24 hours
Showing topics posted in for the last 1 day.
- Today
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
கமலுக்கு தெரியவில்லை உண்மையில் அண்ணா சோழவம்சதின் நேரடி நீட்சி என்று. அண்ணா காஞ்சிபுரம் (கஞ்சிவரம்) முதலியார் - இவர்கள் இப்போதும் தென்கரை மூலநாத சாமி கோயிலில் இருக்கும் சவான் கல்லை (நவகாண்டத்துக்கு எழுப்புபப்பட்டு இப்போதும் உள்ள, நவகாண்டம் அநேகமாக அரச உறவுகளில் ஒருவரே செய்வது) பூசிப்பவர்கள். அனால் இதன் ஆதி வரலாறை சொல்வது கந்தபுராணம் - வீரவாகுதேவர் மற்றும் சோகோதர்கள் முருகனால் அனுப்பப்பட்டது, முசுகுந்த சோழ இராச்சியத்தை மீட்பதற்கு , பரப்புவதற்கு (சுருக்கமாக). அதில் முடிவின் தறுவாயில் இருந்த (சிறிய) சோழவம்சத்தை, வீரஆகுதேவரின் மகளான சித்திரவல்லியை முசுகுந்த சோழன் மணம் முடித்து தொடங்கி, பின் விருட்சமாகிய சோழவம்சம் என்று (சுருக்கமாக). (இந்த (அரச) இறைவரம் என்ற பகுதி பாண்டியர், சேரருக்கு இல்லை) ஆம் அண்ணா (வரலாற்றில் சரியாகத் தான்) குறிப்பீடான அரியணையில் ஏற்றப்பட்டார்.
-
கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.
கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும் --- --- --- *உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை *பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது *ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன? --- ---- --- இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம். ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது. இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன. அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே. இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. அதாவது -- 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது. குறிப்பாக -- பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது. அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள். அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக -- தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது. பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச. அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன. சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது. “வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது. அது மாத்திரமல்ல -- 13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார். கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது. ஆகவே -- இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் -- இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால் --- 13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு. அதேவேளை -- இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது. அதாவது -- கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது. அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே -- 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது. குறிப்பாக -- அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது, ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது. ஆகவே -- ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது. அதாவது --- கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆகவே --- 'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது. எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் --- குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது. ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால். அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடிச்ச சிக்ஸ்சரில் 3 பந்துகள் காணமல் போயிட்டாம்....( மைதான் வெளிப்புறத்தி வீழ்ந்து) பையன் என்னத்தை சாப்புடுறானோ தெரியாமல்தான் கேட்கின்றேன் ..அந்த கார் ஓடுற நேரத்தவிட... இந்த போட்டி நடத்திறதுக்கு ஒரு தில் வேணும் ..அப்ப பக்கத்திலை என்னதை வைத்துக்கொண்டு படுக்கிறியள்... இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இந்த ரசோதரன் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி போலகிடக்கு
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
வட்டுக்கோட்டை, கொட்டைப்பாக்கு கதையாகவல்லோ கிடக்கு ..🤔
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏன் ஜி ? அடிக்கடி நட் லூஸ் ஆகுமோ😂?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யார் சாமி நீங்க. லண்டனுக்கு வந்தா ஒரு எட்டுப் பாத்திட்டு, பேசாமப் போயிடனும் போல கிடக்கு. 🤣
- Yesterday
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
The great explanation. சிக்கலான விடயங்களை மற்றயவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் கூறும் திறமையில் உங்களுக்கு நிகர் நீங்களே என்று கூறுமளவுக்கு பொருத்தமான உதாரணங்களுடன் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி . இதைக் கூட புரியவில்லை என்று கூறுபவர்கள் நடிகர் திலகங்களே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் அயர்லாந்தையும் தெரிவு செய்திருந்தால், இந்த மூன்று போட்டிகளிலேயே ஒரு ஹாட்ரிக் அடித்து விடுவேன் போல..............🤣. அடிமுடி, இதில் ஏதோ ஒன்று, இப்பவே தெரியுதே..................😜.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன். 2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ.., கோட்டையும் இருக்க வில்லை… ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை. நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே. பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள். பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும். நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள். மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள். ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின. ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது. ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது. இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார். பிகு அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம். Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
பிகு கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா? சின்னதில் இது விச பாம்பு எண்டும், கொத்தினால் சவம் எடுக்கும் வரை மரத்தில் (கொம்பில்) இருந்து பார்க்கும் என்றும் கிலியை வர வைத்தனர். ஆனால் அண்மையில் ஒருவர் அது லுலுலா பாம்பு என சொல்லி, கையில் அசால்டாக பிடித்து விளையாடும் வீடியோ பார்த்தேன். யாராவது ஜஸ்டின் அண்ணாக்கு @ போட்டு விடவும். இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை? நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
என்னது கண்ணை பார்ப்பதா… தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்… அந்தியேட்டி என்று அர்த்தம்😂.
-
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!
இந்த வழக்கும் வைகோதான் போட வேண்டும். ஆனால் பாலியல் புகாரில் இருந்து தப்ப டெல்லி உச்ச நீதிமன்று வரை பிஜேபி வக்கீல்களை வைத்து வாதாட முடியும் 😂.
-
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
கோபால் ஊழலற்ற ஆட்சி என்றீர்களே கோபால்…. அதெல்லாம் பொய்யா கோப்ப்ப்ப்பால்ல்ல்…😂. வருமான வரியை கட்டாமல் கையில் காசை வாங்கி விட்டு, அதை ஒத்துக்கொண்டும் விட்டு…. அபராதம் போட தாமதமாவிட்டது என கோர்ட்டை அணுகியுள்ளார்🤦♂️. 1.5 கோடி விஜைக்கு பெரிய காசில்லை. ஆனால் இதை செய்தியாக்கி அதனால் வந்த நன்மதிப்பிழப்பு பலகோடி பெறும்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
லாம் லாம் லாம் ..... ஆனால் உண்மை என்னவென்று கடைசிவரை நின்றவன் சொல்லணும். அவர்கள் எவரும் அவ்வாறு இதுவரை சொன்னதில்லை. இனியும் இல்லை. ஏனெனில் சிங்களம் தன்னை மாற்றிக் கொள்ளாது. மாற்றவும் போவதில்லை. ஒன்றாக சாகலாம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படலாம். நேற்றைய ஊர்வலம் சொல்லும் செய்தியும் அது தான். டொட்.
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
நன்றி நன்னி. இந்த கதை வந்த நாள் தொட்டு உண்மையில் ஆமை ஓட்டை இப்படி பாவிக்கலாமா, ஆமை ஓடு மிதக்குமா என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்தது. யாழிலும் அதை கேட்டபோது ஆமையின் ஆதரவாளர் கூட ஒழுங்காக பதில் சொல்ல இயலவில்லை. ஆக, இப்படி தெப்பம் போல பாவிக்கலாம் என்பது தெரிகிறது. ஆனால் இது இரெண்டாம் உலக யுத்த காலத்தில் (பலாலி கட்டிய சமயம்), மிகவும் பிந்தங்கிய நிலையில் இருந்த குப்பிளான் பகுதியில் பாவனையில் இருந்துள்ளது. அப்போ யாழின் பிரதான வாகனம் மாட்டு வண்டி. இந்த கதையை கேட்டு விட்டுத்தான் அண்ணன் - லேண்ட்குரூசர்கள், பஜ்ரோக்களில், வானூர்த்திகளில் புலிகள் பறந்த காலத்தில், ஆமை ஓட்டில் போனார்கள் என கதை அதை நான் கண்டேன் என கப்ஸா அடித்துள்ளார். இதை 100 வருடம் முந்திய கதை என சேரலாதன் போன்றோர் சொல்லி இருக்க கூடும் - சினிமா கூத்தாடி அதை படமாக்கி விட்டார்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
sordSetonp:2alga0tif6,161rt tgéga1hr052600imefu1av0t35c 581f · அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. "அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து "உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார். "என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர். "போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா. போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார். "அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா. #anna57
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கதை குறித்த விளக்கத்திற்கு நான் வரவில்லை. ஆனால் இந்த ஆமையோடு உண்மை. இஞ்சேர், நான் இப்பதான் இதைக் கண்டுபிடிச்சன். உண்மையிலேயே எங்கட நாட்டிலை ஆமையோட்டிலை பயணம் செய்திருக்கிறார்கள். நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது. https://noolaham.net/project/190/18958/18958.pdf page 9 கீழ்க்கண்ட செய்தி தமிழீழத்தின் வெள்ளிநாதத்தில் (11 - 17 - 6 - 2004) வந்தது: "பலாலி, வசாவிளான் வளலாய், பகுதிகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். இவர் கள் கல்லுக்கிளறும் இடங்கள் 'மொண்டி' என அழைக்கப்பட்டது. பலாலி தெற்கு தெழுந்தை மொண்டி, வசாவிளானிலுள்ள போயிட்டி மொண்டி (தற்போதைய சுந்தரபுரம்) குப்பிளான் மொண்டி வளலாய் மொண்டி, நிலாவரை மொண்டி என்பவற்றில் பலாலி ஓடுபாதைக் குரிய கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மாரிகாலத்தில் தெல்லிப்பளைக்குப் பயணம் செய்பவர்கள் குரும்புசிட்டியை சுற்றிச் செல்லநேர்ந்தது. விமான ஓடுபாதைக்கு திட்டமிடப்பட்ட தென்பகுதி மாரியில் இயல்பாகவே குளமாகுவது வழக்கம். சிலர் வாழைக்குற்றிகளை பிணைத்துக்கட்டியும், ஆமையோடுகளையும் தெப்பமாகப்பாவித்து கட்டுவன்கரை சென்றனர். இப்பகுதிகள் பின்பு மொண்டிகளில் எஞ்சும் கல்லும் மண்ணும்கொண்டு நிரப்பட்பட்டன."
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்கானிஸ்தான் நியுசிலாந் விளையாட்டு நாளை விறுவிறுப்பாக இருக்கும் மற்ற இரண்டு விளையாட்டும் சும்மா பார்க்க சரி..............................
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அப்படியா? அப்படி அழிக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அமைந்த நாளில் இருந்து 1981 வரை இலங்கையில் தமிழர் சனத்தொகை மற்றய மாவட்டங்களுக்கு இணையாக அதிகரித்து சென்றதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1983 கு கிறகு தான் வடக்கின் சனத்தொகையில் பாரிய வீழ்சசி கண்டது. அதுவும் 2009 இன் யுத்தத்ம் முடிந்த பின்னர் வளர்சசி கண்டு வருவதாகவே இலங்கையின் சனத்தொகை கண்கெடுப்பு புள்ளிவிபரம் காட்டிநிற்க முற்றாக அழித்ததாக நீங்கள் எங்கிருந்து புள்ளிவிபரங்களை பெற்றீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
இங்கே வெளிநாடுகளில் புலிவால்களாக இருந்த பலர் இப்போ ஒன்றரை வருடமாக அனுரகுமார திசநாயக்கவின் தீவிர இரசிகர்களாக மாறியதை போன்று அந்த ஆமை கறி விருந்து புளுகு மோசம் துணிந்து புளு இருக்கின்றார் தானே
-
ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.
Trump won’t apologize for sharing since-deleted racist video depicting Obamas as apes on Truth Social. தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். தேர்தல் முறைகேடு அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன். அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது. அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார். மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இழிவுபடுத்தும் காட்சிகள் 2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன். அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது. அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார். மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. Tamilwinஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்ல...தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங...
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இங்கு அடிமைகள் மற்றவர்களை அடிமைகள் ஆக இருக்க சொல்ல வேண்டாம் அதற்கு யாழை ஒரு ஊது குழல் ஆக்க வேண்டாம் தமிழ் தேசியம் தமிழர் என்பது உண்மையான தமிழனின் இயல்பு .அடிமையான மொக்கு கூட்டங்களுக்கு பலமுறை எடுத்து சொன்னாலும் விளங்காது என்பது எமக்கும் புரியும் எடுத்ததுக்கெல்லாம் யாழில் புலியை திட்டாது விட்டால் அன்றைய இரவுக்கு நித்திரை வராவிட்டால் ஒழுங்கான வைத்தியர் இடம் நித்திரை குளுசை வாங்கி போடுவது அடிமை விசுவாசிகளுக்கு மிகவும் நல்லது அதை விட்டு இந்த புனிதமான யாழை உங்கள் இஷடத்துக்கு அசிங்கம் பண்ண வேண்டாம் .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி அணி நல்ல அணி நான் அவையின் திறமை தெரியாம மாட்டிக் கிட்டேன்😁😛....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.