Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ! தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை விகாரதிபதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாக தீப மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதிகளிடம் ஆசி பெற்று , கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, தையிட்டி விகாரை , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டது. அவ்விகாரையை சூழ பெருமளவான தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தபட்டுள்ளன. அவற்றினை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். என விகாரதிபதிகள் இருவரும் தனித்தனியே ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி காணி விடுவிப்பு , தையிட்டி விகாரை விவகாரம் , பாதை விடுவிப்புக்கள் , தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்த போதிலும் , அவை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் கூறாது சென்றமை காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. https://athavannews.com/2026/1460244
  3. கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது புதிய வரி – டொனால்ட் டிரம்ப் எச்சரிகை! டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று டிரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். இதேவேளை, “தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை எனவும் கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்றும் டிரம்ப் நேற்று தெரிவித்தார். கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது இவ்வாறான காரணங்களால் டிரம்ப் க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460233
  4. 'சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை' - அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டின் போது ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்பு 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. "ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை" - தமிழ்நாடு முதல்வர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வழக்கம் போல் காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மூன்று சுற்றுகள் முடிவடைந்திருந்த நிலையில், 8 மாடுபிடி வீரர்கள், 4 மாடு உரிமையாளர்கள், 4 காவலர்கள் & தீயணைப்பு வீரர்கள், 4 பார்வையாளர்கள் (ஒரு பெண் உட்பட) என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். முதல் சுற்றில், களம் கண்ட 105 காளைகளில் 16 காளைகள் பிடிபட்டன. முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், திரைப்பட நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன. முதல் சுற்றில் தகுதி பெற்றவர்கள் விவரம்: அகத்தியன், கருவனூர் - 3 கோகுல்ராஜ், கள்ளந்திரி - 2 அஜித், அலங்காநல்லூர் - 2 பிரசாத், மதுரை - 2 சூர்யா, வாடிப்பட்டி - 2 ஜல்லிக்கட்டை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு வருகின்றனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களிக்கின்றனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர். Happy Pongal happy jallikattu" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். வாடி வாசலுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்குமான தொலைவு இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் தாங்கள் சிரமப்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பரிசுகள் விவரம் 10-லிருந்து 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் முதன்மை பெறும் வீரர்கள் அனைவரும் இறுதிச்சுற்றில் விளையாடுவார்கள். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பாக வழங்கப்படும் காரும், இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு இ-பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் டிராக்டரும், இரண்டாவது சிறந்த காளைக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளைக்கு இ-பைக்கும் வழங்கப்படுகிறது. இவை தவிர, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் ஏராளமான பரிசுகளை வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அறிவித்துள்ளனர். முதல்வர் வருகை காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வருகிறார். காலை 9.45 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வரும் முதல்வர், களத்தில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிப்பார். பிறகு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி அலங்காநல்லூர் முழுவதும் வளர்த்த போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,2026 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது பாதுகாப்பு ஏற்பாடுகள் 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
  5. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து வெற்றி; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் Published By: Vishnu 17 Jan, 2026 | 03:07 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்றுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (16) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து ஆகியன இலகுவாக வெற்றியீட்டின. ஆனால், மற்றொரு முன்னாள் உலக சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. குழு ஏ - அவுஸ்திரேலியா வெற்றி அயர்லாந்துக்கு எதிராக விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளது. அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து அமோக வெற்றியீட்டியது. ஸ்டீவன் ஹோகன், இலங்கை வம்சாவளியான நிட்டேஷ் செமுவல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 186 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர். இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது சதத்தைக் குவித்த ஸ்டீவன் ஹோகன் 111 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நிட்டேஷ் சமுவேல் 101 பந்துகளை எதிர்கொண்டு பவுண்டறிகள் இல்லாமலேயே 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். வில் மலாஜ்ஸுக்கு 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் இருவர் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ரொப் ஓ'ப்றயன் 79 ஓட்டங்களையும் ப்ரெடி ஓகில்பி 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெகமண்ட் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஹோகன். சி குழு - இங்கிலாந்து வெற்றி ஹராரே தக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் பாகிஸ்தானை 37 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. காலெப் பெல்கொனர் 66 ஓட்டங்களையும் பென் டௌக்கின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஹ்மத் ஹுசெய்ன் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பர்ஹான் யூசுப் மாத்திரம் திறமையாக துடுப்பெடுத்தாடி 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அலெக்ஸ் க்றீன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜேம்ஸ் மின்டோ, ரெல்ஃபி அல்பர்ட் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: காலெப் பெல்கொனர் டி குழு - தென் ஆபிரிக்காவுக்கு ஏமாற்றம் நமிபியா விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த முன்னாள் சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் பெரும் ஏமாற்றம் அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட் 31 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. ஆனால், காலித் அஹமத்ஸாய், பைசால் ஷினோஸதா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். காலித் அஹ்மத்ஸாய் 74 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 81 ஓட்டங்களையும் பெற்று ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (183 - 3 விக்.) அதே மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு விக்கெட் சரிக்கப்பட்டது. உஸய்ருல்லா நியாஸாய் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோர்ன் போத்தா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பயண்டா மஜோலா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக போராடிய ஜேசன் ரோவ்ல்ஸ் 98 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட கோர்ன் போதா (25), லெத்தாபோ பாலாமோலாக்கா (22), டெனியல் பொஸ்மான் (20) ஆகிய மூவரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கதிர் ஸ்டனிக்ஸாய் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: உஸெய்ருல்லா நியாஸாய். https://www.virakesari.lk/article/236231
  6. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkhxm4pq0416o29nqb7zl9k7
  7. நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு - படங்கள் இணைப்பு 17 Jan, 2026 | 11:49 AM இலங்கையில் "லிட்டில் இங்கிலாந்து" (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சனிக்கிழமை (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய வானிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டன. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன. இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந் தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் சுற்றுச்சூழல் முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன. அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது இதில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது. இதேவேளை காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருகிறது. மேலும், இப் பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236263
  8. 5ஆம் ஆண்டில் சாதா 50மீற்றர் ஓட்டத்தில் (மறுக்க மறுக்க ஆசிரியை கட்டாயப்படுத்தி ஓடவிட்டார்) கடைசியாக ஓடிய எனக்குத்தானா அப்ப முதல் பரிசு!! முன்னுக்கு ஓடிய நண்பர்கள் இவன் எப்படா ஓடி முடிப்பான் என எல்லைக் கோட்டில் ஏளனமாகப் பார்த்தது எல்லாவற்றையும் தம்பர் இறும்பூத வைத்துவிட்டார்!
  9. வடக்கு கடலில் அபூர்வமான குளிர் நிலை : காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது – நாகமுத்து பிரதீபராஜா 17 Jan, 2026 | 11:34 AM கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature – SST) அசாதாரணமாகக் குறைவாக, அதாவது வழக்கத்தை விட அதிக குளிராக காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்ந்த கடல் நீர் வடக்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக தெற்கு பகுதியில் காணப்படும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார். உலகளாவிய ரீதியில் பல நாடுகளின் வானிலை மற்றும் காலநிலைப் பாங்குகளைத் தீர்மானிப்பதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக முக்கியமான காரணியாக விளங்குகிறது என்றும், அதனால் வடக்கு பிராந்தியக் கடற்பரப்பில் தற்போது காணப்படும் இந்த அசாதாரண குளிர் நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ‘டித்வா’ புயலுக்குப் பின்னரான நாட்களில் இலங்கையில் பதிவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் பொதுமக்களும், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளும் மிகுந்த கரிசனையுடன் அணுகுவது காலத்தின் அவசியமாகும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236259
  10. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் Published By: Vishnu 17 Jan, 2026 | 04:29 AM கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர்கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://www.virakesari.lk/article/236240
  11. இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் Jan 17, 2026 - 10:38 AM இன்று (17) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 பாகை செல்சியஸ் எனவும், பதுளை பிரதேசத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 பாகை செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, பொலன்னறுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 பாகை செல்சியஸ் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் துகள் உறைபனி ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அந்த முன்னறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkhujyq6040zo29n4kn8hm3t
  12. யாழ் பல்கலைக்கழக பொங்கு தமிழ் நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு Published By: Vishnu 17 Jan, 2026 | 03:14 AM ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்படுவது வழமை. அதன்படி நாளை மதியம் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் தூபியில், பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/236233
  13. Today
  14. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் டேனியல் புஷ் மற்றும் பவுலின் கோலா பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty கிரீன்லாந்தை இணைக்கும் தனது லட்சியங்களுக்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில் மற்ற நாடுகள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது வரிகளை விதிக்க முடியும் என்று டிரம்ப் கூறினார். எந்தெந்த நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படக்கூடும் என்றோ அல்லது தனது இலக்கை அடைய எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்குச் சொந்தமாக தனி அரசாங்கம் உள்ளது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன், மற்ற நாடுகளும் அவரது திட்டத்தை எதிர்க்கின்றன, அமெரிக்காவில் உள்ள பலரும் இதுகுறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். டிரம்ப் இந்த கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், இரு கட்சிகளையும் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற தூதுக்குழு கிரீன்லாந்திற்குச் சென்றிருந்தது. அந்தத் தூதுக்குழு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோரைச் சந்தித்தது. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
  15. மிகவும் துன்பகரமான செய்தி எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அருகில் இருந்தவர் போய் விட்டால் அடி மனதின் வேதனையை யாரால் தேற்ற முடியும். எங்கள் ஆழ்த இரங்கல் மோகன். உங்கள் பெரும் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஓம் சாந்தி 🙏
  16. Authored and Released by: Nane Chozhan (நன்னிச் சோழன்) Introduction: For decades, a popular theory has circulated in Indian maritime history identifying the Kolandiophonta — the "ships of great bulk" mentioned in the 1st-century Periplus—as the legendary vessels of the Chola dynasty. This narrative, championed by scholars like Prithwis Chandra Chakravarti and K.M. Panikkar, even led to the modern coinage of the term "Cholanthiyam" to provide a phonetic link to the dynasty. However, a deeper look into maritime ethnography reveals a more grounded reality. By revisiting the research of Colonel James Hornell from the 1918, we find that the mystery of the Kolandia is solved not through dynastic titles, but through the living language of the coast. Hornell’s analysis suggests these were not traditional deep-sea hulls, but one-sided outrigger vessels known to local Tamil fishermen as the Kullan. By tracing the linguistic evolution from "Kulla Thoni" to "Kolandia," we can move past modern mythology to rediscover the veseel that allowed ancient Tamil sailors to dominate the routes to Southeast Asia. Concentration: In this study, we will concentrate more on the interpretation of the terms Kolandiophonta by James Hornell. The Etymological Evolution: From "Kullan" to "Colandia" Throughout the mid-20th century, a specific interpretation of the Periplus of the Erythraean Sea (a 1st-century Greco-Roman maritime log) gained significant traction among Indian historians. Scholars like Prithwis Chandra Chakravarti (1930) and later K.M. Panikkar (1959) sought to identify the "Kolandiophonta"—described by ancient Greeks as massive vessels capable of reaching the Ganges and Southeast Asia. They interpreted (or obtained from somewhere else) it as “Colandia” and “Colondia” respectively. - Chakravarti, Prithwis Chandra. "Naval Warfare in Ancient India." The Indian Historical Quarterly, vol. 4, no. 4, Dec. 1930, pp. 658. - Panikkar, K. M. Geographical Factors in Indian History. Bharatiya Vidya Bhavan, 1959. This line of thought eventually led to the coinage of the term "Cholanthiyam" (T. சொழாந்தியம்) by certain researchers in Tamil Nadu, who described it as massive Chola dynastic vessels. However, critics argue this term lacks a historical or philological basis in ancient Tamil literature, suggesting it was an "invented tradition" to provide a phonetic link between the Chola Dynasty and the Greek texts. In contrast, the maritime ethnographer James Hornell, writing decades earlier in the seventh volume of the Memoirs of the Asiatic Society of Bengal (1918–1923), provided a more grounded, technical explanation. He asserted that the word was not a reference to a dynasty, but a Greek corruption of the Tamil word Kullan or Kulla in pages 215 & 216 of “PART IV.—THE CLASSES OF VESSELS EMPLOYED BY INDIANS IN ANCIENT DAYS PRIOR TO PORTUGUESE MARITIME DOMINANCE” of the above-mentioned book. The word Kulla Dhoni is also used by Casie Chitty in his book The Ceylon Gazetteer (1834, page: 44) to refer to the oruwa of the Galle area. Analysis: What We Can Understand from Hornell’s Findings 1. The Technical Reality of Ancient Navigation From Hornell’s research, we can conclude that the Kolandiophonta were likely specialized outrigger vessels rather than standard deep-hulled galleys. He also says that he has seen outrigger vessels from Ceylon in the south to Cuddalore and Kille (Cauveri River) on the East Coast (Page 218, J.Hornell). By linking the Greek description to the physical requirements of the Palk Strait, Hornell demonstrates that these ships were designed for a specific environment. The "prows at each end" mentioned by Pliny indicate a double-ended design, allowing the vessel to reverse direction in narrow, shallow channels without turning around—a hallmark of outrigger technology rather than the heavy, fixed-rudder ships often imagined in later medieval naval warfare. Hornell’s connection to the Tamil word Kullan—which refers to a large outrigger vessel—suggests that these ships were an advanced design used by both Tamils and Sinhalese mariners, similar to the Sinhala traditional Yatra-oruwa. He has provided a drawing about the Sinhalese Yatra Oruwa, which matches his description here. 2. The Linguistic Distortion of Maritime Terms Instead of looking for a "Lost Kingdom" or a mythical "Cholanthiyam," Hornell suggests we look at the living language of fishermen. Hornell’s work highlights how ancient Greek sailors likely phonetically adapted local Dravidian maritime terminology. He observes that while Kullan is the formal form, the shortened Kulla was common among the coastal labouring classes. So Kolandia is indeed a rendering of Kullan-thoni. It is far more likely that Greek merchants, interacting with local sailors and shipbuilders, would adopt the local technical name (Kulla-thoni or Kullan) rather than an imperial dynastic name. It shifts our understanding of ancient Tamil shipping from a purely imperial narrative to one of functional, indigenous engineering. It implies that the "great size" recorded by the Greeks wasn't necessarily a reference to massive tonnage like a modern ship, but rather the impressive scale of these specialized outrigger crafts that were capable of crossing the Bay of Bengal to reach Chryse (Southeast Asia). 3. Cross-Cultural Maritime Links He identifies a technological lineage between the 1st-century Kolandia and the 8th-century Javanese ships depicted in the Borobudur sculptures based on the outrigger types used in Java. The Missing Link: Visual Proof of the Tamils' Kulla Thoni These Kulla Thonis (also known as Yatra Oruwa in Sinhala) were not exclusive to one group; they were a shared maritime tradition used by both Tamil and Sinhalese sailors. Supplementing Hornell’s findings, Admiral Paris, in his book named VOILIERS ET PIROGUES DU MONDE AU DÉBUT DU XIXE SIÈCLE (1843), provided detailed drawings of these vessels, and confirmed that they were common along the Coromandel Coast of India and the shores of Ceylon. Image from the book VOILIERS ET PIROGUES DU MONDE AU DÉBUT DU XIXE SIÈCLE (1843) by Admiral Paris. A similar image to the one drawn by Admiral Paris has been acquired and is provided below. In this image, the author has mentioned it as a Yatra Oruwa, contradicting the source from which it was based. Image obtained from a European source. In 1914, J.P. Lewis documented a vessel —which he identified as a "Calpentyn coaster"— similar to the Kulla Thoni through a distinct photograph taken in the coastal town of Katpitti (also known as Kalpitiya in Sinhala or Calpentyn in English). “Boats and canoes of Ceylon” in Times of Ceylon, Christmas Number, Colombo, 1914 via THE LOST SHIPS OF LANKA, Lt. Cmdr. Somasiri Devendra, 2013. An astonishing outriggered vessel's image was obtained from the same European source which resembles the admiral Paris drawing. This image is a vital piece of historical evidence that bridges the gap between Admiral Paris' drawings and physical maritime reality. It depicts a vessel from the Coromandel Coast, similar to the one mentioned by Admiral Paris in 1843, which serves as the "missing link" in the Kolandiophonta debate. The illustration clearly shows a vessel built using the ancient "sewn-plank" technique. Instead of iron nails, the planks are bound together with coconut fiber (coir) and caulked with resin. To the side of the main hull is a stout outrigger, connected by arched wooden booms. This is the "Kulla" or "Kullan" that Hornell refers to. The outrigger provides the necessary buoyancy and leverage to carry large sails and heavy cargo across the open ocean to places like Malaysia (Chryse) and the Ganges, preventing the narrow hull from capsizing in high winds. In the illustration, the vessel is equipped with a large, powerful rudder suspended at the rear. It is designed to provide precise control for a vessel of "great bulk." Image obtained from a European source. Note: This vessel is named as Delta Thoni (similar to Calpantyn Coaster, Tutucorin Coaster, Cochin Coaster) by the artist, without any specific names. Conclusion: To summarize, the idea that these ships were named "Cholanthiyam" is likely a modern myth created by later authors. While it sounds impressive to link them to the Chola kings, the historical evidence points in a different direction. James Hornell’s research shows that the name Kolandia actually comes from the Tamil word Kullan, which was the local name for a large outrigger boat. These ships were not just big; they were cleverly designed for the shallow and difficult waters between India and Sri Lanka. Because they had prows at both ends, they could change direction without turning the whole boat around. This kept the outrigger stable and safe from the wind. This same technology helped Tamil sailors travel all the way to Malaysia and Indonesia. Instead of looking for a lost royal name, we should celebrate the practical skill of the ancient Tamil shipbuilders who created such unique and successful vessels. Moving forward, our understanding of Tamil maritime history should prioritize these technical truths over modern linguistic inventions or “pride”.
  17. யாரப்பா நீ ? இந்த மனிதருள் மாணிக்கத்தை பார்த்தே ஆகணும்..
  18. உங்களின்ர பொறுமையை சோதித்த தருணங்கள் தாயகத்தில் ஏற்பட்டது உண்டா ரெல் மீ கிளியர்லி,,,
  19. ஆரத்தி எடுப்பது தமிழரின் கலாச்சாரம், ஆனால் காலை தொட்டுக்கும்பிடுவது நம் பண்பாட்டில் அப்படி வழக்கில் இல்லை. ஒருவேளை சந்திரசேகரன் அழைத்து வந்தவர்களோ தெரியாது.
  20. குளிக்க போன குமரி பொண்ணு.. படம்: சக்கரம் (1968) இசை:சுப்பையா நாயுடு பாடியோர்: TMS & சுசீலா வரிகள்:வாலி டிஸ்கி: அந்த காலத்து கிளுகிளுப்பான பாடல் போல கிடக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.