24 hours
Showing topics posted in for the last 1 day.
- Today
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்குக் கிழக்கில் மலையகத் தமிழர்கள் வந்து குடியமர்வது நண்மையான விடயம். இது எமது இனச்செறிவை எமது தாயகத்தில் அதிகரிக்கும். மலையகத்தில் அவர்கள் வாழ்ந்தபோதிலும், எப்போதுமே சிங்களவர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்கிற அச்சமும், அடிக்கொருதடவை சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இனவன்முறைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதும் நடக்கிறது. ஆகவே அவர்கள் வடக்குக் கிழக்கில் குடியேறுவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. அடுத்ததாக, வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான அரச காணிகளில் தொல்லியல் திணைக்களமும், வன ஜீவராசித் திணைக்களமும் கட்டம்போட்டு அபகரித்துவரும் நிலையில், இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் குடியேறுவது என்பது சிங்கள பெளத்த மயமாக்கலினைத் தடுக்க உதவும். 80 களின் ஆரம்பகாலத்தில் இது நடந்திருக்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல மலையகத் தமிழர்களும், யாழ்ப்பாணத் தமிழர்களும் குடியேறினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்போதும் இது நடப்பதென்பது எமக்கு நண்மையே. நிச்சயமாக நடக்க வேண்டும்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
இந்திய இராணுவ காலத்தில் புலிகளால் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என கருதுவதாகவே குறிப்பிட்டுள்ளேன், நீங்கள் கூறுவது போல 86 இன் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட ஒரு குழுவினை விழிப்புக்குழு (சரியாக நினைவில்லை) என கூறப்பட்டதாக நினைவுள்ளது, குறித்த காலகட்டத்தில் ஊர்களில் இளையோரினை கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது என கருதுகிறேன், வெளிகளில் தடிகள் நட்டு வைத்து (இராணுவ தரையிறக்கம்) இரவு வேளைகளில் ஊடுருவல்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கருதுகிறேன் (நீண்ட காலமானதால் எதுவும் நசரியாக நினைவில்லை).
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
உங்கள் கருத்தை பார்த்தபின் சற்று மயக்கம் ஏற்படுகின்றது. ஆனால், இணையத்தில் தேடுதல் செய்தபோது பிரஜைகள் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் இந்திய அமைதிப்படை காலத்தில் கொலை செய்யப்பட்டமை பற்றிய தகவல்கள் உள்ளன. இங்கு ரஞ்சித் கூறும் சம்பவம் பற்றிய தகவலும் உள்ளது. அதில் ஒன்று அவர் ஈ பி ஆர் எல் எவ் இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டார் எனவும் அவர்கள் கடத்திய ஒரு தமிழ் பெண், மற்றும் ஒரு முஸ்லீம் பெண் விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழு கவனத்திற்கு அவர் கொண்டு சென்றதே கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என உள்ளது. தவிர இன்னோர் காரணத்திற்காக அதே பிரதேசத்து பிரஜைகள் குழு துணை தலைவரும் கொலை செய்யப்பட்டார் எனவும் தகவல் உள்ளது. மேலதிகமாக பின்னர் பல வருடங்களின் பின் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களும் இதே தேவாலயத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றது. இந்திய அமைதிப்படை பிரஜைகள் குழுவை உருவாக்கினால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஏன் இந்திய அமைதிப்படை பாதுகாப்பும் கொடுத்து ஆயுதங்களும் வழங்கிய ஆயுத குழுக்களினால் படுகொலை செய்யப்பட வேண்டும்? நிதர்சனம் தொலைக்காட்சி 1986, 1987 ஆண்டுகளில் பிரபலம். யாழ் நகர் பகுதி மக்களுக்கு அது பார்க்கக்கூடியதாக அமைந்தது. நிதர்சனம் தொலைக்காட்சியை நான் அப்போது தவறாமல் பார்ப்பேன். அதன் தகவல்களின் அடிப்படையிலேயே பிரஜைகள் குழுவின் தோற்றம் பற்றிய கருத்தை கூறினேன்.
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
கோத்தபாய கொர்நோவுக்கு எதிராக அந்த மந்திரித்த தண்ணியை இலங்கை ஆறுகளில் கலந்த முட்டாள்தனத்தை விமரிசித்த போது புலியை அடக்கின மனுஷன் கொர்னோவையும் வெல்வார் என்று இதே யாழில் கோத்தபாயவுக்கு புகழ் பாடியோருக்கு இப்பவும் உண்மையை சொன்னால் சுடும்தானே .😁
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக தமிழ் மக்களின் இழவு வீட்டில் ஒரு சதமும் செலவழிக்காமல் வாயால் வடை சுடுகிறார் சுமத்திரன் அவருக்கு இங்கு கொஞ்சம் தார தப்பட்டையுடன் பொழிப்புரை ஆற்றுகினம் அரசியல் சூனியங்கள் . இங்கு உண்மையான கரிசனை மலையக மக்களின் மேல் இல்லை சுமத்திரன் எப்படியாவது என்ன பொய் சொல்லியும் தேர்தலில் ஒரு முறையாவது வென்று விடனும் அதுதான் இங்குள்ள சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உண்மையான கரிசனை அந்த மக்கள் மேல் இருந்து இருந்தால் அந்த மக்களுக்காக இதுவரை சுமத்திரன் ஏதாவது சிங்கள அரசுகளிடம் கதைத்து இருக்கிறாரா ?
-
தமிழீழக் காவல்துறை இன் படிமங்கள் | Tamil Eelam Police Images
தூதுக்குழு உலங்குவானுர்திக்கு பாதுகாப்பு வழங்கும் தமிழீழக் காவலர்கள் கிளிநொச்சி 2002-2006
- 107 replies
-
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
-
Tagged with:
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
- ltte images
- ltte photos
- ltte pictures
- ltte police
- sri lanka
- sri lankan police
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam police
- tamil eelam police force
- tamil eelam policeman
- tamil eelam traffic police
- tamil eelam traffic policeman
- tamil police
- tamil police force
- tamil policeman
- tamil policemen
- tamil tigers
- tamileelam police
- ஈழக் காவல்துறை
- ஈழத் தமிழகம்
- ஈழத் தமிழ் நாட்டுக் காவல்துறை
- ஈழத் தமிழ்நாட்டுக் காவல்துறை
- ஈழம்
- காவற்றுறை
- தமிழகக் காவல் துறை
- தமிழகக் காவல்துறை
- தமிழீழக் காவலர்கள்
- தமிழீழக் காவல் துறை
- தமிழீழக் காவல்துறை
- தமிழீழம்
- தமிழ் ஈழக் காவல் துறை
- தமிழ் காவல்துறை
- தமிழ் நாட்டுக் காவல் துறை
- தமிழ் நாட்டுக் காவல்துறை
- தமிழ்நாட்டுக் காவல்துறை
- புலிகள்
- காவல்துறை
-
சாத்தானின் படை புத்தகம் வேண்டி
எஞ்சிய 1000. பக்கங்கள் எங்கு கிடைக்கும்
- Yesterday
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அது, சும்மா சொன்னால் மட்டும் போதாது செய்தும் காட்டும் தில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான அரசியல்வாதிக்கு அழகு. மக்களின் அவலநிலையை சாதகமாக்கி அவர்கள் அரசியல் செய்வது. சுமந்திரன் ஏதேதோ சொல்லி, சரிந்துபோன தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவும், அனுராவை பயமுறுத்தவும் பார்க்கிறார். ஆனால் அவையெல்லாம் அவருக்கு எதிராகவே திரும்புகிறது. ஒருவரின் ஜனாதிபதி கனவு, இருவரின் முதலமைச்சர் கனவு எல்லாம் வெறும் கனவாகவே போகப்போகிறது. காலத்தே பயிர் செய்யவில்லை, காலம் கொடுத்ததும் பயன்படுத்தவில்லை, இப்போ என்னதான் செய்தாலும் இவர்களது வீரப்பேச்சுகள் கள விஜயங்கள் எல்லாம் கிளப்புலி தருப்பை காப்பை வைத்து உபதேசம் செய்வது போன்றதே. அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் சும்மா பேச்சுதான். அதை ஒப்புக்கொண்டீர்களே அது போதும். இந்த நேரத்தில் சும்மா பேசும் பேச்சா இதெல்லாம்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதும் உருப்படியா செய்யாமல் விமர்ச்சிப்பதும், சும்மா பேசுவதும் இவர்களது பொழுது போக்கு அரசியல்!
-
சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 14 டிசம்பர் 2025 இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன். சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன். “ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா. “ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.” “ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ. “மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.” “ஓ!” “சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....” “ஓ, very sad, I am sorry.” “அது ஒரு காலம்... ம்ம், சோகத்தைத்தவிர எதையும் பாத்ததில்லை. புதுப் பள்ளிக்கூடத்தில நான் தனிச்சுப்போயிருந்தன். என்ர பல் அசிங்கமாக இருக்கு, நான் வடிவில்லை எண்டெல்லாம் கேலிபண்ணிச்சினம். பள்ளிக்கூடம் போறதே பெரிய தண்டனை போலிருந்துது.” “எவ்வளவு தூரம் நீங்க பாதிக்கப்பட்டிருந்திருப்பீங்க எண்டு விளங்குது.” மெல்லிய குரலில் சொன்னா அவ. “அம்மா மொத்தத்திலை ஜடமாகவேயிருந்தா. போதாததுக்கு பணக் கஸ்டம் வேறை. அந்த நேரம் மிசிஸ் பரம் இருந்திருக்காட்டி நான் என்ன செய்திருந்திருப்பன் எண்டு நினைச்ச்சா, இப்பகூட எனக்கு நெஞ்சு கனக்கும். நான் பள்ளிக்கூடத்திலை சேந்த சில நாள்களிலைதான் அங்கை அவவுக்கு வேலை கிடைச்சிருந்தது. இளமையாயும் நல்ல வடிவாயும் இருந்த அவவை எல்லாரும் பிரமிப்போடைதான் பாப்பினம். ஒரு கட்டத்திலை என்ர பிரச்சினை அவவுக்கு விளங்கிச்சுதோ என்னவோ, வீட்டை வா, படிக்கலாமெண்டு தன்ர வீட்டுக்குக் கூப்பிட்டு அவ எனக்குப் பாடம் சொல்லித் தரத் தொடங்கினா. அதுக்குப் பிறகுதான் மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடை பழகத் துவங்கிச்சினம். அவவே என்னிலை கரிசனை காட்டுறா எண்டதுதான், அதுக்குக் காரணமா இருந்திருக்கலாமெண்டு நான் நினைக்கிறன்.” “ஓ, விளங்குது. அப்படியொரு ரீச்சர் கிடைக்க நீங்க கொடுத்துவைச்சிருக்கிறீங்க.” “என்ர பிள்ளையளுக்கும் அவவைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கிறன். ஒரு கட்டத்தில எனக்கு எல்லாமா இருந்த அவவைப் பத்தி, என் வேதனையை விளங்கி எனக்கு உயிர்ப்பளித்த அவவின்ர உளவியலைத்த்தான் அங்கை நடக்கவிருக்கிற கூட்டத்தில பேசப்போகிறன்,” என் குரலில் நன்றியும் பெருமிதமும் கலந்திருந்தது. “அப்ப உங்கடை பேச்சு அந்தமாரி இருக்கும்.” அழகான வெண்ணிறப் பற்கள் தெரிய அவ புன்முறுவல் செய்தா. மூன்று மாதமா யோசித்து, யோசித்து எழுதி, எழுதிப் பின் திருத்தித் திருத்தி நான் எழுதினேனா என நானே வியந்துபோன அந்தப் பேச்சை எண்ணிப்பார்த்துக் கொண்டேன். விமானம் பறக்கத் தொடங்கியது. சூரிய உதயம் யன்னலுக்கூடாகத் தெரிந்தது. செந்நிறச் சூரியக் கதிர்கள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. மூன்று தசாப்தங்களின் பின்னர் மிசிஸ் பரமைப் பார்க்கப்போகின்றேன் என மூன்று மாதங்களாக மனசுக்குள் பீறிட்டுக்கொண்டிருந்த களிப்பு இப்போது உச்சத்தை அடைந்திருந்தது. இதயம் ஆனந்தத் தாண்டவமாடியது. பல்கலைக்கழகத்துக்காகக் காத்திருந்த காலங்களில் அவ பள்ளிக்கூடம் முடிந்து எங்களின் ஒழுங்கையால் போவதைப் பார்ப்பதற்காக ஒழுங்கையில் தற்செயலாக நிற்பதுபோல, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விடயம் செய்துகொண்டு நின்றது நினைவுக்கு வர எனக்குள் சிரிப்பு வந்தது. மீளவும் மிசிஸ் பரமோடை உறவைத் தொடர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதில் நிறைவாக இருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் பொறுப்பில்லை. நிதி நெருக்கடியில்லை. வேலையில் லீவு கிடைக்குமா என யோசிக்க வேண்டியதில்லை. நினைத்ததைச் செய்யமுடிகிறது, முதுமை சில வகைகளில் உதவியாக இருக்கின்றதுதான் என நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். X X X X விமானம் தரையிறங்கியபோது இரவாகியிருந்தது. செயற்கை ஒளியில் சுவிற்சிலாந்து பிரகாசித்தது. “மிசிஸ் பரமின்ரை புண்ணியத்திலை உன்னைப் பாக்க முடிஞ்சிருக்கு. பாத்து எத்தனை வருஷமாய்ச்சு,” கட்டிக்கொண்டாள் என்னைக் கூட்டிச்செல்ல விமான நிலையத்துக்கு வந்திருந்த என் மைத்துனி அருள். “என்ன செய்ய அருள், இப்பத்தான் நேரம் வந்திருக்கு, இனி அடிக்கடி வருவன்!” “ஓ, மிசிஸ் பரமைப் பாக்கலாம் எண்டபடியால், இனி அடிக்கடி வருவாய்.” “இல்லையடியப்பா, பிள்ளையள் வளர்ந்திட்டுதுகள் இனிப் பொறுப்பில்லையெண்டு சொல்றன்.” “நீ சொன்னாப்பிறகு, அவவின்ர பேச்சுகளைக் கேட்கிறனான். மனிசி அந்தமாரித்தான் பேசுது.” “அவ உண்மையிலேயே ஒரு காந்தமடி.” “வீட்டுக்குப் போய் குளிச்சு உடைமாற்றிக்கொண்டு படுக்கைக்குச்சென்றபோது, “விடியக் கோயிலுக்குப் போவம், என்ன? முதலிலை முருகனைப் போய்த் தரிசிப்பம்.” என்றாள் அருள். “ஓகே, போவம்.” ரொறன்ரோவிலை கோயிலுக்குப் போறனியோ?” “அங்கை போறனானோ, இல்லையோ, நீ போகேக்கே நான் வரத்தானே வேணும்.” “நாளைக்குத் தேர் எண்டபடியால், உனக்குத் தெரிஞ்ச ஆக்களும் அங்கை வரக்கூடும்” “ஆக்களைப் பாக்கத்தானே அந்தக் காலத்திலும் மாவிட்டபுரத்துக்கு, கீரிமலைக்கு எண்டெல்லாம் போறனாங்கள்,” கண்ணடித்தேன் நான். “உனக்கெல்லாம் பகிடிதான். சாமி கும்பிடப் போறம். போற இடத்திலை ஆக்களைப் பாக்கிறம்.” “சரி, சரி. முதலிலை சாமியைக் கும்பிடுவம். பிறகு ஆர் வந்திருக்கினமெண்டு பாப்பம்.” சிரித்தேன் நான். X X X X தேர் வெளிவீதியில் சுற்றிவந்துகொண்டிருந்தது. வீதி மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது. “பக்க கோடிகளுக்கு எங்கும் குறைவில்லை,” அருளுக்குக் கூறிச் சிரித்தேன். திடீரென என் முகத்தை இரண்டு கைகள் மூடிக்கொள்ள, ‘யாரெண்டு சொல்லும் பாப்போம்,” எனக் குரலொன்று ஒலித்தது. குரலை எனக்கு மட்டுக்கட்டவே முடியவில்லை. தடுமாறிய என் முன்னால் கைகளை எடுத்துவிட்டுச் சிரித்தபடி நின்றிருந்தாள் சொர்ணா. “ஏய் சொர்ணா, நீர் எங்கையிருக்கிறீர் எண்டு நான் இப்ப எத்தனை வருஷமா தேடிக்கொண்டிருக்கிறன். சோசல் மீடியாக்கள் ஒண்டிலும் நீர் இல்லையா?” சொர்ணாவைக் கண்ட மகிழ்ச்சியில் என் மனம் துள்ளியது. எங்களின் பாடசாலையில் எட்டாம் வகுப்பில் வந்துசேர்ந்திருந்த சொர்ணாவும் நானும் பன்னிரண்டாம் வகுப்புவரை உற்ற சினேகிதிகளாக இருந்தோம். 83 கலவரத்தின் பின்னர் சொர்ணா திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டதாக அறிந்தேன். அத்துடன் தொடர்பு விட்டுப்போயிருந்தது. “மலேசியாவிலை இருந்தனாங்க, இப்ப இங்கை வந்து மூண்டு வருஷமாகுது. உம்மை இங்கை சந்திப்பனெண்டு நான் நினைக்கவேயில்லை. நீரும் இங்கையா இருக்கிறீர்?” “இல்லை, நான் கனடாவிலை இருக்கிறன். மிசிஸ் பரமுக்கு பவள விழா நடக்குதெல்லோ. கேள்விப்பட்டனீரோ? அதுதான் வந்தனான்.” “ஓ.” சுரத்தில்லாமல் சொன்னாள் சொர்ணா. பின்னர் பரஸ்பரம் எங்களின் வாழ்க்கையைப் பற்றிக் கதைத்தபடி, தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம். அருள் என்னைவிட 10 வயது இளையவள் என்பதால் சொர்ணா என் சினேகிதி என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் என் சினேகிதியைச் சந்தித்துக்கொண்டதில் அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. பின்னர் அருளுக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் இவர்கள் எனக் கதைத்துமுடித்து வீட்டுக்குப் போனோம். பயண அலுப்பும், கோவில் அலுப்பும் என்னை நித்திரை மயக்கத்துக்குள் அமிழ்த்திவிட்டது. X X X X வியாழனும் வெள்ளியும் ஊர் பார்ப்பதில் மறைந்துபோனது. மலைகளும் நீர்நிலைகளும் சூழ்ந்த சுவிற்சிலாந்தின் அழகு கண்களுக்குப் பெருவிருந்தாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமைதான் மிசிஸ் பரமின் பவள விழா. சனிக்கிழமைதான் சொர்ணாவைச் சந்திப்பதாக இருந்தது. அவளைச் சந்திக்கும்போது பவளவிழாவுக்கு அவளும் வருவதை உறுதிப்படுத்த வேண்டுமென நினைத்துக்கொண்டேன். அன்று நான் பேசப்போகும் பேச்சு எப்படியிருந்ததெனச் சொல்வதற்கும் பூசிமெழுகாமல் கதைக்கும் சொர்ணா வருவது நல்லதென நினைத்தேன். அத்துடன் மிசிஸ் பரம் சொர்ணாவினதும் ஆசிரியராக இருந்ததால், சொர்ணா வருவா என்ற நம்பிக்கையும் இருந்தது. இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படி சொர்ணாவை அருள் அழைத்திருந்தாள். முதல் நாளிரவு தொலைபேசியில் பேசிய சொர்ணா, பகவதியையும் அழைத்து வரட்டுமா, பகவதியும் உம்மைப் பார்க்க ஆசைப்படுகிறா என்றாள். ஓ, நிச்சயமாக, பகவதியும் இங்கேயா இருக்கிறா. எனக்கும் அவவைப் பார்க்க ஆசையாயிருக்கு. கூட்டிக்கொண்டு வாரும் என்றேன், நான். மாலை ஐந்து மணியளவில் பகவதியும் சொர்ணாவும் வந்திறங்கினர். பகவதி அன்று பார்த்தமாதிரியே இருந்தாள். “தனிச்சுச் சுதந்திரமாய் சுத்துற காலம் வசந்திக்கு வந்திருக்கு,” நக்கலடித்தாள் பகவதி. “நீர் மட்டும் என்னவாம்? எங்கை மனிசன், எங்கை பிள்ளையள்?” நானும் பகவதியை வம்புக்கிழுத்தேன். “அவையும் வந்தால் நாங்க என்னெண்டு பழங்கதையள் கதைக்கிறது. அவைக்குப் போரடிக்குமெண்டு விட்டிட்டு வந்திட்டம்,” என்றாள் சொர்ணா சீரியசாக. நேரம் போனதே தெரியாமல் வம்பளந்துகொண்டிருந்தோம். எங்களின் சிரிப்பொலியில் அருளின் வீடு அதிர்ந்தது. “ஏழு மணியாகுது, வாங்கோ சாப்பிடுவம்,” என அருள் கூப்பிட்டாள். தோசை முறுகலாகவும் ருசியாகவும் இருந்தது. தோசை சுடப் பஞ்சிப்பட்டு, கடையில் வாங்குமெனக்கு தோசைகளை ஒவ்வொன்றாக அருள் சுட்டுத் தந்தது, ஒரு காலத்தில் அம்மா சுடச்சுடச் காத்திருந்து சாப்பிடுவதை நினைவுபடுத்தியது. “தோசை சுடுறதுக்காகக் காய்ஞ்ச தென்னோலைகளை ஒண்டொண்டாப் பிரிச்செடுத்து அம்மா கட்டாக்குறதை, பிறகு ஓலைகள் எரியேக்கை சுவாலை உயரமாய் எழுந்து தேயுறதை ... எல்லாத்தையும் பாக்கிறதிலை ஒரு சுகம் இருந்தது. எல்லாம் ஒரு காலம். இப்ப எனக்கு இந்தத் தோசைகள் அம்மாவையும் அவ தோசை சுடுறதையும் ஞாபகப்படுத்துது,” என்றேன் நான். “கொழும்பில இருக்கேக்கையும் அப்படியோ அம்மா தோசை சுட்டவ?” வெகுளித்தனமாகக் கேட்பதுபோல என்னைக் கேலிசெய்தாள் பகவதி. “கொழும்பு வாழ்க்கை ஆருக்கு ஞாபகமிருக்கு. அப்பாவை அழிச்ச அந்தக் கொழும்பு வாழ்க்கையை மறக்கோணுமெண்டு மறந்தனோ, என்னவோ. எனக்கது ஒண்டுமே நினைவில்லை. .ஆனா யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் மிசிஸ் பரம் செய்ததுகளை வாழ்க்கைக்கு மறக்கேலாது.” சில கணங்கள் பெரும் அமைதி நிலவியது. நான் அதை உடைத்தேன். “It’s okay. அப்பா போய், இப்ப எத்தனை வருஷமாச்சு. மனசிலை வடுவாயிருக்குதான், ஆனா, அந்த நேரத்திலை பட்ட வேதனை இப்ப இல்லை. கொழும்பை ஏன் ஞாபகப்படுத்தினதெண்டு நீர் கவலைப்படத் தேவையில்லை, பகவதி.” “அதில்லை, வசந்தி. நீர் மிசிஸ் பரமை உச்சந்தலையிலை வைச்சிருக்கிறீர். அதுதான் சொல்லலாமோ வேண்டாமோ எண்டு யோசிக்கிறம்,” சொர்ணாவைப் பார்த்தபடி சொன்னாள் பகவதி. “என்னத்தைச் சொல்லலாமோ, வேண்டாமோ எண்டு யோசிக்கிறியள்?” “அவவைப் பத்தித்தான். அந்த நேரத்திலை ஒத்தடமாயிருந்த மிசிஸ் பரமைத்தான் உமக்குத் தெரியும். அவ ஒத்தடமாயிருந்தா, ஏனெண்டால் உங்களுக்கிடையில முரண்கள் இருக்கேல்லை.” தோளைக் குலுக்கியபடி சொன்னாள் அவள். “எனக்கு விளங்கேல்லை.” “நான் என்ன சொல்றன் எண்டால், அவவை முன்னுக்கு வைச்சால், அவவோடை முரண்படாட்டா ஒரு பிரச்சினையும் வராது... அருள், உண்மையிலேயே தோசை சுப்பர். சம்பலும்தான். இஞ்சிபோட்டு அரைச்சிருக்கிறீர், என்ன?” தலையைக் கீழும் மேலுமாக ஆட்டின அருள் “தாங்கஸ்,” என்றாள். எனக்கோ கதை திசைமாறுவது விருப்பமில்லாமல் இருந்தது. “என்ன நடந்தது எண்டு சொல்லுமன்?” அவசரப்பட்டேன் நான். “சொர்ணா இப்ப நடத்துற முதியோர் சங்கத்தை அவதான் முதலில நடத்தினவ. பிறகு கொமிற்றியிலை கருத்து வேறுபாடு வந்தவுடனை எல்லாத்தையும் உதறிப்போட்டுப் போட்டா. கணக்கு வழக்குகளைக்கூடக் குடுக்கேல்லை. கடைசியில சொர்ணா தான் அந்தப் பொறுப்பை எடுக்கவேண்டியிருந்துது. எல்லாத்தையும் சரிப்பண்ணலாமெண்டு அவவின்ர வீட்டுக்கு சொர்ணா நாலைஞ்சு தடவை போய்க் கெஞ்சிக் கேட்டும் பழைய பைல்கள் ஒண்டையும் அவ குடுக்கமாட்டன் எண்டிட்டா. அதாலை ஒடிற்றிங்கிலை சங்கம் பட்டபாடு சொல்லிமுடியாது.” “ஏன் அப்படிச் செய்தவ, எனக்கு நம்பேலாமல் இருக்கு!” குழப்பத்துடன் நான் சொர்ணாவைப் பார்த்தேன். “அதுதான் சொன்னனே, முரண்வரேக்கைதான் ஒராளின்ரை சுயம் தெரியும். இவையின்ர சங்கச் செயலாளர் அவவுக்கு ஆதரவாயிருக்கேல்லை எண்டதாலை அவரின்ர மனிசி செத்ததுக்குக்கூடத் துயரம் விசாரிக்கேல்லையாம் எண்டால் பாருமன்.” “அவ இப்பிடிச் செய்தவ எண்டதை எனக்கு நம்பேலாமல் இருக்கு.” “நீர் இதையும் நம்பமாட்டீர். இங்கை அவ வந்திருந்த துவக்கத்தில பிள்ளையளோடை சரியாய்க் கஷ்டப்பட்டவ. சொல்லிக் காட்டக்கூடாது எண்டாலும், உமக்கு விளங்கட்டுமெண்டதாகச் சொல்றன். நான் அவவுக்கு நிறைய உதவிசெய்திருக்கிறன். ஜக்கற், அது இதெண்டு கணக்குப்பாக்காமல் வாங்கிக்கொடுத்திருக்கிறன். அப்படியிருந்தும், அவ பேசின ஒரு பேச்சிலை இருந்த ஒரு பிழையைச் சுட்டிக்காட்டிட்டன் எண்டு என்னை இப்ப தூரவைச்சிட்டா. சொர்ணாவின்ர பிரச்சினையைத் தீக்கிறதுக்காக நானும் ஏதாவது செய்வமெண்டு பாத்தன். ஆனா அந்த மனுசி கதைச்சால்தானே. அவவின்ர வண்டவாளங்கள் தெரிஞ்சிருந்தால், நீர் இங்கை வந்திப்பீரோ என்னவோ! …. நாங்களும்தான் பிழைவிடுறனாங்கதான், இல்லையெண்டில்லை. ஆனா, பெரிய ஆள்தோரணையிலை மனிசரா வாழோணுமெண்டு மற்றவைக்கு ஆலோசனை வழங்கிற, வழிகாட்டியா இருக்கிறதா பெயரெடுக்கிற இவ இப்பிடி நடக்கலாமோ...?” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி என் முகத்தைப் பார்த்தாள், பகவதி. “எனக்கு என்னத்தைச் சொல்லுறதெண்டு தெரியேல்லை, பகவதி… நீர் கேட்கிற கேள்வியில அர்த்தமிருக்கு... அவவுக்கு இப்பிடியுயொரு பக்கமிருக்குமெண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை.” “பகவதி சொன்னதெல்லாம் உண்மை, வசந்தி. ஆனா, அதுக்காண்டி... நீர் அவவை வெறுக்கோணும் எண்டில்லை. உமக்கு அந்த நேரம் அவ எல்லாமா இருந்திருக்கிறா. அதுக்கு நீர் நன்றியாய் இருக்கத்தானே வேணும்.” மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னாள் சொர்ணா. “எண்டாலும், உங்களுக்கு இப்பிடி நடந்திருக்கேக்கை, எப்படி நான் அவவை உயர்த்திப் பேசுறது?” “இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். அழைப்பிதழிலை பேரெல்லாம் போட்டாச்சு, பேசத்தானே வேணும்,” என்கிறாள் அருள், தோசையை என் தட்டில் வைத்தபடி. எனக்குத் திடீரெனப் பசி போய்விட்டது. X X X X அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மண்டபம் மலர் அலங்காரங்களாலும், வண்ண விளக்குகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஆரவாரமாகக் கூடியிருந்தனர். பொன்மஞ்சள் நிறச் சீலையில் மேடையின் நடுவில் மலர்மாலையுடன் மிசிஸ் பரம் அமர்ந்திருந்தா. பக்கத்தில் அவவின் கணவர் பரம் அவவின் சேலை நிறத்துக்குத் தோதான சேர்ட்டுடன் கையில் ஒரு கைத்தடியுடன் இருந்தார். மாணவர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களின் வாழ்க்கையில் அவ எவ்வளவு தூரம் பங்களித்திருந்தா என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நானும் அருளும் போய் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டோம். என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நன்றியைப் பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் என் சினேகிதிகளின் அனுபவங்களைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கும் உள்ளதென என் மனம் எனக்கு ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தது. என் பெயர் அழைக்கப்பட்டது. என் இதயம் துடிக்க மறுத்ததுபோல, நெஞ்சுக்குள் அடைத்தது. மூன்று மாதங்களாகத் தயாரித்த பேச்சு கையில் இருந்தது. ஆனால், மனதில் சொர்ணாவும் பகவதியும் கூறிய கதைகள்தான் சுழன்று கொண்டிருந்தன. ‘வசந்தி மோகன்,’ என் பெயரை அழைத்துக்கொண்டிருப்பவரின் குரல் மீளவும் ஒலித்தது. மெதுவாக எழும்பினேன். மேடைக்குப் போகும் படிகளில் இரண்டு படிகளைத் தாண்டிவிட்டேன். ஆனால் அடுத்த படியில் காலடி எடுத்துவைக்க முடியவில்லை. என் தலை என்னையும் அறியாமல் இடமும் வலமும் ஆடியது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, ஆழமாக மூச்செடுத்தேன். ‘பேசினால் உண்மை வெளிப்படும். பேசாதே,’ என என் மூளை எச்சரித்தது. தொண்டை காய்ந்து போயிருந்தது. மெதுவாக ஒலிவாங்கிக்கு முன்னால் போய் நின்றுகொண்டேன். “அன்பான மிசிஸ் பரம் அவர்களே, ஆசிரியர்களே, என் அன்புத் தோழர்களே, மிசிஸ் பரம், எனக்கு ஆசிரியர் மட்டுமல்ல. தனிமையிலும் துயரத்திலும் நான் சிக்கித்தவித்தபோது, எனக்கு ஆதாரசுருதியாக இருந்த ஒரு கனிவான மனிதர். ‘நீ முக்கியமானவள்’ எனச் சொல்லும் தோரணையில் அவர் என்னுடன் நடந்த விதமும் அவரின் அன்பும் என் வாழ்க்கையை மாற்றியது. என் வாழ்க்கையின் இருண்ட அந்த நாள்கள் என் நினைவுக்கு வரும்போதெல்லாம், மிசிஸ் பரம் காட்டிய வெளிச்சம் ஒருபோதும் என் நினைவுக்கு வராமல் போனதில்லை. அவர் காட்டிய கருணைக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஆனால், நண்பர்களே,” - ஒரு கணம் நிறுத்தினேன். “மனிதர்களைப் பற்றிய ஒரு உண்மையை நாங்களெல்லாம் ஏற்கவேண்டும். மனிதர்களில் எவரும் ஒரு முகம் கொண்டவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. அதிலும் சிலருக்கு முற்றிலும் எதிரெதிரான முகங்கள் உள்ளன. அதனால், ஒருவருக்குத் தெய்வமாகத் தோன்றுபவர், இன்னொருவருக்கு அரக்கராகத் தெரியலாம். குறித்தவரின் நினைவுகள் ஒருவரை மகிழ்விக்கின்ற அதேவேளையில் இன்னொருவருக்கு வலியைக் கொடுக்கலாம்.” மீளவும் ஒரு கணம் என் பேச்சை நிறுத்திவிட்டு மிசிஸ் பரமைத் திரும்பிப் பார்த்தேன். அவரின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் ரேகைகள் ஓடுவதுபோல எனக்குத் தெரிந்தது. மண்டபத்தில் ஓரிரு கணங்கள் பெரும் அமைதி நிலவியது. பின் நீண்டதொரு கைதட்டல் ஒலித்தது. நான் தொடர்ந்தேன். “எனவே முழுமையானதொரு மனிதரைப் பற்றிப் பேசுவதற்கு நான் இங்கே வரவில்லை. வாழ்க்கையில் நான் இழந்துபோன பிடிப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த ஒருவரைப் பற்றியே பேச வந்திருக்கிறேன்...” “தெல்லிப்பழைச் சைவ வித்தியாசாலையில் மிசிஸ் பரம் ஆசிரியராகப் பதவியேற்றபோது, அவரின் அபிமான மாணவியாக இருந்த வசந்திக்கு நன்றி கூறிக்கொண்டு, இனி அடுத்ததாக....” தலைமை வகித்தவர் பேசிக்கொண்டிருந்தார். அருளின் அருகே வந்தமர்ந்த எனக்கு உடம்பு படபடத்தது. முகத்தில் அனல் அடிப்பது போலிருந்தது. என் கைகளை இறுகப்பற்றிக் கொண்ட அருள், “வீட்டுக்குப் போவோமா” என்றாள். sri.vije@gmail.com https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9494-2025-12-14-13-07-25
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பின்னை என்ன? அவன் அவன் வீடு அவனுக்கே உரித்தானது. வெள்ளம் வந்தது... புயல் வந்தது... இனியும் வரப்போகுது..... எல்லாரும் மேட்டுப்பக்கம் போய் வேறை வீடுகளில் இருங்கோ எண்டால் எப்படி? இருக்கும் காணிகளை பங்கிட்டாலே அவர்களுக்கு ஒரு வளமான வாழ்வு அவர்களின் தாயகத்திலேயே (ஆம் மலையகம் அவர்களின் தாயகமே) கிடைக்கும் அவர்கள் விரும்பினால் வரலாம்.... வடக்கு மக்கள் உதவிகள் செய்யலாம் ஆனால் அவர்களை சும்மா பலிக்கடாவைப் போலப் பாவிக்க முடியாதல்லவா .... அனுராவை அசர வைக்கலாம் எண்ட நோக்கில் சுவும் மனோவும் வெளிக்கிட்டவை பிசுபிசுத்துப் போயிட்டுது இப்ப கப்சிப். முதல்ல மனோவை வந்து சுமந்திரண்டை காணியிலை இருக்கச் சொல்லுங்கள் 😁
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
ஒரு யாழ்பாணத்து இந்து சாமியாரின் பேட்டி பார்த்தேன் அவர் சொன்னார் அநுரகுமார திசாநாயக்க ஒரு அவதாரம் . ஆகவே மிதிப்பு தொடரும் 😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் தமிழர்கள் சன தொகை குறைந்துவிட்டது என்று மூக்கால் அழுதவர்கள் ஆனால் அந்த மக்கள் இராவணன் பூமியான வடக்குக்கு வந்து வாழ முடியாது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இன்னும் ஒரு point விட்டு விட்டீர்கள் ... அப்படியே மலையக தமிழர்களோடு சேர்த்து கொஞ்ச சிங்களவனும், முஸ்லீமும் கூடவே குடியபெயர்ந்து வடக்கு கிழக்குக்கு வருவார்களாம் அது உங்களுக்கு ஓகேயா என்றும் கூட கேள்வி கேட்கிறார்கள்... யாழ்ப்பாணத்தின் வாசல் நாவற்குழியில் 6௦ சிங்கள குடும்பங்களும் , மிகப்பெரிய விகாரையும், இப்போது அவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கான விண்ணப்பமும் இருப்பதை கண்டுகொள்ள மாட்டார்கள்.
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
போண்டியில் இடம் பெற்ற சம்பவத்தின் பின் ரொறன்டோவில் பொலிசாரால் விடுக்க பட்டுள்ள வேண்டுகோள். Toronto Police Service 3h · We are closely monitoring events in Australia and any activity that may target Jewish people, and we remain committed to protecting our communities. If you see anything suspicious please report it immediately. Your vigilance helps keep our community safe.
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
- போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
ஆஸ்திரேலியாவில் யூதர்களை 'குறிவைத்து' துப்பாக்கிச் சூடு - இஸ்ரேல் கூறியது என்ன? பட மூலாதாரம்,Saeed KHAN / AFP via Getty Images படக்குறிப்பு,ஓர் குழந்தை உட்பட 29 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சிட்னி காவல்துறை தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில், பத்து பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பலர் காயமடைந்துள்ள நிலையில், ஓர் குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகவலை நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக சிட்னிக்கான பிபிசி செய்தியாளர் டிஃபனி டர்ன்புல் தெரிவித்துள்ளார். "பொது இடத்தில் இரண்டு ஆண்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக" நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம். லான்யோனின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிழக்கு பகல் நேரப்படி மாலை 6:47 மணியளவில் போன்டி கடற்கரையில் உள்ள ஆர்ச்சர் பூங்கா அருகே நிகழ்ந்தது. பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்கின் கூற்றுப்படி, இந்த சம்பவம் போன்டி கடற்கரையின் வடக்குப் பகுதியில் உள்ள நெரிசலான பகுதியில் நடந்தது. "கடற்கரைக்குப் பின்னால் உள்ள புல்வெளிப் பகுதிக்கு அருகில் ஒரு ஹனுக்கா கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது," என்று அவர் கூறுகிறார். "கடற்கரைக்குச் செல்ல மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைபாதை இருந்தது. துப்பாக்கிதாரிகள் அதை இலக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்." "துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நான் பாலத்தைக் கடந்தபோது அங்கு குறைந்தது 200 பேர் இருப்பதையும், இசை உரத்து ஒலித்துக் கொண்டிருந்ததையும், பல்வேறு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் இந்த உயரமான பகுதியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது" என்று டெஸ்ஸா வோங் கூறினார். "நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் உலோகத் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான வாயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன" என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு,துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போன்டி கடற்கரையிலிருந்து செய்திகளை வழங்கும் பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங் "தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார், மற்றொருவர் காவல்துறையினரின் காவலில் உள்ளார்" என்று பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங் கூறினார். இந்த தாக்குதல் "சிட்னியின் யூத சமூகத்தை குறிவைத்து திட்டமிடப்பட்டது" என்று நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக கூறும் அவர், "அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இரவாக இருந்திருக்க வேண்டிய இரவு, பயங்கரமான, தீய தாக்குதலால் சிதைக்கப்பட்டது" என்று அவர் மேலும் கூறினார். "இந்தத் தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டது. அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு, ஒரு பயங்கரமான கொடூரத் தாக்குதலால் சிதைக்கப்பட்டுவிட்டது," என்று சிட்னி காவல்துறைத் தலைவர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார். யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட அங்கு வந்திருந்த சுமார் ஆயிரம் பேர் அந்த இடத்தில் இருந்ததாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம் லேன்யன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குறைந்தது 11 பேர் இறந்ததாகவும், 29 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இவர்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,Darrian Traynor/Getty Images ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பது" என்று விவரித்தார். இந்த சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்களின் காயங்களின் அளவு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை வெளியிடப்படவில்லை. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தற்போது அந்தப் பகுதியில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பகுதிக்குச் செல்வததைத் தவிர்க்கவும், சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் யூத விடுமுறை நாளான கடற்கரையில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகையுடன் தொடர்புடையதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். படக்குறிப்பு,ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி, போன்டி கடற்கரை தாக்குதல் யூத எதிர்ப்பு வெறுப்பு நடவடிக்கை என்று கூறியுள்ளார் நேரில் கண்ட சாட்சிகள் சொன்னது என்ன? துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது தனது குழந்தைகளுடன் கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் இருந்ததாக, சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தான், தனது குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர் கூறினார். "நான் வழக்கமாக வேலைக்குப் பிறகு செய்வது போல இன்று மதியம் கடற்கரையில் இருந்தேன், அப்போது தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டேன். சுமார் 20 பேர் இருந்ததாக நினைக்கிறேன்." "ஆரம்பத்தில் வெடிச்சத்தங்களை யாரும் வித்தியாசமாக நினைக்கவில்லை. பட்டாசுகள் வெடிப்பது போல் தோன்றியது. ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு வடக்கே உள்ள தமராமா மற்றும் போன்டி ஆகிய இரண்டு கடற்கரைகள் மீது ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதைக் கண்டபோது, ஏதோ தவறு இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கின," என்று அவர் கூறினார். சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு சாட்சியான மார்கோஸ் கார்வால்ஹோ, "துப்பாக்கிச் சத்தம் பட்டாசு சத்தம் போல இருந்தது. போன்டியில் இப்படி ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை" என்றார். "கடற்கரையில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது புரிந்தவுடன், ஓடத் தொடங்கினர். நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வடக்கு போன்டியில் உள்ள புல்வெளியை நோக்கி ஓடினேன்." பின்னர் தானும் வேறு சிலரும் ஒரு ஐஸ்கிரீம் வேனின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கார்வால்ஹோ கூறினார். அவசர சேவைகள் வந்து துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, கார்வால்ஹோ வீட்டிற்குச் செல்லும் வழியில் , "தரையில் சடலங்கள் கிடப்பதை" அவர் கண்டார். 'யூதர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்' ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் நடந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், இது "யூதர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்" என்று கூறியுள்ளார். இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் தனது எக்ஸ் தள பக்கத்தில், "சிட்னியில் உள்ள எங்கள் யூத சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்கள் முதல் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கச் சென்றபோது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்." "இந்த பயங்கரமான நேரத்தில் சிட்னியின் யூத சமூகம் மற்றும் முழு ஆஸ்திரேலிய யூத சமூகத்தினருக்காக பிரார்த்திக்கிறோம்." 'யூத எதிர்ப்பு வெறுப்புச் செயல்' ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், போன்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை ஆஸ்திரேலியர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று விவரித்தார். அது ஒரு 'மகிழ்ச்சியான நாளாக' இருந்திருக்க வேண்டிய நாள் என்று அவர் கூறினார். "இது யூத-விரோத வெறுப்புச் செயல்" என்று கூறிய அல்பனீஸி ,"இது நமது நாட்டின் இதயத்தைத் தாக்கும் ஓர் பயங்கரவாதத் தாக்குதல்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Darrian Traynor/Getty Images படக்குறிப்பு,சம்பவ இடத்தில் போலீசார் 'யூத உயிர்களைக் காப்பாற்ற வலுவான நடவடிக்கை எடுங்கள்' இந்த தாக்குதலை ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் கடுமையாக கண்டித்துள்ளது. "போன்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. தீபத் திருவிழாவான ஹனுக்கா, இன்று நம்பமுடியாத அளவிற்கு இருட்டாக இருக்கிறது" என்று இஸ்ரேலிய தூதரகம் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளது. "வெறுமனே ஒற்றுமையை வெளிப்படுத்துவது போதாது. ஆஸ்திரேலிய அரசாங்கம் யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து யூத உயிர்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளது. "தற்போது இஸ்ரேலில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மைமோன், இந்த பேரழிவு தரும் செய்தியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா திரும்புகிறார்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4dk16qerdo- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சும்மா ஒரு பேச்சுக்கு மனோவும், சுமனும் சொன்னதுக்கே….. யாப்பணீஸ் இந்த திரியில் படுறபாட்டை பார்த்து சிரிப்புத்தாளவில்லை😂. வாழ்வாதாரம் இல்லையாம்…மலையகம் அவர்களின் தாயகமாம்…அதாம்….இதாம்…😂 கரவு புத்தியை எப்படி எல்லாம் பெயிண்ட் அடித்து மறைக்க வேண்டி கிடக்கு 😂. இன்னும் ஒருவர் பிரதேசவாதம் எல்லாரிடமும் இருப்பதுதானாம்😂… நீங்கள் வெளிநாட்டில் வந்து தட்டு தூக்கி, 20 வருடத்தில் தொழிலதிபர்கள் ஆக முடியும் என்றால் ஏன் இந்த மக்கள் வடக்குக்கு வந்து வாழ முடியாது? நீங்கள் இரந்த போது வெளிநாட்டு அரசும் மக்களும் உங்களுக்கு தந்த அனுசரணையில் 10% நீங்கள் இவர்களுக்கு கொடுத்தாலே போதும். பிகு வடக்கை தமிழ் மாகாணமாக வைத்திருக்க இதுவே கடைசி உத்தி. ஆனால் தான், தனக்கு என்று மட்டுமே சிந்திக்கும் சுண்ணாம்பு மூளைகளுக்கு இது விளங்காது. ஆகவே இந்த பஸ்சும்…மிஸ்- சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்
சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர் 14 Dec, 2025 | 10:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் வெளியுறவு உறவுகள் குழுவிடம் சாட்சியமளித்த போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வாஷிங்டன் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், எரிக் மேயரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்திருப்பதால், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கும், சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னம் உட்பட பகைமைச் செல்வாக்குகளை எதிர்கொள்வதற்கும் இலங்கை மையமாக உள்ளது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும், உலகின் கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் கச்சா எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கும் இலங்கையின் கடல்வழியே செல்கின்றன. எனவே அதன் மூலோபாய இருப்பிடம், அமெரிக்க முயற்சிகளின் மையமாக அமைகிறது. தான் உறுதிப்படுத்தப்பட்டால், அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது முதல் முன்னுரிமையாக இருக்கும். அதேவேளை, சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளுக்குப் பிந்தைய இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் முக்கியமானதாகும். உடனடி உதவிக்காக 2 மில்லியன் டொலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதுடன், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க இராணுவத்தின் மூலோபாய வான்வழிப் போக்குவரத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையுடனான அமெரிக்காவின் வலுவான மற்றும் நீடித்த பங்களிப்புக்கு ஆதாரம் உள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்துப் பேசிய எரிக் மேயர், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்களைக் குறிப்பிட்டு, இலங்கை பிராந்தியப் பொருளாதாரத்தின் தலைமைத்துவமாக மாறத் தயாராக இருக்கும் ஒரு மீள்திறன் கொண்ட நாடு' என்றார். அடுத்த ஆண்டில், கொழும்புத் துறைமுகம் சரக்குக் கையாளும் திறனை இரட்டிப்பாக்க உள்ளது. இது இலங்கையின் துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் இணைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை வலியுறுத்துவோம். நாட்டின் பொருளாதாரச் சுதந்திரம் தேசிய சுதந்திரத்துடன் பிணைந்துள்ளது. எனவே புதிய சீர்திருத்தங்கள், அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். சீனாவின் செல்வாக்கு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், செனட் வெளியுறவு உறவுகள் குழுவின் தலைவர் ஜிம் ரிஷ், இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் சீனாவின் பங்களிப்பு குறித்து உலகளாவிய அளவில் ஒரு எச்சரிக்கையாகும் என குறிப்பிட்டார். சீனர்கள், இலங்கைத் துறைமுகத்திற்குச் செய்ததெல்லாம், மக்கள் ஏன் சீனாவுடன் வணிகம் செய்யக் கூடாது என்பதற்கான உலகளாவிய உதாரணச் சின்னமாக மாறியுள்ளது என்றார். இதற்குப் பதிலளித்த எரிக் மேயர், அமெரிக்கா 'திறந்த மற்றும் வெளிப்படையான' இருதரப்பு உறவுகளை விரும்புவதாகவும், இலங்கை அதன் இறையாண்மையை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யவும், அதில் துறைமுகங்கள் மீதான இறையாண்மையும் அடங்கும் எனவும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கக் கூட்டுறவு, கடல்சார் ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் துறைமுகப் பாதுகாப்பைப் பேணுதல் ஆகியவை இந்தோ-பசிபிக் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான அமெரிக்காவின் ஈடுபாட்டில் மையமாக இருக்கும் என்றும் மேயர் உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/233311- யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
அஞ்சலிகள் பாலா அண்ணை. வேலணை மக்களின் முயற்சிக்கு, துணிவுக்கு பாராட்டுகள்.- குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
அடேங்கப்பா…. ஈழத்தமிழனை வெற்றிகரமாக போட்டு மிதித்து, பிதுக்கி, ஒன்பது வாசலிலும் பவ்வி வர வைத்துள்ளான் சிங்களவன். அவனுக்கே இவ்வளவு சாபம் எண்டால்… பிதுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழன் தலையில் எத்தனை சாபம் இருக்கும் 😂. பிகு மேலே உள்ள கருத்தையும் வின்னர் பட டயலாக் பாணியில் பொழுதுபோக்காக வாசித்து கடந்து போகவும்.- ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால்
ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது. முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன? ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள் பெற்றுவிடும். "இப்படி மாறும் தொற்றுகள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளாகவே உள்ளன" என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும் பாக்டீரியாக்கள் 'சூப்பர்பக்' (superbug) என அழைக்கப்படுகின்றன. 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட "கவலைக்குரிய" ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,Getty Images ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்தது என்ன? இந்தியாவில் ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை ஐசிஎம்ஆர் சமீபத்தில் வெளியிட்டது. உயர்நிலை சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 99,027 மாதிரிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்றும், அதனால் இந்த தரவுகள் சமூக மட்டத்தில் (community patterns) அதன் நிலையை பிரதிபலிக்காது எனவும் ஐசிஎம்ஆர் தெளிவுபடுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள்: ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள தொற்றுகளில், கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியா தொற்று (72.1%) அதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கிராம் பாசிட்டிவ் வகை பாக்டீரியா தொற்றும் (17.7%) அடுத்ததாக பூஞ்சை தொற்றும் (10.2%) உள்ளன. யுடிஐ (சிறுநீர் பாதை தொற்று) மற்றும் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஃப்ளூரோக்வினோலோன் (Fluoroquinolones) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, யுடிஐ போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் செஃபாலோஸ்போரின் (cephalosporin) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, செப்சிஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் கார்பாபெனெம் (carbapenems) எனும் ஆன்டிபயாடிக், பல்வேறு வித தொற்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிபெராசிலின் - டாஸோபாக்டம் (piperacillin-tazobactam) எனும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக நோய்த்தொற்றுகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளன என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்று (யுடிஐ) போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக உள்ள இ.கோலை (Escherichia coli) பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் அமிகசின் (Amikacin) போன்ற சில ஆன்டிபயாடிக் மருந்துகள் தொற்றை எதிர்த்து செயலாற்றுவதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நிமோனியா போன்றவற்றுக்குக் காரணமான கிளெப்சியெல்லா நிமோனியே (Klebsiella pneumoniae) பாக்டீரியா, பிபெராசிலின் - டாஸோபாக்டம் (Piperacillin–tazobactam) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது. சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa) எனும் பாக்டீரியா, கார்பாபெனெம் (Carbapenem) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது. அசினெடோபாக்டர் பௌமானி (acinetobacter baumannii) எனும் பாக்டீரியா மெரோபெனெம் (meropenem) ஆன்டிபயாடிக் மருந்துக்கு மிக அதிகளவில் (91%) எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளது. சால்மோனெல்லா டைஃபி (Salmonella Typhi) எனும் டைஃபாய்டை ஏற்படுத்தவல்ல பாக்டீரியா செஃட்ரியாக்சோன் (Ceftriaxone- 98%), அஸித்ரோமைசின் (Azithromycin - 99.5%), டிஎம்பி-எஸ்எம்எக்ஸ் (TMP-SMX - 97.7%) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்திகொண்டவையாக உள்ளன. பட மூலாதாரம்,Getty Images இதுமட்டுமின்றி, முந்தைய சில ஆய்வுகளும் இதுகுறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. "மருத்துவ ஆய்விதழான தி லான்செட், உலகளவில் 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகள் இதனால் நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய கடும் தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கேடயங்களுள் முதல் வரிசையில் உள்ள ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இத்தகைய தொற்று பாதிப்புகளில் பெரும்பாலும் செயல்படுவதில்லை." என குறிப்பிட்டுள்ளது. இதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என அந்த ஆய்வு கூறுகிறது. இவ்வாறு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் தொற்றுகளுக்கு அன்றாடம் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அத்தொற்றுகள் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளன. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதை எப்படி புரிந்துகொள்வது? மருத்துவர்களிடம் பேசினோம். பட மூலாதாரம்,Getty Images ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை பாக்டீரியா எப்படி பெறுகிறது? ஆன்டிபயாடிக் என்பது பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள். "பாக்டீரியாக்களை கிராம் நெகட்டிவ் மற்றும் கிராம் பாசிட்டிவ் என வகைப்படுத்துகிறோம். பாக்டீரியா தொற்றுக்களுக்குதான் பெரும்பாலும் நாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவோம். நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படவில்லையெனில் பாக்டீரியாக்கள் அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். அதாவது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உயிர் பிழைப்பதற்காக பாக்டீரியாக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டு மருந்துகளுக்கு எதிரான சக்தியை பெறும்" என்று சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர் விளக்கினார். பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கான காரணங்கள் என்ன? "பாக்டீரியாக்கள் உருமாற்றம் அடைந்து பல்வேறு திரிபுகள் உருவாகும் போது அவை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறுகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் உபயோகிக்கும் போதோ அல்லது சரியான அளவில் பயன்படுத்தாத போதோ அவ்வாறு அவை மாறுகின்றன. சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் வேறு ஒன்றை மாற்றிக் கொடுத்தாலும் இது நிகழும்." என கூறுகிறார், சென்னையை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலஷ்மி. பட மூலாதாரம்,Getty Images பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெற்றால் என்ன நடக்கும்? "ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தி பாக்டீரியாக்களிடம் உருவாகிவிட்டால், அந்த மருந்து நோயாளிகளிடத்தில் வேலை செய்யாது." என்கிறார், மருத்துவர் சந்திரசேகர். "இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான தொற்றுகளுக்கு நாம் பயன்படுத்தும் பல ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காது. இதனால், நோயாளிகள் உயிரிழப்பதும் நிகழ்கின்றன. குறிப்பாக, புற்றுநோய், இதயநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கடினமான அறுவை சிகிச்சைகளை செய்து காப்பாற்றுகிறோம். ஆனால், பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெறுவதால், சாதாரண தொற்றுகளுக்கு ஆளாகியும் கூட அவர்கள் உயிரிழப்பதை பார்த்துள்ளோம்." என்கிறார் மருத்துவர் விஜயலட்சுமி. பாக்டீரியாக்கள் பலவும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதால், மருத்துவர்கள் வழக்கமாக பரிந்துரைக்கும் திறன் வாய்ந்த மருந்துகள் நோயாளிகளிடையே செயலாற்றுவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் எப்படி கவனமாக இருப்பது? மருத்துவர்கள் சந்திரசேகர் மற்றும் விஜயலட்சுமியின் பரிந்துரைகள் பரிந்துரைக்கப்பட்டதை விடவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இடையில் அவற்றை எடுத்துக் கொள்வதை நிறுத்தாமல் பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கவனத்துடன் பரிந்துரைக்க வேண்டும். சாதாரண சளி, காய்ச்சல் என்றாலே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை கல்ச்சர் பரிசோதனையில் உறுதி செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும். இந்தியாவில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மருந்தகங்களில் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0q51pn1ln0o- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
சிஎஸ்கே-வில் ஜடேஜாவின் இடத்தை நிரப்பப் போவது யார்? - வீரர்கள் ஏலம் மீதான எதிர்பார்ப்புகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடருக்கான ஏலம் வரும் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடக்க உள்ளது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் 244 பேர் இந்திய வீரர்கள், 115 பேர் வெளிநாட்டு வீரர்கள். அதிகபட்சம் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படலாம். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த இடங்களை நிரப்ப வேண்டும், எந்த வீரர்களை வாங்கக்கூடும் என்று பார்ப்போம். சூப்பர் கிங்ஸிடம் என்ன இருக்கிறது? ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சீசனில் கடைசி இடத்தையே பிடித்தது. அதனால், பல வீரர்களை அந்த அணி இம்முறை விடுவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டிரேட் செய்து சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே. இப்போது சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரீவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், ராம்கிருஷ்ணா கோஷ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, கலீல் அஹமது, நாதன் எல்லிஸ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி, ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 16 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருப்பதால், அந்த அணி இன்னும் அதிகபட்சமாக 9 பேரை வாங்கலாம். அதில் 4 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். இந்த ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 43.40 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. கேமரூன் கிரீனை வாங்க வேண்டுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார் கேமரூன் கிரீன் இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீதுதான் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக கடந்த மெகா ஏலத்தில் பங்கேற்காத அவர், இந்த ஏலத்தின் முதல் செட்டில் (பேட்டர்கள்) இடம்பெற்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (64.30 கோடி ரூபாய்), சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளிடமுமே அதிக தொகை இருப்பதால், இவ்விரு அணிகளும் கிரீனுக்காக கடுமையாகப் போட்டியிட வாய்ப்பு உள்ளது. முந்தைய ஐபிஎல் ஏல சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்றும், 30 கோடி ரூபாயைக்கூட தாண்டலாம் என்றும் பேசப்படுகிறது. அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கேமரூன் கிரீன் அவசியம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. "கேமரூன் கிரீனை வாங்கினால் சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் நன்கு பலமடையும். கிரீன், பிரீவிஸ், துபே ஆகியோர் அடங்கிய மிடில் ஆர்டர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார் முன்னாள் சிஎஸ்கே வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். அவர் நான்காவது வீரராக விளையாட நன்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அவர், தேவைப்பட்டால் ஓப்பனராகவும் கிரீனால் விளையாட முடியும் என்கிறார். மறுபுறம் கிரீனை முதன்மையான இலக்காக வைக்க வேண்டாம் என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. "நைட் ரைடர்ஸுக்கு நிச்சயம் கிரீன் தேவை. அவர்களின் கையில் பெரிய தொகை இருப்பதால், அதைக் குறைப்பதற்காக சிஎஸ்கே கிரீனுக்கு ஏலம் கேட்க வேண்டும். ஆனால், ஓர் அளவு வரை ஏலம் கேட்டுவிட்டு விட்டுவிட வேண்டும். ஏனெனில், சிஎஸ்கே வேறு சில இடங்களை நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது" என்கிறார் அவர். கிரீனுக்கு பதில் வேறொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வேண்டாம் என்று சொல்லும் நானீ, இன்னொரு ஆஸ்திரேலிய வீரரை சூப்பர் கிங்ஸ் குறிவைக்க வேண்டும் என்கிறார். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, ரவீந்திர ஜடேஜாவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம். "ரவீந்திர ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம். அதை நிரப்ப இரண்டு வீரர்களே தேவைப்படும். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரு வீரர் வேண்டும். கிரீன் அப்படிப்பட்ட வீரர்தான் என்றாலும், சுழற்பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு மிகவும் அவசியம்" என்கிறார் நானீ. தற்போது சூப்பர் கிங்ஸ் அணியில் நூர் அஹமது, ஷ்ரேயாஸ் கோபால் என இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அஷ்வின், ஜடேஜா என பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய இரண்டு பெரிய வீரர்களை சிஎஸ்கே இழந்திருப்பதால், அதுதான் அந்த அணியின் பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்கிறார் நானீ. அதனால்தான் கிரீனுக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கூப்பர் கானலியை சிஎஸ்கே வாங்க வேண்டும் என்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜடேஜாவின் இடத்தை கூப்பர் கானலியை வைத்து நிரப்ப வேண்டும் என்கிறார் வர்ணனையாளர் நானீ "கூப்பர் கானலி பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவர் சூப்பர் கிங்ஸுக்கு பொருத்தமான வீரராக இருப்பார். இடது கை மிடில் ஆர்டர் பேட்டிங், இடது கை ஸ்பின் என ஜடேஜாவின் இடத்தை அவரால் அப்படியே நிரப்ப முடியும். அவர் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் பெவன் போலச் செயல்படுவார். சிறப்பாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கக் கூடியவராக வருவார். மிகவும் நிதானமான மனோபாவம் கொண்டவராக இருக்கிறார். நல்ல இடது கை ஸ்பின்னர். அற்புதமான ஃபீல்டரும்கூட. இதே வயதில் ஜடேஜா எப்படி இருந்தாரோ, அதைவிடத் திறமைசாலியாக இப்போது கானலி இருக்கிறார்" என்று கூறினார் நானீ. ஆஸ்திரேலியாவுக்காக அனைத்து ஃபார்மட்களிலும் விளையாடிவிட்டார் 22 வயதான கானலி. 2022 அண்டர் 19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டிருந்தார். கிரீனை வாங்காமல் கானலியை வாங்குவதன் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என்றும், அதன்மூலம் இந்திய ஸ்பின்னர், வெளிநாட்டு ஃபினிஷர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆகிய இடங்களில் முதலீடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். அதோடு, "வெங்கடேஷ் ஐயர் கடந்த ஆண்டைப் போல மிகப்பெரிய தொகைக்குப் போக மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால், சிஎஸ்கே அவரை வாங்கலாம். அவர் சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போகலாம்" என்று கணிக்கிறார் நானீ. வெளிநாட்டு ஃபினிஷர் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேவிட் மில்லரை லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிலீஸ் செய்திருக்கிறது ஒருவேளை பிளேயிங் லெவனில் இன்னும் அனுபவமிக்க வெளிநாட்டு ஃபினிஷர் வேண்டுமென்று சூப்பர் கிங்ஸ் நினைத்தால், லியாம் லிவிங்ஸ்டனை வாங்கலாம் என்று சொல்கிறார் நானீ. அவராலும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப முடியும் என்கிறார் அவர். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு ஐபிஎல் சாம்பியன் ஆகியிருந்த லியாம் லிவிங்ஸ்டன் அந்த அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார். அவருக்கும் இந்த ஏலத்தில் பல அணிகள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஒரேயொரு பிரச்னை என்னவெனில், அந்த நாளில் எப்படிப்பட்ட லிவிங்ஸ்டன் களம் காண்பார் என்பதைத்தான் சொல்ல முடியாது. கணிக்க முடியாத வீரர் அவர்" என்கிறார் நானீ. அதேநேரம் டேவிட் மில்லர் சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமான வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன். "ஃபினிஷிங் ரோல் செய்வதற்கு டேவிட் மில்லர் பொருத்தமான வீரராக இருப்பார். நல்ல அனுபவம் கொண்டவர். துபே பந்துவீச்சில் தற்போது நல்ல முன்னேற்றம் கொண்டிருப்பதால், ஆல்ரவுண்டரைத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஓரிரு ஓவர்களை துபேவால் நிரப்ப முடியும்" என்கிறார் அவர். லக்னௌ அணியால் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் டேவிட் மில்லர் ஐபிஎல் அரங்கில் மூவாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். 2022 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கினார் அவர். சாம்சன், மாத்ரே, கெய்க்வாட், பிரீவிஸ் என வலது கை பேட்டர்கள் நிறைந்த சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் இடது கை பேட்டர் ஒருவர் இணைவது அணிக்குக் கூடுதல் பலமாக அமையும். எந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் விக்னேஷ் புத்தூர் ராகுல் சஹர், ரவி பிஷ்னாய் என இந்தியாவின் இரண்டு முன்னணி ஸ்பின்னர்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றிருப்பதால், அவர்களுள் ஒருவரை சிஎஸ்கே வாங்க முயலக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பிஷ்னாய், சஹர் இருவரில் ஒருவரை வாங்குவதென்றால், சஹரை வாங்குவது நல்லது. ஏனெனில், பிஷ்னாய் கிட்டத்தட்ட ஒரு மிதவேகப்பந்துவீச்சாளர் போலத்தான். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரே மாதிரி கூக்ளியாக வீசுவார். அது சேப்பாக்காத்திற்கு ஒத்து வராது" என்று சொல்லும் நானீ, 'ஃபிங்கர் ஸ்பின்னர்' தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று கூறினார். அப்படியான அனுபவ இந்திய பௌலர்கள் ஏலத்தில் இல்லாததும் கானலியின் அவசியத்தை உணர்த்துவதாகக் கூறுகிறார் அவர். "ஒருவேளை விக்னேஷ் புத்தூர் கிடைத்தால் அவரைக்கூட வாங்கலாம். சென்னைக்கு ஏற்ற வீரராக இருப்பார்" என்றார் நானீ. ஏற்கெனவே இன்னொரு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான நூர் அஹமது இருக்கிறாரே என்று கேட்டதற்கு, "அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா இருவருமே இந்திய அணிக்கு ஆடுகிறார்கள் அல்லவா, அதுபோலத்தான். நல்ல தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரே மாதிரியான திறமையுள்ள வீரர்கள் ஆடுவதில் தவறேதும் இல்லை" என்கிறார். கூடுதலாக, வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன்கூட சூப்பர் கிங்ஸுக்கு ஏற்ற வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத். பதிரணாவா வேறு வேகப்பந்துவீச்சாளரா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 மெகா ஏலத்துக்கு முன்பாக ரீடெய்ன் செய்த பதிரணாவை தற்போது ரிலீஸ் செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் பதிரணாவை சூப்பர் கிங்ஸ் ரிலீஸ் செய்திருந்த நிலையில், அவரை சூப்பர் கிங்ஸ் மீண்டும் இந்த ஏலத்தில் வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்து அவரை வாங்க வேண்டியதில்லை என்பதே அவர்கள் இருவரின் கருத்தாகவும் இருக்கிறது. முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, லுங்கி எங்கிடி போன்ற 'பேஸ் ஆஃப் தி விக்கெட்' போடும் பௌலர்களை வாங்கலாம் என்று கூறும் நானீ, ஜேசன் ஹோல்டர்கூட நல்ல தேர்வாக இருப்பார் என்கிறார். "முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்கிறார் அவர். வித்யுத்தோ, ஜம்மு காஷ்மிரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் நபியை வாங்கலாம் என்கிறார். "ஆகிப் நவி நல்ல ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் பந்தை நன்கு நகர்த்தக் கூடியவர். அதேபோல டெத் ஓவர்களில் யார்க்கர்களையும் சிறப்பாக வீசுவார். அவர் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பலமாக்குவார்" என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxg3ng9q7yo- யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தேசத்தின் குரலாக இருந்த அண்ணனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
அவுஸ்திரேலிய தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு ; 12 பேர் பலி, 29 பேர் காயம் Published By: Vishnu 14 Dec, 2025 | 08:12 PM சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான நவீத் அக்ரம் (Naveed Akram) என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் காயம் அடைந்தவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குகின்றனர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் என சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யூதர்களின் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடி இருந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வெடிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது . ஹணுகாவின் முதல் நாளில் யூத அவுஸ்திரேலியர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நமது தேசத்திற்கு இருண்ட தருணம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் ஒவ்வொரு அவுஸ்திரேலியர் மீதான தாக்குதலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த தாக்குதல் ஒரு தீவிரவாத சம்பவம் என தெரிவித்த சிட்னி பொலிஸ் ஆணையர் மால் லெனின் பொலிஸார் புலனாய்வாளர்களுடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளர். இதேவேளை போண்ட பாயில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டை அவுஸ்திரேலிய முஸ்லிம் சமூகம் கண்டிக்கிறது. அவுஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்சில் மற்றும் நியூ சவுத் வெல்ஸ் இமாம்கள் கவுன்சில்களும் கண்டனம் தெரிவித்துள்ளன . இந்த வன்முறை மற்றும் குற்ற செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை பொறுப்பாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர் . அதே நேரம் தாக்குதல் தொடர்பில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக இஸ்ரேல் தூதரகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து மக்களை பாதுகாக்க அவுஸ்திரேலிய அரசு தீர்க்கமாக செயல்பட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233353 - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.