Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்! வடக்கு வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் நேற்று (15) சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது நேற்று மதியம் 2.00 மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பொலிஸார் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவித தடைகளும் விதித்திருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlop6dhc0004356ny5ebog49
  3. இதுதான் சாம்பியன் அணிக்கும் சாதாரண அணிகளுக்குள்ள வித்தியாசம், அவுஸ்ரேலியா மோசமான அணியாக இருந்தாலும் அவர்கள் இக்கட்டான நிலையிலிருந்து திரும்பி வருவார்கள். இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா பெரியளவில் திரும்புவார்கள், மறுவளமாக என்னதான் இலங்கை அணி திறமை இருந்தாலும் சரியான நேரத்தில் சொதப்புவார்கள். சிம்பாவே இலங்கை போட்டிகள் இன்றைய அவுஸ்ரேலிய இலங்கை போட்டிகள் போல சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
  4. Sorting பண்ணி unofficial rankings கொடுக்க உதவி தேவைப்படலாம்!
  5. வலிய ஓடம் இலட்சதீவு பண்டகர் (Dr.) GC Pookoya வரைந்த வலிய ஓடத்தின் ஓவியம்:
  6. Today
  7. இலட்சதீவுலிருந்து வாணிபத்திற்காக இலங்கை வந்த தோணி 1940/10/07
  8. “புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்! ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து ‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்றையதினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம். இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் குறித்த சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உடனிருந்தார். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளும் கையொப்பமிடும் வகையில் இணைய வழி மூலமான கையொப்பமிடும் வசதியும் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465053
  9. 89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து “மனிதாபிமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற” தீர்வைக் கோரி முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், இந்த பிரச்சினை “ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் விவரித்தார். அத்துடன், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள், மேலும் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், 1983 ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்த தமிழக அரசாங்கங்கள், மத்திய அரசின் ஒப்புதலுடன், இலங்கையில் இன மோதலில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன. இருப்பினும், பலர் குடியுரிமை அல்லது நீண்டகால விசா அந்தஸ்தைப் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், மாநில ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டு, குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தடைசெய்யும் முந்தைய நிர்வாக வழிமுறைகளை இரத்து செய்யுமாறும், பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யுமாறும், விரைவான செயலாக்கத்திற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குமாறும், 2025 ஜனவரி 9 ஆம் திகதி வரை தங்கியிருந்த பதிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரை “சட்டவிரோத குடியேறிகளாக” கருதக்கூடாது என்பதை முறையாக தெளிவுபடுத்துமாறும் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தினார். இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக “கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும், ஆழமான கலாச்சார உறவுடனும்” வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனிதாபிமான அடிப்படையில் சாதகமான முடிவை எடுக்குமாறும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம், 2025 மீதான விவாதங்களின் போது, அகதிகள் பிரச்சினையை திமுக ஒருபோதும் தன்னிடம் எடுத்துச் செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியபோது, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்தக் கூற்றை திமுக எம்பி கனிமொழி கருணாநிதி மறுத்தார், அவர் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதங்களின் விவரங்களை மேற்கோள் காட்டினார். இந் நிலையில் அரசியல் ரீதியாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரக் கருப்பொருள்களாக ஆளும் திமுக தமிழ் மொழி, அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி வரும் நேரத்தில் தமிழக முதலமைச்சரின் இந்தக் கடிதம் வந்துள்ளது. இந்தக் கடிதம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் சட்ட தெளிவுக்காக அழுத்தம் கொடுப்பதன் மூலம், திமுக தமிழ் ஆதரவு வாக்காளர்களையும் இலங்கை அகதிகளின் அனுதாபிகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறது. நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 இலங்கை அகதிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார், மீதமுள்ள பத்து பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர், இது அவர்களின் நிலையை முறைப்படுத்துவதில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2026/1465008
  10. பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; ஒபாமா பதிலடி. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிரப்பட்ட அந்த காணொயில், 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதன் இறுதியில், ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவின் முகங்களை குரங்குகளின் உடலுடன் இணைத்து மிகவும் இழிவாகச் சித்தரிக்கும் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது. பின்னணியில் ‘The Lion Sleeps Tonight” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த காணொளிக்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.குடியரசுக் கட்சியின் ஒரே கறுப்பின செனட்டரான டிம் ஸ்காட் ‘இந்த வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது’ என சாடினார். முதலில் இதனை சாதாரண ‘மீம்’ ஒன்று என நியாயப்படுத்திய வெள்ளை மாளிகை, பின்னர் எழுந்த எதிர்ப்பால் அந்தப் பதிவை நீக்கியது. இது ஒரு ஊழியரால் தவறுதலாகப் பகிரப்பட்டது என்று விளக்கம் அளித்தது. பிரையன் டெய்லர் கோஹன் என்பவரின் பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பராக் ஒபாமா, ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்:’பொது வாழ்வில் இருக்க வேண்டிய வெட்கம் மற்றும் கண்ணியம் தற்போது தொலைந்து போய்விட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒருவிதமான ‘கோமாளிக்கூத்து’ நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க மக்கள் இன்னும் நேர்மை மற்றும் இரக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.’இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் அந்த வீடியோவின் ஆரம்பப் பகுதியை மட்டுமே பார்த்தேன். இறுதியில் இருந்த அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை, ‘ என ட்ரம்ப் பதிலளித்தார்.இந்த விவாதங்களுக்கு மத்தியில், சிக்காகோவில் அமைக்கப்பட்டு வரும் தனது ஜனாதிபதி நூலகம் தொடர்பில் ஒபாமா உற்சாகமாக உரையாற்றினார். இது வரும் ஜூன் 2026-இல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465046
  11. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மாறாமல் , காலத்துக்கு காலம் எவ்வாறு வேறு வடிவங்கள் எடுக்குமோ , அது போலவே இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வும் சாகாவரம் பெற்ற எப்போதுமே இருக்கக்கூடிய ஒரு விடயம் . தீபாவளி , தைப்பொங்கல், எல்லாம் பட் ஈழம் , பம்மூண்டு , பம்மூண்டு பிளஸ் , பிளஸ் பிளஸ், ஏக்க , ஐக்கிய, சமஸ்டி , கூடு , கூட்டு , தனி , சுயம் , ஐம்பத்து ஐமபத்து , என்று காலத்துக்கு காலம் வடிவங்களும் அவதாரமும் எடுக்கும். இப்ப இருக்கிற ஆட்களுக்கும் செய்யிரத்துக்கு சொல்லி வேண்ண்டாமோ ?? :) 😄🤣
  12. எல்லாப் பாதையும் எப்போதும் ரோம் நகரை நோக்கியே டிசைன் செய்யப்பட்டுள்ளது.
  13. 10வது மற்றும் 12வது மாணவர்களுக்கான நினைவு திறன் வளர்க்கும் வல்லாரை துவையல் ..
  14. ஆஹா இருட்டு நேரம்.. படம்: இளையராஜாவின் ரசிகை (1980 ) இசை: இளையராஜா பாடியோர்: ஜெயசந்திரன் & ஜானகி
  15. ஆண் கவியை வெல்ல வந்த படம்: வானம்பாடி (1963) இசை: K.V மகாதேவன் வரிகள்: கண்ணதாசன் பாடியோர்: TMS & P சுசீலா
  16. அப்பிடி ஒன்றுதான் நடக்கும் என்று நினைக்கிறேன். அவுஸ்ரேலியா, சிம்பாப்வே, இலங்கை ஒரே புள்ளிகள் பெறலாம். இலங்கையின் ஓட்ட விகிதம் மிகவும் கூட. தோற்பதை மிகவும் மோசமாகத் தோக்காட்டி சரி.
  17. ஏக்கிய ராஜ்ய சட்ட வரைபை ஏற்படுத்துவதில் முன்னிலை வகித்து, வக்காலத்து வாங்கியவர் தமிழரசுக்கட்சியின் உத்தியோகப்பற்றற்ற பதில் பொதுச்செயலாளர். அது நடைமுறைப்படுத்தாவிடில் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என சவால் விட்டவர், அதை அனுரா நடைமுறைப்படுத்துவார், தனக்கு அழைப்பெடுப்பார் எனக்காத்திருந்தவர், இன்றுவரை தனக்கும் அழைப்பு வருமென்றே எல்லோரையும் பதவி நீக்கி கட்சியை அபகரித்து காத்திருக்கிறார். பதில் தலைவர் இப்படிச்சொல்கிறார். இந்தக்கட்சியில் ஆளுக்கொரு கொள்கை, நடைமுறை, பேச்சு, முடிவு. இதில பாரம்பரியக்கட்சி என்று கூவல் வேறு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.