Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு Jan 12, 2026 - 07:55 AM பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதனை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின் பிறப்பாக்கிகள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரம் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கியின் ஊடாக மாத்திரமே தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, மற்றுமொரு மின் பிறப்பாக்கி இன்னும் செயலிழந்த நிலையிலேயே உள்ளதோடு, அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmkajj25o03sio29nahjma7hd
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  4. ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 10:55 AM ஈரானில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என மனி உரிமைக்குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்கபித்த மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. போராட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில்,வத்திக்கான நகரில் போப் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார். இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/235808
  5. வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம் Jan 12, 2026 - 07:29 AM வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த ஆண்டு முதல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையை மாற்றும் போதும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை உழவு இயந்திரங்கள், டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளீடு செய்தல் வேண்டும். இந்தச் சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அது ஒத்திவைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkailmsc03sho29nug9qsbu1
  6. இலங்கைத் தமிழர்களுக்காக மோடிக்கு கடிதம் அனுப்பிய ஸ்டாலின் Jan 11, 2026 - 07:16 PM இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தமது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனை தங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் முதலமைச்சர் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது * இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்); * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்); * தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும் * மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்; போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmk9sf6fs03s8o29nyiayk34q
  7. வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணி ஆரம்பம் Jan 11, 2026 - 06:20 PM டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியில் இருந்து, இந்த முதற்கட்டப் புனரமைப்புப் பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில்வே கட்டுமான நிறுவனத்தினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு ரயில் மார்க்கம் மஹவ முதல் ஓமந்தை வரை, ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை, மதவாச்சி முதல் மன்னார் வரை என மூன்று கட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk9qetq303s6o29n4jq9gfrd
  8. கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்! Published By: Digital Desk 1 12 Jan, 2026 | 11:06 AM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235812
  9. சச்சினை விஞ்சி புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி - நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார். 13 நிமிடங்களுக்கு முன்னர் "விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது." ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கோலி குறித்து இவ்வாறு பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் தொடங்கிய விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பயணம், வதோதராவிலும் தொடர்ந்தது. இதன் மூலம் சங்கக்காராவை முந்தி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வதோதரா ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். வதோதரா ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி 25 ரன்களைக் கடந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், சச்சினை விஞ்சி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 644 இன்னிங்ஸ்களையும், சங்ககாரா 666 இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொண்டனர். ஆனால், விராட் கோலி வெறும் 624 இன்னிங்ஸ்களில் 28 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விராட் கோலி, சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அவர், அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்த கோலி, அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசினார். மூன்றாவது போட்டியில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக 'தொடர் நாயகன்' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 54வது சதத்தை அடிக்கத் தவறவிட்டார், அவர் 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பான சாதனையைப் படைத்த விராட் கோலி, இது குறித்து கூறுகையில், "எனது ஒட்டுமொத்தப் பயணத்தையும் திரும்பிப் பார்த்தால், இது ஒரு கனவு நனவானது போல உள்ளது. எனது திறமையின் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். இருப்பினும், இந்த நிலையை அடைய நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், நான் தற்போது எந்த சாதனைகளைப் பற்றியும் யோசிக்கவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அதிரடியாக விளையாடியிருப்பேன். அனுபவம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அணியை வெற்றி பெறச் செய்வதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது," என்று தெரிவித்தார். கில் மற்றும் ஸ்ரேயாஸ் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரைத் தவறவிட்ட பிறகு, கேப்டன் சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரில் வெற்றிகரமாகத் திரும்பினார். 301 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் கிடைத்த நல்ல தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அவர் 29 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். அதன் பிறகு, கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 107 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த பிறகு சுப்மன் கில்லால் தனது இன்னிங்ஸை நீண்ட நேரம் தொடர முடியவில்லை, அவர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லைத் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார். அணியின் துணை கேப்டனான ஐயர் 49 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது. கோலி ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 234 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வெறும் எட்டு ரன்கள் இடைவெளியில் இந்தியா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஹர்ஷித் ராணா 23 பந்துகளில் 29 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்துப் பேசிய சுப்மன் கில், "விராட் கோலி இப்போது பேட்டிங் செய்யும் விதம், அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் விராட் கோலி அதை மிக எளிதாக மாற்றிக்காட்டினார்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05kk0gwdwo
  10. Today
  11. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆசனங்கள் வன்னி மாவட்டம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைபையும் கைப்பற்றியுள்ளனர். தற்போது கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. நாடும் அநுரவோடு ஊர் எங்களோடு என்று தேர்தல் காலங்களில் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஊரும் அநுரவோடு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. Tamilwinமுல்லைத்தீவையும் விட்டு வைக்காமல் தமிழர் பகுதிக்குள் ஆழமா...ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி ம...
  12. அமெரிக்க கப்பல் வருகிறது என்ற கருத்து 2009 மாசி மாதம் நான் அறிந்தது. அப்போது நான் இரணப்பாலையில் இருந்தேன். அதன் திட்டம் என்னவென்றால், தலைவரையும் கட்டளையாளர்களையும் ஒரு கப்பலில் ஏற்றிச்செல்வது என்றும் போராளிகளையும் இன்ன பிற முக்கியமானவர்களையும் திருமலையில் அமெரிக்க பாதுகாப்பில் வைப்பது என்றும் அதன் மூலம் ஏதோ செய்வது என்றும் தான் தகவல் பரவியது. அதனால், கடலுக்குள் அமெரிக்க கப்பல்கள் வந்தால் என்னவிலை கொடுத்தும் அவற்றை எதிர்கொள்ள கடற்புலிகளை தயாராகுமாறு தலைமையிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்.. எனினும் அவ்வாறு அமெரிக்க கப்பல்கள் ஏதும் இறுதிவரை வரவில்லை!
  13. அமெரிக்க ராணுவம் ஈரானில் இறங்க தயாராகிறது. பூட்டினுக்கு இன்னொரு விருந்தாளி கிடைக்கப் போகிறார்.
  14. ஓரினச் சேர்க்கை முற்போக்கான சிந்தனை என்று இடது கையால சாகப்பிடுகின்றவர்களோ அல்லது வலது கையால் சாப்பிடுகின்றவர்களோ அப்படி ஒருபோதும் வாதிடவும் இல்லை அப்படி சொல்லவும் இல்லை . பத்திரிகையாளர்- அ.நிக்ஸன் அடிச்சுவிடுகிறார். சிவன் ஆண் கடவுளுக்கும் விஷ்ணு ஆண் கடவுளுக்கும் பிறந்த ஐயப்பன் கடவுள் காலத்தில் இருந்தே உலகில் இருந்து வருகின்ற உண்மையை தான்... அப்படியானவர்கள் மனிதர்களிடமும் இருக்கின்றார்கள் சக மனிதனாக அவர்கள் உரிமைகள் பாதுகாக்கபட வேண்டும் என்றே சொல்கின்றார்கள்
  15. Yesterday
  16. இவ்வளவு காலமும் இனவாத சிங்களத்திற்கு சார்பாக இயங்கிய மனிதனின் இன்னொரு முகமூடி உடைக்கப்பட்ட தருணம்.
  17. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை சோனியா உயிருடன் இருந்தும் பிரயோசனமில்லை.இறந்தும் பிரயோசனமில்லை. சோனியாவை திட்டியும் பிரயோசனமில்லை...திட்டாமல் விட்டாலும் பிரயோசனமில்லை. ஈழத்தில் சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ இனக்கலவரங்கள்,இன அழிப்புகளை கடந்து வந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அந்த அடிப்படையில்..... பாதிக்கப்பட்டவன் திட்டுவதும் பாதிக்கப்படாதவன் நியாயம் பேசுவதும் உலக வழக்கம்.
  18. *வெனிசுலா விவகாரமும் இடதுசாரிகளும் *ஆங்கில பாடநூல் தவறுக்காக பிரதமர் ஹரிணிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய திணிப்பு மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு பாடநூல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே! *இடதுசாரி நாடுகளில் புலிகளை அமெரிக்க கைக் கூலி என்று பொய்ப் பிரச்சாரம் செய்த தயான் ஜயதிலக. *சுயநிர்ணய உரிமையை மறுத்து ”ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்” என்று மட்டுப்படுத்தும் இடதுசாரிகள்... -- --- ----- வகுப்பு ஆறுக்குரிய கல்விச் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட சில தவறுகளுக்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோசம் எழுப்புகின்றனர். ஆக, இது பலவீனமாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியல் நாடகம் என்பது கண்கூடு. அதாவது, மாணவர்களின் எதிர்கால நலன் நோக்கில், இந்த எதிர்க்கட்சிகள் செயற்படவில்லை. மாறாக அடுத்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் கொண்டவை என்பது பகிரங்கமானது. ஆனால், கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரிகள், சில கம்யூனிசிட்டுகள் ஹரிணிக்கு ஆதரவாக பேசுவது தான் இங்கே வேடிக்கை. குறிப்பிட்ட சில தமிழ் இடதுசாரிகளும் இதில் அடங்குகின்றனர். குறிப்பாக, ஆங்கில பாடநூலில் அச்சிடப்பட்டுள்ள, இயற்கைக்கு மாறான LGBTO எனப்படு்ம் ஓரினச் சேர்க்கை முறையை முற்போக்கான சிந்தனை என்றும் சில இடதுசாரிகள் வாதிடுகின்றன. அத்துடன், வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தமைக்கு எதிராகவும் இந்த இடதுசாரிகள் சில தமிழ் இடதுசாரி இயக்கங்களுடன் சேரந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆனால், இந்த குறிப்பிட்ட இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் வாதிகள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கின்றனர்? குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சில சம்பவங்கள் பின்வருமாறு- (1) தமிழ்மொழி, சைவ சமயம் ஆகிய இரண்டு பாடநூல்களையும் தவிர, ஏனைய அனைத்துப் பாடநூல்களும் சிங்கள மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் சிங்கள மொழிச் சொல்லாதிக்கங்கள் பாடநூலில் காணப்படுகின்றன. பாடநூல் தயாரிப்பு பற்றிய சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு பாடநூல்கள் மொழியெர்க்க முடியாது என வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் பல கூட்டங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார். (2) வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல். அதுவும் தையிட்டடி விகாரை தொடர்பாக பல எதிர்ப்பு போராட்டங்கள் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (3) 2019 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மொழி மூல வரலாற்று பாடநூலில் முற்று முழுதாக பௌத்த சமய வரலாறுகளும் யாழ்ப்பாண இராஜ்ஜியம் உள்ளிட்ட தமிழ் மன்னர் வரலாறுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. (4) 1978 ஆம் ஆண்டில் இருந்து அதாது ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களும் புதிய மகாவம்சமாக தொகுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழர்கள் இலங்கையில் வந்தேறு குடிகள் என்றும், பௌத்த சமயம் பற்றிய திரிபுபடுத்தல்களும், வடக்கு கிழக்கு பௌத்த பிரதேசம் எனவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. (5) தற்போது நடைமுறையில் உள்ள வரலாற்று பாடநூலுக்குரிய ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கை நூலில், 1978 இல் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப் பகுதி, அதாவது போர் நடைபெற்ற கால சம்பவங்கள் மகாவம்சம் என மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது. (6) தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும், சீனா, கொரியா போன்ற நாடுகளின் கப்பல்களை புலிகள் கடலில் மூழ்கடித்ததால் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்றும் கற்பனையில் பொய்யான வரலாறுகள் புதிய மகாவம்சத்தில் எழுதப்பட்டுள்ளன. ((7) கொழும்பை மையப்படுத்திய அரச தொல்லியல் திணைக்கள பிரதான இணையத் தளத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆவணச் சின்னங்கள் இல்லை. அத்துடன் இலங்கைத்தீவு பற்றிய சிங்கள மயப்பட்ட வரலாறுகள் அத்தனையும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மாத்திரமே உண்டு. இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வருகிற அநீதிகள் பற்றிய பல ஆதாரங்கள் உண்டு. ஆனால், இவை பற்றியெல்லாம் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் - சிங்கள இடதுசாரிகள் பேசுவதில்லை. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வீரர்களாக தங்களை காண்பிப்பர். சிங்களவர்கள், ஈழத்தமிழர், முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கத்தால் இழைக்கப்பட்டு வரும் அநீதி என்ற பொதுச் சொல்லாடலில், இந்த இடதுசாரிகள், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை மழுங்கடித்து வருகின்றனர். ஆனால் சிங்கள இடதுசாரிகள், இடதுசாரி சோசலிச கொள்கையுடைய தென் அமெரிக்க, நாடுகளுக்குச் சென்று, இலங்கைத்தீவு ஒரு சோசலிச நாடு என்றும், விடுதலைப் புலிகள் அமெரிக்க சிஐஏயின் கைக் கூலிகள் எனவும் பிரச்சாரம் செய்து, அந்த அரசுகளை இலங்கைக்குச் சாதகமாக மடைமாற்றியிருந்தன. வெனிசுலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் (Hugo Chávez) விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு, இடதுசாரித் தன்மை கொண்ட, இலங்கை இராஜதந்திரியான தயான் ஜயதிலக பிரதான காரணமாவார். அமெரிக்க இடதுசாரியான வழக்கறிஞர் ஈவா கொலிங்கர் (Eva Golinger) விடுதலைப் புலிகளை அமெரிக்க கைக் சூலி என்று விமர்சனம் செய்து வெனிசுலா, கியூபா போன்ற நாடுகளை புலிகளின் அரசியல் விடுதலை போராட்டத்திற்கு எதிராக திசை திருப்பினார். அதற்கு தயான் ஜயதிலக கியூபாவில் இலங்கைக்கான தூதுவராக இருந்த தமரா குணரெட்னம் ஆகியோர் காரணமாக இருந்தனர். ஆனால், 1997 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருந்தது. செய்திருந்தது. ஆனால், அமெரிக்கா தனது லாப நோக்கில் புலிகளை தடை செய்தது என்ற பிரச்சாரங்களை இவர்கள் முன்னெடுத்து, தென் அமெரிக்க இடதுசாரி கொள்கை கொண்ட நாடுகளை புலிகளுக்கு எதிராகத் திருப்பினர். வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் 2013 ஆம் ஆண்டு மே மாதம், 58 வயதில் உயிரிழந்ததும், நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஆனால் ஹகோ சாவேஸ், தமிழர்களுக்கு எதிராக கையாண்டு வந்த அதே உத்தியை தான், மதுரோவும் கையாண்டார். இப் பின்புலம் தெரியாத காரண காரியத்தாலேயே, ஈழத்தமிழர்கள் பலர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு எதிரான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கின்றனர். ஆகவே, தயான் ஜயதிலக போன்ற இராஜதந்திரிகள் இடதுசாரித் தன்மை கொண்ட நாடுகளில் இலங்கையை, சோசலிச நாடாகவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ கொள்கை மற்றும் கலப்புமுறை பொருளாதார தன்மை கொண்ட நாடு என்ற முறையிலும் கற்பிதம் செய்து புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலிலும் இப் பிராச்சாரம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தமிழ் இடதுசாரிகளுக்கும் நன்கு புரியும். தங்களை தூய இடதுசாரிகளாக காண்பித்துக் கொண்டும், ”அநீதி”, ”ஒடுக்குமுறை” ஆகியவற்க்கு மாத்திரம் எதிரான போராட்டகளை நடத்தி, அதன் ஊடாக சிங்கள இடதுசாரிகள் எவ்வளவு நுட்பமாகத் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் தரத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதையும், தமிழ் இடதுசாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் யதார்த்த அரசியல் பற்றி பேசுவோம் என்று வாதிடும் தமிழர்கள் மூடி மறைக்கின்றனர். இந்த இடதுசாரிகளின் நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகள் பற்றி தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை, முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் பல உயிர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாத்தது. ஆனால் கவலை வெளியிட்டது. அத்துடன் ஏதோ ஒரு மனட்சாட்சியின் பிரகாரம், ஐநா பாதுகாப்புச் சபையை கூட்ட முற்பட்டபோது, அமெரிக்க - இந்திய அரசுகள் அதனைத் தடுத்தன. இது பற்றியெல்லாம் கண்டித்து, கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. (அமரர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் செந்திவேல் ஆகியோரை மையப்படுத்திய இடதுசாரிகள் பலமாகக் கண்டித்தார்கள். சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றனர்) அதேவேளை, 2009 இல் போர் முடிவடைந்து, 2010 இல் ஐநா நியமித்த நிபுணர்குழு, முள்ளிவாய்காலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐநாவும் சர்வதேசமும் தடுக்கத் தவறியதாக அறிக்கையில், சுட்டிக்காட்டியிருந்தது. அதேபோன்று, காசாவில் இஸ்ரேல் படுகொலைகளை செய்தபோதும், ஐநா அமைதிகாத்தது. நிவாரண உதவிகளை மாத்திரம் அனுப்பியது. கவலை வெளியிட்டது. ஆனால் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலை ஐநா பலமாக கண்டித்திருந்தது. இப் பின்னணியில் தான்-- வெனின்சுலா நாட்டின் ஜனாதிபதியை அமெரிக்கா , சர்வதசச் சட்டங்கள் - நியமங்களுக்கு மாறாக கைது செய்து, தமது நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியமை, ஏனைய சிறிய நாடுகளுக்குப் பாரிய அச்சுறுததல் என்று உரக்கக் கூற வேண்டும். அத்துடன், இது அரசு அற்ற ஏனைய தேசிய இனங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒடுக்குமுறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இலங்கை - இஸ்ரேல் போன்ற அரசுகள், தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசிய இனங்களை மேலும் ஒடுக்கவும், ’ஐநா விதிகள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை மீறி, தமது அரசு என்ற கட்டமைக்குள் அந்த தேசிய இனங்களை மேலும் அடக்கி ஆளவும் அமெரிக்கச் செயற்பாடு வழிவகுத்துள்ளது. உதாரணமாக -- 2012 ஆம் ஆண்டில் இருந்து, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் எதனையும் இலங்கை அரசு உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. 2024 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் எந்த ஒரு உத்தரவுகளையும் இஸ்ரேல் அரசு அமல்படுத்த விரும்பவில்லை. மாறாக காசா மீது தொடர்ந்து இன அழிப்பு போரை இஸ்ரேல் நடத்துகிறது. ஆகவே, இலங்கை - இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மேலும் ஒரு துணிச்சலை அமெரிக்கச் செயற்பாடு கொடுத்துள்ளது. ஆகவே, இடதுசாரிகள் காசா, வெனிசுலா போன்ற வெளிநாடுகளில் நடக்கும் இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது போன்று. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை 1920 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வரும் அநீதிகளுக்கு எதிராகவும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் குரல் எழுப்ப வேண்டும். அதற்கு தமிழ் இடதுசாரிகள்- கம்யூனிஸ்ட்வாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0S9YX23yRiTie8nJocaEhSyuDPbvraEZb4Nh6QHvVdEre9f92aowoeot6QXtDQ2iAl&id=1457391262
  19. இதுமட்டும் இல்லை என நினைக்கிறேன். கொழும்பு-பொல்கஹாவல-பதுளை மார்கம் மெயின் லைன் எனப்படும். பொல்கஹாவல-காங்கேசந்துறை நோர்தெர்ன் லைன். மதவாச்சி-தலைமன்னார் - மன்னார் லைன். இரெண்டு லைனும் திருத்த வேலை நடக்குது ணெந் நினைக்கிறேன். புயலுக்கு முன் தினமும் 4(5? ) ரெயின் ஓடிய நிலையில் இப்போ 2 தான் ஓடுது?
  20. அமேரிக்கா வெனிசுவேலாவை முழுதாக அனுபவிக்க நினைக்கின்றது சுமந்திரன் தமிழரசுக் கட்சியை முழுதாக அனுபவிக்க நினைக்கின்றார் இடையில் மதுரோவும் ஸ்ரீதரனும் சிக்கிக் கொண்டார்கள் இந்த நான்கு பிரிவிலும் யார் சிறந்த கொள்ளைக்காரன் என்பது தான் இன்றைய போட்டி மக்கள் நிலை படு மோசம்
  21. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் முக்கி அங்கம் வகித்திருந்த தமிழரசுக்கட்சி 2009 போர் முடிந்து இரத்தம் காயுமுன்னர். அந்தப் போரினை நடத்திய பிரதான இராணுவத்தளபதிக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோரியிருந்தது. இந்த முடிவுகளை சம்பந்தரும் சுமத்திரனுமே எடுத்திருந்தனர். இதனை விமர்சித அனந்தி,ரவிகரன் போன்றவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினர். பின்னர் ரணிலின் அரசாங்கத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கினார்கள்.வரவுவெசவுதிட்டம்,ரணில்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தார்கள்.இதற்கெல்லாம் யார்நடவடிக்கை எடுப்பது. கட்சியைக் கோரட்டிலே கொண்டுபோய் நிறுத்தி தலைவர் செயலாளர் இல்லாமல்கட்சியை தன்பிடியில்வைத்துக்கொண்டு சுமத்திரன் செய்யும் நாட்டாண்மை தமிழ்மக்களால் சீரணிக்க முடியாததது. பல கட்சி உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளில் பயணிக்கிறார்கள்.கட்சித்தலைவர் மாவை க்கு அறிவிக்காமல் கடந்த முறை கலையரசனைத் தன்னிச்சையாக தேசியப்பட்டியல் எம்பி ஆக்கியது. கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய செயல்தானே.அதற்கு கட்சி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வில்லை. இனி சிறிதரன் விடயத்திற்கு வருவோம். சிறிதரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அதனை மக்கள் பார்த்துக்கொள்ளட்டும்.மக்களே அவரைத் தெரிவு செய்துள்ளார்கள். அவர்களே தணடைனையைக் கொடுக்கட்டும்.பதவி இல்லாத காரணத்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தச் சொல்லிக் கேட்கிறார். இதனை அவர் ரணில் அரசுக்கு நிபந்தனை இன்றி ஆதரவு வழங்கிய போதே கேட்டிருக்கலாம்.
  22. தேர்தல் நெருங்கும் வேளையில் இவ்வாறான கெடுபிடிகள் ஏற்படுத்துவது சுமந்திரனின் வழக்கம். அகம்பாவம் கொண்ட சுமந்திரன் ஒரு தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சி, கூட்டுக்கட்சிகளை விட்டு தனியாக போட்டியிடுமென்று தன்னிச்சையாக அறிவித்தார், அடுத்து ரவிராஜின் மனைவியை ஓரங்கட்ட கிளம்பி ஒரு கோமாளியையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க வழியமைத்தார், இப்போ சிறிதரனில் பலகட்சிகள் பயத்தில் இருக்கின்றன. சிறிதரனை, சிறி நேசனை கட்சியிலிருந்து விலக்கிவிட்டால் அந்த வாக்குகள் தமக்குச்சேரும் என கனவு கண்டு, மக்கள் வேறொரு கட்சியை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறார்கள். இவரது கடைசி முயற்சி இது மட்டுமல்ல பொறாமையும் பயமும் கூட. தமக்கு பதவி வேண்டுமென்றால் இல்லாத பதவிகளையும் ஏற்படுத்தி அனுபவிப்பார்கள், மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் இல்லாத குற்றச்சாட்டுக்களும் சேறடிப்புகளும் செய்வார்கள். அங்காலை ஒருவர் ஜனாதிபதி கனவில் என்ன செய்வதென்று தெரியாமல் வெறிபிடித்து ஆடுகிறார், இங்காலை இவர் முதலமைச்சர் கனவில். பதவி கொடுக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்த இவர், பதவியை குறிவைத்து மற்றவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுகிறார் என்பதே உண்மை. சிறிதரனைதெரிந்தெடுக்கும் மக்கள், அவர் எந்தக்கட்சியில் தேர்தலில் நின்றாலும் தெரிந்தெடுப்பார்கள். இவர்கள் நினைப்பதுபோன்று தமிழரசுக்கட்சி என்பதாலேயே மக்கள் அவரை தெரிந்தெடுப்பது என்பது பொய் என்பதை, சாவகச்சேரியில் மக்கள் நிரூபித்து விட்டார்கள். கட்சியை இல்லாமற்செய்வதே இப்படியான கறையான்கள்தான். மக்கள் தங்களுக்கு சேவை செய்பவர்களைத்தான் தேர்தெடுப்பார்கள், சும்மா இருப்பவர்களையல்ல. நமது கட்சியைத்தான் மக்கள் தெரிந்தெடுப்பார்கள் என கட்சியின் பெயரை குத்தகைக்கு எடுத்துவிட்டு சும்மா இருந்துவிட்டு வாக்குசேகரித்த காலம் மலையேறி பல கட்சிகளை உள் இழுத்து விட்டிருக்கிறார்கள். பின் மக்களை குறை கூறுவது. தாமும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.
  23. சோனியா காந்தி அம்மையார் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கு கூறும் இடத்தில் உள்ளவர் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து செய்த இனப்படுகொலைக்குச் சாட்சியும் அவரே. அவர் விரவிவில் குணமடைந்து வெளி வந்து ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு மன்னிப்பினைக் கோர வேண்டும் என்று இறைவனைக் கேட்டுக் கொள்கின்றேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.