24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சீமான் சாதி பார்த்து சீட்டு கொடுத்ததாக சொல்லவில்லை. செய்ததாகவும் தெரியவில்லை. அந்தந்த சாதியினர் அதிகம் வாழும் பகுதிகளை கணக்கெடுத்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் அறியமுடியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடம் கொடுத்தது இவ்வாறு எதிராளிகளால் புனையப்படுகிறது. நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அனைத்து தமிழர்களும் சாதி மத வேறுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பாக தான் பார்க்கப்படுகிறது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எந்தக்கட்சி. யாரை. வேட்ப்பளாராக. நியமித்தாலும். ஏதோ. ஒரு. சாதியைச்சேர்ந்தவர்களாகத் தான். இருப்பார்கள். சாதியற்ற. வேட்ப்பாளரை. பெயரிடுங்கள். பார்ப்போம். முடியாது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் சின்னத்திற்கு சிக்கல் | EVM - ல் மாற்றப்பட்ட விவசாயி- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
அப்படி என்றால் மூன்று சக்கரவர்த்திகள் உலா போயிருக்கின்றார்கள் போல..............🤣. அது நான் இல்லை, கோஷான்...............- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- Today
- களைத்த மனசு களிப்புற ......!
rtonepodSsetg4à1636 6L1 1m 8u1:0tg7s63u2grm1ca1m a80tl89ic3h · 2026 ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே (CSK) அணி உண்மையிலேயே மிரட்டலாகத்தான் தெரிகிறது! ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிஎஸ்கே இந்த முறை கையில் எடுத்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே-வின் பலம் மற்றும் 🏏"பேட்டிங் மற்றும் எக்ஸ்-ஃபேக்டர் (X-Factor) * சஞ்சு சாம்சன் & ஆயுஷ் மத்ரே: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டிரேட் (Trade) செய்தது இந்த ஆண்டின் மிகப்பெரிய திருப்புமுனை. டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் காட்டிய அதிரடி ஃபார்ம், சிஎஸ்கே-வின் டாப் ஆர்டருக்கு ஒரு பெரிய பலம். இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால், ருதுராஜ் உடன் அவர் தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்புள்ளது. * ருதுராஜ் கேப்டன் ருதுராஜின் நிதானமும், ஷிவம் துபே சிதறடிக்கும் அதிரடியும் சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருக்கும். * டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis): 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் பிரெவிஸ், மிடில் ஆர்டரில் சிக்சர் மழை பொழியக் காத்திருக்கிறார். ⚡பந்துவீச்சு கூட்டணி * மட் ஹென்றி & நைதன் எல்லிஸ்: டி20 உலகக்கோப்பையில் மட் ஹென்றி காட்டிய வேகம் மற்றும் நைதன் எல்லிஸின் துல்லியமான டெத் ஓவர் பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு கூடுதல் பலம். * கலீல் அகமது & நூர் அகமது: பவர்பிளே ஓவர்களில் கலீல் அகமதுவின் இடதுகை வேகப்பந்து வீச்சும், நூர் அகமதுவின் மாயாஜால சுழலும் எதிரணிகளைத் திணறடிக்கும். 🔥" இளம் திறமைகள் மற்றும் அனுபவம் * பிரசாந்த் வீர் & கார்த்திக் சர்மா: இந்த இரு இளம் வீரர்களையும் தலா ₹14.20 கோடி கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள இவர்கள் ஜடேஜா மற்றும் தோனியின் இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் 'பியூச்சர் ஸ்டார்ஸ்' ஆகப் பார்க்கப்படுகிறார்கள். * MS தோனி: 'தல' தோனி இந்த முறையும் ஃபினிஷராக கடைசி 2-3 ஓவர்களில் களமிறங்கி ஆட்டத்தை முடிக்கத் தயாராக இருக்கிறார். நிச்சயமாக, அனுபவம் மற்றும் இளமைத் துடிப்பு என சிஎஸ்கே இந்த முறை ஒரு "ஸ்பெஷல்" கலவையை உருவாக்கி இருக்கிறது. ஜடேஜா போன்ற ஒரு ஜாம்பவான் இல்லாதது குறையாகத் தெரிந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் புதிய இளம் வீரர்களின் வருகை அந்த இடத்தை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்பு சரியாக இருந்தால், 6-வது ஐபிஎல் கோப்பையைச் சென்னை ஏந்துவது உறுதி! #WhistlePodu சிஎஸ்கே-வின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மார்ச் 30-ம் தேதி நடைபெற உள்ளது. Voir la traduction......!- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஒட்டக்கூத்தரா ரசோதரன் என்ர பெயரில் எழுதுவது 😂 😂 ஒரு பவுடர் டப்பாவே, பழதட்டை தூக்கியது😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அதுதான் இந்த தேர்தலில் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தினாரா😂.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இது வண்ணநிலவன் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இல்லை. அங்கேயும் ஒரு கணக்கு இருந்திருக்கலாமோ என்று நினைக்க வைத்த சில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. வண்ணநிலவன் யார், இவர் என்ன செய்திருக்கின்றார் என்று தோன்றினால்.............. ஒரு பழத்தட்டு மிச்சம்.................🤣: வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாதமி விருது வாங்குவதற்காக விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார். நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார். அந்த ஆண்டு விருதுக்குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார். 'சக்கரவர்த்தி உலா' என்ற தலைப்பில் இணையத்தில் தேடினால் இரண்டு கட்டுரைகள் வரும் என்று நினைக்கின்றேன். அதில் ஒன்று நான் எப்பவோ எழுதியது.......... அது மிகச் சாதாரணமான ஒன்று............. எனக்கு ஞானபீடம் கொடுப்பதற்கு அதை உபயோகிக்கலாம்...........🤣. மற்றயது மிக முக்கியமான ஒரு கட்டுரை.- ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
உந்த கால இயந்திரம் இப்பவும் வேலை செய்யுதே அண்ணை😂. 2030..2035 என இப்போ இழுபடுகுது. ஆனால் தரை வாகனக்களுகே. வானூர்தி, கனரக வாகனங்களுக்கு இல்லை. ஐரோப்பா காற்று வளம், அணு சக்தி மூலம் பெற்றோ காபனில் தங்கி இருப்பதை அடியோடு கைவிடுவதே அதன் நீண்டகால பாதுகாப்பு, பொருளாதாரத்துக்கு நல்லது.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இன்னொரு அசடுதனமும் இந்த மிகை இலக்கியவாதிகளிடம் மண்டி கிடக்கிறது. அதுதான் வியாபார ரீதியாக வெற்றி பெறும் எதுவும் இலக்கியம் இல்லை என்ற நோக்குத்தான் இந்த அசட்டுத்தனம். ஆங்கிலத்தில் To Kill a Mocking Bird என ஒரு நாவல். புலிற்சர் விருது வாங்கியது. அமெரிக்க இலக்கியத்தின் தூண் என கொண்டாடப்படுவது. மிகவும் எளிய நடை, கதைக்களம், மாந்தர்கள். அடிக்கடி “விதி” படம் கூட நினைவில் வந்து போகும். ஆனால் அடிமைதனம் நீங்கிய பின்னான அமெரிக்க சமூகத்தின் சிக்கல்களை அது கையாண்ட விதமே அதை நிகரற்ற இலக்கியம் ஆக்கியது.- இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
அதை இப்போதே வளைகுடா நாடுகள் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட நல்லதொரு சந்தர்ப்பம். இல்லையேல் ஒருநாள் அவர்களும் அமெரிக்காவால் தீக்கிரையாக்கப்படுவார்கள்.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
உண்மையில் இந்த மிகை இலக்கிய மேட்டுகுடிகளின் அலப்பறைகள் போல்…இதுதான் இலக்கியம்…இது இலக்கியம் இல்லை என பகுத்தறிய ஏதும் இல்லை. ஒரு காலத்தில் நாவல்களை இலக்கியம் என ஏற்க மறுத்தார்கள். மரபு கவிஞர்கள் இன்றும் புதுகவிதையை கவிதை என்றே ஏற்பதில்லை. நவீன ஓவியமும் இதை தாண்டியே வந்தது. எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை என்பதும், அது நல்ல இலக்கியமா இல்லையா என்பதும் அவரவர் பார்வையின் பால் பட்டது. கற்பனை ஆழத்தோடு, உணர்வுகளை உலுப்பி, சமூகத்தின் கண்ணாடியாக பிரதிபலிக்கும் , குறை நிறை காட்டும் எந்த எழுத்தும் இலக்கியமே. அது விருதுக்கு உரியதா இல்லையா என்பது - விருதுக் குழு தமது பார்வையில் எடுக்கும் முடிவு.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இது நான் 28ம் திகதி, மார்கழி மாதம், 2017ம் ஆண்டில் எழுதியது ............... பல வருடங்களாக நானும் எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்று எனக்கே இப்பொழுது தான் தெரிகின்றது................. இவற்றை இரண்டு மூன்று புத்தகங்களாக போட்டு விட்டு, விருதுகளுக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.......................🤣: பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்துவிடும் போல தெரிகிறது. எல்லா வகையிலும் முயன்று, மோடியின் ஆட்சியில் அவர் இதைப் பெற்று விடுவார் என்றே தெரிகின்றது. ஞானபீடம் இந்தியாவில் வருடாவருடம் அளிக்கப்படும் இலக்கியத்திற்கான மிக உயர் விருது. தமிழில் இதுவரை அகிலனும் (சித்திரப்பாவை நாவலுக்காக) ஜெயகாந்தனுமே பெற்றுள்ளார்கள். வைரமுத்து ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் வேறெந்த வகையிலும் ஒரு சிறந்த இலக்கியவாதி இல்லை. இவருக்கு ஞானபீடம் கிடைத்தால் தமிழ் இலக்கிய உலகம் கண்ட மிகப்பெரும் சிறுமைகளில் இதுவும் ஒன்றாகும். இவர்தான் தமிழின் இன்றைய இலக்கியவாதி என்பது தமிழில் தோன்றி மறைந்த பெரும் இலக்கியவாதிகளுக்கும், இன்று இருப்போருக்கும் செய்யப்படும் மிகப் பெரும் அவமரியாதை. சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார். அகிலனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருக்கக்கூடாது. அகிலனை இன்று இந்தியாவில் எவருக்கும் தெரியாது, தமிழிலேயே அவரை பெரும்பாலானோருக்குத் தெரியாது. குளத்தில் எறிந்த கல் ஏற்படுத்தும் சிறிய சலனம் அளவில் கூட ஒரு மாற்றத்தை உண்டாக்காதவர்.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
பவுடர் டப்பா திரைபாடல்கள் தாண்டியும் பல கவிதைகளை, நூல்களை எழுதியுள்ளார் என்பதை அறிந்தும், முட்டு கொடுக்கும் ஆர்வத்தில் அதை மறந்து கொண்டு😂😂- ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
20030ற்கு பின்னர் எரிபொருளை வைத்து இயங்கும் வானூர்திகளின் உற்பத்திக்கு தடை என நினைக்கின்றேன்.(ஐரோப்பா) அதன் பின்னர் எரிசக்திக்கான போர்கள் குறையலாம்.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இலக்கியத்திற்காக அந்தப்பாடல் இங்கே இணைக்கப்படவில்லை என்பதை அறியத்தருகின்றேன்.- ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது.
இந்த உலகம் கணக்கிட்டதை விட ஈரான் மிக வலிமையுடன் இருப்பது போல் தான் யுத்த செய்திகளை வாசிக்கும் போது தெரிகின்றது. நெத்தன்யாகு பங்கருக்குள்..... அமெரிக்காவின் தவறான வெளிநாட்டு போர்களுக்கு முதல் சாவு மணி அடித்தது ஜேர்மனிதான். இரண்டாவது தடவையாக அமெரிக்கா அதாவது ஜோர்ஜ் புஷ் யூனியர் ஈராக் மீது போர் தொடுக்க ஆரம்பித்த போது ஜேர்மனி முற்றாக எதிர்த்து அந்த நடவடிக்கையிலிருந்து விலகிக்கொண்டது. பிரான்ஸ்சும் அதையே பின் தொடர்ந்தது என நினைக்கின்றேன். ஆனால் இங்கிலாந்து அவுஸ்ரேலியா கனடா போன்ற நாடுகள் அந்த நேரம் தேவையில்லாத போருக்கு அமெரிக்காவிற்காக முட்டு கொடுத்தன. டொனல்ட் ரம்ப் அவர்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு மேலதிக அறா வரிவிதித்ததுதான் பெருங்கோபம்.அதை விட ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுடன் நல்லராஜ தந்திர உறவில் உள்ளார் எனும் தன்மான கோபம். அரசியல் கொள்கைவாதங்களை விட பொருளாதார அரசியல் என்பது இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றது.எடுத்ததிற்கெல்லாம் பொருளாதார தடைகளை கொண்டு வந்ததின் விளைவுகளை சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே அனுபவிக்கின்றது என்பதை அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றது. பொருளாதார தடைகள் எத்தனை எதிரிகளை உருவாக்கியுள்ளது என்பதை இந்த ஈரான் போரும் சொல்லியிருக்கின்றது.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இந்த விடயம் சம்பந்தமாக சாரு எழுதியிருக்கும் 'ஸூகராணாம் ஸூகர ஏவ அதிபதி' என்ற கட்டுரையை படித்தீர்கள் என்றால், வீட்டிலிருக்கும் ஏதாவது பொருட்களை உடைத்து விடப் போகின்றீர்கள்......................🤣. 'அகழ்' வாசிக்கின்றீர்களா என்று தெரியவில்லை. அவர்கள் சில ஈழத்து இளைஞர்கள்.......... ஆனால் என் போன்றோர் அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு எப்பவோ போய் விட்டார்கள்............... இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தை ஒரு தடவை வாசித்துப் பாருங்கள்............. நான் இங்கு காரணமாகவே இணைப்பு எதுவும் கொடுக்கவில்லை................ இன்னும் உங்களை உக்கிரமாக்க...................... சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவில் இருந்து ஒரு சிறு பகுதி; ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது. ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. 'நீ எங்கிருந்து வருகிறாய்?' 'கடலிலிருந்து' 'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. 'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது. 'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' 'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
திரைப் பாடல்கள் இலக்கிய வகைக்குள் இல்லை என்பதையே புரியாமல் 😂🤣 ஞானபீடம் விருது : எங்கள் கண்டனங்கள் அகழ் வைரமுத்து இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது இது. நவீன தமிழ் இலக்கியச் சூழலில், யாருமே வைரமுத்துவை நல்ல கவிஞராகவோ அல்லது புனைவாசிரியராகவோ கருதுவதில்லை. அவர் எழுத்து நுண்ணுணர்வில்லாதது. வைரமுத்துவின் கவிதைகள் வானம்பாடி மரபை சேர்ந்தவையாக அடையாளம் காட்டப்படுகின்றன. எழுத்து, வானம்பாடி இவ்விரு பத்திரிக்கைகள் வழியே இருவேறு அழகியல்கள் தமிழ் கவிதையில் நிலைப்பெற்றன. எழுத்துவழி அழகியலே இன்று தமிழ் இலக்கியச் சூழலில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. எவ்வித பாசாங்குமில்லாமல் வாழ்க்கையை, மனித குணாதிசயங்களை, உள அடுக்குகளை, கருத்தியல்களை – கூர்மையுடன் – விசாரிப்பதே இவ்வகை ஆக்கங்களின் குறிக்கோள். அதற்கு நுட்பமான எழுத்துமுறை தேவைப்படுகிறது. அலங்காரங்களில்லாத தனி வாசிப்புக்குரிய அந்தரங்கமான மொழிநடை தேவைப்படுகிறது. வாசக இடைவெளிகளுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதையும் நேரடியாக பகிர்வதைக் காட்டிலும் குறிப்புணர்த்துவதையே முதன்மையாகக் கொண்ட அழகியல் அது. வானம்பாடி இதற்கு நேர்மாறானது. அது வெளிப்படையான கூற்றுகளையே தேர்கிறது. எனினும் அதற்கும் ஒரு வரலாற்று பொருத்தப்பாடு உண்டு. இடதுசாரி அரசியலின் பின்னனியில் அது உருப்பெற்றது. புரட்சிக்கான அறைக்கூவல் கொண்டிருந்தது. இன்னொருபுறம் பொது மனதின் அக ஏக்கத்துக்கான வடிகாலாக இருந்தது. இன்றைய சமூகச் சூழல் கடந்தகாலத்திலிருந்து வேறுபட்டது. எனவே அக்கவிதைகளுக்கான பொருத்தப்பாடும் ஏறத்தாழ இல்லாமல் ஆகிவிட்டது. வைரமுத்து வானம்பாடி மரபின் தொடர்ச்சியாக அடையாளம் காட்டப்பட்டாலும் அவ்வரிசையிலும் பொருட்படுத்தத்தக்க இடம் அவருக்கில்லை. பைரன் போன்ற புகழ்பெற்ற கற்பனாவாதிகளை நகலெடுக்கும்விதமாக இயற்கையை வருணிப்பது; கலையின் உன்னதத்தை சுட்டுவது. மறுமுனையில், சுயமுன்னேற்றத்துக்கான ஒழுக்க விதிகள். (அவருடைய அமைப்பின் பெயரே ‘வெற்றித் தமிழர் பேரவை’தான்). கொச்சையான காதல் வரிகள். அறிவியல் தகவல்களை வைத்து மேம்போக்காக சமூக விமர்சனம் செய்வது. மிகை நாடகீயம். இவையே அவர் எழுத்துக்களின் மையமாக இருந்துள்ளது. ஒருவகையில் அறிவியல் மயப்பட்ட நேருவிய சோஷியலிச யுகத்திற்கும் உலகமயமாதல் யுகத்திற்கும் நடுவே அவர் இருக்கிறார். இரண்டிலிருந்தும் சுய அடையாளத்தையும், லாபத்தையும் பெருக்கும்விதமாய் கருத்துக்களை எடுத்து, தேய்ந்த பழைய நடையில் எழுதுவதே அவர் பாணியாக உள்ளது. சங்க இலக்கியச் சான்றுகளும் வட்டார வழக்கும் ஊடாடுவது அவருடைய தனித்தன்மையாக கருதப்படுகிறது. இவை யாவுமே, சில ஆயிரம் பரிசுத் தொகையில் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டே வருடங்களில் நின்று போகிற விருதுகளுக்குக்கூட பெறுமதியானவை அல்ல. ஆனால் வைரமுத்து சாகித்திய அகாடெமி வாங்கிவிட்டார். இப்போது ஞானபீடத்தையும் வாங்கிவிட்டார். திரைப்பட பாடலாசிரியராக வைரமுத்துவை மதிப்பிடுவது இவ்விருதுக்கு வெளியே பேசுவதாகும். அத்துறையில் அவருடைய நிபுணத்துவம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு கவிஞராக, புனைவாசிரியராக அவருக்கு நவீன இலக்கியத்தில் எந்த இடமும் இல்லை. இந்நிலையில் அவர் தேசிய அளவில் இத்தகைய உயரிய விருதை பெறுவது நவீன தமிழ் இலக்கிய இயக்கத்துக்கு நேர்கிற அவமரியாதை; தமிழ் மொழிக்கு நேர்கிற அவமரியாதை. (தமிழ் மொழியும், நவீன இலக்கிய இயக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பதே பொதுச் சமூகத்தின் புரிதல். எனவே அது இந்த விருதை வரவேற்கவே செய்யும்). வைரமுத்துவின் அரசியல் செல்வாக்கு ரகசியமானதன்று. பல்வேறு மட்டங்களில் அவருடைய தொடர்பு வலை நீள்கிறது. மாநிலத்தின் முதலமைச்சர் வரை அவருக்கு நட்பு வட்டம் இருக்கிறது. அதை அடிக்கடி பிரகடனம் செய்யவும் அவர் தவறுவதில்லை. கவிஞன் எனும் அடையாளத்தை -குரலும் உடையும் பாவனையுமாக- ஒரு கேடயம் போல அவர் பயன்படுத்திக் கொள்கிறார். ஓர் இலக்கியவாதிக்குரிய லட்சணங்கள் அல்ல இவை. வைரமுத்து ஞானபீடம் விருதுக்கு நீண்ட காலமாகவே முயற்சித்து வந்தார் என்பது செய்தி. பல ஆண்டுகளாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழுக்கு ஞானபீடம் வேண்டும் என்று முழங்கியிருக்கிறார். தனக்கு வேண்டும் என்று நேரடியாக கேட்க முடியாது என்பதால் தமிழுக்கு வேண்டும் என கேட்பது பலரும் பின்பற்றும் ஒரு வழிமுறை. (அந்தளவு நாகரீகம் மிச்சம் இருப்பதும் மெச்சத்தக்கதே). வைரமுத்து மீது பொதுவெளியில் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளினாலேயே இவ்விருது அவருக்கு காலத் தாமதமாக கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. பரவலாக விவாதிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகள்கூட இவ்விருதுக்கு தடையாகவில்லை; அவருடைய அரசியல் சார்புகளும் தடையாகவில்லை. இவை எல்லாம் வைரமுத்துவின் செல்வாக்கையே காட்டுகின்றன. 2017லேயே எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் வைரமுத்து ஞானபீடத்தை வெல்லும் இடத்தில் இருப்பதாக எழுதினார். தன் எதிர்ப்பை தெரிவித்ததுடன் கரிசல் எழுத்தின் முன்னோடியான கி.ராஜநாராயணனுக்கு அவ்விருது வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தார். ஆனால் கி.ராஜநாராயணன் அவ்விருதை பெறாமலேயே 2021ல் மறைந்துவிட்டார். இன்று வைரமுத்து அதை வாங்கிவிட்டார். நவீன தமிழ் இலக்கிய இயக்கம், மிகச் சிறிய வாசக வட்டத்தினுள் புழங்குவது. அமைப்புகளுடனும் அதிகார மட்டங்களுடனும் நெருக்கமான தொடர்பில்லாதது. தனித்து செயல்படுவது. சமீப ஆண்டுகளில்தான் சாகித்திய அகாடெமி விருதுகளே தகுதியான எழுத்தாளர்களை அடைகின்றன. அந்த இடத்துக்கே இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறோம். எனினும் சிறிய குழுவாக இயங்கினாலும் அதனுடைய தீவிரம் எந்த உலக இலக்கிய சூழலுக்கும் குறைவானதல்ல. இன்று, வைரமுத்து இவ்விருதுக்கு தகுதியானவர் அல்ல என்று ஓர் ஆரம்ப நிலை வாசகனால் கூட சொல்ல முடிகிறதென்றால் அது இந்த இயக்கத்தின் மதிப்பையே காட்டுகிறது. அந்த மதிப்பை தொடர்ந்து தக்க வைப்பதும், ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் கடத்துவதுமே நம்முடைய லட்சியங்கள். அதன் நிமித்தமாகவே இவ்விருதுக்கு அகழ் தன் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது. வைரமுத்துவுக்கு ஞானபீடம் அறிவித்திருப்பதன் வழியே பாரதிய ஞானபீட அமைப்பு தனக்கும் தமிழ் மொழிக்கும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இத்தகைய உயரிய விருதுகள் தொடர்ந்து ரகசியமான முறைகளிலேயே செயல்படுவதும் விமர்சனத்திற்குரியது. தேர்வுக் குழு, பரிந்துரை விவரம் இவை எல்லாம் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல், ரகசியமாக விற்கப்படுவதினால்தானே இவ்விருதுகளை வாங்கவும் முடிகிறது. சுந்தர ராமசாமி இந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளரான சுந்தர ராமசாமியினை நினைவுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தன் வாழ்நாள் முழுக்க சாகித்திய அகாடெமியின் தேர்வுகளுக்கு எதிராக அவர் பேசியும் எழுதியும் வந்தார். அவை ஒரு அடிப்படை வரையறையை நமக்கு அளித்தன. பலரும் பின்பற்றுவதற்கான மாதிரியாக அது மாறியது. அகிலன் ஞானபீடம் வாங்கியபோது அதை எதிர்த்து அவர் எழுதிய கட்டுரை – “போலி முகங்கள் சந்தர்ப்பம் : ஞானபீடப் பரிசு”- புகழ்பெற்றது. பல சூழ்நிலைகளிலும் அது தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகிறது. அகிலன் விருது பெற்றதை பத்திரிக்கைகள் கொண்டாடுவது பற்றி அவர் எழுதிய வரி -“ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது”- பழமொழி போலாகிவிட்டது. “எந்த இலக்கியப் பரிசும் ஒரு சமூகச் செயல்” என வகுத்து விருதுகளில் நிகழும் மோசடிகளை எதிர்கொள்வதற்கான மொழியை நமக்கு அது தந்தது. அதை நவீன தமிழ் இலக்கியச் சூழலின் அறிக்கை எனலாம். ஞானபீடம் பரிசுப் பெற்ற அகிலனின் “சித்திரப் பாவை” நூலைவிட சிறந்த நாவல்கள் ஐம்பதேனும் தமிழில் உண்டு என்று 1976ல் சுந்தர ராமசாமி எழுதுகிறார். இப்போது மேலும் ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் கூடுதலாக ஐம்பது நாவல்களை நம்மால் பட்டியல் போட முடியும் என்பது பெருமையளிக்கிறது. போலியான விருதும் புகழும் நீண்ட காலம் நிலைத்திருப்பவை அல்ல. ஆனால் தீவிர இலக்கிய நூல்கள் அழியாது நிலைக்கும். “சித்திரப் பாவை” பற்றி இப்போது யாரும் பேசுவது போல தெரியவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி உத்தேசித்த ஐம்பது நாவல்களும் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. அவை உரையாடலில் உள்ளன. பெயர் சொல்லாமலேயே அவை என்னென்ன நூல்கள் என்பதை நம் எல்லோராலும் கிட்டத்தட்ட யூகித்துவிட முடியும். ஞானபீடம் விருதுக்கு எதிராக நியாயமான எதிர்ப்புகளும் கண்டனங்களும் பரவும் வேளையில் இதை எண்ணுவதும் அவசியமானதே. அகழ் ஆசிரியர் குழு https://akazhonline.com/?p=11611- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரானும் கத்தாரும் பங்கு பிரித்துள்ள உலகின் மிகபெரிய எரிவாயு வயலை இஸ்ரேல் தாக்க. பதிலுக்கு அரபு நாடுகளின் எண்ணை, எரிவாயு கட்டமைப்பு மீது தாக்க தொடங்கி உள்ளது ஈரான். வசி - ஒரு விடயம். அவுஸ் பற்றி ஆராய்ந்ததில். அவுஸ் எண்ணை அதிகம் வாங்குவது கொரியாவிடம். கொரிய ஆலைகள் அடர்த்தி கூடிய ஓமான்/டுபாய் எண்ணையை சுத்தீகரிக்க தக்கன. Brent உலக பொது எண்ணை, WTC அமெரிக்க எண்ணை. ஜனவரி மாதம் ஓமான்/WTC விலை வேறு பாடு 6 டொலர். இப்போ 60 டொலர். எல்லா மசகு எண்ணையும் ஒரே வகை அல்ல. வளை குடா வகை எண்ணையில் தங்கி உள்ள நாடுகள் முதலில் பாதிக்கபடும். பின்னர் அவை ஏனைய நாட்டு வகை எண்ணைக்கு மாறும் போது - அவற்றின் விலையும் கூடும். இதில் ஒரு delayed effect உள்ளது. தவிரவும் கொரியா போன்ற நாடுகளில் உள்ள ஆலைகளில் ஏனைய எண்ணைகளை சுத்தீகரிக்க முடியாது. முன்பே சொன்னது போல் காவும் தூரம் அதிகம். எண்ணையின் சந்தை விலை ஒன்றே ஆனாலும் ஏன இது ஆசியா, ஆவுஸை அதிகம் பாதிக்கிறது என்பதை இது விளக்குகிறது. எண்ணை 130 ஐ தொடும் என நினைக்கிறேன். கொஞ்சமாக வாங்கியுள்ளேன். உலகின் 20% எண்ணை வழங்கல் பாதையை மூடினாலும் யுத்தம் நிண்ட மறு நொடியே அதை திறக்கலாம் 3 மாததில் வில வழமைக்கு திரும்பும். எண்ணை கட்டுமானங்களை உடைத்தால் 2 + வருடம் எடுக்கும். விலை கூடும் வேகத்தில் குறையாது. விலை வீக்கம், ஒட்டு மொத்த உலகுக்கே recession, பணவீக்கம், உணவு தட்டுப்பாடு நடக்க நேற்றை விட்ச் இன்று வாய்ப்பு கூடியுள்ளது.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
😂 அமெரிக்கா, ஈரான் என்பதை இடம் மாற்றுக😂- ஈரான் நாட்டுப்புற சமையல்
குரைக்கிற சிங்கம் கடிக்காது… கடிக்கிற சிங்கம் குரைக்காது😂- சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை [மூன்று பகுதிகள்]
சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 1 ஹீத்ரோ விமான நிலையத்தின் பெரிய கண்ணாடி சுவர்களுக்கு வெளியே, மழை மெதுவாக வழிந்துகொண்டிருந்தது. உலகத்தின் பல மொழிகள் கலந்து ஒலித்த அந்த பரபரப்பில், சிலர் பிரிவை அணைத்துக் கொண்டிருந்தார்கள்; சிலர் புதிய வாழ்க்கையை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தில் அவளும் இருந்தாள். அவள் கையில் ஒரு சிறிய பையைத் தவிர அதிகச் சுமை இல்லை. ஆனால் அவள் கண்களில் இருந்த சுமை பல ஆண்டுகளின் நினைவுகளால் நிரம்பியிருந்தது. விமானத்தில் ஏறி, ஜன்னல் பக்க இருக்கையில் அவள் அமர்ந்தபோது, மேகங்களுக்கு மேலே போவது மட்டும் அல்ல — கடந்த நாட்களிலிருந்து சிறிது தூரம் செல்லும் முயற்சியும் அதுவாக இருந்தது. ஹீத்ரோவிலிருந்து ஒட்டாவாவுக்குப் புறப்படும் விமானம் நீண்ட பயணத்துக்குத் தயாராக அப்பொழுது இருந்தது. அந்தப் பயணம் பிரயாணிகளை தாங்கள் தாங்கள் வந்த உலகத்தை, சிறிது நேரம் மறக்கச் செய்யும் அளவுக்கு நீளமானது. சிறிது நரைத்த தலையோடும், மெல்லிய அசைவுகளோடும், வாழ்க்கையை அதிகம் பேசாமல் அதிகம் தாங்கி வந்த நடுத்தர வயதைச் சற்றுத் தாண்டிய ஒருவர் அவளருகே அமர்ந்திருந்தார். முதலில் அங்கு மௌனம் மட்டுமே நிலவியது. இருவரும் தங்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, இருக்கை வாரை [பெல்ட்டை] ஒழுங்காக ஓரளவு இறுக்கமாக மாட்டி, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கவனமாக இருந்தனர். அட்லாண்டிக் கடலின் மேலே, காற்று அடுக்குகள் (Air Layers) வெவ்வேறு வேகத்தில் நகரும்போது அல்லது சூடான காற்று மேலே எழும்பும்போது, வழமையாக ஏற்படும் சிறிய குலுக்கல் விமானத்தில் வந்தது. அந்த குலுக்கள் மௌனத்தை சிதறியது. இவ்வளவு நேரமும், ஆழந்த சிந்தனையில் இருந்த அவள், சொல்ல முடியாத பயணங்களை கண்கள் சுமந்தபடியே அமைதியாக அவரை நோக்கித் திரும்பியது. வலிமை விளம்பரம் செய்ய வேண்டியதில்லை என்பதையும், புயலுக்குப் பிறகும் அழகு உயிரோடு இருப்பதையும், அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த பொழுது அவர் உணர்ந்தார். சில ஆன்மாக்கள் ஒளியைத் தேடுவதில்லை; அவை அமைதியாக ஒளியாகவே மாறுகின்றன. அப்படித்தான் அவள் இருந்தாள். முதலில் அவள் சிரித்தாள். அவரும் ஒரு மரியாதைக்குச் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் ஒரு அந்நியத் தனிமை கரைந்தது. “நீங்கள் அடிக்கடி பயணம் செய்வீர்களா?” என்று அவள் முதலில் கேட்டாள். “இல்லை,” என்றார் அவர். “ஆனால் வாழ்க்கை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது.” அந்த பதில் ஒரு வரலாற்றின் கதவுபோல் இருந்தது. அவள் சிறிது ஆர்வத்துடன் கேட்டாள்: “வேலைக்காகவா?” அவர் மெதுவாக சிரித்தார். “சில பயணங்கள் வேலைக்காக. சில பயணங்கள் உயிர் தப்பிக்க.” அவள் எதுவும் பேசவில்லை. அந்த ஒரு வாக்கியமே போதுமான விளக்கமாக இருந்தது. சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்னர் அவள் கேட்டாள்: “நீங்கள் தமிழரா?” “ஆம்,” என்றார் அவர். “வட இலங்கையில் பிறந்தவன்.” அவள் உடனே அவரை கவனமாகப் பார்த்தாள். “நானும் தமிழ் தான்… ஆனால் லண்டனில்தான் வளர்ந்தேன்,” என்றாள். அவர் தலையசைத்தார். “அதனால் தான் உங்க தமிழ் சற்றுக் கலந்த ஒலியில் இருக்கிறது,” என்றார் மென்மையாக. அவள் சிரித்தாள். “நீங்கள் கவனித்துட்டீங்களே!” அவர் சாளரத்தை நோக்கிப் பார்த்தார். “ஒரு தலைமுறை தாய்மொழியை உயிருடன் காப்பாற்ற முயற்சிக்கிறது. அடுத்த தலைமுறை அதை நினைவாக வைத்திருக்க முயற்சிக்கிறது. அது இயல்பான மாற்றம்.” அவள் அந்த வார்த்தைகளை அமைதியாகக் கேட்டாள். சில நொடிகள் கழித்து அவள் கேட்டாள்: “நீங்கள் காதலை நம்புகிறீர்களா?” அவர் உடனே பதில் சொல்லவில்லை. விமானத்தின் சீரான ஒலி நடுவே சிறிது நேரம் யோசித்து, பின்னர் சொன்னார்: “காதலை நம்பாமல் மனிதன் வாழ முடியாது. ஆனால் சரியான மனிதரைத் தேர்ந்தெடுப்பது — அதுதான் பெரும்பாலானவர்களுக்கு கடினம்.” அந்த பதில் அவளின் முகத்தில் ஒரு மென்மையான சோகத்தை உருவாக்கியது. “நான் ஒருவரை நேசித்தேன்,” என்றாள் அவள். “ஆனால் வாழ்க்கை வேறு வழி தேர்ந்தெடுத்தது.” அவர் அவளை நோக்கி பார்த்தார். “சில நேரங்களில் வாழ்க்கை தேர்ந்தெடுக்கிறது என்று நாம் நினைப்பது — மற்றவர்கள் எடுக்கிற முடிவுகள்தான்,” என்றார் அமைதியாக. அவள் கண்களில் சிறிது கண்ணீர் தோன்றியது; ஆனால் அவள் சிரித்தாள். “நீங்கள் கவிஞராக இருந்திருக்கலாம்,” என்றாள். அவர் மெதுவாகச் சொன்னார்: “இல்லை. வாழ்க்கை தான் கவிதை. நாம்தான் அதை புரிந்துகொள்ள தாமதமாகிறோம்.” விமானம் மேகங்களுக்கு மேலே பறந்துகொண்டிருந்தது. கீழே உலகம் மறைந்தது. மேல் வானம் மட்டும் இருந்தது. அந்த இருவருக்கும் இடையில் இன்னும் பல கேள்விகள் இருந்தன. இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருந்தன. ஆனால் அந்த நேரத்தில், ஒரே உண்மை மட்டும் அமைதியாக உருவாகிக் கொண்டிருந்தது — அந்நியர்களாகத் தொடங்கிய இரண்டு மனிதர்கள், ஒரே பயணத்தின் நினைவாக மாறிக் கொண்டிருந்தனர் விமானத்தின் விளக்குகள் மங்கியபோது, பலர் தூங்கத் தொடங்கினர். ஆனால் அவர்களில் இருவருக்கும் தூக்கம் வரவில்லை. அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே எதுவும் இல்லை — மேகங்கள் மட்டும். அவர் முன் இருக்கை திரையில் ஓடிக்கொண்டிருந்த வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ஹீத்ரோ — அட்லாண்டிக் — ஒட்டாவா [Heathrow — Atlantic — Ottawa.] ஒரு நேர்கோடு போல தெரிந்த அந்த பாதை, வாழ்க்கையில் ஒருபோதும் நேராக இருக்காது என்று அவர் நினைத்தார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 2 தொடரும் துளி/DROP: 2097 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/34347802758201599/? சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 2 விமானம் பறந்து கொஞ்ச நேரம் கழித்து அவள் மெதுவாகக் கேட்டாள்: “நீங்கள் ஒட்டாவாவுக்கு வேலைக்காக போகிறீர்களா?” அவர் சிரித்தார். “வேலை முடிந்து விட்டது. இப்போது வாழ்க்கையின் மீதமுள்ள நாட்களை அமைதியாக கழிக்கப் போகிறேன். என் மகள் அங்கே இருக்கிறாள்.” “நீங்கள் லண்டனில்தான் இருந்தீர்களா?” “இல்லை… பல இடங்களில். ஆரம்பம் — யாழ்ப்பாணம்.” அந்தச் சொல் வந்ததும், அவரது குரலில் தெரியாத ஒரு பாரம் இருந்தது. “அங்கு அன்று போர் காலம்…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள். அவர் தலையசைத்தார். “ஒரு தலைமுறை வாழ்க்கையை கட்டியெழுப்ப கற்றுக்கொண்டது. இன்னொரு தலைமுறை உயிர் தப்பிக்க கற்றுக்கொண்டது. நான் இரண்டையும் கற்றுக்கொண்ட தலைமுறையிலிருந்து வந்தவன்.” அவள் அமைதியாகச் சொன்னாள்: “நாங்கள் அப்பொழுது சிறு வயதில்,” அவர் தொடர்ந்தார், “காதல் என்றால் குடும்பம் பார்த்து திருமணம். பொறுப்பு முதலில்; உணர்வு பின்னால். இப்போது பல இடங்களில் — உணர்வு முதலில்; பொறுப்பு வருமா என்று காத்திருக்கும் நிலை.” அவள் மெதுவாகச் சிரித்தாள். “அது உண்மை.” “அதில் எது சரி?” என்று அவர் கேட்டார். அவள் சில நொடிகள் யோசித்தாள். “எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் பழைய உலகம் மனிதர்களை கட்டுப்படுத்தியது. இப்போது சுதந்திரம் மனிதர்களை குழப்புகிறது.” அவர் அவளைப் பார்த்தார். “அது மிகவும் சரியான வரி.” சிறிது நேரம் அமைதி நிலவியது. விமானப் பணிப்பெண் தண்ணீர் கொண்டு வந்தார். இருவரும் எடுத்துக் கொண்டனர். அவள் திடீரென்று கேட்டாள்: “நீங்கள் ஒருபோதும் காதலித்து தோற்றிருக்கிறீர்களா?” அவர் உடனே பதில் சொல்லவில்லை. பின்னர் மெதுவாகச் சொன்னார்: “ஒரு மனிதன் காதலில் வெல்ல முடியாது. அவர் நேசித்தால் — ஏற்கனவே தோற்றுவிட்டார். ஏனெனில் அந்த நெஞ்சம் இனி முழுவதும் அவருடையது அல்ல.” அவள் அந்த வார்த்தைகளை நீண்ட நேரம் நினைத்தாள். “அப்படின்னா … நீங்கள் தோற்றவரா?” என்று மெதுவாகக் கேட்டாள். அவர் சிரித்தார். “ஆம். பல ஆண்டுகளுக்கு முன். ஆனால் அதனால் தான் நான் மனிதனாக இருந்தேன்.” அவள் முகத்தில் ஒரு மென்மையான புரிதல் தோன்றியது. “நானும்…” என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள். “சொல்லலாம்,” என்றார் அவர் மெதுவாக. அவள் ஆழமாக மூச்சை இழுத்து தனது ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு சட்டெனக் கேட்டாள்: "காதலுக்கு பாலினம் உண்டுன்னு நீங்க நம்புறீங்களா?" என்று அவர் உடனே பதில் சொல்லவில்லை. சற்று யோசித்து மெதுவாகச் பதில் சொன்னார். "பண்டைய தமிழ் சங்கக் கவிதைகளில், "காதலின் பாலினம் அரிதாகவே விவாதிக்கப்பட்டது. உடல்கள் மீது எந்த வெறியும் இல்லை. ஆன்மா மட்டுமே அங்கே முக்கியமாக இருந்தது." அவள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் - பதிலில் அல்ல, ஆனால் அது எவ்வளவு மென்மையாக அவளுக்கு வழங்கப்பட்டது என்பதைப் பார்த்து. அவர் மேலும் ஒரு தொடர்ச்சியாக, சங்க இலக்கியத்தின் பின் தோன்றிய இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை அங்கு காண்கிறோம் என்றார். அன்புக்கு, காதலுக்கு பாலினம் இல்லை என்றாலும், கூடும் வழக்கத்தில் அதைக் காண்கிறோம் என்றார். அவள் அவரை கொஞ்ச நேரம் இமை வெட்டாமல் பார்த்தால், இங்கு 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்ற கம்பரின் சிறப்பு வாய்ந்த வரி இல்லை. 'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.' என்ற திருவள்ளுவர் கூற்றும் இல்லை. அவள் வெறுமனே அவர் மேல் ஒரு நம்பிக்கை வைத்தாள். தன் கவலையை, ஏக்கத்தை பகிர்ந்து கொள்ள. அந்த நம்பிக்கையுடன், அவள் தன் கதையைத், அவருக்குச் சொல்ல, பகிரத் தொடங்கினாள். அவள் தொடர்ந்தாள்: “நான் ஒருவரை நேசித்தேன்,” என்று அவள் சொன்னாள். “ஆழமாக. அமைதியாக. அனுமதி இல்லாமல்.” அவர் இடையில் குறுக்கீடு செய்யவில்லை. மிகுதிக்கு காத்திருந்தார். “உலகம் அது ஒரு ஆண் என்று கருதுகிறது,” என்று அவள் தொடர்ந்தாள். “வரலாறு பெரும்பாலும் அதையே செய்கிறது.” அவள் இடைநிறுத்தி, அவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தார். அவள் தொடர்ந்தாள். "சில புராணக் கதைகளில், தெய்வங்கள் ஒப்புதல் இல்லாமல் காதலர்களைத் தேர்ந்தெடுத்தன. அனுமதிக்கு முன்பே ஆசை இருந்தது. அது போகட்டும். அவை தெய்வங்கள். மனித குலத்து மீராபாய் (பொ.ஊ. 1498 – பொ.ஊ. 1547) கிருஷ்ணனை நேசித்தாள் - சமூகத்தின் அர்த்தத்தில் ஒரு மனைவியாக அல்ல, மாறாக வேறொரு ஆன்மாவில் கரையும் ஆன்மாவாக. உலகம் அதை பைத்தியக்காரத்தனம் என்று அழைத்தது. அது ஒரு வழமையான திருமணம் அல்ல. அது பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. ஆனாலும் அது நீடித்தது." அவர் இடைமறித்தார். "புத்தர் அன்பைத் தடை செய்யவில்லை. மனதை அடிமைப்படுத்தும் பற்றுதலை மட்டுமே அவர் எச்சரித்தார் [He warned only against attachment—the kind that enslaves the mind.]. உலகம் பின்னர் இரக்கத்தை கோட்பாடாகவும், கோட்பாட்டை கட்டுப் பாட்டாகவும் மாற்றியது. கிரேக்க வரலாற்றில், இரண்டு வீரர்கள் ஒருவரை யொருவர் நேசித்தார்கள். அவர்கள் நண்பர்களா? அவர்கள் காதலர்களா? வரலாறு அதை முடிவு செய்ய மறுத்தது மட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு அவமானத்தின் அடிக்குறிப்பாக இல்லாமல், போர்ப் பாடலாக மாறியது." என்றார். அவள் கவனமாக அவர் சொல்வதைக் கேட்டாள். அப்பொழுது அவர்களுக்கு சாப்பாடும் பானமும் விமானப் பணிப்பெண்கள் கொண்டு வந்தார்கள். அவருக்கு, சிறப்பு உணவாக சைவ உணவும் சீனி இல்லாத காபியும் கொடுத்தார்கள். அவள் அசைவ உணவுடன் சிவப்பு ஒயின் [red wine] எடுத்தாள். சாப்பிட்டு முடியும் மட்டும் இருவரும் கதைக்கவில்லை. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 3 தொடரும் துளி/DROP: 2099 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/34364639906517884/? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.