24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
வடக்கு கிழக்கில் போர் நடக்கும் பொழுது இந்த தமிழர்கள் சிங்கள பெயர்களை வைத்து தப்பிபிழைத்திருப்பார்கள் ....அப்ப துணிவில்லை இப்ப துணிவாக இந்தியாவுக்கு சொல்லுயினம் தாங்கள் அங்கிருந்து வந்தவையல் என்று ....அப்ப தான் இந்தியாவும் சிங்களவர்களும். தமிழர்கள் வந்தெறிகள் என பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்...
- Today
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
அனுரா அம்மானின் மூத்த அம்மான் (ரோகணா விஜய வீரா) வடகொரியாவுடன் நெருங்கிய உறவை பேணியவர் ..அவரின் புரட்சி வெற்றியடைந்திருந்தால் இன்று நாங்களும் வடகொரியாவுடன் சேர்ந்து ஈரானுக்கு உதவி செய்திருப்போம் ...புலம் பெயர்ந்தும் இருக்க மாட்டோம் Wijeweera also visited North Koreans in the country, who congratulated him.[2] He sent a JVP member to the Middle East to forge a link with the South Yemen National Liberation Front. The envoy returned with a letter from the government promising to ship weapons to the island if possible,[28] hinting at aid from South Yemen diplomats to the JVP. North Korea used revolutionary propaganda daily in newspapers; North Korean newspapers quoted Kim Il-Sung about the revolution, and the government of Sri Lanka was suspicious of the country's motives. JVP bases contained Juche literature distributed by the North Korean high commission in the country, which helped to develop the party. On 15 May 1971, 18 North Koreans affiliated with the JVP were arrested. Indian patrol boats deployed around the island stopped two North Korean vessels, capturing weapons, food parcels and literature; the vessels may have been headed to JVP-controlled territory to reinforce it against the Ceylonese army.[41][42][43] Aid may also have come through the Ceylon-North Korea Friendship Association, which had branches throughout the country.[44] அன்று நடந்ததும் அதே நிலா இன்று நடப்பதும்
-
பிள்ளைகள் வெளிநாட்டிலா?! மருத்துவர்கள் உரையாடல்
உண்மைகளை பேசும் வைத்தியர்களுக்கு நன்றி.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ட்ரம்ப், ஓவரா கெத்துக்காட்டி வெனிசுலா மாதிரி, அயத்துல்லா அலி கொமெய்னியை கொலை செய்தவுடன் போர் முடிந்துவிடுமென தப்புக்கணக்கு போட்டு வாங்கிக்கொண்டதுதான் மிச்சம். போர் முடிந்தவுடனேயோ, இவர்களின் பதவிக்காலம் முடிந்தவுடனேயோ இரண்டு சாத்தான்களையும் சிறையில் அடைத்து, சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையேல் சர்வதேச குற்றப்புலனாய்வு நீதிமன்றம் இவர்களை கைது செய்து தண்டிக்கவேண்டும். இந்த நெத்தன்யாகு, ட்ரம்ப் ஐ விட இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் முட்டாள்கள், போர் வெறி பிடித்தவர்கள்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஐ எஸ் டபிள்யூ அறிக்கையின்படி தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் (சாம்) 85% அதிகமான ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டன, தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் 60% -80% வரை அழிக்கப்பட்டுவிட்டது. போரின் முதல் நாளிண் ஏவுகணைத்தாக்குதல் 90% ஆக குறைந்துள்ளதாக ஐ எஸ் டபிள்யூ அறிக்கை கூறுகிறது, இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில நாள்களில் ஈரானின் பதில் தாக்குதல் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். இவ்வாறான நிலையில் ஒரு தரைத்தாக்குதல் எதற்காக? புஸ்ஸர் பகுதியில் அமைந்திருந்த இரஸ்சியாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது (இரஸ்சியாவிற்கான எச்சரிக்கை என கூறுகிறார்கள்), செறிவூட்டப்பட்ட யுரேனியத்தினை கைபற்றுவதனை விட அதனை அழிப்பது இலகுவாக இருக்கும் என கருதுகிறேன், ஏவுகணைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது (குறிப்பிட்ட தகவலினடிப்படையில்) யுறேனியத்தினை அழிப்பதற்கு தரை நடவடிக்கை தேவையில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு தரைப்படை நடவடிக்கை தேவையாக இருக்கும் என கருதுகிறேன் (அதற்கு ஒரு சிறிய தற்கொலை நடவடிக்கை சாதியமில்லை). ஆனால் இந்த அறிக்கைகள் எந்தளவிற்கு சரியாக இருக்கும் என தெரியவில்லை, ஆரம்பத்தில் ஈரான் பாவித்த ஏவுகணைகள் பழைய ஏவுகணைகள் அவற்றை செலுத்தும் செலுத்திகள் புதிய ஏவுகணைகளுக்கு பயன்படுத்த முடியாது என கூறுகிறார்கள், அதனால் புதிய ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை செலுத்திகள் இன்னமும் ஈரானிடம் இருக்கலாம். ஒரு நாட்டின் பலத்தினை இரண்டாக வகுக்கிறார்கள்; Military power, latent power. இராணுவ பலத்தில்; பொருள்சார் பலம், பொருள் சாரா பலம் என இரண்டாக வகுக்கிறார்கள், ஈரானின் புலப்படாத பலமாக பல விடயங்கள் அதற்கு துணை செய்கின்றது, பொருள்சாரா பலத்தில் நேரம் மிக முக்கியமாக அமெரிக்க இஸ்ரேல் கூட்டணிக்கெதிராக இருக்கின்றது அது ஒரு கையறு நிலையினை எதிர்காலத்தில் தோற்றுவிக்கலாம் எனும் அச்சத்திலும் இந்த தரை தாக்குதல் செய்ய முற்படலாம், அதனை அவர்கள் செய்தால் ஈரானின் திட்டத்திற்கு ள் மாட்டிக்கொள்ளக்கூடும். தரைத்தாக்குதல் நோக்கம் தெரியவில்லை, ஆனால் மேலும் மேலும் சிக்கல் நிலை தோன்றலாம். தரைத்தாக்குதலுக்கான சாத்திய கூறுகள் மிக மிக குறைவாகவே உள்ளதாகவே தற்போதும் கருதுகிறேன்.
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
பெண்கள் சத்தமில்லாமல் நேர்த்தி வைத்துவிட்டு சமயம் வரும்போது கழுத்தில் தொங்குவார்கள்.
-
இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம்
இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு வாய்த்த சிறந்த ஆங்கிலப் பேராசிரியர் சிலர் ஆங்கில இலக்கியக் காட்சியையோ கவிதையையோ உணர்வுபூர்வமாய் நம் அகக்கண்ணில் நிறுத்தும்போது (அத்தகையோர் வாய்க்கப் பெறுதல் நமக்கான வரம்), நான் ஓரளவு ரசித்தது என்னவோ உண்மைதான். இருப்பினும் என்னை மெய் மறக்கச் செய்யும் தமிழின் இலக்கியச்சுவை அதில் தோன்றுவதில்லையே என்று குறைப்பட்டுக் கொள்வதுண்டு. வலுக்கட்டாயமாக ஏதோ உணர்வைக் கடத்த ஆங்கிலப் பேராசிரியர் தம் உடலை வருத்தி ஏன் இவ்வளவு மெனக்கிடுகிறார் என்றெல்லாம் நினைத்தது உண்டு. அந்த வயதில் தேவையில்லாத, பொருத்தமில்லாத ஒப்பீட்டினால் என் மனதில் அக்குறை தோன்றியது என உணர வயது தேவைப்படுகிறது. வயதாவதின் மேன்மையை வயது ஆகியே உணர்த்துகிறது. பல்லாயிரமாண்டு மூத்த ஒரு மொழியுடன் இன்றைய வடிவத்திற்கு வந்து சுமார் ஐநூறு வருடங்களே ஆன ஒரு மொழியை ஒப்பீடு செய்வது வேடிக்கைதானே ! மடமையும் கூட. ஆயினும் நமது அக இலக்கியங்களில் வாய்க்கும் உள்ளுறை உவமம், இறைச்சி போல அவர்களிடமும் அருமையான மொழியாட்சி ஓரளவு உண்டு என்பதை ஏற்கத்தான் வேண்டும்; ஏற்று ரசிக்கத்தான் வேண்டும். ஆங்கிலத்தின் இன்றைய வடிவமானாலும் இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளில் இருந்து தோன்றியமையின் அச்செம்மொழிகளின் கூறுகள் அமைந்து திகழ்வது இயல்புதானே !அவ்வகையில் என்னைக் கவர்ந்த அமெரிக்கக் கவிஞரான இராபர்ட் ஃப்ராஸ்ட் அவர்களின் கவிநயத்தை இங்கே தொட்டுக்காட்ட எண்ணம். மிகவும் எளிமையான வரிகளில் பாமரனுக்கும் பயனுள்ள செய்தியை உள்ளார்ந்த பொருளாய் இலாவகமாகச் சொல்லிச் செல்லும் நேர்த்தி அவருக்கே உரியது. அவர் சொல்ல வருகிற உயரிய சிந்தனை கவிதையில் ஓரிடத்தில் வந்து ஏனைய வரிகள் அதனை மேலும் வலுப்பெறச் செய்வதாகவோ அல்லது அழகியல் சார்ந்த வர்ணனையாகவோ இடம்பெறக் காணலாம். எனவே நம் ரசனைக்குத் தீனி போடும் கவிஞராக மட்டுமின்றி மானிடர்க்கு உயரிய வாழ்வியல் கருத்துகளை அள்ளித் தெளிக்கும் சமூகச் செயற்பாட்டாளராகவும் மிளிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட். சில இடங்களை எடுத்துக்காட்டலாம் என்று நினைக்கிறேன். முழுக்கவிதையையும் வாசகருக்கு விடுத்து மையச் செய்தியைக் கொண்டுள்ள வரிகளை மட்டும் நாம் கண்டு களிக்கலாமே ! முதலில், 1915 இல் வெளியிடப்பட்ட 'The Road not taken' (தேர்ந்தெடுக்காத பாதை) எனும் கவிதையைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வரிகள் கவிதையின் தொடக்கத்திலேயே வந்து கவிஞரின் சிந்தனைப் பாதையில் நம்மையும் இட்டுச் செல்கின்றன. "Two roads diverged in a yellow wood And sorry I could not travel both" என்று ஆரம்பித்து, "I took the one less traveled by And that has made all the difference" என்று கவிதை நிறைவுறுகிறது. "கானகத்தில் இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன; என்னால் இரண்டிலும் பயணிக்க முடியவில்லை" என்று வெள்ளந்தியாய்ச் சொல்லித் தொடங்குகிறது பாடல். கவிதையின் மையப் பொருளே இந்த இரு வரிகளில் சுருக்கமாகவும் உருவகமாகவும் வெளிப்படுகின்றது. கானகம் உலகமாகவும் பாதைகள் வாழ்க்கைப் பாதைகளாகவும் உருவகிக்கப் பெறுகின்றன. இடைப்பட்ட வரிகளிலிருந்து, அந்த இரு பாதைகளும் இலைகள் சொரிந்து பெரிய அளவில் வேறுபாடின்றி தென்பட்டன என்பது தெளிவு. வனத்தில் வழி சொல்வோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கத்தானே வேண்டும் ! இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாதே ! உட்பொருள் யாதெனில் வாழ்வில் நம்மால் தீர்மானிக்க முடியாத முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்தே ஆக வேண்டும் என்னும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம். நாம் எடுத்த முடிவு தவறாகவும் முடியலாம். அப்போது ஐயோ என்று நிலை குலைந்து போகாமல், "சென்றதினி மீளாது மூடரே! நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ண மதைத் திண்ணமுற இசைத்துத் தின்றுவிளையாடிக் கொண்டு இன்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா" என்ற பாரதியின் சொல் கேட்டு முன்னேறுவது சிறப்பு என்பதையே, "I could not travel both" என்பது சுட்டுகிறது எனலாம். ஏனெனில் அப்போது பாதையின் முடிவு தெளிவாய் இல்லாததால் எந்த முடிவும் தோல்வியை சந்தித்திருக்கலாமே ! மேலும் பாடலில் இறுதியாக வரும் இரண்டு வரிகள், "(இலை தழை அதிகம் கிடந்த) மக்கள் அதிகம் பயணிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே அனைத்து விளைவுகளுக்கும் காரணியாய் அமைந்தது" என்பதே. இதனை மக்கள் தத்தம் இயல்புக்கு ஏற்ப, அனுபவத்திற்கு ஏற்ப பொருள் கொள்ளலாம். வெற்றி பெற்றோர் தனி வழியைத் தேர்வு செய்து வெற்றி பெற்ற தம் தனித்தன்மையை மெச்சிக் கொள்ளலாம். தோல்வியுற்றோர் ஊரோடு ஒட்ட ஒழுகும் ஒப்புரவு இன்மையால் தம் தோல்வியை எண்ணி வருந்தலாம். ஆனாலும் விளைவை எண்ணி வருந்த வேண்டியதில்லை என்பதையே முதல் இரு வரிகள் சுட்டுவதை மறக்க வேண்டியதில்லை. காடு மஞ்சள் நிறத்தது என்பதை 'yellow wood' என்று பாடலின் முதல் வரியில் வாசிக்கிறோம். அது இலையுதிர் காலத்தைக் குறிப்பது. அஃதாவது கவிஞரின் வயது முதிர்ந்த நிலையை உருவகிப்பதாய்க் கொள்வது பாடலை ரசிப்போரின் உரிமை. இது போன்ற அழகியல் பொதுவாக இராபர்ட் ஃப்ராஸ்டின் அனைத்துப் பாடல்களிலும் காணக் கிடைப்பது. அடுத்து நம் நினைவுக்கு வருவது இராபர்ட் ஃப்ராஸ்டின் 'Stopping by Woods on a snowy evening' என்ற கவிதை. குறிப்பாக அதில் இறுதியாக வரும் வரிகள் : "The woods are lovely, dark and deep But I have promises to keep And miles to go before I sleep And miles to go before I sleep" பொருள் : "காடு மனதைக் கொள்ளை கொள்வதாகவும், இருள் கவிந்தும், ஆழ்நிலையொடும் அமையப்பெற்றுள்ளது. ஆனால் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. நான் அடங்கும் முன் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் உண்டு". உள்ளார்ந்த பொருள் : "வாழ்வில் என் மனம் கவர்ந்த பொருட்கள், செயல்கள் உண்டு. ஆனால் அவற்றில் முழுமையாக ஈடுபட்டுத் தன்னிலை மறந்து நான் வாழ முடியாது. ஏனெனில் (மனதிற்குப் பிடிக்கிறதோ இல்லையோ) வேறு கடமைகள் உலகியல் வாழ்வில் எனக்கு உண்டு. அக்கடமைப் பாதையில் நான் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதாவது அவற்றை நிறைவேற்ற எனக்கான கால வெளி குறைவாகவே உள்ளது". மேற்கூறிய கவிதைகளில் வாழ்வியல் தத்துவங்களை வேற்றுப்பொருளாய் வைத்த ஃபிராஸ்ட் தமது Fire and Ice என்ற குறுங்கவிதையை இயல்பு நவிற்சியாய்த் தாமே நேரிடையாய் சொல்லிச் செல்கிறார். "Some say the world will end in fire Some say in ice From what I've tasted of desire I hold with those who favor fire But if it had to perish twice I think I know enough of hate To know that for destruction Ice is also great And would suffice" "சிலர் இந்த பூமி நெருப்பில் அழியும் என்கின்றனர்; சிலர் பனியில் உறையும் என்கின்றனர். பேராசை எனும் தீயை உணர்ந்த நான் 'நெருப்பு' அணியினருடன் நிற்கிறேன். பூமி இருமுறை அழிய வேண்டுமெனில், வெறுப்பின் (அமைதியாய் அழிக்கும் தன்மை) உணர்ந்த நான் பனியின் ஆற்றலும் பெரிது என்பேன்; அழிவிற்கு அதுவே போதும் என்பேன்" என்பதே பாடற் பொருள். அஃதாவது பேராசை நெருப்பைப் போல் அதிதீவிரமாய் உலகை அழிக்கவல்லது என்பதும், வெறுப்பு பனியைப் போல் அமைதியாய் உள்ளிருந்து அழிக்கவல்லது என்பதும் கவிதையின் செய்தியாம். அடுத்து வரும் குறுங்கவிதை 'Dust of snow' (பனித் தூசி). "The way a crow Shook down on me The dust of snow From a hemlock tree Has given my heart A change of mood And saved some part Of a day I had rued" "ஒரு காகம் ஹெம்லாக் (hemlock) மரத்தில் தங்கிய பனித்துகள்களை என் மீது விழச் செய்ததானது, சோக மனநிலையில் நாளின் ஒரு பகுதியைப் பாழாக்கிய நான் எஞ்சிய நாளைக் காப்பாற்ற ஏதுவாகியது" என்று ஒரு சாதாரண நிகழ்வு துயரத்தை மாற்றியதைப் பகிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட். "இதுவும் கடந்து போம்" என்னும் நேர்மறை எண்ணத்தைத் துயருற்ற உள்ளத்தில் விதைத்துச் செல்கிறார் கவிஞர். வெறுமனே அறம் பேசுபவராக இல்லாமல் கவிஞராயும் உள்ளமையால், மேலும் ஒரு உட்பொருளைப் பொதிந்து வைக்கிறார். மேற்கத்திய உலகில் காகம் ஒரு ராசியற்ற பறவையாகவும் (இங்கு மட்டுமென்ன, சனியனின் வாகனமாய் வைத்தானே !), ஹெம்லாக் மரம் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாகவும் கொள்ளப்படுகின்றன. எதிர்மறையான பொருட்கள் கூட நமக்கு நேர்மைறையான பலன்களைத் தரலாம் என்று கவிதையின் வெளிப்பாடாகச் சுட்டுவர் கவியுலகில் சஞ்சரிப்போர். ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு பதமாய் ஃபிராஸ்டின் கவிநயம் பேசினோம். இனி வயிறார உண்டு மகிழ்வது வாசகர்தம் உரிமை. ஃபிராஸ்டின் பொன்மொழி ஒன்றைச் சொல்லி தற்போது கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம். "A diplomat is a man who always remembers a woman's birthday but never remembers her age". "ஒரு ராஜதந்திரி (சாதுரியமானவர், விவேகம் நிறைந்தவர் என்றெல்லாம் அடுக்கலாம்) என்பவர் யாரெனில், ஒரு பெண்ணின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு அவளது வயதை நினைவில் வைக்காதவர்" என்பது பொருள். பெண்ணின் பிறந்தநாள், வயது போன்றவை இங்கு வேற்றுப்பொருளாய் அமைவன. "மானிட உறவில், பிறரது தேவையான விவரங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை அல்லது பிறர்க்கு எக்கச்சக்கமான விவரங்களை மனதில் ஏற்றாத நிலையே விவேகம்" என்பதே கவிஞர் கூற வந்த பொதுப்பொருள். ஒரு கவிஞனின் கவித்துவம் கவிதையில் மட்டும்தான் வெளிப்படும் என்றில்லை. அவன் கவிதையாகவே வாழ்பவன் என்று காட்டியவர் இராபர்ட் ஃப்ராஸ்ட் எனக் கொண்டாடலாமே !
-
வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்
அது என்றால் உண்மைதான் சிறியர்.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
இவற்றில் கியூபா மட்டுமே (கஸ்ரோ மறைவுக்கு பின் பெயரளவில் மட்டும்) கம்யூனிச நாடாக உள்ளது. பேர்லின் சுவர் உடைந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன அண்ணை. கியூபாவில் ஜேர்மனிய ஓய்வூதியகாரர் சிலர் போய் வாழ்வதால் அது ஜேர்மனியை விட திறம் என்பதும் அபத்தமான கருத்து. முன்னர் சில வெள்ளையள் இலங்கைக்கு கொலிடே போய் வந்து, அன்பான மக்கள், அருமையான நாடு ஏந்தான் நீங்கள் சிங்களவரோடு சண்டை பிடிக்கிறீர்கள் என உளறுவார்கள். கொலிடே, பென்சன் எடுத்து போட்டு, வெளிநாட்டு காசை, வெளிநாட்டு பாஸ்போட்டோடு விசுக்கும் ஆட்களை வைத்து ஒரு நாட்டின் வாழ்க்கை தரத்தை எடை போட முடியாது.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
😂😂😂 சில அவதானிப்புகள். இந்த உலகில் வட கொரியா மட்டுமே கம்யூனிச நாடு. 1990 ற்கு பின் ரஸ்யா பக்கா முதலாளிதுவ நாடு. ஆங்கிலத்தில் hypocrisy என ஒரு சொல் உண்டு. தமிழில் அதை சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று அல்லது இரெட்டை நிலைப்பாடு என சொல்ல முடியும். நாம் ஒரு விடயத்தை சொன்னால் - அது சும்மா பம்பலுக்கு சொல்லும் கருத்தாக இருக்க கூடாது. உளப்பூர்வமாக அந்த கருத்தை நாம் நம்பி சொல்ல வேண்டும். நாமும் சொலவதன் படி நடக்க வேண்டும். வடகொரியா போல் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழ்வது, ஜேர்மனி போல் ஜனநாயக நாட்டில் வாழ்வதை விட மேலானது என்பது உங்கள் கருத்து. ஆனால் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு அதை சொல்வது இரெட்டை தன்மையானது. நான் மட்டும் அல்ல நீங்களும் இலங்கையர்தான். நீங்கள் ஏன் இலங்கை திரும்பவில்லை? ஜனநாயக குறை பாடு, கட்டுப்பாடு, சர்வாதிகாரம் உள்ள இலங்கையில் உங்கள் அரசியலை நீங்கள் இப்போ செய்வது போல் செய்தால், அல்லது நீங்கள் முன்னர் செய்த அரசியலால் உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதால். ஆகவே உங்களுக்கே ஒரு உச்சபட்ச ஜனநாயக நாட்டில்தான் பாதுகாப்பு, பேச்சுரிமை உத்தரவாதம் உள்ளது. இப்படி ஒரு நிலையில் நீங்கள் ஜனநாயக நாட்டை விட சர்வாதிகார நாட்டில் வாழ்வது திறம் என எழுதினால், அந்த இரெட்டை நிலைப்பாட்டை சுட்டி காட்டும் உரிமை இன்னொரு கருத்தாளருக்கு உள்ளது. இதன் அடிப்படையில் உங்களை ஒரு hypocrite என எழுதுவது தனிமனித தாக்குதல் அல்ல. உங்கள் இரெட்டை நிலைப்பாட்டுக்கு மேலதிகமாக, வடகொரியா, ரஸ்யா போன்ற நாடுகள் ஜனநாய நாடுகளை விட மேலானவவை என்ற உங்கள் கருத்து மிகவும் அபத்தமானது. இதையும் ரொம்ப மட்டமான, அபத்தமான கருத்து என சாடி எழுதும் உரிமை ஏனைய கருத்தாளருக்கு உள்ளது. இதில் ஏன் நிர்வாகத்தை இழுத்தீர்கள் என்பது விளங்கவில்லை. காரசாரமாக விவாதிப்பது என்பது நிர்வாகம் தலையிடும் வண்ணம் சக கருத்தாளரை தாக்குவதோ அல்லது ஏலும் எண்டால் எண்ட ஏரியாவுக்கு வா என சண்டிதனம் பண்ணுவதோ அல்ல. இதே திரியில் கூட காரசாரம், நக்கல், நையாண்டி எல்லாமும் விதிக்குட்பட்டு எடுத்தாளப்பட்டுள்ளதை காண்க.
- Yesterday
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
நான் பல திரிகளில் அவதானித்ததை இங்கே பகிர விரும்புகின்றேன். இது இந்த திரிக்கு சம்பந்தம் இல்லாது விட்டாலும்.... தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுத முயற்சிக்கின்றேன். நான் பல திரிகளில் ரஷ்யா போன்ற நாடுகளுக்காக ஆதரவாக என்பதை விட அவர்கள் பக்கம் இருக்கும் நியாத்தை பிரதிபலித்து எழுதுபவன்.அதே போல் மற்றவர்களுக்கும் நீதி,நேர்மை நியாயங்கள் இருக்கும். ஒருவர் தனது கருத்தை எழுதும் போது அதற்கு பதில் கருத்து எழுதிவது நியாயம். அதை விட்டு மாற்று கருத்து எழுதுபவரை விமர்ச்சித்து மட்டுமே இங்கே பலர் கருத்து எழுதுகின்றார்கள்.விமர்சிப்பவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் எழுதினால் தடைகளும் தண்டனைகளுமே மிச்சமாக வருகின்றது. சரி பிரச்சனைகளுக்கு வருவோம். நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதினால் ரஷ்யாவிற்கு போ எனும் பாணியில் எழுதுகின்றார்கள். இதே திரியிலும் அதே தொனி கருத்துக்கள் உள்ளது. மாற்றுக்கருத்தை எதிர் கொள்ள முடியவில்லையா? அல்லது இங்கே மாற்றுக்கருத்துக்கள் எழுதக்கூடாதா எனவும் தெரியவில்லை. ரஷ்ய பொருளாதாரத்தை தடை செய்ததின் விளைவுகளை ஐரோப்பிய நாடுகள் நன்றாக அனுபவிக்கின்றன. இதை நாங்கள் கண்கூடாகவே பார்க்கின்றோம். இதை ஐரோப்பிய மக்கள் நன்கு உணருகின்றனர். உலகம் அரசியலில் தங்கியிருப்பதில்லை. பொருளாதாரத்தில் மட்டுமே தங்கியுள்ளது. இதை உணராதவர்களே ரஷ்யாவிற்கு போ என்கிறார்கள். கம்யூனிசத்தை வெறுப்பவர்களே நீங்கள் வசிக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கு எத்தனை ஆயிரம் கொள்கலன்கள் கம்யூனிச நாடுகளில் இருந்து வந்து இறங்குகின்றன என கணக்கு பார்த்தீர்களா? ஜேர்மனிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ருமேனியாவிலும் பல்கேரியாவிலும் முக்கிய பொருட்களை தயாரிக்கின்றன. அதை விட ஜேர்மனிய ஓய்வூதியர்கள் ஏராளமானோர் பிரேசில்,கியூபா,பல்கேரியா,ருமேனியா போன்ற நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவுஸ்ரேலியா,கனடா,அமெரிக்கா,ஜேர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு கம்யூனிச நாடுகளுடன் இருக்கும் பொருளாதார உறவுகள் பற்றி தெரியாமல் உளறுவோர்களே. நான் எனது ரஷ்யா சார்பான சொந்த கருத்துக்களை சொல்ல ரஷ்யா செல்ல வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் நாடான ஸ்ரீலங்கா பற்றிய கருத்துக்களுக்கு சொந்த மண்ணிலேயே நிற்க வேண்டும். நான் விடும் பிழைகளை விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனென்றால் இது கருத்துக்களம்.
-
ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்
ட்ரம்ப், ஈரானை வெனிசுலா போன்றே நினைத்து மற்றைய நாடுகளை ஆச்சரியப்படுத்த நினைத்து தொடங்கியிருப்பார், அதைவிட, எல்லா நாடுகளும் தானாகவே தனக்கு ஆதரவு தருமெனவும் கனவு கண்டிருப்பார். ட்ரம்ப் மற்றைய நாடுகள் மீது தேவையற்ற வரிகளை சுமத்தி அவர்களை கடுப்பேற்றிவிட்டு உதவியை எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம். இப்போ சீனா, ஜப்பானை கெஞ்சவேண்டிய நிலைமை. "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல் இவ்வளவு காலமும் வல்லரசு கனவில் மிதந்த அமெரிக்காவுக்கு அவமானம். இனி வருங்காலத்தில் அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பவோ அல்லது தமது நாடுகளுக்குள் அனுமதிக்கவோ விரும்பாது. அமெரிக்காவின் படை பலமோ, அதிகாரமோ அவர்களை பாதுகாக்கவில்லை. மாறாக அமெரிக்காவை உள்நுழைத்ததன் விளைவை அது தனது சக்திக்கு மேல் சந்தித்துள்ளது. வருங்காலத்தில் வளைகுடா நாடுகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கூட்டாகசெயற்பட முயற்சிக்க வேண்டும்.
-
சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026
😂 ஓம் பழைய சர்வாதிகாரிகள் மற்றும் புதிய ஈரான் காமெனி வட கொரிய கிம் ஜொங்-உன் இவாகளை பார்த்து தான் இவருக்கு தானும் சர்வாதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை வந்திருக்கின்றது
-
உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் காலமானார்
சக் நோரிஸ் இறக்கவில்லை என ஒரு ஜேர்மனிய ஊடகம் தெரிவிக்கின்றது. உண்மை பொய் தெரியவில்லை. இருந்தாலும் சக் நோரிஸ்- புரூஷ்லி சண்டைக்காட்சி பிரசித்தி பெற்றவை. இலங்கையில் இந்த சண்டைக்காகவே பலர் வீடியோ காட்சிகள் பார்த்ததுண்டு. https://youtu.be/NtoVjRq0YIs?si=WX9xs-yLaM20A9TZ
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
அப்பிடி ஒரு மாற்றத்தை கொண்டுவந்தாலும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும் ஐயா....அது என்றும் மாறது. இது கற்காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து போர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சூரிய சக்தியிலும் சண்டை பிடிப்பார்கள்.😂 உவங்கள் எப்பிடி ,என்ன கோதாரிக்கு சண்டை பிடிச்சாலும் .... என்ர சோசல் காசிலை கை வைக்காத வரைக்கும் சந்தோசம்.😎😁
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
உங்கள் கருத்தும் தர்க்க ரீதியாகவே உள்ளது. தரையிறக்கம் மட்டுப்பட்டதாக இருக்கலாம் என்பதை நானும் ஏற்கிறேன். நிச்சயமாக ஈரானில் இவர்களுக்கு சாதகமானவர் பலர் இருக்கிறார்கள் என்பது தெளிவு. சதாமின் உள்ளக வட்டத்தை அவரை பிடிக்கும் வரை நெருங்கவில்லை, ஆனால் ஈரானில் கிட்டதட்ட உயர் பீடத்தை சொல்லி, சொல்லி அடிக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலை பொறுத்தவரை - ஈரானின் அணு ஆயுத வல்லமை, மிசைல் வல்லமையை உடைத்தால் போதும். அணு வல்லமை இப்போதே 20 வருடமாவது பின்னோக்கி தள்ளபட்டிருக்கும். செறிவாக்க பட்ட யுரேனியம் 450 கிலோவை மீட்டு விட்டால் - போதும். இந்த இலக்குகள் அடையபட்டால்- அதாவது ஈரானின் அணு, மிசைல் வல்லமை நீக்கப்பட்டால், அதன் பின் ஈரானில்: இஸ்ரேலுக்கு சார்பான அரசு அல்லது குழப்ப நிலை எது அமைந்தாலும் இஸ்ரேலுக்கு ஓக்கேதான். நேற்று ஒரு இஸ்ரேலி சொன்னார், we can live with chaos. We lived with chaos in Gaza, we lived with chaos in Lebanon, Syria, we can live with chaos in Iran too. ஆனால் ஸ்திரமான, எதிர்வினை காட்டும் ஈரான் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆபத்து. அதை நீக்கும் ஒரு மட்டுப்பட்ட தரை இறக்கத்தை இந்த முறை செய்யலாம். இப்படியான நகர்வுகளில் இஸ்ரேல் ஸ்பெசலிஸ்ட் என்பதையும், அமெரிக்கா போல் இஸ்ரேல் அகல கால்வைத்து மூக்குடைவது இல்லை என்பதையும் கூட கருத்தில் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். பிகு இங்கே யூடியூப் வீடியோ பகிர, அல்லது நிர்வாகத்தை குறை சொல்ல, குதர்கம் கதைக்க மட்டும் வரும் பூமர் அங்கிள் இதை வாசித்து விட்டு, எம்மை யாழ்கள இராணுவ ஆய்வாளர் என கிண்டல் செய்யலாம். இது ஆய்வு ஒண்டும் அல்ல, சந்தியில் குந்தி இருந்து முன்பு நீங்கள் பேய் கதை கதைத்தை இப்போ நாம் இணையத்தில் செய்கிறோம். அம்மட்டும்தான்😂
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
இந்த அமெரிக்க ஈரான்போர் உலக நடைமுறையில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரலாம். இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலைகள், இயந்திரங்களை இயக்குவதற்கு எண்ணைக்குப் பதிலாக வேறு மாற்றுவழிகளைத் தேடவும் முயற்சிக்கலாம். சூரிய ஒளியைப் பாவிக்கும் தொழில் நுட்பம் போன்றவை.🤩
-
வீதியோரம்.
ஒரு காலத்தில் எனது சும்மா கிறுக்கலே ஆயிரம் பார்வையாளர்களை கடந்து செல்லும்🤣 ..இன்று நூறு பார்வையாளர்களை எட்டுவதே கடினமாக உள்ளது...செய்திகளுக்கும் அதே நிலை தான்.. இன்று வட்சப்,யூடியுப்,முகபுத்தகம் போன்றவற்றில் பலர் (நான் உட்பட) நேரத்தை செல்வு செய்வதால் இங்கு எட்டி பார்ப்பது குறைந்து கொண்டு செல்லுகிறது .. யூடியுப் போடும் தலையங்கம் வேற கவர்ச்சியாக இருக்குது...அதிரடி,நொருங்கியது,டமால்,புளுடா,செய்த செயல்,😅
-
வீதியோரம்.
மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றிகள்
-
சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026
இடி அமீனும் அன்பான சரவாதிகாரி தானே!
-
RAW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன?
இந்தியாவில் உள்நாட்டில் நிலவும் மத குரோதத்திற்காக ஆர் எஸ் எஸ் அமைப்பினை சர்வதேச மத சுதந்திரத்திற்காக தடை விதிக்க கோருவது சரியாக இருந்தாலும் இந்திய உளவுத்துறையான றோவினை தடை செய்ய கோருவது அந்த லிஸ்டில் வராது போல உள்ளது அல்லது றோவிற்கு தடை விதிப்பதற்கு சாட்டாக RSS உடன் சேர்த்துள்ளார்களா?
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் தனது பலமாக நினைக்கும்நிறுத்தமுடியாத (Off switch) தொடர் தாக்குதலை நடத்தும் 31 மானிலங்களுக்கும் தனித்தனியான கட்டளை அமைப்பு கொண்ட மொசைக் பாதுகாப்பு உத்தியே அவர்களுக்கு பாதகமாக அமையலாம். இறங்கும் போதே பெருமளவான எதிர்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன், வான் மேலாதிக்கம், கடல் மேலாதிக்கம் அமெரிக்க துருப்புகளுக்கு உண்டு, இரஸ்சியாவின் கேர்க்ஸ் பிராந்தியத்தில் ஊடுருவல் தாக்குதலில் மேற்கினால் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவிணைந்த வேகமான முன்னேற்றம், ஈரானை நிலை குலைய செய்யும். தனித்தனி கட்டளைப்பீடங்கள் கொண்ட ஈரான் தற்காப்பு அணி மட்டுப்படுத்தப்பட்ட வளங்கல் மற்றும் தொடர்பாடல் இருப்பதால் அது அவர்களுக்கு சிக்கலாக இருக்கும். ஆனால் ஈரான் தரைத்தாக்குதலை மையமாக கொண்டு இந்த மொசைக் பாதுகாப்பு திட்டம் வரைந்திருந்தால் அவர்களின் திட்டம் ஒரு நீண்ட கெரில்லா யுத்தமாகவிருக்கும் என கருதுகிறேன். அமெரிக்க தரப்பு இறங்குவது பிரச்சினையாக இருக்காது என கருதுகிறேன் ஆனால் ஈரானின் மொசைக் திட்டம் வியட்நாமினை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கலாம். இது ஒரு தற்கொலை தாக்குதல் முயற்சியாகவும் இருக்கலாம், தமக்கு தேவையான எதிர்கால தரவுகளை திரட்டுவதற்காக ஒரு சிறிய அணியினை தரை இறக்கி ஈரானின் தனித்தனி கட்டளைப்பீடங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என உண்மையான தரவு திரட்டும் முயற்சியாக இருக்கலாம் (இவ்வளவு வந்தாயிற்கு அதனையும் செய்துவிட்டு கையினை தூக்கலாம் அதன் மூலம் எதிர்காலத்திற்கு தேவையான தரவுகளை திரட்டுவதற்கு என முயற்சிக்கலாம்).
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
தம்பர் அமெரிக்காவை ஈரானில் தரை இறக்க தயாராகிவிட்டார் என செய்திகள் வருகிறது. ஈராக்கில் இரெண்டு தரம், ஆப்கானிஸ்தானில் ஒரு தரம்- இறங்க முன் பல மாத ஆயத்தம் நடந்தது. தம்பர் இதை விரைவாக செய்கிறார். ஈராக் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு வெற்றியாகியது. தொடர்ந்து நிலைத்ததில்தான் தோல்வி. ஈரானில் இறங்கும் போதே பலத்த எதிர்ப்பு இருக்கும். ஈராக்கில் பிரிட்டன் கூடப்போனது. ஆப்கானிஸ்தானில் முழு நேட்டோவும் அவுஸ் போன்ற நாடுகளும் கூட போயின. இப்ப இஸ்ரேலோடு சேர்ந்து இறங்க போகினம். வியட்நாம் வெர்சன் 2.0?
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
https://www.reuters.com/business/energy/south-korea-considers-importing-russian-oil-naphtha-industry-ministry-says-2026-03-19/ தென் கொரியா, மீண்டும் இரஸ்சியாவிடம் எண்ணெய் மற்றும் நப்தா வாங்குவது பற்றி சிந்திப்பதாக கூறப்படுகிறது, நியுசவுத்வேல்ஸ் அரசு உள்ளூர் இரு ஆலைகளுக்கு மானியம் வழங்குவதாக பிரிமியர் கூறியதாக செய்தியில் கூறினார்கள் (காரோட்டும் பொது மேலோட்டமாக புரிந்து கொண்டது), சில இடங்களில் பெட்ரோல் விலை 2.47 வரை அதிகரித்துள்ளது (1.30 பவுண்ஸ்). விலை தளம்பல் பெரிதாக ஏற்படாது என கருதுகிறேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அப்படி ஒரு எண்ணமும் இல்லை. முன்பே சொன்னது போல் ஆதாரம் இல்லாமல் எவர் மீதும் பழி சொல்ல நான் தயாரும் இல்லை. ஆனால்… பொதுவில் திரட்டிய பணத்தை ஒருவர் தனிப்பட்ட சுக வாழ்வுக்கு பயன்படுத்துகிறார் என நான் சொன்னால்… பதிலாக நீங்கள் அவருக்கு பணம் கொடுக்கவில்லை, எனவே அதை பற்றி நீங்கள் கவலை படத்தேவையில்லை என எழுதுவதற்கும்…. இயக்கப்பணம் பற்றி நீங்கள் யாரும் கேட்க முடியாது, தலைவர் வரும் போது கணக்கு கொடுப்போம் என சொல்லியதற்கும் ஒரு வேறுபாடும் என்னால் காண முடியவில்லை. பொதுப்பணத்தை முறைகேடாக பாவிக்கிறார் சீமான் என்று நான் சொன்னதற்கு, நீங்கள் கூறிய பதில், நீ அந்த பொதுபணத்தில் பங்காளி இல்லை, எனவே உனக்கு கேள்வி கேட்க அருகைதை இல்லை என்பது. இந்த உங்கள் நிலைப்பாடு 2 வகையில் வெட்கக்கேடானது. பொதுப்பணத்தை நிர்வகிக்கும் போது உள்ள பொறுப்புகூறல் பற்றிய உங்கள் நிலைப்பாடு, ஏனைய சந்தேகங்களுக்கு வழிகோல கூடியது. பணம் இருந்தால்தான் கொடுக்க முடியும். ஆகவே கொடுத்தவனுக்கு மட்டுமே அரசியல் உரிமை கேள்வி கேட்கும் அதிகாரம் உள்ளது எனில். அது பணம் இல்லாதவன் ஊழலை கண்டும் மெளனியாக இருக்க வேண்டும் என சொல்லுவது ஆகும். இரெண்டுமே வெட்கி நிற்க வேண்டிய நிலைப்பாடு.