Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. அர்ச்சுனா அர்ச்சனை செய்த டொக்டர் சத்தியமூர்த்தி அவர்களும், மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அவர்களும் ஒருவரா? அன்றி வேறு வேறான இருவரா?? கவி அருனாசலம் அவர்களே???
  3. அண்ணை நீங்களாச்சும் கேட்டது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கு. அவுஸ்திரேலியாவையும் நன்றாக விளையாடுவினம் என்று நான் கருதிய அணிகளும் தோற்றது ஒரு காரணம். அதிக ஓட்டம், அதிக விக்கெட் போன்ற குண்டக்கமண்டக்க(உபயம் தம்பி @வீரப் பையன்26) கேள்விகளில் சறுக்கியதும் மற்றொரு காரணம். எனக்கு நல்ல துணை தம்பி @வாதவூரான் இருக்கிறபடியால பயமில்லாமல் இருக்கிறேன்! @goshan_che அண்ணை தான் ஏமாத்திப்போட்டார்!
  4. Today
  5. கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” பாகம் – 7 / “அதிகாரம் மிகவும் அமைதியாக பேசக் கற்றுக்கொண்டது” உடப்பு பள்ளியில் அன்று மணி ஏற்கனவே அடிக்கப்பட்டு மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அது பிந்திய மதியம். பணியாளர்கள் அறை வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. ஆதன் தனியாக வகுப்பறையில் அமர்ந்து இருந்து, குறிப்பேடுகளைத் [notebooks] திருத்திக் கொண்டிருந்தான். அவனது கையில் சிவப்பு மை பேனா [எழுதுகோல்] அசைந்தது, ஆனால் அவனது மனம் அசையாமல் இருந்தது. அன்று படிப்பித்தில் முடிக்கும் தருவாயில், “தயவுசெய்து பள்ளிக்குப் பிறகு கொஞ்சம் காத்து இருங்கள். கூடுதல் கல்வி அதிகாரி [Additional Education Officer] இங்கு வந்து உள்ளார்.” என்று ஒரு செய்தி அவனுக்கு வந்திருந்தது. அது தான் ஆதன் அந்தநேரத்தை பயன் உள்ள வழியில் செலவழித்துக் கொண்டு இருந்தான். அந்த செய்தியை கேட்டு அவன் பெருமூச்சு விடவில்லை. அவன் அதை எதிர்க்கவில்லை. அவன், கூடுதல் கல்வி அதிகாரியை துணிந்து எதிர்கொள்ள நின்றான். அவன் அலுவலகம் சென்ற போது அங்கு இம்முறை, மேசையில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் கோப்புகள் [files] மட்டுமே இருந்தன. அங்கு கூடுதல் கல்வி அதிகாரி அமைதியாக அமர்ந்து இருந்தார். தலைமை ஆசிரியர் அவருக்கு அருகில் நின்றார். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினரோ அல்லது ஆலய குருவோ, எவரும் அங்கு இல்லை. இது ஒரு ஒழுக்கக் கூட்டம் அல்ல. இது நிர்வாகக் கூட்டம். அதிகாரி மெதுவாகப் பேசினார்: “திரு. ஆதன், உங்கள் கற்பித்தல் பதிவு [teaching record] சிறப்பாக உள்ளது. மாணவர்கள் உங்களை மதிக்கிறார்கள். இதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் படிப்பிக்கும் பொழுது கொஞ்சம் கூடுதலான உணர்வுபூர்வமாக வரலாறு கற்பிக்கப்படுகிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கிறோம்.” என்றார். ஆதன் அமைதியாக அதிகாரி சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். அதிகாரி ஒரு கோப்பைத் தன முன் திறந்தார் — ஆனால் அதைப் படித்துக் காட்டவில்லை. “உங்களைப் போன்றவர்கள்,” அவர் தொடர்ந்தார், “தண்டனை தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை.” என்றார். உடனே ஆதன் அமைதியாகக் கேட்டான்: “எதை நோக்கி வழிகாட்டுதல், ஐயா?” அதிகாரி சிரித்தார். “நடுநிலையை நோக்கி.” ஒரு இடைநிறுத்தத்திருக்குப் பின் அவர் மீண்டும் தொடர்ந்தார் “வரலாறு, இந்த மாவட்டத்தில் உணர்ச்சிபூர்வமானது. அது போலவே மொழியும் காணப்படுகிறது. இங்கு நடந்தவை நடந்தவையே . ஆனால் கருத்தில் கொள்ளுங்கள், உணர்ச்சி சீரமைப்பை அல்லது ஒருமிப்பு ஒன்றை, அதாவது ஒன்றுசேர்தலை உருவாக்குகிறது. அது தான் நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது.” என்றார் ஆதன் பதிலளித்தான்: “உணர்ச்சி புரிதலையும் உருவாக்குகிறது.[Emotion also creates understanding.] ” அதிகாரி கோப்பை மூடினார். "அடுத்த வரும் காலகட்டத்தில், உங்கள் பாடங்கள் பாடத்திட்டத்தின்படி கண்டிப்பாக இருக்கவேண்டும். அதற்கு மேலதிகமான கூடுதல் விளக்கங்கள் தேவை இல்லை. அது மட்டும் அல்ல, தனிப்பட்ட, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று சான்றுகள் மற்றும் இலக்கியங்களின் ஊடாக விளக்கங்கள் தேவை இல்லை. அரசு ஏற்றுக் கொண்ட மகாவம்சத்தின் ஊடாக மட்டும் வரலாறு இருக்கட்டும், அதில் தவறு, பிழைகள் சுட்டிக்காட்டுவது உங்கள் வேலை இல்லை." அதன் பின் இடைநிறுத்தத்தின் பின், அவர் தொடர்ந்தார்: "இது கண்காணிப்பு அல்ல," என்று அவர் மேலும் கூறி, "இது கட்டுப்படுத்துதல்." மட்டுமே என்றார். ஆதன் மேலே பார்த்தான். தீபவம்சம், மகாவம்சம் மற்றும் சூளவம்சம் என்பவை புத்த சமயத்தை பரப்பவென அன்று பாளியில் எழுதப்பட்ட இனவாதம் கக்கும் பல பொய்களை உள்ளடக்கிய, புத்தரின் போதனைக்கு எதிராக, சோடிக்கப்படட ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்பது அவனுக்குத் தெரியும். புத்தர் மூன்று முறை இலங்கைக்கு பறந்து வந்தார் என்ற கட்டுக்கதையுடன் ஆரம்பிக்கும் தொகுப்பே இவை. இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, அங்கேயே இறந்த புத்தரைப் பற்றி, இந்திய நூல்களுக்கு முற்றிலும் மாறாக இந்த ஆரம்பமே இருப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இவ்வாறான பல வரலாற்று பொய்களைப் பற்றி அவன் மனம் தனக்குள் முணுமுணுத்தது. அதை இன்று, குறிப்பாக சிங்கள அதிகாரிகளையும் புத்த பிக்குகளையும் கொண்ட தொல்பொருள் திணைக்களம் செய்யும் கூத்துக்கள் அவன் அறிவான். பாவம் புத்தர் அங்கெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு, சிலையாக முளைக்கிறார். "ஐயா," அவன் கூறினான், "உயிருள்ள ஒன்று வளரும்போது மட்டுமே கட்டுப்படுத்துதல் தேவை.[containment is only required when something alive is growing.], இங்கே நான் வரலாற்றை மட்டுமே படிப்பிக்கிறேன், அதை உண்மையான வாதங்களுடன் எடுத்துக் காட்டுகிறேன். அப்படி என்றால் உண்மையை சொல்லாமல் கட்டுப்படுத்து கிறீர்களா ?" என்று கேட்டான். அதிகாரி பதிலளிக்கவில்லை. கூட்டம் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியாக முடிந்தது. ஆனால், அது தான் அவனை கோபத்தை விட அதிகமாகப் பயமுறுத்தியது. பள்ளிக்கு வெளியே, வேப்பமரம் மட்டும் அசையாமல் நின்றது. ஆதன் தனது மரத்துடன் சாய்த்து வைத்த சைக்கிளை வெளியே எடுத்தான். ஒரு இளைய ஆசிரியர் அமைதியாக ஆதனை அணுகினான். "சார் ... அவர்கள் உங்களைப் பார்த்து கத்தவில்லையா ?." ஆதன் தலையசைத்தார். "அப்படி என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள்," என்று அவன் கூறினான். அன்று மாலை - கடற்கரை அமைதியாக இருந்தது. அலைகள் ஒன்றும் கொந்தளிக்கவில்லை. மழை நின்று விட்டது. சூரியன் அடிவானத்திற்குக் கீழே மறையும் போது, வானம் பெரும்பாலும் சூடான ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலிருந்து குளிர் நீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கு மாறியது. கடல் இந்த வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது, அவை ஆழமான நீலம் அல்லது ஊதா நிற வண்ணச்சாயமாக தோன்றியது. அந்த ஒளிக்குள் யாரோ தோணியில் நின்றபடி வலை வீசிக் கொண்டிருந்தார். அது ஒரு நிழல் மாதிரி இருந்தது. அவர் எதோ ஒரு பாடலை மெதுவாகப் பாடினார். பாடலின் வார்த்தைகள் காற்றில் கலந்து, அவன் காதிலும் மோதியது. அருகில் நின்ற இன்னும் ஒரு மீனவன், ஆதனிடம் சொன்னான், "சார் - தோணியில்லாத கடல், வலையில்லாத கையைப் போல," என்று. ஆதன் தலையாட்டினான். தொலைவில் அந்த நிழல் தோணியும் நகர்ந்தது. வலையில் சில கருப்பு மீன்கள் மின்னின. ஆதன் மனம் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. காற்று வாங்கவும் ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே அங்கு வந்தான். அவன் சமந்தியைக் கூட அழைக்கவில்லை. அவன் தனியாக நடந்தான். அலைகள் இன்னும் அமைதியாகவே இருந்தன. அப்பொழுது முதல் முறையாக, ஒரு கேள்வி அவன் மனதுக்குள் நுழைந்தது: மற்றவர்களை உடைக்காமல்... அல்லது தன்னைத்தானே உடைக்காமல் எவ்வளவு உண்மையை ஒருவர் சுமக்க முடியும் [How much truth can one carry without breaking others… or oneself?]? அவன் வீடு திரும்பியதும் தனது நாட்குறிப்பில் [டைரி], ஆதன் நிதானமாக, மெதுவாக எழுதினான்: “அவர்கள் இனி என்னைக் குற்றம் சாட்ட மாட்டார்கள். அவர்கள் இனி என்னை எச்சரிக்க மாட்டார்கள். வாயைத் தொடாமல் அல்லது கிளறிவிடாமல் ஒரு குரலை எப்படி அமைதிப்படுத்துவது என்பதை இப்ப கற்றுக்கொண்டார்கள். இது நேரடியான தண்டனை அல்ல. இது அதற்கான ஒரு தயாரிப்பு. நாளை, போராட்டம் பகிரங்கமாக இருக்காது. ஆனால் உள்ளே இருக்கும். [Tomorrow, the struggle will not be public. It will be inside]” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 08 தொடரும் துளி/DROP: 2077 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/34171930912455452/? கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8 பாகம் – 8 / “உளவியல் மற்றும் நெறிமுறைகளில் மனதுக்குள் ஒரு முறிவு” அன்று எந்த கடிதங்களும் வரவில்லை. எச்சரிக்கைகள் இல்லை. புதிய உத்தரவுகள் இல்லை. ஆனால் அந்த அமைதி தண்டனையை விட கனமானது. ஏனன்றால் புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல ஆதனுக்கு இருந்தது. உடப்பு பள்ளியில், ஆதன், தனது வகுப்பறையில் கரும்பலகைக்கு அருகில் படிப்பித்தலை தொடங்குவதற்கு நின்றான். அவன் கையில் சுண்ணக்கோல் [chalk] இருந்தது, ஆனால் அவன் மனம், இம்முறை கொஞ்சம் தயங்கியது. அவனுக்கு நன்றாகத் தெரியும் — இப்போது ஒவ்வொரு வார்த்தையும் இனி எடை கொண்டது. ஒவ்வொரு வாக்கியமும் அதிகாரிகளுக்குச் சான்றாக மாறக்கூடும். எனவே அவன் யோசித்து மெதுவாக எழுதினான்: “மொழி என்பது நாம் கற்றுக்கொள்வதுதான்.” அத்துடன் ஆதன் நிறுத்தினான். முன்பு என்றால், அவன் இன்னும் அதிகமாக, விளக்கமாக எழுதியிருப்பான். அவன் மொழியின் நினைவாற்றல் பற்றி, வரலாறு பற்றி, அடையாளம் பற்றி பேசியிருப்பான். ஆனால், இன்று, அவன் எழுதிய வரிசையை பாதியிலேயே அழித்துவிட்டான். உடனே ஒரு மாணவன் கையை உயர்த்தினான். “சார் ... நேற்று தமிழ் ஞாபக சக்தியைக் கொண்டு வரும் என்று சொன்னீர்கள். இன்று ... நிறுத்தி விட்டீர்கள்.” என்று கேட்டான் வ குப்பறை அமைதியாக இருந்தது. ஆதன் இளம் மாணவ முகங்களைப் பார்த்தான். அவர்கள் அதிகாரிகள் அல்ல. அவர்கள் கோப்புகள் அல்ல. அவர்கள் உண்மைக்காகக் காத்திருக்கும் குழந்தைகள். ஆதன் அமைதியாகச் சொன்னார்: “சில உண்மைகள் அழிக்கப் படுவதில்லை. அவை காத்திருக்கின்றன.” அப்பொழுது மணி ஒலித்தது. என்றாலும் மாணவர்கள் யாரும் அசையவில்லை. அதேவேளை, சிலாபம் மருத்துவமனையில் சமந்தி தனது கைகளை சிங்க்கில் [sink] கழுவிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவள் மனது அவளிடம் இல்லை, அது யோசனைகளுக்குள் மாட்டிக் கொண்டு இருந்தது. தண்ணீர் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருப்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை. ஒரு ஜூனியர் நர்ஸ் [junior nurse] அவள் பின்னால் கிசுகிசுத்தாள்: “உன்னை கண்காணிப்பதாக, அருட்சகோதரிகள் சொல்கிறார்கள்.” சமந்தி தலையசைத்தாள். “எனக்குத் தெரியும்.” அப்பொழுது இன்னொரு குரல் பின்னால் கேட்டது : “நீ ஏன் கொஞ்ச நாள் அமைதியாக இருக்கக் கூடாது?” சமந்தி திரும்பினாள். “நான் இப்போது அமைதியாக இருந்தால், என் சொந்தக் குரலை நான் மீண்டும் ஒருபோதும் கேட்க மாட்டேன்.” அன்றிரவு, அவளால் தூங்க முடியவில்லை. பயத்தின் காரணமாக அல்ல— ஆனால் அவள் தேர்ந்து எடுத்த பாதையின் காரணமாக [because of choice]. அவள் திருப்பி கதைத்தால், அவள் குடும்பத்தினர் அருட்சகோதரிகளின் எதிர்கால நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவள் அமைதியாக இருந்தால், அவள் தான் யார் என்பதையே அல்லது தன்னையே மறைந்துவிடுவாள். அந்த எண்ண அலை அவள் மார்பில் ஓடியது. அன்று இரவு இருவரும் கடற்கரையில் சந்தித்தார்கள். அந்த இரவு நேரத்தில் கடற்கரை அலைகளின் மெல்லிய ஓசையுடன் அமைதி தவழும் ஓர் இடமாக இருந்ததுடன், பயோலுமினென்சென்ஸ் (Bioluminescence) எனப்படும் இயற்கையால் நீல நிறத்தில் ஒளிரும் உயிரினங்களால் மாயாஜாலக் காட்சியையும் அளித்தது. அவர்கள் வழக்கத்தை விட தாமதமாக சந்தித்தனர். அன்றிரவு அலைகள் கூட பெரிதாக இருக்கவில்லை. இருண்ட நீர் மட்டுமே, ஆனால் சில நீல நிறத் தோற்றமும் இருந்தன. அவர்கள் இருவரும் கடலின் மாயாஜாலக் காட்சியை பார்த்தபடி வெள்ளை மணலில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டே இருந்தனர். ஆதன், சமந்தியை பார்க்காமல் கடலை பார்த்தபடி, முதலில் பேசத் தொடங்கினான்: "இன்று பாதியிலேயே நான் எழுதுவதை நிறுத்தி விட்டேன், என் கையில் சுண்ணக்கோல் [சாக்கு / chalk] இன்னும் சூடாக இருந்தது. ஆனால் யாரும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்பே நான் என் சொந்த வாக்கியத்தை அழித்துவிட்டேன். “நான் இப்பொழுது என்னையே கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.[I am censoring myself]. வேறுவழி, இந்த சூழ்நிலையில் எனக்குத் தோன்றவில்லை.” என்றான். சமந்தி தலையசைத்தாள். அவள் ஆச்சரியப்படவில்லை. “தெரியும்,” என்றாள். அவள் சற்று யோசனையின் பின் அவனுக்கு பதிலளித்தாள்: “நேற்று நான் வீட்டிற்கு, வழமையான குறுக்கு வழியை தவிர்த்து, நீண்ட பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அத்துடன் நான் வழக்கமாகச் செய்யும் உரையாடல்களையும் தவிர்த்தேன். நான் கேள்விகள் கேட்க விரும்பும் இடத்தில், கேள்விகளைக் கேட்காமல் மௌனமாக சிரித்தேன்.” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் நிறுத்தினாள். பின், "நான் என் வாழ்க்கையின் அர்த்தத்தைத் திருத்துகிறேன் [I am editing my life]” என தன் பதிலை முடித்தாள். ஒரு கணம், அவர்கள் இருவரும் அமைதியாக சிரித்தனர். சிரிப்பு மகிழ்ச்சியிலிருந்து எழவில்லை. இரு உடல்களிலும் ஒரே பிளவு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்த தருணத்திலிருந்து வந்தது. ஆதன் மெதுவாக மூச்சை விட்டான்: “என் வகுப்பில் அவர்கள் தாராளமாக அமரலாம், ஒவ்வொரு சொல்லையும் எழுதி வைத்துக் கொள்ளலாம். அது எனக்குப் பிரச்சனை இல்லை, என்னால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும், ஏன் என்றால் நான் என்னை கட்டுப்படுத்த பழகிவிட்டேன், ஆனால் இதன் மூலம் நான் சுருங்குவதை என்னால் தாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.” என்றான். ஆதனை கவனமாக காது கொடுத்து கேட்டபின், சமந்தி தாழ்ந்த குரலில் சொன்னாள்: “என்னால் வதந்திகளைத் தாங்க முடியும். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் சந்தேகத்தையும், அவர்களின் மௌனத்தையும், அவர்களின் பயத்தையும் நான் ஏற்றுக்கொண்டால் — அந்த அவமானம் என்னை விட்டு என்றுமே போகாது." என்று கூறிவிட்டு ஆதனைப் பார்த்து அவள் தலையாட்டினாள். “எனக்கு உரியதல்லாத அவமானத்தை நான் என்றும் சுமக்க மாட்டேன்.” என்று திடமாகக் கூறினாள். அதன் பின் அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் வீடு திரும்ப எழும்பினர். ஆனால் அப்பொழுது கூட அவர்கள் விலகியே நின்றனர். காதல் பலவீனமடைந்ததால் அல்ல - ஆனால் நெருக்கம் வெளிப்படத் தொடங்கியதால். அன்பைக் கூட பதிவு செய்யலாம், தவறாகப் படிக்கலாம், பயன்படுத்தலாம் என்பதால். அப்பொழுது இரவுக் காற்று அவர்களின் மார்பில் அழுத்தியது. கூர்மையாக இல்லை. - படிப்படியாக. - எலும்பில் ஏதோ ஒன்று படிவது போல. இருவரும் கை அசைத்து விலகிச் சென்றனர். அந்த இரவு யாரும் எழுதவில்லை. யாரும் பிரார்த்திக்கவில்லை. யாரும் அழவில்லை. ஆனால் மாற்றமில்லாத ஒன்று நடந்தது. “எப்படி தப்பிக்கலாம்?” என்ற கேள்வி மறைந்தது. “எதைச் சொல்லவேண்டும்?” என்ற கேள்வி பிறந்தது. அந்தக் கேள்வி பயத்தைவிட சத்தமாக இருந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 09 தொடரும் துளி/DROP: 2081 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/34204542762527600/?
  6. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 127 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" “யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள் கண்ணகி. தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து [சுழன்று] தன் முலையை வட்டித்து எறிந்தாள் [வட்டித்துவிட்டா ளெறிந்தாள்: இதன் பொருள் "பிரதிக்கினை பண்ணி எறிந்தாள்" என்பதாகும். அதாவது, அவள் ஒரு உறுதிமொழியைச் சொல்லிவிட்டு, அதை நிறைவேற்றும் விதமாக ஏதாவது ஒன்றை எறிந்தாள் என்று அர்த்தம்.]. எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது. “பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது. காலப்போக்கில், அவள் பத்தினி தெய்வமாக மாறினாள், மேலும் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகவும், நாட்டிற்கு செழிப்பை ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவளை நம்பினர். கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன் - செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன். ஒருமுறை, துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது" என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான். பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப் பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள். எனவே, உடனே சேரர் பெருமான் பத்தினிக்குரிய கல்லைப் இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், வட இந்திய மன்னர்களுக்கு எதிராகப் படையெடுத்து வடக்கு நோக்கிச் சென்று, இமயமலையிலிருந்து கற்களை தோற்கடிக்கப்பட்ட மன்னர்களின் தலையில் சுமப்பித்துக் கொண்டு வந்தான். அந்தக் கற்களைக் கொண்டு கண்ணகிக்கு ஒரு பத்தினி கோயில் கட்டினான். இலங்கை மன்னன் கஜபாகுவும் இந்த விழாவில் கலந்து கொண்டான். சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாளில் தான் நடத்தவிருந்த விழாவிற்கு பத்தினி தேவி வர வேண்டும் என்று அவன் வரம் கேட்டான். உடனே அதற்க்கு செவிசாய்த்து ஒரு குரல் கேட்டது. அந்த பாடல் அல்லது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்" ‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, கண்ணகியின் சக்தியை, அவள் பெருமையை நினைவுகூர்ந்து, அவளை கௌரவப் படுத்த தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து தானும் அங்கே விழா நடத்தினான் என்பது வரலாறு ஆகும். இதனால் அவனது இராச்சியம் ஒருபோதும் தவறாத மழையும், வளமான பயிர்களுமாக காணப்பட்டது. இந்த பத்தினி வழிபாட்டுப் பண்டிகை 1775ஆம் ஆண்டு வரை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டதும் ஆகும். இந்த விழா தான் பின்னாளில் 'பெரகரா' ['Perahera'] விழாவாக மாறியது எனலாம். Part: 127 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Kannaki wrenched her left breast, came right round the city three times, and threw it to burn the City of Madurai. She, in due course, became the Goddess Pattini, and believed to have control over disease and could cause prosperity to the country. The king Kajavahu of Lanka heard of her power, and performed festival on her honour, and his kingdom became blest with never failing rain and abundant crops. This festival became the ‘Perahera’ festival. The Chera king, Seng Kudduvan, went north on expedition against the north Indian kings, and brought stones from the mount Himalaya on the heads of the defeated kings. He made a temple for Kannaki, Pattini temple, with those stones. The king of Lanka, Kajavahu, too attended this festival. He requested a boon from the Goddess Pattini that she should come to the festival he intended to have on the day of the birthday of Cheran Seng Kudduvan. A voice ‘granted’ was heard. The verses related to this are given below. "கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்" The monarch of the world circumambulated the shrine thrice and stood proffering his respects. In front of him the Arya kings'’ released from prison, kings removed from the central jail, the Kongu ruler of the Kudagxi, the king of Malva and ’Kayavagu (Gajabhau), the king of sea girt Ceylon, prayed reverentially to the deity thus: Please grace our countries by your presence just as have done this auspicious day, a fete day of Imayavaramban’s sacrifice. ’ Then a voice from the welkin issued forth: ‘I have granted the boon.’ The Perahera festival is the continuation of this worship of the Goddess Pattini till about 1775 A. D. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 128 தொடரும் / Will follow துளி/DROP: 2082 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127 https://www.facebook.com/groups/978753388866632/posts/34206389789009564/?
  7. கடஞ்சா "விவிலிய" என்று விளித்து தீவிரமாக எழுதி வருவதால் அதைப் பற்றிய ஒரு பின்னணி அவசியமாகிறது. போனவாரம், ஈரானிய தாக்குதல் ஆரம்பித்த பின்னர், அமெரிக்க இராணுவத்தின்கீழ் நிலை அதிகாரிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் சென்றிருக்கின்றன. விவிலியத்தின் "உலக முடிவு" பற்றிப் பேசும் பகுதிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கப் படைகளின் சில அதிகாரிகள் தங்கள் துருப்பினருக்கு இது விவிலியத்தின் படி நடக்கும் போர், ட்ரம்பைக் கடவுள் இதற்காகவே எமக்குத் தந்திருக்கிறார் என்பதாக உரையாற்றியிருக்கிறார்கள். Military Religious Freedom FoundationMRFF Inundated with Complaints of Gleeful Commanders Tell...“This morning our commander opened up the combat readiness status briefing by urging us to not be “afraid” as to what is happening with our combat operations in Iran right now. He urged us to tell ourபல ஆயிரம் அதிகாரிகள் இருக்கும் அமெரிக்க இராணுவத்தில், சில பத்து "மறை கழண்ட கேஸ்கள்" அதிகாரிகளாக இருப்பது ஒன்றும் ஆச்சரியம் தரும் விடயமல்ல. இந்த முறைப்பாடுகள் வெளியே தெரிய வந்த பின்னர் தான் ஈரானுக்கு ஆதரவான தரப்புகள் இதை முன்னிறுத்தி, "முழு ஈரானிய நடவடிக்கையும் விவிலியத்தின் மீதான நம்பிக்கையின் படி நடக்கிறது!" என எழுதி வருகிறார்கள். 2015 இல் உருவான JCOPA, அதில் இருந்த ஓட்டைகளை ஈரான் பயன்படுத்தி அணுவாயுதம் நோக்கி நகர முற்பட்டமை, பின்னர் ட்ரம்ப் என்ன செய்வார் என்று புரிந்த பின்னரும் அணு ஆயுதத்தைக் கைவிட மறுத்தமை - ஆகிய முக்கியமான காரணங்களை இப்படியான ஒரு ஒற்றைச் "சணல் நூலை" ஆட்டி மடை மாற்ற, கடஞ்சா போன்ற ஆர்வக் கோளாறுடைய பூனைக்குட்டிகள் "சணல் நூலின்" பின்னால் துள்ளி கொண்டிருக்கிறார்கள்😂!
  8. வருடா வருடம் விளையாட்டுப்போட்டியை திறம்பட நடத்தி யாழ் களத்தை கல கலப்பாக்கும் கிருபனுக்கும் இம்முறை முதலாம் ரெண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கும் என்னை கீழே மிதிப்படாமல் காத்த வாதவூரானுக்கும் என் நன்றிகள் . கிருபனுக்கு மேலதிக பாராட்டுக்கள்.
  9. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஜயவேவா. - சீலரத்ன தேரர்.- காணொளி: 👉 https://www.facebook.com/reel/907114451932584 👈
  10. பகிர்வுக்கும், பங்களிப்புக்கும் மிக்க நன்றி.....!
  11. ஒவ்வாமை என்பது ஒரு அசௌகரியம் தான் என்றாலும் இக்காலத்தில் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் படியாக நாம் அனுமதிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் ஏற்படுத்தாத (non-drowsy) ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பல வந்து விட்டன. கீழ் வரும் மருந்துகளில் எவையாவது உங்கள் நாட்டில் கிடைக்கின்றனவா என்று தேடிப் பாருங்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே இவை மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடும். fexofenadine centrizine levocentrizine loratadine desloratadine
  12. வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி ! மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் இடம்பெற்று இருந்த நிலையில் , பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வியாபாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியினை ஓடி வந்தவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குறித்த வண்டியின் சாரதியிடம் மருத்துவ சான்றிதழ் இன்மையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சினிமா பாடல்களை ஒலி எழுப்பி செல்வதனால் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதனால் , வெதுப்பக வண்டிகளுக்கென்று பிரத்தியேகமான ஒலியினை வழங்கிய போதிலும் , அதனை மீறியதனால் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். https://athavannews.com/2026/1467673
  13. எனக்கும் ஒரு சின்ன சந்தேகம்.🤭இந்த தடவை யாழில் எழுதுபவர்களின் ஆக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது..அடிக்கடி ஞாபகபடுத்தல்கள் தேவை போலும்..✍
  14. புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போதே விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு, விஜய் கைதாக வாய்ப்பு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஊகங்கள் பொய்க்க அவர் விசாரணை முடிந்து சென்னை திரும்பினார். அதேவேளையில், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ அலுவலக வட்டாரங்களில், ‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் சில விவரங்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக விஜய்யிடம் மேலும் விசாரித்து, தெளிவு பெற வேண்டியுள்ளது. இதன் நிமித்தமாகவே அவர் மார்ச் 10-ல் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகங்களை சிலர் எழுப்பி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாகக் களம் காண திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தவெக தனித்து நிற்கிறது. தவெகவை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தமிழக பாஜக தரப்பில் காய் நகர்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய்க்கு சிபிஐ அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் - வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு
  15. 09 Mar, 2026 | 04:21 AM (இராஜதுரை ஹஷான்) கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருக்கும் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் டிஒபிஒ பிபி70 இலக்க நில அளவை வரைபடத்தின் 17,18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது. எனினும், 2026.03.06 ஆம் திகதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தஇ முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க,வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள் அத்துமீறல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் - ரவிகரன் | Virakesari.lk
  16. Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 12:56 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் அதிக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால், வெதுப்பக வண்டிகளுக்கென பிரத்தியேகமானதொரு ஒலியை ஏற்கனவே வழங்கியிருந்த போதிலும் அதனை அவர் கடைப்பிடிக்காததனாலும், பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக அதற்காகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனும், விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் பிரதேச சபையில் இடம்பெற்று இருந்த நிலையில், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வெதுப்பக உணவுப் பொருட்களை வியாபாரம் செய்ய வேண்டும் என அப்பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் ஏற்கனவே சகல வெதுக்கப உணவு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Virakesari.lk
  17. 09 Mar, 2026 | 04:35 PM யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 865 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர். அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி ; இருவர் கைது | Virakesari.lk
  18. 09 Mar, 2026 | 04:47 PM உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலை மாற்றங்களை எதிர்கொள்ளும் பலமான நிலையில் இலங்கை தற்போது உள்ளதாகவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், இலங்கை தற்போது மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அக்காலத்தில் 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன், மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை விடவும் சாதகமான நிலையில் உள்ளது. மேலும், பூச்சிய நிலையை நெருங்கியிருந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கான ஒரு முக்கிய கவசமாக அமைகிறது. எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலாத் துறையில் சரிவு மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் போன்ற சவால்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான அழுத்தங்களைக் கட்டுப்படுத்தவே மத்திய வங்கி நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகின்றது. இதன் மூலம் தேவையற்ற கேள்வி மற்றும் செலவு அழுத்தங்களை கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை செய்ய முடியும். எத்தகைய உலகளாவிய சவால்கள் ஏற்பட்டாலும், முறையான பணம், நிதி மற்றும் வெளிநாட்டு பொருளாதார கொள்கைகள் ஊடாக நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார். உலகளாவிய மசகு எண்ணெய் விலை அதிர்வுகளை சமாளிக்க இலங்கை தயாராக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு | Virakesari.lk
  19. 09 Mar, 2026 | 05:27 PM (எம்.நியூட்டன்) சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள். 2009-ல் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, அதன் சிதைவுகளையும் ஆவணங்களையும் உலகுக்கு வெளிப்படுத்தியதில் பெண்களின் துணிச்சல்மிக்க பங்களிப்பு மகத்தானது. ஈரான் இன்று இஸ்ரேல் மீது கொத்துக்குண்டுகளை வீசுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ள சூழலில், அன்று 22 நாடுகளின் துணையோடு தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதியை உலகம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக, ஐநா சபையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்த ஈரானின் நிலைப்பாட்டையும், ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றிய அமெரிக்காவின் தமிழர்கள் மீதான சார்பு நிலைப்பாட்டையும் நாம் நினைவில் வைத்து இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் வாக்களிக்கும் உரிமை கூட இல்லாத ஒரு இருண்ட யுகத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் எங்களை மீண்டும் பின்னோக்கித் தள்ளினாலும், எமது பெண்கள் தாய், தாரம், பிள்ளை எனப் பல பரிமாணங்களில் சமூகத்தை வழிநடத்துகிறார்கள் என்றார். ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது - சிறீதரன் | Virakesari.lk
  20. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னிரெண்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று (09)குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும், அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை | Virakesari.lk
  21. கொழும்பில், ஈரான் கப்பல் விவகாரம் --- --- --- *அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்! *டில்லி தமிழர் பக்கம் முழுமனதோடு இல்லை என்ற உண்மையை இனிமேலாவது ஏற்றுக் கொள்ளுங்கள்... *மிலிந்த மொறகொடவில் இருந்து ரில்வின் வரை... --- --- --- மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக, அதாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களுடன், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை பதவி வகித்திருந்தார். கோட்டாபய, ரணில் ஆகியோர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இவர், தூதுவராக இருந்தார். அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று. ஈழத்தமிழர் விவகாரத்தை, இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்றும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர். அத்துடன் --- தென்னிந்தியாவின் பெருங்கற்கால (Megalithic) வரலாறுகளை மேற்கோள் காண்பித்து ஆயிரம் ஆண்டு காலம் என்று கூறி, வரலாறுகளை திரிபுபடுத்தி சிங்களவர்கள் - ஆரியர்கள் என்ற இரு இனமும் இரடடையர்கள் (Twin civilization) அதாவது ”இரட்டை நாகரிகம்” என வரலாற்றை மாற்றியவர், இந்த மிலிந்த மொறகொட. 2009 இல் இறுதிப் போர் நடைபெற்ற போது இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல், மிலிந்த மொறகொட உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவை உருவாக்கி, போரில் தமிழர்களைப் பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான பணிகள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்ததாக, மகிந்தவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இவை பற்றி எல்லாம் எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் நான் பல தடவை சுட்டிக்காட்டி வருகிறேன். அக் கட்டுரைகள் இப்போதும் பொருந்துகின்றன. கூர்மை இணையத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் சஞ்சீவி ஞாயிறு இதழில்களிலும் உண்டு. எனது முகநூலிலும் பார்க்கலாம். அன்று மிலிந்த கையாண்ட அதை அணுகுமுறையை இன்று அநுர அரசாங்கமும் கையாளுகின்றது. அதன் காரண - காரியத்தோடு தான் இப் படத்தை இன்று மீள்பதிவு செய்தேன். கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், சிங்கள தலைவர்கள், வடக்கு கிழக்குத் தமிழர் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று தான் செயற்படுவர் என பல ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். ஊடகங்களுக்கு வழங்கிய பல நேர்காணல்களிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். ஆனால் -- தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள், தேர்தல் அரசியல் நோக்கில் மாத்திரமே ஒன்றினைவது அல்லது அப்படியான தோற்றத்தைக் காண்ப்பிக்கின்றனர். ஆனால், இந்தியாவை எப்படி கையாள்வது, குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் தான் பிரச்சினைக்குரியது. ஆனாலும், பாஜாக அரசாங்கத்தை அணுகுவது பற்றிய உத்தி ஒன்றை வகுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் பொருத்தமான பரிசோதனை செய்யப்படதாக தெரியவில்லையே? இப்போது காலம் கடந்து விட்டதே? ஆனால் சிங்கள தலைவர்கள், ஜேஆர் காலத்தில் இருந்து, இன்றைய அநுர வரையும் புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து ஒருமதித்த குரலாகக் கையாண்டு வருகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கொழும்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு துணிவோடு நேர்காணல் வழங்கிய பின்னர் தான், டில்லியில் மிலிந்த தூதுவராக பதவியேற்றிருந்தார். மிலிந்த எடுத்து வைத்த அதே அடியைத் தான், ரில்வின் சில்வா சென்ற மாதம் இந்தியாவுக்கு சென்று இன்னும் ஒருபடி மேலே காய் நகர்த்தியிருக்கிறார். அதேவேளை, இதே மிலிந்ததான், 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சு நடைபெற்றபோது, உலகம் எல்லாம் சென்று, தமிழர்களின் போராட்டம் ”இனவாதம்” ”பயங்கரவாதம்” என்று கூறி இராஜதந்திரப் பிரச்சாரம் செய்தவர். ஆகவே -- 2009 ஆம் ஆண்டு புவிசார் அரசியலும், 20026 ஆம் ஆண்டு உருவாகியுள்ள புவிசார் அரசியல் பதற்றமான சூழலும், இலங்கைக்குச் சாதகம் தான். ஈரான் கப்பல் விவகாரத்தை அநுர கையாண்ட விதம் முட்டாள் தனமானது என சில விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் -- இந்திரா காந்தி காலத்தில் இருந்து புதுடில்லி, கையாளும், இரட்டைத் தன்மையான சர்வதேசக் கொள்கைக்குள் (Dual International Policy) புகுந்து கொண்டு தான், இலங்கை சீவியம் நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். (இரட்டை சர்வதேசக் கொள்கை என்பது புவிசார் அரசியல் சூழலைப் பொறுத்து) இந்திரா காந்தி காலத்தில் இருந்து, டில்லி முழு மனதோடு தமிழர் பக்கம் இல்லை என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். மலையகத் தமிழர் விடத்திலும் இந்தியா ஒப்பாசாரமான தலையசைப்புத் தான். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0b7rQtxsCbX5VCgouPij4QhUnKt2yo2fq96hhFXneu86dcJ3PDkxKTmUpPXjVPgYbl&id=1457391262&mibextid=wwXIfr
  22. லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது?] அமெரிக்கா லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கியதா ஈராக்கில் சதாம் என்ற சர்வாதிகாரியை அகற்றும் நடவடிக்கையில் யுகே அவுஸ்ரேலியா போன்ற மேற்கு நாடுகள் தான் அமெரிக்காவுடன் சேர்ந்து பங்குபற்றின
  23. சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலையில் அந்த மக்கள் இப்போது. சுதந்திரம் என்று கூவிக்கொண்டு போனவர்கள், அந்த மக்களை அந்தர வழியில் அம்மோ என்று விட்டு வெளியேறிவிட்டார்கள் தங்கள் வேலை முடிந்தவுடன். ட்ரம்பும் நெதன்யாகுவும் பதவி விலக வேண்டுமென அவர்களது மக்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
  24. இதையே எத்தனை நாளைக்கு அறுந்த இசைத்தட்டு போல சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். ஈரானிய மொத்த சனத்தொகை எவ்வளவு? அதில் எத்தனைபேர் வந்து அமெரிக்காவிடமும் இஸ்ரயேலிடமும் தமக்கு சுதந்திரம் பெற்றுத்தர கேட்டார்கள்? எத்தனைபேர் காமெனியின் இறப்பை வீதிக்கு வந்து கொண்டாடினார்கள். ஏன் ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றினால் அமெரிக்காவில் மக்கள் கூடி கொண்டாட மாட்டார்களா? வடகொரியாவிடமும்தான் அணுஆயுதம் இருக்கிறது. தன்னை யாராவது தாக்கினால் தான் அதை பாவிப்பேன் என்கிறது. அதில் பிழை எதுவும் இல்லையே! ஈரானிடம் அணுஆயுதமே இல்லை. பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கத்தான் போர் என்கிறது அமெரிக்கா. ஏன் அது உலகில் வேறு யாரிடமும் இல்லையா! தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு நாடு அதை உருவாக்குவதில் என்ன தவறு கண்டீர்கள்! இதில உக்கிரேனுக்கு ரஷ்யா அடித்ததற்கு கூப்பாடு வேறை!! சுதந்திரம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று கூவிக்கொண்டு போர் தொடுத்த ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேனும் பாலும்தான் ஓடுகிறதா!!
  25. சரியான காசு தான்.... ஆதலால் தான், கை பொருத்தினாக்கள் குறைவோ, என்ன?
  26. சந்தேகம் சின்னதாக இருந்தாலும் தொகை பெரிது. 35,000 யூரோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.