24 hours
Showing topics posted in for the last 1 day.
- Today
-
அமரசிறி : கருணாகரன்
யாழ்ப்பாணத்திலுள்ள தனது சக ஆசிரியரை சந்திக்க வந்த சிங்கள இந ஆசிரியர் அமரசிறி, அவர் சிங்களச்சிப்பாயல்ல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்த ஜந்து பவுண் வரவில்லையா.....நீங்கள் போட்ட போடு அப்பிடி இருந்துதே. ஜயகோ 😀
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
இந்த திரியில் கூட கதறல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது😂. பிகு கதறலை கேட்க என்றே இந்த செய்தி இணைக்கப்பட்டது என நினைப்பவர்கள் - கெட்ட எண்ணம் உடையோர் 😂
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இப்படிதான் எங்கள் ஊரில் ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி விட்டார். ஆனால் சேர்ச்சுக்கு போவதில்லை. ஒரு தரம் வழியில் கண்ட பாதிரியார் “ என்ன இப்ப சேர்சுக்கே வாறேல்லா யேசுவை மறந்துட்டியளோ” என கேட்க, எங்கட ஆள் சொன்னாராம்.. “சிவ, சிவா…நானாவது யேசுவை மறப்பதாவது” எண்டு 😂. அப்படித்தான் பலரது கிறிஸ்தவ நம்பிக்கையும். சாதி, தீண்டாமை, பெண்ணடிமைதனம், கர்மா, …. இப்படி சர்மாக்கள் சொல்லி கொடுத்த எதையும் கைவிடவில்லை. இங்கே பலர் அனுர காதலில் அனுங்குவதால் அவர்களுக்கு இலங்கை அரசு பற்றிய புரிதல் மங்கி விட்டது. 2009 க்கு முன் டக்கா செய்தவற்றுக்கு ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போக தேவையில்லை. அம்னெஸ்டி, HRW, US State dept அறிக்கைகளே போதும். ஆனால் இவற்றை அனுரா கனவிலும் தொடார். மேலே ஈழப்பிரியன் அண்ணா பதிந்துள்ளார். ஒரு உறுப்பினர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை சீண்டுவார் இல்லை. சும்மா கண்துடைப்புக்கு ஒரு கைது. அதை கண்டவுடன் காவடிக்காரருக்கு ஒரு சோடா குடித்த சிலிர்ப்பு.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஐயோ, இவர் இன்னும் செயல் வீரர் என பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் என்ன ஜனநாயக வழியிலா செயற்பட்டு கொண்டிருந்தார் இவரை முடக்குவதற்கு? வைத்திருந்த கைதுப்பாக்கியையும் இரவல் கொடுத்து மாட்டுப்பட்டிருக்கிறார். இவர் செய்த எத்தனையோ தீவினைகள் இருக்க இப்படி மாட்டுப்படுவேன் என்று கனவிற்கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். அவரது துணைக்கரங்களும் மடங்கி விட்டன. செய்த அநிஞாயம், அக்கிரமம், அதர்மம், வினை மட்டுமே இப்போது இவருடன் கூட இருக்கின்றன. அவரை கேள்வி கேட்டு கஸ்ரப்பட்டு விசாரிக்கத்தேவையில்லை, அவருடன் சேர்ந்தியங்கியவர்கள் அங்கே காத்திருக்கிறார்கள் இவரைக்காண, அவர்களை கண்டதும் இவர் உளறத்தொடங்கி விடுவார். ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாமல் ஒன்பது உளறுவது இவரின் வழக்கம்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நீங்கள் சொல்வது பிரபல தொழிற்சங்கவாதியான கேசி நித்யானந்தா என நினைக்கிறேன். நான் அறிந்த வகையில் டக்கா சில காலம் இவரின் சீடர்களில் ஒருவர் போல இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் பெரியப்பா, சுவீகார தந்தை என பல கதைகள் உலாவுகிறன. இந்த கதைகளை தனக்கு கீர்த்தி ஏற்படும் வகையில் டக்காவே பரப்பினார் என்பதே நித்யாநப்தாவுடன் அருகில் இருந்து வேலை பார்த்தோர் என்னிடம் நேரடியாக கூறியது. கிறிஸ்மசுக்கு கேக் அடிப்பவர் எல்லாம் கிறீஸ்தவர் அல்ல 😂
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
மலையக மக்களை குடியமர்த்தி வாழ்வளிக்க முன், தம் தேர்தல் தொகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன். சுகாதார சுற்றுச்சூழல் கெடுதல் இதை முதல் கவனியுங்கள் சம்பந்தப்பட்டவர்களே!
- Yesterday
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
யாழ் மத்திய கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார் என விக்கியில் உள்ளது. 1977ம் ஆண்டு இவரது நெருங்கிய உறவினர் ஜே ஆர் ஜெயவர்த்தனவினால் தொழிற்சங்கம் ஒன்றில் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவரின் உதவியாளராக டக்லசார் செயற்பட்டார் எனவும் தகவல் உள்ளது. இத்தகைய அனுபவங்கள் டக்லஸ் அந்த காலத்திலேயே கொழும்பை பிரித்து மேய்வதற்கு உதவ போதுமானது. நடப்பு அரசாங்கம் டக்லசை எவ்வளவு தூரம் முடக்கும் என கூறுவது கடினமானது.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
அடுத்து, வடக்கில் இன்னுமொரு அரசியல் புள்ளி கைது செய்யப்படுவாரென செய்திகள் சொல்கின்றன. அது சிர்த்தாத்தனாக இருக்குமோ? கொலைகார அரசுகளில் கொலைகாரன் மத்திய அமைச்சராக இருப்பதில் என்ன அதிசயம்? இவர்கள் திறமையினாலேயோ, மக்கள் ஆதரவினாலேயோ இவற்றைப்பெறவில்லை, செய்த கொலைகளுக்கு சன்மானம். ஏன் சிவநேசதுரை சந்திரகாந்ததனுக்கு முதலமைச்சர் பதவி எப்படி கிடைத்தது? பலி கொடுக்கப்போகும் கடாவுக்கு மாலை போட்டு, பொட்டு வைத்து, தூபம் காட்டி மரியாதை செய்வதில்லையா? அறிவு கொஞ்சமாவது இருந்திருந்தால் எதிர்காலம் மாறலாமென நினைத்திருக்க மாட்டாரா இந்த மனிதன்? ஜனநாயக வீரர், எங்கே இவரது ஜனநாயகம்? ஏன் இவரது கைதை மக்கள் வெடி கொழுத்தி கொண்டாடுகின்றனர்? அசுரன் அழிந்த நாளென்றா? மக்கள் உண்மையான தீபாபலியை கொண்டாடுகின்றனர். இவரோடு உடனிருந்தவர்கள் இவரை விட்டோடுகின்றனர், சிலர் காத்திருந்து காட்டிக்கொடுக்கின்றனர். இவரது ஜனநாயகத்தில் சாதித்தவை இவை. இவரால் கொல்லப்பட்ட ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் இவரை பழிவாங்கிய திருப்தியில். இந்த மனிதன் இந விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி எதையும் சாதிக்கவில்லை இந விடுதலைக்காய், அரசியல் செய்தும் இனத்தை அழித்ததுதான் மிச்சம், அதைத்தான் இப்போ அறுவடை செய்கிறார். அன்று புலிகளின் தாக்குதலில் இவர் இறந்திருந்தால்; இத்தனை கொடுமைகளும் வெளிவந்திருக்குமா? ஆண்டு நினைவலைகள் கொண்டாடப்பட்டிருக்கும் இவருக்கு, புலிகள் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும். ஒருபோதும் மக்களால் நினைவு கூரப்படக்கூடிய மனிதனல்ல இவ(ன்)ர். கர்மம் என்றால்; பாவம், அதர்மம் என்று பல்வேறு பொருள் தரும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@vasee வசி உள்ளார். மகிழ்ச்சி வசி. ஓடப் பார்த்தீர்கள் பிடிச்சு உக்கார வைச்சாச்சு. இனி ஓடவும் முடியாது. ஒழியும் முடியாது.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்.] கர்மம் கர்மா என்பது எல்லாம் பகவத்கீதையில் வருகின்ற பிஜேபி பாவிக்கின்ற சொற்கள் தானே புலம்பெயர் இலங்கை கிறிஸ்தவர்களும் நம்புவார்கள்🙄
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
அனுர ஆட்சியில் பிள்ளையான் மற்றும் ரனில் கைதாகும் போது வராத சவுண்ட் மற்றும் சலசலப்புகள் டக்ளஸ் கைதாகும் போது வருகின்றது எனும் போது....எங்கையோ யாருக்கோ குத்துது குடையுது என்றுதானே அர்த்தம். டக்ளஸ் கும்பல் செய்த அட்டூழியங்கள் ஆதாரங்களாக பெரிய யூனிகளான ஒக்ஸ்வோர்ட்,ஹவார்ட் போன்ற யூனிகளில் ஆதாரமாக திரட்ட முடியாது.சிசி என் என் பி பிசி ஊடகங்களும் சொல்லாது. ஆனால் ஊரில் உள்ளவர்களை கேட்டால் கண்ணீர் மல்க உடல் நடுக்கத்துடன் சொல்வார்கள்.
-
லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!
எங்கடை ஆரம்ப பிரச்சனையே இந்த மாதிரியான மதம் மொழி என்று வேறுபடுத்தி பார்பவர்கள் தான் கடைசியில் சிங்களவன் கலைத்து கலைத்து அடி போட்டும் இன்னும் திருந்தாமல் சிங்களவனுக்கு மட்டுமே பல்லாக்கு துக்குவம் எனும் கோஸ்ட்டி . இந்திய தமிழ் முஸ்லிம்கள் ஆரம்ப கால உண்மையான முஸ்லிம் இளையோர்கள் தமிழ் ஈழத்துக்கு தம்முயுரை கொடுத்தார்கள் கொடுப்பதற்கும் தயராக இருந்தார்கள் தற்போதுள்ளளோர் தமிழனை திட்டினால் சிங்களவன் அடிக்க மாட்டான் என்ற நப்பாசையில் இருகின்றனர் போல் உள்ளது . ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!! இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை. இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது. இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு ‘இனி’ என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.“சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா” என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது. எம் நிலைப்பாடும் அதுவே. உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவோம் … பதிவு : பூராயம் வன்னியன் நன்றி: மீனகம் நாம் தமிழர் கட்சிஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல...ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!! | நாம் தமிழர் கட்சிhttps://noolaham.net/project/816/81534/81534.pdf
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
சிலோன் மருமோனும் உலக நடிகருமான விஜய் அவர்களின் அதீர வளர்ச்சியையும், அவரது நற்பணி சேவைகளையும் கண்டு எரிச்சலும் பொறாமையும் கொண்டவர்களின் செயலாகத்தான் இது இருக்குமென நான் நினைக்கின்றேன். என் வன்மையான கண்டனங்கள். தள்ளி விடுறதெல்லாம் என்ன பழக்கம்?
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஈழத்தமிழர் அரசியலில் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளியாகவும், பின்னர் செல்வாக்குமிக்க மத்திய அமைச்சராகவும் திகழ்ந்த டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் தற்போது கர்மாவின் பிடியில் சிக்கியுள்ளது. அவரது எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்த சுருக்கமான தொகுப்பு இதோ: 1957-இல் பிறந்த கதிரவேலு தேவானந்தா, தனது இளம் வயதிலேயே இடதுசாரி மற்றும் தமிழ் தேசியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஈரோஸ் (EROS) அமைப்பில் இணைந்து 'டக்ளஸ்' என்ற பெயரில் லெபனானில் இராணுவப் பயிற்சி பெற்றார். பின்னர் ஈபிஆர்எல்எஃப் (EPRLF) அமைப்பில் இணைந்து அதன் இராணுவத் தளபதியாகச் செயல்பட்டார். தேவானந்தாவின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்தது. இவரது ஆரம்பகால நடவடிக்கைகளை மீட்டுபார்க்கையில் 1980-களில் இலங்கையில் பலமுறை சிறை வைக்கப்பட்டார். 1983 வெலிக்கடை சிறைப்படுகொலையில் தப்பிப் பிழைத்து, மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடி இந்தியா சென்றார். சென்னையில் தங்கியிருந்தபோது, சூளைமேடு பகுதியில் ஒரு வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கடத்தல் புகார்களில் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கத் தம்பதியினர் கடத்தல் மற்றும் நிதி திரட்டுவதற்காகச் சொந்த மக்களையே கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. 1990-களில் ஈபிடிபி (EPDP) கட்சியைத் தொடங்கிய அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்தார். ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டு, யாழ்ப்பாணத் தீவுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1994 முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல அரசாங்கங்களில் சக்திவாய்ந்த அமைச்சராகவும் பதவி வகித்தார். புலிகளின் பத்து கொலை முயற்சிகளில் இருந்தும் அவர் உயிர் தப்பினார். 1990-களில் இலங்கை அரசுடன் இணைந்த பிறகு, EPDP ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் நெடுந்தீவு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் EPDP-யின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீது கப்பம் கோருதல், சித்திரவதை மற்றும் தன்னிச்சையான கொலைகள் செய்தார். 2006-2007 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 'வெள்ளை வேன்'களில் கடத்தப்பட்ட சம்பவங்களில் EPDP-யினருக்குத் தொடர்பிருப்பதாக Human Rights Watch மற்றும் Amnesty International போன்ற அமைப்புகள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணத்தில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் EPDP உறுப்பினர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தியதாக ஈபிடிபி மீது பல புகார்கள் உள்ளன. குறிப்பாக 2011-ல் யாழ்ப்பாணத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. அரசியல் ரீதியாகப் பல சவால்களைச் சந்தித்த தேவானந்தாவின் வீழ்ச்சி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் உச்சகட்டத்தை எட்டியது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் கைகளுக்குச் செல்ல அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டில், 2025 டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அவர் கைது செய்யப்பட்டார். ஒரு காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்துடன் நின்ற அவர், தற்போது அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு போராட்ட இயக்கத்தின் தளபதியாகத் தொடங்கி, அதிகாரமிக்க அமைச்சராக வலம் வந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று சட்டவிரோத கும்பல்களுடனான தொடர்பு மற்றும் ஆயுதக் கையாளுதல் புகார்களால் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் இந்தத் திடீர் கைது, அவரது தசாப்த கால அரசியல் ஆதிக்கத்தின் வீழ்ச்சியாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு பிரபஞ்ச நீதியையும் உரக்கச் சொல்லியிருக்கிறது. "நீ விதைத்த வினையெல்லாம் உன்னை ஒருநாள் வேரறுக்கக் காத்திருக்கும்" என்ற முதுமொழிக்கு அவரும் விதிவிலக்கல்ல என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அடக்குமுறைகளும், சர்ச்சைக்குரிய கடந்த காலச் செயல்பாடுகளும் இன்று ஒரு சுழற்சியைப் போல அவரிடமே திரும்பி வந்துள்ளன. விதியை மதியால் வெல்லலாம் என்று நினைத்தாலும், ஒரு மனிதன் செய்த வினைகள் காலத்தின் கணக்கில் ஒருபோதும் தப்புவதில்லை என்பதற்கு டக்ளஸின் இன்றைய நிலையும், இந்தத் திடீர்ச் சரிவும் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
அதற்கிடையில் மதுஷின் மண்டையில் போட்டுவிட்டார்கள். கையில் விலங்குடன் இருந்த மதுஷ், போலீசாரை தாக்க முற்பட்டபோது போலீசார் திருப்பி தாக்கியதில் மதுஷ் கொல்லப்பட்டார். அவரோடு பல அரசியல்வாதிகளின் ரகசியங்களும் மறைந்தன. இப்போ, டக்கியார் தொடர்வார் மதுஷ் விட்டு இடத்திலிருந்து அல்லது அவரும் மதுஷ் போன இடத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். டக்கிளசுக்கு தன் முடிவு எப்படியானது எனத் தெரிந்திருக்கும், அவரே பலருக்கு முடிவுகளை எடுத்தவராயிற்றே. இராணுவம், போலீசில் பல ஊழல்வாதிகளும் கொலைகாரரும் முன்னைய அதிபர் விசுவாசிகளும் உள்ளனர். கம்மன்பில தனது சட்டத்தரணி மேலங்கியை சலவைக்கு கொடுத்துள்ளாராம், அது வீட்டுக்கு வந்தவுடன் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவஞானமும் சுமந்திரனும் மிகுந்த வேதனையில் உள்ளனராம், டக்கிளஸ் குற்றமற்றவர் என வெளியில் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன என ஊர்க்குருவி ஒன்று சொல்லிச்சு. டக்கிளஸ் இவர்களை மாட்டி விட்டாலும் விடலாம் யாரறிவார்? அரசியலில் எதுவும் எந்நேரத்திலும் நிகழலாம். என்னவோ... புது வருடத்தில் நல்ல செய்திகள் வரட்டும்! செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்." ஓமோ, இல்லையோ?
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
விஜய் ஒரு நல்ல நடிகர் .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆனால் நமக்கு நஷ்டமே எதுக்கும் வரட்டும் கேட்டுப் பார்க்கலாம் 😇
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
இவர் நம்ம ஆள்..... அதனால் தண்ணீரில் சறுக்கி விழ வாய்ப்பில்லை... தள்ளுப்பட்டுத்தான் விழுந்திருப்பார் 😂 பனையாலை விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி பனையூர் செல்லும் வழியில் இன்னொரு விபத்தால் 🤣சங்கடமாம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பெப் 5ம் திகதி வரலாமா கிருபன்ஜி சார்,ஆனா அந்த அஞ்சு பவுண்......
-
மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
சாதாரணமாக ஒரு குழந்தை விழப்போகுதே என்று குழந்தையைப் பிடித்தவருக்கு ஒருவாரமாக கம்பி எண்ணியிருக்கிறார். சிலவேளை இவர் ஒரு வெள்ளையராக இருந்திருந்தால் இவர்களால் மிகவும் பாராட்டப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் படிப்பினையாக வைத்து என்ன தான் நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியுமா?
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
நம்ம தளபதிக்கு தல ரசிகர்களும் ஆதரவாம்! டீம்கா மீடியாக் குஞ்சுகளும் ஆமைக் குஞ்சுகளும் கதறிக்கொண்டு இருக்குதுங்க. 😎
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
கூட்டிக்கழித்து கல்கியூலேட்பண்றபோது உங்க ஊர் சங்கரத்தை எண்டு வருது! புஹா…ஹ.ஹா😂
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
கோலாலம்பூரில் பல்லாயிரகணக்கான மக்கள் ஆதரவுடன் ஜனநாயகன் இசை வெளியீட்டை நடத்தியபின் சென்னை திரும்பிய விஜையை பார்க்க பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டு, இதில் காரில் ஏறும் போது விஜை தடக்கி வீழ்ந்துள்ளாராம். பிகு நாளைக்கு ரசிகர் குஞ்சுகள் யாரும் தற்கொலை செய்யாதவரை ஓக்கே.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
வோட்டை மக்கள் தராது விடினும் … ஆமை ஓட்டை வைத்தே ஆட்சியை பிடிப்பேன்…. புஹா…ஹ.ஹா😂