Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அமெரிக்காவின் கூற்றை ஈரான் மறுப்பு – “உளவியல் போர்” என கடும் குற்றச்சாட்டு 21 Mar, 2026 | 11:41 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் கருத்துக்கள் உண்மையற்றவை மட்டுமல்லாது, உலக சந்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் “உளவியல் போர்” என ஈரான் கடுமையாக சாடியுள்ளது. ஈரானிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகமான சி.என்.என். க்கு வழங்கிய தகவலின் படி, பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதாக எந்தவிதமான உறுதியான மாற்றங்களும் காணப்படவில்லை. “எதிரியின் இராணுவ நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், பங்குச் சந்தையில் நிலவும் பதற்றத்தை சமாளிக்கவும் டிரம்ப் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20 சதவீதத்தை கட்டுப்படுத்தும் முக்கியப் பகுதி ஆகும். இந்நிலையில், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதன் விளைவாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு 112 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. மேலும், Goldman Sachs வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்த விலை உயர்வு 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரானிய அதிகாரி ஒருவர், “டிரம்பிற்கு ஒரு தற்காலிக பதில் அளிப்பதற்குப் பதிலாக, அவருக்கு ஒரு வரலாற்றுப் பாடம் கற்பிக்க வேண்டும் என தெஹ்ரான் முடிவு செய்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலைமைகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பொருளாதாரத்திலும் அதிர்வுகளை உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/241549
  3. நீங்கள் எவ்வளவு நீட்டி முழக்கினாலும்; நீங்கள் யார் என்பதே (உங்கள் பெயர், விபரம்) யாருக்கும் தெரியாது. ஆகவே உங்கள் உறவினர் யார் என்பதோ, அவர் என்ன வேலை செய்தார் என்பதோ கூட யாருக்கும் தெரியாது. எனவே நீங்கள் என் உறவினர் அப்படி சொன்னார், இப்படி சொன்னார் என்பது ஆதாரம் ஏதும் அற்ற கூற்று. இது வரலாற்றில் பிரபலமான வாக்கியம். இந்த வாக்கியத்தை ஒரு அரசியல்வாதி கூறுவதன் பாதக தன்மை கிட்டதட்ட அரசியலில் கொஞ்சூண்டு ஞானம் உள்ளோருக்கே தெரியும். அதுவும் அதே போல் பாண், கேக் என்று இலங்கையில் வாழும் சிறிமா கூறி இருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே இது ஒரு பச்சை பொய் என்பது வெள்ளிடைமலை. ஏன் நீங்கள் இந்த பொய்யை சொல்லுகிறீர்கள்? மேலே சொன்ன படி குறைபுரிதல். உவமான உவமேயத்தை, அசொட்டா நடந்த்து என புரிந்துகொண்டுள்ளீர்கள்.
  4. வேலியில் போன ஓணானை பிடித்து தம்பர் தன்ர ரவுசருக்குள் விட்டுவிட்டு படும் அவதி சொல்லிவேலையில்லை🤣
  5. சட்டத்துறைக்கு பரீட்சியம் என்று சொல்லி கொண்டு, இதை இங்கு சொல்வது மொ... தனமாக படவில்லை? எல்லாம் ஆதாரத்தை கொண்டா தீர்மானிப்பது? நான் சொன்னதை உங்களால் கற்பனை பண்ணி கூட (நான் சொல்வதற்கு முதல்) இருக்க முடியாது என்பதே யதார்த்தம். இதில்வேறு ஒருவர் கொச்சையான இரு அர்த்தத சொல்லவாகையை பாவித்து சொல்ல வந்த முக்கிய விடயத்தில் மூக்கு உடைபட்ட நிலை, வடகொரியாவின் யாப்பு தன்மை தெரியாது, அவரின் சொந்தம் வடகொரிய அரசாங்கத்தில் வேலை, அதன் வழியாக அறிந்ததாக. ஏன் நீங்கள் செய்வதை மற்றவர்கள் மீது சுமத்துகிறீர்கள்? நான் (அறிந்ததை) சொல்லியது 2-3 வரிகளில் எந்த மொழி, யாதார்த்தம் , மற்றும் விடயம் முரண்பாடு இல்லலாமல். சொன்ன பின்பும், விளக்கத்துக்கு முக்கியும், மொழி, விடய உள்ளடக்க முரண்பாடுகளே சொல்கிறது, தவிர்க்க முடியவில்லை, வெளிப்படையாக இருந்தும் புரியாமலே பதிந்தது. 1) அமைச்சரவை கூட்டம் எனபதை அரசியல் (கூட்டம்) என்று விடயம் தெரியாத பிறழ்வு அடிப்படை எடுகோளாக எடுத்து. (அல்லது கற்பனையா?). (அமைச்சரவை (சர்ச்சையான) உரையாட ல் எங்கும் பிற்காலத்தில் வாசிக்கப்பட முடியாது என்பதும் அறியாது, ஏனெனில் பதியப்படுவது இல்லை. அதனால் வாய்வழியாக கூட்டத்தில் இந்தவர்கள் வழியாக கேள்விப்பட்டால் ஒழிய வேறு வழியாக அறியப்பட முடியாது.) (இதனால் தான் UK முதன்மை பத்திரிகைகள், அமைச்சரவை (கூட்ட) கசமுசா போன்றவற்றை அனாமதேயம் என்பது. UK இல் இருந்து கொண்டு இந்த விளக்கம் சொல்லும் கால்வாசியிலும் விளக்கம் குறைந்த தன்மை ) 2) பின் மொழியில் அரைகுறையாக விளக்கம் என்பதை முன்னுக்கு பின் முரணாக சொல்லி 3) அதுவும் போதாது என்று கிரிபாத் என்றால் நம்பகூடியது எனறு முன்னுக்கு பின் முரணாக பின்னூட்டமும் கொடுத்து. (இதில் சிறிமா போன்றோரின் கிட்டத்தட்ட 2 வாழ்கை தெரியாமல் சொல்வது -கிரிபத் அவர்களுக்கு புனிதமான / தெய்வ கடாட்ஷம் / சிங்கள பௌத்த அரசியல் முக்கியதுத்துவம் உள்ள உணவு, குறிப்பாக பகிரங்கமாக அப்படி காட்டி கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு , ஒழுங்கான உணவு அல்ல) இவை எல்லாவற்றையும் விடுவோம் ஒன்றும் வேண்டாம் சாத்திய கூறுகள் என்ன? இல்லை என்பதே உங்களின் அரைகுறை மொழி, விடயம் புரிவு அடிப்படையில் முன்னுக்கு பின் முரணான பதில். (ஆம், நான் காண்பது எந்த வித சிந்தனை இல்லாத ஒப்புவிக்கும் பதில், ) வரலாற்றில் இது மன்னர் ஆட்சியில் சொன்னது என்ற காலத்திலே பாணே குடிகளுக்கு மிகவும் தள்ளி, கேக் உச்ச ஆடம்பரதுக்கு அப்பால், - அப்படியான நிலையில் தான் எந்த இளவரசியோ சொன்னது என்று. சிறிமா காலத்தில் (ஆட்சிக்கு வரும் போது) - பாண் சமூகத்தின் அன்றாட உணவு, கேக் பொதுவாக அவ்வப்போது, பெரிய முயற்சியுடன் எட்ட கூடிய தூரத்தில். சிறிமா வுக்கு , அவரின் பார்வையில், நாளாந்த வாழ்க்கையில் - கேக் ஒரு ஒழுங்கான உணவு, பாணை போல. ஆகவே, (சிறிமா) கேட்டு இருக்க கூடிய சாத்திய கூறுகள் இளவரசியை விட மிகவும் கூட. அந்த நேரத்தில் political correctness என்பதே என்ன என்று கேட்கும் காலம். சிறுமை பகிரங்கமாக சொல்லி இருந்தால் கூட அது புறம் தள்ளப்படும் காலம். அனால் கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் சிரிமாவுக்கு பா, கேக் இன் அருமை தன்மை, சராசரியாக மக்கள் பெறக்கூடிய நிலையை சொல்லி அந்த விடயத்தை மூடியதாக. அனால், சிங்கள பௌத்த அரசியலுக்கு எது சரி என்பதில் மிகவம் கவனம் ( ஏனெனில், அவர்களை பொறுத்வசரை , சிங்கள பௌத்த சமுகத்தை பொறுத்தவரைஅவர்கள் பௌத்தர்கள் இல்லை. கிறிஸ்தவத்தில் இருந்த்துமாறி , மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட பௌத்த பகிரங்க தோற்றம் / வாழ்க்கை. உள்ளே கிருஸ்தவ / மேற்கத்திய போக்கு வாழ்கை. இப்படியாக மாற விரும்பாத uk வந்த சிங்கள குடும்பங்கள் இருக்கிறது.) இதை புலம் பெயர் தமிழரிலும் காணலாம் - அங்கு வசதி குறைவான நிலையில் இருந்து, இங்கு வந்து நெடுங்காலம் இருந்த பின் - WASHING MACHINE, hoover (vacuum cleaner), microwave, வாசனை திரவிய பாவனை போன்றவை அங்குள்ளவர்களிடம் சராசரியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று எதிர்பார்பது. இது ஏனைய சமூகங்களிலும் இருக்கிறது. அதுவும் இந்த காலத்தில். தர்க அடிப்படையில் கூட (அதுக்கு நிதர்சனம் சமூக நடத்தை) நீங்கள் சொல்லுவது நில்லாது, எந்த அரைகுறை பிறழ்வை தவிர்த்தாலும். (அனால், இதை சொல்லும் போது இவை எல்லாவற்றையும் கருத்தில் எடுத்த அச்சொட்டாக பொருந்த கூடியவாறு கற்பனை கதை சொல்லி உள்ளேன் என்றால், எதிலும் நான் அரைகுறை இல்லை) முற்று முழுதாதாக தெரியாத விடயமும், அரைகுறை, முரண்பாடு மொழியம் எல்லாம் உங்களிடம்.
  6. Today
  7. மிசைல் கையிருப்பு தீரும் என பலரும் கருதிய நிலையில் டியாகோ கார்சியா நோக்கி இரு மிசைல்கள் பாய்ந்துள்ளன. இது ஐரோப்பாவின் பல நகர்களை வீச்சு எல்லைக்குள் கொண்டு வரும். தம்பர் இன்று சொல்வதை பார்த்தால் தரையிறக்கம் வராது போலவே படுகிறது. ஆனால் போரை இவர்கள் நிறுத்தினாலும், நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தும் எனில் - அதன் விலை அமெரிக்காவை அரபுநாடுகளில் இருந்து அகற்றுவது அல்லது குறைப்பதாக இருக்கலாம்.
  8. சிவாஜி வெற்றிவேல் ·ptedonroSs2 hs10l6à7:L27gga8gf1m41 g853e3c1r3c0 tt5mitf0m6 2 · நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1953 இல் யாழ்ப்பாணத்தில் .. மருத்துவ மனைக்கு நிதி உதவி. .. என்தங்கை நாடகம் .. :நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் ஒரு பாரம்பரிய தொடர்பு இருக்கிறது . சிவாஜியின் பராசக்தி கொழும்பு மைலன் தியேட்டரில் சுமார் 350 நாட்களுக்கும் மேலாக ஓடியது .இது பலரும் அறிந்தது .ஆனால் அவர் செய்த நிதி உதவி பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்க மாட்டாரகள். 30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, யாழ்ப்பாணம் மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார். உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். யாழ்ப்பாணம் மூளாய் மருத்துவமனை .. நடுவில் இருப்பவர் சிவாஜி கணேசன் சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார். சங்கர பிள்ளை . தகவல்கள் தந்த திரு ரவி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி . Voir la traduction......!
  9. · Suivre oteprSdonst32ac42ia5tsu9 :1ctLl802r10aà a3c4 u6e1cm206af1a l · பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். “அதோ பாருங்கள் குருதேவா... கிருஷ்ண பரமாத்மா வருகிறார்” என்று குதித்தான் மட்டி. “ஆமாம் குருவே.. கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்” என்றான் மடையன். பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்.. உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார். “சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர். “புதுத் துணிகளைக் கிழிப்பதா? ஏன் குருவே?” என்று கேட்டான், முட்டாள். “புத்தி கெட்டவனே.. ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி... அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்” என ஆணையிட்டார் பரமார்த்த குரு. சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்.. உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார். “பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா.. அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார் பரமார்த்தர். “குருவே.. நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு. “அதானே? நமக்கு வேட்டி அல்லவா தேவை” என்றான் மூடன். “கார்மேகக் கண்ணா.. இந்தா, பொரி உன் இஷ்டம் போல் கொரி..” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான் மட்டி. கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை.. எனக்கு நேரமாகிறது, என்னைப் போகவிடுங்கள்” என்றார். “கண்ண பெருமானே எங்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள். “கண்ணா.. அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு. “கோபாலா கோவிந்தா.. தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன். “பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர். “பொரி கொடுத்ததற்கு நன்றி.. நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர். “என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர். “வரமா?” அதென்ன?” “ஆமாம்.. குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்” என்றான். “எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள். “வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்” என்றான் மடையன். “சரி.. நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது..” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர். “ஆஹா.. பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா.. உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார். “அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம், அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்” என்றார் பரமார்த்தர். “குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்லாம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்.. அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது” என்றான் மட்டி. “எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன். போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு.. இதையே விலைக்கு வாங்கி விடலாம்” என்றான் மடையன். பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான். “இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன். “நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.. இது பல்லக்கே தான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன். சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன். பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர். சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள். ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது. திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது. அவ்வளவுதான்.. பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே” என அலறினார்கள். “அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்” என்றான் முட்டாள். “நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே” என்று துக்கப்பட்டான் மண்டு. அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே” எனத் திட்டினார். “குருநாதா..” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்.. அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள். பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்.. Voir la traduction.....!
  10. ஞானபீடம் சர்ச்சையை முன் வைத்து. மரபின் மைந்தன் முத்தையா திரு சீமானுக்கு திரு.ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தனக்கு அவர் தரப்பில் இருந்துவரும் வசை மொழிகளை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதில் “இலக்கியம் என்றால் விவாதம் வரும் பூசல் வரும் “என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரும் சரி மற்றவர்கள் பலரும் சரி இந்த விவாதத்தை இலக்கியப்பூர்வமாக கொண்டு செலுத்தவில்லை. கவிஞர் வைரமுத்து படைப்பாளரே இல்லை என்பது போன்ற சித்திரத்தை நிறுவ முயலும் போதே விமர்சனம் விவாதம் என்பதெல்லாம் வெறும் அவதூறுகளாகத் திரிந்து விட்டன. கவிஞர் வைரமுத்து பற்றிய என்னுடைய புத்தகம் குறித்து திரு ஜெயமோகன் எழுதிய கட்டுரை இணையத்தில் பரவலாக கிடைக்கின்றது. “முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.” இவை கவிஞர் வைரமுத்து கவிதைகள் பற்றி திரு ஜெயமோகன் எழுதியது. நவீன கவிதையின் போக்குக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை பாணிக்கும் இருக்கிற வித்தியாசத்தை இவரே இவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறார். ஃபிரண்ட்லைன் பேட்டியில் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பல நேரங்களில் inappropriate என்று எழுதுவதும் இலக்கிய விவாதம் என்கிற அளவுகோலுக்குள் வரவே வராத அவதூறு. ஏனென்றால் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பற்றி அந்தக் கட்டுரையில் திரு.ஜெயமோகன் இப்படி எழுதுகிறார்… “வைரமுத்துவின் சிறப்பாக நான் காண்பதை இங்கே முத்தையாவும் சுட்டிக்காட்டுகிறார். அவர் தமிழ் மரபின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். பாடல் [லிரிக்] என்பது எடுத்தாள்கை கவிதை [அப்ளைட் பொயட்ரி] ஒரு மரபின் சாரமான கவித்துவத்தை முழுக்க வேர்பரப்பி உறிஞ்சி தன் கவித்துவத்துடன் இணைத்து ஒன்றாக்கி இசைக்குள் பொருத்தும் கலை அது. தமிழின் பிற பாடலாசிரியர்கள் செவ்வியல் மரபில் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். நாட்டார் மரபில் இருந்தும் புதுக்கவிதை மரபில் இருந்தும் தமிழ்ச் செவ்வியல் மரபில் இருந்தும் ஒரேசமயம் பெற்றுக் கொண்ட பாடலாசிரியர் என்பதே வைரமுத்துவின் தனித்தன்மை.” தமிழ் கவிதையில் மரபுக் கவிதையை ஆழமாக பயின்று புதுக்கவிதையை தனித்தன்மை கொண்ட வீச்சுகளுடன் வெளிப்படுத்தி திரு ஜெயமோகனே சொல்வது போல நவீன கவிதையின் இருண்மை இல்லாமல் உருவாகும் படைப்புகள் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள். சமீபத்தில் ஆனந்த விகடன் நேர்காணலில் கவிஞர் வைரமுத்து சொல்லியுள்ள ஒரு கருத்து இங்கு முக்கியமானது. “எதார்த்தத்தை அப்படியே எழுதுவது ஒரு வகை. கலைத்தன்மையோடு வெளிப்படுத்துவது இன்னொரு வகை” என்று சொல்லி இருக்கிறார். இரண்டு பாணிகளுமே படைப்பிலக்கியத்திலும் திரைப்பாட்டிலும் கொண்டாடப்படுபவை. நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் ஒன்று. ஒரு படத்தில் கதாநாயகி கண்ணீர் வடிக்கிறாள் என்றால் கவியரசர் கண்ணதாசன் ” ஏன் அழுதாய் ஏன் அழுதாய்! என்னுயிரே ஏன் அழுதாய்! நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்”என எழுதும்போது கேட்பவருடைய உள்ளங்கள் உருகி விடுகின்றன. வேறொரு படத்தில் அதே சூழலுக்கு கவிஞர் வைரமுத்து எழுதும்போது “கண்ணில் என்ன கார்காலம்? கன்னங்களில் நீர்க்கோலம்” என எழுதுவது கலைத்தன்மை கொண்டது. அவரைப் பிடிக்காதவர்கள் இதை அலங்கார அடுக்கு என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஒருவர் எவ்வளவு பெரிய படைப்பாளியாகவும் இருக்கலாம். அல்லது திறனாய்வு அறிஞராக இருக்கலாம். ஒரு படைப்பை வாசிக்கும் நேரத்தில் நான் ஒரு வாசகம் என்ற உணர்வுடன் வாசித்தால் திறந்த மனதுடன் அந்தப் படைப்பை பார்க்க முடியும். கவிஞர் வைரமுத்து எழுத்துகள் இவர்கள் முன்னிறுத்தும் வகைமையிலிருந்து வேறானது.இலக்கியச் செழுமை இலக்கணத் துல்லியம் ஆகியவற்றை உணர்ந்த உள்வாங்கிய எழுத்து நடை. இன்றளவும் இந்த வடிவம் தான் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது. இளைஞர்களை மொழியின்பால் ஈர்ப்பது. இவர்கள் முன்னிறுத்தும் வகையில் இருந்து வேறானது என்பதாலேயே அது இலக்கியம் அல்ல என்று ஆகிவிடாது. இருபதாம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒரு வாசகன் என்ற முறையில் “காவிய மரபின் குறுநீட்சி” என்று வகைப்படுத்துகிறேன். இந்தச் சூழலில் அவர் படைப்பாளியே அல்லர் என்பது போன்ற அவதூறு யார் செய்தாலும் அது உண்மையின்நோக்கத்தில் இல்லாமல் உள்நோக்கத்தின் அடிப்படையில் வீசப்படும் வசை தான் என்பது உறுதி. இந்த அவதூறுக்கு இலக்கிய விவாதம் இலக்கியப் பூசல் என்றெல்லாம் நாகரீகச் சாயம் பூச முயலாதீர்கள். வல்லமை மிக்க தமிழ் மரபின் பின்புலத்தில் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் துலங்கும் தன்மை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். https://www.marabinmaindan.com/2026/03/20/ஞானபீடம்-சர்ச்சையை-முன்/?fbclid=IwdGRleAQrPChleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEex_omHbQiM_-FZaNBVoghJXLinLc5AWZHjVeqAR2-mgYGbOTekSx1JabubfE_aem_fm_nj37FkT9wDvQjKSlluQ
  11. சக்நோரிஸ் சின் பல படங்கள் நான்பார்த்திருக்கின்றேன் .......பின்பு அவர் நடிக்கும் டீ . வி சீரியல் தொடர்களும் விரும்பிப் பார்ப்பது வழக்கம் ......... அருமையான நடிகர் . ........!
  12. காகிதப்புலிகளை இவர் எதற்காக அழைத்தார்? அவர்களின் உதவி இவருக்கு தேவைப்படிருக்கு. ட்ரம்பின் தோல்வி, ஏமாற்றம், அவமானம் இப்படி வெளிவருகிறது. கோழைகளை அழைத்த இவர் மட்டும் வீரனாம்.
  13. நீங்கள் இப்படி ஓரிரு வரிகள் எழுதிச்செல்வதே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கு ....... நன்றி .....! 👍
  14. இனி வருங்காலத்தில் அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பவோ அல்லது தமது நாடுகளுக்குள் அனுமதிக்கவோ விரும்பாது. ] அரபு நாடுகள் அமெரிக்காவை தங்கள் பாதுகாப்பிற்கு வைத்திருக்காமல் இருந்திருந்தால் ஈரானால் அந்த நாடுகள் லெபனான் போன்று நாசமாக்கப்பட்ட நிலைக்கு முதலே இருந்திருக்கும்.
  15. வடக்கில் நாலு தமிழருக்கு ஒரு இராணுவம் எனும் வீதத்தில் தமிழர் நிலங்களிலேயே இராணுவம் குடியிருக்கு, வடக்கில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் அதிகமான விகாரைகள் அதுவும் தமிழரின் நிலங்களில் எழுந்து நிக்குது, தமிழரோ நிலம் இருந்தும் உறவுகள் வீட்டில், வாடகை வீட்டில், அகதிகளாக வாழுகிறார்கள். அப்படி இவர்களுக்கு என்னதான் பிரச்சனை? அப்படி பிரச்சனை இருந்தால், இங்கே காவற்துறை இருக்கிறது, நீதிமன்றங்கள் இருக்கின்றன. பிரச்சனை இருந்தால் அங்க முறையிடாமல் கொழுப்புக்கு ஏன் நடைபயணம்? ஓ.... அங்கே உள்ளவர்களை உசுப்பிவிடவேண்டுமென பிக்குகள் துடிக்கிறார்கள். அவர்களது போராட்டங்கள், மகாநாடுகளெல்லாம் பிசுபிசுத்துப்போனதால் இப்படி கிளம்பியிருக்கிறார்கள். படத்தில் தமிழிலும் எழுதி தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் கொழுப்பிலிருந்து இறக்கப்பட்டவர்கள். அதில் சில பெண்கள் பொட்டு வைத்திருக்கிறார்கள், அருண் சிர்த்தாத்தின் ஆட்கள் போலிருக்கிறது. அடுத்து கோத்தா கைதை திசை மாற்றுவதற்கு பல நாடகங்கள் அரங்கேற்றுவார்கள் கள்ளர், கொலைகாரர் கூட்டம். ஏதேதோ செய்து பார்க்கிறார்கள், சவால் விடுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், ஒன்றும் யாரிடமும் எடுபடுவதாக தெரியவில்லை. விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது.
  16. 👌 நான் வாழ தயாராக இல்லாத தப்பிவந்த ஒரு வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கு பரித்துரைப்பது மிக மோசமான வழிகாட்டுதலாகும்.
  17. https://www.facebook.com/1457391262/posts/pfbid0Bj2uL1uwoc2ThhSpJFrjxzc2JRxQfaMLL9ofxBTy7LNpY4BekuBhRANm4vdYuNCWl/?mibextid=wwXIfr
  18. இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!! --- --- --- *முதன் முதலில் 4ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் ஈரான் தாக்குதல்... *ஆனால், உலகலாவிய அச்சுறுத்தல் அல்ல என்கிறது ஈரான் *டியாகோ கார்சியா மீதான தாக்குதல் அபாயத்தை ஏற்க மறுக்கும் அமெரிக்க - பிரித்தானிய ஊடகங்கள்... --- --- --- மத்திய இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator) தெற்கே அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க - பிரித்தானிய கூட்டு செயற்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நான்காயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு நேர் வழிப் பாதையில் கூம்பு வெட்டாக பயணிக்கக் கூடிய (Intermediate-Range Ballistic Missiles - IRBMs) ஏவுகணைகளை ஈரான் தாக்குதலுக்கு முதன் முதலில் பயன்படுத்தியதாக, த வோள்ஸ்ட்ரீட் ஜேர்னல் (the wall street journal) செய்தி தளம் கூறுகிறது. டியாகோ கார்சியா ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மிற்றர் (2, 300 இல் இருந்து 2. 500 மைல்கள்) வரையான தூரத்தில் அமைந்துள்ளது. ஆகவே இத் தாக்குதல், அமெரிக்க - இந்திய கூட்டுப் படைத்தளத்திற்கு மாத்திரமல்ல. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தோ - பசுபினக் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்ற தொனியில் அச் செய்தி விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள அமெரிக்க - பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா மீது ஈரான் இரண்டு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தவோல் ஸ்ரிற் ஜேர்னல் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இடை மறிப்புச் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியபோதும், அதனை உறுதிப்படுத்த முடியிவ்லை எனவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் SM-3 இன்டர்செப்டர் (SM-3 interceptor) டியாகோ கார்சியா தரித்து நிற்கிறது. 30 கிலோ மீற்றர் சதுரப் பரப்பைக் கொண்ட டியாகோ கார்சியாவில் அமெரிக்க - பிரித்தானிய கூட்டுப்படைத் தளம் அமைந்துள்ளது. டியாகோ கார்சியாவில் ஆக குறைந்தது 4 அயிரம் பேர் மாத்திரமே வாழ்கின்றனர். படையினரும் படைகளுக்கு உதவியளிக்கும் பணியாளர்களும் அங்கு அதிகமாக வாழ்கின்றனர். இத் தாக்குதல் ஊடாக, உலகின் எந்தப் பகுதிகளுக்கும் தன்னால் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முடியும் என்றும், அமெரிக்க தளங்களை இனம் காண முடியும் எனவும் ஈரான் காண்பித்துள்ளது. அமெரிக்க - பிரித்தானிய படை உயர் அதிகாரிகள், அதிர்ச்சியடைந்துள்ளதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் (economictimes) இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதலை 2,000 கிமீ (1,250 மைல்கள்) வரை கட்டுப்படுத்தியுள்ளதாக. கடந்த மாதம் இந்தியா டுடேக்கு (India Today)அளித்த பேட்டியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி கூறியிருந்தார். ஆனாலும், டியாகோ கார்சியா மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலகளாவிய அச்சுறுத்தலாக மாற முயற்சிக்கவில்லை என்று அப்பாஸ் ஆராச்சி சுட்டிக்காட்டியதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்க - பிரித்தானிய நாடுகளை மையப்படுத்திய பிரதான ஆங்கில செய்தி ஊடகங்கள், தாக்குதல் பற்றிய “அச்சம்” - “ஆபத்து” போன்றவற்றை நேரடியாக ஏற்கத் தயங்குவதை அவதானிக்க முடிகிறது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  19. துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை: உச்ச தலைவர் கமேனி Published By: Vishnu 21 Mar, 2026 | 04:21 AM துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஈரானால் எந்த வகையிலும் திட்டமிடப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எதிரிகளால் நடத்தப்படும் 'போலிக் கொடி' தாக்குதல்கள் என்றும், அல்லது பொறுப்பை மற்றொரு தரப்பின் மீது சுமத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சதிச் செயல்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக எதிரிகள் இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்துவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார். https://www.virakesari.lk/article/241523
  20. டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! 21 Mar, 2026 | 11:11 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் குறித்த இராணுவத் தளத்தைத் தாக்கவில்லை. இதனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல்களின் படி, ஒரு ஏவுகணை நடுவானில் பயணிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. மற்றொரு ஏவுகணை தளத்தை நோக்கி வந்தபோது, அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ‘SM-3’ வகை இடைமறிப்பு ஏவுகணையை ஏவி அதைத் தடுக்க முயன்றுள்ளது. எனினும், அந்த இடைமறிப்பு முயற்சி முழுமையாக வெற்றியடைந்ததா அல்லது ஏவுகணை தானாகவே கடலில் விழுந்ததா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதல் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பான துல்லியமான கால விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், வெள்ளை மாளிகை அல்லது பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ கருத்து வெளியிடவில்லை. டியாகோ கார்சியா தளம், அமெரிக்காவின் நீண்ட தூர போர் விமானங்கள், கடற்படை நடவடிக்கைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான முக்கிய மூலோபாய மையமாகக் கருதப்படுகிறது. ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தை குறிவைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது, பிராந்திய மோதல்கள் மேலும் விரிவடையும் அபாயத்தை சுட்டிக்காட்டுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தச் சம்பவம், மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் நிலவி வரும் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது. மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம் இந்தச் சம்பவத்தின் மீது திரும்பியுள்ளது. https://www.virakesari.lk/article/241542
  21. மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை - துரைராசா ரவிகரன் 20 Mar, 2026 | 04:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இரண்டாவது நாளாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் உரையாற்றுகையில், நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு காலசாரம் எமக்குள்ளது. என்று ஹிரிகம காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அநுராதபுரத்தில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். பாராட்டுகின்றேன். இதனைத்தான் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலப்பறிப்பினாலேயே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்தகால ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் இப்போதைய ஜனாதிபதி நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஒருபகுதி மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆனால் வவுனியாவடக்கு, முல்லைத்தீவு, தையிட்டி. வலிவடக்கு, கேப்பாப்புலவு, முள்ளிக்குளம், திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு என வடக்கு கிழக்கெங்கும் தமது நிலமீட்பிற்காகத்தான் தமிழ்மக்கள் உரமாகப் போராடுகின்றார்கள். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்களுக்கும் தமது நிலம் தமது உறவுகளின் பின்னிப்பிணைந்த கலாசாரத்துடனான பூர்வீகத் தமிழ் மண்தான் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஜனாதிபதி அநுராதபுரத்தில் உரை நிகழ்த்திய அதே நாளில் கடந்த முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி என்னும் இடத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அந்தக்காணிகள் தமிழ்மக்களுடைய பூர்வீக தனியார் அறுதி உறுதிக் காணிகளாகும். நில அளவையாளர் நாயகத்தினால் அளந்து வரையப்பட்டு, பேணப்பட்டுவரும் (Top off pp 70 இலக்க) வரைபடத் தொகுதியில் தனியார் காணியாகவும், மேய்ச்சல் தரை நிலங்களாகவும் உள்ளன. எனவே மகாவலி அதிகாரசபைக்கு அந்த நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அதிகார எல்லைக்குட்பட்ட இந்த தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளைத் திருடி சிங்கள வர்த்தகருக்கு குத்தகைக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மகாவலி அதிகாரசபையிடமிருந்து தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளை சட்டவிரோதமாகக் குத்தகைக்குப் பெற்றுள்ள அந்தநபர், அந்தக் காணியில் உப்பளம் அமைக்கும் வேலையைத் தொடங்கியதால் அங்கு ஒரு அமைதிக்குலைவு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததது.இவ்வாறான இனவிரோத செயற்பாட்டைச் செய்தது மகாவலி அதிகாரசபையே . இவ்வாறான இனவிரோத செயற்பாடு தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்திலே மகாவலி அதிகார சபையினால் வடக்கிற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் கிராமப்பெயர்களை சிங்களப் பெயராக மாற்றி அங்கு சிங்களமக்களைக் குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மகாவலியின் இத்தகைய அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையும், சமாதானக் குலைவும் ஏற்படுகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/241485
  22. அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் கானல் நீரா? வளைகுடா நாடுகளில் நிலவும் கோபமும் ஏமாற்றமும் பட மூலாதாரம்,FADEL SENNA / AFP via Getty Images கட்டுரை தகவல் பவுலா ரோசாஸ் பிபிசி நியூஸ் முண்டோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் கடந்த தசாப்தங்களில், லெபனான் மீது குண்டுகள் விழுந்தபோதும், இராக் நாட்டின் மக்கள் நெரிசல்மிக்க சந்தைகளில் தற்கொலைப் படைத் தாக்குதல்தாரிகள் தங்களை வெடிக்கச் செய்தபோதும் சிரியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) கடத்தி கொடூரமான முறையில் தலையை துண்டித்தபோதும், துபை ஒரு தொடர்ச்சியான கொண்டாட்ட இடமாகவே இருந்தது. உலகின் செல்வந்தர்கள் அதன் கடற்கரைகளை ஒட்டி உள்ள செயற்கைத் தீவுகளில் மாளிகைகளை வாங்கினர், அபுதாபியின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் உலா வந்தனர் அல்லது கத்தார் பாலைவனத்தில் சஃபாரிகளை மேற்கொண்டனர். போர்கள், போராட்டங்கள் மற்றும் நிலையற்ற தன்மையால் உலுக்கப்பட்ட ஓர் அண்டைப்பகுதியில், பாரசீக வளைகுடா நாடுகள் பல ஆண்டுகளாகப் பாதுகாப்பு மற்றும் செழிப்பின் புகலிடமாக இருக்கும் பிம்பத்தை வளர்த்தெடுத்தன. அவர்களின் முயற்சிகள் மற்றும் அவர்களின் சாதகமான வரி கொள்கைகள் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தன. துபை, அபுதாபி அல்லது தோஹா போன்ற நகரங்களை உலகின் கோடீஸ்வரர்களுக்கும் சொகுசு சுற்றுலாவுக்கும், அதே போல் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளுக்கும் விருப்பமான இடங்களாக மாற்றின. அந்தக் கானல்நீர் பிப்ரவரி 28 அன்று உடைந்தது. அன்று, இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஒரு போரைத் தூண்டியது, அதில் தெஹ்ரான் இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல், வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த முடியாட்சிகள் தாங்கள் நாடாத ஒரு மோதலில் திடீரென சிக்கிக்கொண்டன. "அவர்கள் எக்காரணம் கொண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து நிறுத்த முயன்றனர்," என்று ஐரோப்பிய அமைதி நிறுவனத்தின் வளைகுடா நிபுணரான அன்னா ஜேக்கப்ஸ் கலாஃப் பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார். கத்தார், எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், செளதி மற்றும் ஓமானி மக்கள், அதே போல் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, இரானிய ஏவுகணைகள் திடீரென வணிக வளாகங்கள், சொகுசு வானளாவிய கட்டடங்கள் மற்றும் படகுகள் நிறைந்த துறைமுகங்களுக்கு அருகில் விழுந்தன. உலகின் மிகவும் ஆடம்பரமான சில ஹோட்டல்களையும் போர் எட்டியுள்ளது. இடைமறிக்கப்பட்ட ஒரு இரானிய ட்ரோனின் சிதறல்கள் துபை புர்ஜ் அல் அரப் மீது விழுந்தன, அதே நேரத்தில் பாம் ஜுமேரா செயற்கைத் தீவில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் நேரடியாகத் தாக்கப்பட்டது. மேலும் கடந்த புதன்கிழமை, ராஸ் லாஃபன் தொழில் வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்களால் "பரந்த சேதத்தை" சந்தித்ததாக கத்தாரின் அரசு எண்ணெய் நிறுவனம் கூறுகிறது. அவர்களின் சவுத் பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் வசதிகள் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பிறகு, தான் "தீர்க்கமான நடவடிக்கை" எடுப்பேன் என்று இரான் விடுத்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்ட இடங்களுள் ராஸ் லாஃபனும் ஒன்றாகும். இதன் விளைவுகள் அழிவுகரமானதாக இருக்கின்றன, மேலும் வளைகுடா தலைநகரங்களில் கோபம் உச்சத்தில் உள்ளது. விமானங்கள், ஹோட்டல் முன்பதிவுகள், மாநாடுகள் மற்றும் பஹ்ரைன் மற்றும் செளதி அரேபியாவில் நடைபெறும் ஃபார்முலா 1 போன்ற சர்வதேச நிகழ்வுகள் ரத்தால் இந்த பணக்கார முடியாட்சி நாடுகளைத் தாக்கியுள்ளது. இதனுடன் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதும் சேர்ந்துள்ளது, இது அவர்களின் எரிபொருள் ஏற்றுமதியை முடக்கியுள்ளது. கானல்நீர் கரைந்ததா? "வளைகுடா நாடுகள் மத்திய கிழக்கில் பாதுகாப்பான புகலிடங்கள் என்ற பிம்பத்தை உருவாக்க உழைத்துள்ளன. கடந்த வாரத்தின் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் அந்த பிம்பத்தை மங்கச் செய்துள்ளன," என்று குவைத் பல்கலைக்கழகப் பேராசிரியரும், குவைத் பிரதமரின் அமைச்சரவையின் முன்னாள் துணைத் தலைவருமான பத்ர் அல் சைஃப் பிபிசி-யிடம் ஒப்புக்கொண்டார். இந்த பிராந்தியம் ஆடம்பரத்திலும் பாதுகாப்பிலும் முதலீடு செய்துள்ளது. இப்பகுதியின் முடியாட்சி நாடுகள், அனைத்தும் சர்வாதிகார அமைப்புகள், கண்காணிப்பில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளன, இது பயங்கரவாதத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தது, ஆனால் அவை அதிருப்தியாளர்களையும் அல்லது அவர்களின் பிம்பத்தைப் பாதிக்கக்கூடிய எதையும் வேட்டையாடின. பட மூலாதாரம்,Planet Labs PBC via REUTERS படக்குறிப்பு,இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் ஜெபல் அலி துறைமுகத்தில் மோதின. உதாரணமாக, இந்த மூன்று வாரப் போரில், இரானிய தாக்குதல்களின் வீடியோக்களை வெளியிட்டதற்காக வெளிநாட்டினர் உட்பட டஜன் கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டினர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில், இந்த பழமைவாத முஸ்லிம் நாடுகளில் குறிப்பிட்ட இடங்களில் மதுபானத்திற்கு அனுமதி; ஓரினச்சேர்க்கையின் பகிரங்க வெளிப்பாடுகளுக்கு அனுமதி இல்லை என சில வரம்புகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளன. இது, குறைந்த அல்லது வரி இல்லாத சூழலுடன் சேர்ந்து, கடந்த தசாப்தங்களில் அந்நாடுகளைப் பிரபலமாக்கியது, மேலும் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் மாற்றியது. ஆனால், போர் இந்த அனைத்து முயற்சிகளையும் சோதனைக்கு உட்படுத்துகிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டிய உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சிலின் தரவுகளின்படி, சுற்றுலாத் துறை மட்டும் இந்த பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து வருகிறது. இந்த கூட்டமைப்பு இந்தாண்டு இப்பகுதியில் சுற்றுலா மூலம் 207,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்று கணித்திருந்தது. ஏர்பிஎன்பி மற்றும் விஆர்பிஓ போன்ற தளங்களில் செய்யப்பட்ட முன்பதிவுகளிலிருந்து ஏர்டிஎன்ஏ குழு சேகரித்த தரவுகளின்படி, மார்ச் 6 வாரத்தில் துபை நகரில் 80,000-க்கும் மேற்பட்ட குறுகிய காலம் வாடகைக்கு தங்கும் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. விமான ரத்துகளும் மில்லியன் கணக்கான பயணிகளைத் தவிக்க விட்டுள்ளன. கடந்த தசாப்தங்களில், வளைகுடா பகுதி ஒரு உண்மையான சர்வதேச விமான இணைப்பு மையமாக மாறியுள்ளது, அங்கு தினமும் 500,000-க்கும் அதிகமான பயணிகள் கடந்து செல்கின்றனர். பிப்ரவரி 28 முதல், குறைந்தது மூன்று விமான நிலையங்கள் - துபை, குவைத் மற்றும் அபுதாபி - இரானிய ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் பாதிக்கப்பட்டுள்ளன, இது ஆயிரக்கணக்கான விமான ரத்துகளுக்குக் காரணமானது. பாதுகாப்பு பிம்பம் "ஒரு பகுதி செயற்கையானது, ஆனால் ஒரு பகுதி உண்மையானது, ஏனென்றால் வளைகுடா நாடுகள் தசாப்தங்களாக மோசமான பிராந்திய வன்முறையிலிருந்து தங்களை உண்மையில் தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்தது," என்று ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் பெல்ஃபார் மையத்தின் ஆராய்ச்சியாளர் எல்ஹாம் ஃபக்ரோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார். முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பது "சாத்தியம்" என்று ஃபக்ரோ கருதுகிறார், "ஆனால் அது மோதல் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்தது." ஏமாற்றமும் கோபமும் வளைகுடா நாடுகளை இலக்காக மாற்றிய இரான் உடனான போர் மிகவும் அதிக இழப்பை ஏற்படுத்துவதாக மாறி வருகிறது, இது அதன் குடிமக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது. போருக்குள் தங்களை இழுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை மிகவும் வெளிப்படையாக விமர்சித்த பொது நபர் எமிரேட்ஸை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் கலாஃப் அகமது அல் ஹப்தூர் ஆவார். "நமது பிராந்தியத்தை இரான் உடனான போருக்குள் இழுக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மேலும் இந்த அபாயகரமான முடிவை எடுக்க அவர் எதை அடிப்படையாகக் கொண்டார்?" என்று அல் ஹப்தூர் அமெரிக்க அதிபருக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தில் கேள்வி எழுப்பினார், அதில் அவர் "விசையை அழுத்துவதற்கு முன்பு கூடுதல் சேதங்களைக் கணக்கிட்டாரா?" என்றும் கேட்டிருந்தார். பட மூலாதாரம்,Christopher Pike/Getty Images படக்குறிப்பு,90% மக்கள்தொகையினர் வெளிநாட்டினராக உள்ள துபை போன்ற நகரங்கள், மத்திய கிழக்கை உலுக்கும் நிலையற்ற தன்மையிலிருந்து விலகி வாழ்வது போல் தோன்றியது. "வளைகுடா தலைநகரங்களில் நிலவும் வஞ்சிக்கப்பட்ட உணர்வு கணிசமானது, இருப்பினும் இது சிறிது காலத்துக்குப் பகிரங்கமாக வெளிப்பட வாய்ப்பில்லை," என்று எல்ஹாம் ஃபக்ரோ விளக்குகிறார். வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் உறவில் பெருமளவு முதலீடு செய்துள்ளன, மற்றவற்றுடன் அமெரிக்க ராணுவ தளங்களை ஏற்றுக்கொள்வது, தளவாடங்களை எளிதாக்குவது, மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய உறுதியளிப்பது மற்றும் அமெரிக்காவின் பிராந்திய கொள்கையுடன் இணைந்திருப்பதால் ஏற்படும் உள்நாட்டு அரசியல் விலையை ஏற்றுக்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். "அதற்கு ஈடாக, தவிர்க்க முடியாமல் தங்களை இலக்குகளாக மாற்றும் ஒரு போருக்கு முன்பு, குறைந்தபட்சம் தங்களைக் கலந்தாலோசிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர்கள் செய்த எதற்காகவும் அல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த முடிவுகளால் இரானிய ஏவுகணைகள் அவர்களின் தலைநகரங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் நிதி மாவட்டங்களைத் தாக்கின," என்று ஃபக்ரோ குறிப்பிடுகிறார். லண்டனைத் தளமாகக் கொண்ட சேத்தம் ஹவுஸ் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் நீல் குல்லியமும் வளைகுடா தலைநகரங்களில் இப்போது "பெரும் கோபம் உணரப்படுகிறது" என்பதை ஒப்புக்கொள்கிறார், இருப்பினும் தற்போதைக்கு "அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது மற்றும் அவர்கள் அதை எந்தப் பொது மன்றத்திலும் வெளிப்படுத்த வாய்ப்பில்லை." என சொல்கிறார். அமெரிக்கா அவர்களைப் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல. 2015-இல் இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, "தெஹ்ரானுடனான எந்தவொரு உடன்படிக்கையிலும் தாங்கள் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் கோரி வந்த வளைகுடா நாடுகள் விலக்கி வைக்கப்பட்டன," எனவே இந்த புதிய ஓரங்கட்டப்படுதல் "அவர்களின் உணர்வுகளைப் பாதிக்கிறது." பாதுகாப்பு உத்தி ஷா ரேஸா பஹ்லவியை வீழ்த்தி இரான் இஸ்லாமியக் குடியரசை அறிவித்த புரட்சிக்குப் பிறகு வளைகுடா முடியாட்சி நாடுகள் தங்கள் பாரசீக அண்டை நாட்டுடன் பதற்றமான உறவையே கொண்டுள்ளன. இரான் ஒரு அரபு நாடு அல்ல, அது பெரும்பான்மையான ஷியாக்களைக் கொண்டுள்ளது - வளைகுடா நாடுகள் பெரும்பான்மையாக சுன்னி முஸ்லிம்களைக் கொண்டுள்ளன - மேலும் அது 1979 புரட்சிக்குப் பிறகு இப்பகுதியில் அமெரிக்காவின் பெரும் எதிரியாகத் தன்னைக் நிலைநிறுத்திக் கொண்டது, அதே அமெரிக்காவுக்கு அரபு முடியாட்சி நாடுகள் நட்பு நாடுகளாக உள்ளன. இந்த வழியில், வளைகுடா நாடுகள் குறிப்பாக செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார், அமெரிக்காவுடனான அந்தத் தொடர்பைச் சுற்றித் தங்கள் பாதுகாப்பைக் கட்டமைத்தன. "அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நேட்டோவின் 5-வது விதிக்கு (ஒரு உறுப்பினர் தாக்கப்பட்டால் மற்றவர்கள் அவரது பாதுகாப்புக்கு வருவார்கள்) இணையான ஒன்றை அதாவது அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்ற நிலையை கொண்டிருக்க முயன்றனர்," என்று நீல் குல்லியம் பகுப்பாய்வு செய்கிறார். 1990-இல் சதாம் ஹுசைனின் இராக்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, வாஷிங்டன் தலைமையிலான கூட்டணியால் விடுவிக்கப்பட்ட குவைத்தின் முன்மாதிரியே இதற்கு குறிப்புப் புள்ளியாக இருந்தது. ஆனால் 2019-இல் இரான் செளதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது குண்டு வீசியபோது அல்லது 2025-இல் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் குண்டு வீசிக் கொன்றபோது, அமெரிக்கா கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. வாஷிங்டன் தங்கள் மீட்க வராது என்ற உணர்வு விரிவடைந்தது, மேலும் இந்த நாடுகளில் சில தங்கள் சொந்த பாதுகாப்புத் துறையை உருவாக்கத் தொடங்கியுள்ளன மற்றும் தங்கள் பாதுகாப்புத் தொடர்புகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளன. பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் போன்ற வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்தியது. வளைகுடா நாடுகள் மூன்று தொடர்புடைய அனுமானங்களைச் சுற்றித் தங்கள் பாதுகாப்பைக் கட்டமைத்தன என்று எல்ஹாம் ஃபக்ரோ கூறுகிறார்: வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய உத்தரவாததாரராகச் செயல்படும், இரான் உடனான பதற்றக் குறைப்பு நேரடி மோதலின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் சிலருக்கு இஸ்ரேலுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவுகளை ஏற்படுத்துவது உத்தி ரீதியான நன்மைகளைத் தரும். இந்த உத்திகள் "வளைகுடா அரசுகளுக்கு அமெரிக்கா, இரான் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு சமநிலையைப் பராமரிக்க அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன," என்று பெல்ஃபார் மைய ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். இரான் போர் அந்த கூட்டணியின் வரம்புகளை அம்பலப்படுத்தியுள்ளது. சிலர் துருக்கி அல்லது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளுடன் தங்கள் ராணுவ ஒத்துழைப்பைப் பன்முகப்படுத்தத் முடிவெடுக்கலாம், ஆனால் நீல் குல்லியத்தின் கருத்துப்படி, "அமெரிக்காவை விட்டு விலகிச் செல்ல அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்", ஏனென்றால் அந்தப் பயிற்சி, ஆயுத அமைப்புகள் அல்லது விமான ஒப்பந்தங்கள் பல குறைந்தது 20 ஆண்டுகள் நீடிக்கின்றன. தலைக்கு மேல் தொங்கும் கத்தி தாங்கள் தேர்ந்தெடுக்காத ஒரு போரில் வளைகுடா நாடுகளுக்கு இன்று என்ன வழி உள்ளது? எளிதான வழி எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் மோதல் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு குறைவாகவே சேதம் இருக்கும். குறுகிய கால போர் நிறுத்தம் மீட்புப் பணிகளைத் தொடங்க அனுமதிக்கும் என்று எல்காம் ஃபக்ரோ குறிப்பிடுகிறார். ஆனால் ஒரு நீண்ட காலப் போர் மாதந்தோறும் சேதத்தை அதிகப்படுத்தும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும் துபை போன்ற பொருளாதாரங்கள் சார்ந்திருக்கும் மூலதனம் வெளியேறுவதையும் துரிதப்படுத்தும். அது மட்டுமல்ல. வளைகுடா நாடுகளுக்கு ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஒரு போர் நிறுத்தத்தின் மூலம் மட்டுமே நீடித்த முறையில் தடுக்க முடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவது போல வலிமையின் மூலம் ஒருபோதும் முடியாது என்று நீல் குல்லியம் கருதுகிறார். இழப்புகள் எப்படியிருந்தாலும் பெரிதாக இருக்கும், ஏனெனில் சில நாடுகள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன, மேலும் போருக்கு முன்பு இருந்த நிலைக்கு அதை மீண்டும் கொண்டு வர அவர்களுக்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகலாம். போர் இன்றே முடிவுக்கு வந்தாலும், அதன் வீழ்ச்சி தற்போதைக்கு நிகழ வாய்ப்பில்லை என்று தோன்றும் இரானிய ஆட்சியின் அச்சுறுத்தல், வளைகுடா மீது தலைக்கு மேல் தொங்கு கத்தி போல தொடர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும். "இன்னும் இரண்டு மாதங்களில், அணுசக்தி திட்டம் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் ஏதேனும் நகர்வைக் கண்டறிந்திருப்பதாகவும், மீண்டும் தாக்குவதாகவும் இஸ்ரேல் கூறக்கூடும்," என்று சேத்தம் ஹவுஸ் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். "அப்போது இரானிய மக்கள் பதிலடி கொடுப்பார்கள்." ஐரோப்பிய அமைதி நிறுவனத்தின் அன்னா ஜேக்கப்ஸ் கலாஃப் குறிப்பிடுவது போல, வளைகுடா நாடுகள் "புவியியலை மாற்ற முடியாது", அவை 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பரந்த நாட்டின் அண்டை நாடுகள். "மேலும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதைத் தவிர்க்க இரானின் புதிய தலைவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்." சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் செய்து வந்தது போல சீனாவின் மத்தியஸ்தத்துடன் செளதி அரேபியாவும் இரான் நாடும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநிறுத்தியபோல், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவது ஒரு வழியாக இருக்கலாம். "வளைகுடா அரசுகள் இரான் நாட்டுடன் தங்கள் சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தங்கள் சொந்த உறவுகளைக் கட்டமைப்பதே ஒரே நீடித்த தீர்வு ஆகும்," என்று ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் கருதுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy41l2kljemo
  23. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி! யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் தொடர்பான விவாதத்தின் போது, செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் குறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் ஒரு இயக்கம் எனக் குறிப்பிட்டார். கடந்த 25 ஆண்டுகளில் செய்யப்படாத பல பணிகள் தற்போதைய குறுகிய கால ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 1999ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட செம்மணிப் புதைகுழியில், 2024ஆம் ஆண்டு வரை 25 வருட காலப்பகுதியில் வெறும் 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தும், செம்மணி விவகாரத்தில் அவர்கள் ஏன் மௌனம் காத்தார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த கடந்த 17 மாதங்களில் மட்டும் 239 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது முறையற்றது என்றார். செம்மணி அமைந்துள்ள தொகுதியில் மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில், நீதித்துறை பொறிமுறையூடாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது தவிர மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நீதி நிலைநாட்டப்படும் போது அதற்கான கால அவகாசம் தேவைப்படும் என்றும், சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1469481
  24. யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டது. இந்நிலையில் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1469477
  25. முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா! ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தனது ‘Truth’ சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பயன்படுத்தும் ஏனைய நாடுகள், அதனைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை நேற்று (20) வெளியிட்டார். அமெரிக்க – இஸ்ரேலிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்படும் ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய ‘பொதுவான உரிமம்’ வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பெசென்ட் தனது ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, “சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெயை உலக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம், தற்காலிக எரிசக்தி தட்டுப்பாட்டை அமெரிக்கா சீர்செய்யும் , இது உலகளாவிய விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த உதவும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைத் தொடர்ந்து, ஈரான் மீதும் அமெரிக்கா தனது தடைகளைத் தளர்த்துவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1469471

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.