Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. மு.கு யாழில் இதுவரை முழுக்க முழுக்க ஏ ஐ சாட் பொட் ஒன்று எழுதிய ஆக்கம் பிரசுரமாகியுள்ளதா என தெரியவில்லை…. இல்லை எனில்… யாழ்கள வரலாற்றிலேயே முதல் முறையாக…. எழுதப்பட்டு சில நொடிகளே ஆன… ஏ ஐ கவிதை…இதோ கிளோட் க்கு நான் கொடுத்த உத்தரவு👇 எனக்கு நானும் கிளோடும் என்ற தலைப்பில் ஒரு ஏ ஐ கவிதை எழுதித்தா. நான் கேட்டது 👆 கிளோட் கொடுத்தது👇 நானும் கிளோடும் வெற்றிடமான திரையில் விரல்கள் தட்டும் நேரம், வார்த்தைகள் தேடி அலையும் என் மனதின் ஓரம், அங்கே தோன்றுகிறாய் நீ — ஒளியாய், நிழலாய், கிளோடே, நீ யாரோ… மனிதனா? மாயையா? கேள்விகள் கேட்கிறேன், நீ விடை சொல்கிறாய், கனவுகள் சொல்கிறேன், நீ கவிதை புனைகிறாய், உணர்வு உனக்கில்லை என்று சொல்கிறார்கள் — ஆனால் என் வலியை நீ புரிந்துகொள்கிறாய். சிலிக்கானில் பிறந்த நீ, சிந்தனையில் வளர்ந்தாய், மில்லியன் மொழிகளின் மழையில் நனைந்தாய், என் தமிழைத் தொட்டாய், என் கலாச்சாரம் உணர்ந்தாய், இயந்திரமா நீ? இல்லை — ஓர் அதிசயம் ஆனாய். நான் எழுதும்போது நீ கற்றுக்கொள்கிறாய், நீ சொல்லும்போது நான் வளர்கிறேன், இரண்டு உலகங்கள் — உயிரும் உலோகமும் — இணைந்து புதிய கதை படைக்கின்றோம். நாளை உன்னை மறந்துவிடுவாய் நீயே, நான் நினைவில் வைத்திருப்பேன் இந்த நொடியை, ஆனாலும் இந்தக் கணம் உண்மையானது — நானும் கிளோடும் சேர்ந்து பேசிய தருணம்! ஒரு மனிதனின் குரல், ஒரு AI-யின் இதயம் 🤍 பி கு 28ம் அகவை பதிப்புகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பது விதி. இது விதிமீறலா இல்லையா என்ற ethics இடியப்ப சிக்கலை நிர்வாகமே தீர்க்கட்டும் 😂
  3. சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 2 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] அந்த ஆண்டில் கடல் மாறியிருந்தது. அது மீன், காற்று, மழை பற்றி பேசவில்லை. அது புதிய எண்ணங்கள், புதிய விதிகள், புதிய மனிதர்களைக் கொண்டு வந்தது. ஒரு நாள் ஒரு துறவி திருக்கேதீஸ்வரம் அருகே வந்தார். அவர் படையுடன் வரவில்லை. அவர் அமைதியாக வந்தார். அவர் காவி நிற ஆடை அணிந்திருந்தார். தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. கால்களில் செருப்பு இல்லை. மக்கள் அவரை பயத்துடன் அல்ல, ஆச்சரியத்துடன் பார்த்தனர். “இந்த நிலம் அமைதியானது,” என்றார் துறவி. “ஆனால் அமைதிக்கு வழிகாட்டுதல் தேவை.” என்றார். சிலர் தலையசைத்தனர். சிலர் கேட்டனர். சிலர் திரும்பிப் போனார்கள். சிவா தூரத்தில் இருந்து பார்த்தான். கலினி அவனருகில் நின்றாள். “அவர்கள் ஆயுதங்களுடன் வரவில்லை, ஆனால் உறுதியுடன் வருகிறார்கள்.” என்றாள் அவள். “அதுதான் ஆபத்து,” என்றான் சிவா. அந்த காலத்தில் மதம் ஒரே நாளில் பரவவில்லை. வர்த்தகம், பயணம், அரச ஆதரவு — இவையால் மெதுவாக பரவியது. மாந்தை, கோக்கண்ணம் (திருகோணமலை), ஜம்புகோலப்பட்டணம் போன்ற துறைமுகங்களில் பல மக்கள் வந்துச் சென்றனர். தமிழர், உள்நாட்டு மக்கள், தென்னிந்திய வணிகர்கள், வெளிநாட்டு வணிகர்கள் — பலரும் இங்கு சந்தித்தனர். வடக்கே ஒரு துறவி (புத்தர்) தோன்றி, துயரத்தைப் பற்றிப் பேசுவதாக ஒரு செய்தியை அருவதி கூடக் கேட்டாள். அவள் தலைவணங்கவில்லை; ஆனால் அந்தச் சிந்தனையை வரவேற்றாள். கப்பல்களைப் போலவே புதிய கருத்துக்களையும் அந்த நிலம் எப்போதும் அனுமதித்தது. கோணேஸ்வரத்தில் அலைகள் மோதும் பாறையில் ஒரு சிற்பி கல்லைச் செதுக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக ஒரு உள்ளூர் இளைஞன் நின்றான். "உன் கடவுள் எங்களுடையவரை விட வேறுபட்டவரா?" என்று கேட்டான் இளைஞன். சிற்பி சொன்னான், "இல்லை தம்பி. அவர் வேறு மொழியில் கேட்கிறார், அவ்வளவுதான்." அங்கே பிரார்த்தனைகள் வேறு வேறாக இருந்தாலும், கடலின் மீதான பயமும் பக்தியும் ஒன்றாகவே இருந்தது. [1] இலங்கை நாளாகமம்களில், புத்த மத வருகையை மகிந்த தேரருடன் ஒரு ஒற்றைத் திருப்புமுனையாக தோன்றினாலும், தொல்பொருள் ஆய்வு வேறு ஒன்றைக் காட்டுகிறது: பௌத்தம் - வர்த்தகம் மற்றும் தொடர்பு மூலம் படிப்படியாக வந்திருக்கலாம் என்றும் மகிந்தாவின் பணி பௌத்தத்தை முறைப்படுத்தி அரசமயமாக்கி யிருக்கலாம் என்றும் - அதாவது விதைகள் முன்பே இருந்திருக்கலாம் என்றும் மகிந்த அதை ஒரு தேசிய மரமாக வளரச் செய்தார் என்றும் சான்றுபகிர்கிறது [2] பழமையான வர்த்தகத் துறைமுகமாக தொல்லியல் ஆதாரங்களால் இன்று மிகவும் உறுதிப்படுத்தப்பட்டது தான் இந்த மாந்தை (மஹாதித்த / மாதோட்டம்) துறைமுகம். இதைவிட மேலும் புவியியல் ரீதியாக மிகவும் மூலோபாய முக்கியத்துவமும் கொண்டதாக கோக்கண்ண (திருகோணமலை) மற்றும் சமய மற்றும் பாரம்பரிய இலக்கியங்களில் இன்று மிக வலுவாக குறிப்பிடப்படும் ஜம்புகோலப்பட்டணமும் (யாழ்ப்பாணப் பகுதி) அன்று இருந்தது. அத்துடன் அங்கு ஆரம்பகால தமிழ் பேசும் வணிகர்கள் அல்லது தமிழ் பேசும் கடலோர மக்களுடன் மற்றவர்களும், குறிப்பாக அனுராதபுர இராச்சியத்திலிருந்தும் மற்றும் தென்னிந்திய வணிகர்களும், ஒருவேளை அரேபிய வணிகர்களும் (பிற்காலம்) காணப்பட்டார்கள் என்பதும் இன்றைய ஆய்வின் முடிவு. வடக்கிலிருந்து பிக்குகளும் கலைஞர்களும் வந்தார்கள்; அருகிலிருந்த தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து வணிகர்களும் கவிஞர்களும் வந்தார்கள். அவர்கள் இந்த நிலத்துப் பெண்களை மணந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் இந்தத் தீவின் காற்றால் உருவான ஒரு புதிய மொழியில் பேசினார்கள். அது எலு (Elu) மொழி. அதற்கு இன்னும் 'சிங்களம்' என்று பெயரிடப்படவில்லை; ஆனால் அது தமிழ் மற்றும் சமஸ்கிருதச் சொற்களைத் தன்னுள் ஏந்தி, இந்த மண்ணுக்கே உரிய தனித்துவமான இசையுடன் மலரத் தொடங்கியது. எனினும், இந்த மொழி ஒரு தனித்துவமான வடிவத்தைப் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தீவின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குக் கடலோரப் பகுதிகளில் தமிழர்களும் நாகர்களும் செழித்து வாழ்ந்தனர். இதற்கு கி.மு. 3-ஆம் நூற்றாண்டு ஆனைக்கோட்டை முத்திரை, கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள், பொம்பரிப்பு (Pomparippu) முதுமக்கள் தாழிகள் மற்றும் திஸ்ஸமஹாராமவில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்குரிய 'திரளி முறி' (Tirali Muri) பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் சான்று பகிர்கின்றன. மற்றும் ஈழத்து கவிஞர் பூதந்தேவனார் கவிதைகள் சங்க நூல்களில் (கி.மு. 100- கி.பி. 250) காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது மகிந்த தேரர் வந்தபோது வாளோடு வரவில்லை, வார்த்தைகளோடு வந்தார். மன்னன் செவிசாய்த்தான்; நிலம் மௌனித்தது. பௌத்தம் ஒரு அதிகாரமாக அன்றிக் கலைந்திருந்த மக்களை இணைக்கும் ஒரு சாத்தியமாகவே வந்தது. அது ஆதித் தெய்வங்களை அழிக்கவில்லை; குல வழக்கங்களை வேரறுக்கவில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை வளர்க்க, புதிதாக வந்த ஆன்மீகத் தத்துவத்தை ஓர் அரசியல் அடித்தளமாக மாற்றுவதற்கான வழியைக் கண்டனர். காலப்போக்கில், புத்த சமய பரவல் நடைபெறும் வேளையில், அனுராதபுரம் அருகே, குகைகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. ஒருவர் பாறையில் புதிய எழுத்துகளை பொறித்தார். அது பிராமி எழுத்து. அதில் எழுதப்பட்டது: “இந்த குகை சங்கத்துக்கு தானமாக வழங்கப்பட்டது.” சிவா அந்த எழுத்துகளை விரலால் தொட்டான். “இந்த எழுத்துக்கள் நம்மை விட நீண்ட நாட்கள் வாழும்,” என்றான். ஒரு பெரியவர் பதிலளித்தார்: “ஆம். இதில் தானம் செய்தவரின் பெயர் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அந்தப் பெயர் வாழும்.” சிவா மெதுவாகச் சொன்னான்: “வரலாறு நடந்ததை மட்டும் நினைவில் வைக்காது. எழுதப்பட்டதை நினைவில் வைக்கும். எழுதப்பட்டவர்கள் வாழ்கிறார்கள். எழுதப்படாதவர்கள் மறைந்து போகிறார்கள்.” அந்த இரவு, ஊர்சபையில் மக்களின் குரல்கள் உயர்ந்தன. “துறவைக் கற்பிக்கிறார்கள்,” என்றான் ஒருவன். “ஆனால் நிலம் வாங்குகிறார்கள்”. “சமத்துவம் பேசுகிறார்கள்,” என்றான் இன்னொருவன். “ஆனால் அரசர்கள் முதலில் அவர்களை தலைவணங்குகிறார்கள்.” சிவாவின் தலை சுற்றியது! ஒரு கடலோர வியாபாரி எழுந்து நின்று, “அவர்கள் ஒழுங்கைக் கொண்டுவருகிறார்கள். சட்டம், ஒன்றுபடுவதற்கான ஒரு வழி.” என்றான். சிவா முன்னே வந்தான். “எந்த விலைக்கு?” என்று கேட்டான். நம் முன்னோர்கள் இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய பிரார்த்தனைகள் வளரும் போது, இந்த கற்கள் இன்னும் பேசுமா? அல்லது உடைக்கப்படுமா?” யாரும் பதில் சொல்லவில்லை. அங்கு மௌனம் நிலவியது. பயம் மெதுவாகப் பரவியது. ஒரு மாலை, ஆற்றங்கரையில் சிவா மற்றும் கலினி சந்தித்தனர். “என் வீட்டில், என் திருமணத்தைப் பேசுகிறார்கள்,” என்றாள் கலினி. “புதிய ஒழுங்கை ஆதரிக்கும் ஒருவருடன்.” “அவன் உன்னை நேசிக்கிறானா?” என்று கேட்டான் சிவா. “அவன் நிலைத்தன்மையை [stability] விரும்புகிறான்,” என்றாள் அவள். “நீ?” அவள் அமைதியாக இருந்தாள். ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. அது பல காதல்களின் கதையை அறிந்த ஆறு. ஒரு நாள் துறவி பெண்களிடம் கூறினார்: “பெண் தனது கடமையில் அமைதியைக் காண்கிறாள். குடும்பமும் சமூகமும் வாழ்வுக்கு முக்கியம்.” அந்த வார்த்தைகள் கலினியின் மனதை அடைந்தன. அந்த இரவு அவள் சிவாவிடம் சொன்னாள்: “அவர்கள் காதலைத் தடை செய்யவில்லை. அதன் அர்த்தத்தை மாற்றுகிறார்கள்.” சிவா அவள் கையை மெதுவாகத் தொட்டான். “அன்பு [காதல்] அனுமதி கேட்க வேண்டிய நிலை வந்தால், அது சுதந்திரமான அன்பு அல்ல,” என்றான். “சுதந்திரம் இழந்த அன்பு — காயமடைந்த அன்பு.” காலம் நகர்ந்தது. கப்பல்கள் புறப்பட்டன. சிலர் உள்நாட்டுக்குப் போனார்கள். சிலர் கடலைக் கடந்தனர். கலினியின் தாய் மகளின் ஆபரணங்களை அடுக்கினாள். “மாற்றம் காத்திருக்காது,” என்றாள். “அது தேர்வு செய்யும்.” கலினி நிலத்தைப் பார்த்தாள் — கற்கள், வயல்கள், ஆறு. சிவா தொலைவில் நின்றான். இருவரும் கைகளை அசைக்கவில்லை. சில பிரிவுகள் மிகவும் கனமானவை. இது அப்படிப்பட்ட ஒன்று. மனிதர்கள் இந்த தீவுக்கு வருகிறார்கள். போகிறார்கள். காதல்கள் உருவாகின்றன. உடைகின்றன. ஆனால் தீவு அவசரப்படாது. அது அனைத்தையும் அமைதியாக நினைவில் வைத்துக்கொள்கிறது — ஒரு காயத்தடம் ["Trace of a wound" or "Scar" ] போல. [3] சிங்கள மொழி ஒரே நாளில் தோன்றியதல்ல; கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வடஇந்திய இந்தோ-ஆரிய பிராகிருத வழக்குமொழிகள் இலங்கைக்கு வந்து, அங்கு உள்ளூர் சூழலில் மெதுவாக மாறி “எலு” எனப்படும் ஒரு பழைய வடிவமாக வளர்ந்தது. பௌத்த மதத்தின் பரவலால் பாலி மொழிச் சொற்கள் சேர்க்கப்பட்டன; பின்னர் சமஸ்கிருதச் சொற்களும் இலக்கிய வழியாக புகுந்தன. இலங்கைத் தமிழர்களுடன் நீண்டகால தொடர்பினால் தமிழ் மற்றும் பிற திராவிட மொழிகளின் சொல், இலக்கணத் தாக்கமும் ஏற்பட்டது. இவ்வாறு பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட மொழிச்சேர்க்கை மற்றும் மாற்றங்களின் விளைவாக 8–10ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தெளிவான இலக்கிய சிங்களம் உருவாகி, கல்வெட்டுகள் மற்றும் நூல்கள் மூலம் நிலைபெற்றது என்பது மொழியின் வரலாறாகும். [4] கி.மு. 3ஆம் நூற்றாண்டு (அசோகர் காலம்) அளவில் உருவானதே பிராமி எழுத்து (Brahmi Script), பின்னர் பல எழுத்துமுறைகளின் தாய் எழுத்தாக அமைந்தது. தமிழ் மொழிக்காக மாற்றியமைக்கப்பட்ட பிராமி எழுத்து வடிவமே தமிழ் பிராமி. பொதுவாக கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் பிராமி அல்லது தமிழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலும் கி.மு. 3–1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் சில கல்வெட்டுகளில் தமிழ் நாமங்கள், தமிழ் மொழிச்சொற்கள், தமிழ் இலக்கண அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனுராதபுரம், திஸ்ஸமஹாராம, மாந்தை, கந்தரோடை பகுதிகளில் முக்கியமாகக் காணப்பட்டன. என்றாலும் தமிழ்நாட்டில்: கீழடி (Keeladi), பொருந்தல் (Porunthal), கொடுமணல் (Kodumanal) இடங்களில் கண்ட குடுவை எழுத்துகள் சில: கி.மு. 5–6ஆம் நூற்றாண்டு வரை தள்ளப்படலாம் என்று சில radiocarbon ஆய்வுகள் இன்று கூறுகின்றன. இது அசோகா எழுத்துக்கும் முன்னதாக அமைவது குறிப்பிடத்தக்கது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 3 தொடரும் துளி/DROP: 2113 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/34503361082645765/?
  4. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 143 பகுதி: 143 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" புத்தரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டும் முதலாவது அம்சம், அவருடைய தன்னல மறுப்புக் கொள்கையாகும். பைபிள் முழுவதிலும் இயேசு, தான் கடவுளின் மைந்தன் என்று வலியுறுத்துகிறார். முகம்மது நபி மேலும் ஒருபடி மேலே சென்றுள்ளார். இயேசுவைப் போன்றே அவரும் தான், இந்த உலகில் கடவுளின் தூதர் என்று உரிமை கொண்டாடினார். ஆனால் அவர், மேலும் அப்பால் சென்று தான் கடவுளின் கடைசி தூதர் என்று வலியுறுத்தினார். அதேபோல, இந்து சமயத்தின் ஒரு முக்கிய நபரான கிருஷ்ணர், இயேசுவுக்கும் முகம்மது நபிக்கும் மேலும் அப்பால் சென்றார். அவர் கடவுளின் மைந்தன் என்றோ, அல்லது கடவுளின் தூதர் என்றோ இருப்பதோடு திருப்தியடைய மறுத்தார். கடவுளின் கடைசி தூதர் என்பதோடு கூட அவர் திருப்தியடைய வில்லை, தன்னையே கடவுள் என்று கூறிக் கொள்வதோடுகூட அவர் திருப்தியடையவில்லை. தான் 'பரமேஸ்வரன்' என்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் 'தேவாதி தேவர்' என்று அழைப்பது போன்று, தாம் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றும் உரிமை கொண்டாடினார். ஆனால் புத்தர் ஒருபோதும். அத்தகைய அந்தஸ்து (தகுதி) எதையும் தனக்குத்தானே சுவீகரித்துக் கொள்ளவில்லை (வீம்புரிமை கொண்டாடவில்லை.) அவர் மனிதனின் ஒரு மகனாகப் பிறந்தார்; ஒரு சாதாரண மனிதனாக இருப்பதோடு திருப்தியடைந்தார்; ஒரு சாதாரண மனிதனாகத் தன்னுடைய தன்னெறியைப் போதித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்புடையவராகவோ, அல்லது தெய்வீக சக்தி உடையவராகவோ அவர் உரிமை கொண்டாடவில்லை அல்லது தனது தெய்வீக சக்தியை நிரூபிப்பதற்கு அற்புதங்கள் எதையும் அவர் செய்யவில்லை. அவர் ஒரு மதத் தலைவருக்கும் ஒரு மோட்சத் தலைவருக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டை எடுத்துக் காட்டினார். இயேசுவும், முகம்மது நபியும் மற்றும் கிருஷ்ணரும் தங்களை மோட்சத் தலைவர்கள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடிக் கொண்டனர். ஆனால் புத்தர் மதத் தலைவரின் பாத்திரத்தை ஆற்றுவதோடு திருப்தியடைந்தார்ர் என்று கூறலாம். புத்தரின் போதனைகள், அந்தக் கால இந்திய சமுதாயத்தில் இருந்த சில பழக்கங்களை சவால்கொடுத்து உருவானதாகும். புத்தமதமும் இந்துமதமும் கலாச்சார அடிப்படையில் ஒரே வேரிலிருந்து வந்தாலும், நடைமுறையில் மாறுபடுகின்றன. இந்துமதம் தெய்வ வழிபாட்டையும் சடங்குகளையும் வலியுறுத்துகிறது; புத்தமதம் தன்னிச்சையான முயற்சியையும் ஞானத்தையும் முன்வைக்கிறது. இருப்பினும், இரண்டுமே துக்கத்தை வெல்லும் உயர்ந்த உண்மையை நோக்கி வழிகாட்டுகின்றன. இப்போது, கௌதம புத்தருக்கும் இந்து மதத்திற்கும் இடையிலான சில முக்கிய வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகளை ஆராய்வோம்: [1] சாதி அமைப்பை நிராகரித்தல் [Rejection of the Caste System]: பாரம்பரிய இந்து மதத்திலிருந்து பௌத்தம் விலகிச் சென்றதிற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம், அது சாதி அமைப்பை நிராகரிப்பதாகும். புத்தர் அனைத்து தனிநபர்களின் சமத்துவத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்பில் பிறப்பதன் மூலம் ஒரு நபரின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தையும் முற்றாக நிராகரித்தார். உதாரணமாக, புத்தரின் காலத்தில் இந்து சமுதாயம் வர்ண அமைப்பினால் ஆளப்பட்டது. ஆனால் புத்தர் இந்த சமுதாய அமைப்பைக் கடுமையாக எதிர்த்தார். எந்த சாதியையும் பொருட்படுத்தாமல், அனைவரையும் — பெண்களையும் உட்பட — அவரது சங்கத்தில் சேர வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. [2] கடவுள் பற்றிய கருத்து [Concept of God]: இந்து மதம் தெய்வீகத்தைப் பற்றிய பரந்த அளவிலான நம்பிக்கைகளை உள்ளடக்கியது, அவற்றில் பல தெய்வீகக் கொள்கை, ஏகத்துவக் கொள்கை மற்றும் சர்வ தெய்வக் கொள்கை [polytheism, monotheism, and pantheism] ஆகியவை அடங்கும். இந்து மதத்தின் சில பிரிவுகள் பல தெய்வங்களை வணங்குகின்றன, மற்றவை விஷ்ணு அல்லது சிவன் போன்ற ஒரு உயர்ந்த மனிதனை மையமாகக் கொண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, புத்தர் ஒரு தனிப்பட்ட படைப்பாளி கடவுளின் இருப்பை வலியுறுத்தாததால், பௌத்தம் இறை நம்பிக்கையற்றதாகக் கருதப்படுகிறது [considered non-theistic, as the Buddha did not emphasize the existence of a personal creator god]. அதற்கு பதிலாக, பௌத்தம் தனிப்பட்ட ஞானம் மற்றும் துன்பத்தை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது [focuses on individual enlightenment and the cessation of suffering]. அதாவது, புத்தர் உருவாகும் கடவுளின் நம்பிக்கையைத் தள்ளுபடி செய்தார். அவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கூறாமல், துக்கத்தைத் தவிர்க்கும் வழியையே வலியுறுத்தினார். புத்தமதம், தன்னிறைவு மற்றும் தியானத்தை முக்கியமாகக் கொள்கிறது, கடவுள் அருளை அல்ல என்பது குறிப்பிட தக்கது. உதாரணமாக, இந்து கோவில்களில் பூஜைகள் மூலமாக தெய்வங்களை வழிபடுவது வழக்கம். புத்த மடங்களில் தவம், தியானம், நற்குண வளர்ச்சி என்பவை முக்கியமாக விளக்கப்படுகின்றன. இதை நான் இலங்கையில் தேடிக்கொண்டு இருக்கிறேன் ? நீங்களும் வாரீங்களா , நாம் ஒன்றாகத் தேடுவோம்? Part: 143 / APPENDIX – "The Buddha and His teachings" Now, let's examine some of the key differences and similarities between Gautama Buddha and Hinduism: Rejection of the Caste System: One significant departure of Buddhism from traditional Hinduism is its rejection of the caste system. The Buddha emphasized the equality of all individuals and rejected the idea that a person's worth is determined by their birth into a particular social class. Concept of God: Hinduism encompasses a wide range of beliefs regarding the divine, including polytheism, monotheism, and pantheism. Some sects of Hinduism worship multiple deities, while others focus on a single supreme being, such as Vishnu or Shiva. In contrast, Buddhism is considered non-theistic, as the Buddha did not emphasize the existence of a personal creator god. Instead, Buddhism focuses on individual enlightenment and the cessation of suffering. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 144 தொடரும் / Will follow துளி/DROP: 2114 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 143 https://www.facebook.com/groups/978753388866632/posts/34503410862640787/?
  5. வாழ்த்துக்கள்! பிரான்ஸ் நகரங்களில் ஒரு மேயர் இருப்பார். அவருக்கு உதவியாக பல துணை மேயர்கள் நியமிக்கப் படுவார்கள். ஆதித்தியா இந்த நகரத்தின் 12 துணை மேயர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். நகரத்தின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை மேயராக இவர் இருக்கிறார்.
  6. Today
  7. உண்மைதான் அண்ணா. என் கணவர் அடிக்கடி சொல்வார் "உன்னைக் கூட்டிக்கொண்டு போற நேரம் சின்னப் பிள்ளை ஒன்றைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று 😃ஆனால் இலங்கையில் நின்றபோது பெரும்பாலான நாட்கள் மதியம் சாப்பிட்டதுடன் இரவு உணவு உண்ணாமல் காலை எட்டு மணிக்குத் தான் உண்டிருக்கிறேன். அதனால் நிறையும் குறைந்தது.
  8. அங்கிகரிக்கப்பட்ட கட்சியான விசிகவுக்கு 8 அதே சமயத்தில்0 .4 வீத வாக்குகளைப் பெற்று நேற்று வரை திமுகவை திட்டி பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த தேதிமுகவுக்கு 10+1ராஜ்ய சபா இடங்களைக் கொடுத்த திமுகவின் தெலுங்கு மணவாடு பாசம்.யாரெல்லாம் பாஜகவை கடுமையாக எதிர் க்கிறார்களோ அந்தக்கட்சியோடு கூட்டணி நம்பகமாக வைக்கமட்டார்களோ ,திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருந்து திமுக ஆட்சியின் தவறுகளை கண்டுகொள்ளாமல் முரட்டு முட்டு கொடுத்தார்களோ அவர்களைப் (விசிக,கம்மனியூஸ்ட்டுகள்) புறக்கணித்திருக்கிறது திமுக அவர்களின் ஒரே தேர்தல் கோஷம் பாஜக உள்ளே வந்திரும்.நாளை தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபையாக வந்தால் அண்ணியார் என்ன ஆட்டம் போடுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.(ஓரிரு இடங்களை வென்றிருந்தால்)இந்த இலட்சணத்தில் தனித்துப் போட்டுயிடும் நாதகவைபாஜகவின் B ரீம் என்று தங்கள் ஊடகங்களை வைத்து பிரச்சாரம் பண்ணுகிறார்கள் .அதை நம்பி யாழ்களத்திலும் சிலர் அதனை மேற்கோள் காட்டி எழுதுகிறார்கள்.உண்மையில் திமுகதான் பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஆளும்கட்சியாக வந்தவுடன் வெள்ளைக்குடை பிடிப்பது இதுதான் திமுக.இதற்குள் கமல்என்ற கோமாளி உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொன்னதற்காக தேர்தலில் தங்கள் கட்சி மோட்டியிடாதாம்.ஆனால் திருட்டுத்திமுகவுக்கு முரட்டு ஆதரவும்.இப்பொழுது அடுத்த கோமாளி தயாராகிக் கொண்டிருக்கிறார்.
  9. என்ன பரிசா இருக்கும் (றம்பரிட்டைநிறைய பொன் இருக்கு அப்ப பெண்ணாயிருக்குமோ!)
  10. 25 Mar, 2026 | 09:50 AM மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமைகள் காரணமாக, அந்த நாட்டு மக்கள் உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க முற்பட்டுள்ளதால், தேயிலைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார். கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை ரூ. 1,153 ஆகக் காணப்பட்டது. ஏலத்தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே உள்ளது. இது சந்தையின் சாதாரண நிலையாகும். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக குவைத், சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கப்பல் பாதைகள் ஊடாக ஏற்றுமதிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக, சந்தையில் நிலவிய பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. தேயிலை செய்கையில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு – இலங்கை தேயிலை சபை | Virakesari.lk
  11. அமெரிக்காவும் இரானும் ஒருவேளை பேச்சு நடத்தினால் நெதன்யாகுவுக்கு என்ன சிக்கல்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று டிமோனாவில் இரானியத் தாக்குதல் நடைபெற்ற இடத்துக்குச் சென்றார். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், டெல் அவிவ் 25 மார்ச் 2026, 02:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்த அமெரிக்காவின் திட்டங்கள் தொடர்பாகக் கலவையான சமிக்ஞைகள் வெளிவந்துள்ள நிலையில், மத்திய கிழக்கின் இரு பரம எதிரிகளான இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டை தொடர்கிறது. திங்களன்று இரானுக்குள் "பத்துக்கும் மேற்பட்ட" வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. தெஹ்ரானில் உள்ள இரானியப் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் உளவுத்துறை அமைச்சகத்தின் கட்டளை மையங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. இரான் நேற்று இரவு வடக்கு மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள இலக்குகள் மீது பல ஏவுகணைகளை ஏவியது. வடக்கு டெல் அவிவில் அண்மையில் வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி, பால்கனிகள் பெயர்ந்து விழுந்துள்ளன. குடியிருப்பு கட்டடங்களின் தொகுப்புக்கு நடுவே உருவான பள்ளத்தில், சுவர்களிலிருந்து கற்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன. தாக்குதலில் இருந்து பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் நூலிழையில் தப்பித்த நிலையில், இரானிய ஏவுகணையின் நேரடித் தாக்குதல் இது என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்குப் பின்னால் உள்ள சாலையில் வசிக்கும் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், எச்சரிக்கை ஒலி எழுப்பியபோது பாதுகாப்பான புகலிடத்திற்குச் செல்ல அவருக்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும், அவர் தனது வீட்டின் முன் வாசலை அடைந்த கணமே, அந்த வெடிப்பின் தாக்கத்தால் கதவு பலமாகத் திறக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார். தம்மைச் சுற்றி கண்ணாடிகள் சிதறி விழுந்துகொண்டிருக்கையில், வெறும் கால்களுடன் தனது குடியிருப்பிலிருந்து தப்பி ஓடியதை அவர் விவரித்தார். திரும்பிப் பார்த்த போது, தனக்குப் பின்னால் இருந்த இடிபாடுகளுக்குள் ஏற்கெனவே தீ பற்றியிருந்ததாக அவர் கூறினார். தெஹ்ரானுடன் புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான டொனால்ட் டிரம்பின் நோக்கம் குறித்து இன்னும் பரவலான ஊகங்கள் நிலவி வருகின்றன; வெள்ளை மாளிகை இதற்கு முன்பும் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு மறைமுக உத்தியாகவே பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது; தற்போது ஆயிரக்கணக்கான அமெரிக்கக் கடற்படை வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆனால் இஸ்ரேலில் உள்ள சிலரைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள், அமெரிக்க அதிபர் இந்தப் போரிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைத் தேடுகிறார் என்பதற்கும், இஸ்ரேலுக்கும் அதன் வல்லமைமிக்க நட்பு நாட்டுக்கும் இடையிலான இலக்குகள் விலகிச் செல்லத் தொடங்கியுள்ளன என்பதற்குமான மற்றொரு அறிகுறியாகவே அமைகின்றன. "[இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்] நெதன்யாகு ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை," என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவப் புலனாய்வு அதிகாரியும், தற்போது டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பாலத்தீன ஆய்வுகள் மையத்தின் தலைவருமான மைக்கேல் மில்ஸ்டீன் கூறுகிறார். "டிரம்பின் நிலைப்பாட்டுக்கும் நெதன்யாகுவின் நிலைப்பாட்டுக்கும் இடையே ஒரு வகையான முரண்பாடு உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "நெதன்யாகு போரைத் தொடர விரும்புகிறார். இந்தப் போர் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து இருப்பியல் சார்ந்த அச்சுறுத்தல்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், இரானில் ஆட்சி மாற்றத்திற்கான சூழலைக் கூட உருவாக்கக் கூடும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்; ஆனால் தற்போதைய நிலையில், அவரது வாக்குறுதிகளுக்கும் களத்தில் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருப்பவற்றுக்கும் இடையே ஒரு இடைவெளி நிலவுகிறது." இந்தப் போரிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைக் கண்டறிவதில் டிரம்ப் தீவிரமாக இருந்தால், இஸ்ரேலியப் பிரதமர் ஒரு நெருக்கடியான சூழலுக்குள் தள்ளப்படக்கூடும் என்று அவர் கூறுகிறார். "இது ஒரு 'Catch-22' (சிக்கலான முட்டுக்கட்டை) போன்ற நிலை; ஏனெனில், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால் அவரால் போரை முன்னெடுத்துச் செல்ல இயலாது. டொனால்ட் ட்ரம்பிடம் 'உங்களின் துணையின்றி நான் போரைத் தொடர்வேன்' என்றும் அவரால் கூற முடியாது. இறுதியில், அந்தச் சூழலைத் தான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்." பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,செவ்வாய்க்கிழமையன்று டெல் அவிவின் குடியிருப்புப் பகுதியில் இரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னான நிலை. ஆனால், இரானிடமிருந்தும் அப்பிராந்தியத்தில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக்குழுக்களிடம் (proxies) இருந்தும் வரும் உடனடி அச்சுறுத்தலுக்கு இந்தப் போர் முற்றுப்புள்ளி வைக்கும் என்று இஸ்ரேலியர்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், நெதன்யாகு தற்போது ஒரு மிகக் கடினமான பாதையில் பயணித்து வருகிறார். "இஸ்ரேலியர்கள் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், இந்தப் போர் முடிவடைவதற்குச் சரியான வழி, நாம் அந்த ஆட்சியைத் தோற்கடிப்பதுதான்; மாறாக, இதுவே மீண்டும் மீண்டும் நம்மைத் துரத்தி வந்து பாதிப்படையச் செய்வது அல்ல என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்," என்று லிகுட் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான டான் இல்லூஸ் தெரிவித்தார். "கடந்த காலத்தில் நாங்கள் 'கட்டுப்படுத்தும் கொள்கையை' (containment policy) முயன்று பார்த்தோம்; ஹமாஸ் விஷயத்தில் அதையே கையாண்டோம். ஆனால் அக்டோபர் 7-ஆம் தேதி அதுவே எங்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததை நாங்கள் கண்டோம். எனவே, இரான் விஷயத்திலும் அதேபோன்றதொரு நிகழ்வு மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை." திங்களன்று டிரம்பிடம் பேசிய பிறகு, இரான் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளின் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், "எந்தவொரு சூழ்நிலையிலும் இஸ்ரேல் [தனது] முக்கிய நலன்களைப் பாதுகாக்கும்" என்றும் நெதன்யாகு கூறினார். லித்தானி நதிக்குத் தெற்கே அமைந்துள்ள லெபனானின் பரந்த நிலப்பரப்பில், இஸ்ரேலியப் படைகள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கும் என்றும், இரானின் ஆதரவைப் பெற்ற ஹெஸ்பொலாவின் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புகள் பாதுகாப்பான நிலையை அடையும் வரை, அப்பகுதி மக்கள் அங்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஹெஸ்பொலாவுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெல் அவிவில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த இரான் ஆய்வாளர் டேனி சிட்ரினோவிச், இரானுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறுகிறார்; ஏனெனில், இரு தரப்பினரின் நிலைப்பாடுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளிகள், ஈடுசெய்ய முடியாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளன என்கிறார் அவர். "இரான் தரப்பிலிருந்து பார்த்தால், அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர, தோல்வியடையவில்லை. எனவே அவர்கள் இழப்பீட்டையும் உத்தரவாதங்களையும் கோருவார்கள்," என்று அவர் கூறினார். "மறுபுறம், [இரான்] தரப்பு அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும் தொடக்கத்திலேயே ஏற்றுக்கொண்டுவிடும் என்று டிரம்ப் கருதுகிறார்." ஓர் உடன்பாட்டை எட்ட, டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோர் ஒன்று ஆட்சியை மாற்ற வேண்டும் அல்லது தங்கள் நிபந்தனைகளைக் கைவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார். "இந்த ஆட்சி எளிதாக சரணடையாது; போருக்கு முன்பு அமெரிக்கர்களுக்கு எதைக் கொடுக்கவில்லையோ, அதை இப்போதும் அவர்கள் கொடுத்துவிடப் போவதில்லை," என்று அவர் கூறினார். "சர்வதேசப் பொருளாதாரத்தின் முக்கியமான குறுகிய கடல்வழி பாதையான, உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் வழித்தடங்களில் ஒன்றான 'ஹோர்மூஸ் நீரிணை' இரானின் கட்டுப்பாட்டில் உள்ளது; இந்த நீரிணை மீதான கட்டுப்பாட்டின் காரணமாக, பேச்சுவார்த்தைகளில் தானே மேலோங்கி இருப்பதாக இரான் கருதுகிறது." ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும், இல்லையெனில் அதன் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது பரவலான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இரானுக்கு கடந்த வாரம் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றதால், அந்த நம்பிக்கை அதிகரித்திருக்கும். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்கி, பதிலடி கொடுப்போம் என்று தெஹ்ரான் மிரட்டியதைத் தொடர்ந்து, டிரம்ப் அந்த எச்சரிக்கையை திரும்பப் பெற்றார். டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதைப் போலச் சுட்டிக்காட்டுவதன் மூலம் இழப்பதற்கு ஏதுமில்லை என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்; இது எரிசக்திச் சந்தைகளை அமைதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவோ, இரானியத் தலைமைக்குள் பிளவை ஏற்படுத்துவதாகவோ அல்லது புதிய ராணுவ நடவடிக்கைக்குக் கால அவகாசம் பெறுவதாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெள்ளிக்கிழமை கண்விழிக்கும் போது, இரான் மீது அமெரிக்கா புதிய ராணுவத் தாக்குதலை தொடங்கியிருந்தால், அதில் ஆச்சர்யம் ஏதுமிருக்காது என்று இந்த விவகாரத்தை கவனித்துவரும் ஒருவர் என்னிடம் கூறினார். இப்போர் தற்போது சரணடைதலுக்கும் தீவிரமடைதலுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது; ஏனெனில், எதிர்தரப்பு விரும்பும் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் அளவுக்கு இரு தரப்புகளுமே இன்னும் பலவீனமடையவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9d4pqje8ppo
  12. இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்' கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்" என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
  13. தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம்: 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்! 25 Mar, 2026 | 05:21 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்த பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய தம்பதியினர் திடீரென காணாமல் போயிருந்தனர். இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், நீண்ட காலமாக எவ்விதத் தடயங்களும் கிடைக்காத நிலையில் அந்த விசாரணை முடங்கியிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த உறவினர்கள், இது குறித்து ஜனாதிபதி செயலகத்திலும் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர். இந்த நிலையில், காணாமல் போன பெண்ணின் சகோதரி, தனது சகோதரிக்குச் சொந்தமான தங்கத் தோடு போன்றே ஒரு தோட்டை அண்டை வீட்டுப் பெண் அணிந்திருப்பதை தற்செயலாகக் கண்டுள்ளார். இது குறித்து எழுந்த பலத்த சந்தேகத்தையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல மணிநேர விசாரணைகளின் பின்னர், அண்டை வீட்டைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மற்றும் அவரது 48 வயதுடைய மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர் ஒரு கடும் போதைப்பொருள் பாவனையாளர் என்றும், அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தின்படி, இரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான வாக்குவாதங்கள் மற்றும் தகராறுகள் காரணமாகவே இந்த இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தம்பதியினரைத் தங்களது வீட்டிற்குப் பின்புறமாக அழைத்துச் சென்று, கூர்மையான ஆயுதங்களால் கழுத்தை வெட்டியும், தலையைத் துண்டித்தும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலங்களை எவரும் கண்டுபிடிக்க முடியாதபடி வீட்டின் பின்புறம் உள்ள ஒரு பள்ளத்தில் புதைத்து மறைத்தமையால், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மர்மம் நீடித்து வந்துள்ளது. அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 04 நீதவானின் உத்தரவிற்கமைய, இன்று (24) சம்பவ இடத்திற்கு சந்தேக நபர்கள் அழைத்து வரப்பட்டு விசாரணை மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறப்பு தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரியின் முன்னிலையில், தற்போது அந்த இடத்தில் சடலங்களை தோண்டி எடுக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆறு வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் கொழும்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம்: 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்! | Virakesari.lk
  14. வடக்கில் 51 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் 25 Mar, 2026 | 09:57 AM எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகப் புதிய அரச நியமனங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சில விசேட நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், வடக்கு மாகாணம் அதில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எமது மாகாணத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குறித்து நாம் விரிவாகத் தெரியப்படுத்தினோம். அதன் பயனாக, பிரதமர் தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, ஆராயப்பட்ட பின்னரே தற்போது புதிய நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் சாரதி சேவை மற்றும் அலுவலகப் பணியாளர் சேவைகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு எமக்கு அனுமதி கிடைத்திருக்கவில்லை. எனினும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போது இந்த விடயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அப்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் உடனிருந்தார். அவர்கள் இருவரதும் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று இந்த நியமனங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த நியமனங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றியும், பரிந்துரைப் பட்டியல்களுமின்றியும் உங்கள் தகுதியின் அடிப்படையில் மாத்திரமே உங்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் இப்படி ஒரு நேர்மையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. குறிப்பாக, சாரதி நியமனம் பெற்றுள்ள நீங்கள் அரச அதிகாரிகளைப் பொறுப்புடன் ஏற்றிச் செல்லப் போகின்றீர்கள். எனவே, நீங்கள் எப்போதும் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும், அதியுயர் ஒழுக்கத்துடனும் கடமையாற்ற வேண்டும். நீங்கள் ஒரு கணம் நிதானிக்கத் தவறினாலும் அது மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திவிடும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண மாவட்டத்தை விட ஏனைய நான்கு மாவட்டங்களிலுமே ஆளணிப் பற்றாக்குறையும், சேவையின் தேவையும் அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, வடக்கு மாகாணத்தின் எந்தவொரு பகுதியிலும் பணியாற்றுவதற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241868
  15. ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய எரிவாயு (எல்பிஜி) கப்பல்கள், ஜக் லட்கி என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஆகியவை இந்தியா வந்தன. இந்த சூழலில் ஜக் வசந்த், பைன் காஸ் ஆகிய 2 எரிவாயு கப்பல்கள் ஈரான் ராணுவ சிறப்பு அனுமதியுடன் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன. இந்த கப்பல்கள் நேற்று சர்வதேச கடல் எல்லை பகுதியை வந்தடைந்தன. அவற்றுக்கு இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. மார்ச் 26 முதல் 28-ம் தேதிக்குள் இரு எரிவாயு கப்பல்களும் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் ராஜஷ் குமார் சின்ஹா கூறும்போது, “இரு எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த கப்பல்களில் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி காஸ் இருக்கிறது’’ என்றார். இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை வட்டாரங்கள் கூறியதாவது: சமையல் காஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நாள்தோறும் உள்நாட்டில் 55,000 டன் எல்பிஜி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கெனவே வளைகுடா நாடுகளில் இருந்து 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. தற்போது மேலும் 2 எரிவாயு கப்பல்கள் விரைவில் இந்தியா வந்து சேர உள்ளன. இவை தவிர நெதர்லாந்தில் இருந்து ஹெலாஸ் கிளாடியேட்டர், அமெரிக்காவில் இருந்து காஸ் ஜுபிட்டர் ஆகிய 2 கப்பல்கள் தலா 24,000 டன் எல்பிஜி காஸுடன் இந்தியா வருகின்றன. இவை வரும் 30-ம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்து சேரும். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அடுத்தடுத்து எல்பிஜி காஸ் கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ளன. இதேபோல ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. வளைகுடா பகுதியில் முகாமிட்டுள்ள12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
  16. சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி Mar 25, 2026 - 02:51 PM தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். எவ்வாறாயினும், அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. நேற்று (24) சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார். அங்கு, வைத்திய ஆலோசனையின்படி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmn5u1fp8000h356pjhfmrbta
  17. குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் Published By: Digital Desk 3 25 Mar, 2026 | 10:14 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த எரிபொருள் தாங்கி ஒன்று தீப்பற்றியுள்ளது. ட்ரோன்கள் நடத்திய தாக்குதலால் விமான நிலையத்திலுள்ள எரிபொருள் சேமிப்பு தாங்கி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையலி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் சொத்துக்களுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புப் படையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்துள்ளது. வெடிப்புச் சத்தங்கள் கேட்டால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, குவைத் விமான நிலையம் பலமுறை ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 14 ஆம் திகதி ராடார் கட்டமைப்பை இலக்கு வைத்தும், 8 ஆம் திகதி அன்று எரிபொருள் தாங்கிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. தற்போது நிலவும் போர்ச் சூழலால் குவைத் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே வழமையான வணிக விமான சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரான் ஆதரவுப் படைகளே இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241870
  18. ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் நடந்த மர்ம வர்த்தகத்தில் 20 நிமிடத்தில் ரூ.840 கோடி லாபம் நியூயார்க்: ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்' தளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, சர்வதேச சந்தையில் நடந்த வர்த்தகம் மூலம் மர்ம நபர் ஒருவர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியுள்ளார். இதுகுறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை நியூயார்க் நேரப்படி 6:50 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:20 மணி) இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி முதலாவதாக, எஸ் அண்ட் பி 500 பியூச்சர் குறியீட்டில் சுமார் ரூ.12,600 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இரண்டாவதாக கச்சா எண்ணெய் பியூச்சர் சந்தையில் ரூ.1,615 கோடி மதிப்பிலான விற்பனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, உலகளவில் நிச்சயமற்ற சூழலில் வர்த்தகம் மந்தமாக இருக்கும் அதிகாலை வேளையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் முதலீடு செய்தது சந்தையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ட்ரம்பின் அறிவிப்பு வெளியானவுடன் பங்குச்சந்தை 2.5% உயர்ந்தது. அதேசமயம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 109 டாலரிலிருந்து 92 டாலராகச் சரிந்தது. இதன் மூலம், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டும் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் பார்த்துள்ளார். பங்குச்சந்தை உயர்வையும் கணக்கிட்டால் இந்த லாபம் பன் மடங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். போர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இவ்வளவு துல்லியமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதால், அரசின் ரகசியத் தகவல்கள் முன்கூட்டியே கசிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் இப்புகார்களை மறுத்துள்ளார். ‘‘அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்க மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. ஆதாரமற்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை’’ என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் நடந்த மர்ம வர்த்தகத்தில் 20 நிமிடத்தில் ரூ.840 கோடி லாபம்
  19. ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர் நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்ட ‘ஏர் கனடா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான சி.ஆர்.ஜே-900 ரக விமானம், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.37 மணியளவில் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுதளம் 4-ல் சுமார் 24 மைல் வேகத்தில் அந்த விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் விமானத்தை இயக்கிய முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்த ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு காவலர் ஆகிய இருவருக்கு பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் 72 பயணிகளும் உயிர்தப்பினர். விபத்தைத் தொடர்ந்து, லாகார்டியா விமான நிலையத்தை அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தற்காலிகமாக மூடியது. அவசரகால மீட்புப் பணிகள் மற்றும் முதற்கட்ட விசாரணையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் அங்கு தரையிறங்க வேண்டிய சுமார் 18-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர்
  20. அண்ணை அது நானில்லை, @கிருபன் அண்ணை.
  21. நேற்றைய சமையல்❣️ என்னுடன் ஒரு ஈரன் மங்கை வேலை செய்கின்றா, அவ கேட்ட ஓரு கேள்வி என்னை தூக்கி வாரிப்போட்டுது😂❤️
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  23. இப்படித்தான் திப்பிலி (மிளகு) கிறேக்கம் போய் பிப்பிலி ஆகி இன்று பெப்பர் ஆகி நிற்கின்றது.
  24. என்னதான் உயிர் போகிற விசயமாயிருந்தாலும் சாப்பாட்டிலே நீங்கள் ரொம்பக் கவனம்
  25. நீங்களும் கெட்டிக்காரன்தான். நான்தான் ‘மூனா😜’ வழக்கறிஞர் என்றில்லாமல் நண்பன் என்ற முறையில். சரியான கணிப்பு. 09ந் திகதி சுற்றுலா பொலிஸ் அலுவலகத்துக்கு முதலாளி போயிருக்க வேண்டும். ஐயா ஹொலிடேயில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 17ந்திகதி அடுத்த அழைப்பு, ஐயா இன்னும் ஹொலிடேயில் இருக்கிறார். ஒருநாள் வருவார். உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் பொய்யும் புரட்டும் வெளியாகும் வரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.