stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 145 பகுதி: 145 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" பண்டைய இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார சூழல் இந்த மரபுகளுக்கு இடையில் கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள ஏதுவாக இருந்துள்ளது. பௌத்தத்தில் காணப்படும் தியானம், துறவு மற்றும் நெறிமுறைக் கொள்கைகள் [Concepts such as meditation, renunciation, and ethical principles] போன்ற கருத்துக்கள் இந்து மதத்தின் ஆன்மீக மரபுகளுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. கௌதம புத்தருக்கும் இந்து மதத்திற்கும் இடையிலான உறவு சிக்கலானது மற்றும் ஒரு குறுகிய விவாதத்தில் முழுமையாக அதை தர முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவது அவசியம். பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டும் காலப்போக்கில் பரிணமித்துள்ளதுடன் அவற்றின் சமகால வடிவங்கள் அவற்றின் பண்டைய தோற்றத்திலிருந்து இன்று வேறுபட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம புத்தர், தன்னை ஒரு கடவுளாக வழிபடவேண்டாம் என்று கூறினார். அவர் சொல்லியது — மனிதர்கள் தங்களால் உண்மையைத் தேடவேண்டும், தானே சிந்திக்க வேண்டும், அறம், ஞானம், தியானம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும். ஆனால், புத்தரின் மறைவுக்குப் பிறகு, சில புத்த துறவிகள், அவரது போதனைகளை ஒரு மதமாக மாற்றினர். இதனால் இன்று புத்தர் ஒரு தெய்வமாக காட்சியளிக்கப் பெற்றார். மடாதிபதிகள் அல்லது புத்த தேரர்கள் போன்றோர் அவரது தூதுவர்கள் (messengers) என இன்று எண்ணப்பட்டு அவர்களையும் வழிபட வேண்டும் என்று நம்பிக்கை உருவானது. இது புத்தர் சொன்னதுக்கே முற்றிலும் எதிராகும். உதாரணமாக புத்தர் சொன்னது: “தாங்களே ஒளியாக இருங்கள்” — மற்றவர்களைச் சாராமல், தாங்களே உண்மை அறிய வேண்டும் ஆகும் [“Be a light unto yourself” – meaning, find your own truth.]. ஆனால் இன்று, பல இடங்களில் புத்தருக்கு பூஜை, படிம வழிபாடு, புத்த தேரர்களுக்கு கீழ்ப்படிதல் போன்றவை நடக்கின்றன. இவை இன்று சர்வசாதாரணமாக அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை நாம் இலங்கையில் காண்கிறோம். சுருக்கமாகச் சொல்லுவது என்றால், புத்தர் மக்கள் தாங்களே சிந்திக்க வேண்டும் என்றார் [to be free thinkers]. ஆனால் சிலர், அவரை தெய்வமாக மாற்றி, புத்த தேரர்களை பரமராய் மாற்றிவிட்டனர் — இது அவரின் உண்மைப் போதனைகளுக்குப் முற்றிலும் புறம்பானது. அபத்தமானது ஆகும் [But many later turned him into a god, and monks into mediators, which goes against his true message.]. உதாரணமாக, ஒரு மரியாதையின் பொருட்டு பல தலைமுறைகளாகவும், வெவ்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்தாலும், மரபுகளின் நம்பிக்கையில் எதையும் நம்ப வேண்டாம். பலர் அதைப் பற்றி பேசுகிறார்கள், என்பதால் அந்த விடயத்தை நம்ப வேண்டாம். கடந்த கால முனிவர்களின் அல்லது ஆசாரியர்களின் மேல் உள்ள விசுவாசத்தால் எதையும் நம்ப வேண்டாம். கடவுள் உத்வேகம் தந்தார் என்று உன்னை இணங்கவைத்து, நீ உன் கற்பனையின் பிரகாரம், எதையும் நம்ப வேண்டாம். உங்கள் எஜமானர்கள் மற்றும் ஆசாரியர்களின் அதிகாரத்தில் மட்டும் எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் பாட்டில் ஆராய்ந்து அல்லது சோதித்து, நியாயமானதாகக் நீங்கள் கண்டறிந்தவற்றை மட்டும் நம்புங்கள், அதற்குத் தக்க உங்கள் நடத்தையை இணங்க வையுங்கள் என்கிறார் கௌதம புத்தர். இவ்வாறு இலங்கையில் நடக்குமாயின், தமிழ் பேசும் எந்த மக்களுக்கும் எந்த அவலநிலையும் ஏற்பட்டு இருக்காது ! இலங்கையில் பௌத்தம் முதலில் சிங்கள இன மதமாக இருக்கவில்லை என்று பல அறிஞர்களும் சிந்தனையாளர்களும் வாதிடுகின்றனர். புத்தரின் முக்கிய போதனைகள் உள் அமைதி, இரக்கம் மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பற்றியவை மட்டுமே ஆகும். - அவை உலகளாவியவை என்பதுடன் அது எந்த இனம், சாதி அல்லது தேசத்துடன் என்றும் பிணைக்கப்படவில்லை. Part: 145 / APPENDIX – "The Buddha and His teachings" It's important to note that the relationship between Gautama Buddha and Hinduism is complex and cannot be fully encapsulated in a brief discussion. Both Buddhism and Hinduism have evolved over time, and their contemporary forms may differ from their ancient origins. Whatever Gautama Buddha preached and practiced , Buddhist monks, By converting the philosophy into a religion, also converted the Buddha, into a ‘God’, and themselves, as his ‘Messengers’, who must be revered and worshiped; totally disregarding the Buddha’s words as given below. “Believe nothing, in the faith of traditions, even though, they have been held in honor, for many generations, and in diverse places. Do not believe, a thing, because many people speak of it. Do not believe, in the faith, of the sages of the past. Do not believe, what you yourself have imagined, persuading yourself, that a God inspires you. Believe nothing, on the sole authority, of your masters and priests. After examination, believe what you yourself, have tested and found, to be reasonable, and conform your conduct thereto.” [The Buddha] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 146 தொடரும் / Will follow துளி/DROP: 2118 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 145 https://www.facebook.com/groups/978753388866632/posts/34545240858457787/?
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
🫣................... இப்படியான பிரபலங்களுடன் தான் ஒரு சாதாரண மனிதன் மல்லுக்கட்டி வாழ்ந்து, முன்னோக்கிப் போக வேண்டிய நிலை. பிரபலங்கள் சொல்வதால் அதை சரியென்று அப்படியே மேற்கோள் காட்டும் அறியாமையும், அவசரமும் வேறு எங்களின் சமூகத்தில் ஊறி நிற்கின்றது. பல வருடங்களின் முன்னர், கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுவது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டுகின்றது என்று சொன்னார். அன்று கேரளாவில் அவரின் கூற்றுக்கு எதிராக ஒரு போராட்டமே நடந்தது. ஜெயமோகன் கூட ஜேசுதாஸ் ஒரு பெரியவர், அவரை மன்னித்து விடலாம் என்று ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகம். இப்பொழுது ஜேசுதாஸ் டெக்சாஸில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். இப்பொழுதாவது அவர் மாறியிருப்பார் என்று நம்புவோம்.
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
மிக்க நன்றி அல்வாயன். நீங்கள் சொல்லும் விடயம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் அங்கு இருந்ததில்லை, ஆதலால் அவர்கள் எவரையும் எனக்குத் தெரியாது. கோவில் கதைகள் போன்று இவை தெரிந்தாலும், இவை மனிதர்களின் கதைகளே...............🤣.
-
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் - போட்டோ 51 - DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பை படம் பிடித்தவர்!
https://www.nature.com/articles/d41586-023-01313-5 👆 இந்தக் கட்டுரை 2023 இல் வெளிவந்தது. இதில் இருக்கும் தவல்களின் படி பார்த்தால், லோகமகாதேவியின் கட்டுரையில் இருப்பது போல எதுவும் எளிதாக, நேரடியாக நடக்கவில்லை. ஒரு படம் மட்டுமே டி.என்.ஏ அமைப்பின் கண்டு பிடிப்பை நிகழ்த்தி விடவில்லை. தனது ஆய்வுக்கு, றோசலின்ட் "B" வடிவத்தை தவிர்த்து விட்டு, "A" வடிவத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் அவர் நோபல் பரிசுக் குழுவில் உள்ளடக்கப் படாமைக்கான காரணம். இது அவரிடமிருந்து, அவரது அனுமதியின்றித் திருடப் பட்டது என்பது சென்ஷேனல் கதை எழுதுவோரின் வாதமாகவே தெரிகிறது.
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
- Today
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் இந்த தடவை பெட்டியை திமுகவிடம் வாங்கி கொண்டு அவர்களை முன்பு போல் விமர்சிப்பதில்லை என மக்கள் மத்தியில் ஒரு நிரூபிக்க முடியாத கதை அடிபடுவது தெரிந்ததே. இதற்கு வலு சேர்க்கும் படி, சீமானும் திமுகவை விமர்சிக்கிறேன் என ஆரம்பித்து பல நிமிடங்கள் திமுகவின் திட்டங்களை பாசிட்டிவாக பேசி விட்டு, கடைசி அரை நிமிடம் மட்டும் அதை விமர்சிக்கிறார். இதனால் இவர் திமுகவின் நல்லதுகளை மக்களிடம் எடுத்து சொல்லவா வந்தார் என தம்பிகள் குழம்பி போயுள்ளனராம்😂. அண்ணன் சபரீசனிடம் வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக நடக்கிறார் என்பதே என் கருத்து. அண்ணன் திமுகவை பற்றி பேசியதை எடிட் பண்ணிய தொகுப்பு👇.- சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
தனி…. அரசு…..பெயரில் உள்ள தில் செயலில் இல்லையேப்பா…கூட்டணிக்கு தவமிருக்கிறீர்களே😂- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
றியாஸ் குரானா பின்பற்ற விரும்பும் "நிபுணர்களை எதிர்த்தல், எல்லோரையும் நிபுணர்களாகக் கருதுதல்" என்ற போக்குத் தான் இன்று தீவிர வலதுசாரிகளிடமும் இருக்கிறது. அதே ஆயுதத்தை தீவிர இடது சாரிகளும் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் தான் கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள் இரு பக்கமும் சாராத moderates களாகவே இருந்து விட்டுப் போகின்றனர்.- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
எஸ்.வி. சேகர் போன்ற சங்கி மங்கிகளிடம் இருந்து இப்படியான கருத்துக்கள் வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?- 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்
அப்படியானால் இது கறுப்பு வெள்ளை ஊழல் கேஸ். இப்படி பட்டவர்களை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களாகவும், ஊழியர்களாகவும் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள்? என்ற கேள்வியைத் தான் ஒருவர் கேட்க வேண்டுமேயொழிய, ஏன் வேலை பிந்துகிறது என்று கேட்க முடியாது.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
- இரசித்த.... புகைப்படங்கள்.
திருவாரூர் தேர் அழகு . .......! 🙏- சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
அரசியல் பச்சோந்தி வைகோவின் மதிமுக விற்கு எந்த ஒரு தொகுதியும் வழங்கியிருக்க கூடாது. தனித்து நின்றால் ஐந்து வாக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்காது.- 75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!
75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை! 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது. https://athavannews.com/2026/1470218- யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். Marc Andre Franche மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார். https://athavannews.com/2026/1470236- சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்! தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், ‘சிரித்துக் கொண்டே அழுவதாக’ ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன. ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிதாக கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சு, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் துவங்கி உள்ளது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் விபரம் குறித்து, இரு தரப்பும் இடையே நேற்று பேச்சு நடத்தப்பட்டது. நேற்றைய பேச்சுக்கு பின், ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுனராஜிடம், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ”சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை,” என்றார். ம.தி.மு.க.,வை தொடர்ந்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்தது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகி, தி.மு.க., கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இணைந்தார். அவருக்கு தி.மு.க., தலைமை, ஒரு தொகுதியை உறுதி செய்ததாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள சங்ககிரி அல்லது பரமத்திவேலுார் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, ‘முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை’ என கூறப்பட்டதால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொடருவதா என்பது குறித்து, இன்று தன் முடிவை அறிவிக்க உள்ளார். https://athavannews.com/2026/1470233- டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த வேண்டத்தகாத ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ. Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கணக்குகளூடாக, பிறருடன் பாலியல் சம்பந்தமான உரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake பாலியல் படங்களும் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுபவத்தை அவர் “மெய்நிகர் பாலியல் வன்முறை” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விவகாரம் ஏன் இப்பொழுது முக்கியமானதாக மாறியிருக்கின்றது என்றால், இது ஒரு தனிநபரின் பிரச்சினையைத் தாண்டி, சமூக அளவிலான ஆபத்துகளைக் கொண்டது என்பதால். Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று யாருடைய முகத்தையும் வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கலாம். இது குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஒரு புதிய வகை டிஜிட்டல் வன்முறை எனலாம். ஒருவரின் அடையாளம், சமூகத்தில் அவருக்கான மதிப்பு, மற்றும் மனநிலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பாதிக்கும் இந்தத் தொழில்நுட்பம், சட்ட ரீதியாகவும் சவாலாக இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்ததன் பின்னர், யேர்மனியில் ஒரு சமூக எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பொழுது, நாளுக்கு ஒரு ஊர்வலம் என்று ஏதாவது ஒரு பெரும் நகரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. Fernandesஉம் இதில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார். இன்று இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட குற்றச்சாட்டு என்பதைத் தாண்டி, ஒரு சமூக விழிப்புணர்வாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. விசாரணைகள் நடைபெறுகின்றன. Fernandesஇன் முன்னால் கணவர். Christian Ulmen இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றார். Collien Fernandes விவகாரம், இன்றைய உலகில் நாங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களின் ஒன்று. ஒரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வாழ்வை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் அதைத் தவறாக பயன்படுத்தப்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்த நிகழ்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள், மற்றும் சட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது. படம்- நன்றி,விக்கிபீடியா- Collien Fernandes
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்DPD பார்சல் சேவிஸ் தான் எமக்குப் பார்சல்களைக் கொண்டுவந்து தந்தது. அதனால் பயமில்லை அண்ணா. ஏன் கருவாட்டுடன் தான் பார்ட்டி வைக்கலாமா ??? ஆனாலும் திரியாய்ப் பாரைக் கருவாட்டை முதல் வாரம் போய்ப் பார்த்துவிட்டு வந்தும் இன்னும் இரண்டு வாரம் இருக்குத்தானே என்று எண்ணி வாங்காமல் விட்டிட்டனே என்ற கவலை இருக்குத்தான்.- செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை!
பக்த அடியார்களுக்கு அரோகரா 🙏🙏🙏- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
வல்லரசாம் இந்தியாவின் வளர்ச்சி நிலை இது தான்.- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அட 6 மாதமாக காணாத அத்தாருக்கு பாரைக் கருவாடுடன் நல்ல பாட்டி நடக்கப் போகுதென்று எண்ணிவிட்டேன்.- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஜெயமோகனின் மாபெரும் விருது அறிவிப்பும் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆபத்தான இடமும் றியாஸ் குரானா 0000000000000000000000 தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயமோகன் ஆகப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் என்பதிலும், அவரது வாசிப்பு வீச்சும், எழுத்து வன்மையும் இணையற்றவை என்பதை நாம் முற்றிலும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். 'விஷ்ணுபுரம்' தொடங்கி 'வெண்முரசு' வரை அவர் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான புனைவுலகம் என்பது இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஆழமான கருத்தியலாகும். அவரது எழுத்துக்கள் இந்திய மெய்யியல், அத்வைத தரிசனம், உன்னதவாதம் அத்தோடு ஆதிக்கப் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றைத் தனது அடிப்படைத் தத்துவார்த்த அடித்தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அவரது நாவல்கள், சிறுகதைகள், பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அதுபோலவே விவாதங்களை நாம் வெறும் மேலோட்டமான அழகியலாகவோ அல்லது தனிமனித அகத்தேடலாகவோ மட்டும் சுருக்கிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தரவு சார்ந்த, பொருள்முதல்வாத மேலும் சமூகப் பொருளாதாரக் கோணங்களில் இருந்து ஒரு சமூக விமர்சகனாக இவற்றை நான் அணுகும்போது, ஜெயமோகனின் சிந்தனை முறைக்கு எதிராக மிகக் கடுமையான, ஆழமான, அத்தோடு கட்டமைப்பு ரீதியான விமர்சனங்களை நாம் ஈவிரக்கமின்றி முன்வைக்க வேண்டியுள்ளது. மனித இனம் இந்த உலகை வென்றதற்கு மிக முக்கியக் காரணம், மனிதர்களால் கற்பனையான கதைகளை உருவாக்கி, அதை உண்மை என நம்பி கோடிக்கணக்கானோருடன் இணைந்து செயல்பட முடிந்ததே காரணம் என்ற வரலாற்று யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மதம், தர்மம், சாதி, தேசம், கடவுள் என்பவை சமூகங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் மனித மூளையின் கற்பனையில் உதித்த சமூகக் கருவிகளே தவிர, அவை எக்காலத்திலும் மாறாத பிரபஞ்ச உண்மைகளாகக் கருதப்படக்கூடிய தகுதியற்றவை. இந்தக் கோணத்தில் ஜெயமோகனின் ஆகப்பெரும் படைப்பான 'வெண்முரசு' அத்தோடு அவரது தத்துவார்த்தக் கட்டுரைகளை நாம் அணுகினால் அவர் மீதான மிகக் கடுமையான அரசியல் விமர்சனம் தன்னிச்சையாகவே எழும். ஜெயமோகன் இந்தப் புனைவுகளை வெறும் வரலாற்றுச் சமூகக் கருவிகளாக, அதற்கான கால வெளி சார்ந்த எல்லைகளுக்குள் வைத்துப் பார்க்காமல், அவற்றை பிரபஞ்சத்தின் அறுதி உண்மைகளாகவும், மனிதர்கள் எக்காலத்திலும் மீற முடியாத 'தர்மமாகவும்' புனிதப்படுத்துகிறார். ஒரு எழுத்தாளராக அவர் செய்வது மாபெரும் பிற்போக்குத்தனம் என்றே நான் ஆணித்தரமாகக் கருதுகிறேன். மனிதன் கற்பனையான புனைவுகள் அத்தோடு மாயைகளில் இருந்து விடுபட்டு, அறிவியல் மற்றும் சமூக யதார்த்தங்களை நோக்கி நகர வேண்டிய இந்த நவீன காலகட்டத்தில், ஜெயமோகன் தனது அபாரமான மொழி ஆளுமையைப் பயன்படுத்தி, மீண்டும் பழைய இதிகாச மற்றும் மதப் புனைவுகளுக்குள் தமிழ் வாசகர்களைக் கட்டிப்போடும் வேலையைச் செய்கிறார். பல ஆயிரம் பக்கங்களில் அவர் திரும்பத் திரும்ப நிறுவுவது, மனிதர்களைப் பிரித்து ஆளும் பழைய காலக் கற்பனைகளைத்தான். அவரது எழுத்துக்கள், வாசகர்களின் தர்க்க சிந்தனையை மழுங்கடித்து, உணர்ச்சிகரமான கற்பனைகளுக்குள் மனிதனை அடிமையாக்கும் வேலையை மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இந்த தத்துவார்த்த மாயையிலிருந்து விடுபட்டு, சமூகத்தின் விளிம்புநிலை யதார்த்தங்களை நாம் நோக்கினால், இந்தியாவின் வறுமை, விவசாயிகளின் துயரம், அத்தோடு விளிம்புநிலை மக்களின் அன்றாடப் பாடுகள் ஆகியவை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் ஒட்டுமொத்தத் தோல்வியாகவே தரவுகளின் அடிப்படையில் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இந்த யதார்த்தவாதக் கோணத்தில் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலையோ அல்லது பிச்சைக்காரர்கள், பழங்குடியினர் குறித்து அவர் எழுதியுள்ள பல கட்டுரைகளையோ வாசிக்கும்போது, அவர் மீது மிகக் கடுமையான அறரீதியான குற்றச்சாட்டு எழுகிறது. ஜெயமோகன் வறுமையையும், மாற்றுத்திறனாளிகளின் நிலை, விளிம்புநிலை மக்களின் தீர்க்க முடியாத துயரத்தையும் ஒரு 'ஆன்மீகத் தரிசனமாக' மடைமாற்றி விடுகிறார். ஏழாம் உலகத்தில் பிச்சைக்காரர்களை வைத்து அவர் உருவாக்கும் தத்துவ விவாதங்கள் இலக்கிய ரீதியாக சுவாரஸ்யமானவையாக இருக்கலாம். ஆனால் சமூக ரீதியாக அவை மிகவும் ஆபத்தானவை. ஒரு பிச்சைக்காரனின் துயரம் என்பது பிரபஞ்சத்தின் ரகசியமோ அல்லது அவனது கர்ம வினையோ கிடையாது. அது ஆளும் வர்க்கத்தின் அரச வளங்கள் சிலரிடம் மட்டும் குவிக்கப்படுவதன் நேரடி விளைவு. ஜெயமோகன் விளிம்புநிலை மக்களின் பட்டினியை உன்னதப்படுத்துவதன் மூலம், அந்தப் பட்டினிக்குக் காரணமான அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தை எந்தவொரு விமர்சனத்திலிருந்தும் தப்ப வைக்கிறார். சுரண்டலைத் தத்துவப்படுத்துவது என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் ஆகப்பெரிய அறிவுசார் துரோகம். 'அறம்' போன்ற கதைகளில் வரும் மனிதர்களின் தியாகங்கள் கூட, சமூக அமைப்பின் கட்டமைப்பு ரீதியான அநீதிகளைக் கேள்வி கேட்காமல், வெறும் தனிமனித அறமாகச் சுருங்கிவிடுகின்றன என்பதை ஒரு சமூக விமர்சகனாக என்னால் சுட்டிக்காட்டாமல் கடந்து செல்ல இயலாது. இந்தச் சுரண்டலின் வேர் எங்குள்ளது என்று நாம் ஆழமாகப் பார்த்தால், பல நூற்றாண்டுப் பொருளாதாரத் தரவுகள் நிறுவுவது ஒன்றே ஒன்றைத்தான். செல்வம் அதுபோலவே அதிகாரம் என்பது தகுதியால் வருவது கிடையாது. அது வாரிசுரிமையாகவும், மூலதனக் குவிப்பாகவும் ஒரு சிறிய ஆதிக்க வர்க்கத்திடமே தங்கிவிடுகிறது. இந்த அமைப்புரீதியான சமத்துவமின்மையே சமூகத்தின் அனைத்து அநீதிகளுக்கும் அடிப்படைப் காரணம். ஆனால் ஜெயமோகனின் பல கட்டுரைகளில் (குறிப்பாக சாதி, குடி, அத்தோடு வர்ண அமைப்பு குறித்த விவாதங்களில்), அவர் இந்தியச் சமூகப் படிநிலைகளை முற்றிலுமாக நிராகரிக்காமல், அவற்றுக்கு ஒரு பண்பாட்டு அல்லது தொழில் ரீதியான 'சமநிலைக்' காரணம் இருந்தது என்று வாதிடுவதைக் காண முடிகிறது. "வர்ணம் வேறு, சாதி வேறு. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது" என்ற பழமையான, பலமுறை தோற்கடிக்கப்பட்ட வாதத்தை நவீன மொழியில் பலமுறை அவர் தற்காத்துப் பேசியுள்ளார். தகுதியுள்ளவர்களே தலைமை ஏற்க வேண்டும் என்ற சிந்தனை அவரது எழுத்துக்களில் அடிநாதமாக இழையோடும். ஆழமாகப் பார்த்தால், ஜெயமோகனின் சிந்தனை என்பது ஆதிக்க வர்க்கத்தின் சொத்துக் குவிப்பையும், அதிகாரப் பரம்பரையையும் நியாயப்படுத்தும் ஒரு அதிநவீனத் தத்துவச் சால்ஜாப்பு மட்டுமே. 'தகுதியானவர்கள்' என்று அவர் கருதுபவர்கள், தலைமுறைகளாகக் கல்வியையும் நிலத்தையும் தங்களுக்குள் குவித்து வைத்துக்கொண்ட வர்க்கமே தவிர, அவர்கள் பிறப்பால் எவ்வகையிலும் மேன்மையானவர்களும்கூடக் கிடையாது. ஜெயமோகனின் 'பண்பாட்டுத் தொடர்ச்சி' என்ற வாதம், உண்மையில் மூலதன ஆதிக்கத் தொடர்ச்சிக்கான ஒரு பண்பாட்டு முகமூடி மட்டுமே. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, அவர் தொடர்ந்து நவீன அறிவியலையும் உலகளாவிய முன்னேற்றங்களையும் நிராகரிப்பதைக் காண முடியும். உலகம் கடந்த காலத்தை விட இப்போதுதான் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆயுள் காலம், சுகாதாரத் தரவுகள், வன்முறைக் குறைவு ஆகியவற்றின் மூலம் நம்மால் ஆணித்தரமாக நிறுவ முடியும். ஆனால் ஜெயமோகனின் பல எழுத்துக்கள் நவீன உலகை ஒரு சாபக்கேடாகவும், அறிவியல் பகுத்தறிவை ஆன்மாவைத் தொலைத்த இயந்திரத்தனமாகவும் சித்திரிக்கின்றன. அவர் தொடர்ந்து ஒரு 'இழந்த பொற்காலத்தை' நோக்கி வாசகர்களை ஈர்க்கிறார். பழங்காலக் கிராமிய வாழ்க்கை, பண்டைய ஞானிகளின் வாழ்வு முறை ஆகியவை மட்டுமே உன்னதமானவை என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறார். ஆனால் அவர் உன்னதப்படுத்துகிற அந்தப் பழங்காலம் என்பது சிசு மரணங்கள் மலிந்த, தொற்றுநோய்களால் மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிந்த, தீண்டாமை மேலும் அடிமைத்தனம் கொடிகட்டிப் பறந்த ஒரு கொடூரமான இருண்ட காலம் என்பதே தரவுகள் சுட்டிக்காட்டும் உண்மை. நவீன அறிவியலும், ஜனநாயக அமைப்புகளும் மட்டுமே மனிதனின் வாழ்நாளை நீட்டித்து, அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளன. (ஒப்பீட்டளவில்) ஜெயமோகனின் நவீனத்துவ மற்றும் அறிவியல் மீதான இந்த அவநம்பிக்கை என்பது, எதார்த்தத் தரவுகளைப் புறக்கணிக்கும் வெற்று உணர்ச்சிவாதமே ஆகும். அவர் தரவுகளின் வெளிச்சத்தைக் காட்டிலும், தொன்மங்களின் இருட்டையே அதிகம் விரும்புகிறார். இந்த இருட்டு, ஆதிக்க சக்திகள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படிப் பயன்படுகிறது என்பதை நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டும். அரசும் பெருநிறுவனங்களும் மக்களின் வளங்களைக் கொள்ளையடிக்கும்போது, மக்கள் அதனை எதிர்த்துப் போராடாமல், ஏதோ ஒரு தத்துவ விசாரணையில் மூழ்கியிருக்கவே அதிகாரம் எப்போதும் விரும்பும். ஜெயமோகன் தன்னை எந்தவொரு நேரடி அரசியல் கட்சிக்கும் சார்பற்றவர் என்று தொடர்ந்து கூறிக்கொண்டாலும், அவர் உருவாக்கும் 'இந்துப் பெருமிதம்', 'பாரதீயப் பண்பாட்டு மீட்சி', அத்தோடு 'ஆழ்ந்த ஆன்மீகத் தேடல்' ஆகிய கருத்தியல்கள், சமகால வலதுசாரி மற்றும் பெருமுதலாளித்துவ அரசியல் அதிகாரத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. மக்கள் தங்கள் நில உரிமைகள், வேலைவாய்ப்பு, அத்தோடு பொருளாதாரச் சுரண்டல்கள் குறித்துக் கோபம் கொள்ள வேண்டிய காலகட்டத்தில், அவர் அவர்களை அத்வைதத்தின் நுட்பங்கள், இதிகாசங்களின் தத்துவங்கள், பண்பாட்டுப் பெருமைகளை நோக்கித் திசை திருப்புகிறார். என் வாசிப்பில், ஜெயமோகனின் எழுத்துக்கள் ஆதிக்க வர்க்கம் மக்களுக்குப் புகட்டும் ஒரு பண்பாட்டு மயக்க மருந்தாகவே செயல்படுகின்றன. அந்த வேலையை அவரது எழுத்துக்கள் மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாகவே, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ் சார்புடையவரா என்ற தொடர் விமர்சனத்தையும் நாம் கருத்தியல் ரீதியாக அணுக வேண்டும். அவர் நேரடியாக வலதுசாரி அமைப்புகளிலோ கட்சியிலோ உறுப்பினராக இருந்ததில்லை. (விஷ்ணுபுரம் நாவல் ஆர்.எஸ்.எஸ் காரியாலயங்களில் விற்கப்பட்டன) தன்னை ஒரு காந்தியவாதி என்றும், அத்வைதி என்றுமே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்துத்துவ அரசியலை அவர் பல இடங்களில் கடுமையாக விமர்சித்தும் உள்ளார். அவர்கள் மதத்தை வெறும் அரசியல் திரட்டலுக்கான கருவியாகச் சுருக்குகிறார்கள் என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார். ஆனால், அவர் அரசியல் ரீதியாக அவர்களை விமர்சித்தாலும், தத்துவார்த்த ரீதியாக வலதுசாரி அரசியலுக்குத் தேவையான மிகப்பெரிய அறிவுசார் அடித்தளத்தை தமிழ்நாட்டில் உருவாக்குபவர் அவரே என்பது எனது ஆழமான நிலைப்பாடு. இந்தியாவை மொழிகளாலும் தேசிய இனங்களாலும் ஆன ஒரு கூட்டாட்சியாகப் பார்க்காமல், ஒற்றைப் பண்பாட்டு ஆன்மீகத் தேசமாக அவர் முன்வைப்பது இந்து ராஷ்டிர சிந்தனைக்கு மிகவும் நெருக்கமானது. மேலும், தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய சிந்தனைகளைத் தொடர்ந்து தாக்கி, அவற்றுக்கு மாற்றுவடிவமாகப் பாரம்பரிய தர்மத்தையும் அத்வைதத்தையும் அவர் நிறுவுகிறார். இந்தியாவின் வரலாற்றை ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் போராட்டமாகப் பார்க்காமல், வேதாந்த சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியாகவே முன்வைக்கிறார். ஆக, தற்கால வலதுசாரி அரசுகள் பெருமுதலாளித்துவத்துடன் இணைந்து இயங்கும்போது, ஜெயமோகன் உருவாக்கும் பிரம்மாண்டமான இந்து ஞான மரபு விவாதங்களும், பண்பாட்டுப் பொற்காலம் குறித்த ஏக்கங்களும், அந்த அதிகார வர்க்கத்திற்கு மிகச் சிறந்த கருத்தியல் கவசமாகப் பயன்படுகின்றன. அவர் வலதுசாரி அரசியல் தடையின்றி இயங்குவதற்கான பாதுகாப்பான சமூக மனநிலையைத் தயார் செய்து கொடுக்கிறார். இந்தச் சூழலில், இப்படியான பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துகின்ற ஒருவர், பெருமுதலாளிகள் அதுபோலவே பழமைவாத ஆதரவாளர்களின் பின்புலத்துடன் 'ஒரு கோடி ரூபாய்' என்ற மாபெரும் பணப்பரிசுடன் ஒரு இலக்கிய விருதினை அறிவித்து, இந்தியாவிலேயே மிகப்பெரிய இலக்கிய அதிகார நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்துவது என்பது வெறுமனே இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஒரு மிகத் தீவிரமான அரசியல் மேலாதிக்கச் செயல்பாடாகவே உருவெடுத்துள்ளது. ஆதிக்க வர்க்கம் தங்களது சித்தாந்தத்தை மக்கள் மீது வன்முறையால் திணிப்பதைத் தவிர்த்துவிட்டு, நுட்பமான இலக்கிய நிறுவனங்கள் மற்றும் விருதுகள் மூலம் தங்களது மதிப்பீடுகளே ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனை முறையாக இருக்க வேண்டும் என மூளைச்சலவை செய்கிறது. ஜெயமோகன் முன்னெடுக்கும் இந்த மாபெரும் அதிகார நிறுவனமும், அதன் அபரிமிதமான பண பலமும் அத்தகைய மேலாதிக்கத்தை நிறுவும் கருவியே ஆகும். ஒரு கோடி ரூபாய் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் கற்பனைக்கெட்டாத ஒரு பெரும் மூலதனம். இந்த மூலதனத்தின் ஈர்ப்பு விசை, தன்னிச்சையாகவே பல இளம் எழுத்தாளர்களைத் தன்பால் ஈர்க்கும். மார்க்சிய, தலித்திய, பின்நவீனத்துவ, பெண்ணிய மற்றும் திராவிடச் சிந்தனை கொண்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கூட, இந்த அதிகார நிறுவனத்தின் அங்கீகாரத்திற்காகவும், பணப்பரிசுக்காகவும் தங்களது தீவிரமான சமூக விமர்சனங்களை மழுங்கடித்துக்கொண்டு, ஜெயமோகன் வரையறுக்கும் உன்னதவாத மற்றும் ஆன்மீக அளவுகோல்களுக்கு ஏற்பத் தங்களது எழுத்துக்களைச் சமரசம் செய்துகொள்ளும் நிலை உருவாகும். பணத்தின் மூலம் மாற்றுச் சிந்தனைகள் நேரடியாகத் தடை செய்யப்படாமல், அதிகார நிறுவனத்தின் பிரம்மாண்டத்தால் அவை தானாகவே அடங்கிப் போகச் செய்யப்படுகின்றன. சம்மதத்தை உற்பத்தி செய்யும் மிக நுட்பமான தந்திரம் இது. தமிழ் இலக்கியம் என்பது காலம் காலமாக மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், சிறுபான்மையினர் இலக்கியம், பின்நவீனத்துவம் எனப் பல்வேறு விளிம்புநிலை மக்களின் மாற்றுக்குரல்களால் பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் ஒரு களம். ஆனால், பெரும் பணபலத்தோடு ஒரு அதிகார நிறுவனம் உருவாகும்போது, அது ஒரு குறிப்பிட்ட அழகியலை மட்டுமே உண்மையான இலக்கியம் என்று உலகிற்கு அறிவித்து, மற்றவற்றின் மீது மிக மோசமான ஒரு குறியீட்டு வன்முறையைச் செலுத்துகிறது. ஜெயமோகனைப் பொறுத்தவரை, இந்திய ஞானமரபு, தொன்மங்கள், அத்தோடு ஆன்மீகத் தேடல் ஆகியவற்றைக் கொண்ட காத்திரமான படைப்புகளே ஆகச் சிறந்தவை என்ற அளவுகோல் உள்ளது. இந்த மாபெரும் விருதின் மூலம், இந்த குறிப்பிட்ட பழமைவாத மேலும் இந்துத்துவச் சார்புடைய அழகியலே இந்தியாவிலேயே தலைசிறந்தது என்ற பிம்பம் பண்பாட்டு மூலதனமாக உருவாக்கப்படுகிறது. இது தலித் இலக்கியத்தையோ, பெண்ணிய இலக்கியத்தையோ, பின்நவீனத்துவ இலக்கியத்தையோ நேரடியாகத் தாக்காது. அதற்கீடாக, அவற்றின் அழகியலை, "இது வெறும் பிரச்சாரம்", "இது உன்னதக் கலையென ஏற்கவியலாது" என்று முத்திரை குத்தி, இலக்கிய வரைபடத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளது. செவ்வியல் என்ற சொல்லுக்குள் ஒரு பெரும் ஆபத்தான வெடிகுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நவீன தமிழ் இலக்கியத்தை அச்சுறுத்தும் தந்திரோபாயம் இதனுள் பொதிந்திருக்கிறது. ஜெயமோகனின் சிந்தனைகளும் எழுத்துக்களும் தனிமனிதனின் அகத் தேடலுக்கும், தமிழ் மொழியின் அழகியலுக்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கலாம். ஆனால், ஒரு தீவிரமான விமர்சகனாக அவரை சமூக, வரலாற்று, பொருளாதார நிலைப்பாடுகளின் அடிப்படையில் அளவிடும்போது, அவரது ஒட்டுமொத்த எழுத்தியக்கமும் பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துவதாகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தத்துவார்த்தமாக நியாயப்படுத்துவதாகவும், விளிம்புநிலை மக்களின் யதார்த்தப் பிரச்சினைகளை ஆன்மீக இருட்டடிப்புச் செய்வதாகவுமே வெளிப்படுகிறது. அவர் சொற்களால் கட்டும் பிரம்மாண்டமான தத்துவக் கோட்டைகள், எதார்த்தமற்ற புனைவுகளின் அடித்தளத்தில்தான் எழுப்பப்பட்டுள்ளன. இப்போது, அந்தப் புனைவுகளை வெறும் வார்த்தைகளைத் தாண்டியும், பல கோடி ரூபாய் மூலதனத்தின் துணையோடும், ஒரு மாபெரும் அதிகார நிறுவனத்தின் வாயிலாகவும் ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியச் சூழலின் மீதும் ஒரு மேலாதிக்கமாக நிலைநிறுத்த அவர் முற்படுகிறார். இது, தமிழின் பன்முகத்தன்மையை அழித்தொழித்து, ஒற்றைப் பரிமாண, ஆதிக்கச் சார்பு இலக்கியச் சூழலை உருவாக்கும் மாபெரும் அரசியல் செயல்பாடாகவே இதைக் கருதி எவ்விதச் சமரசமுமின்றி நாம் முழுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. #ஜெயமோகன் #தமிழ்இலக்கியம் #இலக்கியவிமர்சனம் #பண்பாட்டுஅரசியல் #விருது #கருத்தியல்வன்முறை #விளிம்புநிலைஅரசியல் #tamilliterature #riyasqurana #றியாஸ்குரானா https://www.facebook.com/share/1K7cywzmw4/?mibextid=wwXIfr- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பாடகா் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மாா்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைகள் ஓசை சங்கீதம் ........! ..... பூப்பூக்கும் ஓசை ......- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அண்ணி அவள் தாகத்துக்கு ........ படம் : மனைவி (1969) விஜயகுமாரி & ராமாபிரபா ........ ! 😍
Important Information
By using this site, you agree to our Terms of Use.