Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. அங்கே. யாரை. நிறுத்தினாலும். இப்படிப்பட்ட. கதைகள். வரத் தான். செய்யும். விசுகர். எங்கே. போய்விட்டார். நித்திரையா. ? இலங்கை. தமிழரிடம். கேட்கப்படாது. என்பது. சரியான. கருத்து. தமிழ். நாட்டில். சீமான். சேகரிக்கலாம். வீடும். தோட்டமும். . வேறு. சொத்துகளும். வேண்டலாம்.
  3. இதை எழுதியமைக்காக அர்ஜுன், ஜூட், என் போன்றோரை நீங்கள் என்ன வாங்கு வாங்கினீர்கள் என்பதை… நினைக்கிறேன்… சிரிக்கிறேன்… அன்று நீங்கள் எழுதிய கருத்துக்கும் இது பொருந்தும்😂
  4. சீமான் காமராஜர் படத்தை போட்டு பிச்சை எடுத்தால் எடுக்கட்டும். தலைவர் படத்தை போட்டு ஏன் பிச்சை எடுக்கிறார் என்பதே அவர் திரள்நிதி திரட்டுவதை ஈழ தமிழர் எதிர்க்க காரணம். மாவீர தினம் நடத்தி அதில் பிச்சை எடுத்தவர் சீமான். அந்த காசு யாருக்கு பயன் பட்டது? ஏதாவது ஒரு முன்னாள் போராளிக்கு? மாவீரர் குடும்பத்துக்கு? இல்லை - அவர் காப்பி தோட்டம் வாங்கவும், பஜரோ ஜீப் வாங்கவும், நீலங்கரையில் ஆறு கோடிக்கு மாளிகை வாங்கவும், அதில் ஒரு குட்டி மிருக காட்சிசாலை போல் வைத்திருக்கவும், மகன்களை தனியார் ஆங்கில பள்ளியில் சேர்க்கவும், குடித்து வெறித்து விட்டு பொட்டம்மானை தூசணத்தில் ஏசவும்…விஜி அண்ணிக்கு மாசம் 50,000 கொடுத்து ஆபாச ஆடியோவை பெறவும்.. தலைவர் படத்தை போட்டு எடுத்த பிச்சையை பயன்படுத்தினந்ல் அதை கேட்கத்தான் வேண்டும். தலைவர் படத்தை சீமான் போடாமல் இருந்தால் கூட சீமான் இப்படி உண்டியல் குலுக்கியபடியே, 20 வருடமாக ஒரு வேலையும் செய்யாமல் சொத்து மேல் சொத்து குவிப்பதை யாரும் கேள்வி கேட்கலாம். அப்படி பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு யாரோ காசு கொடுக்குறார், ஓபிஎஸ் சுக்கு சேகர் ரெட்டி கொடுத்தால்…உனக்கு ஏன் குமட்டுது எனவும் கேட்கலாம். பொதுவெளியில் உள்ளவர் பணவிசயத்தில் இப்படி களவாக நடந்தால் ஒரு பொதுமகனுக்கு குமட்ட வேண்டும். இது எனக்கு குமட்ட கூடாது என்று சொல்பவர்கள், தாமும் பொது சொத்தை எப்படி கையாண்டார்களோ என்ற சந்தேகம் கூட எழ வாய்ப்புள்ளது.
  5. ஜேர்மனியின் ஜனநாயக சகதியில் கிடந்து கஸ்டபடாமல், வடகொரியா, ரஸ்யாவுக்கு போறது அண்ணை? எதுவும் வேண்டாம். கொஞ்சம் சர்வாதிகாரம் கூடிய நாடு ஹங்கேரி. ஈயு நாடு எனவே நீங்கள் நாளைக்கே அங்கே போகலாம். மொழி பிரச்சனையிம் குறைவு. செய்வீர்களா?
  6. Yesterday
  7. நீங்கள் தனியே குண்டுச்சட்டிக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றீர்கள். விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான். திருகோணமலையில்Voice of America தளம் அமையவிருக்கும் போது அதை எதிர்க்காமல் இருந்திருந்தாலே இன்றும் உயிர்ப்புடன் இருந்திருப்பார்கள். அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்... இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்...
  8. குள்ளன் எப்ப அணுகுண்டு பரிசோதனை செய்யுறான்...எப்ப ரொக்கற் பரிசோதனை செய்யிறான் எண்டு தெரியாத மேற்குலகத்தினருக்கு..... அங்கை நடக்கிற சம்பவங்கள் எப்பிடி தெரிய வந்திருக்கும்????? எல்லாம் அவன்ர ஊடகம் சொன்னாப்பிறகுதான் இவையள் கொக்கரிக்க ஆரம்பிப்பினம்.😂 இவ்வளவு கதைக்கிறவையள் ஏன் சீனாவில் நடக்கும் அவலங்களை பற்றி கதைக்கிறேல்லை?😎 வடகொரியா கொடுமை என்றால் தென்கொரியாவில் ஊழலும் கொள்ளையும் வருடாந்த திருவிழா போல்..... ஒவ்வொரு வருடமும் அரச அதிகாரிகளையும் பிரதம மந்திரிகளையும் சிறையில் அடைப்பது வழக்கமாகிக்கொண்டு வருகின்றது. உலகில் எல்லா மனித இனங்களும் ஒரே குணத்தை உள்ளவர்கள் அல்ல. ஒரு சில இனங்களுக்கு சொன்னால் புரிந்து செய்வார்கள்.பல இனங்களிற்கு பிரம்பும் கையுமாக இருக்க வேண்டும். இதுதான் இன்றைய உலகிற்கு அவசியமாகிறது. ஜனநாயகம்,சுதந்திரம் எனும் பெயரில் இன்றைய உலகில் நடக்கும் யுத்தங்களை பார்க்கும் போது.... கட்டுப்பாட்டுடன் வாழும் உலகம் சிறந்ததாகவே தெரிகின்றது.
  9. விட்டுத்தள்ளங்கள் விசுகர்! கட்சி நிதி என்பது எல்லா நாடுகளிலும் உள்ள விடயம். அநேகமான நாடுகளில் கட்சி அங்கத்தவர் சந்தா கட்டணம் கட்டாயம் எனும் ஒரு விடயம் உள்ளதை தெரியாமல் பரிதவிக்கின்றார்கள். தமிழ் நாட்டில் ஏனைய கட்சிகளின் நிதி சேகரிப்புகளை அறியாமல் பேசுகின்றார்கள்.
  10. இந்த அன்பான மக்கள் தலைவனை பார்த்து வியந்து அதனால் கவரபட்ட சீமானும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக இருக்கும் என்று இன்று 19 அறிவித்துள்ளார்.
  11. பகிரங்கமாக கேட்கிறார் கொடுக்கிறார்கள். இது கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் ஒன்றுமே பேசாதபோது நமக்கு ஏன் குமட்டுது???
  12. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார் விஸைக்கு தாங்கள் கணித்த வாக்குசதவீதம் விஸை காங்கிரசுடன் கூட்டணிவைத்தால் என்று கருத்துக்கணிப்பை வைத்து விட்டு பிறகு விஜையின் வாக்கு சதவீதம் என்றுஅடிச்சு விட்டிருக்கிறார். ஒரு கருத்துக்கணிப்பையும் நம்ப முடியாது. எல்லாமே கருத்துத்திணிப்புதான்.இதுவரை வந்த கருத்துக்கணிப்புகளில் கட்சியே தொடங்காத ரஜனி அரசியலுக்கு வந்தால் யாருக்கு வாக்குப் போடுவீர்கள் என்றெல்லாம் கருத்துத்திணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அங்கே நாதக இருக்காது மற்றையவர்கள் என்று இருக்கும். இதை எல்லாம் மீறி தனித்து நின்று தேர்தல் ஆணையத்தால் கட்சி அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட பல கருத்துத்திணிப்புகள் நாதகவை மற்றவர்கள் என்ற வகைக்குள்தான் வைத்திருக்கறார்கள். ஊடகங்களும் 3 முனைப்போட்டி என்றுதான் கருத்துத்திணிப்புகளைச் செய்கின்றன. மக்கள் முட்டாள்கள் அல்ல. இந்தக் கருத்திணிப்புகளைத் தடை செய்ய வேண்டும்.
  13. நன்றி கவிஞரே.................. நீங்கள் நலமா.................... சமீப நாட்களில் நான் எதுவுமே எழுதவில்லை. ஆனாலும் இந்த விடயத்தில் அப்படி இருக்க முடியவில்லை. கவிஞரின் பெயரையும், ஜெயமோகனின் பெயரையும் முற்றாக தவிர்க்க நினைத்தேன். கவிஞரின் பெயர் இங்கு வந்தால், அது ஒரு சினிமா உரையாடலாகவும், கவிஞர் எதிர் வைரமுத்து என்றும் போய் விடுமோ என்று நினைத்தேன். ஜெயமோகன் அடிவாங்காத இடமே கிடையாது தானே............🤣. அவர் உள்ளே வந்தால் இந்த திரியே வெறும் வாய் கலப்பாகத்தான் முடியும்...............🤣. 'சக்கரவர்த்தி உலா' என்று நான் இந்த உரையாடலில் முன்னர் குறிப்பிட்டிருந்த ஒரு கட்டுரையை எழுதியது ஜெயமோகனே......................
  14. வீட்டில் 80 வீதமான பொரியலுக்கு நாம் அவகாடோ எண்ணெய்யை பயன்படுத்துகின்றோம் இப்போது. மிகுதி 20 விகிதத்தில் 15 வீதம் நல்லெண்யையும் 5 வீதம் canola எண்ணெயையும் பயன்படுத்துகின்றோம். இறைச்சி, மீன் marinade பண்ண , salad போன்றவற்றுக்கு ஒலிவ் எண்ணையை பாவிக்கின்றோம். வீட்டில் பார்ட்டி, விருந்தினர்கள் கனக்க எனில் இருக்கவே இருக்கு சூரியகாந்தி பூ எண்ணெய்.😁
  15. உங்கள் பொறுப்புதுறப்பை தாண்டியும் - தொடர்பிருப்பதாக எனக்கு படுகிறது. கிட்டதட்ட ஒரே விடயம் (கண்ணதாசன் கொள்ளை அடிக்கவில்லை எனில்) ஆனால் பார்க்கும் பார்வை வேறு படுகிறது.
  16. ஆம்…உங்களுக்கு பத்திரிகா தர்மம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பது உங்கள் கேள்வியில் தெரிகிறது. ஒரு குற்றசாட்டை எழுதினால் அதற்கு சம்பந்த பட்டவரின் பதிலையும் கேட்டு வெளியிடுவார்கள். அதனால் குற்றசாட்டு இல்லை என்றாகாது. உழைப்பு - நான் எப்போதும் என் சொந்த உழைப்பில்தான் சாப்பிடுவேன் அண்ணை. மற்றையவரிடம் திரட்டி அல்ல. அதான் விஜைய வெளுக்க எண்டு சபரீசனை தேர்தலுக்கு சிலமாதம் முன்பே சந்தித்து பெட்டி வாங்கியாச்சே.
  17. இப்பொழுது தேர்தல் நேரம். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் வாக்குகள் கிடைக்குமென்றால் மட்டும் வருவார்கள். கூட்டுச் சேர்ந்த கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கே திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு இது ஓட்டு அரசியல் இல்லை என்கிறீர்கள். எப்படி வருவார்கள்? நாம் தமிழர் கட்சியைப் பற்றி நீங்களே சொல்லிவிட்டீர்களே போலி தேசியம் பேசித் திரிபவர்கள் என்று. இதற்கு மேல் என்ன செல்ல இருக்கின்றது?
  18. ஆக, யாழ் அகவை 28இல் ஊர்க்கதை வாசிக்க வாய்ப்பிருக்கின்றது.☺️
  19. உங்களுடைய விவாதங்களுக்கும் எனது இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாரதியின் பாட்டை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது. கண்ணதாசன், அம்பிகாபதி திரைப்படத்துக்கு எழுதிய பாடல் வரிகள். கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே…
  20. நான் ஐந்து மாதங்கள் ஊரில் இருந்தேன். போன் பார்க்கக் கூட நேரம் இல்லை.
  21. மார்ச் மாதம்தான் யாழுக்கு வருவீர்களா? எதுவானாலும் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. எழுதுங்கள்.
  22. இதை முன்னரும் நிழலி ஒரு தடவை கேட்டிருந்தார். மத்திய தரை (Mediterranean) நாடுகளில் ஒலிவ் எண்ணையை உணவின் மீது தெளித்து, சூடாக்காமல் பாவிப்பதால் இந்த தவறான புரிதல் என நினைக்கிறேன். சாதாரண வதக்கல் (frying), தீவிர வதக்கல் (deep frying): முட்டை பொரித்தல் அல்லது அல்லது எதையாவது கொஞ்ச எண்ணையில் வறுத்தல் போன்றவற்றிற்கு தூய ஒலிவ் எண்ணை (extra virgin olive oil) பாவிக்கலாம். எண்ணையின் smoke point ~400 F வரை இருப்பதால் கருகிய பக்க விளைவுகள் உருவாகாது. அதை விட அதிக வெப்ப நிலை வேண்டும் மீன் பொரித்தல் போன்ற தேவைகளுக்கு light-tasting olive oil என்ற ஒரு வகை இருக்கிறது. இதன் smoke point ~470 F வரை இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பிலும் திருப்தி இல்லையெனில், அவகாதோ எண்ணை பொரிக்கப் பாவிக்கலாம். இதன் smoke point ~520 F வரை இருக்கும். அதே வேளை ஒலிவ் எண்ணையின் ஆரோக்கிய அம்சங்கள் அவகாதோ எண்ணையிலும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், எங்கள் அனேக சமையல் தேவைகளுக்காக ஒலிவ் எண்ணையைச் சூடாக்கலாம்.
  23. இதோ இது என் நெஞ்சிலே .......... படம் : வட்டத்துக்குள் சதுரம் ....... இசை: இளையராஜா ........நடிப்பு : லதா & சுமித்ரா ......... 😍 ஒருமுறை நடிப்புடன் பாட்டையும் கேட்டுப்பாருங்கள் ........ அமிர்தம்.......!
  24. இந்திய அரசியலில் எதுவும் நடக்கும். இன்னும் இரண்டு மாதங்கள் தானே. பார்ப்போம்.
  25. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : { மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூா்ச்சையுற்றான் } (2) ஆண் : அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மாா்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே ஆண் : நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டான் ஆண் : உலக மலா்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்மை சமைத்து விட்டான் ஆண் : அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா ஆண் : மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள் ஆண் : தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் ஆண் : காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே ......! --- மின்னலை பிடித்து மின்னலை பிடித்து ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.