Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ரி20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவர் Published By: Vishnu 02 Jan, 2026 | 03:23 AM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகின் தலைசிறந்த சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவராக நியமிக்ப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் 2024இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிவரை ஆப்கானிஸ்தான் முன்னேறி இருந்தது. ராஷித் கான் தலைமையிலான உலகக் கிண்ண குழாத்தில் சகலதுறை வீரர் முன்னாள் அணித் தலைவர் குல்பாதின் நய்ப், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பஸால்ஹக் பாறூக்கி, சுழற்பந்துவீச்சாளர் முஜீஜ் உர் ரஹ்மான், வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் ஆகிய அனுபவசாலிகளும் இடம்பெறுகின்றனர். உலகக் கிண்ணத்துக்கு பெயரிடப்பட்டுள்ள அதே குழாத்திலுள்ள வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளனர். உலகக் கிண்ணத்துக்கு தங்களைத் தயார்படுத்தும் தொடராக இரண்டு அணிகளுக்கும் இது அமையவுள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 19இலிருந்து 22ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த டி குழுவில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுகின்றது. இக் குழுவில் நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. சென்னையில் பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடும். ஆப்கானிஸ்தானின் ஏனைய போட்டிகள் பெப்ரவரி 11 எதிர் தென் ஆபிரிக்கா (அஹமதாபாத்) பெப்ரவரி 16 எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் (டெல்லி) பெப்ரவரி 19: எதிர் கனடா (சென்னை) மே. தீவுகள் மற்றும் ரி20 உலகக் கிண்ணம் ஆகயவற்றுக்கான ஆப்கானிஸ்தான் குழாம் ராஷித் கான் (தலைவர்), இப்ராஹிம் ஸ்த்ரான் (உப தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், மொஹம்மத் இஷாக், சிதிக்குல்லா அத்தல், தாவிஷ் ரசூலி, ஷஹிதுல்லா கமல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், குல்பாதின் நய்ப், மொஹம்மத் நபி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், பஸால்ஹக் பாறூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய். பதில் வீரர்கள்: ஏ.எம். கஸன்பர், இஜாஸ் அஹ்மத்ஸாய், ஸியா உர் ரஹ்மான் ஷரிபி https://www.virakesari.lk/article/234981
  3. அமெரிக்கப் படையினர் மிக இரகசியமாக இரவோடு இராவாக, பாகிஸ்தான் நகரம் ஒன்றில் தரையிறங்கி, பின்லேடனை கொலை செய்த காட்சியை, அப்போதை ஜனாதிபதி பராக் ஒபாமா நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின், சில காட்சிகளை, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்கப் படைகளினால் கைது செய்யப்பட்டதை டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். இதில் என்ன புதுமை? இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் எண்ணிக்கையில் குறைந்த சிறிய தேசிய இனம் ஒன்றின், அதேநேரம் வலுவான மரபு வழி விடுதலை இயக்கத்தை அழித்த நாடுகளில் அமெரிக்கா முக்கியமானது. இப்போது, சிறிய ஆனால் பொருளாதார வலுவுள்ள வெனிசுலா ஜனாதிபதியை, சட்ட ஆட்சிக்கு மாறாக கைது செய்து நியாயப்படுத்துவதும் அமெரிக்கா தான். ஆனால் ஒன்று -- சிறிய நாடுகளோடும், சிறிய விடுதலை இயக்கங்களோடும் மாத்திரமே அமரிக்காவின் சண்டித்தனம். அதேநேரம், அநுரகுமார திஸாநாயக்கா என்ன குறைந்தவரா? டித்வா புயலினால் அநுராதபுரத்தில் பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை காப்பாற்றிய காட்சியை நேரலையில் பார்த்தவர் அல்லவா? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02M7WbaYWuRuP6bheyQi4LnbX4TaFWL9WJ4fHsXag8fgb5auv2k4DG98oTPe86vej8l/? படுக்கையில் வைத்து கணவன் மனைவியை தூக்கியதாக சொல்கிறார்கள். அப்படி இருக்க இப்படி எல்லாம் கட்டளை பிறப்பித்தாக சொல்லப்படுகிறது.
  4. '2 லட்சம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த குகை'; நீங்களும் டிரெக்கிங் போகலாம் - Gudiyam Caves Tour திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகை குறித்து விவரிக்கிறது இந்த காணொளி. தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜனா #GudiyamCave #Tamilnadu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  5. உலகக் கிண்ணத்துக்கு முன்னர் கமின்ஸ் உட்பட மூன்று ஆஸி. வீரர்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் Published By: Vishnu 01 Jan, 2026 | 09:44 PM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாத்தில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், டிம் டேவிட் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மூவரும் அடுத்த சில வாரங்களுக்குள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இந்த மூவரும் அண்மையக் காலமாக உபாதை காரணமாக சிகிச்சையுடன் ஓய்வுபெற்று வந்தனர். ஆனால், பெட் கமின்ஸ் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மாத்திரம் அணித் தலைவராக விளையாடி மீண்டும் ஓய்வு பெற்று வருகின்றார். அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மிச்செல் மார்ஷ் தொடர்ந்து செயல்படுவார். இதேவேளை, ஆறு சர்வதேச ரி20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 13 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியுள்ள சகலதுறை வீரர் கூப்பர் கொனலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற தொடர்களில் கொனலி விளையாடவில்லை. ஆனால், பேர்த் ஸ்கோச்சஸ் அணிக்காக பிக் பாஷ் லீக்கில் 166.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ஓட்டங்களைப் பெற்றதாலும் 7.62 என்ற கட்டுப்பாட்டு பந்துவீச்சுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதாலும் அவரை குழாத்தில் இணைத்துக்கொள்ள அவுஸ்திரேலியா தெரிவாளர்கள் தீர்மானித்தனர். அடம் ஸம்ப்பா, மெட் குனேமான், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் நான்காவது சுழற்பந்து வீச்சாளராக கொனலி இடம்பெறுகின்றார். ஆனால் தலா 13 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மிச்செல் ஓவென், பென் டுவார்ஷுய்ஸ் ஆகிய இருவரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அவுஸ்திரேலிய குழாத்தில் பெட் கமின்ஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் இந்த மாத இறுதியில் ஸ்கான் பரிசோதனையின் பின்னரே அவர் தொடர்ந்து விளையாடக்கூடிய உடற் தகுதியைக் கொண்டுள்ளாரா இல்லையா என்பது தெரியவரும். உபாதை காரணமாக ஆஷஸ் தொடரில் விளையாடாமல் இருந்த ஜொஷ் ஹேஸ்ல்வூட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் அவர் பூரண உடற்தகுதியைக் கொண்டிருந்தால் மாத்திரமே உலகக் கிண்ணத்தில் விளையாடக்கூடியதாக இருக்கும். டிம் டேவிட்டுக்கும் அதே கதிதான். இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்து, ஓமான், முன்னாள் சம்பியன் இலங்கை, ஸிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பி குழுவில் முன்னாள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை பெப்ரவரி 11ஆம் திகதியும் இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயை 13ஆம் திகதியும் எதிர்த்தாடும். இந்த இரண்டு போட்டிகளும் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும். அவுஸ்திரேலிய தனது மூன்றாவது போட்டியில் இலங்கையை கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 16ஆம் திகதி சந்திக்கும். இதே விளையாட்டரங்கில் ஓமானுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் கடைசிப் போட்டி பெப்ரவரி 20ஆம் திகதி நடைபெறும். ரி20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய குழாம் மிச்செல் மார்ஷ் (தலைவர்), சேவியர் பாட்லட், கூப்பர் கொனலி, பெட் கமின்ஸ், டிம் டேவிட், கெமரன் க்றீன், நேதன் எலிஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மெட் குனேமான், க்ளென் மெக்ஸ்வெல், மெத்யூ ஷோட், மாக்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஸம்ப்பா. https://www.virakesari.lk/article/234976
  6. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP ITA 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக Pak குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI BAN Select BAN Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ Select PAK Select PAK PAK SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), PAK IND IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG AUS ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND ENG ENG உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BABAR AZAM 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JOFRA ARCHER 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) DARYL MITCHEL 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ADAM ZAMPA 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BABER AZAM 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  7. Backyard Chef,,இந்த பகுதியிலும் நிறைய சமையல்கள் பார்க்கலாம்.
  8. Today
  9. 🚨 வெனிசுலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் – அவசர நிலை அறிவிப்பு written by admin January 3, 2026 வெனிசுலாவில் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை தலைநகர் காரகாஸ் (Caracas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 2:00 மணியளவில் காரகாஸில் உள்ள முக்கிய இராணுவத் தளங்கள் மற்றும் அரச கட்டடங்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து நாடு முழுவதும் “வெளிப்புறத் தொந்தரவு நிலை” (State of External Disturbance) மற்றும் அவசர நிலையை மதுரோ அறிவித்துள்ளார். இராணுவம் மற்றும் சிவில் படைகளை உடனடியாகத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். காரகாஸ் மட்டுமன்றி மிராண்டா, லா குவைரா மற்றும் அராகுவா ஆகிய மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில இராணுவத் தளங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கமே இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக மதுரோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்கள் மற்றும் தாதுக்களைக் கைப்பற்றுவதே அமெரிக்காவின் ஒரே நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் (CBS, Fox News) டிரம்ப் நிர்வாகம் இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ள போதிலும், வெள்ளை மாளிகை அல்லது பென்டகன் அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகளைக் காரணம் காட்டி வெனிசுலா மீது அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. கடந்த வாரங்களில் கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tag Words: #VenezuelaCrisis #CaracasExplosions #Maduro #NationalEmergency #USVenezuelaTensions #OilAndMinerals #BreakingNews #SouthAmericaPolitics #TamilNews https://globaltamilnews.net/2026/225568/
  10. எண்ணெய் வளத்தை குறிவைத்து அமெரிக்கா நகர்கிறது. அதில் வெற்றியும் அடையும். ஈரானிலும் ஆட்சி மாற்றத்தை விரும்பி நகர்வுகள் இருக்கின்றன. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  11. தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 03 Jan, 2026 | 12:59 PM சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக சனிக்கிழமை (03) காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235109
  12. அப்ப சிறிதரன் பா.உ வும் அனுர காவடியாக மாறி விட்டாரா? அல்லது பார் லைசென்ஸ் விடயம் வெளியே வராமல் இருக்க ஆட்சிக்கு வரும் எந்த அரசிடமும் சரணாகதி அடையும் நிலையா? சிறிதரன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
  13. ட்ரம்ப் செய்திருக்கிறார். இதையே பைடனோ ஒபாமாவோ செய்திருந்தால் யாழ் களத்தில் "இடதுசாரிப் போர்வையோடு வலம் வரும் அதி வலதுசாரிகள்" இப்ப "ஏகாதிபத்தியம், பிள்ளைத் தாச்சிப் பத்தியம்" என்று ஒரே சருவச் சட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்திருப்பர். இப்ப எந்தத் "தலைவன்" பக்கம் சார்ந்து எழுதுவது என்ற "தொண்டையில் முள்ளு" நிலைமை😂!
  14. வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ‘சிறைபிடிப்பு' : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பட மூலாதாரம்,Reuters 3 ஜனவரி 2026, 09:12 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. அதேசமயம், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார். பட மூலாதாரம்,Reuters இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்த நாட்டில் அவசரநிலையை அறிவித்திருந்தார். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் கூறியது என்ன? வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்." என்று கூறியுள்ளார். மேலும், "இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு) மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன? வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அதிபர் டிரம்ப் பல வழிகளை முன்வைத்தார், ஆனால் இந்த செயல்முறை முழுவதும் அவர் மிகத் தெளிவாக இருந்தார்: போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும், திருடப்பட்ட எண்ணெய் அமெரிக்காவிற்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதில்" எனத் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் தான் சொல்வதை நிச்சயம் செய்வார் என்பது மதுரோவுக்கு புரிந்திருக்கும். இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட எங்கள் துணிச்சலான படைகளுக்கு பாராட்டுகள்." என்றும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். மதுரோ மீது நியூயார்க்கில் வழக்கு பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் (கோப்புப் படம்) மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். மதுரோ மீது "போதைப்பொருள்-பயங்கரவாத சதி, கொக்கைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். "அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதியின் முழு தாக்கத்தையும் எதிர்கொள்வார்கள்" என்று போன்டை கூறுகிறார், ஆனால் மதுரோவின் மனைவி மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை அவர் கூறவில்லை. "இந்த இரண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய, நம்பமுடியாத மற்றும் மிகவும் வெற்றிகரமான பணியைச் செய்த எங்கள் துணிச்சலான ராணுவத்திற்கு மிகப்பெரிய நன்றி," என்றும் போன்டை தெரிவித்துள்ளார். நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? காணொளிக் குறிப்பு,வெனிசுவேலாவை அமெரிக்கா தாக்கிய தருணம் வெனிசுவேலா தலைநகர் கராகஸில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் வனேசா சில்வா, தனது வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு வெடிப்பைக் கண்டார். வெடிப்பின் சத்தம் மிகப்பெரியதாகவும், "இடியை விட வலிமையானதாகவும்" இருந்ததாகவும், இதனால் தனது வீடு அதிர்ந்ததாகவும் அவர் கூறினார். கராகஸ் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி, எனவே அந்த சத்தம் நகரத்தைச் சுற்றி எதிரொலித்தது. "என் இதயம் துடித்தது, கால்கள் நடுங்கின," என்று அவர் கூறினார், "வெடிப்புகள் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்ததைக் கண்டு பயந்ததாகவும்", "அவை மிகவும் துல்லியமாகத் தெரிந்ததாகவும்" கூறினார். நகரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் எல்லோரும் இன்னும் பரபரப்பாக ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பி, நிலவரத்தை அறிந்து வருகிறார்கள் என்று அவர் கூறினார். தனது உறவினர் ஒருவர் வானத்திலிருந்து ஏதோ விழுவதைக் கண்டார் என்றும், பத்து வினாடிகள் கழித்து ஒரு பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டார் என்றும் வனேசா கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images இதுவரை தெரிய வந்தது என்ன? வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன. வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா ஒரு "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றும் அவரது சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரோவைக் கைது செய்யும் இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படை மேற்கொண்டதாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், "இராணுவ ஆக்கிரமிப்பை" நிராகரித்து கண்டிப்பதாகவும் கூறியுள்ளது. வெனிசுலாவுக்கு எதிராக மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ எதிர்பார்ப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ கூறுகிறார். பனிப்போருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் திரட்டல் இதுவாகும், மேலும் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் கிராண்ட் எழுதுகிறார். விடை தெரியாத 6 கேள்விகள் அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் எங்கு இருக்கிறார்கள் ? தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டனவா? தாக்குதலுக்குப் பிறகு வெனிசுவேலாவின் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன? எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை எங்கு நடந்தன? டிரம்ப் இந்த ராணுவ நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததற்கான காரணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் (டிரம்ப் அறிவித்துள்ள செய்தியாளர் சந்திப்பில் இது பற்றிய தகவல்கள் தெரிய வரலாம்) முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் தேசிய அவசரநிலையையும் அறிவித்திருந்தார். தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சி இது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். மறுபுறம், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை வெனிசுவேலா கண்டித்துள்ளது. "அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான ராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா சர்வதேச சமூகத்தின் முன் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது" என்று வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் "வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்" மற்றும் "நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்" நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார். அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் "சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். "நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,லோபஸ் (வலது) 2014 முதல் மதுரோ (இடது) ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் கூறியுள்ளார். வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா "எதிர்க்கும்", நாடு முழுவதும் உடனடியாக ராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஒரு காணொளி உரையில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய விளாடிமிர் பட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான "மிக மோசமான ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ள ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார். அனைத்து ஆயுதப் படைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற 'மதுரோவின் உத்தரவுகளை' வெனிசுவேலா பின்பற்றி வருவதாகவும் கூறினார். "அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர், ஆனால் எங்களை அடிபணிய வைக்க அவர்களால் முடியாது" என்று வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0yd1vwy0ko
  15. அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது. எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக கூறுகின்றோம். நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர். கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கம் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது. எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம். அரியநேந்திரன் அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மீது இருந்தது. கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்ப்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்ப்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்ப்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம். சிறீதரன் மீது குற்றச்சாட்டு அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறீதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது.அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார். அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. ஒழுக்காற்று விடயங்கள் அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை. ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார். சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது. எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார். அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது. https://tamilwin.com/
  16. 4 வது நிமிடத்தில் இருந்து இன்றைய சனலில் சவுக்கு சல்லியர்கள் படத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றி 👇
  17. 43-NAM 46-OMA 49-ITA 52-UAE 67-WI 70-IRE மற்றும் முடிந்தால் வினா 76க்கு அபிசேக் சரமா என்றும் வினா 78 க்கு வருன்சக்கரவத்தி என்றும் மாத்தி விடவும்.நன்றி.
  18. எப்படியும் கட்டின விகாரையை எந்த சிங்கள அரசும் இடிக்கப் போவதில்லை. நயினாதீவு நாகவிகாரை பிக்கு பக்கத்தில் தான் உண்மையான விகாரை இருந்தது. அது தனக்குத்தான் சொந்தம் என்கிறார். ஆகவே அந்த விகாரையையும் புதுப்பித்து 2 விகாரைகள் வரத்தான் போகிறது. இதற்குள் அர்சுனா பொன்ற அரை லூசுகள் விகாரையை அகற்றப் போராடாமல் நல்லூர் கந்தசுவாமி கோவிலை இடிக்க வேணும் என்று புதுப்புரளியை கிளப்பி விட்டிருக்கிறார். தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையால் தமிழ்மக்கள் அனுராவுக்கும் அர்ச்சுனாவுக்கும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். இது தமிழர் அரசியலில் மிகவும் ஆபத்தான போக்காக இருக்கிறது.
  19. ஈழத்தமிழர்கள் போராட்ட வரலாறு தமிழ்நாட்டில் பேசுபொருள் ஆக்கப்படக்குடாது என்று திட்டமிட்டு தமிழர்கள் தம் வரலாறு இருக்ககூடாது என்று திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தால் திரையரங்குகள் வழங்கப்படாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ள சல்லியர்கள் திரைப்படத்தை உலகெல்லாம் பரந்து வாழும் இந்திய, ஈழத்தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து வெற்றிபெறச்செய்து நம்சக்தியை காட்டுவோம்.. இதற்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான் இனிமேல் இன்னுமொருவர் எமது வரலாற்றையும் தமிழர்கள் வாழ்வியலையும் பேசும்படங்களையும் எடுக்க வரும்பொழுது நம்பிக்கையையும் ஊக்கத்தைய்யும் துணிவையும் தரும்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ள ottp தாலத்தில் சென்று பார்த்து எம் ஆதரவை கொடுப்போம்.. தமிழரை, தமிழை பேசுபவர்களை வளர்த்துவிடுவோம்..
  20. தையிட்டி - அறுபது ஆண்டுகள் தாண்டிய நினைவுகள்.... தையிட்டி விகாரை குறித்து நிறையச் செய்திகளைப் பார்க்கிறோம். ஒரு புறத்தில், அவற்றில் பல தகவல்களின் அடிப்படையில், நிதானமானவையாகவும் உணர்ச்சிபூர்வமானவையாகவும் உள்ளன. இன்னொரு புறத்தில், எந்த விதமான சரியான தகவல்களையும் கொண்டிருக்காதவர்கள் என்ன சொல்கிறோம் என்று கூடப் புரியாமலே வெளிப்படுத்தும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மண்ணுடன் ஒரு நூற்றாண்டுக்கு மேலான தொடர்ச்சியான இணைப்புகளைக் கொண்டிருக்கும் தையிட்டி மக்களின் சமூகம் சார்ந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு நாடளாவிய மத நல்லிணக்கத்தையும் மனதிற் கொண்டு இந்த விடயம் அணுகப்பட வேண்டும். இவ்வாறு, ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட தையிட்டித் தொடர்ச்சியைக் கொண்ட குடும்பங்களின் மிக நெருங்கிய உறவாகவும் தலைமுறைகள் தாண்டிய நட்பாகவும் என்னால் உரிமையுடன் பேச முடியும். ஊர்ந்து - தவழ்ந்து - விழுந்து - எழுந்து - எண்ணும் எழுத்தும் அறிந்து - ஆரம்பக் கல்வி கற்று - எனது வாழ்வின் ஆரம்ப ஆண்டுகளைத் தையிட்டி மண்ணின் புழுதிக் காற்றை நுகர்ந்து வளர்ந்தவன் நான். மேலே போவதற்கு முன்னர் சுருக்கமாக சில புள்ளிக் குறிப்புகளைச் சொல்ல வேண்டும். + தையிட்டி மக்கள் யாரும் தாதுகோபத்தை (Dagoba அல்லது Stupa) (அல்லது விகாரையை) இடிக்குமாறு கேட்கவில்லை. தமது நிலத்தைத் தான் கேட்கிறார்கள். [பிற்குறிப்பு 1] + தையிட்டி விகாரைக்குக் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமைக்காரர்கள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் தொடர்ச்சியான உறுதிகள் இருக்கின்றன. + இந்த நீடித்த தொடர்புகள் மற்றும் காணி உறுதிகளின் நம்பத்தகு தன்மை போன்றன, - நயினாதீவு நாகதீப விகாரையாலும் - யாழ்ப்பாணம் நாகவிகாரையாலும் - வடமாகாண ஆளுநர் அலுவலகத்தாலும் - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தாலும் - நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு போன்றவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. + எல்லாவற்றுக்கும் மேலாக, தையிட்டி திஸ்ஸ மகா விகாரையின் பிக்குவும் தனது கட்டடங்களை நகர்த்த ஒப்புக்கொண்டதோடு தான் வெளியேறவேண்டி வரத்தக்க வாய்ப்பையும் ஒப்பியிருக்கிறார். + கிட்டத்தட்ட எல்லாக் காணிகளும் உரிமைக் காணிகளாக உள்ளன. - தொண்ணூறுகளில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் காரணமாக ஆவணங்கள் எல்லாவற்றையும் கொண்டுபோக முடியாததால் இப்போது மூல ஆவணங்கள் கையில் இல்லாத ஓரிரு குடும்பங்கள் இருக்கின்றன என்று அறிகிறேன். 'கச்சேரியிலும்' உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெறமுடியாதிருக்கிறது. - உரிமைக்காரர்கள் நீண்ட காலத்துக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் போனதால் ஓரிரு காணிகளுக்கு நேரடி உள்ளூர் உரிமைக்காரர்கள் அயலில் இருக்கமாட்டார்கள். - தமது காணிகளை மற்றவர்களுக்கு கையளிக்க முன்னரே இறந்தவர்களும் கொ*லப்பட்டவர்களும் சில காணிகளுக்கு 'உரிமையாளர்களாக' இருக்கிறார்கள் [பிற்குறிப்பு 2]. குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்த போது எனது முகவரி பொன்மகால், சாந்தா வீதி, காங்கேசன்துறை [பிற்குறிப்பு 3]. சமையலறையும் நான்கு அறைகளும் கொண்ட ஒரு வீடு அது. அப்போதெல்லாம் கிராமங்களில் பொது வழக்கத்தில் இல்லாத வகையில் வீட்டுக்குள்ளேயே குளிப்பறையும் கழிப்பறையும் வைத்து, கதவு போட்ட garage ஒன்றுடன் அந்த வீடு இருந்தது. மாமா பதிவுசெய்யப்பட்ட மருத்துவராக தூரக் கிராமங்களில் வேலை செய்தபோது, ஆரம்ப அறுபதுகளில் வீடு கட்டிய காலங்களில், அப்பா தான் மேற்பார்வை செய்திருந்தார். அம்மாவும் நானும் இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் அம்மாவின் தங்கையும் இருந்த அந்த வீட்டில், எனது ஒன்றுவிட்ட சகோதர்களும் தங்கியிருந்து காங்கேசன்துறை அமெரிக்கன் மிஷன் மகாவித்தியாலயத்தில் படித்தார்கள். நான்கு வயதில் அதே பாடசாலையில் நானும் சேர்க்கப்பட்டேன். எனது அந்த நான்கு சகோதரர்களும் அந்த வீட்டிலே இருக்கும்போதே பிறந்தார்கள். எனது ஒன்பதாவது வயது வரை அங்கு தான் எனது வாழ்க்கையின் அத்திவாரம் இடப்பட்டது. முன் வீட்டில் சிவகாமி, வடகிழக்கில் இரவி அண்ணை, அவருக்கு அடுத்த வீட்டில் முரளி என்று நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அளவெட்டிக்குப் போன பின்னரும் குடும்பமாகவும் தனித்தும் பல்கலைக்கழகம் போகும் வரை இந்த வீட்டுக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறேன். மாமாவின் வீட்டுக்குப் பின்னால் தெற்காக உள்ள கலட்டி என்று சொல்லப்பட்ட திறந்த பெரிய வளவில் பட்டம் ஏற்றியிருக்கிறோம். கிறிக்கெற் விளையாடியிருக்கிறோம். ஓடும்போது கற்களிலும் முள்ளிலும் கால் வைத்துக் குருதி சிந்தியிருக்கிறோம். அந்த வளவும் தனது பராமரிப்பில் தான் இருப்பதாக மாமா சொல்லியிருக்கிறார், வீட்டிலிருந்து 150 - 200 மீற்றர் தூரத்தில் ஒரு புளியமரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு முனி இருந்ததாக(!) சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நான் கண்டதில்லை! புளிய மரத்துக்கு மேற்கே கூப்பிடுதொலைவில் நாதோலை வைரவர் கோயில் இருந்தது. ஆண்டுக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகளாக கோயில் பொங்கலும் குளிர்த்தியும் நடக்கும். ஊரவர்கள் இதற்காக வெளியிடங்களிலிருந்து வருவார்கள். இப்போது நாங்கள் வாழ்ந்த வீட்டுக் கழிப்பறை இருந்த பின் மூலையில் ஒரு பெரிய வீடு முளைத்திருக்கிறது. அதற்கு 'விகாராதிபதி வதிவிடம்' என்று பெயராம். திறந்த பெரிய வளவில் புளியமரம் இருந்த இடத்தில் வெள்ளையாக புதிய தாதுகோபம் ஒன்று எழுந்திருக்கிறது. இந்த வளவு 1961-இல் திருமணம் செய்த எனது மாமாவுக்கும் அத்தைக்கும் ஆரம்ப-அறுபதுகளில் சீதனமாக வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வளவும் இணைந்த தொடர் வளவுகளும் குடும்பங்களுக்கு நடு-முப்பதுகளில் (1936?) சீதனமாக வழங்கப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய தலைமுறை விலைக்குக் கொள்வனவு செய்த காணிகள் இவை. எனது அம்மம்மாவின் தங்கைக்கு அதற்குள் நிலச் சொத்துகள் இருக்கின்றன. எங்கள் வீட்டுக்கு முன்னால், வடக்கிலும் வடகிழக்கு மூலையில் இருந்த திரு ஐயாத்துரை அவர்களது வளவுகளும் கிட்டத்தட்ட இதே வரலாறு கொண்டவை என்று அறிந்திருக்கிறேன். அவர்களது திகதிகள் கொஞ்சம் முன்னால் போய், 1920களுக்கு முன்னால் வரை இருக்கக்கூடும். எங்கள் வீட்டுக்குத் தென்கிழக்குத் திசையில் கிட்டத்தட்ட 800 மீற்றர் தூரத்தில் ஒரு 'பாஞ்சாலை' இருந்தது. பார்க்கும்போது அஃது ஒரு மணிக்கோபுரம் மாதிரி இருந்தது. அந்த இடத்துக்கும் தென்கிழக்காக முருத்தனை என்று ஒரு குறிச்சியில் எங்கள் உறவினர்கள் இருந்தார்கள். இந்தப் பாஞ்சாலையைத் தாண்டித் தான் முருத்தனைக்குப் போகவேண்டும். சிறுவனாக நான் போகும்போது இந்த இடத்திலிருந்து கொஞ்சம் விலகித் தான் நடப்போம். அங்கிருந்த மணிக்கோபுரத்தைச் சுற்றி உடைந்த அறைகளும் சிதிலமடைந்த சுவர்களும் இருந்தன. சிறுவனாக இருந்த காலத்தில் போகக் கூடாது என்று அம்மா சொல்லியிருந்த இடத்துக்கு வளர்ந்த பின்னர் போக முடிந்தது. அந்த இடத்தின் உண்மையான பெயர் பன்சல (துறவிகளின் வாழுமிடம்) அல்லது பன்சலை (பர்ணசாலை என்பது இலைகளால் ஆன இடம் என்று பொருள் கொள்ளும்) என்று எனது பதின்ம வயதில் தான் தெரிய வந்தது. மணிக்கோபுரத்தின் உச்சியில் ஒரு தாதுகோபம் போன்ற வடிவம் இருந்தது. ஆமணக்கு - பூநாறி மரங்களுக்கு ஊடாக நில மட்டத்துக்குக் கீழே தெரிந்த தளத்தில் உடைந்த போத்தல் ஓடுகள் சிந்திக் கிடந்தன. ஒரு வகையில் தங்கள் சிரமமான கழிவுகளை வீசும் இடமாகவே அயலில் வாழ்ந்த மக்களுக்கு அந்தப் பாழடைந்த பன்சலை உதவியது. தரவுகள் மற்றும் செய்திகளின் படி, இந்தப் பன்சலைக்கான 20 பரப்பு அல்லது 1.25 ஏக்கர் காணி 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் , ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் காலத்தில், பிராமணவத்த தம்மகீர்த்தி திஸ்ஸ தேரோ (நயினாதீவு) மற்றும் களுத்துறை பண்டிதசீல தரதிஸ்ஸ தேரோ (காங்கேசன்துறை) ஆகியோர் பெயர்களுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் உள்ளன. பதிவுகளின்படி, இந்தக் காணி இருந்த குறிச்சி உளுத்தங்கலட்டி என்ற பெயரைக் கொண்டிருந்தது. அந்தக் காணியின் உறுதியில் கிழக்கு எல்லை [கலைவாணி] வீதி என்றும் மற்றைய எல்லைகள் தமிழர்களின் காணிகள் என்பதும் குறிக்கப்பட்டிருந்தன. பிக்குகள் குடியமர்ந்த பின்னர் இந்த இடம் புத்த கோயிலடி என்றும் சிங்களக் கலட்டி என்றும் அழைக்கப்பட்டதாம் [பிற்குறிப்பு 4]. இந்தப் பன்சலைக்குப் பொறுப்பாக இருந்த பிக்கு மிகவும் சாந்தமானவர் என்று எனது அம்மாவின் தங்கையின் கணவர் எழுபதுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்கள் பதின்ம வயதில் பிக்குகள் நடாத்திய வகுப்புகளில் தானும் சில உறவினர்களும் சிங்களம் கற்றோம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அன்பான உபசரிப்பும் பாற்சோறும் பழங்களும் தங்களுக்கு அமிர்தமாக இருந்தன என்றும் அவர் நினைவுகூர்ந்தார். 1956 கலவரங்களின் பின்னர் தமிழர்கள் பன்சலைக்குப் போகத் தயங்கினார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே பிக்குகள் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டதாகவும், கள்வர்கள் கதவுகள், ஓடுகள் என்று எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டதாகவும் அவர் சொன்னார். பிறகு மழையும் உள்ளே முளைத்த செடிகளுமாக அந்த இடம் 'உடைந்த கண்ணாடி - பீங்கான் வீசும் இடம்' ஆயிற்று! நான் பல்கலைக்கழகம் போகும்வரை பன்சலையில் இருந்த மணிக்கோபுரம் பின்னர் சாய்க்கப்பட்டதாக அறிந்தேன் [பிற்குறிப்பு 4]. அதே வேளை, பிந்திய எழுபதுகளில் காங்கேசன்துறையில் பருத்தித்துறை - கீரிமலை வீதியில் ஒரு 'புதிய' பௌத்த வழிபாட்டிடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடவேண்டும். எனது நண்பர்கள் சிலர் அங்கே சிங்களம் கற்றதையும் அறிந்திருக்கிறேன். அந்த விகாரை குறித்தும் யாராவது விபரமாக எழுதினால் நல்லது. காங்கேசன்துறை மக்கள் பிந்திய எண்பதுகளில் இடம்பெயர ஆரம்பித்தார்கள். தொண்ணூறில் பெரும்பாலான கரையோர மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்படியே, தையிட்டிப் பிரதேசம் மக்கள் இல்லாத கிராமமாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமிழ்ந்து புதைந்தது! தற்போதைய ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது பழைய விகாரை இருந்த இடத்தில் விகாரை ஒன்று கட்டுவதற்காக அத்திவாரக்கல் நாட்டப்பட்ட்து. ஆனாலும், அங்கே கட்டடம் ஒன்றும் எழுப்பப்படவில்லை. பின்னர் சில சூக்குமமான விடயங்கள் நடந்தன. முதலியார் செ இராசநாயகம் எழுதிய நூல்களையும் சில வரலாற்று ஆவணங்களையும் காட்டி காங்கேசன்துறையில் அல்லது தையிட்டியில் ஒரு பெரிய பௌத்த வளாகம் இருந்ததாக உரிமைகோரல்கள் நடந்தன. அப்போது (2016 - 2017) பதக்கட வேகடபொல விமலஞான தேரோ என்ற ஒரு புதியவர் வந்து இறங்கி, தாமே திஸ்ஸ விகாரையின் பொறுப்பாளர் என்று அறிவித்தார். யாரோ 1940களில் வாங்கி ஆரம்பித்த பன்சலை இருந்த இடம் தான் பழைய தேவநம்பிய தீசன் காலத்து திஸ்ஸ விகாரை என்று அவரும் அவரது சகாக்களும் சொல்லிக்கொண்டார்கள். அந்தப் பிரதேசத்தைக் கையகப்படுத்துவது அவர்களது முதன்மை நோக்கமாக இருந்தது என்று தையிட்டி மக்கள் சொல்கிறார்கள். இவ்வாறான ஒரு 'விஸ்தரிப்பு வாதம்' தமக்கு உடன்பாடானது அல்ல என்பதோ அல்லது தமது கட்டுப்பாட்டுக்கு வெளியே இது போய்விடும் என்ற உணர்வோ, அதே அமரபுர நிக்காயாவைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், நயினாதீவு நாகதீப விகாராதிபதி இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க மறுத்தார். நாகதீப விகாராதிபதி தனது 20 பரப்பு காணியில் இந்த முயற்சியை அனுமதிக்க மாட்டார் என்று தெரிந்த போது, வெறுமையாக இருக்கும் காணியை அம்பாளிப்பதே வழி என்ற தீர்மானத்தை வந்தவரும் அரச கட்டமைப்புகளும் இணைந்து எடுத்தனர். தொண்ணூறு இடப்பெயர்வுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட நான்கு குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு - எட்டு ஏக்கர் காணியை வேலி போட்டு தமது எல்லை என்று இவர்கள் வைத்துக்கொண்டார்கள் [பிற்குறிப்பு - 5]. அப்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே 2018-ஆம் ஆண்டில் விகாரை ஒன்று கட்டுவதற்காக இன்னொரு அடிக்கல்லை நாட்டினார். இந்தத் தடவை கிட்டத்தட்ட எங்கள் வீட்டுக்கு நேர் தெற்கே 300 - 350 மீற்றர் தூரத்தில் - முனி இருந்த புளியமரம் இருந்த இடத்தில் - சாக்கிய முனிக்கான புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் இடப்பட்டது. தாதுகோபத்துக்குக் கிழக்காக ஓர் அரசமரமும் நடப்பட்டது [பிற்குறிப்பு 6]. நல்லாட்சிக்கால அரசாங்கம் (மைத்திரி - ரணில்) காலத்தில் கட்டுமங்கள் தேக்கம் பெற்றிருந்தன [பிற்குறிப்பு 7]. இராணுவத்தின் நேரடி உதவியுடன் தாதுகோபம் கட்டப்பட்டது. கட்டப்படும் இடம் கடுமையான பாதுகாப்பு வலயத்துக்குள்ளும் வைக்கப்பட்டது. தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் [பிற்குறிப்பு 8]. கட்டி முடியும்வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் விகாரைக்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும் ஒரு பதில் இருக்கிறது. ஜூலை மாதம் முதலாம் திகதி 2019 அன்று தமிழ்நெற் செய்தி ஒன்றில் வலிகாமம் வடக்கு சண்முகலிங்கம் சஜீவன் தாதுகோபம் கட்டும் இடத்துக்குப் போனதும் அங்கே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதும் பற்றிய செய்திகளும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் அவரது குரல் பதிவும் உள்ளன [பிற்குறிப்பு 9]. அன்றிலிருந்தே மக்கள் ஏதோ ஒரு வகையில் இந்த விகாரைக்கும் நிலக் கையகப்படுத்தலுக்கும் எதிராக குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள். அப்போது இருந்த அரசுக்கு எதிரான பயமும் எல்லோருக்கும் தொல்லையாக வந்த கொரோனா பெருந்தொற்றும் இந்த தாதுகோபம் எழுவதற்கு வசதியாக இருந்திருக்கின்றன. மக்கள் வீட்டுக்கு வெளியே போவதற்கு அனுமதி இல்லாத காலத்தில் கனரக வாகனங்கள் உள்ளே போய் வந்ததை அவர்கள் 'இராணுவ முகாம் பலப்படுத்தப்படுகிறது' என்று எடுத்துக்கொண்டார்கள். அயலில் உள்ள வீடுகளைத் திருத்துவதற்குப் பறிக்கப்பட்டிருந்த கட்டடப் பொருட்களும் காணாமற் போனதாக உள்ளூர் மக்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். காணி தனிப்பட்டவர்களினுடையது என்று தெரிந்து கொண்டாலும், 2022-ஆம் ஆண்டில் முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வாவினால் தாதுகோபத்தின் கலசம் வைக்கப்பட்டது. எனது மாமாவின் காணி அவரது மகனுக்கு எழுதப்பட்டு இப்போது உரிய சட்ட அதிகாரங்களோடு அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஓர் அவுஸ்திரேலியனாக, உணர்வுபூர்வமான இணைப்பைத் தவிர, என்னை உருவாக்கிய நிலம் மற்றும் சூழல் என்பது தவிர, எனக்கு ஏதும் அங்கே உரித்து கிடையாது. ஆனாலும், இதற்காக சட்ட நடவடிக்கை ஒன்று ஏன் எடுக்கப்படவில்லை என்று மூத்த சட்டவாளர்களிடன் விசாரித்திருந்தேன். பல சவால்கள், + உயர்பாதுகாப்பு வலயம் + அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்கான இடம் + கொரோனா காலத்தில் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கும் - ஒன்றுசேர்க்கும் சவால்கள், + இந்த வழக்குகள் காணிக்குக் காணி தனித்துப் போடப்பட வேண்டிய தேவை + வழக்குகளுக்கு எடுக்கப்போகும் காலம் + எல்லைகளும் வேலிகளும் இல்லாத நிலைமை, இப்படி. ஆனால் காணிகளின் உரிமை யாருக்கு என்பதில் எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளூர் மக்கள் சிலரும் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் விகாரை வளாகத்துக்கு அண்மையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சில உரையாடல்களில் காணப்பட்ட 'சட்டவிரோதக் கட்டடம்' என்ற சொற்பதமும் 'அகற்றப்படவேண்டும்' என்ற சொற்பதமும் "இவர்கள் விகாரையை உடைக்கச் சொல்லுகிறார்கள்" என்ற தொனியில் வெளியே பேசப்பட்டன. தையிட்டிக் காணி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து எல்லோருடனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆளுநருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் காணி உறுதிகளின் மூலப் பிரதிகள் காட்டப்பட்டன. நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாராதிபதிகளுக்கு உறுதிகளைக் காட்டி மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். நயினாதீவு நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ 2025 ஆரம்பத்திலே தாம் தையிட்டி மக்களுடன் நிற்பதை வெளிப்படையாகவே சொன்னார். 'தாதுகோபம் அப்படியே இருக்கட்டும். அதற்கு மாற்றீடாக நாம் எமது 20 பரப்பு காணியை கொடுக்கிறோம்' என்று நயினாதீவு தேரோ சொன்னார். ஒரு படி மேலே போய் 'அந்த விகாரையை தமிழ் மக்களே பராமரிக்கட்டும்' என்றும் சொன்னார். யாழ்ப்பாண விகாரை தையிட்டி மக்களுக்கு நீதி அமைச்சுடனும் பௌத்தசாசன அமைச்சுடனும் கூட்டங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது. உறுதிகளைக் காட்டுங்கள் என்று கேட்ட நீதி அமைச்சர் உறுதிகளைப் பார்த்தவுடன் மௌனமாகிப் போனார். எனது தொடர்புகளுக்கும், 'நான் வளர்ந்த மண்' என்ற உரிமையோடு சில கருத்துகளைச் சொல்ல முடிந்தது. செயமதிப் படங்களை வைத்துக்கொண்டு கலாநிதி குமாரவேலு கணேசன் தயாரித்த ஒரு முன்மொழிவை அனுப்ப முடிந்தது. இப்போது தாதுகோபம் இருக்கும் இடத்தையும் அரசமரம் இருக்கும் இடத்தையும் பெட்டி அடித்து நேரடியாக கலைவாணி வீதி வரை எடுத்துச் செல்வதானால் 24 பரப்பு - அல்லது 1.5 ஏக்கர் - நிலம் உள்ளடக்கப்படும். நயினாதீவு நாகதீப விகாரையின் 20 பரப்பு காணியையும் மனதில் வைத்து விகாராதிபதியுடன் இணைந்து இந்த 24 பரப்புக் காணியின் உரிமையாளர்களுடனும் பேசி ஒரு சமரசத் தீர்வுக்கு வருவதே நல்ல வழி என்பது இந்த முன்மொழிவின் சாரம். இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் [பிற்குறிப்பு 10]. மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் விகாரை தனியார் காணிகளில் அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளும் இழப்பீடும் வழங்கப்படும் என்று சொன்னார். வலிகாமம் வடக்கு பிரதேச சபை "இது ஒரு சட்டவிரோதக் கட்டடம்" என்று அறிவித்தல் பலகை ஒன்றை நாட்ட எடுத்த முயற்சிக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர் இணைந்து கலந்துகொண்ட முயற்சி வன்மையான கைதுகளுடனும் மருத்துவநிலைய அனுமதிகளுடனும் முடிந்திருக்கிறது. ஒரு புறத்தில் தையிட்டி விகாராதிபதியுடன் பேசி தீர்வு ஒன்றைத் தேட முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மறுபுறத்தில் 'தையிட்டியில் ஒருத்தனுக்கும் காணி உறுதி இல்லை' என்று சொன்னது தையிட்டி மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நயினாதீவு தேரோவும் யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த தேரர்களும் இது மக்களின் காணி என்றும் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஒரு வகையில் உணர்வூட்டப்பட்டிருக்கும் சிங்கள மக்களிடம் இந்தச் செய்தியைப் பக்குவமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்போது, ஆண்டின் இறுதி நாளன்று, தையிட்டி காணி உரிமையாளர்கள் மாவட்டச் செயலாளருடன் பேசியிருக்கிறார்கள். கட்டம் கட்டமாக காணிகள் விடப்படலாம். விகாராதிபதியின் வீடு மற்றும் கட்டுமானங்கள் நகர்த்தப்பட வேண்டிய தேவையும் இருப்பதால் எல்லாம் முடிவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் என்ற வகையில் மாவட்டச் செயலாளரின் முன்மொழிவு இருக்கிறது. தையிட்டி விகாராதிபதியின் கருத்துகளும் வரவேற்கத்தக்க வகையிற் தெரிகின்றன. எமது ஆவணங்களை உயர்மட்டக் குழுவிடமும் அமைச்சுகளிடம் கொடுத்திருக்கிறோம். இது எமது காணி இல்லை என்றால் நான் வெளியேறத் தயார் என்று அவர் சொல்லியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் தை முதல் வாரத்தில் தையிட்டி விகாராதிபதியைச் சந்திப்பார் என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் ஜனவரி மூன்றாம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை அமைதியாக நடாத்த தையிட்டி மக்கள் விரும்புகிறார்கள். பொதுப் போராட்டமாக கட்சி வேறுபாடுகள் இல்லாது எல்லோரும் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் பெருமளவு மக்களும் கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற - உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் ஒன்றாக நல்லதொரு தீர்வு நோக்கிய முயற்சியாக நிறைவு பெறுவதாக! நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் எனது அம்மாவின் தங்கையின் மறைவுக்காக அவரசப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேர்ந்தது. தையிட்டி வீட்டில் எனக்கு இரண்டாவது அம்மாவாக என்னை உருவாக்கிய அவரது இறுதிச் சடங்கின் மாலையில் தையிட்டி போனோம். கலட்டிக் காணியாக நாங்கள் ஓடி விளையாடிய மண்ணில் மண் நிரப்பி நன்றாக நிலத்தடி நீர் இறைக்கப்பட்ட மரங்களுக்கு மத்தியில் தாதுகோபமும் அரச மரமும் மற்றைய கட்டுமானங்களும் உள்ளன. இருநூறு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு மணல் நிரப்பிய பெரிய வளாகம் ஒன்றும் முன்னால் உள்ளது. நாங்கள் ஊஞ்சல் ஆடிய மாமரங்களுக்கும் இளநீர் குடித்த தென்னைகளுக்கும் கீழே வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளுக்கு நடுவில் எங்கள் வீடு கூரை இழந்து சுவர்கள் சிதைந்து பழைய நல்ல நினைவுகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு பலமான கோது போல இன்னமும் நிற்கிறது. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளில் முன்வேலியின் கிளுவை மரத்தின் தடி ஒன்றில் சுற்றிய தேங்காய்நெய்ப் பந்தத்தை வைத்திருந்த தம்பி தவறுதலாகத் தொடையில் சுட்ட காயம் இருக்கும் இடத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். [பிற்குறிப்பு 11] குறிப்பு: இது ஒரு நினைவு மீட்டல் மட்டுமே. பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. இதற்கெல்லாம் ஒரு சட்டப் பெறுமதியோ உரிமை கோரலோ கிடையாயது. முழுமையாக வாசித்தோருக்கு முழு நன்றி பாலா விக்னேஸ்வரன் 31 / 12 / 2025 பிற்குறிப்பு 1: அகற்றுதல் / இடித்தல் - சட்டவிரோத விகாரையை அகற்றுதல் என்பது அதை இடித்தல் என்று திரிபுபட்டமை வருந்தத்தக்கது. தாதுகோபம் (Dagoba அல்லது Stupa) என்பது வெண்மையான அந்தக் கட்டடத்தைக் குறிக்கும். விகாரை என்பது தாதுகோபத்துடன் சார்ந்த அரசமரம், தியான மண்டபம், ஓய்வுஅறைகள், நந்தவனம், வதிவிடம் எல்லாவற்றையும் அடக்கும். வளாகத்தின் அளவைச் சுருக்குதல் முதற்படி. அகற்றுதல் என்பது உரிய மென்னுணர்வுகளைப் புரிந்துகொண்ட மக்களின் சம்மதத்தோடு பக்குவமாகச் செய்யவேண்டிய பணி. விகாரை சார்ந்த சட்ட நடவடிக்கை எடுக்காத நிலையில் யாரும் 'சிநேகபூர்மாக அகற்றுங்கள்' என்று கேட்க முடியுமா என்பது விவாதத்துக்குரியது. பிற்குறிப்பு 2: உரிமையாளர்கள் மறைவு - தமது அப்பாவின் சார்பிலும் நேரடி உறவினர் சார்பிலும் அவர்கள் அதே இடத்தில் இருக்கும்போதும் முதிர்ச்சி அல்லது வேறு சவால்கள் காரணமாக உரிமையுடன் கேட்க்கும் மற்றவர்களையே 'இது உன்னுடைய காணியா' என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றி வீதியில் நிற்பவர்களும் கேட்கும் நிலைமை இருக்கிறது. தமது காணியை அடுத்தவருக்கு எழுதி வைக்காமல் இறந்து போனவர்களின் ஈடுபாடுகளும் முறையாகக் கையாளப்படவேண்டும். பிற்குறிப்பு 3: வீடுகள் - படம் 1 காட்டும் மஞ்சள் கட்டம் மாமாவின் வீடு. அளவீடுகள் பருமட்டானவை. பிற்குறிப்பு 4: படம் 1 காட்டும் நீலக் கட்டத்தில் வாழ்ந்த நடராஜா முரளிதரன் எழுதிய பத்தி பின்னூட்டத்தில் உள்ளது. சிங்களக் கலட்டி என்று இந்த இடம் குறிப்பிடப்பதாம். ஆனால் எண்கள் வீடுகளில் புத்த கோயிலடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. பிற்குறிப்பு 5: மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர் - தமிழ்நெற், தமிழ் காடியன் இணைப்புகள் பின்னூட்டத்தில் உள்ளன. பிற்குறிப்பு 6: புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் - தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது. தாதுகோபத்துக்குக் கிழக்காக நாட்டப்பட்ட அரசமரமம் - படம் 1 பிற்குறிப்பு 7: தாதுகோபம், அரசமரம், வதிவிடம், மற்றைய கட்டுமானங்கள் - கலாநிதி குமாரவேலு கணேசனின் 'காலத்தைப் பதிவு செய்யும் காணொளி பின்னூட்டத்தில் உள்ளது. பிற்குறிப்பு 8: தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் இராணுவத்தின் நேரடி உதவியுடன் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் - படம் 2 + படம் 3. தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது. பிற்குறிப்பு 9: சண்முகலிங்கம் சஜீவன் 2018 முயற்சிகள் - 1 ஜூலை 2019 Tamilnet செய்தியில், அவரது குரல் பதிவும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் உள்ளன. பிற்குறிப்பு 10: கலாநிதி கணேசனின் முன்மொழிவு - ஒன்றும் நகராமல் இருந்த வேளையில், ஓர் ஆரம்பப் புள்ளியாக அதிகபட்ச விகாரை எல்லையாகச் சொல்லப்பட்ட விடயம் இது. இந்த அளவு நிலம் கொடுத்தால் அங்கே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என்ற கருத்து ஒருபுறம். எட்டு ஏக்கரை வைத்திருக்கும் அவர்கள் 15 ஏக்கர் கேட்கிறார்கள். எங்கோ ஓர் இடத்தில் ஆரம்பிக்கவேண்டும். நிலைமைகளை contextualise பண்ணுவதற்கான ஒரு படம் இது. இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் என்றார் Dr கணேசன். படம் 4 அவர்களது வெளியையும் (ஊதா) அதிகபடச விகாரையின் அளவையும் (நீலம்) பழைய விகாரைக் காணியையும் (சிவப்பு - பருமட்டு) காட்டுகிறது. பிற்குறிப்பு 11: எங்கள் சிதிலமடைந்திருக்கும் வீடு - உள்ளேயும் படங்கள் எடுத்தோம். அவர்கள் தடுக்கவில்லை. எனக்கு எங்கள் வீடு (படம் 5) தானே முக்கியம்! https://www.facebook.com/vicky.vigneswaran
  21. வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது! 03 Jan, 2026 | 03:36 PM வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Xதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் குறிப்பிடப்படுவதாகவது, வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மார் ஏ லாகோவில் செய்தி மாநாடு நடைபெறும் என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235120
  22. ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது. ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம். எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.
  23. திஸ்ஸ விகாரை பிக்கு சொன்னாரே, அப்படி ஏதும் நடக்காது, அப்படி செய்யவேண்டாமென்று தான் கட்டளை பிறப்பித்துள்ளதாக, அது பொதுமக்களின் காணி என்று நிரூபிக்கப்பட்டால் அதை தான் ஏற்றுக்கொள்வதாக. அவர் சொன்னது பொய்யா அல்லது வேறொரு பிக்குவை இறக்கியிருக்கிறார்களா? இது விகாரை பிரச்சனையல்ல நாட்டில் ஒரு வன்முறை கிளப்ப வேண்டுமென்றே ஒரு கூட்டம் அலையுது, அவர்களை கைது செய்யும்வரை இது தொடரும்.
  24. அப்போ இவர் செய்த கொலைகள் எந்த வழக்கில்?
  25. தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை! தையிட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த புத்த சிலை இராணுவ சிற்றுண்டி சாலையில் இருந்து எடுப்பட்டுள்ளது என kks பொலிஸ்சார் தெரித்துள்ளனர். இன்னிலையில் அதனை கொண்டு வந்த மதகுருவிடம் வாக்குமூலம் பெறவுள்ளது. மேலும் இன்று யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458192

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.