stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! Published By: Digital Desk 3 25 Dec, 2025 | 01:45 PM கடவத்தையில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வு (Float Operated Valves) தொகையை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது. லேபிள் விதிமுறைகளை மீறி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கத்தை குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்த பின்னர், அந்த வால்வுகளை அழிக்க நீதிமன்றம் 15ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் ரூ. 500,000 மதிப்புள்ள வால்வுகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் லேபிளிங் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்த பின்னர், மஹர நீதவான் நீதிமன்றம் அவற்றை அழிக்க உத்தரவிட்டது. அதன்படி, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கம் குறிப்பிடாமல் மிதக்கும் பந்து வால்வுகளை விற்பனை செய்தமைக்காக கடவத்தை எல்தெனிய பகுதியில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடப்படாத வால்வுகளை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹார்ட்வேர் நிறுவனம் ஒன்றுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) உத்தியோகபூர்வ இலச்சினையை அனுமதியின்றி பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு நிறுவனம் ஒரு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டது. நிறுவனம் மீதான வழக்கு மீண்டும் 2026 ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் விரைவில் பழுதடைவதால் நீர் கசிவு (Water Leaks) ஏற்பட்டு உங்கள் நீர் கட்டணம் அதிகரிக்கலாம். எனவே சந்தையில் உரிய லேபிள்கள் அல்லது விபரங்கள் இல்லாத தரம் குறைந்த வால்வுகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அதிக செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிப்போவது முழு நாட்டுக்கும் ஏற்படும் ஒரு தேசிய குற்றமாகும். தரம் குறைந்த பொருட்களுக்கு ஏமாற வேண்டாம், எப்போதும் தரம் குறித்து விழிப்புடன் இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234393
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
அது நடக்க வாய்ப்பு இல்லை தானே அண்ணை! அப்ப நீங்க கேள்விக் கொத்தை தயாரிக்க தொடங்கலாம்!!
- Today
-
“எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை!
🍖 “எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை! 📉🚫 written by admin December 25, 2025 நத்தார் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மாநகர சபையின் நடவடிக்கையால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி: மாடுகள் மீட்பு: யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான கொல்களத்தில் (Slaughterhouse) அனுமதியற்ற முறையில் இறைச்சியாக்கப்படவிருந்த 2 கன்றுகள் உட்பட 15 மாடுகளை நேற்றிரவு மாநகர சபையினர் மீட்டனர். விற்பனை பாதிப்பு: இதனால் இன்று நத்தார் தினத்தன்று யாழ். நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் இறைச்சி விற்பனைக்கு இல்லாமல் போனது. விலை ஏற்றம்: தட்டுப்பாடு காரணமாக ஒரு சில இடங்களில் வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இறைச்சி அதிக விலைக்கு விற்கப்பட்டதுடன், பொதுமக்கள் இறைச்சி வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். வியாபாரிகளின் குமுறல்: “பண்டிகை காலத்தில் அதிக வியாபாரம் நடக்கும் என நம்பி அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்கினோம். மாநகர சபையின் இந்த திடீர் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என வியாபாரிகள் மாநகர சபையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். எனினும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரே மாடுகளை விடுவிக்க முடியும் என்பதில் மாநகர சபை அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். https://globaltamilnews.net/2025/224943/
-
வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது!
🛳️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! 🇰🇵☢️ written by admin December 25, 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். 📝 முக்கிய அம்சங்கள்: வரலாற்று சாதனை: இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டிருந்தன. தற்போது வடகொரியாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தொழில்நுட்பம்: இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்கனவே அணு உலை (Nuclear Reactor) பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது கடலில் இறக்கப்படுவதற்குத் தயாராக உள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவ பலம்: இது ‘இரண்டாவது தாக்குதல்’ (Second-strike capability) நடத்தும் திறனை வடகொரியாவுக்கு வழங்கும். அதாவது, நிலப்பரப்பில் உள்ள அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டாலும், கடலுக்கடியில் இருந்து எதிரிகளைத் தாக்க இது உதவும். ரஷ்யாவின் உதவி: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியதற்காக, பதிலாக ரஷ்யா இந்த அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு வழங்கியிருக்கலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ⚠️ பாதுகாப்பு எச்சரிக்கை: இதேவேளை, தென்கொரியாவும் அமெரிக்காவின் உதவியுடன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. https://globaltamilnews.net/2025/224952/
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰 written by admin December 25, 2025 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமிப் பேரலை மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை (டிசம்பர் 26) நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 🕒 முக்கிய நேரங்கள் மற்றும் நிகழ்வுகள்: மௌன அஞ்சலி: நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் நாடு தழுவிய ரீதியில் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய நிகழ்வு: 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு, காலியில் உள்ள பெரலிய (Peraliya) சுனாமி நினைவுச் சின்னத்தில் நாளை காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும். மத வழிபாடுகள்: அண்மையில் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களுக்காகவும் மாவட்ட ரீதியாக சர்வமத பிரார்த்தனைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன. 📜 வரலாற்றுப் பின்னணி: கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே நாளில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் தேசிய பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/224946/
-
🇯🇵 ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது! 🚔
🇯🇵 ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது! 🚔 written by admin December 25, 2025 ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் விபரம்: சம்பவம்: குறித்த இலங்கையர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தனது கழுத்தை அறுக்க முற்பட்ட நிலையில், அங்கிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறை நடவடிக்கை: சுமார் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கைது: கைகள் மற்றும் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் “துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டத்தை” (Sword and Firearms Control Law) மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஜப்பானிய காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Global Tamil News🇯🇵 ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர்...ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால்…
-
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
யாவாரிகளுக்கு லாபம் தான் முக்கியம். இதில் நீ என்ன ஞான் என்ன ஞானப் பெண்ணே! அவனும் யாவாரிதான் இவனுகளும் யாவாரிகள்தான்!😎
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன்
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
இப்படியானவர்களின் செயல்பாடுகளினால் வைத்தியர்களிடம் போகவே அருவருப்பாக உள்ளது,கடந்த பத்து. பதினைத்து ஆண்டுகளுக்கு முன்னரும் இவர் மேல் இப்படி ஒரு குற்றச் சாட்டு ஏற்பட்டிருந்தது மக்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.
-
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
அது. தோல்வியில். தான். முடியும். காரணம். தமிழ்ஈழத்தை. யார். ஆள்வது ? இப்ப. பிரபாகரன். இல்லை கண்டியாளே. இன்றைய. தமிழ் தலைவர்களை வயிட. அனுர. திறம் சிங்களம. என்பதை. குப்பையில் போடுங்கள். அனுர தமிழன். சிங்களவனும். கூட. இது எல்லாம் தேவை அற்றது. ஆட்சி. தான். தேவை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஏராளன் தம்பி.🙏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எல்லாம் நல்லதான் போய்கிட்டு இருந்திருக்கும், ஆன அவசரதில்ல Parking கியரை மாற்றி பிடிச்சு இழுந்திட்டா போல இருக்கு☹️
-
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
யேர்மனியில் ஓய்வூதிய வயதெல்லையை 70ஆக்கினால் என்ன என்று அரச சிந்தனைக்குழாம் சிந்திப்பதாகத் தொழிலாளர்களிடையே உரையாடல் வந்துபோகிறது. இதிலே எப்படியாம் 60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது? பிறந்த ஆண்டின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள்: 1957: 65 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள். 1959: 66 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள். 1964: 67 ஆண்டுகள் (2031 இல் முழுமையடைகிறது) இந்தத் தரவுப்படி "70மேல் இளமையாக.. " என்றுதான் தலைப்பைப் போட வேண்டும் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
- தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
திமுகவின் கூட்டணிக்கட்சிகளின் அறிக்கை இதுவென்பதால் அவர்கள்சீமானைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.திராவிடத்தைக்கைவிட்டு தமிழ்த்தேசியத்துக்குள் ஐக்கியமாகி விட்டார்களா?எல்லாம் தேர்தல் நேர சித்து விளையாட்டுக்கள்.திமுக நேரடியாக இறங்காமல் அல்லக்கைகறை வைத்து அரசியல் செய்கிறது.- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
சுப்பர் சுற்றுக்கு seedings இல் முதல் இரண்டு நிலைகளிலும் இல்லாத அடுத்த இரு அணிகள் தெரிவானால் (சாத்தியம் பூச்சியம்) எப்படி அவைகளின் நிலை தெரிவாகும்?🫣 கேள்விக்கொத்து சிக்கலாக இருக்கும்.. அதற்கு வரும் பதில்கள் இடியப்பச் சிக்கலாக இருக்கும்😬- கருத்து படங்கள்
- கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
தமிழ் டொக்டர்மார் தான் நல்லவர்கள் கெட்டிகாரர்கள் என்று வெளிநாட்டு தமிழர்கள் நம்புகின்றவர்கள்- கற்க கசறும்
வீட்டிலும் ஒரு மிருதங்கம் உறைக்குள் தூசு படியாமல் இருக்கின்றது. இத்தனைக்கும் நல்ல திறமை இருந்தும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லை! ஆர்வம் இல்லாதவற்றை திணிப்பது என் வழக்கம் இல்லை. இளைப்பாறும் காலத்தில் நொட்டிப் பழகலாம் என்று வைத்திருக்கின்றேன்😃- கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்!
மோடி சொன்னதாக இயேசுவின் போதனைகள் நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்று செய்தி வந்ததே- “60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்! 25 Dec 2025, 6:57 AM “வயசாகிடுச்சு, இனிமே என்ன இருக்கு?” என்று மூலையில் முடங்கிவிடுபவரா நீங்கள்? 60 வயது என்பது வாழ்வின் முடிவுரை அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். பணி ஓய்வுக்குப் பிந்தைய இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸை’ (Second Innings) ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கெடாமல், தினசரி வாழ்க்கையில் இந்த 5 எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், நோயின்றி நூறாண்டு வாழலாம்! 1. அசைவே ஆரோக்கியம் (Keep Moving): முதுமையில் வரும் மூட்டு வலிக்கு முக்கியக் காரணம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், எலும்புகளின் உறுதிக்கும் உதவும். “நடக்கும்போது மூச்சு வாங்குது” என்றால், வீட்டிற்குள்ளேயே அல்லது மொட்டை மாடியிலேயே சிறுகச் சிறுக நடங்கள். 2. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்: வயது ஏற ஏற, மூளையில் தாகத்தை உணர்த்தும் திறன் குறையத் தொடங்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration), சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அல்லது மோர், பழச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 3. உணவில் மாற்றம் அவசியம்: இளம் வயதில் சாப்பிட்டது போல எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை இப்போது செரிப்பது கடினம். எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கும். 4. தனிமையைத் தவிருங்கள் (Socialize): உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் மிக முக்கியம். தனிமை என்பது முதுமையின் மிகப்பெரிய எதிரி. உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுங்கள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்துக்கொண்டாலே பாதி நோய்கள் குணமாகிவிடும். 5. மூளைக்கு வேலை கொடுங்கள்: உடலைப்போலவே மூளைக்கும் பயிற்சி தேவை. சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் அல்லது புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஞாபக மறதி (Dementia) போன்ற பிரச்சனைகள் வருவதைத் தாமதப்படுத்தும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல! முதுமை என்பது ஒரு நோய் அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். மருந்துகளை விட, மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த 5 பழக்கங்களையும் இன்றே தொடங்குங்கள், முதுமையை வெல்லுங்கள்! https://minnambalam.com/5-simple-health-habits-for-people-over-60-senior-citizen-care-tips-healthy-aging/- கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்! 25 Dec 2025, 10:55 AM நாட்டின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். வட இந்தியாவில் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் இத்தகைய வன்முறை சம்பவங்களில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/hindutva-mob-attacks-on-christmas-celebrations/- ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது
ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சர்வதேச சமூகம் ஜெனிவாவில் இலங்கை அரசின் கருத்துருவாக்கத்தினை நிராகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது . இங்கு இனப் பிரச்சினை இருப்பதாகவும் இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுமே அதன் சாராம்சம். இலங்கை அரசாங்கம் இங்கு பயங்கரவாத பிரச்சினையே உள்ளதென சொன்ன போது சர்வதேச சமூகம் இல்லை, விடுதலைப் புலிகளின் போராட்டம் 70களில் தான் ஆரம்பித்தது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை என்பது 48 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தது என்பதை தெரிவித்தது. தமிழ் மக்கள் இலங்கையில் உருவாக்கப்பட்ட எந்த அரசியலமைப்பையும் ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகள், உரிமைகள் அரசியலமைப்பில் நிராகரிக்கப்படுகின்றன என்று சொன்னால் இங்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்பதே அர்த்தம். எந்த ஒரு நாட்டிலும் ஒரு இனம் அந்த நாட்டின் அரசியலமைப்பை நிராகரித்தால் அங்கு இனப் பிரச்சினை உள்ளது என்பதே அர்த்தம். பிரித்தானியாவில் ஐரிஸ் மக்கள் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு இனப் பிரச்சினை இருந்தது. அந்த அரசியலமைப்பை அங்கு திருத்தம் செய்து இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அரசியல் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தான்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தெளிவாக பதிவு செய்யப்படுகிறது.தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய வல்லமையை சர்வதேசம் வழங்குகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் வெளிநாடுகள், சர்வதேசம் பெரிய அளவில் இங்கு முதலீடு செய்ய விரும்பாது. இனப்பிரச்சினை திரும்பவும் வந்து வெடிக்கும். ஸ்திரத்தன்மை இன்றி குழம்பும் என்ற நிலை உள்ளது.முதலீடு செய்வதாக இருந்தால் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலைமை வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கூட புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட பேச்சுக்காகவாவது புதிய அரசியலமைப்பை கொண்டு வரப் போவதாக சொல்ல வேண்டியுள்ளது. இவ்வாறான பின்ணணியில் இந்தியாவினுடைய பங்கு மிக மிக முக்கியம். அயல்நாடு. அயல் வல்லரசு. அந்த நாட்டினுடைய கருத்துக்களை மீறி மற்ற நாடுகள் இலகுவில் ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள்.எதிரி நாடுகள் இந்தியாவை மீறி செயற்படலாம். ஒத்துப் போகக் கூடிய மேற்கு நாடுகள் இந்தியாவுடன் ஒத்துப் போகவே விரும்புவார்கள். இந்தியாவை தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டுக்குள் உறுதியாகக் கொண்டு வருவது முக்கியம்.இந்திய -இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதே தமிழ் மக்களுக்காகத் தான். அதற்கு இந்தியாவுக்கும் கடமை இருக்கிறது.அவ்வாறான நிலையில் இந்தியாவிடம் எதைக் கேட்பது என்பது முக்கியம்? இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு மட்டுமே தமிழின பிரச்சினைக்குத் தீர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திய போது ஏனைய கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பன மாகாண சபை தேர்தலை நடத்துவதும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவது மட்டுமே தேவை என வலியுறுத்தின. விசேடமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், 13ஆம் திருத்தம் இந்தியாவின் பிள்ளை. அதனை இந்தியா கைவிட விரும்பாது. 13ஆம் திருத்தத்தை நீக்குவதை விரும்பவில்லை. இலங்கை அரசு 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் நீக்க விரும்புகிறது. இந்தியா கொண்டு வந்த திருத்தம் என்றபடியால் 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் வைத்திருப்பது தான் அவசியம் என்ற அடிப்படையில் தான் பேசினார். 13ஆம் திருத்தத்திற்குள் இருக்கக்கூடிய அம்சங்கள் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அதில் உள்ள அதிகாரங்கள் உண்மையில் அனுபவிப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறைக்குள் 13 ஆம் திருத்தம் முடக்கப்பட்டிருக்கிற வரைக்கும் தமிழ் மக்களுக்கு அதனை அனுபவிக்க முடியாது. இதனை உயர்நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது.. இதற்கு பின்னரும் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருவது, அதில் ஏதோ இருக்கிறது. அதனால் அரசாங்கம் மறுத்து வருகின்றது என்ற பொய்யை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே இது நடக்கின்றது என்பதை தெளிவாக கூறுகின்றோம். 13 ஆம் திருத்தம்தான் தீர்வு என இவர்கள் தேர்தல் காலத்தில் சொல்லி இருந்தால் மக்கள் தக்க பதிலை வழங்கியிருப்பார்கள். தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சொல்கின்ற சமஷ்டி ஆட்சியை விட தீவிர தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு 16 வருடங்களாக வாக்குகளைப் பெறுகின்றார்கள். மிக முக்கியமான சந்திப்பில் சமஷ்டியை வலியுறுத்தாமல் மாகாண சபை தான் வேண்டும் எனச் சொல்வது, தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைக்கு நேர் மாறானது. அதனை நிராகரித்து துரோகம் செய்கின்ற வகையில் தான் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம். இதை 2009 ஆம் ஆண்டு நாம் மக்களுக்கு சொன்னோம். அன்று நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த போது, போர் முடிந்து அடுத்தடுத்த நாட்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனைய தலைவர்களான தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக் கொள்வதற்கு முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அன்றைக்கு சொன்னோம். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய வெளிவார அமைச்சரின் சந்திப்புக்கு பிறகு தங்கள் வாயால் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம். தேசிய மக்கள் சக்தி 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள் என்று சொன்னது.. அவர்கள் வந்து அதைச் சொன்னாலும் தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு வாக்கை பெற்றவர்களே ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு இணங்குவது தேசிய மக்கள் சக்தி சொன்னது சரியானது என்பதை உலகமே ஏற்றுக் கொள்ளும். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை. இதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் அரசியல் தலைவர்களை சந்தித்ததன் முன்னேற்றத்தை கூட இந்த செயற்பாடுகள் இல்லாமல் செய்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் பார்த்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு உறுப்பினர் தான் உள்ளது. தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளார்கள்.அந்த ஒன்பது உறுப்பினர்களும் மக்கள் தந்த ஆணைக்கேற்ப செயற்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தேர்தல் காலத்துக்கு மட்டுமே சொல்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த நிலைப்பாட்டுக்கு நேர் மாறாக செயல்படுகிறார்கள். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பில் சமஷ்டி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. எந்த ஒரு இடத்திலும் அதனை செய்யவில்லை.தமிழகத்தில் தமிழகத் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை தடுப்பதற்கு இவர்கள் செயல்படுகிறார்கள். இந்த போக்கு தொடரும் வரைக்கும் தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது. ஒற்றையாட்சி முறைதான் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு முறைக்கு அடிப்படை. மாகாண சபை தேர்தல் நடக்காமலே மாகாண சபைகள் எல்லாம் இயங்குகின்றன என்று சொன்னால் மாகாண முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும் ஏமாற்றமே. மாகாண ஆளுநருக்கு தான் சகல அதிகாரமும் உள்ளது. சட்டரீதியாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்களின் பொறுப்பு. அவர்கள் இல்லாமலே ஆளுநர் செயல்பட முடியும். அதுதான் தற்போது நடக்கிறது. தயவுசெய்து மக்கள் ஏமாற்றத்திற்கு விலை போகக்கூடாது. மக்கள் விலை போக, விலை போக கிடைக்கும் சந்தர்ப்பங்களை இழந்து கொண்டு போகிறோம். இதனால் தமிழ் மக்கள் அழிகிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் செல்வராஜா கஜேந்திரனையும் அழிப்பது மட்டுமல்ல நீங்களும் அழிகின்றீர்கள். அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=353672 - தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.