Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கடலில் செல்லும் ஒரு எண்ணை கப்பலில்… எண்ணை கசிவு ஏற்பட்டாலே, பூமி மாசு படுகின்றது என்று பதறும் உலகம்… மாறி, மாறி எண்ணை உற்பத்தி வயல்களை தாக்கும் போது ஏற்படும் கரும் புகை, முழு உலகத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்தப் பாதிப்புக்களை… இந்தப் போரில் எதுவித சம்பந்தமும் இல்லாத, உலகில் ஒவ்வொரு தனி மனிதனும், வருங்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டி வரும்.
  3. திமுக - சிபிஎம் கூட்டணி இழுபறிக்கு காரணமான 'ஓர் இடம்' - அடுத்து என்ன? பட மூலாதாரம்,X/MK Stalin கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. "அதே ஆறு இடங்களைப் பெறுவதற்கு நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை. ஓர் இடத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சரே கூறியதால் ஏற்றுக் கொண்டோம்," என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். ஆனால், "ஆறு தொகுதிக்குக் குறைவாக கொடுத்தால் ஏற்க மாட்டோம்," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளால் தி.மு.க கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியிருந்தது. 'இந்தமுறை அதே எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க வேண்டும்,' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் ஐந்து இடங்களை மட்டுமே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. புதன்கிழமையன்று தி.மு.க - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பட மூலாதாரம்,Veerapandiyan படக்குறிப்பு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். 'போராடினோம்... கிடைக்கவில்லை' "ஓர் இடம் குறைவதைப் பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏழை எளிய மக்களுக்கான போராட்டங்களில் உறுதியாக இருந்தால் போதும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அல்ல" என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்திருப்பதால் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட அவர், "அவரே கூறும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும்." என்கிறார். தொகுதிப் பங்கீட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, "6 + 1 என்ற கணக்கில் தொகுதிகளை ஒதுக்குமாறு கூறினோம். அதற்காக நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை." எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin "தொகுதிகளைக் குறைப்பதற்கு தி.மு.க நிர்பந்தம் கொடுத்ததா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த மு.வீரபாண்டியன், "ஒருபோதும் திமுக நிர்பந்திக்கவில்லை. இதைப் பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தான் பேசினார்கள்." என்கிறார். "கட்டளையிடும் தொனியில் தி.மு.க நிர்வாகிகள் பேசவில்லை" எனக் கூறும் அவர், "சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால் கடந்து சென்றிருப்போம்." எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே அளவு இடங்களை ஒதுக்கும் முடிவில் தி.மு.க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்குமுறை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க நடத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "சுமூகமான முறையில் தொகுதி உடன்பாடு எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்." எனக் கூறினார். "கடந்த முறையைவிட அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்" எனவும் பெ.சண்முகம் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin '5 தொகுதிகளை ஏற்க மாட்டோம்' - கனகராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து, "ஒவ்வொரு கட்சியும் அவர்களின் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து செயல்படுகின்றனர். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை," என்கிறார் அவர். தொடர்ந்து பேசும்போது, "தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஓர் எண்ணைக் கூறுகின்றனர். நாங்கள் ஓர் எண்ணைக் கூறியுள்ளோம். கூடுதல் தொகுதி குறித்து எந்த விவரங்களையும் அவர்கள் கூறவில்லை." எனக் கூறுகிறார். கூட்டணியில் ஐந்து தொகுதிகளைக் கொடுப்பதாக தி.மு.க கூறுவதாகக் குறிப்பிடும் கனகராஜ், "அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் தரப்பில் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்ற முடிவை கூறிவிட்டோம். தி.மு.க தான் தெரிவிக்க வேண்டும்." என்கிறார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டபோது, "தி.மு.க தரப்பில் இருந்து அழைத்தால் பேசுவோம். எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்." என்கிறார் அவர். இதே கருத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "ஒவ்வொரு கட்சியும் அவரவர் பலத்துக்கேற்ப தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. எங்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு சொல்வதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்." எனக் கூறினார். பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,Shyam படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் "இதுபோன்ற முரண்பாடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது. "தி.மு.கவிடம் முன்வைத்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகளிடையே சற்று வருத்தம் இருக்கும். ஆனால், வாக்குப்பதிவு நெருக்கத்தில் அவை மறைந்துவிடும்" எனக் கூறுகிறார். "கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு வழியும் இல்லை. தி.மு.க ஒதுக்கியுள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் கூட்டணிக் கட்சிகளுக்கான சவாலாக இருக்கும்." என அவர் குறிப்பிட்டார். திமுக கூறுவது என்ன? "தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளை குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருகிறது" என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன். "தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 170 இடங்களில் போட்டியிட வேண்டும்" எனக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், "புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பது பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன," எனக் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0d0kqq8r5o
  4. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டொலராக உயர்வு Mar 19, 2026 - 07:54 AM உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவிய விலையை விட 5% க்கும் அதிகமாக உயர்ந்து, 109.91 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்தின் பின்னர் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை, பிரித்தானியாவின் இயற்கை எரிவாயு விலையும் 6% ஆல் அதிகரித்துள்ளது. ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எரிவாயு வயலுக்குச் சொந்தமான பெட்ரோ கெமிக்கல் வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இந்த விலை உயர்வு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டாரின் ராஸ் லாஃபான் தொழில் மண்டலமும் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இவ்வாறு திடீரென உயர்ந்த போதிலும், இந்த மோதல் காலத்தில் பதிவான உச்சகட்ட விலையை விட இவை இன்னும் குறைந்த மட்டத்திலேயே உள்ளன. இதற்கு முன்னர் மார்ச் 9 ஆம் திகதி மசகு எண்ணெய் விலை 116.78 டொலர்களாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmwuhbtg0004356pfttivv7z
  5. கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு 18 Mar, 2026 | 06:11 PM போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும், அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். இந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சட்டத் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை புதன்கிழமை (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். நாட்டில் அவ்வப்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் உருவான போதிலும், எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை வேகமாகவும் கைவிடாமலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைப் பேணி, இந்த தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்வதில் முக்கியமானதொரு காரணியாக அமைந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் அளவு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டினர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 4520 கிலோ கிராம் கஞ்சா, 1066 கிலோ 352 கிராம் ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1930 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அதிகளவில் கிடைத்து வருவதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில் 1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196 பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்று நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கை பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அது தொடர்பான நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடைமுறையை நிறுவுதல், மாகாண மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான தனி நீதிமன்றங்களை நிறுவுதல், போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸ் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார். போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 06 பிரதான உத்திகளின் ஊடாக அந்த வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார். அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாகவும், 'சமூக சக்தி' வேலைத்திட்டத்தின் பங்களிப்பையும் இதற்காகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை அண்டியதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் அதன் புதிய போக்குகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்களுக்குள் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்காகவே ஒதுக்கப்பட்ட மத ரீதியான நிகழ்ச்சிகளை வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் சார்ந்த கைதுகள் தொடர்பாக ஊடகங்களில் வழங்கப்படும் பிரசாரத்தைப் போன்றே அந்தப் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகச் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கும் பிரசாரம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது. ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மஹா நிகாயவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய வலேபொட குணசிறி அனுநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய குப்பியாவத்தே போடானந்த தேரர் மற்றும் அருட்தந்தை டிலான் பெர்னாண்டோ, அருட்தந்தை ஜூட் பேர்னார்ட் ரொட்ரிகோ, சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241318
  6. கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் Mar 19, 2026 - 07:11 AM ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த எரிவாயு வயலுக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அதன்படி, கத்தார் நாட்டின் ராஸ் லாஃபான் தொழில் நகரத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமொன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டார் மீது ஈரான் 5 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றில் 4 ஏவுகணைகளை கட்டார் முறியடித்த போதிலும், ஒரு ஏவுகணை ராஸ் லாஃபான் நகரில் விழுந்து வெடித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்டார், இது தனது தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், தனது இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ள கட்டார், அங்குள்ள ஈரான் இராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் பணியாளர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, சவுதி அரேபியாவின் ரியாத் நகர் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை முறியடிக்கப்பட்ட போது, அதன் சிதறல்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை தளம் மற்றும் அபுதாபி நகர் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. ஈரானின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலும் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதன்முறையாக வடக்கு ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானின் தாக்குதலில் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmwst1y30002356p13s3r9de
  7. Today
  8. பெரும்பாலான தமிழ் யூடியூப்பர்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர்கள் தாம் பேசுவது தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது தமிழ்பேசும் இஸ்லாமியர்களைக் குளிர்விக்க இப்படிப் பிதற்றுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்ரேல் சுக்குநூறாகியது, மரண அடி, அழிந்தான் யூதன், அமெரிக்கா பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுகிறது, அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பல்களை ஈரானின் ட்ரோன்கள் நிர்மூலமாக்கின, இஸ்ரேல் பிரதமர் நெத்தென்யாகு ஈரானினால் துல்லியமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் விரும்பியவாறு தலைப்பிட்டு தமது மனம் போன போக்கில் எடுத்துவிடுகிறார்கள். இதிலும் சில ஈழத்தமிழர்கள் மதில்மேல் பூனைபோல இருந்துகொண்டு ஒரு நாள் அமெரிக்காவிற்குச் சார்பாகவும் மறுநாள் ஈரானுக்குச் சார்பாகவும் பேசுகிறார்கள். தமிழ் அடியான் என்கிற யூடியூப்பர் ஒருநாள் அமெரிக்காவை போர்க்களத்தில் இருந்து ஈரான் அகற்றிவிட்டது, அமெரிக்கப் படைகள் முற்றாக மத்திய கிழக்கில் இருந்து காணமலாக்கப்பட்டிருக்கின்றன என்று செய்தி வெளியிட்டார். மறுநாள் அமெரிக்காவின் பாரிய நெடுந்தூரக் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் பல நிலைகளைத் தாக்கியழித்தபோது, தான் முதல்நாள் கூறியதற்கு நேரெதிராகப் பேசியிருந்தார். நான் இதுகுறித்து அவரிடம் கேள்வவி எழுப்பியபோது சில மணிநேரத்தில் எனது பதிவு அவரால் நீக்கப்பட்டது. இப்படித்தான் தமிழ் யூடியூப்பர்களின் நிலை. இவர்கள் வெளியிடும் காணொளிகளை உண்மையென்று நம்பும் எம்மவர்கள் இதுகுறித்துச் சிந்திப்பது நலம். 😊
  9. கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள குஞ்சுக்கால் வயல்வெளிகளை ஆக்கிரமித்து, தென் இலங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினால் உப்பளம் அமைக்கும் பணி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அப்பகுதி விவசாய நிலங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதைக் குறிப்பிட்டு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த முயற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு வரும் வயல்வெளிகள் உப்பளமாக மாற்றப்படுமானால், எதிர்காலத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் உவர்நிலங்களாக மாறும் அபாயம் இருப்பதாகக் கவலை வெளியிட்டனர். மேலும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். https://web.facebook.com/share/v/19Qg4Wn8oP/ விவசாய நிலத்தில் உப்பளம் அமைக்க அரசு எவ்வாறு அனுமதி கொடுத்தது?
  10. சினிமா பாடல் இலக்கியமா அல்லது இலக்கியம் இல்லையா என்பதை கேட்பதைவிடுத்து யார் யாருக்கு ஞானபீடம் வேண்டும் என வினவுங்கள். அவர்களுக்கு வைரமுத்து ஞானபீடத்தை பெற்றதனால் ஏற்பட்ட கடி, சொறி, சிரங்கு உட்பட எல்லா உபாதைகளும் பறந்துவிடும்.
  11. இல்லை கோஷான். பாரதியின் எழுத்தும், இவருடைய எழுத்தும் ஒன்றில்லை. அருகில் கூட இல்லை. பாரதியின் ஆன்மாவிலேயே இசையும், தமிழும் இருந்தது. மிகவும் இலகுவான, எல்லோருக்கும் தெரிந்த காக்கைச் சிறகினிலே நந்தலாலா! - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்ற வரிகளுக்கு எந்த இசையும் தேவையில்லை. இந்த வரிகளின் அர்த்தம் புரிவதே ஒரு கவிதையான தருணம். பாரதியாரோ, புதுமைப்பித்தனோ, அசோகமித்திரனோ கவனிக்கப்படாமல் போனதே வரலாற்றில் வந்து போன வைரமுத்துகள் போன்றவர்களாலேயே. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் இருந்த பிணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். அன்று புதுமைப்பித்தனை தமிழ் உலகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் காலத்தால் அழியாமல் நிற்பவர் அவரே. அவருடைய 'சாப விமோசனம்' சிறுகதைக்கு ஈடாக தமிழில் ஒன்று கிடையவே கிடையாது. அசோகமித்திரன் ஏழைப் பிராமணன் ஆகவே இறந்துபோனார். அவருடைய 'புலிக்கலைஞன்' உலக கிளாசிக். ஆனாலும் அவர் வாழும் காலத்தில் இயக்குனர் ஷங்கரும், பாக்யராஜும், ஏ ஆர் முருகதாஸுமே எழுத்தாளர்களாக தமிழ் மக்களுக்கு தெரிந்தார்கள். அதை தாண்டினால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் போன்றோர். இதுவே தமிழ் சமுதாயம் அன்றும், இன்றும். வைரமுத்துவின் திகட்டும் வர்ணனைகளுடனான வானம்பாடிப் பாடல்கள் இன்னும் சில வருடங்களிலேயே மறைந்துவிடும். எம் ஜிஆரின் நடிப்பு போல, ரஜனியின் ஸ்டைல் போல, விஜய்யின் டான்ஸ் போல. இந்த உலகம் இருக்கும் வரை நவீன தமிழின் தலைமகனாக பாரதி இருப்பார். வைரமுத்துவோ அவருடைய பாடல்களோ இருக்காது. சரஸ்வதியே இறங்கி வந்து தான் இதை எழுதியிருக்க வேண்டும்: காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ கனலிலே சுடுவ தென்னே?கண்ண பெருமானே! சேற்றிலே குழம்ப லென்னே?கண்ண பெருமானே-நீ திக்கிலே தெளிந்த தென்னே?கண்ண பெருமானே! பாரதிக்கு ஈடு இணையே கிடையாது, கோஷான்...................
  12. துவிச்சக்கர வண்டியில் மட்டும் அல்ல வீதி ஓரமாக நடந்து சென்ற வயோதிபர் ஒருவரை இருமுறை வேகமாக சென்ற இருசக்கர இயந்திர வாகனங்கள் இடித்ததை நண்பர் ஒருவர் சொல்ல கேள்விப்பட்டேன். வெளிநாட்டு பணம், என்னத்தை சொல்ல? வெள்ளி அல்லது திங்கள் விடுமுறை என்றால் கொழும்பில் வசதி வாய்ப்போடு இருப்பவர்கள் சிலவேளை 3 நாள் விடுமுறைக்கு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்ல முயல்வார்கள். இவர்களால் எரிபொருள் பயன்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும்.
  13. தம்பர் சமாதான விரும்பி என நம்மில் சிலர் தலைகுத்தனமாக கணித்தது போல்… ஈரான் அடித்தவுடன் அடங்கி விடும் என தம்பர் தப்பாக கணித்துள்ளார்.
  14. ஆம்…ஆனால் நோபல் கமிட்டி விருதை கொடுத்தது. சொல்லப்பட்ட காரணம் இசையை நீக்கி விட்டு பார்த்தாலும் ஒரு song writer ஆக அவரின் எழுத்துக்கள் இலக்கிய தரத்தை எட்டின என்பதே. எனக்கு பட்டுகோட்டையின் பாட்டு இந்த வகை. ஞானபீடத்துக்கு வைரமுத்துவின் பாடல்கள். இங்கே பொயிண்ட் என்னவென்றால் - 5 முட்டை, அரை கிலோ மா, 250 கிராம் சீனி போட்டு நன்றாக அடித்து, 20 நிமிடம், 175 பாகை போறணையில் வெந்து வருவது மட்டுமே உணவு (இலக்கியம்) என யாரும் சொல்ல முடியாது. வயிற்று பசி ஆற்றுவது எல்லாமும் உணவே. ஆன்மாவின் பசி ஆற்றுவது எல்லாமும் இலக்கியமே. பவுடர் டப்பாவை சின்மயி சர்ச்சை நேரம் நான் போட்டு தாக்கியதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இவர் ஒரு பழத்தட்டு மனிதர் என்பதை யாழில் இவர் முள்ளிவாய்க்கால் கவிதை எழுதியதற்கு பதிலாக நானே கவிதை போல ஒன்றை எழுதி சொல்லி இருந்தேன். இவர் இதை “பெரும்பாடு” பட்டு வாங்கி இருப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை. ஆனால் அதுதான் இந்தியா - எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா, ரஜனிக்கு தாதா சாகேப், இளையராஜாவுக்கு பதம் விருது, சொல்லி கொண்டே போகலாம். இல்லை டிலனுக்கு எழுத்துக்குத்தான் கிடைத்தது இசைக்கு அல்ல என நினைக்கிறேன். அவர் இறந்து பலகாலமாக பாரதி எழுதியதை கூட அன்றைய புளித்த மாவுகள் இலக்கியம் என ஏற்கவில்லை. பாரதி உண்மையில் ஒரு singer-song writer தான். அவரின் புத்தகத்தை, கைஎழுத்து பிரதியை பார்த்தால் தெரியும், ஒவ்வொரு கவிதைக்கும் அவரே தாளம் என்ன, ராகம் என்ன என மெட்டும் போட்டிருப்பார். பவுடர் டப்பாவுடன் பாரதியை ஒப்பிடவில்லை. ஆனால் எழுத்து வகை என பார்த்தால் இரண்டும் ஒன்றே. பாரதி இசையையும் தானே அமைத்தார். பவுடர் டப்பா - இன்னொருவர் இசைக்கு எழுதினார்.
  15. Yesterday
  16. இதை மேற்கோள் காட்டப் போகின்றவர் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்............🤣. சமீப காலங்களில் கொடுக்கப்பட்ட நோபல் இலக்கிய விருதுகளில் இரண்டு மிக விமர்சனத்திற்கு உட்பட்டன. ஒன்று இது, மற்றொன்று ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வந்த விமர்சனங்களின் சாரம் ஞாபகம் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக Bob Dylon நோபல் விருதை வாங்கப் போகக் கூடவில்லை.................. பழத்தட்டுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்................... Bob Dylon சமனாக தமிழில் ஒருவருக்கு அதி உயர் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றால் அது இளையராஜாவாகத்தான் இருக்கும்...................🫣............ இது கூட அடுத்ததாக நடக்கும்............... பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது பகவான் வந்து காத்தார்................. தமிழ்த்தாயை காக்க பாரதியும், புதுமைப்பித்தனும், சி சு செல்லப்பாவும், ப சிங்காரமும், அசோகமித்திரனும், இன்னும் சிலரும் மீண்டும் மீண்டும் பிறந்து, ஏழ்மையில் உழன்று, வாழும் நாட்களில் எவருக்கும் தெரியாமல் இருந்து, பின்னர் அப்படியே இறந்து போக வேண்டும்.........................😌.
  17. ஐயோ அண்ணை - சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது என்பது இதை அல்ல. ஒரு தொகுதியில் இன்ன சாதி அதிகம் என தெரிந்து அந்த சாதி ஆளை நிறுத்துவது. சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள் Published:26th Oct, 2025 at 11:08 AM தமிழகம் Updated:26th Oct, 2025 at 11:08 AM தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன. இதுபற்றி நம்மிடம் பேசிய நாதக மூத்த நிர்வாகிகள் சிலர், “எந்தத் தொகுதியில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது மற்ற கட்சிகள் கடைபிடிக்கும் உத்தி. அதர பழசான இந்த ஃபார்முலாவை சீமானும் இப்போது கையில் எடுத்திருப்பது தான் வேதனையளிக்கிறது. உதாரணமாக, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோரை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாத ஐயர், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாப்பா உமாநாத், அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் ஆகியோர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களையும் திருவெறும்பூர் மக்கள் ஜெயிக்க வைத்த வரலாறு இருக்கிறது. ‘வரலாற்றைப் படியுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான், இந்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அவரை புரமோட் செய்யும் விதமாக திருவெறும்பூரில் மருது சகோதரர்களுக்கு விழா எடுக்கிறார். ஆக, ‘எங்களது நோக்கம் அரசியல் மாற்றம் அல்ல... அடிப்படை மாற்றம்’ என்று முழங்கி வரும் சீமான், இப்போது அதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்றனர். இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான். தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார். https://www.hindutamil.in/amp/story/story/news/tamilnadu/voters-cast-vote-by-presenting-any-of-12-documents-including-aadhaar இனி என்ன? இந்த பத்திரிகை திமுக விடம் காசு வாங்கி விட்டது - அதானே உங்கள் பதில்😂
  18. சினிமா பாடல் இலக்கியம் அல்ல என்பதை தக்க ஆதாரத்தோடு (அவ்ஶ்ரீ சொன்னார், இவர் சொன்னார் அல்ல) நிறுவுமாறு @கிருபன் ஜி அழைக்கப்படுகிறார். Bob Dylon க்கு ஏன் 2016 க்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது எமது இலக்கிய மேட்டு குடி ஜமீன்களுக்கு தெரியுமா?
  19. உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்க கூடாது என்பதை ஈரான் மரண அடி கொடுத்து நிறைவேற்றிவிட்டது இன்ஷாஅல்லாஹ்
  20. சினிமா பாடல்கள் இலக்கியத்தினுள் வருகின்றது என்பது தெரியாதபடியால் கேட்டு குத்தாட்டம் போட்டுவிட்டார்கள்.
  21. சீமான் சாதி பார்த்து சீட்டு கொடுத்ததாக சொல்லவில்லை. செய்ததாகவும் தெரியவில்லை. அந்தந்த சாதியினர் அதிகம் வாழும் பகுதிகளை கணக்கெடுத்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் அறியமுடியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடம் கொடுத்தது இவ்வாறு எதிராளிகளால் புனையப்படுகிறது. நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அனைத்து தமிழர்களும் சாதி மத வேறுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பாக தான் பார்க்கப்படுகிறது.
  22. எந்தக்கட்சி. யாரை. வேட்ப்பளாராக. நியமித்தாலும். ஏதோ. ஒரு. சாதியைச்சேர்ந்தவர்களாகத் தான். இருப்பார்கள். சாதியற்ற. வேட்ப்பாளரை. பெயரிடுங்கள். பார்ப்போம். முடியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.