Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
  3. அமெரிக்க தேர்தல் நேரம் ட்றம்ப் ஏன் ஆட்சிக்கு வரக் கூடாது என்று சக உறுப்பினர்கள் எழுதியதையெல்லாம் புறம் தள்ளி, ட்றம்ப் ஆட்சிக்கு வந்தால் உலகிற்கே நல்லது சமாதானம் ஏற்படும் என்றெல்லாம் வாதாடியவர் நீங்கள். ஆட்சிக்கு வந்து 3 மாதத்திற்குள் உலகமே அவஸ்தைப்படுகிறது. வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
  4. இந்தப்பிரச்சினையை போலீசார் விசாரிக்க முடியுமா?யார் யார் விசாரிக்கபட்டார்கள்? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று எதுவும் கூறவில்லை, பொலிஸாருக்கு எதுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்? மக்களின் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாத போலீசார், கல்விசார் பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா? சைவ ஆலயங்களை இடித்து பௌத்த விகாரைகளை அமைப்போரையும் போலீசார் விசாரித்து பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தில் இந, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே? என்ன கோமாளிக்கூத்தெல்லாம் நடத்துது சிவசேனை.
  5. 2026 வளருமா, வளராதா? (வளர்வது எல்லாமும் நல்லது அல்ல புற்றுநோய் கட்டியும் வளரும்).
  6. வணக்கம் வாத்தியார் . .....! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே ஆண் : குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே இனிக்கும் தேனே எனக்கு தானே ஆண் : இளஞ்சிரிப்பு ருசியானது அது கனிந்து இசையானது குயில் மகளின் குரலானது இருதயத்தில் மழை தூவுது இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெயில் காயுது இனிக்கும் தேனே எனக்கு தானே......! --- பூவே இளைய பூவே ---
  7. ரஸ்ய வங்கி வட்டி வீதம் சென்ற வருடம் 22 வீதம் வரை உயர்ந்தது. வங்குறோத்தான நாடுகளிலேயே இந்த அளவு வட்டி வீதம் சாத்தியமாகும். முதலீடுகளை அதிகரிப்பதற்காக சிரமப்பட்டு இந்த வருடம் 16-17 வீதத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கான விலையைப் பணவீக்கத்தினை அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.
  8. Today
  9. இந்த ஹெலிகப்ரர்கள் 60-70 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் பாவனையிலிருந்து முற்றாக நீக்கப்பட்டவை.
  10. உந்த ஹெலி பறக்கிற படமொன்றையும் காணேல்லை ....... எல்லாம் கராஜ்சுக்குள்ளும் லொறியிலும்தான் நிக்குது . ......! 😀
  11. நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? அது இந்திய இலங்கை விசுவாசிகளை மகிழ்விப்பதற்காக சொல்லபட்ட தமிழ்யுரியுப் செய்தியாக தான் இருக்கும்
  12. ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரினால் அங்கே ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கடுமையாக ஒடுக்கபடுகின்றார்கள் மக்களை ஒருங்கிணைக்கும் எதிர்கட்சி தலைவர்கள் மாடியில் இருந்து தள்ளி விடப்படுவார்கள் அல்லது தேநீரில் விசம்.
  13. காணவில்லை. வளருமா.? வருமா. ? தமிழ்நாட்டில். எவன். முதல்வரால். தான். என்ன. ? நல்ல. ஆட்சி. சட்டத்தின். ஆட்சி. அமையாது. ஊழலை. அளிப்பது. ரொம்ப. கடினம்.
  14. இலங்கை நோக்கி வரும் அமெரிக்கா வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள்! 18 Mar, 2026 | 11:57 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட TH-57 Sea Ranger ரக 10 ஹெலிக்கொப்டர்கள் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஹெலிக்கொப்டர்கள், கடந்த 15ஆம் திகதி அலபாமா மாநிலத்தில் உள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மே 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவ பதிப்பாகிய இந்த ஹெலிக்கொப்டர்கள், இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் Bell 206 ரக விமானங்களுடன் இவை இணைவதன் மூலம் விமானப்படையின் செயல்திறன் மேலும் மேம்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய ஹெலிக்கொப்டர்கள் மூலம் மேம்பட்ட விமானி பயிற்சி நடவடிக்கைகள், பேரிடர் கால அவசர மீட்புப் பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பொது பயன்பாட்டு சேவைகள் எனப் பல முக்கிய துறைகளில் திறன்கள் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த ஹெலிக்கொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த தூதுவர் மஹிந்த சமரசிங்க, இந்த அன்பளிப்பு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர், கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை விமானப்படையின் உயர்மட்ட குழுவொன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்து, இந்த ஹெலிக்கொப்டர்களை நேரில் பார்வையிட்டு, கப்பல் மூலம் அனுப்பும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்த பெறுமதிமிக்க உதவிக்காக இலங்கை அரசு அமெரிக்காவிற்கு தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளதாகவும் தூதுவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241269
  15. எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன Mar 18, 2026 - 10:19 AM திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டுக்குள் எரிவாயு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும், தற்போதுள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். "எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது. அவற்றில் சில சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு களஞ்சியசாலைகளில் உள்ளன. ஏனையவை மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. நாம் மேலும் ஒரு எரிவாயு கப்பலை ஓடர் செய்துள்ளோம். அதன்படி நாளை அல்லது மறுநாள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் கிடைக்கவுள்ளது. எனவே, எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படாது. அடுத்ததாக ஏப்ரல் 21-23 காலப்பகுதியில் எரிவாயு வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் அடுத்த கப்பலை அவர்கள் எமக்கு வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம். எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு," என அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmvk9a2i0001356paqurd7xc
  16. தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் வருகிறது. மாறாக கூட்டணிவைத்த கட்சிகள் தேய்ந்து கொண்டு வருகின்றன.காலம் பதில் சொல்லும்.
  17. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: ஈராக்கின் இணக்கப்பாடு தாக்கத்தை ஏற்படுத்தியது 18 Mar, 2026 | 10:36 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இன்று புதன்கிழமை (18) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெண்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 67 சதவீதத்தால் (0.65%) வீழ்ச்சியடைந்து 102.75 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (17) இதன் விலை 3 சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில், இன்று இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1.18 டொலர்களால் (1.23%) வீழ்ச்சியடைந்து 95.03 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. துருக்கியின் செய்ஹான் துறைமுகத்தினூடாக மீண்டும் எண்ணெய் ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கும் குர்திஷ் அதிகாரிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241256
  18. 2025 க.பொ.த உயர்தர பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு 18 Mar, 2026 | 10:02 AM (இணையத்தள செய்திப் பிரிவு) எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் தருணத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர (O/L) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். சாதாரணதரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி, செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் சாதாரணதரப் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241250
  19. அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா! Mar 18, 2026 - 08:35 AM அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள சதித் தன்மை குறித்த மேலதிக உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது பதவிக்காலத்தின் போது, முடிவில்லாத போர்களில் அமெரிக்காவை சிக்க வைக்காமல் இராணுவ பலத்தை எவ்வாறு தீர்க்கமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து அவருக்குச் சிறந்த புரிதல் இருந்ததாக கென்ட் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பத்திலேயே உயர் இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் உள்ள செல்வாக்குமிக்க குழுக்கள் இணைந்து மிகவும் நுணுக்கமான முறையில் தவறான தகவல்களைப் பரப்பும் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் ட்ரம்ப்பின் 'அமெரிக்காவிற்கே முதலிடம்' என்ற கொள்கையை முழுமையாக முடக்கி, ஈரானுடன் ஒரு போரை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை அவர்கள் ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதாகவும், இப்போது தாக்குதல் நடத்தினால் மிக விரைவான வெற்றியைப் பெறலாம் என்றும் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலத்தில் அமெரிக்காவை ஈராக் போரில் சிக்க வைப்பதற்காக இஸ்ரேல் பயன்படுத்திய தந்திரம் என்றும் ஜோ கென்ட் தனது கடிதத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். 45 வயதான கென்ட், அமெரிக்க விசேட படையணி மற்றும் சி.ஐ.ஏ ஆகியவற்றின் அனுபவமிக்க அதிகாரி ஆவார். இராணுவ வீராங்கனையான இவரது மனைவி ஷானன் கென்ட், 2019 ஆம் ஆண்டு சிரியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmvge9y90005356pfxy9d6y7
  20. பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு! கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுந்த பைபிள் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கூறியதாக தெரிவித்து யாழ்ப்பாணம் தலைமை காரியாலய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில், பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் அனுமதியளித்த நிலையில் அதற்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை காரியாலயத்தில், சிவசேனை அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றதாக சிவசேனை அமைப்பினரால் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, சிவசேனை அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. https://athavannews.com/2026/1468946
  21. கோட்டாபய ராஜபக்ஷிடம் இலஞ்ச ஆணைக்குழு இரு மணிநேரம் விசாரணை Published By: Vishnu 18 Mar, 2026 | 05:25 AM (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (17) அவரிடம் விசேட விசாரணை ஒன்றினை நடத்தியது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை முற்பகல் கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் விசாரணைகளை நடத்தியதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்தது. கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்த பின்னர், அவர் அங்கிருந்து வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் இருந்த காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டு, அந்த வீடமைப்புத் திட்டங்களில் உள்ள வீடுகள் பயனாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ஷவை அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்தது. https://www.virakesari.lk/article/241245
  22. அமெரிக்காவின் அதிரடி நன்கொடை: இலங்கைக்கு வரும் 10 ஹெலிகொப்டர்கள்! Mar 18, 2026 - 07:29 AM அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10 ஹெலிகொப்டர்களும் மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த ஹெலிகொப்டர்கள், இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த ஹெலிகொப்டர்களையும் இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெலிகொப்டர்கள் கணிசமான அளவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நன்கொடையானது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தையும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அர்ப்பணிப்பையும் பலப்படுத்துவதாகவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஹெலிகொப்டர்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை விமானப்படையின் தூதுக்குழுவொன்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தது. இந்த பெறுமதியான நன்கொடைக்காக இலங்கை தனது மனமார்ந்த நன்றியை அமெரிக்காவிற்கு தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmve2a3c0000356p3aj9w6ai
  23. பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer ஆகிய இரு தலைவர்களும் சந்தித்துப் பேசி, ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். லண்டனில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசிய பின் பிபிசி-க்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் செலென்ஸ்கி இதனைத் தெரிவித்தார். ஈரான் மீதான போர் காரணமாக சர்வதேச நாடுகளின் கவனம் உக்ரைன் மீதிருந்து திசைமாறுவதாகவும், இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போவதாகவும் அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மீது ட்ரம்ப் அண்மையில் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை மிக அவசியம் என Zelensky சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ரஷ்யாவும் ஈரானும் வெறுப்பினால் இணைந்த ஆயுதச் சகோதரர்கள் என்றும், இத்தகைய ஆட்சிகள் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். ஈரான் போர் சூழலால் உக்ரைனின் நான்கு ஆண்டுகாலப் போராட்டம் பாதிக்கப்படுவதை தடுக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் Volodymyr Zelensky கோரிக்கை விடுத்தார். https://athavannews.com/2026/1469024
  24. ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன! ஈராக் அரசாங்கமும் குர்திஷ் அதிகாரிகளும் துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டியமை மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகம் குறித்த கவலைகளுக்கு ஓரளவு நிவாரணம் அளித்து. இதையடுத்து, சர்வதேச சந்தையில் புதன்கிழமை (18) எண்ணெய் விலைகள் ஓரளவு சரிந்தன. எனினும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியைப் பெருமளவில் நிறுத்தியுள்ள ஈரான் மோதல் தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை கடந்த நான்கு தொடர்ச்சியான அமர்வுகளாக ஒரு பீப்பாய் 100 டொலருக்கு மேல் நிலைபெற்றுள்ளது. செவ்வாயன்று 3% க்கும் அதிகமாக உயர்ந்த பின்னர், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை புதன்கிழமை 0209 GMT நிலவரப்படி 67 சென்ட்கள், அதாவது 0.65% சரிந்து, ஒரு பீப்பாய் $102.75 ஆக இருந்தது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் $1.18, அதாவது 1.23% சரிந்து, $95.03 ஆக இருந்தது. பாக்தாத்தின் அரச ஊடக தகவல்களின்படி, செய்ஹானில் இருந்து எண்ணெய் வரத்து புதன்கிழமை காலை 0700 GMT மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஈராக்கின் எண்ணெய் அமைச்சர் ஹயான் அப்தெல்-கனி தெரிவித்தார். அத்துறைமுகம் வழியாக ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 100,000 பீப்பாய்கள் மசகு எண்ணெயை அனுப்ப ஈராக் முயன்று வருவதாக இரண்டு எண்ணெய் அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். ஈராக்கின் பெரும்பாலான மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் அதன் முக்கிய தெற்கு எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் உற்பத்தி 70% சரிந்து, ஒரு நாளைக்கு வெறும் 1.3 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது என்று மார்ச் 8 அன்று தகவல்கள் தெரிவித்தன. உலகளாவிய எண்ணெயில் சுமார் 20% கடந்து செல்லும் முக்கிய ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதே இதற்குக் காரணம். இதேவேளை, இஸ்ரேலிய தாக்குதலில் தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கிய முதல் நாளிலிருந்து குறிவைக்கப்பட்ட மிக மூத்த தலைவர் இவரே ஆவார். இடைநிலை நாடுகள் தெரிவித்த பதற்றத்தைத் தணிக்கும் சலுகைகளை ஈரானின் புதிய உச்ச தலைவர் நிராகரித்துவிட்டதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி கூறினார். ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அங்குள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் கடற்கரையோர இடங்களைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் செவ்வாயன்று கூறியது. லாரிஜானியின் மரணம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய கடலோர நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல்கள், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன என்று சைனா ஃபியூச்சர்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் இரசாயனங்களுக்கான தலைமை ஆராய்ச்சியாளர் மிங்யு காவ் கூறியுள்ளார். மார்ச் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு 6.56 மில்லியன் பேரல்கள் அதிகரித்துள்ளதாக, செவ்வாயன்று வெளியான API புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. மார்ச் 13-ஆம் திகதி வரையிலான வாரத்தில், அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு சுமார் 380,000 பேரல்கள் அதிகரித்திருக்கும் என ரொய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2026/1468929
  25. ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் Mar 18, 2026 - 06:59 AM ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இராஜதந்திர தளம் ஒன்றின் மீது நேற்று (17) மீண்டும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அங்கு அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், தூதரக வளாகத்திற்கு அருகில் பலத்த வெடிப்புச் சத்தமும் கேட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmvd3ih40003356pla2h2uyu

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.