stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
போரை விரும்பாத எங்கள் தானை தலைவர் தம்பர்! வாழ்க!😂
-
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
ஈரான் ஹோர்மூஸ் கடல்வழி பாதையில் கண்ணி வெடிகள் வைத்தால் , ஈரான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அழிவை எதிர்கொள்ளும் : ட்ரம்ப் ! அதாவது அணுகுண்டு தாக்குதல் கூட நடத்துவோம் என்று மறைமுகமாக சொல்றார். அதுசரி , ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்தினீங்க? ட்ரம்ப்: அது வந்து அவங்க அணு ஆயுதம் செய்யுறாங்க . அதனால் சூழல் மாசடைந்து உலகம் பாதிக்கப்படும் அதுதான். இந்த உலகம் விசித்திரமானது ! இந்த ஐ.நா சபையில் சிறுவர்களுக்கு என்று ஏதோ ஒரு பிரிவு இருக்குதே , அது ஈரானில் ஒரு பாடசாலையில் அத்தனை மாணவிகள் உயிரிழந்ததுக்கு ஏதாவது கருத்து சொல்லிச்சா ? இந்த உலகம் விசித்திரமானது! அமெரிக்காவை நம்பியதற்கு மத்தியகிழக்கு நாடுகள் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாலும் , அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது கூறினார்களா ? அவர்கள் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க ரெடி . ஆனால் ஈரான் முன்னேறி விடக்கூடாது . காரணம் மத்திய கிழக்கில் புத்தி ஜீவிகளை அதிகம் கொண்ட நாடு ஈரான். குழப்பங்கள் அதிகம் ஏற்படாமல் விட்டால் , ஈரான் அறிவியலில் தங்களை வென்று விடுவார்கள் என்ற பயம் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அப்படி ஈரான் முன்னேற கூடாது என்று ஏன் நினைக்கிறார் என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதை சொன்னால் இந்த பதிவை மடை மாற்றி விடுவார்கள். இப்போதைய நிலையில் நாம் தனிப்பட்ட நபர்களாக நம்மை பார்த்துக்கொள்வதும் , பெற்றோல் புல் டேங் அடித்து வைப்பதும் , சாப்பாடு தட்டுப்பாடு வந்தால் சமாளிக்கூடிய அளவு ஏற்பாடு செய்து வைப்பதுமே செய்யக்கூடியவை. செய்திகள் வாசிக்கும் , தொகுக்கும் ஆர்வம் காரணமாக இரு பக்க செய்திகளை ஆராய்ந்து போலி செய்திகளை ஒதுக்கி உண்மையான செய்திகளை எழுதினால் சண்டைக்கு வருகிறார்கள். நேற்று அப்படி சண்டை பிடித்த ஏராளமானோரை ப்ளொக் பண்ணினேன். அதற்கு முன் அவர்களின் புரோபைலை பார்த்தால் அநேகமானோர் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்வோர். ஈரான் அடிக்கும் குண்டு அவர்கள் தலைமீது விழுந்து விடுமோ என்று ஊரில் உள்ள அவர்கள் வீட்டில் குடும்பத்தார் பயந்துகொண்டு இருப்பார்கள். அவர்களால் வெளிப்படையாக அவர்கள் வாழும் நாட்டை திட்ட முடியாது. அந்த ஆதங்கத்தை என்னைப் போன்றோரை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த யுத்தத்தால் , யாராவது வந்து நான் வசிக்கும் இடத்தில் குண்டு போட்டால் மட்டுமே எனக்கு பாதிப்பு வரும். மற்றப்படி எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. பொருட்கள் விலை உயர்வோ , பெற்றோல் விலை உயர்வோ என்னைப் பாதிக்கப்போவதில்லை. ஆனால் சின்ன விலை உயர்வைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத பெருமளவு மக்கள் தொகை உள்ளது. உலகம் பூராக அப்படியொரு மக்கள் கூட்டம் உள்ளது. அந்த வீட்டு பிள்ளைகளை நினைத்தால்தான் பாவம். யுத்தம் காரணமாக அமெரிக்கா பிள்ளை இறக்காது. இஸ்ரேல் மீது எத்தனை குண்டு போட்டாலும் , அந்த நாட்டு பிள்ளைகள் நிலக்கீழ் அறையில் பாதுகாப்பாக இருக்கும். இந்த யுத்தத்தில் ஈரான் எவ்வளவு பதிலடி கொடுத்தாலும் இஸ்ரேலில் ஒரு குழந்தையாவது இறந்ததா ? ஆனால் ஈரானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளாவது இறந்திருக்கும். காசாவில் எத்தனை குழந்தைகள் இறந்தன? ஒரு காலத்தில் யுத்தம் என்றால் யுத்தப் பிரகடனம் செய்து குழந்தைகள் , முதியோர்களை எல்லாம் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்துதான் யுத்தம் நடக்கும்..அரச காலத்தில் இருந்த அந்த நாகரீகம் கூட இப்போது இல்லை. இதையெல்லாம் நாம் மாற்ற முடியாது. உலகத்தின் நியதி இதுதான். அமெரிக்கா அடி வாங்குது , இஸ்ரேல் அடிவாங்குது என்று சந்தோசப்பட என்னால் முடியாததுக்கு காரணம் அதுதான். மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் தாக்குதலால் வந்த இழப்பு அந்த நாட்டு தலைவர்கள் , அரசர்களின் பொக்கட் மணி. அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் செலவு என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2200 பில்லியன். அதாவது அமெரிக்காவின் பத்து பணக்காரர்களின் பொருளாதார பலம் இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 25 மடங்கு அதிகம். இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை திருப்பி அடிக்க பயமென்றால் ஆட்சியை என்னிடம் தாருங்கள் என்று சஜித் காமெடி பண்ணிட்டு இருக்கார். நாமும் அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் நட்டம் என்று சந்தோசப் பட்டுடுட்டு இருக்கம். யுத்தம் முடிய ட்ரம்ப் வந்து இலங்கை பொருட்களுக்கு இறக்குமதி வரியை கூட்டப் போறேன் என்றால் , உங்கட வரி காசில் இலங்கை அரசில் இருந்து கொஞ்சம் பேர் போய் ட்ரம்பின் காலில்தான் விழனும் -whatsapp-
-
மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி
நான் அறிந்த வரையில் இரு பெரு மதங்கள் உருவாகிய பூமியில் என்றும் கலவரமும் இரத்தக்களரியும் தான்.....
-
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
ஹலோ ஸ்ரீலங்கா....... கிந்தியா இருக்க பயமேன் 🤣
-
'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து
மணி. இதைத்தான் கழுத்து பிடி என்பது. இதைத்தான் சொல்வது இருந்ததையும் கெடுத்தானாம் ஆண்டி என்று. ஏற்கனவே கொரோனா,உக்ரேன் போர் என்பவனவற்றால் பாரிய சறுக்கல்.இப்போது இது புதிய பிரச்சனை. இந்த மேற்குலகு 50 வருடங்களுக்கு முன்னர் தாம் இருந்த நினைப்பில் இன்றும் இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அடிமையாக்கப்பட்டவர்களோ அசுர வேகத்தில் வளர்ந்து தம்மை எதிர்ப்பவர்களை திருப்பி தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரானின் பூகோளம் நன்றாகவே அவர்களுக்கு கை கொடுக்கின்றது. சிந்திக்க தவறியது அவசர புத்தி. இன்றைய அவசர வெற்றி நாளைய அழிவிற்கு சமம். இதுதான் இன்றைய உலகில் நடக்கின்றது.
- Today
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
வட பகுதியில் போதை பிரச்சனைகள் வர முன்பே இப்படி குடும்பத்துக்குள்ளான பிரச்சனைகளும்,வெட்டுக்கொத்துகளும்,கொலைகளும் நடந்துள்ளன. பிள்ளைகள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் போன பின்...... அவர்களாச்சு அவர்கள் குடும்பமாச்சு என தாய் தகப்பன் வாயை மூடிக்கொண்டு இருக்கணும். பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைக்குள் தாய் தகப்பன் மூக்கை நுழைத்து நாட்டாண்மை பண்ணக்கூடாது.
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
என்றும் எதிலும் எங்கும்... போர் எனும் கிடாரத்தை தலையில்.. தூக்கி வைத்துக்கொண்டு.. தாம் அறிவாளிகள் என்பர்- தாம் விஞ்ஞானிகள் என்பர்- தாம் அதை கண்டு பிடித்தோம் என்பர்- தாம் இதை கண்டு பிடித்தாம் என்பர்- தாம் எல்லூருடனும் நேயம் மிக்கவர் என்பர்- தாம் மனித நேயம் கொண்டவர்கள் என்பர்- தாம் பட்டினிக்கு உணவு கொடுக்கின்றோம் என்பர்- நெஞ்சில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு.......
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இன்றைய அரசியல் உலகில் உண்மைகளையும், தோல்விகளையும் வெளிப்படையாக கூறும் போது அதியுச்ச கோபம் வருகின்றது. Jeffrey Epstein பற்றிய பேச்சுக்களும் குற்றச்சாட்டுகளும் அது சம்பந்தப்பட்டோரின் அறிக்கைகள் வெளி வரும்போதே இல்லாதது பொல்லாதது நடக்கப்போகின்றது என நினைத்திருந்தேன். ஒரு கோட்டுக்கு முன் இன்னொரு பெரிய கோட்டை கீறிவிடும் தந்திரம் அவர்களுக்கே உரியது.
- நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
பொய் சொல்வதில் தம்பருக்கு நிகர் தம்பர்தான்.போரின் முதல்நாளே ஈரானின் தலைவரைப் போட்டவுடன் போர் முடியும் என்று சம்பிய அமெரிக்காவும் இஸ்ரேலும் 12 நாட்களாக தலைவன் இல்லாத நாட்டை அடக்க முடியாமல் படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்காவை நம்பிய அரபுநாடுகள் தேவையில்லாமல் அடிவாங்குகின்றன.இஸ்ரேலும் அடிவாங்குவதும் அடி கொடுப்பதுமாக இருக்கிறது.இரானுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை .அவர்கள் எந்த எல்லை வரையும் போவார்கள். அமெரிக்கா இந்தப் பேரில் பெரிய பொருளாதார இழப்பைச் சந்ததித்ததுடன் உக்கிரைனிடம் உதவி கேட்கும் நிலைக்குப் போய்விட்டது. எண்ணை விலை அப்பொழுது உச்சத்துக்குப் போய்விட்டது. இன்னும் போர்நீடித்தால் கொரோனா போன்ற முடக்கநிலை ஏற்பட வாய்ப்புண்டு. எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக விநியோகச்சங்கிலி தாறுமாறாகப் பாதிக்கப்படப் போகின்றது.புட்டினும. இப்பொழுது கொடுக்கின்ற எண்ணெய் வழங்கலை தடுக்கப் போவதாக வேறு மிரட்டுகிறார்.. தம்பர் வெனிசுலாவைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் அவருக்கு எண்ணெய் பற்றிக் கவலை இல்லை.ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். மக்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை வரும்.பொருட்களின் விலை கட்டுப்பாடுகளின்றி அதிகரிக்கும்.சீனாவுக்கு இது பெரிய பாதிப்பைக் கொடுக்கலாம். சீனா அதற்காக இந்த முட்டுக்கட்டையை உடைப்பதற்கான நகர்வுகளைச் செய்ய வேண்டி வரலாம். அதனை ஈரானுக்குடாகவும் செய்ய முயற்சிக்கலாம். போர் அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி போகவில்லை. அமெரிக்கா அணுக்குண்டை வீசினாலும் ஆர்சரிப்படுவதற்கில்லை.இப்போதைக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்.
-
அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர்
இந்தியாவை சேர்த்துக்கொண்டு தமிழ் மக்களை கொன்று குவிக்கும்போது இந்தபிக்குவுக்கு அது புரியவில்லையோ? தங்கள் அலுவல் முடிந்தவுடன் இவர்களும் முதுகில் குத்துபவர்கள்தான். இவர், சிறையில் போலீசார் தன்னை காவி கலைய தாக்கினர் என்று அபாண்டமாக பொய் சொன்னவரல்லவா? நாட்டில் கலகத்தை உருவாக்குபவர் எல்லாம் நாட்டின் நலன் பற்றி எச்சரிக்கிறாராம்.
-
என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த
பதில் சொல்ல பயம், பயம். அவரே எப்போ கைது செய்யப்படுவோம் எனத்தெரியாமல் முழிக்கிறார். இதில ஊடகங்கள் வேறு.
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஏன் இந்தக் கஞ்சத் தனம்? "பீல்டு மார்ஷல்", "வைஸ் அட்மிரல்", "எயார் கொமடோர்" என்று உச்சத்தில் இருந்து கொடுக்காமல் கீழ இருந்து குடுக்கிறியள் பட்டம்😂?- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானின் அணு நிலைகள் மீது தாக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை. இப்போரினை முடிவிற்குக் கொண்டுவருமுன்னர் அவற்றினையாவது அழித்தால் சிறிது காலத்திற்காவது நிம்மதியாய் இருக்கலாம். அதுகூட இல்லையென்றால், இவ்வளவு பொருட்செலவுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கமெய்னி எலி கொல்லப்பட்டதைத் தவிர வேறு நல்விடயங்கள் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரஸ்ஸியாவும் சீனாவும் ஈரானின் எண்ணெய்க்காகவே இப்போரில் அழிக்கப்பட்ட ஈரானிய ஆயுதங்களை புதுப்பித்துக் கொடுக்கும் என்று நம்பலாம். இஸ்லாமிய அடிப்படைவாத கொடுங்கோலாட்சியை அகற்றுதல் அணுவாயுத உற்பத்தியை தடுத்து நிறுத்தல் சர்வதேசப் பயங்கரவாதிகளுக்கான உதவியை நிறுத்தல் நீண்டதூர ஏவுகணை உற்பத்தியை நிறுத்தல் என்று இவை எதுவுமே இன்னமும் நடைபெறவில்லை. பார்க்கலாம், இஸ்ரேல் இருக்கிறது!- ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை Published By: Vishnu 12 Mar, 2026 | 10:10 PM வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின் இணையனுசரணையுடன் பஹ்ரைனால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம், பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 13 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. பாதுகாப்புச்சபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான், கட்டார், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள்மீது ஈரான் நடாத்திவரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் ஈரானின் எந்தவொரு செயலையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடாத்திவரும் தொடர் தாக்குதல்களுக்குமான பதில் நடவடிக்கையாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத்தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய ஐ.நாவுக்கான பஹ்ரைன் தூதுவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெறும் பிராந்திய விவகாரம் மாத்திரமல்ல எனவும், மாறாக அது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நேரடித் தொடர்புடைய சர்வதேசப் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இந்தத் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துரைத்திருக்கும் ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டுவரும் அப்பட்டமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை இத்தீர்மானம் திட்டமிட்டு மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/240830- 'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து
அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை Published By: Vishnu 12 Mar, 2026 | 08:11 PM ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையிலிருந்து தாக்குதல்கள் தொடரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/240824- உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா Published By: Digital Desk 3 12 Mar, 2026 | 04:16 PM உலகின் மிக வலிமையானதாகக் கருதப்படும் T1200 தரத்திலான அதி உயர் வலிமை கொண்ட கார்பன் ஃபைபரை (Ultra-high-strength carbon fiber) சீனா புதன்கிழமை (மார்ச் 11 ) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன பொருள் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முன்னேற்றத் துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த T1200 கார்பன் ஃபைபர் பொருளை China National Building Material Group என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனம் சுயமாக உருவாக்கியுள்ளது. தற்போது இது தொழில்துறை உற்பத்திக்குள் நுழைந்துள்ளதுடன், ஆண்டுக்கு தொன் கணக்கில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வலிமை நிலைக்கு உரிய கார்பன் ஃபைபரை பெருமளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் நாடாக சீனா மாறியுள்ளது. இந்த கார்பன் ஃபைபர் மிகவும் இலகுவானதுடன் அதீத வலிமையும் கொண்டதாக உள்ளது. இதன் விட்டம் மனித தலைமுடியின் விட்டத்தை விட பத்தில் ஒரு பகுதியை விட குறைவானதாக காணப்படுகிறது. மேலும், இதன் அடர்த்தி எஃகின் ( உலோகக் கலவை )அடர்த்தியின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே ஆகும். ஆனால் இதன் இழுவை வலிமை (tensile strength) எஃகை விட சுமார் 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய பொருள் விண்வெளி தொழில்நுட்பம், குறைந்த உயர விமான சேவை (low-altitude aviation), மனித வடிவ ரோபோட்கள் (humanoid robotics) உள்ளிட்ட பல மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சீனா இதற்கு முன்பு T300 முதல் T1000 வரையிலான பல தரங்களில் கார்பன் ஃபைபரை உருவாக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் முன்னையதை விட அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள T1200 தரம், அந்த முன்னேற்றப் பயணத்தின் சமீபத்திய மற்றும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இதில் “1200” என்ற எண், அந்த ஃபைபரின் வலிமை நிலையை குறிக்கிறது. கார்பன் ஃபைபர் கலவைகள் (carbon fiber composites) மிகவும் உயர்ந்த வலிமை-எடை விகிதம் கொண்டதால், விண்கலங்களின் கட்டமைப்புப் பொருளாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. சீனாவின் வர்த்தக விண்வெளி நிறுவனம் Welight Technology உருவாக்கிய “Weiguang-1” என்ற திரவ ரொக்கெட்டின் உடல் அமைப்பில் சுமார் 90 சதவீதம் கார்பன் ஃபைபர் கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பாரம்பரிய உலோக வடிவமைப்புகளை ஒப்பிடுகையில் ரொக்கெட்டின் எடை 25 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. விண்கலங்களின் எடையை குறைப்பது, வணிக விண்வெளித் துறையில் ஏவுதலுக்கான செலவைக் குறைக்கும் முக்கியமான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பெரிய அளவில் செயற்கைக்கோள் கூட்டங்களை (satellite constellations) விண்வெளியில் அமைக்கும் முயற்சிகளில் இலகுவான மற்றும் வலிமையான பொருட்களின் பயன்பாடு மிக முக்கிய பங்காற்றுகிறது. புதிய T1200 கார்பன் ஃபைபர் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் சீனாவின் விண்வெளி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் புதிய முன்னேற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240802- ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ' தொழில்நுட்பம்: அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தகவல்
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ' தொழில்நுட்பம்: அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தகவல் 12 Mar, 2026 | 04:35 PM ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்கும் போது, நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் அறிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொழில்நுட்பத்தின் ஊடாக மிகப்பாரிய அளவிலான தரவுகளை மிகக்குறுகிய காலத்தில் ஆராய்ந்து, இலக்குகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும் எனவும்,முன்னர் மணித்தியாலக்கணக்கில் எடுக்கப்பட்ட இராணுவச் செயற்பாட்டு நடைமுறைகளை, தற்போது சில வினாடிகளுக்குள் நிறைவு செய்யக்கூடியதான நன்மைகள் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னர் மணித்தியாலக்கணக்கில் எடுக்கப்பட்ட இராணுவச் செயற்பாட்டு நடைமுறைகளை, தற்போது சில வினாடிகளுக்குள் நிறைவு செய்யக்கூடியதாக உள்ளது. தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேற்றமடைந்திருந்தாலும், தாக்குதல் நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எப்போதும் மனிதர்களாலேயே எடுக்கப்படுவதாக அட்மிரல் பிராட் கூப்பர் இதன்போது உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், அமெரிக்காவின் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/240801- எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் - தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?
எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் - தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் "எங்களுக்கு கழிவறைக்குக் கூட செல்ல கூட முடியாத நிலை உள்ளது"- கூட்டம் கூட்டமாக பெட்ரோல் பங்கை நாடி வரும் மக்களுக்கு இடையே பணியாற்றி வரும் பெட்ரோல் நிலைய பணியாளர் ஆஷாவின் வார்த்தைகள் இவை. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், உலக அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதன் அதிர்வலைகள் இப்போது தமிழகத்தின் வீதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. பட மூலாதாரம்,Getty Images உண்மையிலேயே பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், "வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை காட்டிலும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் வழங்குவதில் முன்னுரிமை தருகிறோம்" என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் 'மூன்று நாட்களில் பெட்ரோல் தட்டுப்பாடு' என்ற சமூக வலைதள செய்தி மக்களை வீதிக்கு வர வைத்துள்ளது. கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்ற சமூக ஊடக பதிவுகள் தலை தூக்கின. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல், விற்பனை நிலையங்களில் மக்களை வரிசை கட்டி நிற்க வைத்துள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு மக்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்புகின்றனர். அகில இந்திய அளவில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி கூறியுள்ளார். படக்குறிப்பு,'பெரும்பாலானோர் கேன்களில் பெட்ரோல் வாங்குவதுதான் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்' என்கிறார் பிரகாஷ். பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் சொல்வது என்ன? ''கேன்களில் எரிபொருள் நிரப்புவர்களால் பல கி.மீ தூரம் பயணித்தும் எங்களுக்கு பெட்ரோல் கிடைப்பதில்லை'' என்கிறார் வரிசையில் நின்றிருந்த பிரகாஷ். பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "மடிப்பாக்கத்தில் இருந்து பெட்ரோலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், எங்கு பார்த்தாலும் பெட்ரோல் இல்லையென விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது, இறுதியாக மீனம்பாக்கத்தில் வந்து பெட்ரோல் நிரப்பினேன். பெரும்பாலானோர் கேன்களில் பெட்ரோல் வாங்குவதுதான் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்" என்கிறார். "எங்கள் வாழ்வாதாரமே வாகனங்களை நம்பிதான் உள்ளது, டீசல் இல்லையென்றால் எங்கள் பிழைப்பு நடக்காது. நாங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய டீசல் வாங்கவில்லை, எங்கள் தேவைக்கு இருப்பு வைக்கவே வாங்குகிறோம்" என்கிறார் சரக்கு வாகனம் ஓட்டும் ரவிச்சந்திரன் "இந்த தேவையற்ற அச்சம் என் பணியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார் டெலிவரி வேலை செய்யும் கெளதம். "டெலிவரி வேலை செய்வதால் எனக்கு நேரம் மிகவும் முக்கியம், தினமும் 5 நிமிடத்தில் பெட்ரோல் போடுவேன், ஆனால் இன்று ஒரு மணி நேரம் ஆனது" என்றார். "அதிக நேரத்தை பெட்ரோல் போட செலவழித்துவிட்டேன், டெலிவரி செய்யும் இடத்தில் என் மேல் கோபப்படுவார்கள்" என்கிறார் கெளதம். அதே நேரத்தில் "பெட்ரோல் தட்டுப்பாடு ஒரு வதந்தி மட்டுமே, தானாகவே இது சரியாகிவிடும்" என்கிறார் நிதித்துறையில் பணியாற்றும் திவ்யேஷ். ' யாரும் பேசுவதில்லை' "பெட்ரோல் பங்குகளை நாடி வருவோரை பற்றி மட்டுமே பேசுவோர் எங்கள் துயரை கண்டுகொள்வதில்லை" என்கிறார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் குமுதா. "இதுபோன்ற நாட்களில் அமர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை" என்றார் அவர். "கழிவறை செல்லக்கூட நேரம் கிடைப்பதில்லை" என்கிறார் மற்றொரு பணியாளர் ஆஷா. "வழக்கத்தை விட ஐந்து மடங்கு கூட்டம் வருகிறது, வருபவர்கள் அனைவரும் டேங்க் புல்லாக நிரப்ப சொல்கிறார்கள், நகர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை" என அவர் கூறினார். அரசும் எண்ணெய் நிறுவனங்களும் என்ன சொல்கின்றன? மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் தரவுகளின்படி, இந்தியாவில் 42 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் 3 கோடியே 35 லட்சம் வாகனங்கள். நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி "பெட்ரோல் இருப்பில் எந்த குறையும் இல்லை" என விளக்கமளித்துள்ளார். "நாட்டுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது" என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் திடீரென ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த பீதி அவசியமற்றது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் "பெட்ரோல் டீசல் போதுமான அளவு கிடைப்பதுடன் விநியோகமும் சீராக உள்ளது, வதந்திகளில் யாரும் கவனம் செலுத்த வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தது. பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் டீலர் அரசன், "மக்கள் பதற்றமடையும் அளவுக்கு இங்கு எதுவும் நடக்கவில்லை, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எப்போதும் போல பெட்ரோல் டீசல் வந்துக் கொண்டிருக்கிறது" என்றார். "இந்த திடீர் வதந்தியால் எரிபொருள் தேவை இரட்டிப்பாகியுள்ளது அதையும் நிறுவனத்திடம் இருந்து பெற்று மக்களுக்கு வழங்கி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும் தேவைக்கு மட்டும் எரிபொருளை மக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கேன்களில் பெட்ரோல் டீசல் நிரப்புவது குறித்து விளக்கமளித்த அவர், "கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற விதி ஏற்கனவே அமலில் இருப்பதால் அதனை நாங்கள் பின்பற்றி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj98xj22pjjo- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்கிற அழுத்தம் ட்ரம்பின் மேல் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது. உயர்ந்து செல்லும் மசகு எண்ணெயின் விலை, அது உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம், ஹோர்முஸ் நீரிணையினை ஈரான் தனது சகட்டுமேனித் தாக்குதல்கள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை என்பன எல்லாம் சேர்ந்து ட்ரம்பை யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பதாகவே தெரிகிறது. இஸ்ரேல் போர் தொடரப்பட்டு, ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் அரசு கவிழும் வரை நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினாலும், அமெரிக்கா இதிலிருந்து விலகுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உலக பொருளாதாரம், அமெரிக்கா மீதான அழுத்தம், இஸ்ரேலின் விருப்பு என்பவற்றிற்கு அப்பால் இப்போர் முடிவேதுமின்றி நிறுத்தப்பட்டால் கடுமையாகப் பாதிக்கப்படப்போகும் மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதுதான் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் ஆட்சியை அகற்றவேண்டி விரும்பிய, போராடிய, அமெரிக்க - இஸ்ரேல் நடவடிக்கைக்கு ஆதரவாக நின்ற ஈரானிய மக்கள். நேற்றிலிருந்து ஈரானிய அரச தொலைக்காட்சி சில நபர்களைத் தொடர்ச்சியாக பேட்டி கண்டு வெளியிட்டு வருகின்றன. ஈரானிய காவல்த்துறை அதிகாரிகள், இராணுவ தளபதிகள், சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் என்று பலர் இதில் அடக்கம். அவர்கள் எல்லோரும் கூறும் செய்தி இதுதான், "எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போரும் எதிரிகளே, ஆகவே அழிக்கப்படுவீர்கள். எமது வீரர்கள் துப்பாக்கிகளின் விசை அழுத்தியில் விரலை வைத்திருக்கிறார்கள், எந்நேரத்திலும் அவர்கள் உங்களைச் சுட்டுக் கொல்லத் தயங்கப்போவதில்லை, அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் ஆதரவாக நிற்பவர்களை அடையாளம் கண்டு கொல்லப்போகிறோம், அவர்கள் உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளியுலகில் இருந்தாலும் சரி, அவர்களின் சொத்துக்களை நாம் கையகப்படுத்துவோம், உங்களின் தாய்மார்களை உங்களின் மரணத்திற்காக வருந்தச் செய்வோம், தயவுதாட்சண்யம் இன்றிக் கொல்வோம்...." இப்படி ஏகப்பட்ட அச்சுருத்தல்களை அரச தொலைக்காட்சியில் மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இந்த நிலையில், அமெரிக்கா போரை நிறுத்துவதால் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் கொடுங்கோலாட்சி நீடிக்கப்பட வாய்ப்புக்கள் பிறந்திருக்கின்றன. தமது அரசு கவிழப்போவதில்லை எனும் மமதையில் இந்த அச்சுருத்தல்களை கொடுங்கோலாட்சியாளர்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மாபெரும் மக்கள் படுகொலை அரங்கேரவிருக்கிறது. ஆனாலும் என்ன, அமெரிக்கா இடைநடுவே கையைக் கழுவிவிட்டாலும்கூட, தனது இருப்பிற்காகத் தொடர்ச்சியாகப் போராடிவரும் இஸ்ரேல் நிச்சயம் ஈரானின் முல்லாக்கள் மீது தனது கவனத்தை வைத்திருக்கும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் முல்லாக்களின் தலைமையினைக் குறிவைத்து அழிக்கும் என்பதை நம்பலாம்.- அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர்
அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர் 12 Mar, 2026 | 05:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையே அநுர குமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தர். திருகோணமலை பெளத்த விகாரை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை மின்சாரசபை சில தினங்களுக்கு முன்னர் இறுதிப்பயணம் சென்றது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இணைந்து மின்சாரசபையை.இல்லாமலாக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தபோது, மின்சார சபை சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து 2024 ஜுன் மாதம் 6ஆம் திகதி நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின்போது என்னை பாராளுமன்றத்துக்கு முன்னால் கைதுசெய்தார்கள். அதனால் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வளம் ஒன்றை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. நாடொன்றின் மின்சார சபையானது உயிர் நாடியாகும். அதனை நூறுவீதம் தனியார் மயப்படுத்துவதற்கு தேரர்கள் என்றவகையில் நாங்கள் எதிர்ப்பு. தனியார் பயப்படுத்துவதாக இருந்தால் அதிக பங்குகளை அரசாங்கத்தின் கீழ் வைத்துக்கொண்டே வழங்க வேண்டும். தற்போதும் இலங்கை மின்சாரசபையை 6 பகுதிகளாக பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மின்சாரசபை தற்போதும் அரசாங்கத்துக்கு உரித்தானது என அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் இந்த மின்சாரசபை சட்டம் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து வருகிறோம். இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்து எங்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டவர்கள் தற்போது அதிகாரத்துக்கு வந்த பின்னர் அரச வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் நாடு இருக்கும்போது, மக்கள் தொடர்ந்து இதனை பார்த்துக்கொண்டிருக்கிறதா என மக்களை கேட்கிறோம். குறிப்பாக மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து விற்பனை செய்வதன் மூலம் இவர்கள் இதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு இவ்வாறு மேற்கொள்வதாக தெரிவித்திருப்பதை நாங்கள் நம்பப்போவதில்லை. லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதாக இருந்தால், ஏன் 6 பகுதிகளாக பிரிக்க வேண்டும் என கேட்கிறேம். மேலும் இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் பணம் வழங்கினால் அவர்கள் இவர்களின் பொறியில் சிக்கமாட்டார்களா? அதனால் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கினால், எமது வலுசக்தி துறைக்கு என்ன நடக்கும். ஏனெனில் இவர்களின் நோக்கம் லாபமீட்டுவதாகும். எனவே வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் எரிவாயு, எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னரே மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தினார்கள். அந்த நிலையே அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு தெரிவிக்கிறோம். ஏனெனில் நாடு தற்போது பயணிக்கும் போக்கை பார்க்கும்போது எங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கிறது. 2022 மக்கள் போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூரணப்படுத்தவே வெளிநாட்டு புலனாய்வு சக்திகள் தற்போது செயற்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்தியாவை நம்பினாலும் இலங்கையின் பின்னால் குத்தியே ஈரான் கப்பலை இலங்கைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையை இந்த யுத்தத்துடன் நேரடி மோதலுக்கு இட்டுச்செல்லவே இந்தியா முயற்சித்தது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனாலும் அமெரிக்காவும் ஈரானும் எங்களுடன் வைராக்கித்துடனே இருக்கின்றன. அதனால் அரசாங்கம் உடனடியாக புலனாய்வு துறையை பலப்படுத்தி செயற்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/240813- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுக கூட்டணியில் 2 கட்சிகளின் வருகையால் புது பிரச்னையா? பின்னணி அலசல் பட மூலாதாரம்,@mkstalin/X கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 12 மார்ச் 2026, 14:05 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறுகிறது. ஓர் இடத்தைக் கூடுதலாக ஒதுக்குமாறு கேட்டோம். வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டணிக்குள் புதுவரவான தே.மு.தி.க-வை காரணம் காட்டி தொகுதிகளின் எண்ணிக்கையை தி.மு.க குறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க தலைமை ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நான்கு தொகுதிகளில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் ம.தி.மு.க போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ம.தி.மு.க நிலை என்ன? 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க, இந்தமுறை நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. எண்ணிக்கை குறைந்தது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதனை ''மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளதாக'' கூறினார். "கட்சியின் பதிவைப் பாதுகாத்துக் கொள்வதற்காகு தனிச் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை" என வைகோ தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images 'பா.ஜ.க எதிர்ப்பு... இடங்கள் குறைப்பு' தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் குறைந்தது 2 முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. "ஏன் இவ்வளவு தாமதம்?" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறியுள்ளது. ஆனால், 6 பிளஸ் 1 என்ற அளவில் இடங்களை ஒதுக்குமாறு தெரிவித்துள்ளோம்" என்கிறார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு கூறியதால் ஆறு இடங்களையாவது ஒதுக்குமாறு தங்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "இந்தமுறை ஆறு இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பது கட்சியின் முடிவாக உள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது" எனக் கூறுகிறார் மு.வீரபாண்டியன். தொடர்ந்து அவர் பேசும்போது, "சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் பிரதான நோக்கமாக உள்ளது. அதற்காக ஏற்கெனவே பெற்ற இடங்களைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல எனக் கூறியுள்ளோம்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,PremallathaDmdk/X படக்குறிப்பு,தே.மு.தி.க முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றது. 'இந்தமுறையும் அதே காரணம்' இதேபோன்ற நெருக்கடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கொண்டுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. "கூடுதல் இடங்களை ஒதுக்குவதில் தி.மு.க தரப்பில் உள்ள சிரமங்களைக் கூறினார்கள். புதிய கட்சிகளை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், கடந்தமுறை ஆறு இடங்கள் கொடுத்ததையே கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறிவிட்டோம்" என்கிறார். "2021 சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் ரீதியாக சில காரணங்கள் இருந்ததால் தி.மு.கவிடம் ஆறு இடங்களை பெற்றுக் கொண்டோம்" எனக் கூறும் கனகராஜ், "அதே காரணத்தை இந்த முறை கூறுவதையும் சில காரணங்களைக் காட்டி இடங்களை குறைப்பதும் சரியல்ல எனக் கூறிவிட்டு வந்தோம்" என்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ள உள்ளதாக தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு தங்களிடம் கூறியதாகக் குறிப்பிட்ட கனகராஜ், "வரும் 14 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,@tncpim/X படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. 'மற்றவர்களோடு கணக்கிட வேண்டாம்' தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க, ஆகிய கட்சிகளிடம் இதுவரை தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவற்றில் மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன. வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசியபோது, "2021 சட்டசபைத் தேர்தலில் அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு ஆறு இடங்களை ஏற்றுக் கொண்டோம். இந்தமுறை இதர கட்சிகளுடன் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகளைக் கணக்கிட வேண்டாம் என தி.மு.கவிடம் கூறிவிட்டோம்" என தெரிவித்தார். ஆனால், தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருவதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் முடிவில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் 170 இடங்களில் தி.மு.க போட்டியிட வேண்டும். புதிதாக கட்சிகள் இணைவது கூட்டணிக்குப் பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்து இடங்களை ஒதுக்குகிறோம்" என்கிறார். "கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்படுவது உண்மைதான். அதேநேரம், கூட்டணியில் யாரையும் விட்டுவிடக் கூடாது எனக் கருதுகிறோம். அவரவர் வலிமைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Kamalhaasan/X தொகுதி குறைப்புக்கு தே.மு.தி.க காரணமா? தி.மு.க கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகளைக் காரணம் காட்டி தங்களுக்கான இடங்களைக் குறைப்பதாக, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. "புதிய கட்சிகளுக்கு அதிக இடங்களை தி.மு.க ஒதுக்கினால் நெருடல் ஏற்படும். அப்படியொரு சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தி.மு.க தலைமைக்கு உள்ளது" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். "தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பத்து இடங்களுடன் ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க சீனியர் நிர்வாகிகள் உறுதியளித்ததாக தகவல் வெளியானது. தற்போதைய நிலையில் இந்த எண்ணிக்கை குறையலாம்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். தே.மு.தி.கவுக்கு எட்டு இடங்களை தி.மு.க ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் குபேந்திரன், "தே.மு.தி.கவுக்கு இணையான இடங்களை வி.சி.கவுக்கு ஒதுக்கலாம். ம.தி.மு.கவுக்கு இடங்கள் குறைந்ததுபோல இடதுசாரிக் கட்சிகளின் தொகுதிகளும் குறையலாம்" எனக் கூறுகிறார். தே.மு.தி.கவுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து, டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கூட்டணியில் அதிக இடங்களை தே.மு.தி.க கேட்டுள்ளது. சில திட்டங்களின் அடிப்படையில் அவர்களைச் சேர்த்துள்ளோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தே.மு.தி.க இருந்துள்ளது. அதைக் கணக்கிட்டு நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்" எனக் கூறுகிறார். தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "தற்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார். இலக்கு 200 வியூகம் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லாவிட்டால் இடங்களைக் குறைத்துக் கொள்வதற்கு தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "தி.மு.க கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு வேறு வழியில்லை. வேறு கூட்டணிகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் இல்லை. ராஜ்யசபா சீட் கிடைத்ததால் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துவிட்டது. அதைக் காரணம் காட்டியே பிற கட்சிகளுக்கு இடங்கள் குறைக்கப்படுகின்றன" என்கிறார் ஷ்யாம். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட மூன்று இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசிய ஷ்யாம், "பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதால் 28 இடங்களை தி.மு.க ஒதுக்கியது" எனக் கூறுகிறார். "காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கியதில் தி.மு.கவினரில் பலருக்கும் உடன்பாடு இல்லை" எனக் கூறும் ஷ்யாம், "200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது தி.மு.கவின் இலக்காக உள்ளது." என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15x15jjx95o- இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில் Mar 12, 2026 - 09:47 PM இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் விடுத்த கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தித் தேவைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அமைச்சர் விஜித ஹேரத் கடந்த மார்ச் 06 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் யுத்த நிலைமைத் தொடர்ந்தால், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் அங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன்படி, அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் தமது சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் பாதுகாப்பாகவும் பேணுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmno5yl9000z356pxo6fr5iv - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.