Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. Trump says Venezuela to hand over up to 50 million barrels of oil to US. United States President Donald Trump has announced that Venezuela will turn over between 30 and 50 million barrels of sanctioned oil. Trump said the oil would be sold at market prices and that he would control the resulting revenues to ensure the money is used to benefit the people of Venezuela and the US. He added that he had directed his energy secretary, Chris Wright, to execute the plan “immediately”. “It will be taken by storage ships, and brought directly to unloading docks in the United States,” Trump said on his platform, Truth Social, on Tuesday. Trump’s announcement follows his pledge to “take back” Venezuela’s oil reserves and revive the Latin American country’s flailing energy industry in the wake of his administration’s abduction of Venezuelan President Nicolas Maduro. Trump has said that US oil companies are primed to invest billions of dollars to rebuild Venezuela’s decrepit infrastructure. Chervon, Exxon Mobil, ConocoPhillips – the three biggest US oil companies – have not directly commented on Trump’s plans, but representatives of the firms are set to meet the president on Friday to discuss Venezuela, according to US media reports. Mark Finley, an energy expert at the Baker Institute in Houston, Texas, said that it was difficult to parse the significance of Trump’s announcement without further details. “30-50 million barrels over what time frame? That’ll be key to assessing the significance of this,” Finley told Al Jazeera. “In a month, that’s essentially all Venezuelan output. In a year, it’s pretty small.” Analysts say restoring Venezuela’s production to anything close to its 1990s peak of more than 3 million barrels a day would require massive investment and could take years. Venezuela’s oil sector would need capital investment of about $110bn to return to output of about 2 million barrels per day, according to an estimate by Rystad Energy, a Norway-based consultancy. Some market watchers are sceptical that US companies will commit to large investments in the country given their experiences of asset seizures under the late Hugo Chavez, Maduro’s predecessor, and the glut of oil in the global market. ExxonMobil and ConocoPhillips were awarded $1.6bn and $8.7bn, respectively, in international arbitration following the Chavez government’s nationalisation of the country’s last privately operated oil fields in 2007. Caracas did not pay out in either case. Chevron is the only major US oil company still operating in Venezuela, producing about 150,000 barrels a day. Venezuela once ranked among the world’s top oil producers, but US sanctions and years of underinvestment, mismanagement, and corruption under Maduro and Chavez reduced the sector to a shadow of its former self. While the Latin American country holds the largest known oil reserves, its current output accounts for less than 1 percent of global supply. Al JazeeraTrump says Venezuela to hand over up to 50 million barrel...US president says oil will be sold at market prices and that he will control the resulting revenues.
  3. Yesterday
  4. உக்ரேனில் இருந்து ரஸ்யா வெளியேறிய மறுநிமிடமே தேர்தல் அறுவிக்கப்படும் என தம்பருக்கு செலன்ஸ்கி எப்போதோ சொல்லி விட்டார். போர்காலத்தில் தமிழீழ நிழல் அரசில் எந்த உள்ளாட்சி தேர்தலாவது நடந்ததா? நீதி, காவல்துறை என பலதை கட்டி எழுப்பிய புலிகள் ஏன் ஒரு போதும் “தமிழீழ பொது தேர்தல்” எதையும் நடத்தவில்லை. 1940 ம் ஆண்டு ஏன் பிரிதானியாவில் பொதுதேர்தல் நடக்கவில்லை? 2000ம் ஆண்டில் இருந்து புட்டின் அதிகாரத்தில் இருக்கிறார் அவரை தொழுதுகொண்டு - யுத்தத்தின் இடையே 1/3 பங்கு ஆக்கிரமிப்புல் உள்ள உக்ரேன் தேர்தல் நடத்தவில்லை என அழக்கூடாது😂. அப்போ மேலே ரஞ்சித்தும் இதையே சந்தர்பத்தோடு கூறியுள்ளாரே? நீங்கள் இப்படி எழுதியதும். நானும் ரஞ்சித்தும் எதிர்த்து கேட்டதும், பதிலே சொல்லாமல் ஓடியதும் உண்மை. யாழில் இப்போ பழைய திரிகளை தேடுவது கடினம் என்பதால் உண்மை சாகாது. என்ன ஜோக்கடிக்கிறீர்களா? ஒரு கருத்துகள கீபோர்ட் போராளி நான். இந்திய ஆதிக்கத்தை உடைக்கும் அளவுக்கு என் அலவாங்கு பெரியதல்ல 😂.
  5. செலன்ஸ்கி தன் இனத்துக்காக போராடுவதால் அவர் எனக்கு கதாநாயகந்தான். ஆனால் உங்களை போல் நான் தனிமனித வணங்கி அல்ல. ஆகவே செலன்ஸ்கி பிழை விட்டால் அதை நான் சரி என வாதிடுவதில்லை. ஆனால் நீங்கள் செலன்ஸ்கி சொன்னதை மிக தவறாக சித்தரிக்கிறீர்கள் (வேண்டும் என்றே ?) செலன்ஸ்கி சொன்னது - சர்வாதிகாரிகளை இவ்வாறு அகற்ற முடியும் என்றால் மொஸ்கோவுக்குதான் முதலில் போக வேண்டும் என. அதில் வெனிசுவேலாவில் நடந்ததை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. ஆனால் - மிக இக்கட்டான நிலையில் தன் இனமும் நாடும் இருக்கும் போது, அமெரிகாவின் தயவில் தங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒரு கேள்வியை இவ்வளவு ராஜதந்திரமாக கையாண்ட கோமாளி செலன்ஸ்கி பெரிதாக போற்றபடும் பல தலைவர்களை விட இராஜ்தந்திரத்தில் ஒரு படி மேலே என்பது வெள்ளிடமலை. அடுத்து - உக்ரேனின் எதிரி வெனிசுவேலா. ரஸ்யாவின் உக்ரேன் மீதான அத்தனை அத்துமீறலையிம் ஏற்று கொண்டு, ரஸ்யாவோடு ந்ல்லுறவை பேணும் நாடு - அவர்களுக்காக அழும் நிலையில் செலன்ஸ்கி இல்லை.
  6. வின்னர் படத்தில் “நாளைக்கு சாக போற கிழவியை இண்டைக்கு கொலை செய்து வீரம் காட்டபாக்கிறியா” என வடிவேலு நகைசுவையாக சொல்லுவார். அப்படி பட்ட வெத்து வீரம்தான் நோஞ்சான் வெனிசுவேலா மீது அமெரிக்கா காட்டியது. இந்த மிட் டேர்மில் தம்பர் வாலை ஒட்ட நறுக்க அமெரிக்க மக்கள் தவறினால் - அடுத்த இரெண்டரை ஆண்டுகளில் அமெரிக்காவின் பலம், உலக வகிபாகம் கணிசமாக குறைக்க பட்டு விடும். 3 டேர்மும் கிடைத்தால் (சுப்ரீம் கோர்ட் விடாது என நினைக்கிறேன்). அமெரிக்காவினுள்ளேயே பாரிய குழப்பங்கள் வர கூடும்.
  7. என்னையா பீதிய கிளப்புறீங்க😂. புட்டின் சார்…புட்டின் சார் இனிமேல் இப்படி எல்லாம் யோசிக்க மாட்டேன் புட்டின் சார்😂 பகிர்வுக்கு நன்றி. இந்த வாரைறுதியில் பார்கிறேன். நிராஜ் டேவிட் கஞ்சா கப்ஸா, புல்டோ போண்டாக்களை பார்ப்பதில்லை. இதை பார்க்கலாம் என உள்ளேன். வடிகட்டிய ஆசாரவாதிகளுக்கு ஒரு போதும் சோசலிசத்தில் நாட்டம் இல்லை. இது புட்டின் என்ற மனிதர் மீதான தனிமனித வழிபாட்டில் பெறுதி. பிகு புட்டின் சோசலிஸ்டோ, கம்யூனிஸ்டோ கூட இல்லை.
  8. நீங்கள் யாரும் வெனிசுவெலா சம்பவத்தை ஆதரிக்கவில்லைத்தான். ஆனால் உங்கள் கதாநாயகன் செலென்ஸ்கி அவர்கள் சர்வதிகார ஆட்சி அழிக்கப்பட வேண்டும் எனும் தொனியில் வெனிசுவெலா சம்பவத்தை ஆதரித்துள்ளார். அது மட்டுமல்ல ரஷ்யாவிலும் சர்வாதிகார ஆட்சி ஒடுக்கப்பட வேண்டும் என டரம்ப் அவர்களுக்கு புகழார செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஜனநாயகன் இல்லை.....இல்லை ஜனநாயக சர்வாதிகாரி செலென்ஸ்கி விடுதலை விரும்பிகளின் சொர்க்கத்தங்கம்.😁 நான் இந்தியா இலங்கை தமிழர் அழிவுகள் சம்பந்தமாக நடந்து கொண்ட விதம் சரியென எங்கும் எழுதவில்லை. அப்படி நினைத்து எழுதியதுமில்லை.எரியல்,பொரியல்,பிரட்டல்,சுருட்டல்,கடத்தல் ,வெருட்டல் கருத்துக்களுக்கு பேர் போனவர் நீங்கள்🤣🤣 உலகில் பிராந்திய அரசியலின் முக்கியத்துவம் பற்றி உக்ரேன் போர் சம்பந்தமாக எழுதும் போது....ஈழத்தமிழர் அரசியலில் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் எதையெல்லாம் செய்தது எனும் தொனியில் எழுதினேன்.அதை இப்படியெல்லாம் உங்கள் கருத்து வெற்றிக்காக இப்படியெல்லாம் பிரட்டுவீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. ஈழத்தமிழர் போராட்ட வரலாறு இரண்டு வகையாக பிரிக்கலாம். 1)விடுதலைப்புலிகளுக்கு முந்திய காலம். 2)விடுதலைப்புலிகளுக்கு பிந்திய காலம். இந்த இரு காலங்களிலும் குமாரசாமி போன்றவர்களின் தலையில் மடம் கட்டி உங்கள் குற்றச்சுமைகளை இறக்கி அடுத்து யாரை வரிந்து கட்டலாம் என்ற முனைப்போடு திரிகின்றீர்களே தவிர........ அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழர் விடயத்தில் இருக்கும் இந்திய ஆதிக்கத்தை ஒரு அணு கூட உங்களைப்போன்றவர்கள் அசைக்கமுடியாமல் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்கே தெரியாத அவலம் மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
  9. ட்ரம்பிற்கு நோபல் பரிசு தயார்! இதை பிடுங்குவதற்கு வேறு பல காரணங்கள். சீனா ஒருபுறம், அமெரிக்கா மறுபுறம்.
  10. மனநலம் பாதிக்கப்பட்டவர், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர், எல்லை தாண்டி கடற்தொழிலுக்கு வந்துள்ளார்? எதற்கும் இலங்கையில் ஒரு பரிசோதனை செய்து உண்மையை கண்டுபிடித்து விட வேண்டியது.
  11. ஈழப்பிரியன் அண்ணா சிறு துளி பெரு வெள்ளம் ஒரு டொலர் அல்லது யூரோ கிடைத்தாலும் அதைக் கொடுக்க முன் வருபவர்களின் மனது பெரிது அவற்றை ஏற்றுக் கொண்டு செயற்படும் வேளையில் தான் மற்றவர்களுக்கும் திருப்தியும் மனநிறைவும் கிடைக்கும். முன்னோடிகளில் நீங்கள் ஒருவராக இணைந்ததையிட்டு மகிழ்ச்சி 🙏
  12. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 82 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர் துறவியாக மாற முடிவு செய்தபோது, அனோமா நதிக்கரையில் வெட்டப்பட்ட புத்தரின் தலைமுடியைப் பயன்படுத்தி, தேவர்களின் மன்னரான சக்காவால், ஒரு வான தூபி 'Culamani-cetiya' கட்டப்பட்டது. இதை சூளாமணி கோபுரம் [அல்லது சூளாமணி சைத்தியம்] என்று தமிழில் கூறலாம்? மேலும் புத்தர் காலமான பிறகு, டோனா என்ற மனிதன், புத்தரின் வலது கழுத்து எலும்பை தனது தலைப்பாகையில் மறைக்க முயன்றார், ஆனால் சக்கா அதை அவரிடமிருந்து எடுத்து, சேதியத்தில் [வான் தூபியில்] அதையும் சேர்த்து வைத்தார் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த வலது கழுத்து எலும்பு நினைவுச் சின்னத்தை, கடவுள் நகரத்தில் உள்ள இந்த வான் Culamani-cetiya த்திலிருந்து பெறப்பட்டது என்று [ஒரு கருத்துக்கு] கொள்ளலாம். In Dravidian and Indo-Aryan phonetics, we often see shifts where: "ḷ" (ள) and "d" (ட) get interchanged over time. Retroflex sounds like "ḷ" are replaced with dentals like "d" in Sanskritization (and vice versa). Tamil and Pali usage often differ from Sanskrit, leading to variations in pronunciation and writing. For example: Chuda (சுட) vs. Cūḷā (சூளா) → Phonetic shift from "d" (ட) → "ḷ" (ள) is possible. Mani (மணி) remains unchanged. So, Chudamani (சுடாமணி) → Cūḷāmaṇī (சூளாமணி) is phonetically feasible, especially in Buddhist contexts. ஆகவே மேலே கூறியதையும் மற்றும் ஓலைச் சுவடிகள் 100 - 150 ஆண்டுகளுக்கிடையில் திருப்பி எழுதி புதிப்பிப்பதையும் கருத்தில் கொண்டால், மிக இலகுவாக ஒரு சாத்தியத்தை கூறலாம் என்று எண்ணுகிறேன். ஒலிப்பு ரீதியாக, l (எல்) மற்றும் 'd' ஆகியவை காலப்போக்கில் அல்லது மொழிகளுக்கு இடையேயான படியெடுத்தலின் போது ஒன்றுக் கொன்று மாற்றப்படுகின்றன. எனவே இந்த Chulamani Chedi, a celestial stupa, தமிழில் 'சூடாமணி' ஆக இருக்கலாம்? தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை ஒன்று இருந்தது. இது 1006 CE இல் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் புகழ் பெற்ற மன்னனின் மகன் விஜயோத்துங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான். இது ஜேசுட் பாதிரியாரால் [Jesuits priest] 1867 க்கு பிறகு இடிக்கப்பட்டது என்பது வரலாறு. மீண்டும் 17 ஆம் அத்தியாயத்திற்கு வரும்போது, அசோகன் இறந்தவுடன், உடனேயே சுமனன் அங்கே சென்று விட்டான் என்று கூறுகிறது. இது தெய்வீக சக்தியைக் குறிக்கிறது, அது வரலாறு அல்ல, இறையியல் ஆகும். மேலும், இதில் இருந்து நாம் அறிவது அல்லது ஊகிப்பது, மகிந்த, சுமனா, சங்கமித்தா ஆகியோர் உண்மையான நபர்கள் அல்ல. கடவுளின் நகரத்திற்குச் செல்லும் உடனடிப் பயணங்களும் உண்மையான நிகழ்வுகள் அல்ல. மேலும், புத்த நாடுகளில் புத்தரின் அனைத்து தாதுக்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது புத்தர் உயிருடன் இருந்தபோது இருந்ததை விட கட்டாயம் அதிகமாக இருக்கலாம், அதுவும் எரிந்து காற்றுடன் கலந்ததையும் விட. [If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive.] அத்தியாயம் 18 [மகாபோதி விருட்சத்தை பெறுதல்]: இது போதி மரத்தின் கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வது பற்றியது. இராணி அனுலா மற்றும் அவரது ஐநூறு பெண்களுக்கும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] செய்ய சங்கமித்தாவை அழைக்க முன்னர் முடிவு செய்யப்பட்டது. 15- 19 இல் இருந்து 22 வரை பார்க்கவும். ‘அரசே! நாங்கள் தீட்சை பெற விரும்புகிறுேம் என்று ராணி அனுலா தன்னுடன் வந்த ஐநூறு பெண்களுடன் அரசனிடம் கூறினாள். உடனே, ‘இவர்களுக்குத் தீட்சை செய்து வையுங்கள்" என்று அரசன் தேரரைக் கேட்டுக் கொண்டான். 'மாமன்ன! பெண்களுக்கத் தீட்சை செய்து வைக்க எங்களுக்க அனுமதி கிடையாது' என்று தேரர் பதிலளித்தார். பாடலிபுத்ரத்தில் [Pataliputta] என்னுடைய தங்கை சங்கமித்தா என்ற பெயருடைய தேரி இருக்கிறாள். அனுபவத்தில் முதிர்ந்தவள் அவள். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் [ஏன் தென்பகுதி கிளை?] அவள் இங்கே வருவாள் என்று இந்த பந்தி கூறுகிறது. மன்னன் தேவநம்பிய தீசன் தனது மருமகனும், அவரது அமைச்சருமான அரிதனிடம் [Arittha] போதி மரத்தின் கிளையை கொண்டு வருவதுடன், தேரி சங்கமித்தாவையும் கூட்டிக் கொண்டு வர, அசோகரிடம் செல்ல முடியுமா என்று விசாரித்தார்! அவன் ஒப்புக்கொண்டான். மேலும் அவன், தனது மனத்திண்மையால் [by his will power] அவன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தார் [18 - 8: ஐம்பு கோளத்தில் கப்பல் ஏறி, மகாசமுத்திரத்தைக் கடந்து, தேரருடைய சக்தியால் புறப்பட்ட அன்றே அழகிய புஷ்பபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.]; மற்றொரு மாபெரும் பொய். அவன் அசோகருக்கும் சங்கமித்தைக்கும் அந்த செய்தியைச் சொன்னார். சங்கமித்தை கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தயக்கம் காட்டிய, தந்தை அசோகனை ஒருவாறு சமாதானப்படுத்தினாள். மொகாலிபுத்தவும் [Moggaliputta] அதை ஆதரித்தார். Part: 82 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Sumana went to the King Asoka the very moment he departed. All the miraculous and magical events happened are not historical events. Which is the city of gods? How did Sumana meet Sakka, the king of gods? Tamils have no issue with these as religious edifications, but will never accept as historical events. Apparently, the right collarbone relic was obtained from the Culamani-cetiya. Phonetically, l (Ell) and ‘d’ get interchanged in the course of time or during transcription between languages. It could be ‘Cudamani’ in Tamil. There was a Vihara called Cudamani Vihara in Nagapattinam in Tamil Nadu also with the name Rajarajapperumpalli, which was standing in dilapidated state until 1867, for about 800 to 900 years after its construction. It was pulled down by Jesuits priests. The above sketches are two views of Cudamani Vihara, which was prepared in 1846. The king Rajaraja endowed the revenues from the Anaimankalam village for the upkeep of this Vihara. This Vihara is also known as Rajendracholapperumpalli, Silendracutamani Vihara etc. The king Silendra of the present day Indonesia or Malaysia built this Vihara with the blessings of the Chola kings who also generously granted revenues from villages for its upkeep. The author has no intention to hurt the feelings of the Buddhists, but their blind belief in the Mahavamsa resulted in the death of about of 150,000 Tamils in very gruesome manners, and in the displacement of half a million Tamils, and the pious Buddhists without any compunction or remorse branded them as economic refugees. In this process, Tamils got their parliamentary representations drastically reduced with boisterous behaviour of the Sinhala members in the Parliament shouting down the reduced Tamil members with the tacit approval of the speaker of the House. It is then necessary to analyse the genuineness of the document on which the Sinhala Buddhists base their claim. Coming back to the chapter 17 again, Sumana went to Asoka on the very moment he departed, implying divine power, and it is not history, but theology. Sumana went to the city of gods. Tamils do not believe this nonsense. If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive. We would, again, like to stress that Mahinda, Sumana, Samghamitta are not real personalities, and the instant travels, even to the city of gods, are not real events. Chapter 18: This is about the obtaining the branch of the Bodhi tree to be taken to Lanka. It was decided earlier to invite Samghamitta to perform pabbajji ordination on Queen Anula and her five hundred women, 15-21. The King Devanampiya Tissa inquired his nephew, also his minister; Arittha whether he could go to Asoka to bring the branch of the Bo tree and Theri Samghamitta! He agreed and by his will power reached Pupphapura (Pataliputta) on the same day he departed; another lie. He passed the message to Asoka as well as to Samghamitta. Samghamitta acceded to the request and convinced the reluctant Asoka that she should go. Moggaliputta was also in favour of it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 83 தொடரும் / Will follow துளி/DROP: 1977 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82] https://www.facebook.com/groups/978753388866632/posts/33164353323213221/?
  13. நிராஜ் டேவிட் கூறுகின்ற அ மெரிக்க ஒற்றை துருவ உலக ஒழுங்கு இன்னமும் உள்ளது, இந்த வெனிசுலா பிரச்சினையினை அமெரிக்கா வெற்றிகரமாக இலகுவாக கடந்துள்ளது என்பதாக நான் கருதவில்லை. போரியல் கலையில் சன் சூ கூறிய எதிரியின் தவறுகளை அனுமதி என்பது போலவே இந்த அமெரிக்க வெனிசுலா ஆக்கிரமிப்பினை அதன் எதிர்த்தரப்பு பார்க்கிறதோ என கருதுகிறேன். இது அமெரிக்காவின் அடிப்படைதோல்வியாக உருவெடுக்கும் என நான் நம்புகிறேன். காலமாற்றத்தினை சரியாக அமெரிக்கா உணரவில்லை (அல்லது உள்நாட்டு அரசியல் அழுத்தம்), அத்துடன் கடந்த கால தனது வரலாற்றுத்தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை. கடந்தகாலத்தில் அமெரிக்காவின் மத்திய கிழக்கு நடவடிக்கை அங்கு ஒரு பிராந்திய மட்டத்தில் அதிகார வெற்றிடத்தினை உருவாக்கி மேலதிகமாக பல பயங்கரவாதங்களை உருவாக்கியது (ஐ எஸ் ஐ எஸ், ஈரான் போன்ற) என்பதனை மறந்து விட்டுள்ளது. இது ஒரு வெறும் சில மணிநேரத்தில் முடிந்துவிட்ட வெற்றிகரமான நடவடிக்கை என நிராஜ் டேவிட் கூறுகிறார், ஆனால் இது ஒரு பிரச்சினையின் ஆரம்பம், தற்போது இது ஒரு தலைமை வெற்றிடமாக மட்டுமே உள்ளது போல தெரிந்தாலும் வருகின்ற நாள்களில் நிர்வாக, சட்ட, பிராந்திய வெற்றிடம் உருவாகும் போது முன்னர் அமெரிக்கா சந்தித்திராத பெரும் நெருக்கடிக்குள் அமெரிக்கா சிக்க நேரிடும். அதனால்தான் இதனை அமெரிக்காவின் கேர்ஸ்க் என கருதியிருந்தேன். தற்போது அமெரிக்காவின் நிலை கத்தி மேல் பயணம், இதில் முடிந்தளவு சேதாரம் இல்லாமல் திரும்புமா? அல்லது இவ்வாறான பிரச்சினைகள் தோன்றாமல் எவ்வாறு மீழ போகிறது என காலம்தான் பதில் கூறவேண்டும்.
  14. வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும் ------------------------------------------------------------------ தேசங்கள் வெட்கம் அற்றவை மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை போலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள் நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து வந்த பின் முகமூடியை கழட்டி எறிந்து விட்டு குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும் அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள் ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும் ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும் வெட்கமற்ற தேசங்கள் போலவே அபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.
  15. இல்லை, இது ஜப்பானின் மட்டும் அல்ல, அந்த பகுதியில் இருக்கும் நாடுகளின் கலாசாரம், அந்தந்த நாடுகளின் உணவுகளில் . அனால், மிகவும் வளர்ந்த ஜப்பானில் கூட விட்டுப்போகவில்லை. இதே போல, kobe மாட்டு இறைச்சி Wagyu என்ற மாட்டு இனத்தில், மிகவும் சுத்தம், சுகாதாரம், உணவு போன்றவை மிகுந்த கவனிப்பில் கீழ், குறிப்பிட்ட Hyogo Prefecture (கிட்டதட்ட எமது மாகாணத்துக்கு ஒப்பான நிர்வாக பிரதேசம்) வளர்க்கப்படும் Wagyu இன மாடுகளில் இருந்த்து பெறப்படுவதே Kobe மாட்டிறைச்சி. ஜப்பானில் எதிலும் மிகஉன்னத (perfection) நிலை அடைவதில் இருக்கும் சமூக மற்றும் வரலாற்று ஆவலும், உணவிலும் பிரதிபலிக்கிறது. உ.ம். நண்டு, இறால், கணவாய் போன்றவை ஒரு போதும் இறந்து விற்பது மிக குறைவு, ஏனெனில் இறப்பின் தாக்கத்தில், அழுத்தத்தில் அதன் தன்மை, ருசி போன்றவை மாறிவிடும் என்று.
  16. ஆரம்பத்தில் அனைத்து விடயங்களையும் விரிவாக எழுத நினைத்திருந்தேன்; தற்போது மிக மிக சுருக்கமாக எழுதுவதற்கு முடிவெடுத்துள்ளேன் (பயன்பாடு குறைவாக இருந்தால் தேவையில்லாமல் யாழின் பக்கங்களை நிரப்பி யாழிற்கு மேலதிக சுமைகளை ஏற்படுத்த விரும்பவில்லை), இந்த பகுதியில் கோல்ட்மன் சக்ஸின் முதலீட்டு முகாமையாளர்களின் பயிற்சியின் அடிப்படையாக கொண்டது ஆனால் அது முற்று முழுதாக அதன் வடிவமல்ல வெறும் சராம்சமடிப்படையுடன் முடிந்தவரை விளக்கமாக ஆனால் அதன் பயன்பாட்டு அடிப்படையாக கொண்ட (இலகுவான மாற்றீடு) விடயங்களை ஆரம்பத்தில் உள்ளடக்க விரும்பியிருந்தேன், தற்போது வெறும் அடிப்படைகளை மட்டும் எழுத திட்டமிட்டுள்ளேன். இதனால் யாருக்கேனும் பலனுண்டாகும் எனும் எண்ணத்திலேயே ஆரம்பித்திருந்தேன், இது பலனற்ற விடயம் என உணர்ந்தால் இதனை தொடர்வதனை நிறுத்திவிடும் எண்ணம் உண்டு.
  17. https://tradingeconomics.com/united-states/consumer-confidence இது அமெரிக்க நுகர்வோர் நன்நம்பிக்கை சுட்டெண் (Consumer confident). https://tradingeconomics.com/united-states/building-permits இது அமெரிக்க கட்டட அனுமதி கணக்கெடுப்பு சுட்டெண் ஆகும்.
  18. "நாங்கள் ஒரு வல்லரசு": டிரம்பின் கீழ் அமெரிக்க நடவடிக்கைகளை வெள்ளை மாளிகை விளக்குகிறது Krystyna Bondarieva , Iryna Balachuk — 6 ஜனவரி, 07:55 டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்டீபன் மில்லர். புகைப்படம்: X இல் மில்லர் (ட்விட்டர்) 18373 ஆம் ஆண்டு உண்மையான உலகம் அதிகாரத்தால் ஆளப்படுகிறது, அமெரிக்கா ஒரு வல்லரசு, எனவே அது அவ்வாறே செயல்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான ஸ்டீபன் மில்லர், வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைப்பற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார். மூலம்: ஐரோப்பிய பிராவ்தா, CNN ஐ மேற்கோள் காட்டி விவரங்கள்: சர்வதேச நுணுக்கங்களைப் பற்றி மக்கள் விரும்பும் அளவுக்குப் பேசலாம் என்று மில்லர் கூறினார், "ஆனால் நாம் ஒரு உலகில், உண்மையான உலகில் வாழ்கிறோம் ... அது வலிமையால் ஆளப்படுகிறது, அது பலத்தால் ஆளப்படுகிறது, அது அதிகாரத்தால் ஆளப்படுகிறது. " இதை அவர் "உலகின் இரும்புச் சட்டங்கள்" என்று விவரித்தார் . டிரம்ப் கோட்பாட்டின் கீழ், அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா தனது இராணுவத்தை தயக்கமின்றிப் பயன்படுத்தும் என்று மில்லர் வலியுறுத்தினார், இது ஒரு சுதந்திர உலகின் எதிர்காலத்திற்கு ஒத்ததாக இருக்கும் என்று அவர் கூறினார். "நாங்கள் ஒரு வல்லரசு. ஜனாதிபதி டிரம்பின் கீழ், நாங்கள் ஒரு வல்லரசாக நடந்து கொள்ளப் போகிறோம்," என்று மில்லர் கூறினார். பின்னணி: ஜனவரி 4 ஆம் தேதி மற்ற நாடுகளுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்தன. குறிப்பாக, கொலம்பியாவை அச்சுறுத்திய அவர், மெக்சிகோ "அவர்களின் நடவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும்" என்று கூறினார் . கூடுதலாக, ஈரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் "மிகவும் கடுமையாகத் தாக்கப்படும்" என்று டிரம்ப் சமீபத்தில் உறுதியளித்தார். கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான தனது அச்சுறுத்தல்களையும் அவர் புதுப்பித்தார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்கள், தீவு தொடர்பான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு டிரம்பிடம் அழைப்பு விடுத்தனர். பால்டிக் நாடுகளைப் போலவே, பின்லாந்து ஜனாதிபதியும் ஸ்வீடிஷ் பிரதமரும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர். https://www.pravda.com.ua/eng/news/2026/01/06/8014828/ வெனிசுலாவில் ரஷ்ய வான் பாதுகாப்பை பென்டகன் தலைவர் ஹெக்ஸெத் கேலி செய்கிறார்: அது அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இவான் டியாகோனோவ் - 6 ஜனவரி, 00:35 பீட் ஹெக்செத். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 19659 வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்ற அமெரிக்க சிறப்பு நடவடிக்கையின் போது ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஒரு முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார். மூலம்: ஆர்சனல் ஆஃப் ஃப்ரீடம் சுற்றுப்பயணத்தின் போது ஹெக்செத்தின் உரை . மேற்கோள்: "வெனிசுலாவின் கராகஸ் நகர மையத்தில் மூன்று இரவுகளுக்கு முன்பு, நமது தலைசிறந்த அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 200 பேர் கராகஸில் உள்ள நகர மையத்திற்குச் சென்றதைப் பார்த்தோம். அந்த ரஷ்ய வான் பாதுகாப்பு அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை போலும், இல்லையா? கராகஸ் நகர மையத்தில், அமெரிக்க நீதியால் தேடப்படும் ஒரு குற்றஞ்சாட்டப்பட்ட நபரைப் பிடித்து, ஒரு அமெரிக்கர் கூட கொல்லப்படாமல், சட்ட அமலாக்கத்திற்கு ஆதரவாக, தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் நிறுவினார்." விவரங்கள்: அமெரிக்கா பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியின் புதிய சகாப்தத்தில் நுழைகிறது என்று ஹெக்செத் வலியுறுத்தினார். இந்தத் துறை, வலிமை மூலம் அமைதியைப் பாதுகாப்பதும், தேவைப்பட்டால் ஒரு போரை "தீர்க்கமாக வெல்ல" தயாராக இருப்பதும் குறிக்கோளாகக் கொண்ட போர்த் துறை என்ற கருத்துக்குத் திரும்புகிறது. பின்னணி: ஜனவரி 3 ஆம் தேதி, அமெரிக்க இராணுவத்தின் டெல்டா படை, ஒரு உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவு, வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றி நாட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றது. ஜனவரி 5 ஆம் தேதி, மதுரோவும் அவரது மனைவியும் நியூயார்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் , போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் ஒத்துழைத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். வெனிசுலாவில் தெளிவான மற்றும் பாதுகாப்பான அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும் வரை அமெரிக்கா அங்கு ஆட்சி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார் . Ukrainska PravdaPentagon chief Hegseth mocks Russian air defence in Venez...US Secretary of Defense Pete Hegseth has made an ironic comment on the performance of Russian air defence systems during an American special operation to capture Venezuelan leader Nicolás Maduro.இந்த இரண்டு செய்திகளும் மேலே இணைத்த நிராஜ் டேவிட் அவர்களின் காணொளியின் சாராம்சமாக உள்ளது. கிரீன்லாந்தை இராணுவம் கையகப்படுத்துவதை நிராகரிக்க டிரம்ப் அதிகாரி மறுக்கிறார் இவான் டியாகோனோவ் - 6 ஜனவரி, 03:18 ஸ்டீபன் மில்லர். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 51613 - अनुक्षिती समान्ती स्ती स्त அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்துவதாகவும், தீவை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைமைத் தளபதி ஸ்டீபன் மில்லர் கூறியுள்ளார். மூலம்: CNN உடனான நேர்காணலில் மில்லர் மில்லரின் மேற்கோள்: "அமெரிக்கா நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தின் ஒரு பகுதியாக கிரீன்லாந்தை வைத்திருக்கும் நாடாக இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி பல மாதங்களாக தெளிவாக இருக்கிறார்." "இந்த நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்தே, வெளிப்படையாகச் சொன்னால், முந்தைய டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தே, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் முறையான நிலைப்பாடாக இருந்து வருகிறது. ஜனாதிபதி அதைப் பற்றி மிகவும் தெளிவாக இருக்கிறார். அதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் முறையான நிலைப்பாடு." விவரங்கள்: CNN செய்தித் தொகுப்பாளர் ஜேக் டேப்பர், அமெரிக்கா கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சிக்கும் ஒரு சூழ்நிலையை நிராகரிக்க முடியுமா என்று மில்லரிடம் பலமுறை கேட்டார். மில்லர் நேரடி பதிலைத் தவிர்த்து, தீவின் மீதான டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் நியாயத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கினார். மில்லரின் மேற்கோள்கள்: "உண்மையான கேள்வி என்னவென்றால், கிரீன்லாந்தின் மீது டென்மார்க் எந்த உரிமையின் மூலம் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது? அவர்களின் பிராந்திய உரிமைகோரலின் அடிப்படை என்ன? கிரீன்லாந்தை டென்மார்க்கின் காலனியாகக் கொண்டிருப்பதற்கான அடிப்படை என்ன?" "அமெரிக்கா நேட்டோவின் சக்தி. அமெரிக்கா ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாக்க, நேட்டோ மற்றும் நேட்டோ நலன்களைப் பாதுகாக்க, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது." "நாங்கள் ஒரு வல்லரசு. ஜனாதிபதி டிரம்பின் கீழ், நாங்கள் ஒரு வல்லரசாக நடந்து கொள்ளப் போகிறோம்." பின்னணி: முன்னதாக, மில்லரின் மனைவி கேட்டி மில்லர், கிரீன்லாந்து அமெரிக்கக் கொடியால் மூடப்பட்டிருப்பதைக் காட்டும் வரைபடத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீவின் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார் . இதற்கு பதிலளிக்கும் விதமாக, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், அமெரிக்கா மற்றொரு நேட்டோ நாட்டைத் தாக்கினால், அது கூட்டணிக்கும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பாதுகாப்பு அமைப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எச்சரித்தார். Ukrainska PravdaTrump official refuses to rule out military takeover of G...White House Deputy Chief of Staff Stephen Miller has stated that Washington insists Greenland should become part of the US as part of the American security framework, and has not ruled out the possibi
  19. உண்மையில் இந்தக் கடற்கொள்ளையன் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மனிதாபிமான அடிப்படையில் விடுதலைசெய்யவேண்டும். ஆனால் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய கடற்கொள்ளையர்கள் போலி மனநல பாதிப்பு அறிக்கைகளை தயார் செய்துவிட்டு கடற்கொள்ளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இந்தியன் எந்தக் கீழ்த்தரமான வேலையையும் செய்யத் தயங்கமாட்டான்.
  20. குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 06 Jan, 2026 | 05:35 PM அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் பொருத்தமான மாதிரியைக் கண்டறிவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவ் உத்தேச முறையின் கீழ் குருதிக் கூழ்மப்பிரிப்பு இயந்திரம், வடிகட்டி சுத்திகரிப்பு தொகுதி, தேவையான பயன்பாட்டுப் பொருட்கள், தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்களை தனியார் பங்காளர்கள் மூலம் முழுமையான நிதியிட்டு முகாமைத்துவம் செய்வதற்கும், முழுமையான சிகிச்சைக் கண்காணிப்பை பேணி அரசு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றது. அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/235377
  21. கியூபா உள்பட அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டாம் பென்னட் 6 ஜனவரி 2026, 07:22 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கையின் லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டின் தலைநகர் கரகாஸில் இருந்து ஓர் அதிரடி இரவு நேரத் தாக்குதல் மூலம் கைது செய்ததன் வழியாக, வெனிசுவேலாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை டிரம்ப் நிஜமாக்கியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து விவரிக்கும்போது, டிரம்ப் 1823-ஆம் ஆண்டின் 'மன்றோ கோட்பாட்டையும்', மேற்கு அரைக்கோளத்தில் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களை உள்ளடக்கிய பகுதி) அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் அதன் வாக்குறுதியையும் மீண்டும் கையில் எடுத்தார். மேலும், அதற்கு "டான்றோ கோட்பாடு" என்று மறுபெயரிட்டார். சமீப நாட்களில் பிற நாடுகளுக்கு எதிராக அவர் விடுத்துள்ள சில எச்சரிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்து கிரீன்லாந்தில் பிட்டுஃபிக் விண்வெளித் தளம் என்ற ஒரு ராணுவத் தளம் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே உள்ளது. ஆனால், டிரம்ப் அந்த முழுத்தீவையும் கைப்பற்ற விரும்புகிறார். "தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நமக்கு கிரீன்லாந்து தேவை" என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், அந்தப் பிராந்தியம் முழுவதும் "ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் குறிப்பிட்டார். டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான இந்த பரந்த தீவு, அமெரிக்காவுக்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (3,200 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்குத் தேவையான அரிய வகை கனிமங்கள் கிரீன்லாந்தில் அதிகளவில் உள்ளன. தற்போது, இந்த கனிமங்களின் உற்பத்தியில் அமெரிக்காவை விட சீனா வெகுவாக முன்னிலையில் உள்ளது. வட அட்லாண்டிக் பகுதியில் கிரீன்லாந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ஆர்க்டிக் வட்டத்திற்குள் நுழைவதற்கான வழியாக திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவை அமெரிக்கா கட்டுப்படுத்துவது என்பது ஒரு "கற்பனை" என்று டிரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன் பதிலடி கொடுத்துள்ளார். "இனி அழுத்தங்கள் வேண்டாம். மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். இணைத்துக்கொள்வது போன்ற கற்பனைகள் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், அது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும்," என்று அவர் கூறினார். கொலம்பியா வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை டிரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுவேலாவின் மேற்கு அண்டை நாடான கொலம்பியாவும் கணிசமான எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, மரகதம், பிளாட்டினம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது. இப்பிராந்தியத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தில், குறிப்பாக 'கோகைன்' கடத்தலில் இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதன் விளைவாக, கொலம்பியாவின் இடதுசாரி அதிபருடன் டிரம்ப் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ளார். போதைப்பொருள் கும்பல்கள் "செழிக்க" பெட்ரோ அனுமதிக்கிறார் எனக் கூறி, கடந்த அக்டோபரில் அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. "கோகைன் தயாரிப்பதையும் அதை அமெரிக்காவுக்கு விற்பதையும் விரும்பும் ஒரு மனிதனால் கொலம்பியா வழிநடத்தப்படுகிறது. அவர் அதை நீண்ட காலத்திற்குச் செய்யப் போவதில்லை" என்று ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பேசும்போது டிரம்ப் கூறினார். கொலம்பியாவைக் குறிவைத்து அமெரிக்கா ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு, டிரம்ப், "அது எனக்கு நன்றாகத் தோன்றுகிறது" என்று பதிலளித்தார். வரலாற்று ரீதியாக, அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்புப் போரில் கொலம்பியா ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கும்பல்களை எதிர்கொள்ள ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக அந்நாடு அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரான் இரானில் தற்போது அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு போராட்டக்காரர்கள் மேலும் கொல்லப்பட்டால், அந்த நாட்டு அதிகாரிகள் மீது "மிகக் கடுமையான தாக்குதல்" நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "நாங்கள் இதை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தைப் போலவே அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மிகக் கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். கோட்பாட்டு ரீதியாக, இரானானது "டான்றோ கோட்பாட்டின்" எல்லைக்கு வெளியே இருந்தாலும், கடந்த ஆண்டு அதன் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரான் ஆட்சிக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் திறனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக 12 நாட்கள் நீடித்த இஸ்ரேல்-இரான் போர் நடந்தது. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. கடந்த வாரம் மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நடந்த சந்திப்பில், இரான் விவகாரமே முதன்மையானதாக இருந்ததாகக் கூறப்பட்டது. 2026-ஆம் ஆண்டில் இரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெதன்யாகு ஆலோசித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோ 2016-ஆம் ஆண்டில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபோது, மெக்சிகோவுடனான தெற்கு எல்லையில் "சுவர் எழுப்பப்படும்"என்ற முழக்கம் மிக முக்கியமானதாக இருந்தது. 2025-ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே, மெக்சிகோ வளைகுடாவை , "அமெரிக்க வளைகுடா" என்று பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோத குடியேற்றத்தையோ தடுப்பதற்கு மெக்சிகோ அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், மெக்சிகோ வழியாக போதைப்பொருள் "பெருக்கெடுத்து ஓடுவதாகவும்", நாம் "நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்" என்றும் கூறினார். அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் "மிகவும் வலிமையாக" இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், அமெரிக்கா மெக்சிகோ மண்ணில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்வதை வெளிப்படையாக நிராகரித்துள்ளார். கியூபா புளோரிடாவுக்கு தெற்கே 90 மைல் (145 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு நாடு, 1960-களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிக்கோலஸ் மதுரோவின் வெனிசுவேலாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. கியூபா "வீழ்வதற்குத் தயாராக" இருப்பதால், அங்கு அமெரிக்க ராணுவத் தலையீடு தேவைப்படாது என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது தானாகவே வீழ்வது போல் தெரிகிறது," என்று அவர் கூறினார். மேலும், "அவர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கியூபாவுக்கு இப்போது வருமானம் இல்லை," என்று தெரிவித்த டிரம்ப் , "அவர்கள் தங்களுடைய வருமானம் முழுவதையும் வெனிசுவேலாவிடமிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணெயிலிருந்து பெற்றனர்," என்றும் குறிப்பிட்டார். கியூபாவுக்குத் தேவையான எண்ணெயில் சுமார் 30% வெனிசுவேலாவால் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இப்போது மதுரோ பதவியில் இல்லாததால், அந்த விநியோகம் முடங்கும்பட்சத்தில் ஹவானா (கியூபாவின் தலைநகரம்) பெரும் பாதிப்புக்குள்ளாகும். கியூப குடியேறிகளின் மகனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ, கியூபாவில் ஆட்சி மாற்றத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஹவானாவில் வசிப்பவராகவோ அல்லது அங்குள்ள அரசாங்கத்தில் இருப்பவராகவோ இருந்தால், நான் கவலைப்படுவேன். குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவாவது கவலை கொள்வேன்"என்றார். மேலும், "அதிபர் பேசுகிறார் என்றால், நீங்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cje1952wzwvo
  22. பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு Jan 6, 2026 - 06:51 PM கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmk2mbebd03m2o29nss7x03f8
  23. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி Jan 6, 2026 - 07:42 PM நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் "போதைப்பொருள் அற்ற நாடு - மகிழ்ச்சியான நாளை" என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது. போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். 2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1,821.174kg ஹெரோயின், 3,865.710kg ஐஸ், 17,189.377kg கஞ்சா, 38.958kg கோக்கேய்ன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmk2o5kqn03m4o29nmhhusdv5
  24. மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றையதினம்(05.01.2026) இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கடந்த 30ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்றொழிலாளர் விடுவிப்பு கோரிக்கை கைது செய்யப்பட்ட பிரபு(49), நாகராஜ்(47), ரூபன்(45) ஆகிய மூன்று கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.facebook.com/reel/837653312421458 இந்நிலையில், கைதான பிரபு, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து எடுத்துக் கொள்பவர் என்றும், இவருக்கு கடந்த 3ஆம் திகதி மதுரையில் உளவியல் சிகிச்சை பெற இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது கடற்றொழிலாளர் பிரபு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ளாமல், உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உடன் இருக்கும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும், ஏனெனில் அவருடைய உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதாகவும், அவரை உயிருடன் தங்களிடம் ஒப்படைக்குமாறும் உறவினர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-nadu-demands-release-of-fisherman-1767696094
  25. மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் பாதிப்பு இந்த தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது. எதிர்வரும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கு வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9,10,11 ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலச்சரிவு அனர்த்தம் குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எதிர்வரும் 08.01.2026 முதல் 11.01.2026 வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 08.01.2026 முதல் 13.01.2026 வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கைக் கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் 08.01.2026 முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசக்கூடும். மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும். கடல் மட்டம் வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும். தயவு செய்து இந்த தாழமுக்கத்தினைச் சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். மிக முக்கியமாக தாழமுக்கம்/ தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும். ஆகவே சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/flooding-and-landslide-warnings-heavy-rainfall-1767692928

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.