24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
இந்த போரில் ஈரான் வென்றால் … அது வென்றதன் பின்பு…. சீனாவுக்கும், ரஸ்யாவுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் …. ஈரான் பற்றியும், ஷாஹி புக்காரி, ஷாகி முஸ்லிம் ஆகிய ஹதீசுகளிலும் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை காலம் உணர்த்தும். ஆனால் அப்படித்தான் நடக்கும் என்றால், அவர்கள் நம்புவது போல் அதுதான் உண்மையான மார்க்கம் என்றால், நாமும் அந்த சன்மார்கத்கை தழுவி… லாஹி லாஹி இல்லல்லாஹ் முகமது ரசூலல்லா என கலிமா சொல்லி, நிரந்தர சுவனத்தை ஏக வேண்டியதுதான்.
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
சும்மா பகிடி விடாதையுங்கோ.... அவையல் புரட்சி படையினர்..40 வருசமா ஒற்றை தலைவன் என்றால் சும்மாவே .... அமேரிக்காவுக்கு எதிராக எவன் துவக்கை நீட்டுறானோ அவன் இடதுசாரி.... அமெரிக்கா தம்பதிகளை கடத்தினாலும் புரட்சிவாதி தான் ... அமெரிக்காவுக்கு பின் கதவால் ஆமா சொல்லி கதவி திறந்து விட்டு முன் கதை மூடி தாழ்பால் போட்டால் அவனும் புரட்சி திலகம் இடதுசாரி அம்மான்
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
ஈரான் மறுத்தது உண்மை. அதே போல் நேட்டோவும் எங்கே இருந்து ஏவப்பட்டது என சொல்ல கடினம் என்பது போல் சொல்லி உள்ளது. நல்ல காலம் ஸ்டாமர் இருப்பதால் நாம் தப்பித்தோம். இப்ப பொரிஸ் பிரதமர் எண்டா எங்களையும் இழுத்து விட்டிருப்பார். இண்டைக்கு தம்பர் ஸ்டாமர் பற்றி மிக மோசமான ஒரு நகைசுவையை பகிர்ந்துள்ளார். ஸ்டாமர் மீது தம்பருக்கு செம்ம கடுப்பு. எப்படியாவது யூகேயை உள்ளே இழுக்க முயற்சிக்கிறன அமேரிக்கா, இஸ்ரேல். மேற்கை தம்பர் துண்டாடி விட்டார் என்பது உண்மையே. தம்பரின் 2ம் வெற்றிக்கு சிலமாதம் முன்பே தம்பர் வெல்வது உறுதி என தெரிந்ததும் இதை யாழில் பலர் எதிர்வுகூறி இருந்தனர். இன்றைய மேற்கு ஜேர்மன் தேர்தல் முடிவுகள் ஜேர்மானிய இனத்தவர் அல்லாதோர் மூட்டை கட்ட வேண்டிய காலம் நெருங்கி வருவதை உணர்துவதாக நான் நினைக்கிறேன். யூகேயில் கூட மே மாதம் எலக்சனில் போக்கு என்ன எண்டு தெரிய வரும். இலங்கை இரெட்டை குடியுரிமையின் பெறுமதி இனிமேல் பலருக்கு விளங்க ஆரம்பிக்கும்.
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
வடகொரியாவை மறந்திட்டியல்,இவர்கள் தான் 1971 ஆம் ஆண்டு சிறிலங்கா தீவாரின்ட புரட்சிக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ..இவையளின்ட ஆயுத கப்பலை இந்திய காந்திய படைகள் கைப்பற்றினவையள் அத்துடன் சிலரை கைது செய்தவைள். அன்று இந்த தீவாரின்ட புரட்சி வெற்றியடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவின் மகன் இன்று ஜனாதிபதியாக இருந்திருப்பார்...நம்மட தமிழ் புரட்சிவாதிகளுக்கு அனுரா அம்மான் கிடைத்திருக்க மாட்டார்... ஈரான் இன்று இவ்வளவு கஸ்டப்பட வேண்டி வந்திருக்காது...சிறிலங்காவிலிருந்து ஈரானின் புரட்சி பயங்கரவாத படைகள் அமெரிக்காவை அதிரடி தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும். வடகொரியா,சீனா,ஈரான் போன்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து சிறிலங்கா தீவாரின் புரட்சி படை துவசம் பண்ணியிருக்கும்...ட்ரம்ப் வெனிசுலவை கைப்பற்றுவதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. அனுரா அம்மான் இப்பவே அமெரிக்காவுக்கு தளம் தரமாட்டேன் என சொல்லுகிறார் என்றால் பாருங்க்கவன்
- Yesterday
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
ரஸ்யா: ஒரு நம்பகமான கூட்டாளி இல்லை என்பதே வரலாறு சொல்லும் பாடம். இத்தனை வருடமாக நம்பி இருந்த ஆர்மேனியா ரஸ்யாவை நம்பி பலன் இல்லை என ஜென்ம வைரியான அசர்பைஜானிடம் கிட்ட தட்ட சரண் அடையும் ஒரு ஒப்பந்ததை போட தயாராகிறது. இந்த சண்டை காட்டிய மிக முக்கிய விடயம் 2. அமெரிக்கா எதிர்பாத்த்தை விட ஈரான் பலமாக உள்ளது தனது முழுப்பலத்தையும் போட்டு உக்ரேனில் ரஸ்யா காட்ட முடியாத பராக்கிரமத்தை, இந்த போரில் காட்டி, மரபுசாரா சமச்சீர் அற்ற போரில் தான் ரஸ்யாவை விட பலமானது என ஈரான் நிறுவியுள்ளது. என்னை பொறுத்தவரை அணு குண்டை தவிர்த்து பார்த்தால், ராஸ்யாவை விட ஈரான் பலமான இராணுவம் போலவே படுகிறது. ஒன்றில் ஈரானின் பின்னால் (உக்ரேனுக்கு பின் மேற்கு நிண்டது போல்) சீனா உள்ளது. அல்லது ஈரான் தனித்து இப்படி போராடுகிறது. ரஸ்யா மட்டும் அல்ல அமெரிக்காவின் அத்தனை எதிரிகளுக் 2016 இலும், 2024லிலும் தம்பர் வர வேண்டும் என்றே விரும்பி இருப்பார்கள். தம்பர் 2005 இலங்கை ஜனாதிபதியாகி இருந்தால் புலிகள் 2009 க்குள் தனிநாடு கண்டிருப்பார்கள். தம்பர் எதிரிகளுக்கு ஒரு அட்சய பாத்திரம்😂.
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
நீங்கள் அவுசில் NSW வில் இல்லை போல் உள்ளது? அங்கே தட்டுப்பாடு ஓரளவு வர தொடங்கி விட்டது போல் தெரிகிறது. இதில் உள்ள வீடியோ நம்பகமானது என நினைக்கிறேன்.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இல்லை ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவுக்கு ஒரு அரணாக தமிழரும், அவர்தம் நிர்வாக அலகும் இருக்கும். தலிபான்களோடு உறவு ஏன் இந்தியாவுக்கு? அவர்கள் இந்தியாவுக்காக சீனாவோடு போரிடுவர் என்றா? இல்லைத்தானே?
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
ரஷ்யாவும் சீனாவும் நட்பு நாடுகள். ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு நட்பு நாடுகள். இந்த நட்பு நாடுகளுக்கு பல அதிக மூன்றாம் உலக நாடுகள் நட்பு நாடுகள். மேற்குலகில்.....ஐயோ பாவங்கள்.🤣 ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெயருக்குள் உள்ள நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லை.பெரிய பிரித்தானியாவுக்கும் ஒன்றியத்தில் ஈடுபாடில்லாமல் பிரிந்து போய் விட்டது. அந்த பிரித்தானியாவும் இப்போது பெற்றெடுத்து வளர்த்த அமெரிக்காவுடன் நல்ல மாதிரி இல்லை. கனடா நடுத்தெருவில்....அவுஸ்ரேலியா முழி பிதுங்கிய நிலை. அமெரிக்க அண்ணன் வாக்கு வேத வாக்கு என வாழ்நாள் முழுக்க நம்பியவர்களுக்கு டொனால்ட் ரம்ப் வைச்சு செய்கிறார். உலக அரசியல்/ பொருளாதார அரங்கில் இன்னொரு அணி உருவாக காரணமாக இருந்த அமெரிக்காவிற்கும் அண்ணன் மாண்புமிகு பெரு மதிப்பிற்குரிய டொனால்ட் ரம்ப் அவர்களுக்கும் கோடி நன்றிகள்.
-
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்
இந்த போரால் பல மக்கள் தேவையில்லாமல் இப்ப அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது,☹️ ரம்பின் அடுத்த இலக்கு வடகொரியா☠️
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இந்தியா ஈழதமிழரை அரவணைத்து செயற்பட்டு வடகிழக்கு முதலமைச்சராக அர்ச்சுனாவோ அல்லது கஜேந்திரகுமாரோ ஆட்சி செய்து கொண்டிருந்தால் அந்த நேரத்தில் சீனா இந்தியாவை தாக்கினால் இவர்களுக்கு பொலிஸ் அதிகாரம் இருந்தால் தங்களது பொலிசை அனுப்புவார்களா இந்திய உதவிக்கு
-
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
உடையார்! எந்த நாட்டு மக்களும் போர் அழிவுகளை இழப்புகளை விரும்புவதில்லை. எல்லாம் அரசியல்வாதிகளின் சுய நலன்களுக்காகவே போர் முன்னெடுக்கப்படுகின்றது. ஈரான் போருக்கு பின்னர் அரேபிய நாடுகளுக்கு மேற்குலகின் மீது சினமும் வெறுப்பும் வரக்கூடும்.
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
இந்த இடதுசாரி மற்றது வலதுசாரி என்றும் பிரிந்துநிற்பதே ஒரு சாதி வேறுபாடு மாதிரி கற்பனை எனக்கு இந்த அடையாளம் வேண்டாம் ஈரான் ஒரு இடதுசாரிநாடு தானே 😃
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
இல்லை ரம்பினை இரஸ்சிய தரப்பு மிக ஆபத்தான எதிரியாகவே பார்க்கின்றது, அமெரிக்க அதிபராக வருவதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கெதிராக தற்போது ரம்ப் செயற்படுகிறார் (போர் வேண்டாம் என்றவர்), ஒருவரரது அடிப்படை சிந்தனை வேறாக இருந்தாலும் நாட்டின் கொள்கை ஒன்றே, அதில் மாற்றம் இருக்காது, அப்படி பார்க்கும் போது ட்ரம்ப் மற்ற அதிபர்களை விட ஆபத்தானவர் (எதிர் பாராத விடயங்களை செய்பவர்). அமெரிக்கா தனது எதிரியாக இரஸ்சியாவினை பார்ப்பதாலேயே உக்கிரேனினூடக இரஸ்சியாவுடன் மோதியது (தற்போது முழுப்பொறுப்பையும் ஐரோப்பாவிடம் விட்டுள்ளது). அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையிலீடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இரஸ்சிய அதிபரின் வீட்டின் மேல் தாக்குதல் நடாத்தப்பட்டது, அவர்களுக்கு தெரியும் சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டுள்ளார்கள் என. ட்ரம்பினை அகற்ற வேண்டிய தேவை இரஸ்சியாவிற்கும் உள்ளது, இரஸ்சியா; ட்ரம்பினை விட வேறு அதிபர்கள் பதவிக்கு வருவதனையே விரும்பியிருக்கும் என கருதுகிறேன்.
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
எல்லாம் திராவிட கூட்டம் தான் 😂
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
அதிக அழுத்தம் தேவையற்ற பிரச்சினையினை உருவாக்கிவிடும். இங்கிலாந்து தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்துள்ளது, மேலும் அணு நீர்மூழ்கியினை அனுப்பிவைத்துள்ளதாக இன்னொரு திரியில் கூறப்பட்டுள்ளது, ஜப்பான் அதிபர் 6 மாதங்கள் இந்த நிலை நீடித்தால் ஜப்பான் வங்குரோத்தாகும் என கூறியிருந்த நிலையில் தற்போது ஜப்பானினது எரிபொருளை ஈரான் அனுமதிக்கின்றது. அதிக அழுத்தம் பாதிப்புள்ளாகும் நாடுகளை ஈரானுக்கெதிராக அணிதிரள வைக்கும், அதனால் தேவையற்ற பிரச்சினை உருவாகும், தற்போதும் ஈரான் எரிபொருள் ஏற்றுமதிக்கு பிரச்சினை இல்லை, குறிப்பிட்ட சில மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்க தாக்குதலுக்க்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதியே பாதிக்கிறது அதனை இரஸ்சிய எரிபொருள் ஒரு சிறு பகுதியினையே நிரப்ப முடியும் ஆனால் அவர்கள் குறைந்த உற்பத்தியில் அதிக உற்பத்தியினை விட அதிகமாக இலாபம் ஈட்டுவார்கள் (விலை நெகிழ்ச்சி கேள்வியினை விட ஒன்றுக்கு அதிகமாக காணப்படும் ஏனெனில் அத்தியாவசிய பொருள்). ரியூட்டர் செய்தி; தென் கொரியா இரஸ்சியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது பற்றி சிந்திப்பதாக, அப்படி நடந்தால் அங்கிருந்து அவுஸ்ரேலியாவிற்கும் இரஸ்சிய எண்ணெய் எதிர்காலத்தில் வரும். இரஸ்சியா மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றிற்கு $90 இருக்கும் போது நாளொன்றிற்கு 150 மில்லியன் மேலதிக வருவாய் பெறுகிறது என கூறினார்கள், தற்போட்கு $ 107 மேல் உள்ளது. இந்த போர் தொடங்கியபின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்தே சென்றுகொண்டிருந்த நிலையில் இங்கு சில இடங்களில் $2.49 வரை சென்றிருந்த பெற்றோல் இன்று $2.39 விலையில் உள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு வராது என கருதுகிறேன், ஆனால் விலை அதிகமாகவே காணப்படும், இரஸ்சியா போன்ற நாடுகள் தமது உற்பத்தியினை அதிகரித்தால் ஓரளவு விலை குறையலாம், ஆனால் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல இந்த போர் முடிந்த பின்னரும் பல மாதங்கள் எடுக்கும் என கூறுகிறார்கள்.
-
தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் பற்றிய தமிழ் யுரியுப்பர்களின் காணொளி தயாரிப்புகள் போன்றது என்று சொல்கிறீர்கள் 😂
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 140 மேலும், 'புத்தரும் அவருடைய போதனைகளும்' என்ற தலைப்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் சேர்த்துள்ளேன். / Additionally, I am including the topic 'The Buddha and His Teachings' in both Tamil and English. பகுதி: 140 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இப்போது நேபாளத்தில் உள்ள லும்பினியில் [Lumbini (modern-day Nepal)] சித்தார்த்த கௌதமர் என்றும் அழைக்கப்படும் கௌதம புத்தர் பிறந்தார். இவர் உலகின் மிகச் சிறந்த ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவராக இன்று பரவலாகக் கருதப்படுகிறார். இவரின் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பெளத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக் கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்று விடும். “நான்கு உயரிய உண்மைகளும்”, “எண் வகை வழிகளும்” பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும். இனி அவர் ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவராக கருதப்படுவதற்கான சில காரணங்களை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம். அறிவொளி அல்லது ஞானோதயம் [Enlightenment]: "புத்தம்" அல்லது ஞானம் ["Buddhahood" or enlightenment] எனப்படும் ஆழ்ந்த ஆன்மீக விழிப்புணர்வை அடைந்து, அதன் மூலம், துன்பத்தின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கும் அதிலிருந்து விடுதலைக்கான பாதையைத் தேடுவதற்கும் கௌதம புத்தர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். தர்மம் என்று அழைக்கப்படும் அவரது போதனைகள், ஞானத்தை எவ்வாறு அடைவது மற்றும் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டறிவது என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன. இங்கே, புத்தத்தன்மை ("Buddhahood" / சமஸ்கிருதம்:புத்தத்துவம், பாளி:புத்தத்த / Sanskrit: buddhatva; Pali: buddhatta என்பது மறுபிறப்பு சுழற்சியில் இருந்து ஞானம் மற்றும் விடுதலையை அடைந்த ஒரு புத்தரின் நிலை. இங்கே புத்தர் என்பது, யதார்த்தத்தின் தன்மையையும் துன்பத்திலிருந்து விடுதலைக்கான பாதையையும் புரிந்துகொண்டு, ஞானம் பெற்ற ஒரு நபரைக் குறிக்கிறது. இரக்கம் மற்றும் ஞானம் [Compassion and Wisdom]: புத்தரின் போதனைகள் அனைத்து உயிரினங்களிடமும் இரக்கம் மற்றும் புரிதலை வலியுறுத்துகின்றன. துன்பம், பற்றுதல் மற்றும் அறியாமையிலிருந்து எழுகிறது என்றும், ஞானத்தையும் இரக்கத்தையும் வளர்ப்பதன் மூலம், தனி நபர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பத்தைத் தணிக்க முடியும் என்றும் அவர் கற்பித்தார். அன்பு நிறைந்த கருணை மற்றும் அகிம்சை மீதான அவரது முக்கியத்துவம் உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகளாவிய வேண்டுகோள் [Universal Appeal]: கௌதம புத்தரால் நிறுவப்பட்ட பௌத்தம், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளதுடன் மற்றும் மில்லியன் கணக்கான பின்பற்றுவோர்ளைக் கொண்டுள்ளது. இருப்பின் தன்மை, துன்பம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடுவது போன்ற அடிப்படை மனித கவலைகளை நிவர்த்தி செய்வதால், அவரது போதனைகள் பல்வேறு கலாச்சார மற்றும் மதப் பின்னணிகளைச் சேர்ந்த மக்களுடனும் இன்று எதிரொலிக்கின்றன. நான்கு உன்னத சத்தியங்கள் மற்றும் எட்டு மடங்கு பாதை [நான்கு உயர்ந்த உண்மைகள் மற்றும் எட்டு நெறிகள் அல்லது எண் வகை வழிகள் / Four Noble Truths and the Noble Eightfold Path] போன்ற பௌத்தத்தின் கொள்கைகள் அர்த்தமுள்ள மற்றும் நெறிமுறை வாழ்க்கையை நடத்துவதற்கான நடைமுறை வழிகாட்டுதலை வழங்குகின்றன. இங்கே நான்கு உயர்ந்த உண்மைகள் என்பது, [1] பிறப்பு, நோய், முதுமை, இறப்பு மற்றும் பசி மனிதர்களால் தவிர்க்க இயலாத துன்பங்கள் ஆகும் . மேலும் பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவைகளும் மனிதருக்குத் துன்பத்தைத் தருபவைகள் ஆகும். [2] துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று ஆகும். [3] ஆசையை விட்டு விடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை ஆகும். [4] துக்கத்தைப் போக்க உதவும் எட்டு வழிமுறைகள்: நல்ல பார்வை, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல நடவடிக்கை, நல்ல வாழ்வாதாரம், நல்ல நினைவாற்றல், நல்ல முயற்சி, நல்ல தியானம் [Right View, Right Thought, Right Speech, Right Conduct, Right Livelihood, Right Mindfulness, Right Effort, Right Meditation] ஆகும். ஆகவே உண்மையான புத்த பிக்கு என்றால் இவைகள் முழுமையாக இருக்கவேண்டும்! Part: 140 / APPENDIX – "The Buddha and His teachings" Gautama Buddha, also known as Siddhartha Gautama, is widely regarded as one of the greatest spiritual teachers in the world. Here are a few reasons why he is considered as such: Enlightenment: Gautama Buddha achieved a state of profound spiritual awakening known as "Buddhahood" or enlightenment. He dedicated his life to understanding the nature of suffering and seeking the path to liberation from it. His teachings, known as the Dharma, provide guidance on how to attain enlightenment and find true happiness. Compassion and Wisdom: Buddha's teachings emphasize compassion and understanding towards all living beings. He taught that suffering arises from attachment and ignorance, and that by cultivating wisdom and compassion, individuals can alleviate suffering for themselves and others. His emphasis on loving-kindness and non-violence has had a profound impact on the world. Universal Appeal: Buddhism, founded by Gautama Buddha, has spread throughout the world and has millions of followers. His teachings resonate with people from diverse cultural and religious backgrounds, as they address fundamental human concerns such as the nature of existence, suffering, and the pursuit of happiness. The principles of Buddhism, such as the Four Noble Truths and the Eightfold Path, offer practical guidance for leading a meaningful and ethical life. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 141 தொடரும் / Will follow துளி/DROP: 2108 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 140 https://www.facebook.com/groups/978753388866632/posts/34444647588517115/?
-
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் எப்படி சிதைத்ததோ அதே விளைவை இஸ்ரேல் அனுபவிக்கிறது. அயன்டோம் எங்கேப்பா?
-
யாழில் விரிவுரையாளரின் படுகொலையும் ; அதன் பின்னணிகளும்
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அவருக்கென்ன? இரண்டு மூன்று தரங்கள் சாப்பிட்டுவிடுவார். நாங்கள் தேத்தண்ணி குடிக்காமல் வாசிக்கிறோம். ஐந்தாறு மாதங்கள் பிரிந்திருந்தாலும், “இஞ்சை ஒரு அசுமாத்தமும் இல்லை, ஆறுதலா வா” என்று அவர் சொல்வதைப் பார்த்தால், மனுசன் happy போலே😏- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
இல்லை…கென்னடி, கிளிண்டன் எண்டவர் டபாரெண்டு சோழன், செங்குட்டுவன் எண்டு போறார்… அதான் விபரம் என்னவெண்டு கேக்கிறன்😂- வீதியோரம்.
ஒன்றுக்கு நாலுக்கு (பத்துக்கு மேல்) வட்சப் குறூப்பில் இருந்து அரட்டியடித்தால் எங்கே எழுத நேரம் 😅- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
கிருபனுக்கு வேணும். நான் முன்னமே கதைக்களத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஜெயமோகனால் வந்த வினை.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுக வை திருமா எங்கும் போகமாட்டார். திருமா முரண்டுக பிடித்தால் திமுக விசிகவை உடைக்கும்.குறைந்த தொகுதிகளைப் பெற்றால் புதியவர்களுக்கு வாய்ப்புக்கிடைக்காது அதிருப்தி அடைவார்கள்.பழையவர்களை மாற்றி புதியவர்களுக்கு இடம் கொடுத்தாலும் பழையவர்கள் திமுகவில் ஐக்கியமாகி விடுவார்கள்.டைசிவரை தீமுகவுக்கு கொத்தடிமையாக இருந்து 6சீற்றைப் பெற்றுக்கொண்டு இருக்க வேுண்டியதுதான். உண்மையில் திமுககூட்டணியில் திமுகவுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவீதம் உள்ள கட்சி விசிகதான். காங்கிரசுக்கு கூட சிசிகவை விட வாக்குச்சதவீதம் குறைவுதான்.கட4;த தேர்தலில் 0.4வீதம் எடுத்த தேதிமுகவுக்கு 1 ராஜ்யசபா +10 தொகுதிகள்வரை பகாடுக்கத்தயராக இருக்கும் திமுக சிசிக கம்னியூஸ்ட்டுகளை இடைக்கையால் டீல் பண்ணுகிறது. தெலுங்கர்களுக்கு கொடுக்கும்மரியாதையை தமிழர்களுக்கு கொடுக்கவில்லை.தவாக வேல்முருகன் .திருமா போன்றவர்களை விரும்பினால் இருங்கள் இல்லாவிட்டால் வெளியேறுங்கள் என்ற மாதிரி டீல்பண்ணுகிறார்கள். கமலுக்கும் அதே நிலை. ஏனென்றால் அவர்கள் பாஜக கூட்டணிக்குப் போகமாட்டார்கள் டஎன்று தெரியும். ஆனால் தேதிமுக நேற்றுவரை பாஜககூட்டணியில் இருந்து விட்டு ஒரு எம்பி பதவிக்கும் பணத்திற்குமாக திமுகவிடம் வந்துள்ளார்கள்.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
காரணம் தெரியாதபடியால்தான் “படையெடுக்க என்ன காரணம்?” என்று உங்களைக் கேட்கிறார். அதுக்கு நீங்கள், “சொல்லுங்கள் கேட்போம்”என்பது நியாயமாகுமா? - கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.