண்வெளி வீரர் ஆனார். அவர் 2019இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றினார். ஒற்றை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் முற்றிலும் பெண்களைக் கொண்ட முதல் விண்வெளி நடையிலும் பங்கேற்றார். ஹன்சென் போர் விமானியாகப் பணியாற்றிய பிறகு 2009இல் கனேடிய விண்வெளி முகமையில் சேர்ந்தார். நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தலைமை தாங்கிய முதல் கனேடியரான இவர்தான், நிலவு பயணத்தில் இடம்பெறும் முதல் கனேடியரும்கூட. நிலவுப் பயணத்தின்போது ஆர்ட்டெமிஸ் குழுவினர் என்ன செய்வார்கள்? நாசாவின் பிரமாண்டமான ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் என்றழைக்கப்படும் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலன் ஆகியவற்றுடன் மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன், ஓரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். நிலவில் தரையிறங்குவதற்குச் சாதகமான வகையில் விண்கலனை திருப்புவது மற்றும் வரிசைப்படுத்துவதை பயிற்சி செய்ய, பூமியின் சுற்றுப்பாதையில் ஓரியன் விண்கலனை கைமுறையாக (Manual) இயக்குவதும் இதில் அடங்கும். பின்னர் அவர்கள் ஓரியனின் உயிர் காக்கும் அமைப்பு, உந்துவிசை, சக்தி, வழிசெலுத்தல் அமைப்புகளைச் சரிபார்க்க நிலவுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு புள்ளிக்குச் செல்வார்கள். குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவோராகவும் செயல்படுவார்கள். அவர்கள் தொலைதூர விண்வெளியில் இருந்து தரவுகள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார்கள். அவர்கள் எடையற்ற நிலையில் ஒரு சிறிய அறையில் வேலை செய்வார்கள். பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட கதிர்வீச்சு அளவு அங்கே அதிகமாக இருக்கும், ஆனால், அது பாதுகாப்பானதாகவே இருக்கும். பூமிக்குத் திரும்பும்போது, விண்வெளி வீரர்கள் வளிமண்டலத்தின் வழியாக ஒரு கரடுமுரடான பயணத்தை எதிர்கொள்வார்கள். அதோடு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுவார்கள். ஆர்ட்டெமிஸ்-2 நிலவில் தரையிறங்குமா? இல்லை. இந்தத் திட்டம் ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும். ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தை ஏவுவது 2028க்குள் நடைபெறும் என்று நாசா கூறுகிறது. ஆனால், நிபுணர்கள் இது மிகவும் சாத்தியமற்ற ஒரு காலக்கெடு என்கிறார்கள். விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் விண்கலன் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இது ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் லேண்டர் அல்லது ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் வடிவமைத்த விண்கலனாக இருக்கும். அமெரிக்க நிறுவனமான ஆக்சியம் தயாரிக்கும் புதிய விண்வெளி சீருடைகளும் இன்னும் தயாராகவில்லை. ஆர்ட்டெமிஸ்-3 இறுதியாக ஏவப்படும்போது, விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவத்திற்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு, நிலவில் மனிதர்களின் நீடித்த இருப்பைக் கொண்டிருப்பதே இதன் நோக்கமாகும். ஆர்ட்டெமிஸ்-4 மற்றும் 5 நிலவைச் சுற்றி வரும் கேட்வே என்ற சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்கத் தொடங்கும். அதைத் தொடர்ந்து அதிக நிலவு தரையிறக்கங்கள், கேட்வேவில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படுவது, மேற்பரப்பில் செயல்படும் புதிய ரோபோடிக் ரோவர்கள் ஆகியவை இடம்பெறும். நிலவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீண்ட காலத்திற்கு மக்கள் வாழ்வதையும், வேலை செய்வதையும் தொடர்வதை உறுதி செய்வதற்குப் பல நாடுகள் ஈடுபடுத்தப்படும். நிலவுத் திட்டம் கடைசியாக எப்போது முன்னெடுக்கப்பட்டது? கடைசியாக மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்ட திட்டம் அப்பல்லோ 17 ஆகும். இது 1972 டிசம்பரில் நிலவில் தரையிறங்கியது, அந்த மாதத்தின் பிற்பகுதியில் பூமிக்குத் திரும்பியது. ஒட்டுமொத்தமாக, 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 12 பேர்தான் அதன் மேற்பரப்பில் நடந்துள்ளனர். இவையனைத்தும் அப்பல்லோ திட்டத்தின்போது நடந்தவை. நிலவுக்குச் சென்ற 24 பேரில், ஐந்து பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர். அமெரிக்கா முதலில் 1960களில் நிலவுக்குச் சென்றது. முதன்மையாக சோவியத் யூனியனை வீழ்த்தி தனது புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிலைநாட்டவே சென்றது. அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், அரசியல் ஆர்வமும் பொது மக்களின் ஈடுபாடும் குறைந்தன. அதோடு, எதிர்கால நிலவுத் திட்டங்களுக்கான நிதியும் குறைந்தது. ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் விருப்பத்தில் இருந்து உருவானது. ஆனால், இந்த முறை புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நீண்டகால இருப்புக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் பிற நாடுகளுக்கு உள்ளதா? மற்ற பல நாடுகள் 2030களில் மக்களை நிலவுக்கு அனுப்பும் லட்சியங்களைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் பிந்தைய ஆர்ட்டெமிஸ் திட்டங்களில் சேரவுள்ளனர், ஜப்பானும் இடம்பெறவுள்ளது. சீனா தனது சொந்த விண்கலனை உருவாக்கி வருகிறது. 2030க்குள் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் தரையிறக்கத்தை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து விண்வெளி வீரர்களை மேற்பரப்புக்கு அனுப்பி 2030 மற்றும் 2035க்கு இடையில் ஒரு சிறிய தளத்தை உருவாக்குவது பற்றிச் சிந்தித்து வருகிறது. இருப்பினும், தடைகள், நிதி அழுத்தங்கள், தொழில்நுட்ப பின்னடைவுகள் காரணமாக அதன் கால அட்டவணை மிகவும் கடினமானது எனக் கருதப்படுகிறது. இந்தியாவும் ஒரு நாள் தனது விண்வெளி வீரர்கள் நிலவில் நடப்பதைக் காணும் லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2023இல் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3இன் வெற்றிகரமான தரையிறக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா விண்வெளி ஆய்வு மையம் 2040க்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இது அதன் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு அப்பால் நகர்த்துவதற்கான ஒரு முயற்சியின் பகுதியாகும். கூடுதல் தகவல்கள்: கெவின் சர்ச் & எமிலி செல்வதுரை - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg5gj50n7rlo
-
நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி
நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 05 Feb, 2026 | 04:38 AM ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளித்தாருந்தால் இவ்வாறான போராட்டங்களே இடம்பெற்றிருக்காது. ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பரப்புக்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வது, பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பது, வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதென அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரையோகித்துவந்தனர். இவ்வாறு தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த காலங்களில் எம்மவர்கள் அகிம்சைவழியில் போராட்டங்களை மேற்கொண்டதுடன், அந்த அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில் எமது இளையோர் ஆயுதங்களை ஏந்திப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு புள்ளிவிபரத்தை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 222006 ஏக்கர் காணிகளே வனவளத்திணைக்களத்திடம் காணப்பட்டது. ஆனால் தற்போது வனவளத்திணைக்களத்திடம் 432000 ஏக்கருக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வன இலாகாவிடம் மாத்திரமுள்ளன. குறிப்பாக்தமிழர் தாயகப் பரப்புகளில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, படையினர் உள்ளிட அரச இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகப்பாரிய அளவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமக்கு நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. தமிழர்களின் நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் எங்கு போவது. தமிழர்களுக்கு உதவிகளைச்செய்கின்றோமென ஆட்சியாளர்கள் ஒருபுறம் நாடக நடிகர்களைப்போல செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்கின்றனர். எமது கடற்பரப்புக்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாத நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர். நில அபகரிப்புக்களின்மூலம் எமது தமிழ் மக்கள் சுதந்திரமாக விவசாயத்தை மேற்கொள்ளமுடியாதநிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுக்குரிய மேச்சல் தரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால் நடைவளர்ப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் உரிய கவனஞ்செலுத்துவதில்லை. இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தவறிவருகின்றனர். இவ்வாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் எமது தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் ஆட்சியாளர்களால் துன்பப்படுகின்றனர். தற்போது தமிழர்தாயகப் பரப்பில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அளவில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே தமிழர் தாயகப்பரப்பில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறான திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அங்கு திட்டமிட்டு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தியதன்மூலம் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கத்தின்கீழ் தற்போது ஆட்சியாளர் கொண்டுவந்துள்ளனர். ஆட்சியாளர்களின் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களின் அடுத்தகட்ட செயற்பாடுகள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை நோக்கி நகர்கின்றன. எனவே இவ்வாறாக தமிழர்களுக்கு ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்படும்போது நாம் அதற்கெதிராக நீதிக்குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது. இவ்வாறு தமிழர்கள்மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்போது, இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழர்களால் எவ்வாறு பங்கேற்கமுடியும். ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறாக அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றபோது, தமிழ் மக்கள் அதற்கெதிராக போராடுவதற்காக வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே ஆட்சியாளர்கள் தமிழர்களை இந்தநாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும். ஆட்சியாளர்களால் இவ்வாறு பலவழிகளிலும் தமிழர்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றநிலையில், சிலஅமைச்சர்கள் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்வதாகவும், உதவிகளைச் செய்வதாகவும் பாரிய பொய்களைக் கூறிவருகின்றனர். தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் இல்லை. எனவே தமிழ் மக்களுக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளியுங்கள். தமிழர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வைவழங்க முன்வாருங்கள். உரிமைகளை வழங்குங்கள். கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குங்கள். தமிழ் மக்களை இந்தநாட்டில் சுதந்திரமாகவாழவிடுங்கள். இந்தநாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஆட்சியாளர்களால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதாலேயே இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களால் வீதியில் இறங்கி இவ்வாறான மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பில் தமிழ் மக்கள் தமக்குரிய அதிகாரங்கள், உரிமைகளுடன் எப்போது தன்நிறைவுபெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்களோ அன்று தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரநாள் - என்றார். https://www.virakesari.lk/article/237840
- Today
-
அந்த... நூறு பேர், யார்?
வாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம். இந்த நூறு பேர் யார்? நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம். நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது. கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா? அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்? காலச்சக்கரம் சுழலச் சுழல, ஒரு காலத்தில் மிகப் பெரியதாகத் தெரிந்த பல பிம்பங்கள் இன்று சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. இன்னும் ஒரு நூறு வருடங்கள் கழித்து நம்முடைய நிலையும் இதுதான். நாம் இன்று யாருக்காகப் பயந்து நம் சந்தோஷங்களைத் தொலைக்கிறோமோ, அன்று அந்த நூறு பேரும் இருக்க மாட்டார்கள் நாமும் இருக்க மாட்டோம். அப்படியிருக்க, இன்றைய பொழுதை மற்றவர்களின் திருப்திக்காகத் தியாகம் செய்வது எவ்வளவு பெரிய அறியாமை? வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. இதில் நாம் எடுக்கும் முடிவுகளும், நாம் அடையும் வெற்றிகளும், ஏன் நாம் சந்திக்கும் தோல்விகளும் கூட நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும். மற்றவர்களின் கைதட்டலுக்காகவோ அல்லது விமர்சனங்களுக்காகவோ நாம் நம் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் காயப்படுத்தாமல், எவரையும் ஏமாற்றாமல், நம் மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வதே ஒரு மனிதன் அடையும் ஆகச்சிறந்த வெற்றியாகும். நம்முடைய வாரிசுகள் என்றாவது ஒருநாள் நம் புகைப்படத்தைப் பார்க்கும்போது, “இவர் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து பயந்து வாழ்ந்தவர்” என்று சொல்லாமல், “இவர் தனக்குப் பிடித்த மாதிரி, யாருக்கும் அஞ்சாமல், மிக நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்” என்று சொல்ல வேண்டும். அதுதான் நாம் விட்டுச் செல்லும் உண்மையான சொத்து. எனவே அன்பானவர்களே, அந்த நூறு பேரின் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காமல், உங்கள் மனதின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள். உங்களது தனித்துவமான வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியோடு வாழுங்கள். ஏனெனில், உங்கள் கதையில் நீங்களே நாயகன். Balaji Srinivasan
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
எப்படிவது தமிழ்நாட்டில் பாஜாகவை ஆட்சிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக மலையாள செபஸ்டியான் கொண்டுவந்த தந்திரம் அது தோல்வி அடைந்த மும்பை சிவசேனாவின் கொப்பி.
-
இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்…
இதுவும் ஒரு தமிழீழ மருத்துவக் கதை தான்… 1992 கார்த்திகை 23 ஆம் நாள் ஒரு பெரு வீரன் எம்மை விட்டு விதையாகிய நாள். லியோ என்றும் மலரவன் என்றும் நாமம் கொண்ட வேங்கை அந்த மகாவீரன். பசீலன் -2000 என்ற விடுதலைப்புலிகளினால் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி அணி ஒன்றின் அணித்தலைவன். யாழ்கோட்டை, மணலாறு, முல்லைத்தீவு, கொண்டச்சி, மாங்குளம் சிலாவத்துறை காரைநகர் என்று பல முகாம்களின் வெற்றிக்கு வலுச்சேர்த்த அந்த அணியின் திறன் வாய்ந்த அணித்தலைவன். யாழ் மாவட்டத்தின் மாணவரமைப்புப் பொறுப்பாளர். அப்படி பலவற்றை சொற்களால் அடுக்கி அவன் வீர வரலாற்றை மேலெழுப்பிக் கொண்டே செல்லலாம். மணலாற்றுக் காட்டில் இருந்து 1991 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி ஆரம்பித்த மாங்குளம் முகாம் மீதான் முற்றுகை மற்றும் கைப்பற்றல் நடவடிக்கைக்காக தனது பீரங்கிகளுடனும் தனது அணியோடும் பயணித்த ஒரு பெரும் பயணத்தை இலக்கியப்படைப்பாக்கி அதற்குள் மக்களின் நடைமுறை வாழ்வியலை, போராளிகளின் வீரதீரங்களை, அவர்கள் படும் வேதனைகளை, பிரிவுகளை, வெற்றிகளை “போருலா” என்று பெயரெடுத்து போர்ப்புதினமாக எமக்குத் தந்த இலக்கிய வீரன். பணியில் சிரத்தையும் தேசம் மீது கடுமையான பாசமும், தமிழீழ மண்மீட்பில் நம்பிக்கையும், அண்ணன் மீது அளவில்லாத நேசமும் கொண்டவர். தனது நண்பர்கள் ஒவ்வொருவராய் வீழ்வது கண்டு துடித்துப்போகும் ஒவ்வொரு தடவைகளிலும் அவரது கரங்களின் ஒன்று இறுகப்பற்றியது துப்பாக்கிப் பிடிகளை. மறுகரம் இறுகப்பற்றிக்கொண்டது எழுத்து எனும் பெரும் ஆயுதத்தை உருவாக்கும் பேனாவை. அதனால் எம் மனங்களில் என்றென்றும் நேசத்துக்குரிய மகாவீரனாகிவிட்டார். 1992 ஆம் வருடம் பலாலி இராணுவமுகாமை சுற்றி இருந்த 150 காவலரண்களை தகர்க்கும் சண்டையை திட்டமிட்ட போது, களமுனையின் ஒரு பகுதி அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது பசீலன் அணியில் இருந்து அரசியல்துறைக்கு பிரிவு மாற்றப்பட்டிருந்தார் மலரவன். அந்த நிலவொளி கூட இல்லாத வெற்று இருட்டுக்குள் சண்டை தொடங்கியது. அதற்குள் இருந்துகொண்டு வெற்றிகளை சுவைத்துக்கொண்டிருந்த எமது அணிகள். பகைவன் தமது நிலைகளை விட்டு ஓடத்தொடங்கினான். பகையணிகளிடம் இருந்து கைப்பற்றும் ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் உடனடியாக பின்னால் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் போராளிகள். அதற்காக விநியோக அணி வெகு சிரமத்தின் மத்தியிலும் தமது உயிரைத் துச்சமென மதித்து ஓடிக்கொண்டிருந்தன. சண்டையணிகளுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் இந்த அணியை வழிநடாத்துபவனாக மலரவன் ஓடித்திருந்தார். பிரிகேடியர் தமிழ்செல்வனின் கட்டளையை ஏற்று நடப்பதாலோ என்னவோ களமுனையின் முன்னிலைக்கு செல்வதற்கு அவனால் முடியவில்லை. சண்டையணிகளோடு பயணிக்க அனுமதி அவரால் மறுக்கப்பட்டிருந்தது. தன்னுடனே நிற்குமாறு தமிழ்செல்வன் பணித்திருந்தார். பணிக்கப்பட்ட கட்டளையை மீற முடியாது வரும் ஆயுத தளபாடங்களை பின்னணிக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார் மலரவன். அதே நேரம் களமுனையின் பின்னணியில், களமருத்துவர்களை ஒருங்கிணைத்தபடி ஒரு வேங்கை பிரதான மருத்துவநிலையில் இருந்தார். வைத்திய கலாநிதியான சுஜா என்ற அந்த புலிவீரன் விழுப்புண்ணடைந்து வரும் வேங்கைகளின் குருதி மண்ணுக்கு உரமாகிவிடாமலும் அவர்களின் உயிர்கள் பிரிந்து விதையாகிவிடாமலும் இருக்க தன் மருத்துவத்திறனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளரும் போராளி மருத்துவரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பழைய மருத்துவ மாணவனும் மருத்துவக் கலாநிதியுமாகிய அந்த சகோதரனும் மலரவனும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். இரு சகோதரர்களும் ஒரே களமுனையில் வேறு வேறு பணியில் சோர்வின்றி தமது பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். அன்றும் அப்படித்தான். இருவரும் தம்பணி செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எதிரியின் பல எறிகணைகள் பிரிகேடியர் தமிழ்செல்வனின் அணியிருந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தன. மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். பலர் விழுப்புண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னணி மருத்துவநிலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அதில் மலரவனும் படுகாயமடைந்து பின்நிலைக்கு அனுப்பப்படுகிறார். ஆனால், மருத்துவ நிலைக்கு கொண்டு செல்ல முன்பே மலரவனின் உயிர் பிரிந்து விதையாகிவிட்டது. வோக்கிகள் மலரவனின் பெயர் தாங்கி சோகச் செய்தியை போராளிகளிடையே கொண்டுபோய் சேர்க்கிறது. பலநூறு போராளிகளின் உயிரைக் காத்த அந்த மருத்துவ சகோதரனுக்கும் அச்செய்தி வந்து சேர்கிறது. அவர் எத்தனையோ உயிரற்ற போராளிகளின் உடலங்களைப் பார்த்திருக்கிறார். சிதறிப்போன மக்களின் வெறும் தசைத்துண்டங்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் எல்லாம் அவர் திடமாக உறுதி பெற்றிருக்கிறார். அடுத்த கணமே கலங்கிய விழிகளைத் துடைத்துவிட்டு அடுத்த போராளியைக் காப்பாற்றிவிட துடித்திருக்கிறார். அப்படியானவருக்கு தன் தம்பியும் உயிரற்ற உடலாக வந்திருப்பது பெரும் அதிர்ச்சி தான். ஒருவேளை சாவு மலரவனை அணைத்திருக்காவிட்டால் சுஜா அண்ணன் தன் தம்பியை நிச்சயமாக காப்பாற்றி இருப்பார். பல ஆயிரம் போராளிகளின் உயிர்களைக் காத்த அந்த கரங்கள் மலரவன் உயிரையும் நிச்சயம் காப்பாற்றி இருக்கும். இருந்தாலும் அதற்கு முன்பே மலரவன் விதையாக வீழ்ந்து விட்டார். மருத்துவ சகோதரனின் அடிமனதில் உள்ள பல ஆயிரம் வேதனைகளோடு தம்பியின் பிரிவு வேதனையும் இணைந்து கொள்கிறது. அவரது கரங்கள் மருத்துவக் கருவியை இறுகப்பற்றிக்கொள்கின்றன. கால்கள் இன்னொரு போராளியின் உயிரைக்காப்பாற்ற வேகம் கொள்கின்றன. விழிகள் மட்டும் தம்பிக்காக பலமணி நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன. ஏனெனில் அவரும் எம்மைப்போன்ற சாதாரண மனிதப்பிறவியாக புவியில் உதித்துத் தானே விடுதலை எனும் பெருவிருட்சத்தை தாங்கும் விழுதுகளில் ஒரு மூத்த மருத்துவக்கலாநிதியாக உருவாகியிருந்தார். அவருக்கும் உள்ளே வலித்திருக்கும். விழிகள் உதிரும் நீரை அவர் யாரும் அறியாவண்ணம் எத்தனை தடவை துடைத்திருப்பார். அப்படியே இன்றும் அவர் துடித்துப்போனார். ஆனால் “கடமை அவரை அழைத்துவிட நினைவுகளில் அவரின் தம்பி அமர்ந்து கிடக்க. விடுதலைப்போராட்டத்தின் இறுதி நாள்வரை ஓயாது ஓங்கி இருந்த அவரின் கரங்கள் மீண்டும் கரத்தில் தெலஸ்கோப்பினை இறுகப்பற்றிக்கொண்டன. நினைவோடு இ.இ.கவிமகன் நாள்: 04.02.2026
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
தலைவன் பேச்சு போட்டில களம் இறங்கிட்டான்… இனி ராஜசபால ஒவ்வொருத்தனும் சட்டையை பிச்சி கிட்டு பைத்தியமா அலைய வேண்டியதுதான்😂
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சக மனிதனாக, என் சொந்த மண்ணில் கெளரவமாக வாழ வேண்டும் என்ற உந்தல்… சுதந்திரவேட்கை….என்றும் போரடிக்காது. ஆனால் ஈரச்சாக்கால் மூடி மழுங்கடிக்கலாம்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அந்த தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் மக்கள் மத்தியில் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரணில் என்கிற நரி புலிகளோடு ஓரளவு நட்பு பாராட்டிக்கொண்டு புலிகளுக்கெதிராக ஒரு சர்வதேச வலைப்பின்னலையே ஏற்படுத்தியிருந்தார். தேர்தல் பிரச்சார மேடையில் மிலிந்த மொரகொடவும், நவீன் திஸாநாயக்காவும் தங்கள்கட்சி தேர்தலில் வெல்லும் அதன்பின் இலங்கை இராணுவம் புலிகளுடன் போரிடாது, அமெரிக்க இந்திய இராணுவமே நேரடியாக போரிடும் என்கிற ரகசியத்தை போட்டுடைத்தனர். அதனாலேயே மக்கள் ரணிலுக்கு வாக்குபோடுவதில் இருந்து பின்வாங்க வைக்கப்பட்டனர். அது மஹிந்தவுக்கு சாதகமானது. ரணில், புலிகள் மீது வன்மம் கொண்டார். அந்த தேர்தலில் ரணில் வென்றிருந்தாலும் தமிழ் மக்கள் அழிவு என்பது தடுக்க முடியாது. மஹிந்தரும் அதையே செய்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு அவர்மேல் உள்ளது. ரணில் வந்திருந்தால் அந்த குற்றச்சாட்டு இலங்கை அரசு மீது வந்திருக்காது தந்திரமாக தவிர்க்கப்பட்டிருக்கும்.
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
தமிழ் கட்சிகள் மீது வெறுப்பு என்பதால், யூ என் பி, சஜித், வேறு யாருக்கும் போடவில்லை அல்லவா? இலங்கையின் சுதந்திர நாளுக்கு அரச அதிகாரிகள் கூப்பிட்டால் போகவேண்டும் என்பது நியதிதான். ஆனால் ஒட்டு மொத்த பெற்றாரும் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என முடிவெடுத்தால்? மக்கள் இயல்பாகவே சிறிலங்கன் என உணர தலைப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது. வடகிழக்கு எங்கும். ஆனால் ஏனைய மாவட்டங்களை விட யாழில் இந்த காவடி ஆட்டம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. இதை சொல்ல அப்புகாத்து தேவையில்லை. ஊருக்கு போய் அவதானித்தாலே போதும். நிலமை கைமீறி போய்விட்டதாகவே எனக்கு தெரிகிறது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
"ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே " என்னும் கோணத்தில் கதை போயிருக்கு ........ F பாதரின் குறிதான் அழுக்காய் இருந்திருக்கு ........!- ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
இந்தத் தலைப்புக்காகவே... 1000 பேர் இந்தப் பக்கத்தை பார்வையிட வருவார்கள். 😂- கருத்து படங்கள்
- யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று சிறீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. 1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் உயிரந்த திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர். https://athavannews.com/2026/1463307- ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
ஆண்குறிகள் அழுக்கானவை நீலாவணை இந்திரா 1 கோதுமை ரொட்டியென நிலத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் சூரிய வெப்பம் தகிக்கின்ற பட்டப்பகலில் நான் அக்காட்சியைக் கண்டேன். ரோமன் ஃபாதரின் முகம் வழக்கத்தை விடவும் அதிகமாக விகாரமடைந்திருந்தது. அவர் கைகளில் இருந்த சவுக்கு மரக்கம்பின் முனையில் சிறுதுளி இரத்தம் அப்பியிருந்ததைக் கூட என்னால் கவனிக்கமுடிந்தது. வெயில் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த நண்பகலில், ஒழுங்காகவும் ஒழுங்கின்றியும் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளுக்கு நடுவில் குச்சானை முட்டுக்காலில் வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டுத்திரும்பிய நீலக்களிசனைக் கூட மாற்றாமல் கிழிக்கப்பட்ட சட்டையுடன் முகமெங்கும் அழுது வடித்த கண்ணீர்க்கறையுடன் வானத்தைப் பார்க்கும் படியாக அவன் இருந்தான். அவனது களிசனில் மூத்திரம் ஒழுகியிருந்தது. முன்னால் சில துண்டுப் பத்திரிகைகளும் அதில் அரைகுறை ஆடைகளுடனான நடிகைகளது புகைப்படமும் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நஞ்சு குடித்துச் செத்துப்போன டேவிட்டின் கல்லறைக்கு மேல் பெரு மணலைப் பரப்பி வைத்திருந்த ஃபாதர், அவனை முட்டுக் காலில் இருத்திய விதத்தைப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. அவர் அவனை எதற்காகவோ திட்டிக்கொண்டிருந்ததையும் வேசியின் மகன் என்று உரத்துக் கூறியதையும், நான் மறைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் நிச்சயமாகக் கையும்களவுமாகப் பிடிபட்டிருக்க வேண்டும். (சுயமைதுனம் செய்யும் போதே ஃபாதர் அவனைக் கண்டிருக்கவேண்டும்.) நிலத்தில் விழுந்த பனம்பழம் போன்ற தொத்திப்பான முகத்தையுடைய குச்சான், மெலிந்த தேகமுடையவன், எண்ணை அப்பிய முகத்துடன், கிறிஸ்துமஸ் இற்கு வழங்கப்படும் சட்டையை வருடம் முழுக்கப் போட்டுக் கொண்டு அலையும் எங்களைப் போன்றவர்களுள் அவனும் ஒருவன். அவனைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டுமென்றால் அவனது சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருக்கும் குறளி வித்தைக்காரனானவன், தனது சகோதரி மேர்லினுடன் தேவாலயத்தின் விடுதியில் தான் வசித்துவருகின்றான். அப்துல்லாஹ் தான் முதன் முதலாக எங்களுக்குச் சுயமைதுனம் செய்யப் பழக்கிவிட்டவன். ஆண்குறியிலுள்ள தோலை மேலும், கீழுமாக அசைக்கையில், அதிலிருந்து வெண்ணிறமாக திரவம் பீச்சியடிக்கும் போதெல்லாம் உடலுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை எங்களால் விவரிக்க முடியவில்லை. அதிலிருந்து நாங்கள் அடிக்கடி அதனைத் திரும்பத் திரும்பச் செய்ய ஆசைப்பட்டோம். அப்துல்லாஹ்வின் கரைவலைத் தோணியின் மறைவில், தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறைகளுக்குள் உள்ள பனை மரங்களுக்கிடையில், சவுக்குமரப் பற்றைக்குள், கடலை ஒட்டியிருந்த பாறைகளின் மறைவில் என நானும் குச்சானும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சுயமைதுனம் செய்து கொண்டோம். எங்களுக்குள் அது அலாதியான ஒரு ஆசையைத் தூண்டிவிட்டது. சாப்பாடு, தண்ணீர் போல நாங்கள் தினமும் அதனை செய்து கொண்டோம். பள்ளி லைப்ரரியில் இருந்து பழைய நாளிதழ்களில் உள்ள நடிகைகளின் புகைப்படங்களைக் கிழித்துக் கொண்டு வந்தோம். அதைப் பார்த்துக் கொண்டே செய்வதற்கும் பழகியிருந்தோம். அப்படியொரு நாளிதழ் புகைப்படத்தில் வெள்ளையாக இருந்த நடிகையை குச்சான் விரும்பத் தொடங்கினான். அவளைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் காதலிப்பேன் என்றும் கூறிக் கொள்வான். அவன் தனது அம்மா மர்யத்தையோ அப்பாவையோ பார்த்ததில்லை. ஆனால் இந்த நடிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாவின் பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போன்றே இருக்கும் என்று குச்சான் சொல்வான். ஒரு தடவை கூட அந்தப் புகைப்படத்தை அவன் பிரிந்ததே இல்லை. தனக்கு விருப்பமான கணிதப்புத்தகத்தினுள் அதை ஒழித்து வைத்திருந்தான். 2 சிம்னி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கருக்கல் பொழுதொன்றில் கடல் பெரும் பூதம் போலக் காட்சியளித்தது. மர்யம் சிவப்புக் கற்கள் பதித்து வைத்திருந்த தனது தங்கத் தோடுகள் இரண்டையும் கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்தாள். இரசமிழந்து தேய்ந்து போயிருந்த உடைந்த கண்ணாடியின் மீதிருந்த பல்லியொன்று அவளது நிர்வாணத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அவளது கழுத்தின் கீழே கண்டித்துப் போயிருந்த இரத்த வடுக்கள் தென்பட்டன. முலைகள் இரண்டும் பருமனில் பெரிதாகியிருந்தன. சகாயப்பனை திருமணம் செய்த போதிருந்த நீளமான முடி அவளிடமிருக்கவில்லை. அவை கொட்டப்பட்டிருந்தன. இடது காதுக்கு மேலால் சிறுநரையுடன் மொட்டையாகத் தலை தெரிந்தது. பெரும்பாலும் இப்போதெல்லாம் அவளிடம் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இளம் வயதாக இருந்தாலும் தொடர்ந்தும் அரிசிக்கும், சாளை மீன்களுக்காகவும் உடலை விற்றுக் கொண்டிருப்பவளிடம் தேகச்சத்து குறைந்து போயிருந்ததே அதற்கான காரணமாயிருந்தது. கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்த மர்யம் கைகள் இரண்டையும் உடலோடு சேர்த்து இறுகப்பற்றிக் கொண்டு எழுந்தாள். அன்று குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. கிழிந்த பாயில் படுத்துக் கொண்டிருந்த மேர்லின் மீது தன்னுடைய போர்வையை எடுத்துப் போர்த்தினாள். அவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. பைபிளை எடுத்துப் புரட்டினாள். மத்தேயு 11 வசனம் 28 ல் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்கிற வசனத்தை வாசித்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள். ரோமன் ஃபாதரேர் அவள் சேர்ச்சின் தாழ்வாரத்தில் இளைப்பாறுவதைக் கூட அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கையில் தேவாலயத்திற்குள் உள்ள தேவனால் இரட்சிக்கப்படுதல் நடைபெறாத காரியமாகவே இருந்தது. அவள் ஒரு விபச்சாரி என்பது அனைவருக்கும் பட்டும் படாமலும் தெரிந்திருக்க, அவள் தேவாலயத்திற்குள் வரக்கூடாதென்பதும் ஊரில் இருக்கும் வரைக்கும் கல்லறைத்தோட்டத்தில் ஊழியம் செய்ய வேண்டுமென்பதும் தேவாலய நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டமாயிருந்தது. இந்த நிலையில்தான் மர்யத்திற்கும் ஜேக்கப்பிற்குமான சந்திப்பு நிகழ்ந்தது. அந்தக் கடற்கரையோரக் கிராமத்திற்கு வருகை தந்திருந்த தொண்டு நிறுவனத்தின் ஊழியனாக அவன் இருந்தான். அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேக்கப்; கிறிஸ்தவத் தொண்டு நிறுவனமொன்றின் கணக்காளராக இருந்தான். சுனாமியால் சிதிலமடைந்த தேவாலயத்தினைப் புனரமைப்புச் செய்து மீளவும் ரோமன் ஃபாதர் மூலம் கிறிஸ்தவச் சபைக்கு ஒப்புக் கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் ஃபாதர் அவனிடம் மட்டுமே குழைந்து குழைந்து பேசுவார். அதிக வளர்த்தியுடன் இருந்தவன் நவீன முறையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தேவாலயத்தின் நில வரைபடமொன்றைத் தன்னோடு எப்போதும் வைத்திருந்தான். அதனுடன் தேவாலய ஊழியர்கள் தங்குவதற்கென ஒரு தங்குமிடமும், சமையலறையும் அதற்கான தாழ்வாரமும் கூடவே கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலைத்தளத்தைப் பார்வையிடுவதுடன் அதற்கான பணத்தினை வங்கியிலிருந்து பெற்று வழங்குவதும் பின்னர் தினக் கணக்குகளைக் குறித்து வைத்து வாரம் ஒரு முறை குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளருக்குக் கணினி மூலம் அறிவிப்பதும் அவனது வேலையாக இருந்தது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் ஜேக்கப்பை வெள்ளைக்கார பொஸ் என்றே அழைத்தார்கள். மர்யமும் அவனை அப்படியே அழைத்தாள். ‘வெள்ளைக்கார பொஸ் தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’ கட்டிட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மர்யத்தின் கேள்விகளால் உந்தப்பட்டு ‘என்ன?’ என்பது போல விழிகளை உயர்த்தினான். மர்யம் தனது கைகள் இரண்டையும் மேல் கீழாகத் தேத்தண்ணியை ஆற்றுவது போல் சைகை காட்டியபடி வெறும் குவளையொன்றை வாயருகே வைத்து ஊதி ஊதி தேநீரை அருந்துவது போல் பாவனை செய்தபடி தேநீர் வைத்திருக்கும் பிளாஸ்க்கைக் காட்டினாள். அவனும் மனதுவிட்டுச் சிரித்துக் கொண்டே ஆம் என்றபடி தலையாட்ட அவள் ஒரு குவளைத் தேநீரை அவனுக்கு வழங்கினாள். இஞ்சியின் ரசம் ஏறியிருந்த தேநீரைப் பருகியவன் சீனி அதிகம் என்றாலும் சுவையாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூற எதுவும் அறியாதவளாக மர்யம் சிரித்தபடி முகத்தைத் துடைத்தவாறே விடைபெற்றாள். ஜேக்கப் இற்கான உணவைத் தயாரிக்கவென இருந்த தேவாலயச் சமையற்காறி ரோசம்மா, மேல் வருத்தங்கண்டு வரமுடியாமல் போகவே அந்த வேலைக்காக மர்யம் நியமிக்கப்பட்டாள். ஜேக்கப்பிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும், வேண்டிய வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது, அவனது நீண்ட மேலங்கியை ஸ்திரி பண்ணிக்கொடுக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது. வெள்ளைக்காரர்களுக்கு அதிகம் பேசும் கறுப்பர்களைப் பிடிப்பதில்லை. ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்கிற ரோமன் ஃபாதரின் பல நிபந்தனைகளுடன், அவள் அவனது வசிப்பிடத்திற்குள் நுழைந்த போது, ஜேக்கப் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான். விடுதியில் யாரும் இல்லாததால் அவனது குளியலறைக்கதவு தாழ்ப்பாள் இடாமலே இருந்தது. முழு நிர்வாணத்துடன் அவன் குளித்துக் கொண்டிருந்த கோலம் மர்யத்திற்கு விநோத அனுபவமொன்றை ஏற்படுத்தியது. மெல்லிய பாடலொன்றை உரத்துப்பாடிக் கொண்டிருந்தவன் தனது முகத்தில் விழும் நீரை கழுத்தளவு வளர்ந்த தலை மயிர்கள் மீது கைகளால் தடவிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான். பக்கவாட்டில் சிலுவையில் அறையப்படாத இயேசு நாதராக இருந்தவன் பாடலின் சந்தத்திற்குப் பொருத்தமில்லாத குரல்வளத்தோடு அலட்டிக் கொண்டிருந்தது, ரசிக்கும் படியாக இல்லாதது போல அவனுக்கு வேறு விதமான உடலமைப்பும் இருந்ததையும் மர்யம் கவனித்தாள். தொடைகளிலோ, மார்பிலோ மயிர்கள் இல்லாத வழவழப்பான தேகத்தை ஜேக்கப் கொண்டிருந்தான். மார்பு சற்று இறக்கமாயிருந்தது. பெண்களுக்கான மார்பின் அளவில் பாதிக்கும் குறைவான அளவு கீழ் நோக்கியதான மார்பகங்களும் வழக்கத்திற்கு மாறான இடுப்பும் அவனுக்கிருந்தது. ஆண்குறி மிகவும் சிறியதாக இருந்தது. அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் பலரிலும் சிறிதான ஆண்குறி அவனுடையதாக இருந்தது. அடர்ந்து திரண்ட மயிர்களில் கீழிருக்கும் அடர்த்தியான வீங்கியபடியிருக்கும் சகாயப்பனின் நீண்ட ஆண்குறி ஸ்கலிதம் அடைந்தபின் சுருங்கிவிடும் அளவிலும் சிறிதான அளவில் அது இருந்தது. கடல் நீரின் உப்புத்திரண்டிருக்கும் ஆண்குறிகள் பலவற்றை அவள் உள்ளெடுத்துக் காறி உமிழ்ந்த தருணங்களையெல்லாம் அவனது உறுப்பு அவளுக்கு ஞாபகப்படுத்தியது. தலையைத் திருப்பி அவளை ஒரு கணம் அவன் பார்த்தான். எந்த சலனமுமின்றி அவனது இடுப்பின் கீழ் ஆராய்ச்சி நடாத்திக் கொண்டிருந்த மர்யத்தை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவன் உஷ்…. என்று சத்தம் எழுப்ப சுய நினைவுக்கு வந்தவள் சற்று பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக் கூரையை வெறித்தாள். ஈரமான தலையுடன் வெளியேறியவன் என்ன என்பது போல சைகை செய்ய பூனைக் கண்களுடன் இருந்த மர்யம் இன்னுமொரு பூனைக் கண்களுடன் இருந்தவனை உற்றுப்பார்த்தாள். சமையல் வேலைகளுக்காக வந்திருக்கிறேன் என்றவள் “கோக்கி” சமைக்க என்றாள். எனக்குத் தமிழ் தெரியும் என்றவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்தாள் மர்யம். அவனை நிர்வாணத்துடன் பார்த்தது குறித்து எதுவும் அலட்டிக்கொள்ளாதவன் உடைகளை மாற்றிவிட்டு மேசையின் மீதிருந்த மாம்பழத்துண்டுகளை உண்டுவிட்டு வெளியேறினான். விடுதி புழுதி படிந்து கிடந்தது. ஆங்காங்கே புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. மேசை மீதிருந்த சீனிப்பேணியைச் சுற்றி வட்டமிட்டு பின்னர் நேர்கோடாய் நகரும் எறும்புகள் சமையற்கட்டை நோக்கிப் பயணித்தன. கருகிய வாழைப்பழத்தோல்கள் நிலத்தில் கிடந்தன. ரோசம்மாள் வராததால் அவ்விடுதி சொற்பத்துக்குள்ளே ஜேக்கப்பால் குழப்பி வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டினாள் மர்யம். அறையைக் கூட்டித் துப்பரவு செய்தபின் பின் கிணற்று நீரை வாளியில் அள்ளி எடுத்துக்கொண்டு தரை முழுவதையும் கழுவிச்சுத்தம் செய்தாள். ஜேக்கப்பினுடைய உடைகளை முழுமைக்குமாகத் துவைத்துக் காயப் போட்ட பின்னர் சமையல் வேலைகளைச் செய்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். தாமதமாக வருகை தந்த ஜேக்கப், தனது கையில் ஒரு டைரியையும், ஆங்கில நூலொன்றையும் வைத்திருந்தான். உடனே மேலங்கியை மாற்றிவிட்டு உணவு மேசையில் அமர்ந்தவனுக்கு உணவு பரிமாற எத்தனித்தாள் மர்யம். அவளை இடைமறித்தவன் நீயும் உட்காரு சாப்பிடலாம் என்றான். அவள் ஒருவித ஆச்சரியப் பார்வையை அவன் மீது செலுத்தினாள். அதை உணர்ந்து கொண்டவன். ஆங்கிலத்தில் சிற் என்றான். தனித்து விடப்பட்டிருந்த செம்மறியாடொன்றை இழுத்துக் கட்டியது போன்ற மனநிலையில் அவளிருந்தாள். அவனது தமிழ் உச்சரிப்புக்கள் வேறுவிதமாக இருந்ததையும் மர்யம் கவனிக்கத் தவறவில்லை. ‘நீ சில்வியா பிளாத் படித்திருக்கிறாயா?’ என்றான். ‘இல்லை’ என்றாள் மர்யம். சில்வியா பிளாத்தின் டியூலிப் கவிதையை விவரிக்கத் தொடங்கியவன் அவை ரோஜா மலர்களிலும் அழகானவை. குளிர்காலம் வரும் போது அவை இன்னும் அழகாக இருக்கும். எப்போதெல்லாம் எனக்கு மனம் உறுத்தலாக இருக்கிறதோ அப்போதெல்லாம் டியூலிப் மலர்களுள்ள தோட்டத்தில் கவிதைகளுடன் நான் அமர்ந்து விடுவேன். அந்தப் பொழுது மிகவும் ஆசுவாசமாக இருக்கும். இன்றைய உணவு ரொம்பச் சுவையாக இருந்தது என்றவன், சில இனிப்புக்களைக் கொடுத்துச் சென்று வா என்று அவளை வழியனுப்பி வைத்தான். 3 தேவாலயமும், விடுதியும் கட்டிமுடிக்கப்பட்டுக் கையளிக்கப்படவிருந்த நாட்களுக்கு முன்னராகவே ஜேக்கப்பிற்கும் மர்யத்திற்கும் இடையில் இனம்புரியாதவொரு அன்பும், உறவும் காணப்பட்டது. திராட்சை வைனையும், தென்னஞ்சாராயத்தையும் அருந்திக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில் மேர்லினை நலம் விசாரித்தவன் தானும் அவளைப்போலவே வாழ ஆசைப்பட்டதைக் கூறினான். நிறைவெறியில் தலைமுத்திய தனது தந்தையைப் பற்றி ஏகத்திற்குத் திட்டித்தீர்த்தவன் தமிழும், ஆங்கிலமும் கலந்தபடி தனது கதையைக் கூறத் தொடங்கினான். ‘மர்யம் உன்னை நான் காதலிப்பதாக நீ நினைக்கிறாயா?’ என ஆரம்பித்தவன் அவளது பதிலைக் கேட்காமலே ‘இல்லை’ என்றான். அப்படியென்றால் உன்னுடன் செக்ஸ் வைக்க விரும்புகிறேனா என்று கேட்டவன் அதற்கும் அவளைப் பதில் கூற விடாமல் ‘நிச்சயமாக இல்லை… ஆம் நிச்சயமாக இல்லை’ என்று தலையை இருபக்கமாக ஆட்டியபடி பேசினான். சவுத் வேல்சில் தான் பிறந்தேன். சரியாகச் சொன்னால் அங்கே கடற்கரையோரமாகக் கழிமுகம் இருக்கும் யம்பா எனும் சிறுநகரம். அழகான நகரமது. எனது தந்தை அங்கிருந்த தபால் நிலையத்தில் கடைநிலை ஊழியராக இருந்தார். அங்கு வரும் பொதிகளைப் பக்கத்திலுள்ள இலூக்கா, பலினா, லிஸ்மோர் ஆகிய நகரங்களுக்கு விநியோகிப்பது அவரது வேலையாக இருந்தது. ஓரளவு திக்கிப் பேசும் அவரின் கோபத்தின் இரண்டாவது இலக்காக நான் இருந்தேன். ஆம்… முதல் இலக்காக எனது அம்மா இருந்தாள். எழுபதுகளின் பின்னர் அதிகமாகப் பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டமொன்றில் கரும்பு வெட்டும் வேலை அவளுடையது. தினமும் நீராவிப் படகொன்றில் பயணித்துக் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று விடுவாள். அங்கு நீள் வரிசையில் இருக்கும் கரும்புகளை வெட்டிய பின்னர், உருட்டிச் செல்லப்படும் சக்கர வண்டிகளில் ஏற்றிவிட்டு மீளவும் வெட்டச் சென்று விடுவாள். கரும்பு வெட்டு இல்லாத நாட்களில் தொழிற்சாலையில் இருக்கும் உபரி வேலைகளுக்காகவும் அவள் செல்வதுண்டு. பாடசாலை விடுமுறைவிடும் நாட்களில் நானும் அவளுடன் கரும்புத் தோட்டத்திற்குச் செல்வது வழக்கமாய் இருந்தது. அகலமான பாத்திகளின் இடையே நீள் வரிசையில் நடப்பட்டிருக்கும் கரும்புகள் உங்கள் ஊரிலுள்ள கிளிசரியாத் தடிகளைப் போன்று மொத்தமாகக் காணப்படும். அவற்றை அம்மா வெட்டித்தர, ஒவ்வொரு கரும்பாக நான் சக்கர வண்டியில் போடுவேன். அவள் என்னை வேலை செய்ய விடுவதேயில்லை. எனது உள்ளங்கை வியர்க்கும் போது அவற்றை தனது உள்ளங்கைகளால் அழுத்தித் துடைத்து விடுவாள். பின்னர் சிறுதானியங்களை அவித்த நீரை நானும் அவளும் பருகுவோம். அது ஒரு விலை குறைந்த சூப் போன்று இருக்கும். அங்கிருந்து பயணமாகி வீட்டிற்கு வரவும், அப்பா வரவும் சரியாக இருக்கும் என்று கூறிய ஜேக்கப் தலையின் மேல் சுழலும் மின்விசிறியை உற்று நோக்கினான். நான் ஒரு ஆண் போன்று இல்லாதது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது நடவடிக்கைகளில் ஒருவிதப் பெண் தன்மை இருந்தது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. வைத்தியர்கள் அது ஹார்மோன் பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். நான் முழுமையாக ஆணாக இருக்கவில்லை என்பதை நானே உணர்ந்தேன். ஆனால், நான் ஒரு முழுமையான பெண்ணும் இல்லை என்பதையும் உணர்ந்தேன். என்னோடு படித்த பையன்களது பிறப்புறுப்பு போன்று என்னுடையது இருக்கவில்லை, உடலும் இருக்கவில்லை ஆனால் திருநங்கை எனும் அளவிற்கும் நான் இருக்கவில்லை இப்படியான ஒரு உடலியல் பிரச்சனை எனக்குள் இருக்கிறதை என்னுடைய பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே நான் அறிந்து கொண்டேன். எனக்கு ஆண்களின் மீது ஈர்ப்பு வரவில்லை, பெண்களின் மீது சுத்தமாக வரவேயில்லை. இந்தச் சமூகத்தைக் குறித்தான ஒருவித அச்சம் என்னிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதை விடவும் தனது பெல்ட்டினால் அடிக்கும் அப்பாவிடம் அதிக பயம் இருந்தது. ஆணின் நடத்தைகள் கைவரப்பெறாத என்னை அவர் திட்டியபடியே இருந்தார். இதற்காகவே நான் ஆண் போன்று நடிக்கப் பழகிக்கொண்டேன். அவ்வப்போது அந்த நடிப்பு தோற்றுப்போகும் வேளையிலெல்லாம் நான் மீண்டும் தாக்கப்பட்டேன். என்னால் அம்மாவும், அம்மாவின் கண்ணீரால் நானும் திரும்பத் திரும்ப உடலளவிலும் மனதளவிலும் தாக்கப்பட்டோம். நான் முழுமையற்ற ஆணாகவும், முழுமையற்ற ஆண் உறுப்புடனும் பிறந்தது குறித்து வெட்கப்பட்டேன். என்னுடைய உடல் சார்ந்து எனக்குக் கழிவிரக்கம் உண்டானது. அதை நான் வெறுத்தேன். அப்பாவையும் வெறுத்தேன். ஆண்களையும், ஆண்மையையும் வெறுக்கத்தொடங்கினேன். நான் நேசித்தது அம்மாவை மட்டும்தான் என்றான். அப்பாவின் அதிகாரத்தில் இருந்து தப்பிக்கவே நான் திருச்சபையின் விடுதியில் சேர்ந்தேன். அப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றதொரு உணர்வு இருந்தாலும் அம்மாவை இழந்தது குறித்து வருத்தமடைந்தேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சென்றேன். தனிமையில் வாழ்ந்தேன். இந்தியாவில் இரண்டு வருடத்திற்கும் மேலாக இருந்தேன். தமிழை நன்கு பேசவும், கொஞ்சம் வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். கச்சத்தீவு தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வந்தேன் என்றவன் தனது வைனின் இறுதிமிடறையும் பருகினான். யாரும் எனது தனிமைக்கு ஆறுதலாக இருக்கவில்லை என்று அவளது கைகளைப்பற்றி முத்தமிடவும், மர்யத்தின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த்துளியொன்று ஜேக்கப்பின் கைகளை நனைக்கவும், ரோமன் ஃபாதர் அவ்விடுதிக்குள் நுழையவும் சரியாக இருந்தது. தேவாலயமும், விடுதியும் திறக்கப்பட நாட்குறிக்கப்பட்டவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளர்களும், பணியாளர்களும் வருகை தந்திருந்தனர். தேவாலயத்திற்கு வெள்ளை நிறமும், முன்னான மேல் தளத்திற்கு நீல வண்ணமும் பூசப்பட்டிருந்தது. ரோமன் ஃபாதரின் தலைமையில் ‘அர்ச்சிப்பு’ நிகழ்விற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தபடியிருக்க, ஊர் மக்கள் தேவாலயத்தின் முன்றலில் திரண்டிருந்தனர். வர்ண விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் கருணை பொங்கிய இயேசுவைத் தாங்கிய அன்னை மரியாள் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. மெழுகுவத்திகளுடன் ஊர்வலமாக மக்கள் திரண்டிருந்தனர். மேர்லினோ ஜேக்கப் வாங்கிக் கொடுத்திருந்த புதிய சட்டையை அணிந்திருந்தாள். மர்யம் வாசலில் நின்றபடி கருணை கூர்ந்த கடவுளைத் தொழுது கொண்டிருந்தாள். கொரிந்தியார் 13:7 இல் உள்ளபடி அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்ற வாசகம் பதிக்கப்பட்டிருந்த வளைவை நோக்கி வெளிப்பட்ட ஜேக்கப், வாசலில் நின்று கொண்டிருந்த மர்யத்தின் கைகளைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துவர ரோமன் பாஃதர் உள்ளிட்ட ஊரவர்கள் எரிச்சலுடன் அவனைப் பார்த்தனர். சமையற்காரி ரோசம்மாளைத் தாண்டி உள்ள வந்தவன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடத்தையில் பிழைத்த அகோலா, அகோலிபாளைத் தண்டித்தது போல் கர்த்தராகிய இயேசு இவளைத் தண்டிப்பதாக இருந்தால் அவளை தேவாலயத்தில் ஊழியம் செய்யும் நிலைக்கு வழியேற்படுத்தியிருக்கமாட்டார். அவளைக் கல்லெறிந்து கொல்லுமளவிற்கு இங்கு தூய்மையான ஆண்கள் எவருமில்லை. அவளது குடும்பத்தாரைத் தொண்டு நிறுவனம் தத்தெடுக்கிறது. இந்த ஆலயத்திற்குப் பாத்தியப்பட்டவளாகச் சாகும் வரை அவள் ஊழியம் செய்யட்டும். அவளுக்கான மாதச் சம்பளத்தை எங்கள் தொண்டு நிறுவனம் பார்த்துக்கொள்ளும். சமையல்காரி ரோசம்மாளுக்கு உதவியாகவும், சபை ஊழியர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவும் அவளுக்கு இந்தத் திருச்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். ரோமன் ஃபாதர் இதனை வழிமொழிவார் எனக்கூறவே சபை ஒரு கணம் துணுக்குற்று நின்றது. பசப்பி, வெள்ளைக்காரனை மயங்கிப் போட்டாள் என்று சில குரல்கள் அலை மோதப் புதிய தேவாலயத்தின் சுவர்களில் அவை எதிரொலித்து அடங்கின. மர்யம் கண்ணீர் மல்க ஜேக்கப்பின் கால்களில் விழவும் எதுவும் செய்ய முடியாத ஃபாதர் தேவனின் ஆசி அதுவென்றால் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், மெழுகுவத்திகள் கரைந்தொழுகிப் பலரது விரல்களைச் சுட்ட போதே திருப்பலி ஆரம்பமானது. சில தினங்களுக்குப் பின்னர் ஜேக்கப் அவுஸ்திரேலியா திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் வந்தது. இறுதியாக அவன் மர்யத்தைச் சந்திக்க வந்த போது அவள் அழுது கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியவன் அவளது புகைப்படமொன்றை அவளுக்குப் பரிசளித்தான். நான் எனது அம்மாவுடன் உன்னைக் காண மீண்டும் வருவேன் என்று ஜேக்கப் உறுதியளித்துச் சென்ற மூன்றே மாதத்தில் கர்ப்ப வாந்தியெடுத்தாள் மர்யம். மர்யத்திற்குத் தலைசுற்றலுடன், காய்ச்சலும் ஆரம்பமானது. ஊர் முழுக்க வெள்ளைக்காரனுடன் படுத்தெழும்பி விட்டாள் வேசை என்கிற பிதற்றல் கதைகள் அதிகம் உலாவத் தொடங்கின. விடுதியின் அறையில் அவளை வைத்திருப்பது ரோமன் ஃபாதருக்கு எரிச்சலைக் கிளப்பியது. அவளது வயிறு வளருகையில் தேகம் மெலிந்து சூம்பிப்போனது போலானது. சமையல்காரி ரோசம்மாள் மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள். மெல்ல மெல்ல இருமத்தொடங்கியவள் அடிக்கடி மூச்சிரைப்பிற்கு உள்ளானாள். இரத்தம் கலந்த சளி அவளுடலில் இருந்து வெளியானது. அதைக்குறித்து அவள் சட்டை செய்யாதிருந்தாள். இரவு முழுக்கக் கண்களை மூடியபடி இருந்தாள் பின் தீராத இருமலால் அவதிப்பட்டாள். பைபிளை வாசித்தபடி உளமாற தனது கணவன் சகாயப்பனை நினைத்துக் கர்த்தராகிய இயேசு என்னும் ஆண்டவர் தனக்குப் பாவமன்னிப்பு அளிப்பார் என்று புலம்பினாள். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. தேய்பிறை நாளொன்றில் சமையல்காரி ரோசம்மாள் உதவியுடன் குறைமாதக் குழந்தையாகக் குச்சானைப் பெற்றெடுத்தவள் காச நோயால் பீடிக்கப்பட்டதை அறியாமலே சிலநாட்களின் பின் இருமி இருமிச் செத்துப் போனாள். விடுதியில் இடம் கிடைத்தாலும், கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்காததால் கடற்கரையோரத்திலே அவளது சடலம் புதைக்க அனுமதிக்கப்பட்டது. ரோமன் ஃபாதர் தள்ளி நிற்க ரோசம்மாளும் சில மீனவர்களும் சேர்ந்து சடலத்தைப் புதைக்க குச்சானைக் கைகளில் ஏந்தியபடி மேர்லின் அழுது கொண்டிருந்தாள். அதன் பிறகு மர்யத்தின் அத்தனை வேலைகளையும் சேர்ச்சின் விடுதியில் தங்கியிருந்த மேர்லின் செய்து கொண்டே தனது தம்பியையும் ரோசம்மாளின் உதவியுடன் வளர்த்து வர எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் அவளை அடிமை போல நடாத்தத் தொடங்கினார் ரோமன் ஃபாதர். 4 வழக்கம் போல குச்சானும், நானும் தும்பி பிடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தோம். உலங்கு வானூர்தி போல படபடவெனச் சிறகடித்துக்கொண்டு திமிருடன் அலைகிற தும்பி, சிறு செடிகளுக்குள் புகுந்து புகுந்து பின்னர் ஏதாவது ஒரு செடியிலுள்ள இலையின் நுனியில் அமர்ந்திருந்து, தனது உடைந்த கண்ணாடிச்சில்லுகளை ஒட்ட வைத்திருப்பது போலிருக்கும் கண்களைச் சுழற்றி அங்குமிங்கும் இரைகௌவிகளை நோட்டமிட்டபடியிருக்கும். அப்போதுதான் குச்சான் தன்னுடைய வேலையைத் தொடங்குவான். அடிக்கடி வியர்த்துக் கொண்டிருக்கும் தனது உள்ளங்கையைச் சட்டையில் தடவியபடி முடிதும்பைச்செடிகளைக் கற்றையாகப் பிடித்து எடுத்துக் கொள்வான். முடிதும்மையின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகுடையதாயிருக்தும் அவை மேர்லினைப் போல, எனது அம்மாவைப் போல, எனது அம்மாவைப்போலவே அந்தத் துண்டுப்பத்திரிகையில் இருக்கும் நடிகையைப் போல மென்மையானதும் அழகானதுமாகும் என்பான். மேர்லினுக்கு முடிதும்பைப்பூக்களை ரொம்பப் பிடிக்கும் அதை அவள் வட்டமிட்டுச் சேர்த்து இடியப்பம் போல செய்வதுண்டு. அதற்காகவென முடிதும்பைப்பூக்களைப் பத்திரப்படுத்திவிட்டு இலைகளுடன் கூடிய செடிகளை எடுத்து வைத்திருப்பான். பூனைக்கண்களையுடை குச்சான் மெல்ல மெல்ல பூனை போல நடக்கத் தொடங்குவான். தும்பியின் வால் நீட்டப்பட்டிருக்கும் திசையில் பணிந்து செல்வான். முடிதும்பைக்கற்றையைக் கண நேரத்தில் அதன் மீது போடுவான். ‘ஒரே அமுக்கு…. மாட்டிவிட்டது… மாட்டிவிட்டது…’ என்று கத்துவான். பின்னர் ஒவ்வொரு முடிதும்பைச்செடிகளாக விலக்க அது செடிகளுக்கிடையே உள்ள இடைவெளியினூடாகப் பறந்துவிடும். அன்றும் அப்படித்தான் பல பிரயத்தனங்களுக்குப்பிறகு தும்பியொன்றைப் பிடித்தவன். சொப்பின் பேக்குகள் நிறைய முடிதும்பைப்பூக்களை எடுத்துக் கொண்டு பெருங்கடலின் அலைவாக்கரையோரமாக ஓட்டமெடுத்தான். கத்திக்கூச்சலிட்டபடி வெறி கொண்டு ஓடினான். மேர்லின்… மேர்லின்… இன்று நான் பச்சைத்தும்பியொன்றைப் பிடித்துவிட்டேன் என்றபடி ஓடினான். அவன் கூடவே நானும் பற்களும் ஈறுகளும் தெரியும் படிச் சிரித்துக் கொண்டே ஓடினேன். வழக்கத்திற்கு மாறாக, தேவாலயத்தின் முன்பு மக்கள் திரண்டிருந்தனர். விடுதியின் தாழ்வாரத்தில் மேர்லின் குத்துக்காலிட்டிருந்தாள். அவளது தலைமுடி நறுக்கப்பட்டிருந்தது. ரோசம்மாள் செருப்பை எடுத்து ஆங்… ஆங்… என்றபடி ரோமன் ஃபாதரை மூச்சிரைக்க அடித்துக் கொண்டிருந்தாள். அவள் நிறைவெறியில் மூர்க்கத்துடன் இருக்கும் புருஷனொருவன் பொண்டாட்டியைப் போட்டு அடிப்பது போல அடித்துக்கொண்டிருந்தாள். அப்பாவிப் பெண்ணை நாசம் செய்துவிட்டாயே பாவி என்று கத்தினாள். இறைவனுக்குச் சாட்சியாய்த் தொண்டு செய்ய வந்தவன் செய்கிற காரியமா எனப் பெண்களில் சிலர் குமுறினர். அங்கிருந்தவர்கள் அடித்த அடியில் ஃபாதரின் நீண்ட வெள்ளை அங்கி கிழிந்திருந்தது. கிழிந்த சட்டையில் தாடை உடைந்ததால் கசிந்திருந்த இரத்தத் துளிகள் அப்பியிருந்தது. அவர் முட்டுக்காலில் இருத்தப்பட்டிருந்தார். டேவிட்டின் கல்லறை மீதிருந்த குச்சானை விடவும் பரிதாபமான நிலையில் அவர் இருந்தார். செருப்பை வைத்திருந்த ரோசம்மாள் அவரது முகத்தில் காறி உமிழ்ந்தாள். என்னை…. மன்னித்…. என்று ஏதோ சொல்லத் தொடங்க ஃபாதரின் முகத்தில் மீண்டும் ஒரு அடி விழ, அவர் நிலை தடுமாறி தரையோடு தரையாகச் சாய்ந்தார். அவரது ஆடை கிழிக்கப்பட முழு நிர்வாணமாக நின்றவர், தனது இரு உள்ளங்கைகளாலும் அழுக்கேறிய தனது பிறப்புறுப்பை மறைத்தபடி அழுதடங்கினார். பொலிசார் சற்று நேரத்திலே அங்கு வருகை தந்தனர். மேர்லினை ஆம்பியூலன்ஸில் ஏற்றியவர்கள் ஃபாதரை தூக்கி நிறுத்தினர். உச்சக்கட்ட வலியில் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை பொலீஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போதுதான் நான் அதனைக் கண்டேன். தனது பிருஷ்டங்களை மறைக்க முடியாமல் எதிர்த்திசையில் தலைகுனிந்தபடி நடந்து கொண்டிருந்த ஃபாதரின் சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருந்தது, குச்சானுக்கு இருப்பதைப் போலவே! illustration by Sam Weber பாக்கியராசா மிதுர்ஷன் எனும் இயற்பெயரையுடைய நீலாவணை இந்திரா என்பவர், இலங்கையைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் பிரிவில் அணுத்தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழிநுட்பப் பாடப்பரப்பில் தனது முதுமாணிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை மேற்கொள்கிறார். இவரது கக்கூஸ் வாளி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தடைப்பட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இவரது இரண்டு கவிதைகள் கிழக்கின் கவிக்கோர்வையிலும், றெதிநெந்தா என்று பேசப்பட்ட சிறுகதையொன்று கிழக்கின் நூறு சிறுகதைகளில் நூறாவதாகவும் வந்துள்ளது. கிழக்குப் பண்பாட்டலுவல்கள் நூலின் அடிப்படையில் இவரே மிகவும் இளம்வயதுடைய கிழக்கு மாகாண சிறுகதை எழுத்தாளர் ஆவார். மேலும் விவாதங்களிலும், மேடைப்பேச்சுக்களிலும் செயற்பட்டு வருகிறார். https://thadari.com/penises-are-dirty-nilavanai-intira/- புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!
புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்! வரலாற்று சிறப்பு மிக்க தேவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (05) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது. இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளும், ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, பிரதமர் மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனத்தின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில் புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள ஸ்தூபியின் அருகே 1960 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடத்தில் இரண்டு புனிதச் சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் இந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன. அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, “புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம்” என்று எழுதப்பட்டிருந்தமை, இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும். இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இலங்கை மக்கள் இந்த புனிதச் சின்னங்களை தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனிதச் சின்னங்கள் நேற்று (04) பிற்பகல் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், அங்கு சிறப்பு மத வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புனிதச் சின்னங்கள் ஹுணுபிட்டி கங்காராம விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில், புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசன நிகழ்வை ஆரம்பித்து வைத்து, புனித சின்னங்களுக்கு ஜனாதிபதி முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார். அதன்படி, இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன், இதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய-இலங்கை நட்பை வலுப்படுத்தும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்விரத்திற்கு ஜனாதிபதி விசேட நினைவுப் பரிசையும் இதன்போது வழங்கினார். ஹுணுபிட்டி, கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர், சிறப்பு நினைவுப் பரிசொன்றையும் ஜனாதிபதிக்கு கையளித்தார். வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி புனித சின்னங்களை இந்நாட்டிற்கு தரிசனத்திற்காக கொண்டு வருதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையே பரிமாற்றப்பட்டது. சியம் மகா நிகாயவின் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண. திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் Shartse Khensur Rinpoche Jangchup Choeden தேரர், இந்தியாவிலிருந்து வருகை தந்த மதிப்பிற்குரிய மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, உட்பட இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுகளின் செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2026/1463278- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு! ஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. 2026 ஜனவரி 29, அன்று கடலில் இலங்கை மீனவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகளை கவனித்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று உயர் ஸ்தானிகராலயம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் கூறியது. இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர் ஸ்தானிகராலயம் தொடர்பில் உள்ளது என்றும் அது குறிப்பிட்டது. ஜனவரி 29 ஆம் திகதி, வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 12 இலங்கையர்கள், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்தபோது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் தாக்கப்பட்டதாக மீனவர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டியது. சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரியிருந்தனர். மூன்று மீன்பிடி படகுகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்ததாகவும், இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தாக்குதலை நடத்த இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். https://athavannews.com/2026/1463304- இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு! இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்யா புதன்கிழமை (04) கூறியுள்ளது. மேலும், எரிசக்தி இறக்குமதியை பல்வகைப்படுத்துவதற்கான புது டெல்லியின் முயற்சிகள் புதிதல்ல என்றும் சுட்டிக்காட்டியது. பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்தும், ஒருவேளை வெனிசுலாவிலிருந்தும் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மசகு எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்தது. ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அறிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ரஷ்யா மட்டுமே வழங்குவதில்லை என்பதை நாங்கள், ஏனைய அனைத்து சர்வதேச எரிசக்தி நிபுணர்களுடன் சேர்ந்து நன்கு அறிவோம். இந்தியா எப்போதும் ஏனைய நாடுகளிடமிருந்து இந்த பொருட்களை வாங்கியிருக்கிறது. எனவே, இந்தியாவின் நிலைப்பாட்டில் ரஷ்யா அசாதாரணமான எதையும் நாங்கள் காணவில்லை. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் ரஷ்யாவிற்கு இதுவரை வரவில்லை – என்றார். இதற்கிடையில், ரஷ்ய மசகு எண்ணெயை முழுமையாக மாற்றுவது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நடைமுறைக்கு மாறானது என்று ரஷ்யாவில் உள்ள எரிசக்தி ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியா பதப்படுத்தும் மசகு எண்ணெயில் கிட்டத்தட்ட 88 சதவீதத்தை பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களாக இறக்குமதி செய்கிறது. 2021 வரை இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் வெறும் 0.2 சதவீதமாக இருந்தது, ஆனால் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவைத் தவிர்த்த பின்னர் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது. நிகழ்நேர பகுப்பாய்வு நிறுவனமான Kpler இன் தரவுகளின்படி, இந்தியாவின் ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதி 2026 ஜனவரி முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் சராசரியாக 1.21 மில்லியன் பீப்பாய்களாகவும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட 2 மில்லியன் பீப்பாய்க்கும் அதிகமாகவும் இருந்தது. https://athavannews.com/2026/1463293- லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!
லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்! இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தது. இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்தும், தமிழ் தேசிய கொடியை தாங்கியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463312- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அதென்ன சுமந்திரனை பற்றி கதைச்சால் மட்டும் நானாவுக்கும் அவரின் அனுதாபிக்கும் பின்பக்கம் வேர்க்குது? உடனேயே புலிவாந்தியோட வருகினம்!- அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
உந்த ஆளின்ர முழு நேர வேலை இனவாதம் கக்கிறது . எதோ ஒரு பாம்பு கக்கிவிட்டு , அதையே திரும்பவும் தானே உண்ணுமாம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.- அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை ; நீதிமன்றம் தீர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை ; நீதிமன்றம் தீர்ப்பு! 05 Feb, 2026 | 08:56 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளியான ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர்களுக்கு இடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த 60 வயதுடைய ரியான் ரூத் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புளோரிடா நீதிமன்றத்தில் நீதிபதி ஐலீன் கேனன் முன்னிலையில் நடைபெற்றது. ரியான் ரூத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, வழக்கறிஞர் இல்லாமல் தனக்காகத் தானே வாதிட்டார். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டபோது, நீதிமன்றத்திலேயே பேனாவால் தனது கழுத்தைக் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "இது ட்ரம்பை கொலை செய்ய நடந்த முயற்சி, ஆனால் நான் தோற்றுவிட்டேன்" என அவர் குறிப்பிட்டிருந்தது முக்கிய ஆதாரமாக அமைந்தது. புதன்கிழமை (04) நடைபெற்ற இறுதித் தீர்ப்பின் போது, நீதிபதி ஐலீன் கேனன், "உங்களது இந்த சதித் திட்டம் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் கொடூரமானது. ஒரு மனித உயிரைப் பறிக்க முயன்ற உங்களது செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. நீங்கள் அமைதியானவரோ அல்லது நல்லவரோ அல்ல." எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காகக் கூடுதலாக 07 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பதால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ரியான் ரூத்தின் புதிய வழக்கறிஞர் மார்ட்டின் ரோத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237849- சீன - ரஷ்ய பொருளாதார பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் - இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் உறுதி
சீன - ரஷ்ய பொருளாதார பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் - இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் உறுதி 05 Feb, 2026 | 12:14 PM சீனா - ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் நேற்று புதன்கிழமை (4) வீடியோ அழைப்பில் பேசி, கலந்துரையாடியதில், பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் என உறுதிபடக் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் நேற்று வீடியோ கொன்பிரன்ஸில் பேசிக்கொண்டபோது தமக்கிடையிலான வர்த்தக உறவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதென உறுதி செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவை கடந்த ஆண்டு மொஸ்கோவிலும் பெய்ஜிங்கிலும் முறையாகக் கொண்டாடினோம். அவற்றை நாம் இணைந்து கொண்டாடியதன் மூலம் வரலாற்று உண்மையை நிலைநிறுத்தவும் உலகில் அமைதியை மீட்டெடுக்க கோடிக்கணக்கான உயிர்களை தியாகம் செய்த நமது மக்களின் வீரத்தை நினைவுகூர்ந்து, நமது இரு நாடுகளின் ஒற்றுமையையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதை ரஷ்யாவும் சீனாவும் உலகிற்கு நிரூபித்துள்ளது. நமது இரு நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு, சமூக பொருளாதார செழிப்பு, மக்கள் தங்களது வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நமது அனைத்து கூட்டு முயற்சிகளுக்கும் எமது ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். கடந்த ஒரு வருடமாக, நமது இரண்டு சந்திப்புகளும் சீன - ரஷ்ய உறவுகளை ஒரு புதிய கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல உதவியுள்ளன” என சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் கூறினார். அத்துடன் அவர், “இரண்டாம் உலகப் போரின் விளைவுகளையும் சர்வதேச நீதிக் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்காக தம்மால் பகிரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் வெற்றியினது 80வது ஆண்டு நிறைவை நாங்கள் மனதார நினைவுகூர்ந்தோம். நமது இரு நாடுகளின் வர்த்தகமும் சீராக வளர்ந்து வருகிறது. அதேவேளை புதிய துறைகளின் முன்னேற்றத்துக்கான ஒத்துழைப்பும் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும், நமது கலாசார மற்றும் மனிதாபிமான உறவுகளும் புதிய உயரத்தை எட்டியுள்ளன. மக்களிடையேயான கருத்துப் பரிமாற்றங்களும் முன்னரை விட துடிப்பானதாக காணப்படுகிறது. 2026 ஆண்டானது சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டாக உள்ளது. இக்காலகட்டத்தில் உயர்தர வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த சீனா உறுதிபூண்டுள்ளது. அத்துடன் புதிய வளர்ச்சிக் கட்டத்தின் புதிய வாய்ப்புகளை ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்துகொள்ளவும் சீனா தயாராக உள்ளது” என சீன ஜனாதிபதி தெரிவித்தார் https://www.virakesari.lk/article/237872 - ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
Important Information
By using this site, you agree to our Terms of Use.