Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. அமிர்த கலசத்துடன் மோகினி - அத்திவரதர் - காஞ்சிபுரம் சாகாவரம் பெற நீங்கள் தயாரா .? இல்லை இவளின்ட அழகில் மயங்கிவிட்டீர்களா..? ரெல் மீ
  3. பையன பள்ளில சேர்த்தாச்சா..? எந்த காலேஜ்? என்ன வேலை? எவ்வளவு சம்பளம்? கல்யாணம் முடிச்சாச்சா? எத்தனை பசங்க? எத்தனை வீடு? எத்தனை பேர பசங்க? உடம்புக்கு என்ன ? பாடி எடுத்தாச்சா..? "அவ்வளவுதாங்க வாழ்க்கை.."
  4. Today
  5. இது எனக்குத் தெரியும் வயது இல்லை😀 நான் வீடியோவில் அதிகம் மினக்கெடவில்லை! அதுக்கு @sinnakuddy thasan தான் உதவி செய்யவேண்டும்!
  6. சாதாரணமாக மலிவான விமானச் சீட்டைத்தான் சாதாரணர்கள் எல்லோரும் தெரிவு செய்வது. கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமானத்தில் நேரே செல்வோம் என்று நூற்றைம்பது பவுண்டஸ்கள் அதிகம் கொடுத்து கொழும்பில் இறங்கியபோது விரைவில் வந்து சேர்ந்தாச்சு. இனிமேல் இதிலதான் வாறது என்று முடிவெடுத்து, திரும்ப வரும்போது மலசலகூடம் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடந்ததில் இனிமேல் அதில் போவதில்லை என்று முடிவெடுத்து ஒன்லைனில் தேடினால் எல்லாம் 700 பவுண்சுக்கு மேலே காட்ட, “ஸ்கைவிங்ஸ்” மூலம் கடவுச்சீட்டைப் பதிவு செய்து ஐப்பசி மாதம் பதினெட்டாம் திகதி கட்டார் ஏயார்வேஸ் விமானத்தில் டோகா வழியாக இலங்கை போய் இறங்கியாச்சு. ஒரு கட்டுமான வேலைக்காகத்தான் முதலில் போக யோசித்தது. ஆனால் இம்முறை சரியான மழை என்று எல்லோரும் கதைத்ததனால் சரி தை மாதம் அளவில் செல்லலாம் என்று எண்ணியிருக்க, கணவரின் அண்ணன் அழைத்து கடைசி மகளுக்கு இன்னும் இரு மாதத்தில திருமணம் செய்துவைக்க இருக்கிறம். குடும்பத்தோட வாங்கோ என்றுவிட, நான் இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு வர ஏலாது. போக வெளிக்கிட்டனி இப்பவே போவன் என்று மனிசன் எனக்குக் கூற, எனக்கோ பெரிதாக விருப்பம் வரவில்லை. கணவரின் தமையன் மகளும் போன் எடுத்து சித்தி கட்டாயம் வாங்கோ என்று கூற மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறி போனை வைத்தபின் மனிசனை வீட்டில் விட்டுவிட்டுப் போகவும் மனமின்றி நீங்கள் தான் கட்டாயம் போகவேணுமப்பா, நீங்களும் வாங்கோ என்கிறேன். எமது வீட்டின் பின்னால் ஒரு மேலதிக அறையும் மலசலக்கூடமும் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதனால் தான் விட்டுவிட்டு வரமுடியாது. நீ மட்டும் போ என்கிறார். சரி என்று அங்கிருப்பவர்களுக்குக் கொண்டுபோவதற்கான சொக்லற்,பிஸ்கட் என வாங்கி அடுக்கி, எனக்கும் ஐந்தாறு மாதங்கள் நிற்பதற்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி நிரப்ப இரண்டு பெரிய பொதிகள் ஒவ்வொன்றும் 23 கிலோக்கள். கையில் கொண்டுபோவது ஏழு கிலோ என எல்லாம் நிரம்ப, “எப்ப பாத்தாலும் அள்ளி கொண்டு போய் தானதருமம் பண்ணு” என்று திட்டும் மனிசனைக் கணக்கெடுக்காமல் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து, செல்லும் நாளுக்காகக் காத்திருந்து யாழ்ப்பாணமும் போயாச்சு. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் குளிர், மழை, புயல் என்று ஓய, கார்த்திகை மாதக் கடைசியில் வீடு திருத்தும் வேலை ஆரம்பித்து அத்தனை பேருடன் மல்லுக்கட்டி ( அதை விபரமாக இன்னொரு பதிவில் போடுறன் ) இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மாசி மாதம் 15 போட்ட விமானச் சீட்டை பங்குனி 11 ற்கு வீணாக 70 பவுண்ட் கட்டி மாற்றிய பின் ஈரான் போர் தொடங்க என்ன செய்றது எந்த யோசனையும் ஓடிது. மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் வரவிருந்த கணவரும் கடவுச்சீட்டு மூன்று மாதங்களே இருந்த காரணத்தால் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுதான் சாட்டென்று வீட்டு வேலை முடிய கிளம்பி வா. இங்கை ஒரு அசுமாத்தமும் இல்லை என்கிறார். எனக்கு இன்னும் பயணத்துக்கு நான்கு வாரங்கள் இருக்க, மூன்று வாரங்களில் கிளம்பவேண்டும். வேலையை விரைவாக முடியுங்கள் என்கிறேன், இரு வாரங்களின் பின் எனக்குக் கடவுச் சீட்டை மாற்றித் தந்த ஸ்கை விங்ஸ் இலங்கை முகவருடன் தொடர்புகொண்டு என்ன நிலமை என்று கேட்க, அக்கா எனக்கு இன்னும் சொல்லத் தெரியேல்லை. எதுக்கும் 9 ம் திகதி உங்கள் விமானம் பற்றிக் கூறுகிறேன். மறக்காமல் எனக்கு போன் எடுங்கோ என்கிறார். மனதில் சிறு பயம் எட்டிப் பார்க்கிறது. கணவர் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் போகுமோ என்னும் யோசனையும் எழ மூத்த மகளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நீங்கள் போன் செய்ய முதலே நான் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். நேரில் வரும் விமானம் எல்லாம் 1500/ 2000 பவுண்டஸ் போடுகிறார்கள். டெல்லி வந்து துருக்கி போய் லண்டன் வர 800 பவுண்டஸ் டிக்கற் இருக்கு. புக் செய்யவோ என்கிறாள். வீணாக ஏன் அவ்வளவு காசு. எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பொறும் என்றுவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறேன். காசைப் பார்த்து போர் அதிகமானால் என்ன செய்வது? நான் தனிய இங்க மாட்டுப்படப் போறேனோ என்று யோசனையாகவும் இருக்க இரண்டாவது மகள் அழைக்கிறாள். கோவிட் நேரம் போல பொருட்கள் எல்லாம் கடைகளில் தட்டுப்பாடோ என்று கேட்க. யாரும் எதையும்பற்றிக் கவலை கொள்ளவில்லை. எல்லாம் சாதாரணமாகத்தான் போகுது. வீட்டுவேலைகள் முடிந்துவிட்டதா? என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் முடிப்பதாகச் சொல்கிறார் பொறுப்பானவர். பார்ப்போம் என்கிறேன். காசைப் பார்க்காதைங்கோ. நான் டிக்கற் போடுறன் என்றவளைத் தடுத்து எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பார்ப்போம் என்கிறேன். ஏழாம் எட்டாம் திகதிகளில் வேலையாட்களுடன் பொழுது போய்விட, இரவில் பிரையாணம் சரிவருமா என்ற குழப்பத்தில் தூக்கமே வரவில்லை. அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு கொழும்புக் கிளைக்குத் தொலைபேசியில் அழைத்தால் என்னுடன் பேசவேண்டியவர் தற்போது இல்லை. மதியம் இரண்டு முப்பதுக்குப் பின் போன் செய்யுங்கள் என்கின்றனர். அதுவரை காத்திருந்து போன் செய்தால் உங்கள் விமானம் 11 ம் திகதி ஓடாது அக்கா. இப்ப மூன்று நாட்களாக எதுவும் ஓடவில்லை என்கிறார். ஓடவில்லை என்றால் ஒடுற விமானமாப் பார்த்து நீங்கள் தான் டிக்கற் மாற்றிப் போட்டுத் தரவேணும் என்கிறேன். நான் பார்க்கிறன், பார்த்திட்டு இண்டைக்கு நான்கு மணிக்கு உங்களுக்கு போன் செய்யிறன். எதுக்கும் உங்கள் இலங்கை இலக்கத்தைத் தாங்கோ என்று கூற, நான் இப்ப கதைக்கிற இலக்கம் தான் என்கிறேன். ஒருக்காச் சொல்லுங்கோ அக்கா நான் எழுதிறன். இந்த போனில காட்டாது என்று கூற நான் இலக்கத்தைச் சொல்கிறேன். நேரம் நான்கு ஆகி நாலரை ஆன பின்னும் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்இரண்டு மூன்று தடவைகள் போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. விடாமல் பத்து நிமிட இடைவெளியில் ஒரு பத்துத் தடவையாவது போன் எடுத்தும் யாரும் எடுக்கவில்லை. அவர்களின் இலக்கம் சாதாரணமாது. அதனால் எந்த செய்தியையும் கூட அனுப்ப முடியாமல் டென்ஷன், கோபம் எல்லாம் எழ, கணவருக்குப் போன் செய்து விடையத்தைக் கூற அவர் வேலையில் நிற்பதாகவும் வேலை முடிய லண்டன் முகவரிடம் போய்க் கதைக்கிறேன் என்கிறார். இரவு பதினொரு மணிக்குக் கணவர் வற்சப்பில் வருகிறார். இந்தா உன்னோடை கதைக்கவேணுமாம் என்கிறார். நான் அவர்களுக்கு விபரத்தைக் கூறுகிறேன். என்னை போனில் வைத்துக்கொண்டே கொழும்புக்குப் போன் செய்கின்றனர். கஷ்டமருக்கு சரியான தகவல் சொல்ல வேணுமல்லா? நிறையத் தடவை போன் செய்தும் நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க அந்தப்பக்கம் ஏதோ சொல்கிறார். பதினொரு மணிவரை Office இல் நிக்கவேணும். வேறை அலுவல் பார்க்கப் போகக்கூடாது என்று திட்டிவிட்டு, அக்கா இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள உங்களுக்கு மெயில் போடுறம் என்றுவிட்டு கணவரிடம் போனைக் குடுக்க, அப்ப சரி பிறகு கதைக்கிறன் என்றுவிட்டு மனிசன் போனை நிறுத்த, எனக்கு முன்னர் இப்பிடித் திட்டுவதாக நடித்துவிட்டு என்ன செய்யப்போறாங்களோ என்ற யோசனை ஓட வேறு வழியின்றிக் கண்ணயர்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் கொழும்பு முகவர் எனக்கு 18ம் திகதிக்கு அதே டோகா வழியாக டிக்கட் போட்டு இது ஓகே என்றால் மெயில் செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார். அவரைப்பற்றி முறைப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு போன் செய்யவும் ஒரு மாதிரியாக கிடக்க, ஒன்பதரைக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கதைக்க, நீங்கள் அவரிடம்தான் கதைக்கவேண்டும். அவர் இன்று மூன்றரைக்குத்தான் வருவார் என்கிறா. வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் எத்தனை நாட்களில் முடித்துத் தருவீர்கள் தம்பி என்று பொறுப்பானவரைக் கேட்க இன்னும் ஒரு நாளில் உள் வேலை முடிந்துவிடும். அதுக்கு அடுத்தநாள் வெளிவேலை முடித்து உங்களிடம் திறப்புத் தாறன் அக்கா என்கிறார். அன்று பத்தாம் திகதி. 18 என்றால் கொழும்பு போக ஏழு நாட்கள் இருக்கு. இரண்டு நாளில் திறப்புத் தந்தால் ஒருநாள் சினிமாவுக்கும் போகலாம். திரியாய்ப் பாரைக் கருவாடும், மிச்சசொச்சச் சாமான்களும் வாங்கவும் நேரம் போதுமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டபடி மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அப்பப்ப அவர்கள் செய்யும் வேலைகளையும் கண்காணித்துவிட்டு மீன்காறருக்காகக் காத்திருக்கிறேன். பதினொரு மணிக்கு அவர் வர அவரிடம் பொரிப்பதற்கு நான்கு சிறிய மீன்களும் குழம்புக்கு ஒரு விளை மீனும் 700 ரூபாய்களுக்கு வாங்கி சுத்தம் செய்து வளவில் கிடந்த மரவள்ளியை இழுத்து அதிலும் ஒரு கறியை வைத்துவிட்டு நிமிர 12.30 ஆக சுடச் சுட உண்டபின் ஒருமணிநேரம் போனில் நாடகங்கள் ஓடஓடப் பார்த்துக்கொண்டிருக்க, வேலை செய்யும் எட்டுப் பேரும் கடையில் வாங்கிவந்த உணவுப்பொதிகளைத் திறக்க, சரி அவர்கள் உண்டு முடித்து ஓய்வெடுத்து மீண்டும் வேலை தொடங்க ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். நானும் ஒரு மணித்தியாலத்துக்கு அலாம் வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறேன். 2.30 இற்கு அலாம் அடிக்க எழுத்து உடனேயே கொழும்பு முகவருக்குப் போன் செய்ய, அவர் இன்னும் வரவில்லை ஒரு மணிநேரம் கழித்து எடுங்கள் என்கிறார் அந்தப் பெண் மீண்டும். ஒரு மணி நேரத்தில் பின் மீண்டும் அழைக்க அந்த ஆண் குரல் போலவே ஒருவர் கதைக்கிறார். ஆனால் வேறு பெயர் சொல்கிறார். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறாரா என்ற ஐயம் எழ, அவர் எங்கே என்கிறேன். அவர் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்குக் கட்டாயம் போன் செய்யச் சொல்கிறேன் என்கிறார். சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் போன் வருகிறது. என்ன தம்பி 18 விமானம் ஓடுமா? அல்லது சும்மாதான் டிக்கட் புக் செய்திருக்கா? உள்ளதைக் கூறுங்கள். என் மகளுக்கு 18 ம் திகதி சிவில் வெடிங்க் இருக்கு. நான் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அங்க நிக்கவேணும். தயவுசெய்து எனக்கு டிக்கட்டை மாத்தித் தாருங்கள் என்று அழுவாரைப்போல் சொல்கிறேன். அக்கா அவங்கள் எங்களுக்குத் தந்ததைத்தான் உங்களுக்குப் போட்டிருக்கிறம். “நீங்கள் இப்ப எங்க நிக்கிறியள்? கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா? “நான் யாழில்தான் நிக்கிறன்” “அப்ப உடனம் வெளிக்கிட்டு கொழும்பு வாங்க. இங்க வந்து கட்டார் ஏயாயர்வேஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றீர்கள் என்றால் அங்க மாத்திக் குடுக்கிறாங்கள் எண்டு சொல்லினம்” “சரி அப்ப இண்டைக்கே கிளம்புறன், நன்றி தம்பி” ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று கண்களை மூடி யோசித்தவுடன் முக்கியமான வேலைகள் முடிந்திட்டுது. இங்க நிக்க நிக்க பிரச்சனை கூடினாலும். கிளம்புவதே நல்லது என்று முடிவெடுத்து பொறுப்பான பெடியனுக்கு போன் செய்ய அவரும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்கிறார். பின்னர் இரவு கொழும்பு செல்லும் வான்களுக்கு அடித்து ஒரு இடம் தருமாறு கேட்க, இரவு எழு மணிக்கு ஒரு வான் வெளிக்கிடுவதாகக் கூற சரி என்றுவிட்டு உடனேயே அறைக்குச் சென்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு எனது மிச்சக் கறிகள், மற்றும் அனைத்து உணவுப் பொருட்களையும் வீட்டின் மாற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு,எனது சமையல் உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி கடப்பாரை, அலவாங்கு என்பவற்றையும் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அனைத்துக் கதவுகள் யன்னல்களையும் மூடித் திறப்பெடுக்க பொறுப்பானவர் வருகிறார். அவரிடம் முன் கதவுத் திறப்பைக் கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் கணவரின் தங்கையிடம் திறப்பைக் கொடுக்குமாறு கூறிவிட்டு பிக்மீ மூலம் ஓட்டோவை வரவழைத்து வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டில் நின்ற உடையுடன் ஓட்டோவில் ஏறி அமர கண்களில் நீர் முட்டுகிறது. ஐந்து மாதங்கள் சும்மா நின்ற என்னை விதி இப்படி ஓட விடுகிறதே என எண்ணியபடி இணுவிலுக்கு சித்தி வீட்டுக்குக் கிளம்புறேன். போகும் வழியில் கணவரின் தங்கைக்கு விபரத்தைக் கூறி இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவேன். திரித்து வைத்த அரிசிமா, மிளகாய்த்தூள், குரக்கன, கோப்பித்தூள் என்பவற்றை சித்தி வீட்டுக்குக் கொண்டுவரும்படி கூறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் தான் சித்தி இருக்கிறார். வயதானவர். அங்குதான் நான் போய் இறங்குவது. எனது பயணப் பொதிகளும் அங்குதான் வைத்திருந்தேன். போய் இறங்கியவுடன் சித்தியிடம் விடையத்தைக் கூறிவிட்டு சூட்கேசைத் திறந்து பிள்ளைகளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் எடுத்து வைக்க நிரம்பிவிடுகிறது. திரும்பிப் போகும்போது போடவேண்டிய குளிராடைகள், காலனி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு நிறுத்துப் பார்க்க 23 kg காட்ட அதைப் பூட்டி வைத்துவிட்டு அடுத்ததைத் திறக்க மச்சாள் உணவுப்பொதிகளுடன் வந்து சேர அதையும் வைத்துவிட்டு நிறுக்க அது 23.6 என்று காட்ட, அட இனி வேறு எதுவுமே வைக்க முடியாதே என்றபடி கையில் கொண்டு போகும் சிறியதை எடுத்து முக்கியமான ஆவணங்கள் சில ஆடைகள் துவாய்கள், எண்டு அடுக்க அதுவும் ஏழு கிலோ எனக் காட்டுது. இனிமேல் உந்த அரிசிமா, மிளகாய்த்தூள் எதுவும் கொண்டுபோவதில்லை என எண்ணியபடி நேரத்தைப்பார்க்க மாலை ஆறு மணி என்கிறது மணிக்கூடு, இன்னும் ஒருமணிநேரம் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போவதுதான் நல்லது என எண்ணி மச்சாளிடம் சொல்ல அவர் கொண்டுவந்த இடியப்பத்தைத் தருகிறார். இடியாப்பம் உண்டபடியே சித்தி மற்றும் கேள்விப்பட்டு வந்த முன்வீட்டு அக்கா ஆகியோருடன் கதைத்துக்கொண்டிருக்க வான்காரர் இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக போன் செய்கிறார். அப்பதான் எனது ஸ்கூட்டி அங்கு வெளிப் விறாந்தையில் நிற்பது தெரிய எப்படி அதை உள்ளே தூக்கி விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்க, என் ஒன்றுவிட்ட அண்ணா ஓட்டோ ஒன்றில் வந்து இறங்குகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கூட்டியை உள்ளே தூக்கி வைத்த சிறிது நேரத்தில் வானும் வர உடை மாற்ற மறந்துவிட்டது அப்போதுதான் நினைவில் வருகிறது. எல்லாவற்றையும் வைத்துப் பூட்டிவிட்டேன். திரும்பத் திறந்து எடுக்க நேரம் போய்விடும். ஒரு பிஜாமாவும் முழுக் கைச் சட்டையும் போட்டிருந்ததானால் அப்படியே போவோம். இரவுப் பயணம் தானே என முடிவெடுத்து காலணியை அணிய வான் வந்து நிற்கவும் சரியாகிறது. ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் எனக்கு இடம் கிடைக்க ஜன்னலில் தலையணையை சாய்த்து வைத்துவிட்டு தூங்க முயல, அப்பதான் கொழும்பில் தங்குவதற்கான ஒழுங்கை இன்னும் செய்யவில்லை என்கிற நினைவு வருகிறது. போனில் Hotel சிலதைத் தேடிப் பார்த்தால் அந்தஇரவு எதுவும் காலி இல்லை என்று காட்ட பயமும் எட்டிப் பார்க்க, தெரிந்த வான் ஓடும் ஊர் பெடியன் ஒருவருக்கு போன் செய்ய தான் தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறுகிறார். அரை மணி நேரம் செல்ல எல்லா கொட்டேலும் இடம் இல்லை என்கின்றனர். எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்டு இருக்கு. அது உங்களுக்கு சரிவருமா என்று தெரியவில்லை என்கிறார். எதுக்கும் அதை புக் செய்யுங்கோ. பிறகு நான் பார்க்கிறேன் என்கிறேன். அவர் தொலைபேசி இலக்கத்தைப் போட்டு எதுக்கும் நீங்களும் கதையுங்கோ என்றதும் நான் போன் செய்கிறேன். அட்டாச் டாய்லெட் பாத் இருக்கா, ஏசி இருக்கா என்று கேட்க எல்லாத்துக்கும் ஓம் என்கிறார். ஒரு நாளுக்கு நான்காயிரம் என்றதும் காலை 3.30 -4.00 இக்குள் வருவேன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். 3.45 இற்கு வான் என்னைக் கொண்டுபோய் இறக்க ஆளரவமற்ற இடத்தில் நிற்பது போல் இருக்க போன் செய்கிறேன் அவர் எடுக்கவில்லை. பதட்டமும் சேர எனக்கு புக் செய்தவருக்கு போன் செய்ய அவரும் உடனே எடுத்துக் கதைப்பதாகக் கூறி வைத்துவிட கொட்டாவி விட்டபடி ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார். வான்காரரும் அவருமாக எனது பொதிகளை இழுத்துவந்து முதலாம் மாடியில் அறைக்கு முன்னால் வைத்துவிட்டுச் செல்ல சசி என்பவர் கதவைத் திறக்கிறார். உள்ளே சென்று fan போட்டதும் காற்றோட்டம் இல்லாத அறை என்று மணம் சொல்ல டாய்லெட்டீன் உள்ளே சென்று பார்க்கிறேன். பரவாயில்லை என்று எண்ணியபடி திரும்ப பக்கத்திலும் ஒரு கதவு தெரிய குளியலறைதான் தனியாக இருக்கோ என்றபடி திறந்தால் அது இன்னொரு அறை. ஆனால் நல்ல வேளை யாரும் அங்கில்லை. உடனேயே என்ன தம்பி தனி அறை என்று சொன்னீர்கள். இரண்டு அறைகள் இருக்கு. என்னால் இங்கு தங்க முடியாது. வேறை அறை மாற்றுங்கள் என்கிறேன். இப்ப மாற்ற முடியாது அக்கா. அந்த அறையில் யாரும் இல்லை. அதன் திறப்பையும் பூட்டி உங்களிடமே தருகிறேன். நீங்கள் கொண்டியையும் போடுங்கள். யாரும் வர முடியாது என்கிறார். கணவரிடம் விபரம் கூற சரி நாளைக்கு வேற இடம் பாரான் என்றுவிட்டு அவரும் தூக்கக் கலக்கத்துடன் போனை வைக்கிறார். வானில் 7 மணிநேரம் இருந்து வந்ததில் முதுகு வலிவேறு. கொண்டுவந்த துவாயை தலையணைக்குமேல் விரித்துவிட்டு காலை 6.30 இற்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்ததுதான். இரண்டரை மணிநேரம் நல்ல தூக்கம். எழுந்து பல் துலக்கித் தோய்ந்துவிட்டு வெளியே வந்து தலைகாயவிட்டு நல்ல ஆடைகளை அணிந்தபடி அறையைப் பூட்டியபடி வெளியே வந்தால் யாரையுமே காணவில்லை. அந்த சசி என்பவருக்கு போன் செய்தால் அவரும் போனை எடுக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தால் அந்த கொட்டேலுக்குப் பெயரையும் காணவில்லை. நடந்து வெளியே வந்தால் ஒரு சிறிய வீதி தெரிகிறது. தொடர்ந்து நடக்க ஒரு பிரதான வீதி தெரிய வீதியில் போய் ஒருவரை நிறுத்தி ஏதும் உணவகம் இருக்கிறதா என்று கேட்க நேரே நடந்து போக ஒன்று வருவதாகக் கூற நடந்து செல்கிறேன். இப்போது எனக்கு இடம் கொஞ்சம் விளங்குகிறது. நான்கு மாதங்களின் முன்னர் விசா எடுப்பதற்காக வந்தபோது அதற்கு அண்மையில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இங்கு வந்து உணவு உண்டிருக்கிறேன். அங்கு சென்று தோசையும் சாம்பார் வடையும் உண்டு கோப்பியும் குடிக்க ஒரு உற்சாகம் வருகிறது. அங்கிருந்தவாறே ஒன்லைனில் கட்டார் ஏயார்வேஸ் முகவரியை எடுத்து பிக்மீ யில் போட்டுவிட்டு ஒரு ஓட்டோவின் இலக்கமும் ஓட்டுநரின் பெயருடன் 4 நிமிடங்களில் வருவதாகக் காட்ட வெளியே வந்து போகும் ஓட்டோக்களைப் பார்க்கிறேன். ஓட்டோக்காரரிடம் இருந்து போன் வர எடுத்துக் கதைக்க எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த உணவகத்துக்கு முன்தான் என்று கூற நானும் அங்குதான் நிற்கிறேன் என்றவர் எனக்கு அருகில் வருகிறார். ஓ நீங்கள் தானா என்றபடி அவருடன் சென்றால் அவரின் ஓட்டோ வேறு இலக்கம் காட்டுகிறது. இதில் நான் வரமுடியாது. என்னிடம் பிக்மீயில் வந்த இலக்கம் இதில்லை. என்றபடி நான் திரும்பிவர, பயமில்லை வாங்கோ என்று அவர் ஆங்கிலத்தில் கூற நான் மறுப்பாகத் தலையாட்டிவிட்டு பிக்மீயை கான்சல் செய்துவிட்டு புதிதாக ஒன்றைப் போட ஐந்து நிமிடங்களின் பின் இன்னொன்று வர அதில் ஏறி அமர்கிறேன். நேரம் எட்டேகால். அங்கு போவதற்கு முக்கால் மணிநேரம் காட்டுகிறது. ஒன்பதுக்குள் போய்விடலாம் என்று எண்ணினால் வீதியில் மெதுவாக நகர்கின்றன வாகனங்கள். 9.15 இற்கு World Trade Centre என்னும் கட்டடத்தின் முன்னால் ஓட்டோ நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே சென்றால் நூறுக்கும் அதிகமானவர்கள் Qatar Airways நிறுவனத்தின் முன்னால் நிற்கின்றனர். வரிசை ஒன்றும் இல்லையா என்று நின்றவர்களிடம் கேட்க, ஏற்கனவே நூறுவரை இலக்கங்கள் கொடுத்துவிட்டார்கள். எதுக்கும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் அங்கே ஓர் அறையில் இலக்கங்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்வி என்கிறார் ஒருவர், சென்று பார்த்தால் ஒரு அறையின் வெளியே பத்துப்பேர் நிற்க, எங்கே டோக்கிண் கொடுக்கிறார்கள் என்று கேட்க, நாங்களும் அதற்குத்தான் நிற்கிறோம். ஆனால் யாரும் டோக்கிண் கொடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார் இன்னொருவர். நான் அந்த அறையைப் பார்க்கலாமா என்று கேட்க ஓ போய்ப் பாருங்கள் என்கின்றனர். நான் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஐம்பது பேர்வரை கதிரைகளை நிறைத்திருக்க நிர்வாக அதிகாரிகளின் இடமோ வெறுமையாக இருக்க வெளியே வந்து இதுவரை இலக்கம் கொடுக்கப்படவில்லையா என்கிறேன். இல்லை என்று அவர்கள் தலையாட்ட இனி இதில் நின்று பயனில்லை என எண்ணி முன்பக்கமாக வர பதினோராம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. அங்கு கூடி நின்ற சிலரிடம் விபரங்களை அறியலாம் என்று கதைக்க, இருவர் யேர்மனியிலும் மற்றவர் மூவர் சுவீசிலும் ஒருவர் லண்டனிலிருந்தும் வந்தாகக் கூறுகின்றனர். அதில் இருவர் தான் காலை ஆறரையில் இருந்து வரிசையில் நின்று நம்பர் எடுத்ததாகக் கூற அவரின் இலக்கம் கேட்டால் 40 என்கிறார். மற்றவர் 17 மற்றும் 25 என்கின்றனர். அப்ப உங்கள் இலக்கம் என்ன என்று மற்றவரைக் கேட்க, நான் இவருடன் வந்தனான் என்கிறார். அப்ப இன்று நின்று பயன் இல்லை. காலை நான்கு மணி போல்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து களைத்துவிட்டேன். இனிப் போட்டு நாளை காலை 6 மணிக்கு வரவேண்டியதுதான் என்றபடி கிளம்ப எத்தனிக்க, சுவிசில் நின்று வந்த ஒருவர் “தங்கச்சி இவ்வளவு தூரம் வந்திட்டியள். போகாமல் தனிய நிற்கும் வேறு யாரையாவது சேர்ந்து போகக் கேட்டுப் பாருங்கோ என்கிறார். உங்களுக்கு யாரையும் தெரியுமா என்று கேட்க, நாங்கள் மூன்று பேர்தான் நம்பர் எடுத்தது. மற்றவை எங்களோட சேர்ந்து வர நிக்கினம். போய் ஆரையும் விசாரியுங்கோ என்கிறார். கேட்டு யாரும் மாட்டான் என்று சொன்னால் என்ன செய்யிறது என்று தயக்கமாகவும் இருக்க, இரு பெண்கள் நிற்பதைப் பார்த்து அவர்கள் அருகில் செல்கிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க கனடா செல்லவேண்டும். 48 ம் இலக்கம். மாலைதான் கூப்பிடுவினம் போல கிடக்கு என்கிறார் தாய். நான் என் விபரங்களைச் சொல்லி அங்கலாய்த்துவிட்டு நானும் உங்களோட உள்ளே வரலாமோ என்று கேட்க, மகள் வங்ககோ அன்ரி என்கிறா. அப்பாடா என்று மனம் நிம்மதியடைய வாயிலில் நிற்கும் பாதுகாப்பு அதிகாரி விடாது தடுத்தால் என்ன செய்வது என்று எண்ணியபடி முதலில் கதைத்த குழுவினரிடம் வந்து வாசலில நிற்பவர் இருவரை ஒன்றாக விடுவாரா என்ற சந்தேகத்தைக் கேட்க, வெள்ளையள் எல்லாம் அப்பிடித்தான் போயினம். உள்ளே இரண்டே இரண்டு கவுண்டர்கள் தான் இருக்கு. ஒவ்வொரு கவுன்டரிலும் இரண்டு கதிரைகள் போட்டிருக்கு. அதனால பிரச்சனை இல்லை என்கிறார். நேரம் 10.30 என்று காட்ட 17 ம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. உள்ளேயே பெரிய உணவகம் ஒன்று காணப்பட, அங்கு சென்று ஒரு Hot Chocolate வாங்கி அங்கிருந்தே குடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த இரு பெண்களின் அருகில் சென்று கதைத்துக்கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் செல்ல இன்னொரு இந்தியப் பெண் அருகில் வருகிறார். தான் இத்தாலியில் இருந்து வந்ததாகவும் இப்ப தான் உள்ளே வந்ததால் இலக்கம் கொடுத்துமுடித்துவிட்டார்கள் என்று தான் அறிந்ததாகவும் கூறி உங்களில் யாராவது ஒருவர் என்னையும் சேர்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்க, நாங்கள் மூவரும் சேர்ந்து போகிறோம் என்கிறா மகள். அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் நகர உங்கள் அம்மாவும் கனடா வருக்கிறாரா என்று கேட்க இல்லை என்று அவர் சொன்னதான் பின் தான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். மீண்டும் அலுவலக வாசலில் நிறு உள்ளே பார்க்க அவர்கள் ஆடிப்பாடி வேலை செய்வதுபோல் தெரிய, இப்பிடி அவசரமான நேரத்திலையாவது அதிகமான வேலையாட்களைப் போட்டால் என்ன. இவர்கள் இருவரும் எத்தனை மணிக்குப் பார்த்து முடிக்கப் போகிறார்களோ என்கிறேன். உள்ளே இருந்து வாயிற்காப்பாளர் வர எத்தனையாம் இலக்கம் போயிருக்கு என்று கேட்க 19 என்கிறார். உள்ளே நடப்பது ஏதும் விளங்காதுவிட்டாலும் சும்மா பார்த்துக்கொண்டே நிற்கிறேன். மூன்று வெள்ளையர்கள் வந்து வாயிலில் நிற்பவரிடம் டிக்கற் மாற்றவேண்டும் என்கின்றனர். வாருங்கள் என அழைத்துக்கொண்டு நான் போய் வந்த பின்பக்க அறைக்குக் கூடிக்கொண்டு போக, நானும் அவர்களுடன் போவோமா என்னும் எண்ணம் ஒரு நொடி எழுந்தாலும் உள்ளதும் கெட்டுவிடும் என எண்ணியபடி வாசலுக்குத் தள்ளிப் போய் நிற்க ஒரு பெடியன் எனக்கு அருகில் வந்து நிற்கிறார். நான் அவரைத் திரும்பிப் பார்க்க அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு நிற்க, உன் இலக்கம் என்ன என்கிறேன். 38 என்றவர் உன் இலக்கம் என்ன என்கிறார். நான் காலையில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன். இலக்கம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு இலக்கத்தில் இரண்டு மூன்று பேர் கூடப் போகிறார்கள். நீ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்க, அதனால் என்ன என்னுடன் வா என்கிறார். எனக்கு மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது நிற்கிறேன். நேரம் 12 என்று தொலைபேசி நேரம் காட்ட அதை மூடி வைத்துவிட்டுத் திரும்பினால் என்னருகில் அந்தப் பெடியனைக் காணவில்லை. நான் மீண்டும் போய் அந்தப் பெண்கள் இருவருடனும் கதைத்துக்கொண்டு நிற்கிறேன், ஆனால் அந்தப் பெடியிடம் சேர்ந்து போகக் கேட்ட விடயத்தை மட்டும் சொல்லவில்லை. நீண்ட நேரம் நின்றதில் கால்கள் வலியெடுக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நீர் பூப்போல் தூவிக்கொண்டிருக்க சுற்றிலும் கட்டியுள்ள கட்டில் பலரும் இருந்துகொண்டிருக்க நானும் அதில் சென்று அமர இரு யேர்மன் நாட்டினர் வந்து எனக்கு அருகில் அமர்கின்றனர். தாங்கள் நேற்றும் வந்ததாகவும் நேரம் போய்விட்டதனால் இன்று வரச்சொன்னதாகக் கூறுகின்றனர். அரைமணி நேரத்தில் அவர்கள் எழுந்து சென்றுவிட அந்தத் தாயும் மகளும் என்னருகில் வந்து அமர்கின்றனர். நீங்கள் ஏதும் சாப்பிட்டீர்களா? என்கிறேன். நாங்கள் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். சிறிது நேரத்துக்கு முன்தான் உந்த உணவகத்துக்குச் சென்று கோப்பி குடித்துவிட்டு வருகிறோம். நீங்கள் எதுவும் சாப்பிட்டீர்களா என்று கேட்க, பசிக்கிறமாதிரி இருக்கு என்கிறேன். அப்ப போய் சாப்பிட்டுவிட்டு வாங்கோ. இன்னும் நிறைய நேரம் இருக்கே என்கின்றார் மகள். நானும் சென்று பார்த்தால் மரக்கறி உணவுகள், மச்ச மாமிச உணவுகள் என்று அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால் எதையும் சாப்பிடலாம் போல் இருக்க, எதுக்கும் மரக்கறி உணவையே உண்போம் என்று சிவப்பு அரிசிச் சோறு மற்றும் ஐந்து கறிகளுடன் தண்ணீர் போத்தல் மற்றும் புடிங் என்று எடுக்க 900 இலங்கை ரூபாய்கள் தான். ஆற அமர இருந்து உண்டு முடித்துவிட்டு வெளிவந்து நிறுவன முகப்புக்கு வந்தால் அந்தப் பெடியன் நிக்கிறார். நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்க சாப்பிட்டு சிகரற்றும் பற்றிவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். அப்பதான் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க இற்றாலி என்றவர் நீ எங்கே என்கிறார். நான் யூகே என்றதும் நீ தமிழ் கதைப்பாயா என்கிறேன். எனக்கு சிங்களமும் ஆங்கிமும் மட்டும்தான் என்றவுடன், வாயிற் காப்பாளர் ஏதும் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவாரோ என்ற பயம் எழ, உன் பெயர் என்ன என்கிறேன், ஆண்டனி என்றவுடன் நான் நிவேதா என்கிறேன். என் கையைப் பிடித்துக் குலுக்கியபடி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றபின் அவரைப் பற்றிய வேலை வசிப்பிடம் என்பவற்றைக் கேட்டு அறிகிறேன். நாம் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் இன்னொருவர் வருகிறார். அவரை இலங்கையரா அல்லது ஆபிரிக்க நாட்டவரா என்று அடையாளங்கான முடியவில்லை. உங்கள் இலக்கம் என்ன என்று கேட்க 38 என்கிறேன். நான் இப்பதான் வருகிறேன். என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா என்றதற்கு நான் திகைப்புடன் பார்க்க ஆண்டனி நானும் இவவும் சேர்ந்து போகிறோம். உள்ளே மூன்றுபேரை விடுவார்கள் என்றால் நீயும் வரலாம் என்கிறார். என்னடா இது நானே ஒட்டிக்கொண்டு போக இவர் வேறு எல்லாவற்றையும் கெடுக்கப் போகிறார்போல என மனதில் எண்ணியபடி பேசாமல் இருக்கிறேன். 31 ம் இலக்கத்தைக் கூப்பிட இன்னும் ஏழுதான் என மனம் குதூகலிக்கிறது.
  7. நிவாரணம் என்றால் இருக்கிறவனும் வரிசை கட்டுற கலாச்சாரம் வந்த பின்னர் சொந்தங்களிடம் உரிமையாக அப்பிள் ஐபோன் கேட்பதில் என்ன தயக்கம் வரப்போகின்றது? கேட்டதை கொடுக்காவிட்டால், உங்களுக்குத்தான் எதிர்பாராத இடங்களில் இருந்தும் அழுத்தம் வரும்😁
  8. அது நான் திருத்தியது இல்லை! AI பாடல்வரிகளாக மாற்றித் தந்தது! “சிமிட்டக் கண்டேன்”😘 என்பது மட்டும்தான் எனது சொந்த வரி😂🤣 படங்களை யாழில் இணைப்பது இலகு. சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மெனு (Menu) க்குப் போய் Gallery ஐ தெரிவு செய்து Add Images (வலது பக்க மேல் பகுதியில்) ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.
  9. அமெரிக்காவை இன்னும் முழுசா ஈரானில் இறக்கி விட்டு, தாய்வானை பொருளாதார முற்றுகைக்கு கொண்டு வரும், வேறு வழியில்லாமல் கொங்ஹொங் போல ஒரு ஒப்பந்ததுக்கு தாய்வான் போக வேண்டி வரலாம் என்கிறனர் சிலர். அதே. நிரந்த நட்பு சக்கியாக இருந்த ஈழ தமிழரை இனியாவது இந்திய வெளிநாட்டு, இராஜதந்திர கொள்கை வகுப்பவர்கள் நேர்மையோடு அணுகாவிட்டால், அருனாச்சல பிரதேசம் மட்டும் அல்ல, தமிழ் நாட்டிலும் சீன ஆதிக்கம் எகிறும்.
  10. லப்டுப சத்யப்பிராமாணம், லவடி இடவெளிக்குள் இட்டு நிர்ப்ப ஒத்குழைப்பு ஒப்பிவிக்கு முறை அருவமும் உருவமாகி, சிறிமாவுக்கு மீசை முளைத்தால் என் சித்தப்பு , அது உங்களுக்கு பிரியாதூ என் ஏன்ராலுமு உங்கள் அரிவு ஆறை கூரை ஆனால் நான் கிண்டுவதுதான் கிரிபத், ஏன் எறால் பொட்டு அம்மான் சுறா பிடிக்க முடியாது, விஜை படம், திர்ஷா மாமி சுடுவது அப்பளம். அமச்சரவையில் என் மாமா கூஜா ஆனால் நான் பட்டியல் போடமுடியாது, பூஜா பட் சொல்லுவார் பூனம் பாஜ்வா என்று, அது பஜாஜ் சொல்ல விரும்பாத இராணுவ ரகசியம்.
  11. இதாலதான் ஊரும் வெறுத்து போச்சு... உறவும் வெறுத்து போச்சு..உங்கள் பணி தொடரட்டும் அய்யா.🤭
  12. நான் புரிவதற்கு இலகுவாக எழுதியிருக்கின்றேன் என்றல்லவா நினைத்தேன்🤣 உண்மையில் பாடல் வரிகளையும், பாடலையும் உருவாக்குவது இலகு. ஆனால் சொற்களில் சமரசம் வேண்டும். அதனை Gemini Pro போன்ற AI tools களிடமே கேட்டால் மாற்றித் தரும். பொருத்தமானதா இல்லையா என்பதை நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.😇
  13. முதலாவது வீடியோவும் திருத்திய கவிதையும் ஓகே. ஒரே காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் சலிப்பாக இருக்கு. எனக்கும் AI மூலம் என் கதைகளுக்குப் படங்கள் கீறவேண்டும் என்று எண்ணினாலும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனாலும் நீங்கள் விளக்கமாக எழுதியுள்ளமைக்குப் பாராட்டு. ஆனாலும் காமமும் காதலும் இல்லாமல் யாழில் பல ஆண் ஆளுமைகளுக்கு எழுத முடியவில்லையே என்றுதான் தெரிகிறது.
  14. மேற்காசியப் போர்: தமிழ்மக்களின் நிலைப்பாடு ? - நிலாந்தன் 1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக்குக்கு எதிராக முன்னெடுத்தன. 42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படை நடவடிக்கையின் ராணுவ இலக்கு குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கியப் படைகளை அங்கிருந்து அகற்றுவது. இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில், புவியியல் துறையில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்திய புவியியல் துறையைச் சேர்ந்த புலமையாளர் தனது ஆய்வுரையில் “மத்திய கிழக்கு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அப்பொழுது அங்கே பார்வையாளராக வந்திருந்த பௌதீகவியல் துறையைச் சேர்ந்த ஒரு புலமையாளர் உரை நிகழ்த்தியவரிடம் கேட்டார், “ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கிறீர்கள்? அது எங்களுக்கு மத்தியகிழக்கு இல்லைத்தானே? அப்படியென்றால் நீங்கள் எங்க நின்று கதைக்கிறீர்கள்? இங்க இருந்தா ? அல்லது ஐரோப்பாவிலிருந்தா ? என்று. அந்தக் கேள்வி ஆழமானது. மத்தியகிழக்கு என்பது பிரித்தானிய குடியேற்றவாத காலத்தில் குடியேற்றவாத நோக்குநிலையில் இருந்து பிரித்தானிய குடியேற்றவாத அதிகாரி ஒருவரால் 1850ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. பிரித்தானியாவின் நோக்குநிலையில் இருந்து கிழக்கை அவர்கள் தூர கிழக்கு(far East) அண்மை கிழக்கு(near east) மத்திய கிழக்கு (Middle East) என்று பிரித்தார்கள். பின்னர் அந்த வார்த்தை அமெரிக்கரும் கடல்சார் மூலோபாய ஆராய்ச்சியாளருமாகிய அல்பிரட் தாயர் மாகன் என்பவரால் ஆய்வு நோக்கு நிலையில் இருந்து(1902இல்) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து இந்த வார்த்தை பரவலாக உபயோகிக்கப்படுகிறது. ஆனால் அது பிரித்தானிய “கொலோனியல் நோக்கு நிலையில்”-குடியேற்றவாத நோக்கு நிலையில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்பதனால் அதை நிராகரித்து இந்தியாவின் முதலாவது பிரதமர் ஆகிய ஜவஹர்லால் நேரு மேற்காசியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஆசிய நோக்கு நிலையிலிருந்து அது ஆசியாவின் மேற்கே காணப்படுவதனால் அவ்வாறு அவர் அழைத்தார். எனவே அதை மத்திய கிழக்கு என்று அழைப்பதா அல்லது மேற்காசியா என்று அழைப்பதா என்பது அரசறிவியல் ஒழுக்கத்தின்படி எந்த மையத்திலிருந்து அந்தப் பிராந்தியத்தை நாங்கள் நோக்குகிறோம் என்பதைக் குறிக்கும். ஆனால் அதற்காக இப்பொழுது மேற்கு ஆசியாவை மத்திய கிழக்கு என்று அழைக்கும் ஆசியர்கள் இப்பொழுதும் “கொலோனியல் நீக்கம்” செய்யப்படவில்லை என்று மிகைப்படுத்திக் கூறத்தேவையில்லை. இப்பொழுது ஈரானை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். அமெரிக்காவை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். இங்கே வார்த்தைகள் அவற்றின் பெறுமதியுணர்ந்து பயன்படுத்தப்படுவது குறைவு. அமெரிக்க எழுத்தாளர் ஏர்ணஸ்ற் ஹெமிங்வே கூறியதுபோல புனிதமிழந்த வார்த்தைகள். ஹெமிங்வே எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவலாகிய போரே நீ போ(“A farewell to Arms” (1929) என்ற நாவலின் இறுதிப் பகுதியில் கதாநாயகன் சலிப்போடு பின்வரும் பொருள்படக் கூறுவான்… ”போர் நிறுத்தம், சமாதானம், பேச்சுவார்த்தை போன்ற வார்த்தைகளுக்கு இப்பொழுது பொருள் இல்லை. புனிதமும் இல்லை. புனிதம் கெடாமல் இருக்கும் வார்த்தைகள் எவையென்றால், படைப்பிரிவின் பெயர்கள், படை அணிகளின் பெயர்கள், வீதிகளின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மட்டும்தான்”… என்று. எனவே கடந்த மூன்று கிழமைகளுக்கு மேலாக நடந்து வரும் போர்க் களத்தை மத்திய கிழக்கு என்று அழைப்பவர்கள் அநேகமானவர்கள் அதன் சரியான பொருள் உணர்ந்து அழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அது நூற்றாண்டு காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்,நன்கு பழகிய வார்த்தை என்பதனால் பழக்கதோஷத்தில் அவர்கள் அதை அவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அதை அவர்களுடைய அரசியல் சாய்வாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?. ஆனால் நிகழும் போரில் ஈழத்தமிழர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இதில் எடுக்கக்கூடிய நிலைப்பாடு யுத்தத்தின் போக்கை மாற்றப் போவதில்லை என்பதனால் தமிழர்கள் நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஒரு பகுதியினர் கேட்கின்றார்கள். ஆனால், அரசு இல்லாத, நீதிக்காகப் போராடுகின்ற ஒரு மக்கள் கூட்டம் உலகில் நடக்கும் மோதல்கள் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டை அறத்தின் அடிப்படையில் எடுப்பதா? அல்லது ஒர் அரசுபோல சிந்தித்து முடிவெடுப்பதா? மேற்காசிய யுத்தம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவடையுமாக இருந்தால் அது இப்போதுள்ள உலக அரசியலில் துருவ நிலைப் போக்குகளை மாற்றக்கூடும். எனவே கேந்திர முக்கியத்துவம்மிக்க ஓர் அமைவிடத்தைக் கொண்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இந்தவிடயத்தில் தெளிவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். போர் நிகழ்வது ஆசியக் களம். நேரடியாக மோதுவது இரண்டு ஆசிய நாடுகளும் அமெரிக்காவும். தவிர ஈரானைச் சுற்றியிருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் தளங்கள் உண்டு. எனவே போர்க்களம் அங்கேயும் விரிவடைந்திருக்கிறது. இதுவரையிலுமான உயிர்ச் சேதத்தைக் கணக்கிட்டால் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பது ஆசியர்கள்தான். மிகச்சொற்பமான தொகை அமெரிக்கர்கள்தான் இறந்திருக்கிறார்கள். ஆசியாவுக்கே சேதம் அதிகம். ஆசியாவுக்கே உயிரிழப்புகள் அதிகம். ஆசியர்கள் ஒருவர் மற்றவரோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் பின்னணிக்குள் ஆசியர்களாகிய ஈழத் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்? ஆசிய சகோதரத்துவம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா? ஈழத் தமிழர்களின் விவகாரத்தில், இறுதிக்கட்டப் போரில் ஆசிய நாடுகள் ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை. ஈரானும் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் அரசாங்கத்தோடுதான் நின்றன. அங்கே ஆசியர்கள் என்பதற்காக அவர்கள் ஈழத் தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை நிரூபிக்கவில்லை. மேலும் பொறுப்புக்கூறலுக்கான ஐநா நடவடிக்கைகளிலும் ஆசிய நாடுகள் பெருமளவுக்கு ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை. அமெரிக்காவின் மேலாண்மையை அனுசரித்துப்போகும் மேற்கத்திய நாடுகள்தான் பெருமளவுக்கு ஐநா தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன. அப்படிப் பார்த்தால் கடந்த 16 ஆண்டுகால ஐநாமைய அரசியலின் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மேற்கு நாடுகளின் பக்கம் நிற்கவேண்டுமா? ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுதும் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் பலஸ்தீன தன்னாட்சி அதிகார அமைப்பானது இலங்கை அரசாங்கத்தோடுதான் நிற்கின்றது. போராடி வென்ற நாடுகளான வியட்நாம்,கியூபா, எரித்திரியா போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களோடு இல்லை. அந்த நாடுகள் அறநெறி, நீதிநெறி என்பவற்றின் அடிப்படையிலோ அல்லது நீதிக்கான போராட்டம் என்ற அடிப்படையிலோ ஈழத்தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தவில்லை. அதேசமயம் ஐநாவில் தீர்மானங்களைக் கொண்டுவரும் மேற்கு நாடுகள் தமிழர்கள் மீது கொண்ட காதலால், அன்பினால் அல்லது அறத்தின் அடிப்படையில் அந்த முடிவை எடுக்கின்றன என்பதல்ல. பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்தை தடுப்பதற்கான ஒரு கருவியாக இலங்கை அரசாங்கத்தின் மீது எப்பொழுதும் ஒரு பிடியைப் பேணுவதற்கு அவர்கள் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகிறார்கள் என்பதுதான் ராஜதந்திர யதார்த்தம். இதுதான் அரசுகளின் உலகம். எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டுடன் அல்லது அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டத்துடன் வைத்துக்கொள்ளும் உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார்ந்த நலன்களின் அடிப்படையில்தான் பேணப்படும். அங்கே அறநெறி, நீதிநெறி, பிராந்திய சகோதரத்துவம் போன்றவை கிடையாது. அவையெல்லாம் “அம்புலிமாமா” கதைகளில் வருபவை. ஈழப்போரின் போதும் போருக்கு முன்னரும் பின்னரும் இலங்கை இனப் பிரச்சினையில் பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்தைத்தான் கையாள முயற்சித்தன. அரசாங்கத்தைக் கையாள முடியாத நிலை வரும்பொழுது அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்காக தமிழ்மக்களை, தமிழ் மக்களின் போராட்டத்தை,தமிழ் மக்களின் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக கருவியாக அவை கையாண்டன. இப்பொழுதும் கையாண்டு வருகின்றன. இதுதான் கடந்த சுமார் அரை நூற்றாண்டு கால அனுபவம். இப்படிப்பட்டதோர் குரூர உலகில், அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம்? எனது கட்டுரைகளில் நான் திரும்பத்திரும்பக் கூறும் ஓர் ஆபிரிக்கப் பழமொழி உண்டு. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்காதே. அவ்வாறு எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதற்கு நிகரானது.” இதுதான் உலக அரசியல்.ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாகத் திரளும்போது ஜோன் லொகே கூறுவது போல “ஒரு சமூகத்தின் பலமானது அந்தச் சமூகத்தின் தார்மீக ஒருமைப்பாட்டில் தங்கியிருக்கிறது” என்ற அடிப்படையில் திரளவும் வேண்டும். அதேசமயம் அரசுகளின் அரங்கில் ஓர் அரசைப்போலவும் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். “புலிகள் சண்டையிடும்போது மலை உச்சியில் அமர்ந்திருந்து அதைப் பார்க்கவேண்டும்” என்ற சீனப் பழமொழி இங்கே பொருத்தமாக இருக்குமா? https://www.nillanthan.com/8211/
  15. மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார் “மதம் ஓர் அபின்” என்று. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் சொன்னார் “நுகர்வுப்பண்டங்களே அபின்” என்று. இந்த நூற்றாண்டில் தகவல் ஓர் அபினா? சமூக வலைத்தள “அல்கோரிதம்” எனப்படுவது ஒருவகை போதை ஊக்குவிப்புத்தான். நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடி வரும். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்று கண்டு அதை நோக்கி உங்களை ஊக்குவிப்பது. ஒரு போதைப்பொருள் பாவனையாளர் எந்தப் போதைக்குப் பழக்கப்படுகிறாரோ, அதே போதையை அவருக்குத் தொடர்ந்து ஊட்டுவதன் மூலம் அவரை அதற்கு அடிமையாக்கிவிடுவது. அதாவது இலத்திரனியல் அடிமைகள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் உலகளாவிய பரந்த மாய வலைப் பின்னலுக்குள் சிக்கிய ரெண்டு கால் பூச்சிகள். தகவல் ஒரு போதை மட்டும் அல்ல. கவிஞரும் திசை வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவருமாகிய மு.பொன்னம்பலம் கூறுவார் “தகவல் ஒரு மாயை” என்று. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியோடு அது இப்பொழுது மகா மாயையாக உருவெடுத்துவிட்டது. தகவல் புரட்சியின் ரெண்டுகால் பூச்சிகள் ஒரே சமயத்தில் மாயப் போரின் பலியாடுகளாகவும் இருக்கிறார்கள்; பரிசோதனைக்கூட எலிகளாகவும் இருக்கிறார்கள்; தம்வசமிழந்த பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள். இஸ்ரேல் அண்மை ஆண்டுகளாக ஈரானிய தலைவர்கள் தளபதிகள் விஞ்ஞானிகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் பெருமளவுக்கு மாயத் தொழில்நுட்ப வகைப்பட்டவைதான். இப்பொழுதும் மேற்காசியாவில் திறக்கப்பட்டிருக்கும் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெரியது. அந்த மாயப் போர்க்களத்தில் அதிகம் பலியாவது ஆசியர்கள்தான். மேற்கு நாடுகள் தங்களுடைய நவீன தொழில்நுட்பத் திறன்களையும் புதிய போர்த் தளபாடங்களையும் கண்டுபிடிப்புகளையும் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்கள் பெருமளவுக்கு ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பியப் போர்க் களங்கள்தான். மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அனேகமாகப் பாதுகாப்பாக இருக்கும். ஏனைய பகுதிகள்தான் புதிய யுத்தத் தளபாடங்களின் பரிசோதனைக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். குறிப்பாக உலகப் பேரரசு அமேரிக்கா எல்லா யுத்த அரங்குகளுக்கும் வெளியே ,தொலைவில் பத்திரமாக இருக்கிறது. ஒசாமா பின் லேடன்தான் அமெரிக்காவை அதன் வாசற்படிவரை சென்று தாக்கினார். அணுகுண்டை தூய விஞ்ஞானத்தின் வார்த்தைகளில் சொன்னால் அது ஒரு யூதக் குண்டு. அதற்குரிய சமன்பாட்டை கண்டுபிடித்தது யூதரான ஐன்ஸ்டீன். அதனை ஒரு செய்முறையாக மாற்றியவர் யூதராகிய ஓபன் ஹெய்மர். அதனால் பிரயோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் கூறினால் அது முதலில் அமெரிக்க யூதக் குண்டு. ஆனால் அதை அவர்கள் பரிசோதித்த இடம் ஆசிய ஜப்பானில்தான். அணுகுண்டின் முதலாவது பரிசோதனைக் கூட எலிகள் ஆசியர்கள்தான். இப்பொழுது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு முன்னெடுக்கப்படும் மாயப் போரிலும் முதல் பலிகளும் பரிசோதனை கூட எலிகளும் பெருமளவுக்கு ஆசிரியர்களும் ஆபிரிக்கர்களும் உக்ரேனியர்களும்தான். ஆளில்லா விமானங்களின் மாயத் தாக்குதல்கள் அதிகம் நடந்த இடங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியங்கள்தான். மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று இதுவரை நடக்கவில்லை. ஆனால் பனிப் போர் நடந்தது.அந்தப் பனிப் போரானது மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு நிழல் போராக இருந்தது. ஆனால் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் நிஜப் போராக இருந்தது. பேரரசுகளின் நிழல் போரை ஏனைய நாடுகள் நிஜப் போராக முன்னெடுத்தன. ஈழப்போரும் அப்படித்தான். ஜெயவர்த்தனா அமெரிக்காவின் நண்பனாக இருந்தார்.இந்தியா, ரஸ்சியாவின் கூட்டாளியாக இருந்தது. 1983க்குப் பின் ஈழப் போர் எனப்படுவது பனிப்போரின் ஒரு பகுதியாக மாறியது. அதனாலேயே வளர்ந்தது. ஆசிரியர்களாகிய சிங்களவர்களும் ஆசிரியர்களாகிய தமிழர்களும் ஐரோப்பியர்களின் நிழல்போரை நிஜப்போராக முன்னெடுத்தார்கள். ஆசியர்களாகிய, அரசில்லாத, சிறிய ஈழத் தமிழர்கள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் உசார் மனோ நிலையிலிருந்தும் தற்காப்பு உணர்விலிருந்து விடுபடவில்லை. அதனால்தான் மேற்காசியாவில் போர் வெடித்தபோது யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக வரிசைகள் நின்றன. அதைப் பலரும் நக்கல் அடித்தார்கள். ஆனால் அது யாழ்ப்பாணத்து நோக்கு நிலையில் தவிர்க்க முடியாதது. ஒரு குடா நாட்டு மனோநிலை அப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தவர்களின் தற்காப்பு உணர்வின் விளைவுதான் சேமிப்பு பண்பாடு. அது குடா நாட்டு மனோநிலையின் பிரதான அம்சம். போர் இந்த சேமிப்பு பண்பாட்டை மேலும் பலப்படுத்தியது. ஒருவகையில் போருக்குள் நின்று நிலைத்தமைக்கு அதுவும் காரணம். போருக்குப் பின்னரும் அந்த மனோநிலை அப்படியே மாறாமல் இருக்கிறது. ஏனென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அதனால் யாழ்ப்பாணத்தவர்களின் மனோநிலை மட்டுமல்ல முழு ஈழத் தமிழர்களின் மனோநிலையும் ஒருவிதத்தில் அமைதியுறாத, கொந்தளித்த, ”அண்செற்றில்ட்” மனோநிலையாகத்தான் காணப்படுகிறது. சதா உஷாராகவும், அளவுக்கு மிஞ்சிய தற்காப்பு உணர்வோடும் காணப்படுகிறது. எனினும் மேற்காசியாவில் யுத்தம் வெடித்த உடனே வரிசையில் நின்ற பலரும் இப்பொழுது தாங்கள் செய்தது சரிதான் என்று திருப்திப்படுகிறார்கள். ஒரு சிறிய மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வோடு இருப்பதில், முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ராஜதந்திரி என்னிடம் கேட்டார் யாழ்ப்பாணத்தை “ஒரு தூங்கா நகரமாக மாற்ற முடியுமா?” என்று. யாழ்ப்பாணம் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பல நகரங்கள் இரவு கிட்டத்தட்ட எட்டு மணிக்கு பின் தூங்கும் நகரங்கள்தான். விசேஷமாக வடக்கு கிழக்கில் உள்ள நகரங்கள் அதிகாலையில் சூரியனோடு சேர்ந்து விழித்தெழுவதில்லை. இரவானதும் ஒன்பது மணிக்கு முன்னரே பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுவிடும். அதற்குக் காரணம் தமிழ்மக்களின் கூட்டு உளவியலில் ஒருவித “உளவியல் ஊரடங்குச் சட்டம்”தொடர்ந்தும் அமுலில் இருப்பதுதான் என்று எனது நண்பன் ஒருவர் கூறுவார். இந்த “உளவியல் ஊரடங்குச் சட்டம்” என்பது முன்சொன்னதுபோல அண்செற்றில்ட்டான ஒரு கூட்டு உளவிகளின் விளைவு. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதவரை அது தொடர்ந்தும் இருக்கும்.2009க்குப் பின்னரான தொடர்ச்சியான புலப்பெயர்ச்சிக்கு அதுவும் ஒரு பிரதான காரணம். அரசில்லாத சிறிய,ஆசிய மக்கள் கூட்டம் ஆகிய ஈழத் தமிழர்கள் மேற்காசியப் போரில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கா போரை இலங்கை கடற்கரையில் இருந்து 19 கடல் மைல்வரை கொண்டு வந்துவிட்டது. ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர் மூழ்கியால் தாக்கப்பட்டது. எனவே இலங்கை போர்க்களத்துக்கு வெளியே இருக்கிறது என்று கூறமுடியாது. மேலும் எரிவாயுவுக்கும் எரிபொருளுக்குமாக வரிசையில் நிற்கும் ஒரு நிலை வந்திருக்கிறது. புதன் கிழமை விடுமுறையாக்கப்பட்டிருக்கிறது. அதாவது போர் நமது குசினி, அலுவலகம் ,பாடசாலை வரை வந்துவிட்டது. அமெரிக்கா எதிர்பார்த்ததுபோல ஈரான் துவண்டு விடவில்லை. தலையை நசக்கினால் பாம்பு செத்துவிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்பியிருக்கலாம். ஆனால் ஈரான் நின்று பிடிக்கின்றது. இந்தப் போரில் சீனாவும் ரஷ்யாவும் நேரடியாக போர்க்களத்தில் இறங்கவில்லை. ஆனால் ஈரானின் பின்னணிப்பலம் அந்த நாடுகள்தான். நிகழும் போரில் சீனா ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளினதும் பங்களிப்பின் அளவும் பங்களிப்பின் தன்மையும்தான் புதிய உலக வலுச் சமநிலையைத் தீர்மானிக்கும். அவ்வாறு உலக வலுச்சமநிலையில் ஏற்படும் தளம்பல்கள் சிறிய ஈழத் தமிழர்களின் அரசியலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். பனிப்போர் எப்படி ஈழப் போரில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியதோ அப்படி. கடந்த 16 ஆண்டு காலமாக சீனாவுக்கு எதிரான மேற்கத்திய வியூகத்தின் ஒரு பகுதியாக ஈழத் தமிழர்கள் ஐநாவில் கையாளப்படுவதையும் அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே பிராந்தியத்தில்,கண்டத்தில், பூகோள அளவில் ஏற்படும் திருப்பகரமான மாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கக்கூடும். சில சமயம் இருக்கின்ற வாய்ப்புகளை மூடவும்கூடும். ஆனால் அவ்வாறு ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஈழத் தமிழ் அரசியலில்,இலங்கை அரசியலில் என்னதான் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கையாள்வதற்கு ஈழத் தமிழர்கள் தயாராக இருக்கிறார்களா ? https://www.nillanthan.com/8207/
  16. யாழில் விரிவுரையாளரின் படுகொலையும் ; அதன் பின்னணிகளும் ஞாயிறு, 22 மார்ச் 2026 10:27 AM எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, மூன்று மாதங்களில் முறிந்த திருமண வாழ்க்கை. கொலையின் பிரதான சந்தேகநபரான அரியாலை பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 20) எனும் இளைஞன் விரிவுரையாளரின் மகளான சுவித்தியா (வயது 19) என்பவரை காதலித்து வந்த நிலையில் , கடந்த வருடம் (18 வயது திருமண வயதை எட்டியதும்) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துள்ளனர். பதிவு திருமணம் செய்து சுமார் 3 மாத காலம் வாழ்ந்த நிலையில் , சுவித்தியா , கணவருடன் வாழ முடியாது. கொடுமைகளுக்கு தான் உள்ளாவதாக கூறி தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தனக்கு விவாகரத்து கோரி யாழ். மாவட்ட நீதிமன்றில் தாயரின் அறிவுறுத்தலில் பிரபல மூத்த சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை பெண்ணின் கணவன் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளார். இரு தவணைகளுக்கு மேல் சமூகமளிக்காத நிலையில் , வழக்கினை ஒரு முக விளக்கத்திற்கு எடுக்குமாறு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்த நிலையில் வழக்கு அடுத்த தவணைக்கு திகதியிடப்பட்டது. நள்ளிரவு ஓடு பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கணவன். வழக்கு தவணைக்கு தான் செல்லாததும் , வழக்கு ஒரு முக விளக்கத்திற்கு சென்று தமக்கு விவாகரத்து கிடைத்து விடும் என அறிந்த கணவனான திவாகர் கடந்த 17ஆம் திகதி பாண்டியன் தாழ்வு பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திய பின்னர் , வீட்டின் ஓட்டை கழட்டி கயிறு மூலம் மனைவியின் அறைக்குள் இறங்கியுள்ளார். அங்கு நித்திரையாக இருந்த மனைவியை எழுப்பி , தனது செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரி , சமாதானமாகி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என கோரியுள்ளார். தாயை கொலை செய்த கணவனுடன் கைகோர்த்த மனைவி அதற்கு மனைவி தாம் இருவரும் சேர்ந்து வாழ அம்மா அனுமதிக்க மாட்டார் என கூறியதை அடுத்து , அவர் உயிருடன் இருந்தால் தானே அனுமதிக்க மாட்டார். அவரை கொலை செய்வோம் என கூறி , தாயாரின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு தூக்கத்தில் இருந்த தாயின் கால்களை மகள் அழுத்தி பிடிக்க , மகளின் கணவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார் உயிரிழந்த தாயின் சடலத்தை படுக்கை விரிப்பினால் (பெட் சீட்) சுற்றி கட்டி , தாயின் காரின் பின் பகுதியில் சடலத்தை மறைத்து வைத்த பின்னர் , கணவன் மனைவியான இருவரும் வீட்டை விட்டு வெளியேறி , கணவனின் மோட்டார் சைக்கிளில் கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வாடகை வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி மீண்டும் தனது வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார். காரில் சடலத்துடன் தப்பியோட்டம் பின்னர் விரிவுரையாளரான தனது தாயின் வங்கி அட்டையையும் நகைகள் சிலவற்றையும் எடுத்து கொண்டு தாயின் காரில் தாயின் சடலத்துடன் பயணித்து , தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றை காட்டில் சடலத்தை வீசி விட்டு காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தினை பெற்று காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பின்னர் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு QR பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து தாயின் ஒரு ஜோடி காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வாழ்ந்துள்ளார். தாயை காணவில்லை என மகன் முறைப்பாடு அதேவேளை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் , சகோதரியின் கணவன் மீது சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளார். ஆனாலும் பொலிஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு குடும்ப பிரச்சனையாக கருத்தி விசாரணைகளில் தீவிரம் காட்டாத நிலைமை காணப்பட்டதாகவும் , அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை தீவிர படுத்தினர் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்கள் அதேவேளை , தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பரந்தனில் பணம் பெறப்பட்டமை , தாயின் காருக்கு QR மூலம் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை உள்ளிட்ட தகவல்களை மகன் பொலிஸாருக்கு வழங்கி இருந்தார். அவற்றின் அடிப்படையில் திருகோணமலைக்கு சென்ற விசேட பொலிஸ் குழு , காருக்கு எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , கணவன் - மனைவி இருவரும் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததனை அறிந்து , அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் மீட்டு ,யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். திருகோணமலையில் மீட்கப்பட்ட கணவன் - மனைவி வெள்ளிக்கிழமை இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரும் போது இருவரிடமும் விரிவுரையாளர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இருவரும் அது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே வழங்கி வந்துள்ளனர். யாழ்ப்பாணம் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , நேற்றைய தினம் சனிக்கிழமையும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே விரிவுரையாளரை கொலை செய்த சம்பவத்தை கூறி தனது வாக்கு மூலத்தை பொலிஸாரு க்கு மருமகன் கூறியுள்ளார். தாயின் கொலைக்கு நான் உடந்தை இல்லை - மகள் வாக்குமூலம் அதேவேளை , தான் கொலைக்கு எந்தவகையிலும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் , கணவன் மீதான பயத்தின் காரணமாக அவரது செயற்பாடு குறித்து வெளியில் கூறவில்லை என விரிவுரையாளரின் மகள் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு. மருமகனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று நாட்களின் பின் சடலத்தை மீட்டமையால் , சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். கழுத்து நெரித்தே கொலை. போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இன்றிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இறுதி கிரியைகள் அதனை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. https://jaffnazone.com/news/55760
  17. அது திட்டும் தமிழ் மொழி இல்லை என்பது தெரியாவிட்டால், உங்களுக்கு தமிழ்மொழியும் அரைகுறையிலும் என்பது என்பதை வெளிச்சம் 1) ஒப்புவிப்பதில் - விற்பன்னர். 2) பரீட்சிய சட்டத்துறை - அரை குறை (ஆனால் அதை பாவித்து சிந்திக்க எப்போதும் பின்னிற்பது 2-3 திரிகளில் நீங்களாகவே காட்டியது , இந்த திரியிலும்) 3) தமிழ் - அரைகுறையிலும் குறைவு 4) ஆங்கிலத்தில் அரைகுறை - இந்த திரியில் கூட.. ஆக குறைந்தது அறிந்ததை முன்னுக்கு பின் முரணாக ஒப்புவிப்பு பிரயோகம். 5) அதை கால,நேர, சந்தர்ப்பத்தில் பொருந்தி வருகிறதா என்பது (சிந்தனை) - முற்றாக இல்லை. (இது தனிபட்டது தான், அனல் உங்களை பொறுத்தவரை ஆக குறைந்தது இருக்கவேண்டும்) 6) நீங்களால ஒப்பபுக் கொண்ட தென்னிலங்கை வாழ்க்கையில் சிங்களவரை பற்றி அறிந்ததும் - அரைகுறை (அறிந்து இருந்தால் கிரிபத்தை வழமையான உணவுக்கு ஒப்பாக்கி கருத்து வந்து இருக்காது. சிங்களவர்கள் கிரிபத் உணவை அடிக்கடி உணவாக எடுத்தாலும்.) ஆனால்,இதில் உங்களில் முற்றாக பொறுப்பு சொல்ல முடியாது. ஏனெனில். தமிழர் அப்படி வேறு கலாசாரத்தை அறிவதில் இப்போது கூ ட அக்கறை இல்லை. 7) அமைச்சரவை (கூட்ட) தன்மை / விபரங்கள் - இதை நான் பட்டியலில் எடுக்கவில்லை. ஏனெனில், பொதுவாக எல்லோர்க்கும் அந்த வாய்ப்பு இல்லை.
  18. Kjy; கலக்கட்டும். கலக்கட்டும்.சிறிலங்கா சீனாவின்பக்கம்தான் நிற்கும். பிராந்திய வல்லரசுக்கு தமிழர்தாயகத்தின் அருமை புரியட்டும். காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது.
  19. இப்ப இஸ்ரேலுக்கு பலஸ்தீன மக்களின் வலியின் கனம் புரிந்திருக்கும்
  20. உலகம் முழுவதும் இதே ஏக்கம் தான். தாய்வான் தானே விழுமோ?
  21. டிரம்ப் வருகுன முன்பே, பைடன் மேலாண்மை கப்பிலே எடுத்தெகென் கிழிலுடேனென்று எழுதி வைத்த யுகக் கதை… அரசியல் அலைகள் அடங்காதே ஓட, அறிவின் அலை மட்டும் கரை சேர மறுத்ததோ என எண்ணினேன். “புலிட ல் வேண்டாம்” எனும் புலவர் சொல் காற்றில் பறந்தாலும், உறவினர் சொன்ன டகு டகி டகி டகு டங்கு டிங்கு முந்து முந்து மயிலோன் முந்து எனும் மந்திரம் மட்டும் மனதில் முளைத்தது வியப்பே! குந்தவைப் பிராட்டியார் குந்தவைத்த இடத்தில் சத்யா நாடெல்லா நின்றாராம், பார்தீபன் நாயுடு வாசிங்டன் சுந்தர் பிச்சை “நன்றே கற்கை புகினும்” என நூலோடு நெஞ்சோடு நின்றாராம். ஆனால்… அரசியல் புரியாதோர் உளறல் மட்டும் புராணம் போல வளர, உண்மை மட்டும் களமேகன் எழுதிய குறள் போல மறைமறை நின்றது. கதை சொல்லும் குரல் பெரிது, அறிவு சொல்லும் குரல் சிறிது — அதனால்தான் இவ்வுலகில் உளறல் தான் முதன்மை, உண்மை தான் துணை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.