Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அவை எல்லாவற்றையும் விட மோசமான மீன்பிடி இந்திய இழுவை படகுகளின் ரோலிங் உலகெங்கும் தடை அவர்களுக்கு எதிராக மூச்சு காட்ட மாட்டார் உள்ளுரில் சண்டித்தனம் காட்டுகிறார் .
  3. இன்னும் சில வருடங்களில் வங்குரோத்து தவிர்க்க முடியாது அதை சாதாரண சிங்கள சனத்துக்கு சொல்லி விளக்க எந்த சிங்கள கட்சியும் தயார் இல்லை அனுர உட்பட .சிங்கள சனத்தை பப்பாவில் ஏற்ற இருக்கவே இருக்கு புத்தர் சிலை தமிழர் பகுதியெங்கும் புத்தர் சிலையை எந்த சிங்கள கட்சி வைக்குதோ அந்த கட்சிதானே அடுத்தமுறை ஆட்சி இது இலங்கையின் சாபகேடு .
  4. ஓடுமா ? உர கதை போல் கழிவுகள் தான் சைனா வில் இருந்து லங்காவுக்கு வருகின்றன போல் உள்ளது . நவீன உலகின் குப்பை கூடையாகிட்டுது .
  5. இவரின் சொத்து மதிப்பை 2௦௦9 முன் பின் பார்க்கணும் எந்த ஒரு அரசியலும் தமிழ் மக்களுக்கு செய்யாமல் தனது குடும்பம் மட்டுமே வாழனும் எனும் ஈன பிறவி பார் ஸ்ரீதரன் சுமத்திரனுக்கு ஒன்றும் சளைத்தவர் இல்லை .
  6. Today
  7. உக்ரேனில் ரஷ்யா தனது மொழி,இனவாரியான கைப்பற்றிய இடங்களை பற்றி ஐரோப்பிய ஒன்றியம் அலட்டிக்கொள்ளா விட்டால் ஒன்றிய கனவு சாத்தியம் என நினைக்கின்றேன்
  8. இரா சம்பந்தன் கூட்டிக்கொண்டு வந்த ஆளிட்ட கனக்க/நல்லதை எதிர்பார்க்கப்படாது கண்டியளோ.😀 அமிர்தலிங்கம்,சம்பந்தன் வரிசையில் வந்த இன்னொருவர்தான் இந்த சுமந்திரனார்.வழமை போல் பதவியை மோகத்தை தவிர வேறேதும் இல்லை.🤣 இவர்கள் எல்லாம் பொன்னம்பல இராமநாதன் காலத்து மூளைசாலிகள்.😂
  9. Yesterday
  10. மதிப்புக்குரிய சுகாதார இன்ஸ்பெக்டர்மார் உந்த தேத்தண்ணி கடையள்,கூல் பார் ரொய்லட்டுக்களையும் செக் பண்ணினால் போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும் 😷
  11. நான் முல்லாக்களின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஈரான் நாடு என்று பார்த்தால் சீனாவின் பின் பலம் அதிகமாக உள்ளது. இது நான் தீர்மானித்து எழுதிய கருத்து அல்ல. என்னுடன் வேலை செய்யும் தம் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி வந்த ஈரானியர்கள் சொன்னது. அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள்..... ஈரானில் அரச மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என..... ஐ திங்......அமெரிக்காவிற்கு வெளிப்படை எதிரிகள் அதிகரித்து வீட்டார்களோ என திங் பண்ண வேண்டிக்கிடக்கு....😜
  12. ஆ..அப்படியா..ஊரில் இன்னும் கொஞ்சம் பார் திறக்க இடம் இருக்கோ....உங்களிடம் எல்லாம் எப்படி பிள்ளைகள் படித்தார்களோ..?
  13. இந்த பிக்குகள் எல்லாம் முள்ளிவாய்கால் அழிவுகளுக்கு பங்கெடுத்த முன்னாள் இராணுவ வீரர்களாக இருக்கலாம்.
  14. உங்கடை ஆளுக்கு வரியை தவிர வேறை ஒண்டும் தெரியாது போல கிடக்கு. ஏலுமெண்டால் கூகிள்,பேஸ்புக்கு,வாட்ஸ் அப்,விண்டோஸ் ,ரிவிட்டர் எல்லாத்தையும் தனக்கு பிடிக்காத நாடுகளிலை நிப்பாட்டச்சொல்லுங்கோ பாப்பம்😃
  15. எதையும் வெளிப்படையாக தெரிவித்தால் பலருக்கு பல சந்தேகங்கள் வராது என நான் நினைக்கின்றேன். மொட்டையாக எழுதி விட்டு கடந்து செல்வதால் பின்னடைவுகள் தான் ஏற்படும் என நான் நினைக்கின்றேன்.
  16. அமெரிக்கர்களின் சீட்டாட்டம் மிக நுட்பமானது.ஐரோப்பிய ஒன்றியத்தின் பலிக்கடா உக்ரேன் என்பது போகப்போக தெரிய வரும். உக்ரேனில் ரஷ்யா கையகப்படுத்திய பகுதி ரஷ்யாவுக்கே சொந்தமாகும். உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றிய கனவு ஊட்டியவர்களுக்கு கிரீன்லாந்து நல்லதொரு சமர்ப்பணம்.
  17. அது என்ன இன்னொன்று என அறிய ஆவல்! தனது எதிர்காலம் சிறை அல்லது மறைவாகவே இருந்தாகணும் என்று கணித்தே வைத்துள்ளார் மஹிந்தா. இரண்டாம் துட்ட கைமுனுவுக்கு ஏன் இப்படியொரு விபரீத எண்ணம் வந்தது? சிங்களவருக்கு பயந்தே அவர் விகாரையில் இப்படி ஒரு சொகுசு வீட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்.
  18. இன்றைய காலத்தில் சீனா எதற்கும் வன்முறையை கையில் எடுப்பதில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அந்தந்த நாட்டு திண்ணையில் உட்காந்து விடுகின்றார்கள்.சிறிது காலம் செல்லச்செல்ல எமது சேவை உங்களுக்கு தேவை என்பது போல் தமது இருப்பை நியாயம் கற்பித்து விடுகின்றார்கள்.இதை இன்றைய காலங்களில் எல்லா நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களை கண்கூட பார்க்கின்றோம். நேட்டோ ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் செய்த நற்செயல்கள் எவை? சம்பந்தமில்லாத ஏனைய நாடுகள் மீது வான்வெளி தாக்குதல்களை செய்து மக்களையும் நாட்டையும் அழித்ததை தவிர.....? நேட்டோவை கலைப்பது போல் ஐநா போன்ற உலகை பேயனாக்கும் அமைப்புகளையும் கலைக்க வேண்டும். எல்லாம் சூரிய அஸ்த்தமனம் இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்ய வம்சாவளிகள். உன் மடியில் நான் படுக்க....என் மடியில் நீ படுக்க எனும் பீலிங் வருவதை யாராலும் தடுக்க முடியாது.🤣 ஒரு காலத்தில் தாம் தம் இனம் என வாழ்ந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளை வியாபார ரீதியாக ஆக்கிரமித்து ,தம் ஆட்சி நலனுக்காக சிற்றரசுகளை அழித்து கூட்டாட்சியை உருவாக்கி...... இன்று நடுத்தெருவில் நிற்கும் தனி இனங்களின் சாபம் சும்மா விடாது. இவர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு சாகும் தூரம் அதிகமில்லை.
  19. உறவுகளே வணக்கம், கல்லுண்டாய்வெளி மற்றும் தொண்டைமானாற்றில் பறந்த புலிகளின் வானூர்தி பற்றி நேரில் கண்டிருந்தாலோ அல்லது கேள்வியுற்றிருந்தாலோ அது தொடர்பில் தெரிந்த தகவல்களை பதிவிட்டு (அறிந்தவர்களிடம் கேட்டாவது) வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இராவணனின் புட்பக விமானம் போல வான்புலிகளின் வானூர்திக் கதைகள் இருக்கப்படாது. புலிகளைப் போன்றே அவர்தம் வரலாறுகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.
  20. இது கேணல் சங்கர் அவர்களின் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட கொச்சு இலகு வானூர்தி (Micro Light Aircraft) வகையைச் சேர்ந்த ஒரு வகையான வான்கலம் (சரியான வடிவம் என்னவென்று தெரியவில்லை.) ஆகும். இதுதான் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டு வானில் பறந்த முதலாவது வான்கலமும் ஆகும். இது 1980களின் இரண்டாம் பாகத்தில் (சரியான திகதி அறியில்லை. கூடுதலாக 86,87 காலமாக இருக்கலாம்) வானில் பறந்தது. இதற்கான புளூ பிரின்ட் எந்தவொரு நாட்டிடமும் இருந்து புலிகள் பெறவில்லை. முற்றிலும் உள்ளூரிலேயே கிடைக்கத்தக்க மூலப்பொருட்களையும் சொந்த அறிவினையும் கொண்டு உருவாக்கியிருந்தனர். வான்கலத்திற்கான பொறியாக ஒரு பழைய உந்துருளியின் பொறி கழற்றி எடுக்கப்பட்டு பாவிக்கப்பட்டது. வான்கலத்தை தயாரிப்பதற்கான பொருட்களாக உடைந்த ஊர்திகளிலிருந்து எடுக்கக்கூடிய அலுமினியத் தகடுகள், குழாய்கள், மற்றும் மரப்பலகைகள் பாவிக்கப்பட்டதாக அறியக்கூடியதாக உள்ளது. வசதிகள் கொண்ட சரியான தொழிற்சாலைக் கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் சிறிய பண்ணுறத்தகம் (garage) போன்ற கொட்டிலுக்குள் வைத்தே இவ்வான்கலத்தை கேணல் சங்கர் தலைமையில் புலிகள் வடிவமைத்தனர். இது தொண்டைமானாற்றில் அமைந்திருந்தது. அவருடைய இம்முயற்சிக்கு உள்ளூர் தச்சர்களும் கொல்லர்களும் உதவி நல்கியிருந்தனர். இவர்களின் இம்முயற்சியைக் கண்ட தமிழ் பொதுமக்களில் சிலர் "சாப்பாட்டிற்கே வழியில்லை, என்னத்துக்கடா இங்க விமானம்" என்றும் ஏளனமும் செய்தனர். எனினும் இதற்கெல்லாம் மனச்சோர்வடையாமல் புலிவீரர்கள் முதல் வான்கலத்தை செய்யும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றி கண்டனர். ஓம், புலிகளின் முதல் பறக்கத்தக்க வான்கலம் இங்குதான் உருவாகியது. இங்கு உருவாகிய வான்கலமானது தொண்டைமானாறு உப்பளவெளியிற்கு அருகிலிருந்த ஓர் மண்பாங்கான தெருவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதல் முயற்சியிலேயே உருவாகிய இவ்வானூர்தி அம்மண் தெருவில் ஓடி எழும்பியது. ஒரு தென்னைமரமளவு உயரத்திற்கு எழும்பிவிட்டு மீண்டும் கீழிறங்கியது. இதுவே புலிகளின் முதல் வானூர்தியாக முதல் பறப்பாக வரலாற்றில் பதிவானது. ஆதாரம்: வானத்தை வென்ற தமிழர்கள் ல் ஈழத்தில் கண்டுபிடித்த முதல் விமானம், IBC Tamil
  21. படித்தவர்கள் இரு வகைப்படும். ஒரு வகை படித்த படிப்பை நாட்டு வளர்ச்சிக்காக பயன்படுத்துவர். அவர்களிடம் நான் என்ற அகங்காரம் இருக்காது.அமைதியான மனப்பான்மை உடையவர்கள்.தெரியாததை அமைதியாக விளங்கப்படுத்துவர். இரண்டாவது வகையினர் தொழிலுக்காக படிப்பவர்கள். அவர்களது நோக்கு எதை படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நோக்குடையவர்கள். அப்படியானவர்களிடம் எந்தவொரு மனித மாண்புகளையும் காணவே முடியாது. இவையெல்லாம் நான் இலங்கையில் வாழ்ந்த போது கண்ட அனுபவங்கள்.
  22. ஏராளன் எதோ பேச்சுக்கு கருத்தை எழுதி விட்டு விடாமல் எழுதிய கருத்தை செயலாக்கியவர் நீங்கள் தான். நாங்கள் நாலு பேர் வெளியில் இருந்து என்னவும் கதைக்கலாம் காசு தருவோம் என்று கூறலாம் அல்லது தரலாம்.... ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த அந்த நிதியை உடனேயே பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்து அவர்களின் அத்தியாவசியமான தேவையை நிறைவேற்றியவர் நீங்கள் தான். உண்மையாகவே சொல்கின்றேன் இங்கே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு நீங்கள் தான் முதற் காரணம் . அரசியல் வேண்டாம் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட நிதிகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை ஆகவே உங்ககளுக்கே நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் . தொடர்ந்தும் உங்களின் ஆதரவும் செயற்பாடும் முன்னோடி அமைப்பிற்குத் தேவை என்பதையும் கூறி உங்களுக்கு எங்களின் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம் . 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.