24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
கள்ளத்தீனி - T. கோபிசங்கர்
கள்ளத்தீனி ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான். சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்சு வைச்சிருக்கிறாவோ எண்டு கண் ஆராயத் தொடங்கும். பூனை போனாலே எழும்பிற அம்மா நான் போய் தேடித் திரியிறது தெரிஞ்சிருக்கும் எண்டு நம்பிறன் , ஆனாலும் தெரியாத மாதிரி இருப்பா ஏனெண்டா சோத்தைச் சாப்பிடாதவன் உதையாவது சாப்பிடட்டும் எண்டு. எங்களுக்குப் பின்னேரத் தேத்தண்ணி வாழ்க்கையில முக்கியமானது. வெள்ளைக்காரனுக்கு dinner table மாதிரித் தான் எங்களுக்கு பின்னேரத் தேத்தண்ணி. (தே)தண்ணியைப் போட்டபடி தான் பல குடும்பத்தில சில முடிவுகளை எடுக்கிறது. காலமைச்சாப்பாடு இருந்தாலும் சாப்பிட நேரம் இருக்காது, அதை ஓட ஓட விழுங்கிறதாலேம், மத்தியானச் சாப்பாடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சாப்பிடறதாலம், இரவுச் சாப்பாட்டு மத்தியானம் மிஞ்சிறதுக்கேத்த மாதிரித் தான் இருக்கும் எண்டதாலேம், தேத்தண்ணிக்குத் தான் எல்லாரும் ஒண்டா இருக்கிறது. என்ன “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு விளையாடப் போ” எண்டு அம்மா சொன்ன காலம் மாறி இப்ப , தேத்தண்ணி வேணாம் கிளாசுக்குப் போ எண்ட நிலமை வந்திட்டுது. கூப்பிட்ட உடன போகாட்டி தேத்தண்ணி ஆறிப் போடும் எண்டதாலேம், அம்மா எதையாவது கடிக்கத் தருவா எண்ட நம்பிக்கையாலேம், நாலு மணியெண்டா வெளி விறாந்தையில எல்லாரும் இருப்பம். சாப்பாடு எல்லாம் வீட்டுக்குள்ள இல்லாட்டி குசினீலயோ வைச்சு முடிச்சிடுவிம். அதுகும், காலமை ஓடிக்கொண்டேயும் மத்தியானம் மேசையில நிண்டபடியும், இரவு அடுப்படீல குந்தியும் தான் சாப்பிடிறது. ஆனாத் தேத்தண்ணி நேரம் ஆர் வந்தாலும் குடுக்கிறதுக்கோ தெரியேல்லை எல்லாரும் வெளி விறாந்தையில தான் இருக்கிறது. மகேந்திரன் மாஸ்டர் வீட்டு மாடு கண்டு போட்டால் பால் தேத்தண்ணி, அதில்லாட்டி lakspray இருந்தா மாப்போட்ட தேத்தண்ணி , ரெண்டுமில்லாட்டிப் பிளேன்ரீ. மாசத் தொடக்கத்தில முதல் சீனி போட்டும், பிறகு சீனியை நக்கியும் பிறகு குட்டித்துண்டுப் பனங்கட்டியும் வர விளங்கும் இது மாசக்கடைசி எண்டு. பனங்கட்டியைப் பல்லால நருவி சூட்டோட தாற மூக்குப்பேணி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு கடைசி வாய்க்கு ஒட்டின விரலைச் சூப்ப, அது இன்னும் இனிக்கும். மாதச் சாமாங்கள் “பாய் கடை”(பிரியாணி விக்கிறேல்லை) வாங்கேக்க வாங்கிற Marie biscuit இல்லாட்டி பிறவுன் கலரில பூ மாதிரி டிசைனில வாற மஞ்சி பிஸ்கட்டை வாங்கி, பழைய Laxpray ரின்னுக்க போட்டு ஒளிச்சு வைச்சு, வாங்கின ஒரு கிலோவை எல்லாருக்கும் பங்கிட்டு அந்த மாசம் முழுக்க குடுக்கோணும். பங்கீட்டுப் பிரச்சினையால பாதிக்கப்பட்டு ஒண்டு மட்டும் கிடைக்கேக்க அப்பப்ப களவா இன்னும் ஒண்டு ரெண்டெண்டு எடுத்தாத்தாதன் வயிறு தாக்குப்பிடிக்கும். ஏனோ தெரியேல்லை எனக்கெண்டா கூடப் பசிக்கிறது பின்னேரத்தில தான். காலமை சாப்பாடு lunch box இல கொண்டாறது ஒருத்தனுக்கே காணாது ஆனாலும் பத்து மணிக்குத் திறக்க பதினைஞ்சு கை உள்ள வைக்க கடைசீல lunch boxஐக் கழுவாமலே உள்ள வைக்கலாம். மத்தியானம் வெய்யிலுக்கால வந்தா சோறு சத்திராதி, இரவு புட்டுத்தான் தேசிய உணவு . ஏதோ கொஞ்சமா இருந்தாலும் விதம் விதமா கிடைக்கிறது பின்னேரம் தான். அதுகும் வரியத்துக்கு ஒருக்காத் தான் குகானந்தபவானில வடை வாங்கிறது மற்றும் படி லோக்கல் தயாரிப்புத் தான். பின்னேர tiffin நாங்கள் சாப்பிடிறேல்லை, கொறிக்கிறது. வாயை தொடந்து அசைக்கிற மாதிரித் தான் சாப்பாடு தேவைப்படும். வீட்டையோ இல்லாட்டி சொந்தத்திலயோ விசேசங்கள் வந்தால் தான் பலகாரம் இல்லாட்டி அதுகும் இல்லை. நாலும் வீட்டை கடுவன் குட்டி எண்டதால சாமத்தியங்களும் இல்லை ஆனாலும் இந்தப் பின்னேர “ Tiffin”, விதம் விதமா சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்கும். வாங்கினது , செஞ்சு ஒளிச்சு வைச்சது, ஒண்டும் இல்லாட்டி அடிப்படையா தேங்காய்பூவையும் சீனியையும் வைச்சு எதை சேத்தாலும் ஒரு தீனி ரெடி . ஆனால் என்ன தேத்தண்ணிக்கு சீனி “கட்”. புழுங்கல் அவிச்சிக்குத்தி வாற புழுங்கல் அரிசியைப் வறுத்து தேங்காய்ப்பூ சீனி சேத்துக் குழைக்க பொங்கிப் பொரிஞ்ச அரிசியைக் கடிக்க வாற பெரிய சத்தம் .அதோட சீனியும் அரைபட வாற சின்னச் சத்தம் , இது ரெண்டொடேம் தேங்காய்பூவும் அரைபட வாய்குள்ள ஒரு mill ஓட, கடைவாயால தேங்காய்ப்பால் வடிய அதையும் துடைச்சு நக்கிச் சாப்பிட, …..அது சாப்பிட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் . இல்லாட்டி அரிசிமா இடிச்சிட்டு வறுத்து மாவை அரிக்கேக்க வாற அரிசிமாக் கட்டைக்கும் சீனியும் தேங்காய்ப்பூவும் சேத்தாலும் அமரக்களம் தான் என்ன விழுங்கேக்க விக்கும். Barbecue நாங்களும் காலம் காலமாச் செய்யிற நாங்கள் என்ன மச்சத்துக்கில்லை மரக்கறிக்குத் தான். உள்ளி, ராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கஜூ, பிலாக்கொட்டை எண்டு எல்லாத்தையும் மத்தியானம் சமைச்ச அடுப்பில சுட்டுச் சாப்பிடிறனாங்கள். பங்குனி எண்டால் ராசவள்ளிக் கிழங்கை சமைச்சு அடுப்புத் தணலில போட்டிட்டு சுட்டெடுத்துத் தோலை உரிச்சிட்டு திருவலையில திருவீட்டு அதுக்கும் தேங்காய்ப்பூவும் சீனியும் சேத்தா அதுகும் அல்வா தான். சித்திரையில அம்மா புளி வாங்கி பினைஞ்செடுத்திட்டு எறியிற புளியங்கொட்டையை வறுத்துக் கோதுடைச்சு சாப்பிடிறது. ஒண்டு காணும் ஒரு நாள் முழுக்க பல்லுக்க வைச்சு அராவ பல்லுக்கும் புளிக்கும் சண்டை நடந்து எப்பிடியும் பல்லு வெண்டிடும். ஆவணீல நல்லூரோட தான வத்தாளங் கிழங்கு வரும். என்ன பிரச்சினை கூடி உருளைக்கிழங்கு இல்லாமல் போக அது கள்ளத்தீனீயாய் இருந்து கறியாப் போட்டுது. மாரீ காலத்தில ஒண்டும் இல்லாட்டி புழுக்கொடியலும் முட்டுத் தேங்காய்ச் சொட்டும் பல்லுக்கும் வாய்க்கும் நல்ல வேலை தரும். அதோட புழுக்கொடியல் மாவும் தேங்காய்ப்பூ பனங்கட்டியும் எப்பவாவாது கிடைக்கும். என்னத்தை தான் எப்பிடிச் சாப்பிட்டாலும் நொறுக்குத்தீனியை தேடித் தேடிச் சாப்பிடிறது ஒரு சந்தோசம். எல்லா நேரத்திலேம் களவெடுத்துச் சாப்பிடாட்டியும் சாப்பாட்டுக்கு கள்ளப் பட்டடிட்டு , கொறிச்சித் திண்ண இஸ்டப்பட்டுச் சாப்படிறதாலயோ தெரியேல்லை அதுக்கு கள்ளத்தீனீ எண்டு பேர் வந்தது. பேர் எப்பிடி இருந்தாலும் இப்பத்த சாப்பாட்டிலும் பாக்க இந்தக் கள்ளத்தீனி நல்ல தீனி தான். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாய் உயிரிழப்பு!
30 Jan, 2026 | 11:52 AM யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியுள்ளது. அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாய் உயிரிழப்பு! | Virakesari.lk
-
யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
30 Jan, 2026 | 04:46 PM யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பலாலி விமான நிலையம் ஊடாக அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது. யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்! | Virakesari.lk
-
இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
30 Jan, 2026 | 05:03 PM (செ.சுபதர்ஷனி) வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். குறித்த குறுஞ்செய்தியில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்களது கடனட்டை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பிற்குள் நுழைந்து தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரப்படுகிறது. அவ்வாறு விபரங்களை வழங்கத் தவறினால் அட்டை இ ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தப்படுகின்றது. இந்த இணைப்பினூடாக விபரங்களை வழங்குவோரைத் தந்திரமாகத் தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அவர்களிடமிருந்து ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் ‘OTP’ இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மோசடி செய்கின்றனர். அத்தோடு வாட்ஸ்அப் செயலி மூலம் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தி, பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் தோன்றி தன்னை ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என அடையாளப்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் , குறித்த நபரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பல வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்று மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பலர் சட்ட மற்றும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ளனர். ஆகையால் பொதுமக்கள் விபரமறியாத போலி இணைய இணைப்புகளில் உள்நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் எனத் தெரிவிக்கும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். அவ்வாறு சந்தேகத்திற்குரிய அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், உடனடியாக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Virakesari.lk
-
சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை.
சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். அவர்களில் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளே காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தும் தமது சாரதிகள் குறித்து பஸ் சங்கங்கள் அதிகளவில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2026/1462376
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்காவின் பதிய தந்திரம் எதிரியின் ஆயதத்தை செயலிழக்கச் செய்வது. பின்னர் தாக்குவது. இது தான் வெனிசூலாவில் நடந்ததாக சொல்கிறார்கள். நாங்களும் நம்பலாமா என்று குழப்பத்தில் உள்ளோம்.
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
நான்கு பெண்களுடன்... உல்லாசமாக இருந்த, அந்த 17 வயது மாணவனின் படங்கள்... அவனது நண்பன் மூலமே, சமூக வலைத்தளங்களில் பரவியதாக சொல்லப் படுகின்றது. அந்த நான்கு பெண்களில் மூவர் பாடசாலை ஆசிரியர்கள், மற்றவர்... வேறு ஒரு மாணவனின் தாயாராம். 😵 மேலுள்ள படத்தில்... யார் அந்த, தாய் என்று தெரியவில்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலிகளை ஒழித்ததும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு பெற்றுத் தருவோம் என்று உலகநாடுகள் தன்னிடம் சொன்னதாக ஐயா சம்பந்தன் சொன்னாரே?
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
அனுரவுக்கு தெரியாமல்.... சில இரண்டாம் கட்ட தாதாக்கள், ஊரில் பதுங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.
-
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
இப்பொது இதை மேற்கு, us, இஸ்ரேல் செய்தது. ஆட்சி கவிழாவிட்டாலும், ஆட்சியில், அதிகார பீடத்தில் எவர்,எது, எப்போது, எங்கே எந்த அதிரகாரத்தை பாவிக்கிறார்கள், எவரை தொடர்பு கொள்கிறார்கள் போன்றதை அறியவாதத்திற்கு உளவில் இதை சொல்வது மரத்தை குலுக்கி (பார்ப்பது) என்று (shaking the tree) அதாவது எதிரி தரப்பில் இலைமறை காயாக இருப்பவர்களை , அப்படியான விடயங்களை அவர்களாகவே அல்லார்க்கு அவைகளாகவே வெளிப்பட்டு அல்லது வெளிக்கொணர்ந்து அறிவததற்க்கு இரானுக்குக்ம் இது தெரியாதது அல்ல. eu இபோது கொண்டுவனஹ அரசியல் தடையில் 2-3 பேருக்கு குறிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது அனால்ம் இதில் குறிப்பாக, பின்பு அமெரிக்கா செய்யப்போகும் தாக்குதலில் ஒவொருவராக குறிவைப்பதற்கு
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும் January 29, 2026 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பலமான அடித்தளமாக அமைந்தது. ஆனால் அதே தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தை, மக்கள் பலத்தை ஆட்டம் காண வைக்கப் போகின்றது—–” கே.பாலா தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரனை சட்ட சதியினால் அப்பதவியை ஏற்கவிடாது தடுத்தவர்கள் தற்போது அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் ஸ்ரீதரனுக்கு எதிரான தமது ”பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை பறிப்பது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது, தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவது”என்ற 3 சதிகளில் ஒன்றை சகுனித்தனமாக அரங்கேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் ஸ்ரீதரன் வாக்கெடுப்பு மூலம் பொதுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்டாரோ அன்று அவருக்கு பிடித்த ”சனி” இன்றுவரை அவரை விடாது துரத்தி வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஸ்ரீதரன் ஆதரித்தமையை சாட்டாக வைத்து ”ஸ்ரீதரன் கட்சிக்கு கட்டுப்படவில்லை, தலைமையின் முடிவுக்கு முரணாக செயற்படுகின்றார் ஆகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்ற சதியை முன்னெடுத்தனர்.ஆனால் அது வெற்றிபெறவில்லை. அடுத்ததாக ஸ்ரீதரனை பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது தோற்கடித்து அவரின் மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்து அதன்மூலம் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டமிட்டு ”ஸ்ரீதரன் மதுபானசாலைக்கான அனுமதிகளை ரணில் அரசிடமிருந்து அரசியல் இலஞ்சமாக பெற்றுள்ளார்”என்ற குற்றச்சாட்டை பாராளுமன்றத்தேர்தலின்போது தீவிர பிரசாரமாக முன்னெடுத்தனர். ஆனால் ஸ்ரீதரனின் வெற்றியை தடுப்பதற்கு பதிலாக அவர்களே தேர்தலில் மண்கவ்வினர். சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாக சற்று மாற்று யோசித்தவர்கள் ஸ்ரீதரனுக்கு எதிராக சிங்களவர்களை பயன்படுத்தத் தொடங்கினர். இவர்களின் பின்னணியில் ஸ்ரீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்தனர் .அந்த முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துமாறு ஸ்ரீதரனும் வலியுறுத்தியபோதும் சில மாதங்கள் கடந்தும் அந்த முறைப்பாடு கிடப்பில்தான் கிடக்கின்றது. அதன் தொடர்ச்சியாக அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள ஸ்ரீதரன் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவுள்ள ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக அரசு நியமிக்க ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை சிங்கள இனவாத எம்.பி.க்களான சாமர சம்பத் தசாநாயக்க ,தயாசிறி ஜயசேகர ஆகியோர் மூலமாக பாராளுமன்றத்தில் முன் வைக்க வைத்து அதனைப்பயன்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீதரனிடம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு விளக்கம் கோரியதுடன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து ஸ்ரீதரன் உடனடியாக விலக வேண்டுமெனவும் பணித்தது. ஆனால் ”அரசியலமைப்பு பேரவை ஒரு சுயாதீனமான பேரவை .இதில் எந்தவிதமான அரசிய தலையீடும் கட்சி செல்வாக்கும் இருக்க முடியாது. இதில் எனது கட்சியின் செல்வாக்குகளை நான் பிரயோகிக்க முடியாது இந்த சபை மூலம் கட்சி சார்பு அரசியலும் செய்ய முடியாது. செய்யக்கூடாது அரசியலமைப்பு பேரவையில் எனது பங்களிப்பும் வாக்களிப்பும் மனச் சாட்சியின் படியானவை. அத்துடன் அரசியலமைப்பு பேரவைக்கு நான் எனது கட்சியின் அரசியல் குழு அல்லது மத்திய செயற்குழுவால் பெயர் குறித்து நியமிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எனது கட்சியின் அரசியல்குழுவிலுள்ள சிலரின் தனிப்பட்ட அரசியல் விரோதங்களுக்காகவும் நிகழ்ச்சி நிரலுக்காகவும் நான் பதவி விலக முடியாது”என ஸ்ரீதரன் உறுதியாக கூறிவிட்டார் இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். அரசியல்குழு அவர்மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல் பேரவையிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தது. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள ஸ்ரீதரன் மறுத்ததன் காரணத்தினால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார்”என்பதாகவே உள்ளது.அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார். இதன் மூலம் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ஸ்ரீதரன் செயற்பட்டு விட்டார் என்பதே தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு நியாயம் என்றால் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. இலங்கை இராணுவத் தளபதியாகவிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிப்போரை வழிநடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இனப்படுகொலை செய்ததன் முக்கிய சூத்திரதாரியான ஜெனரல் சரத்பொன்சேகா 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியபோது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சி பகிரங்க வேண்டுகோள் விடுத்ததுடன் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரசாரங்களும் மேற்கொண்டதுடன் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்ததும் எந்த வகையில் நியாயம்? அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் மூலம் சபைகளில் ஆட்சியமைக்க தமிழினத் துரோகி என தமிழ் மக்களினால் அடையாளப்படுத்தப்படும் இராணுவ துணைக்குழுவாக செயற்பட்ட, நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் ,யுவதிகள் படுகொலை செய்யப்பட, காணாமல் போக காரணமாகவிருந்த,மனிதப் படு கொலையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கிலுள்ள அலுவலகம் தேடிச்சென்று தமிழரசுக்கட்சியின் தலைமை,அதாவது பதில் தலைவரான சிவஞானம் ஈ,.பி. டி.பி.யின் காலடியில் மண்டியிட்டது குற்றமில்லையா? சில சபைகளில் அவரின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது குற்றமில்லையா? 2017 ஜனவரியில் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சிலரைக் கைது செய்தனர்.இதனைத்தொடர்ந்து சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது வீடு,அலுவலகம், வாகனம் என அனைத்திலும் விசேட அதிரடிப்படையினரே நிறைந்திருந்தனர். சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தனது சொந்த தொகுதிக்கு செல்லும்போதுகூட அதிரடிப்படையினர் புடைசூழவே சென்றார். ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு அதுவும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படாத ஒருவருக்கு ஆதரவளித்தது குற்றமென்றால் சுமந்திரன் தமிழினப் படுகொலையாளிகளின் ஒரு தரப்பான விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வடக்கில் வலம் வந்தது குற்றமில்லையா? அது அரசாக வழங்கிய பாதுகாப்பு என்று கூறினாலும் அதனை வேண்டாம் என மறுக்கும் உரிமை சுமந்திரனுக்கு இருந்தது.ஏன் மறுக்கவில்லை ? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகளினதும் தமிழ் பொது அமைப்புகளினதும் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளராக தமிழின உணர்வாளரும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தருமான அரியநேத்திரன் களமிறங்கிய போது தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அரிய நேத்திரனை தோற்கடித்தே தீருவோம்.சஜித் பிரேமதாசாவை வெற்றிபெற வைப்போம் என தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் பொது செயலாளர் பொது வெளியில் சூளுரைத்ததுடன் சொன்னதையும் செய்தார். தமிழ் தேசிய உணர்வாளரான அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் ,சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்களின் விருப்புக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?தமிழ் தேசிய உணர்வாளருக்கு எதிராகவும் சிங்கள இனவாதி ஒருவருக்கு ஆதரவாகவும் தமிழரசுக்கட்சியின் தலைமை செயற்பட்டது குற்றமில்லையா? ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கான வாக்கெடுப்புக்கு பின்னர் வேறு ஒரு தெரிவுக்கான வாக்கெடுப்பு அரசியலைப்பு பேரவையில் நடந்தபோது அதில் ஸ்ரீதரன் வாக்களிக்கவில்லை. இதனையும் வாக்களிக்காது விட்டது மூலம் ஸ்ரீதரன் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார் என்று தமிழரசின் சில பிரகிருதிகள் ஸ்ரீதரனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர்.அநுரகுமார அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சி வாக்களிக்கவில்லை.அப்படியானால் அநுரகுமார அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழரசுக்கட்சி மறைமுகமாக ஆதரவளித்ததா? இது மட்டுமா ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக அரசிலமைப்பு பேரவையில் வாக்களித்து விட்டார் என்பதற்காக கொதித்தெழுந்து அவரது பாராளுமன்றகுழுத் தலைவர் பதவியை பறிப்பதில் முன்னின்ற இருவரில் ஒருவர் தனது மருமகளாகவும் சம்பந்தியாகவும் சிங்களக் குடும்பத்துடன் இணைந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தலைவராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரும் பின்னர் அங்கிருந்து மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவுக்கு தாவி தேர்தலில் போட்டியிட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்குள் பின்கதவால் நுழைந்தவருமான இன்னொருவரோ தனது வருங்கால மனைவியாக, தற்போதைய காதலியாக ஒரு சிங்களப் பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றதாக தகவல்கள் உள்ளபோதும் தற்போது அதனை வெளிக்காட்டாமல் இருக்கின்றார். இவர்கள்தான் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் வாக்களித்துவிட்டதாக ”தமிழ் தேசிய உணர்வோடு” குமுறுகின்றனர் எனவே தற்போது அரசியலமைப்பு பேரவையில் ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தமது உள்வீட்டு அரசியல் எதிரியான ஸ்ரீதரனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அந்தப் பதவியைக் கைப்பற்றுவதுடன் தமிழரசுக்கட்சியிலிருந்து ஸ்ரீதரனை வெளியேற்றும் சதியே முன்னெடுக்கப்படுகின்றது. , 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழர் தரப்பில் போராட்டங்கள் வெடித்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலேயே இப்போராட்டம் தீவிரமடைந்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ் தேசியப்பற்றை வெளிப்படுத்திய இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் தமிழ் மக்களின் பேராதரவுக்கும் பலமான அடித்தளமாக அமைந்து தமிழரசுக்கட்சியை தமிழ் தேசிய இனத்தின் தாய்க் கட்சியாக மாற்றியது . தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வெளியேற்றங்கள்,உறுப்புரிமை நீக்கங்கள், பழிவாங்கல்கள், பதவி பறிப்புக்கள்,சதிகள்.தமிழரசுக்கட்சியை மிகவும் பலவீனப்படுத்தி,தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கும் ஒரு கட்சியாக மாற்றி வருகின்றது.இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக்கட்சி அடைந்த படுதோல்வியையும் அதன்பின்னர் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையையும் எடுத்துக் கொள்ளமுடியும். இவ்வாறானதொரு நிலையில் இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தைஆட்டம் காண வைப்பதுடன் , தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச மக்கள் பலத்தை அடியோடு இல்லாமல் செய்யும் என்பது மட்டும் உண்மை. https://uthayannews.ca/2026/01/29/இலங்கைத்-தமிழரசுக்-கட்ச-2/
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உண்மை இங்கே எந்த ஒரு அவசரமும் இல்லை எங்களால் முடிந்த அளவிற்கு ஏற்றமாதிரி உதவிகளை செய்யலாம் பேனர் தொடர்பாக நானும் முன்னர் எழுதி விட்டேன் . எனது அனுபவப்படி இப்போதைக்கு அது தேவையில்லை செயலில் காட்டிவிட்டு விளம்பரம் செய்யலாம் என நினைக்கின்றேன் அடுத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கான நிதி சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் . முதலில் எங்கே ஆரம்பிப்பது என்பதை எராளன் தெரியப்படுத்தவும். கள உறவுகளும் அதற்கான சம்மதத்தைத் தெரியப்படுத்திய பின்னர் ஆரம்பிக்கலாம் . எப்படியும் மாசி மாதத்தில் குறைந்தது ஒன்றையாவது கட்டி பயனாளியின் கைகளில் ஒப்படைக்கலாம் என்று நினைக்கின்றேன் .
- Today
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
இப்ப தாதாக்களை சந்திப்பது என்றால் டுபாய் தான் போகணும்.
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
இவர்களுக்கு... வயது போய் விட்டது என்பதால், பக்தைகளின் பாதுகாப்புக்கு, "கியாரண்டி" கொடுக்கலாம். 🤣
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு!
நல்லதொரு கேள்வி. மாகாணசபையை நடத்தவிட்டு மெயின் சுவிச்சை மத்தியில் வைத்திருப்பது போல யாழ் விமானநிலைத்தின் மெயின் சுவிச் இந்தியாவிடம் உள்ளது என எண்ணுகிறேன். அமெரிக்க விமானம் இறங்கியது போல கண்டவனெல்லாம் வந்து இறங்கினால் இந்தியா பாதுகாப்பு?
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. அவர் தான் தமிழரசுக் கட்சியின் முதுகெலும்பு. அந்தளவுக்கு தன்னை பலமாக்கிக் கொண்டார். முதலமைச்சராக வரும்போது நம்புவீர்கள்.
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
கோடாலிகள்…. காம்புகள் இன்றித் தனியாக ஒரு மரத்தையேனும் வெட்டி வீழ்த்தப் பயன்படுவதில்லை.
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு!
உண்மையில் இந்த விமான நிலையத்தை யார் வைத்pருக்கிறார்கள்.இந்தியா அல்லது இலங்கை.
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
சுவியர், குமாரசாமி அண்ணைக்கு.. கொழும்பில் நிறைய, நிழல் உலக தாதாக்களை தெரியும். ஆதலால்... அவர் அடி வாங்க சந்தர்ப்பமே இல்லை. 😂
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
என்ன இது சின்ன பிள்ளைதனமான கேள்வி. இதில் விபரிக்க என்ன இருக்கு. பதில் பச்சை குழந்தைக்கும் தெரியுமே? ஒரு மண்ணையும் கிழிக்கவில்லை. அனுரவும் அதே போல் ஒரு இனவாதிதான். ஜேவிபி யும் அதேதான். பைத்தியர் அருச்சுனாவை நம்பியதை கூட புதிய முயற்சி என சொல்லிவிடலாம் (இப்போதும் பைத்தியத்தை ஆதரிப்பதை ஏற்க முடியாது). ஆனால் அனுரா மாற்றம் தருவார் என தாமும் நம்பி ஏனையோரையும் நம்ப வைப்போர்.. பேவிளாத்தியள்தான். சங்கி ஆனந்தத்தோடு சேர்ந்து தமிழ் கிறிஸ்தவரை குறிவைத்து இன்னுமொரு உட்பகையை கிளப்ப வேண்டும் என்கிறீர்களா?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
இல்லை. Aus, Can, US, NZ, Singapore, Korea பாஸ்போர்ட்டுகளை யூகே e gates இல் பாவிக்கலாம். அதேபோல் யூகே பாஸ்போர்ட்டயும். முன்னர் ஈயூ பாஸ்போர்ட்டையிம் பாவிக்கலாம். இப்போ இல்லை. விரைவில் மீள வரும்.
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
அப்ப பக்தைகளின் வாழ்க்கை?😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் பெண் : காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…ம்ம்ம்…. பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….. ஹா….ஆஅ….ஆ…. பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பெண் : நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க பெண் : வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல .......! --- ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் . .......! 😍